Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

தூறல் நாள் 68

காதலியே என்ன மொழி

பேசிக்கொண்டிருக்கிறாய்?..

தயவு செய்து எனக்குத்

தெரிந்த

அன்புமொழியில் ஏதாவது

வார்த்தை பேசமாட்டாயா?..

உனக்குத்தெரிந்த...

சந்தேகமொழியும்...

கோபமொழியும்...

எனக்கு புரியவேயில்லை

என் தோட்டம்

அடர்ந்த காடாகத்தானிருந்தது...

நீ வந்துதான்

பூங்காவனமாக்கினாய்...

வண்ணங்கள் நிறைத்தாய்-சுக

வாசங்கள் வரவழைத்தாய்

குயில்களைப் பாடச்செய்தாய்

குட்டிக்குட்டியாய் குற்றாளங்களை

பாயச்செய்தாய்...

வண்டுகள் பூக்களை

முத்தமிடுவதையும்..

பூக்கள் ஊடலுடன்

வண்டுகளை தள்ளிவிடுவதையும்

இரசிக்க செய்தாய்..

பறவைகளுக்கு இரையூட்டும்

இன்பத்தைக் காண்பித்தாய்..

இராகசுகம் போதித்தாய்..

ஜீவசுகம் தருவித்தாய்..

எல்லாம் சரி

விட்டுவிட்டு போவதற்கேன்

முட்காட்டைப்

பூங்காடாய் செய்தாய்

புழுதியிலே தூக்கிப்போடவா

இந்த மூங்கிலை

நீ புல்லாங்குழலாக்கினாய்..

மண்ணுக்குள் புதைப்பதற்கா

இக்கருங்கல்லையே

சிற்பம் செய்தாய்

சாம்பலாய்க் கரைப்பதற்கேன்

இவ்வெற்றோலையில் நீ

பாவரைந்தாய்

தேவதைகள் வரம் கொடுப்பவை

சாபம் கொடுப்பவையல்ல

தேவதைகள் விண்ணுக்கு

அழைத்துச் செல்பவை

மண்ணுக்குள் அனுப்பி வைப்பவையல்ல

நீ என் தேவதை

அதனால்தான்...பிறர்

அறியாமல் உன்

வரவையும்..பிரிவையும்

எனக்குள் புதைத்துவிட்டேன்..

முடிந்தால் ஒருமுறை வந்து பார்

சுடுகாடாய்ப் போன

என் எரிகாட்டிதயத்தை!..

இரண்டு உயிர்கள்

இருந்து இடம் மாறும்

இரண்டு இதய்ங்கள்

இடம்மாறி இருக்கும்

இன்பதுன்பம் காதல்!!

பெண்ணே

கால்கொலுசைக் கழட்டி வை

இது களவு நோக்கமோ...

கலவி நோக்கமோ அல்ல

உன் கலகல சிரிப்பை இக்

கொலுசத்தம் தொல்லை செய்கிறது..

பெண்ணே கால் கொலுசை

கழட்டி வைத்துவிடு..

ஆண் காதலில்

பறக்க ஆசைப்படுவான்

பெண் காதலில்

கால் பதிக்க ஆசைப்படுவாள்..

ஆண் காதலில்

கோட்டை கட்டுவான்

அஸ்திவாரம் இருக்காது

பெண் காதலில்

குடிசை கட்டுவாள்

அஸ்திவாரம் இருக்கும்

ஆண் காதல் ஓடும் ஆறு

ஆழம் குழந்தை கூட சொல்லும்

பெண் காதல்

கடலிலும் ஆழம்

மூழ்கிப் பார்த்தாள்

மூச்சே போகும்

என் காதலை நிறுத்த சொல்லுங்கள்

நிறுத்திவிடுகிறேன்..என்

தமிழை நிறுத்த சொல்லாதீர்கள்

மூச்சையே தொலைத்துவிடுவேன்!!

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply

பெண் காதல்

கடலிலும் ஆழம்

மூழ்கிப் பார்த்தாள்

மூச்சே போகும்

நிசமாவோ..மாமா..(மூழ்கி பார்த்த அநுபவம் ஏதாச்சும் இருக்கோ) :rolleyes: ..என்ன தான் கடல் ஆழமா இருந்தாலும் எல்லா குப்பைகளும் அங்க தான் இருக்கு மாமோய்.. :)

மாமாவின் தினசரி தூறளும் பெண்ணின் காதலை போல ஆழம்..தான்..விழுந்தா போச்சு..அதனால இப்பவே ஓடிடுறன் என்ன மாமா..வாழ்த்துக்கள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

நிசமாவோ..மாமா..(மூழ்கி பார்த்த அநுபவம் ஏதாச்சும் இருக்கோ) :lol: ..என்ன தான் கடல் ஆழமா இருந்தாலும் எல்லா குப்பைகளும் அங்க தான் இருக்கு மாமோய்.. :D

மாமாவின் தினசரி தூறளும் பெண்ணின் காதலை போல ஆழம்..தான்..விழுந்தா போச்சு..அதனால இப்பவே ஓடிடுறன் என்ன மாமா..வாழ்த்துக்கள்.. :)

அப்ப நான் வரட்டா!!

:rolleyes:

நன்றி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே

கால்கொலுசைக் கழட்டி வை

இது களவு நோக்கமோ...

கலவி நோக்கமோ அல்ல

உன் கலகல சிரிப்பை இக்

கொலுசத்தம் தொல்லை செய்கிறது..

பெண்ணே கால் கொலுசை

கழட்டி வைத்துவிடு..

சிறப்பாக அமைந்திருக்கிறது கவி தை

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் காதலில்

பறக்க ஆசைப்படுவான்

பெண் காதலில்

கால் பதிக்க ஆசைப்படுவாள்..

ஆண் காதலில்

கோட்டை கட்டுவான்

அஸ்திவாரம் இருக்காது

பெண் காதலில்

குடிசை கட்டுவாள்

அஸ்திவாரம் இருக்கும்

ஆண் காதல் ஓடும் ஆறு

ஆழம் குழந்தை கூட சொல்லும்

பெண் காதல்

கடலிலும் ஆழம்

மூழ்கிப் பார்த்தால்

மூச்சே போகும்

காரணம் சொல்லமுடியாமலே மனதிற்குப் பிடிக்கும் விடயங்களி இருக்கின்றன. அந்த வகையில் இந்தக் கவிதை பிடித்திருக்கிறது. நன்றாக ரசிக்கிறேன் உங்கள் கவிதைகளை, நன்றி விகடகவி .

  • தொடங்கியவர்

ஆண் காதலில்

பறக்க ஆசைப்படுவான்

பெண் காதலில்

கால் பதிக்க ஆசைப்படுவாள்..

ஆண் காதலில்

கோட்டை கட்டுவான்

அஸ்திவாரம் இருக்காது

பெண் காதலில்

குடிசை கட்டுவாள்

அஸ்திவாரம் இருக்கும்

ஆண் காதல் ஓடும் ஆறு

ஆழம் குழந்தை கூட சொல்லும்

பெண் காதல்

கடலிலும் ஆழம்

மூழ்கிப் பார்த்தால்

மூச்சே போகும்

காரணம் சொல்லமுடியாமலே மனதிற்குப் பிடிக்கும் விடயங்களி இருக்கின்றன. அந்த வகையில் இந்தக் கவிதை பிடித்திருக்கிறது. நன்றாக ரசிக்கிறேன் உங்கள் கவிதைகளை, நன்றி விகடகவி .

நன்றி நன்றி நன்றி

  • தொடங்கியவர்

தூறல் நாள் 69

தாங்கி வாழுபவன் சுமையைச்

சொன்னால் பாவம்..

தங்கி வாழுபவன் சுமையாய்

நீண்டால் பாவம்...

வழி தெரியாத வாழ்க்கைக்கு

ஒளி காட்டும் உள்ளங்கள்

கடவுளைப் போல..

வழி தெரிந்தும் பிறர்நிழலில்

தூங்குபவன் மந்தை போல..

காமம் என்ற

தூண்டில் முள்ளில்

பலர் வாழ்க்கையது

மாட்டிக் கொண்டு

புழுவாய்த்துடிக்கும்..

பல பெற்றோர்கள்

பேசமுடியாமல்

உள்ளுக்குள் அழுதுகொண்டு..

பல மனைவிகள்

பேசமுடியாமல்

உள்ளுக்குள் குமைந்துகொண்டு...

பல கணவன்மார்

கூறமுடியாமல்

இருளுக்குள் மருகிக்கொண்டு...

பல தொழிலாளிகள்...

பல சிறுவர்கள்...

பல மாணவர்கள்..

என்று பட்டியலில் நீட்சியுடன்

காமம் என்ற

தூண்டில் முள்ளில்

பலர் வாழ்க்கையது

மாட்டிக் கொண்டு

புழுவாய்த்துடிக்கும்..

ஊசிதான் நூலைக்

கொண்டு செல்லும்

துணியில் நூல்தான்

என்றுமெ நின்றுகொள்ளும்...

நூல் மானம் காக்கும்.. உதவிய..

ஊசி மறக்கப்படுவதால்

மௌனம் காக்கும்..

சுனாமியை எதிர்பார்க்கும்

கரைபோல

போரை எதிர்பார்த்து

காவலரணில் நிற்கும்

புலி வீரனின் நெஞ்சத்திடம்

வைரத்தை அறுக்கும்

இருபதில் தந்தையை இகழ்ந்து

நாற்பதில் தந்தையாய் சினந்து

அறுபதில் மகன் அன்புக்கு ஏங்கும்

அவனின் மகன் கூட

இருபதில் தந்தையை இகழ்ந்து

நாற்பதில் தந்தையாய் சினந்து

அறுபதில் மகன் அன்புக்கு ஏங்கும்

அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த

ஈழத்தமிழர்தம் வாழ்க்கைப் படகு

இனவெறிச் சூறாவளியால்...

உலகெலாம் அலைக்கழிந்து

ஆயிரம் அவலங்களுக்குள்..

என் ஆனந்தம்

நான் அன்பு காட்டுபவர்கள் ஆனந்தத்தில்

என் துன்பம்

நான் அன்பு காட்டுபவர்கள் துன்பத்தில்

நீங்கள் கேட்கலாம்..

நீ என்ன அன்பு காட்டுபவர்களின்

நிலைக்கண்ணாடியா என்று

ஆம்.. நான் நிலைக்கண்ணாடிதான்..

பாசத்தின் ஆழம் புரியாமல்

வார்த்தைகளால் அடித்து நொறுக்கப்பட்ட

பழைய நிலைக்கண்ணாடி..

அவள் மௌனத்தைக் கலைக்க

உன் மரணம்தான் வேண்டுமென்றால்..

முட்டாளே...அவளை

மறந்துவிட்டு மௌனமாயிருந்து பார்..

தெளிவுக்கு வருவாய்..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி ................

தூறல் ........... நாள் ( 69) ....மிக அருமை . நிஜங்களும் கூட ..

.வாழ்கையை அழகாக வருணித்து ,வரையும் தளங்களுக்கு

என் பணிவான பாராட்டு .....

. நன்றி வணக்கமுடன் நிலாமதி

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கி வாழுபவன் சுமையைச்

சொன்னால் பாவம்..

தங்கி வாழுபவன் சுமையாய்

நீண்டால் பாவம்...

*******

அட கவிதைக்குள் தத்துவம் எல்லாம் சொல்லுறீங்களே!!

காமம் என்ற

தூண்டில் முள்ளில்

பலர் வாழ்க்கையது

மாட்டிக் கொண்டு

புழுவாய்த்துடிக்கும்..******

காமம் தான் பலரது வாழ்க்கையே அழித்திருக்கிறது.....வசன நடையில் இருந்தாலும் நல்ல கருத்து..

ஒவ்வொரு தூறலாய் பதிக்கலாமே தம்பி கவி.....!!

]ஊசிதான் நூலைக்

கொண்டு செல்லும்

துணியில் நூல்தான்

என்றுமெ நின்றுகொள்ளும்...

நூல் மானம் காக்கும்.. உதவிய..

ஊசி மறக்கப்படுவதால்

மௌனம் காக்கும்

எத்தனை ஆழமான உண்மை..அடடா!

சுனாமியை எதிர்பார்க்கும்

கரைபோல

போரை எதிர்பார்த்து

காவலரணில் நிற்கும்

புலி வீரனின் நெஞ்சத்திடம்

வைரத்தை அறுக்கும்

இந்தக் கவிதையைத் தனியாகப் போட்டிருக்கலாம் என்பது என் கருத்து கோவிக்காதைங்கோ...

இருபதில் தந்தையை இகழ்ந்து

நாற்பதில் தந்தையாய் சினந்து

அறுபதில் மகன் அன்புக்கு ஏங்கும்

அவனின் மகன் கூட

இருபதில் தந்தையை இகழ்ந்து

நாற்பதில் தந்தையாய் சினந்து

அறுபதில் மகன் அன்புக்கு ஏங்கும்

வாழ்க்கைச் சக்கரம்...

ஒவ்வொரு கருத்தும் சிந்தனைச் சிதறல்கள் தூறல்.....மனசுக்குள்ளும் அடிக்கிறது..

[

  • தொடங்கியவர்

யாழ் ஒளவை அக்காள்....

என்னை எழுத தூண்டியது என் அம்மாதான்...

சின்ன வயதிலிருந்து நான் எதை கிறுக்கினாலும்... பொறுமையாகப் படித்து திருத்தம் சொல்லுவார்...

என் அம்மாவின் விமர்சனத்திற்கு பிறகு மரியாதை மிக்க விமர்சனமாக உங்களதை எடுத்துக்கொள்கிறேன்...

நன்றி அக்காள்

விமர்சனம் என்பது திருத்தங்களுக்கு வழி வகுக்கவேண்டும்..

தவறுகளை ஊக்குவிக்ககூடாதென்பதுதான் எனது கருத்தும்..

  • தொடங்கியவர்

தூறல் நாள் 70

எங்கள் உரிமைகளை

பிறர் பறித்தெடுக்க முன்பே

எங்கள் ஒற்றுமையை

ஆசையிடம்

அடகு வைத்ததால்...

அலையும் அகதிகளானோம்..

புலியைக் கொல்வதும்

தமிழனைக் கொல்வதும்

ஒன்றுதானென

நினைத்தாதாலோ என்னமோ..

தமிழ்க்குழந்தை உயிர் கொய்துவிட்டு

புலிக்குட்டியை கொன்றதாய்

கொக்கரிக்கிறான் இரக்கமேயில்லா

எதிரி அரக்கன்!

ஈழத்தமிழனாய்

பிறந்ததில் பெருமைப்படுகிறேன்...

தன்மானத் தமிழன்..

தரணிக்கோர் வீரன்..

வீறு கொண்ட வேங்கை...

இனவிடுதலைக்காய்..

சபதம் பூண்ட சரித்திரநாயகன்..

அஞ்சாத்தமிழன்

தேசியத் தலைவர்...

காலத்தில் நானும்..

நானும் ஈழத்தமிழனாய்ப்

பிறந்ததில் பெருமைப்படுகிறேன்!!

எம் விடியல்

தூரமில்லை..ஒவ்வொரு

தமிழனும் தந்த விலை

குறைவேயில்லை..

ஈரத்தை இழந்த பாலையாய்...

கானகம் வடித்த கண்ணீராய்...

காலம் பாடிய முகாரியாய்..

கோலத்துக்கு காத்திருக்கும் புள்ளியாய்..

ஈழ விடுதலைக்காய் ஏங்கிக்கொண்டு

ஒவ்வொரு இதயமும்..

விடிந்ததும்..

இணையத்தில்

இறங்கி விழிகள் தேடும்

விடிவுக்கான வெற்றிச்செய்திகளை

இல்லையென்றால் இதயம்

ஏமாந்துபோகும்..ஏதும்

இழப்பென்றால் இதயம்

நொந்து போகும்

சின்ன வெற்றியென்றால் கூட

ஏதோ ஓர் சந்தேகம்

முழுநாளும் தொற்றிக்கொள்ளும்!!

வித்தாகிய ஒவ்வொரு

வீரரதும் கடைசி

நிமிடங்களை நினைத்துப்

பாருங்கள்..விடியலை

நினைத்துக்கொண்டே

விடை பெற்றிருப்பார்கள்

ஒவ்வொரு மாவீரரதும்

கனவுகளைத் தேக்கி

வைத்துக்கொண்டு....ஒவ்வொரு

வீரனும்..வேகத்தோடும்..

தாகத்தோடும்!!

தூறல் நாள் 70

எங்கள் உரிமைகளை

பிறர் பறித்தெடுக்க முன்பே

எங்கள் ஒற்றுமையை

ஆசையிடம்

அடகு வைத்ததால்...

அலையும் அகதிகளானோம்..

புலியைக் கொல்வதும்

தமிழனைக் கொல்வதும்

ஒன்றுதானென

நினைத்தாதாலோ என்னமோ..

தமிழ்க்குழந்தை உயிர் கொய்துவிட்டு

புலிக்குட்டியை கொன்றதாய்

கொக்கரிக்கிறான் இரக்கமேயில்லா

எதிரி அரக்கன்!

ஈழத்தமிழனாய்

பிறந்ததில் பெருமைப்படுகிறேன்...

தன்மானத் தமிழன்..

தரணிக்கோர் வீரன்..

வீறு கொண்ட வேங்கை...

இனவிடுதலைக்காய்..

சபதம் பூண்ட சரித்திரநாயகன்..

அஞ்சாத்தமிழன்

தேசியத் தலைவர்...

காலத்தில் நானும்..

நானும் ஈழத்தமிழனாய்ப்

பிறந்ததில் பெருமைப்படுகிறேன்!!

எம் விடியல்

தூரமில்லை..ஒவ்வொரு

தமிழனும் தந்த விலை

குறைவேயில்லை..

ஈரத்தை இழந்த பாலையாய்...

கானகம் வடித்த கண்ணீராய்...

காலம் பாடிய முகாரியாய்..

கோலத்துக்கு காத்திருக்கும் புள்ளியாய்..

ஈழ விடுதலைக்காய் ஏங்கிக்கொண்டு

ஒவ்வொரு இதயமும்..

விடிந்ததும்..

இணையத்தில்

இறங்கி விழிகள் தேடும்

விடிவுக்கான வெற்றிச்செய்திகளை

இல்லையென்றால் இதயம்

ஏமாந்துபோகும்..ஏதும்

இழப்பென்றால் இதயம்

நொந்து போகும்

சின்ன வெற்றியென்றால் கூட

ஏதோ ஓர் சந்தேகம்

முழுநாளும் தொற்றிக்கொள்ளும்!!

வித்தாகிய ஒவ்வொரு

வீரரதும் கடைசி

நிமிடங்களை நினைத்துப்

பாருங்கள்..விடியலை

நினைத்துக்கொண்டே

விடை பெற்றிருப்பார்கள்

ஒவ்வொரு மாவீரரதும்

கனவுகளைத் தேக்கி

வைத்துக்கொண்டு....ஒவ்வொரு

வீரனும்..வேகத்தோடும்..

தாகத்தோடும்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கம் கோபம் தாகம் பெருமை என உணர்வுச் சங்கிலியில் பின்னிப்பிணைந்து கவிவரிகள் நகர்ந்துள்ளன. நன்றிகள் விகடகவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகட கவி உங்கள் தூறல்கள் ஒவ்வொன்றும் மனதை நனைக்கின்றன.

வாழ்த்துக்கள் உங்களது அருமையான கவி படைப்புக்களுக்கு

புலியைக் கொல்வதும்

தமிழனைக் கொல்வதும்

ஒன்றுதானென

நினைத்தாதாலோ என்னமோ..

தமிழ்க்குழந்தை உயிர் கொய்துவிட்டு

புலிக்குட்டியை கொன்றதாய்

கொக்கரிக்கிறான் இரக்கமேயில்லா

எதிரி அரக்கன்!

:)
  • தொடங்கியவர்

நன்றி நன்றி நன்றி :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூறல் நாள் 70

எங்கள் உரிமைகளை

பிறர் பறித்தெடுக்க முன்பே

எங்கள் ஒற்றுமையை

ஆசையிடம்

அடகு வைத்ததால்...

அலையும் அகதிகளானோம்..*****

தம்பி கவி,

நீங்கள் சொன்னதன் பிறகுதான் 'ஆசையே அலைபோலே" என்று ஏன் சொல்லுகினம் என்பது தெளிவாகிறது.

புலியைக் கொல்வதும்

தமிழனைக் கொல்வதும்

ஒன்றுதானென

நினைத்தாதாலோ என்னமோ..

தமிழ்க்குழந்தை உயிர் கொய்துவிட்டு

புலிக்குட்டியை கொன்றதாய்

கொக்கரிக்கிறான் இரக்கமேயில்லா

எதிரி அரக்கன்!

வீரம் நிறைந்த குருதி தானே தன்மானத் தமிழனிடம் பாய்கிறது....பகையால் முடிந்தது அதுதானே நிராயுதபாணிகளோடு யுத்தம்!!! புத்தன் சிரிப்பானா அழுவானா? சித்தம் கலங்கித் தவிப்பானா?!!!

ஈழத்தமிழனாய்

பிறந்ததில் பெருமைப்படுகிறேன்...

தன்மானத் தமிழன்..

தரணிக்கோர் வீரன்..

வீறு கொண்ட வேங்கை...

இனவிடுதலைக்காய்..

சபதம் பூண்ட சரித்திரநாயகன்..

அஞ்சாத்தமிழன்

தேசியத் தலைவர்...

காலத்தில் நானும்..

நானும் ஈழத்தமிழனாய்ப்

பிறந்ததில் பெருமைப்படுகிறேன்!!

ஒவ்வோர் தன்மானத் தமிழனும் பெருமைப்படும் விடயம் இது தம்பி கவி. எங்கள் உணர்வலைகளை உங்கள் எழுத்தில் காண்கையில் மகிழ்கிறது மனசு.

எம் விடியல்

தூரமில்லை..ஒவ்வொரு

தமிழனும் தந்த விலை

குறைவேயில்லை..

ஈரத்தை இழந்த பாலையாய்...

கானகம் வடித்த கண்ணீராய்...

காலம் பாடிய முகாரியாய்..

கோலத்துக்கு காத்திருக்கும் புள்ளியாய்..

ஈழ விடுதலைக்காய் ஏங்கிக்கொண்டு

ஒவ்வொரு இதயமும்..

மிக அருமையான வரிகள் கொண்டு செதுக்கிய ஓவியமாய் மிளிர்கிறது கவிதை. ஈழத்தின் வாசலில் கொடியேறும் காலம் தூரமில்லை...வெகுதூரம் இல்லை

விடிந்ததும்..

இணையத்தில்

இறங்கி விழிகள் தேடும்

விடிவுக்கான வெற்றிச்செய்திகளை

இல்லையென்றால் இதயம்

ஏமாந்துபோகும்..ஏதும்

இழப்பென்றால் இதயம்

நொந்து போகும்

சின்ன வெற்றியென்றால் கூட

ஏதோ ஓர் சந்தேகம்

முழுநாளும் தொற்றிக்கொள்ளும்!!

நானும் நினைத்துப் பார்க்கின்றேன் யாழில் வந்து விழிகள் தேடுவதே எங்கேனும் பலத்த அடி பகைக்கு இருக்கிறதோ என்றுதான். ஒரு புலிவீரனின் உயிர் பகையின் பத்தாயிரம் உயிர்களுக்கும் சரி சமானம் இல்லையே...நாம் ஒன்றை இழந்தாலும் அது பேரிழப்பே. மீண்டும் ஒவ்வோர் மானத்தமிழனின் மனசையும் படம் பிடித்து வைத்த வரிகள்.

வித்தாகிய ஒவ்வொரு

வீரரதும் கடைசி

நிமிடங்களை நினைத்துப்

பாருங்கள்..விடியலை

நினைத்துக்கொண்டே

விடை பெற்றிருப்பார்கள்

ஒவ்வொரு மாவீரரதும்

கனவுகளைத் தேக்கி

வைத்துக்கொண்டு....ஒவ்வொரு

வீரனும்..வேகத்தோடும்..

தாகத்தோடும்!!

உயிர் வலிக்கும் என் நிலை நினைத்து விதி சிரிக்கும் எதற்காய் இங்கு வந்தோம்?!!! வித்தாகும் வீரர்களை எண்ணி எண்ணி மனம் இறுமாப்புக் கொள்ளும். எப்படி முடிகிறது சகோதரனே/ சகோதரியே மலரம்புகள் தொடுத்து காதல் கவி வடிக்கின்றோம் நீங்களோ உயிரம்புகளாய் எதிரியைப் பந்தாடுகின்றீர்கள் என்று வியந்து விழிபார்க்கும் என்றென்றும் எங்கள் வணக்கத்துக்குரியவர்கள் எம் மாவீரச் செல்வங்கள்.

தமிழோடு கை கோர்த்து உயிரோடு கதை பேசும் கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர் வேரை நனைத்துச் செல்கின்றன... என் சொல்லேற்று தூறலில் தாயகம் போராட்டம் சேர்ந்த கவிகளைக் கோர்த்தமைக்கு மிகுந்த நன்றி தம்பி கவி. மிக அகமகிழ்கின்றேன்.

** நன்றிகள்** என்று பன்மையில் வராது...நன்றி என்பதே சரி...<_< யாழ்கள உறவுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Edited by Thamilthangai

விகடகவியின் எல்லா கவிதைகளும் வாசித்து ரசிகனாகிவிட்டேன். கருத்துக்கள் வழங்காவிடின் குறைநினைக்கவேண்டும். நேரம் கிடைக்கும்போது கட்டாயம் வரைவேன்.

  • தொடங்கியவர்

விகடகவியின் எல்லா கவிதைகளும் வாசித்து ரசிகனாகிவிட்டேன். கருத்துக்கள் வழங்காவிடின் குறைநினைக்கவேண்டும். நேரம் கிடைக்கும்போது கட்டாயம் வரைவேன்.

நன்றி நன்றி நன்றி :D

  • தொடங்கியவர்

தூறல் நாள் 71

இவர்கள்..

சுமந்துகொண்டு செல்வது

கந்தகக்குண்டையென்று

உலகம் சொல்லலாம்..

நிஜம்

அது இல்லை...

எல்லா இளைஞர்களையும் போல

கண்களில் கனவையும்..

இதயத்தில் ஏக்கத்தையும்..

இளமையின் தாக்கத்தையும்..

வாழ்வின் தாகத்தையும்..

சேர்த்துப் படைத்த

மனிதர்கள்தாம் இவர்கள்..

ஆனால்

அடிமையாய் வாழ்வதெற்கு

ஏனிந்த வாழ்வென்று?...

அகதியாய் அலைவதற்கு

ஏனிந்த பிறவியென்று?...

தடைகளை உடைத்து

தம்மையே வெடித்துக்கொண்டு...

ஈகத்தையும் வீரத்தையும் காட்டி

எம்மை வானவளாவ

அண்ணாந்து பார்க்க செய்த

உன்னதமான தெய்வங்கள் வரிசையில்

இவர்கள்..

சுமந்துகொண்டு செல்வது

கந்தகக் குண்டையல்ல

கலிகாலன் கனவை...

தமிழீழ ஒளியை...

தமிழின விடிவை...

எல்லா தேசங்களும்

பேசும் பிரஜாவுரிமை...

மனிதநேயம்.. சுதந்திரம்..

இதனைப் பெற்றுக்கொள்ள

எங்கள் தேசத்தில் மட்டும்..

எத்தனை செம்மடல்

விண்ணப்பங்கள்...

புலிகளாய்..கரும்புலிகளாய்..

ஈகைமனுக்களாய்...

தங்கை

நீ பயப்படாமல் பள்ளிக்குப்போகலாம்...

அண்ணா

நீங்கள் தயக்கப்படாமல் வேலைக்குப் போகலாம்..

அப்பா

நீங்கள் துணிந்து வயலில் காலை வைக்கலாம்..

அம்மா

நீங்கள் அவர்கள் திரும்பிவருவார்கள் நிம்மதியாய்

காத்திருக்கலாம்..

நானும்..

பயப்படவில்லை..

தயக்கப்படவில்லை..

துணிவாக...

நிம்மதியோடு..

காலக்கட்டளையை

கண்ணிலேயேற்றி

பொருளோடு போகிறேன்...

புகைப்படமாய் சந்திக்கிறேன்..

என்ன தவம் செய்தோம்..

எத்தனை ஈகை தெய்வங்கள்

எம் தமிழினத்தில் மட்டும்

எத்தனை வீரர்கள்

எம் தமிழினத்தில் மட்டும்..

தம் உயிரைவிட

மண்ணை நேசிக்கும்

மாணிக்கங்கள் எத்தனை பேர்

எம் தமிழினத்தில்..

தமிழனாய்ப் பிறக்க

என்ன தவம் செய்தோம்.....

இரும்புக்கோட்டைக்குள்

இருக்கும் எதிரியின்

செருக்கை உடைப்பவர்

கரும்புலிவீரர்.

அண்ணனின் ஆசி வாங்கி

அழகிய புன்னகை ஏந்தி

உயிரை விதைக்கின்ற

உன்னதப் பொழுதறிந்த

உத்தமக்கண்மணிகள் எங்கள்

கரும்புலி தெய்வங்கள்

எண்ணிப் பார்க்கவேமுடியாத

அளப்பெருந்தியாகத்தை...

ஈகை செய்த கரும்புலி நாயகர்களே...

வார்த்தைகள் சிரமப்படும்

விபரணத்தை விழுங்கிக்கொள்ளும் வீரத்தை

கண்முன் காட்டிய மாவீரர்களே..

உங்கள் ஈகைக்கும்..புகழுக்கும்

தலை சாய்த்தோம்...

உங்கள் கனவிற்கும் குறிக்கோளிற்கும்

கைகோர்ப்போம்..

தமிழினம் வெல்லும்

தமிழீழம் விடியும்-நாளை

சரித்திரம் உங்கள்

பெயரே சொல்லும்.

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

தூறல் நாள் 72

இளைய தமிழன் இரத்தத்தில்

ஈரமான ஈழத்தில்..

ஏழைத்தமிழனின்

பசித்த செடியடியில்

வெந்நீரூற்றும் அயல்நாடுகள்...

உயிரை வேரோடு

பிடுங்கப் பார்க்கும் இலங்கையரசு...

உயிரூட்டிய அன்னையை

பாலூட்டிய அன்னையை

நீராட்டிய அன்னையை

தாலாட்டிய அன்னையை

சோறூட்டிய அன்னையை

கர்ணன் தேரோட்டி போல

தெருவில் விட்டகழ்ந்தவரே..

தாயும் தமிழ்மண்ணும்

பிறப்பின் அடையாளம்..

ஆன்மாவின் அடைக்கலம்

மௌனம் காக்கும் உன் மனமே

காலங்கள் தவறிப்போனால்

உன்னைக் குத்திக்குத்தி கொல்லும்

தாயின் கடமையும்

தாயகக் கடமையும்

தலையாய கடமை..

தவறவிடாத தமிழராவோம்

கனிந்தன விழும்

அல்லது விழுத்தப்படும்

ஆனால் அவைதானே

விதைகளாகும்...

கல்லாய் ஆயிரம் நாள்

கடத்துவதிலும்..

கனியாய் இனித்து..

ஓர் நாளில்..

ஊர்வலமாய்ப் போய்விடலாம்

வரலாறுகள் வரைந்த

வாழ்க்கை வழியை

அறிந்தும் திருந்தாமல்

மந்தையாய் மானிடர்கள்..

சுயத்தை தொலைத்து

சுற்றத்தை மறந்து

சொந்த மண்ணை விற்று

பித்தேறிப் பிழைக்கும்..

பிணத்தையொத்த..பிறவிகள்..

தமிழ் தேசத் துரோகிகள்

தமிழீழ தாகத்தில்

பூக்கனவை உள்ளேற்று

தீக்கனலை பிரசவிக்கும்

கரும்புலி நாயகர்கள்

காலத்தின் கல்வெட்டுகள்-தமிழ்

ஈழத்தின் வானெட்டும் சிகரங்கள்

வாழ்க தமிழ்

வாழ்க தமிழென்று

வானெட்டக் கூவ

வழக்கம் போல் சிலபேரோடு

பழக்கம் போல் விட்டிடாமல்

முழங்கிடலாம்..

முழங்கிடலாம்..

எல்லோரும் வாருங்கள்

பொங்கத் தமிழ்...

பொங்குதமிழ் 2008

  • தொடங்கியவர்

தூறல் நாள் 73

ஒரு ஈழத்தாய்த் தாலாட்டு

தோட்டாவேட்டுத் தாலாட்டில்-தங்கத்

தளிரே நிலவே நீ தூங்கு

வெடிகுண்டுச்சத்தப்பாட்டை -சிங்கத்

தமிழே..உறவே நீ கேளு

நீ பிறந்தது ஈழ தேசம்..

இப்போதும் யுத்தகோசம்

இங்கு வாடைக்காற்று வீசும்

வாடையில் இரத்த வாசம்..

தோட்டாவேட்டுத் தாலாட்டில்-தங்கத்

தளிரே நிலவே நீ தூங்கு

வெடிகுண்டுச்சத்தப்பாட்டை -சிங்கத்

தமிழே..உறவே நீ கேளு

நீ கருவாய் பூத்த காலம்..

தாய் மாமனைத்தானே காணோம்

அரக்கர் தூக்கிச் சென்றார்

நிறை கர்ப்பத்தின்போது மகனே

உயிரோடெரிந்த சித்தியின்

சாம்பலை நுகர்ந்துவிட்டாய்

பூமிக்கு நீ வந்தபோது-உன்

தந்தையை இராட்சதர் கொன்றார்

இளமகனே..சிறுமலரே...இவள்

இதயம் மரத்த தாயடா..-என்

கண்ணில் ஈரம் ஏதடா

பாலுக்கு கூட நீ அழுதால்

கோபம் கொள்வேனே..

இனி அழுகைக்கில்லை காலம்-நீ

அரக்கரை அழித்திட வேண்டும்

புலி வளர்ப்பேன்..

புலி வளர்ப்பேன்

கரும்புலியாய் வளர்ந்திடு கண்ணே

வீறுடனே..

வெறியுடனே..

பகைவரை மிதித்திடு கண்ணே..

பயம் என்ன பொருளென்று

அறியாமல் வளர்ந்திடடா..

கண்ணீரின் முகவரியை

முழுதாய் மறந்திடடா..

ஈழம் ஒன்றே இலக்கு-அதை

ஏறு போல் வானெட்ட முழக்கு..

புலி வளர்ப்பேன்..

புலி வளர்ப்பேன்

கரும்புலியாய் வளர்ந்திடு கண்ணே

வீறுடனே..

வெறியுடனே..

பகைவரை மிதித்திடு கண்ணே..

தோட்டாவேட்டுத் தாலாட்டில்-தங்கத்

தளிரே நிலவே நீ தூங்கு

வெடிகுண்டுச்சத்தப்பாட்டை -சிங்கத்

தமிழே..உறவே நீ கேளு

நீ பிறந்தது ஈழ தேசம்..

இப்போதும் யுத்தகோசம்

இங்கு வாடைக்காற்று வீசும்

வாடையில் இரத்த வாசம்..

தோட்டாவேட்டுத் தாலாட்டில்-தங்கத்

தளிரே நீ நிலவே தூங்கு

வெடிகுண்டுச்சத்தப்பாட்டை -சிங்கத்

தமிழே..உறவே நீ கேளு

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவித்தம்பி என்று அழைப்பதை விடுத்து இனி "அண்ணா" என அழைக்கலாமா?!! அருமையாக இருக்கிறதே ஒவ்வொரு வரிகளும், பாலில் கூட ஈழ உணர்வை ஊட்டி வளர்க்கும் வீரத்தாயைக் கண்டு மனம் மகிழ்கிறது.

ஈழம் ஒன்றே இலக்கு-அதை

ஏறு போல் வானெட்ட முழக்கு..

இத்தனை உறவுகளை இழந்தும் பெற்ற மகனைத் தாய் நாட்டுக்கே தாரைவார்க்கும் அந்த வீரத்தாய்க்கும் அதைக்கவிதையில் வடித்த கவி(தம்பி) அண்ணாவுக்கும் வாழ்த்து.

'கண்மணியே கண்ணுறங்கு" என்ற எம் தேசியப் பாடலும் செவியோடு ஒலித்தது"

  • தொடங்கியவர்

அண்ணா பரவாயில்லை அனிதா போல தாத்தா என்று அழைக்காவிட்டால் சரி :lol:

நன்றி ஒளவை அக்கா :rolleyes:

  • தொடங்கியவர்

தூறல் நாள் 74

வாழ்க்கை

வாங்கலும் விற்றலும்

சுகமும் சோகமும்

அழுகையும் சிரிப்பும்

உண்டியும் உறங்கலும்

காதல்

இதயமும் இதயமும்

ஏக்கமும் இன்பமும்

குழப்பமும் தெளிவும்

அதிர்ஸ்டமும் ஆபத்தும்

நட்பு

உதவியும் ஊக்கமும்

நம்பிக்கையும் சங்கடமும்

தைரியமும் பலவீனமும்

போட்டியும் விட்டுக்கொடுப்பும்

குழந்தை

அழகும் அக்கறையும்

ஆச்சரியமும் ஆசையும்

தவிப்பும் தண்டிப்பும்

பொழுதும் போக்கும்

பள்ளி

சொர்க்கமும் நரகமும்

அறிவும் ஒழுக்கமும்

ஓட்டமும் கூட்டமும்

பயமும் படிப்பும்

பசி

வயிறும் வறுமையும்

இலையும் சோறும்

கடனும் தானமும்

சுவையும் சுழற்சியும்

தமிழ்

பேச்சுக்கும் மூச்சுக்கும்

பாட்டுக்கும் போட்டிக்கும்

பெருமைக்கும் எளிமைக்கும்

சுவைக்கவும் சிந்திக்கவும்

வாழ்க்கை

வாங்கலும் விற்றலும்

சுகமும் சோகமும்

அழுகையும் சிரிப்பும்

உண்டியும் உறங்கலும்

காதல்

இதயமும் இதயமும்

ஏக்கமும் இன்பமும்

குழப்பமும் தெளிவும்

அதிர்ஸ்டமும் ஆபத்தும்

நட்பு

உதவியும் ஊக்கமும்

நம்பிக்கையும் சங்கடமும்

தைரியமும் பலவீனமும்

போட்டியும் விட்டுக்கொடுப்பும்

அருமையான் தூறல்கள் விகடகவி!!

அன்புடன் வாழ்த்துவது இனியவள் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.