Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளால் யாழ் குடாவை மீட்க முடியுமா?

Featured Replies

விடுதலைப் புலிகளால் யாழ் குடாவை மீட்க முடியுமா?

கடந்த 18.12.2007 அன்று விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி இருந்து. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி அந்த அறிக்கையை தயாரித்திருந்தார். சர்வதேச சமூகத்தைக் குறிவைத்து வரையப்பட்டிருந்த அந்த அறிக்கையில், யாழ் குடாவில் தமிழ் மக்களை சிங்கள அரசாங்கம் அடைத்து கொடுமைப்படுத்தி வருவது பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள 5 லட்சம் மக்களை உலகத்தின் பிற்பகுதிகளோடு இணைக்கக் கூடிய ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் மூடிவைத்துள்ளதானது, அனைத்துலகச் சட்டங்களை மீறும் ஒரு செயல் என்று அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

யாழ் குடாவில் உள்ள மக்களின் மோசமான மனிதாபிமான நிலமை பற்றி விபரித்துள்ள அந்த அறிக்கையில், தற்போது யாழ். பொதுமக்கள் தங்களது அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கென எதுவித தரைவழிப்பாதையும் கிடையாது. சிறிலங்கா கடற்படையால் இயக்கப்படும் பயணிகள் கப்பல் என்பதுதான் ஒரே வழியாக உள்ளது. யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் இடையே இந்தப் பயணிகள் கப்பல் ஒவ்வொரு முறையும் செல்லும்போது பொதுமக்களை விட சிறிலங்கா இராணுவத்தினரே பெருமளவில் அதில் பயணம் மேற்கொள்கின்றனர் என்றெல்லாம் சுட்டிக்காண்பிக்கப்பட்டிரு

  • கருத்துக்கள உறவுகள்

:( மிகவும் நம்பிக்கை தரும் ஒரு ஆக்கம். பந்தியாளர் தர்க்க ரீதியாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். எங்களனைவருக்கு நம்பிக்கை நட்சத்திரமான புலிகளியக்கம் விரைவில் அதன் மவுனச்சிறையிலிருந்து விசுவரூபமெடுக்கும் என்பதே அனைத்து தமிழர்களினதும் எதிர்பார்ப்பும் வேண்டுதலும்.

இணைப்பிற்கு நன்றிகள், இறைவன் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கூறப்பட்டுள்ளவற்றில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த நம்பிக்கைக்குக் காரணங்களுள் முக்கியமானது ஜெயசுக்குறு சமர்..! :(

யார்தான் எதிர்பார்த்தார்கள் சிங்களப்படை அந்த வேகத்தில் ஓட்டமெடுக்குமென்று. :D சத்தியமாக நான் நினைக்கவில்லை.

யாராவது புலிகள் பலமிழந்துவிட்டார்களென்று நினைப்பார்களேயானால் அவர்கள் சிங்கள ஊடகப் பலத்துக்கு இரயாகிவிட்டார்கள், என்னைப்பொறுத்தவரைக்கும்.

தர்க்கிக்கப் பட்டு ரிரூபணமாக எளுதப்பட்டிருக்கிறது மிகனறான ஆக்கம். புலிகளால் முடியும் என்பது தமிழர்கள் என்று தம்மை நினைப்பவர் களுக்குத் தெரியும். முடியாத தொன்றை முயற்ச்சிக்கு மளவுக்கும் பிரபாகரன் சிந்திப்பதும் மில்லை. அதுதான் புலிகளினது வரலாறும் அதனூடான தமிழர் களினது வரலாறும்.

என்னமொரு விடயம், முடியுமா முடியாதா என்பதற்கு அப்பால் அதை செய்வதைத் தவிர வேறுவழி எமக்குகில்லை. நிச்சயமாய் அதை செய்ய எங்களுடைய காத்திரமான பங்களிப்பை செய்வோம்..

  • கருத்துக்கள உறவுகள்

எனது தனிப்பட்ட அபிப்பிராயம் புலிகளை பற்றி. எவ்வளவு போராளிகள் என்பது முக்கியமல்ல.உ+ம்.ஆனையிறவை புலிகள் துவம்சம் செய்த பின் யாழ் நோக்கி புலிகளின் தாக்குதல் சிறிதளவாக ஆரம்பித்த போது இராணுவம் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடியதை கண்ணால் கண்டவன் என்ற ரீதியில் , சிங்கள ராணுவம் மனோவியல் ரீதியாக சிறிய தாக்குதலுக்கே ஓட்டமெடுப்பவர்கள் என்பது கண்கூடு. சிலர் வாதிடலாம் இப்போ இராணுவம் ஆயுத நிலையில் பலமான நிலையில் உள்ளதென.ஆனால் மனோவியல் ரீதியில் இராணுவம் பலவீனமாகவே இப்போதும் உள்ளது.அது தான் புலிகளின் இன்னொரு பலமும் கூட.

  • தொடங்கியவர்

பிதேசங்களைக் கைப்பற்றுதல் அதனைத் தக்கவைத்துக் கொள்ளுதல் என்பவை விடுதலைப்புலிகளுக்கு ஒரு பெரிய காரியமல்ல. புலிகளின் காத்திருப்புத்தான் சரத் பொன்சேகாவின் கருத்துக்களுக்கு இடங்கொடுத்துள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய இராணுவ அதிகாரிகள் சரத்பொன்சேகாவை ஒரு யுத்த அறிவிலி என்றுதான் நினைத்திருப்பார்கள். நில மீட்பு நடைபெறும்போது இராணுவம் சிதறடிக்கப்படும் என்பது உண்மை. இராணுவத்தால் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள நவீன ஆயுத தளபாடங்களும் புலிகளின் கைக்கு மாறும்போது மேலும் புலிகளிடம் பலம் அதிகரிக்கும். மூதூர் இராணுவத் தளப் பிரதேசத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தாக்குதலின்போது கைப்பற்றப்பட்ட முழு ஆயுதப் பட்டியலின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. 128mm வகை ஆட்டிலெறி கைப்பற்றப்பட்டதாக மட்டுமே இளந்திரையன் பீ பீ சி க்கு ஒரு குறும்பதில் ஒன்றைக் கொடுத்திருந்தார். ஆகவே நம்பிக்கையோடு இருப்போம். அடுத்த வருடத்திற்குள் அழிப்போம் என்று புறப்பட்டவர்கள் அழியப்போவதைக் காணக் காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இராணுவ ரீதியாக முன்னேறுவதில் கண்ணும் கருத்தாகவே உள்ளார்கள்.அதே வேளை அரசியல் ரீதியாக முன்னேறுவதில் மட்டுமல்லாமல் உலக அரசியல் அரங்கில் தமிழ் மக்களும் அங்கம் பெற வேண்டுமென்பதில் மிக மிக சாவதானமாக நடந்து கொள்கிறார்கள்.

ஒரு தாக்குதல் என்பதோ அல்லது ஒரு பிரதேசத்தை தக்க வைப்பது என்பதோ வி.புலிகளுக்கு கைவந்த கலை.ஆனாலும் அவசரப்படாமல் காய்களை நகர்த்துகிறார்கள் என்பது எனது உய்த்தறிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் குடாநாட்டை விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி கைப்பற்ற வேண்டிய தேவையில்லை

காரணம்

யாழ்ப்பாண புவியியல் அமைப்பு. யாழ் குடாவின் மூன்று பகுதி கடலாலுமொரு பகுதி தரையாலும் சூழப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். ஆக யாழிலுள்ளா இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு தேவையான சகல வழங்களும் கடலாலும் வான்வழி மூலமுமே நடைபெறுகிறது. காரணம் தரைவழி விடுதைலைப்புலிகள் வசம் உள்ளது. இதிலும் வான்வழி மூலம் ஆயுத தளபாட விநியோகம் நடைபேறுவது மிகவும் குறைவு ஆபத்து நிறைந்ததும் கூட. ஆக கடல் வழி மூல விநியோகத்தை தடைசெய்தால் யாழிலுள்ள இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவம் இலகுவாக முற்றுகைக்கு உள்ளாகும்.

வான்வழி வழங்கலும் மட்டுப்படுத்தப்பட்டதே காரணம் பலாலி விமான படைத்தளம் விடுதலைப்புலிகளின் ஆட்லறி தாக்குதல் வட்டத்திற்கு உட்பட்டதே.இதனாலேதான் யாழுக்கான தரைப்பாதையை திறப்பதில் இலங்கை இராணுவம் மும்முரமாக உள்ளது.

இதனால யாழ் குடாவில் உள்ள இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவம் எப்போதும் பொறிக்குள்ளேதான் இருக்கின்றது என்பது யதார்த்தம். இது எப்போதும் விடுதலைப்புலிகளுக்கு அனுகூலமான ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அல்ல பல நாடுகளிலும் வான்படை கெரில்லா தாக்குதலகளை நிர்மூலமாகியுள்ளன.உ+ம் இஸ்ரேல். அதே பாணியை இலங்கை அரசும் தொடர்கிறது.இதனால் தான் பல தற்கொடை வீரர்கள் முலம் அநுராதபுர தளம் வி.புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது.சிறு சிறு எதிர்ப்பு தாக்குதல் மூலம் எதிரியை சமாளித்தாலும் மகிந்த அரசின் பொருளாதார இலக்கு மீதான தாக்குதல் தொடரும்.தொடரவேண்டும் என்பதே வி.புலிகளின் தார்மீக மந்திரம்.

:( மிகவும் நம்பிக்கை தரும் ஒரு ஆக்கம். பந்தியாளர் தர்க்க ரீதியாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். எங்களனைவருக்கு நம்பிக்கை நட்சத்திரமான புலிகளியக்கம் விரைவில் அதன் மவுனச்சிறையிலிருந்து விசுவரூபமெடுக்கும் என்பதே அனைத்து தமிழர்களினதும் எதிர்பார்ப்பும் வேண்டுதலும்.

இணைப்பிற்கு நன்றிகள், இறைவன் !!!!!

உண்மைதான் ரகுநாதன் ஆனால் நாமே எதிரியை விழிப்பாக இருக்க சொல்வது போல் இல்லையா>?

ஏற்கனவே தமிழ்செல்வன் அண்ணாவை பூநேகரி கட்டளை தளபதியாக்கி( நான் எழுதினேன் :D ) அவரை சாகடிச்சுட்டோம் இனியும் இப்படியான ஆக்கங்களை எழுதி எதிரிக்கு இன்னும் இலகுவாக்க போகிறோமா?

விடுதலைபுலிகள் யாழ்ப்பாணத்தை இழந்து பத்தாண்டுகளை கடந்துவிட்டன,

கடமையை ச் செய்யுங்கள் நண்பர்களே.............. நாளைய சரித்திரம் சொல்லும்

புலிகளின் போர்ப்படை வெல்லும்!

  • கருத்துக்கள உறவுகள்

சசி நீங்கள் சொல்வதிலும் உண்மையிருக்கிறது. இவ்வாறான ஆய்வுகளிலிருந்து எதிரி தகவல் சேகரிப்பது உண்மையாயிருந்தால் நாம் அதைத் தவிர்ப்பது தான் நல்லது. ஆனாலும் இவ்வாரான தகவல்கள் உண்மையில் நடந்தவைதானே ? எதிரிக்கு இவை தெரிய நியாயமில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்களா ?

எதற்கும் நாம் அவதானமாயிருப்பதுதான் நல்லது.

நன்றிகள் சசி !

  • 3 weeks later...

விடுதலைப்புலிகளிடம் யாழை மீட்கும் பலம் இருக்கிறது என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் 2001ல் புலிகள் அனையிரவைப் பிடித்து சாவகச்சேரியைப்பிடித்து யாழைப்பிடிக்கும் நிலைக்கு வந்தபோது இந்தியாவின் அழுத்தம் காரணமாக புலிகள் யாழைப் பிடிப்பதை நிறுத்தியாதாகச் சொல்லப்படுகிறது. அதுபோல 2006லும் வெளினாட்டு அழுத்தங்கள் ஏற்பட்டது. இனிபுலிகள் யாழைப்பிடிக்கும் போது இந்தியா, வெளினாடுகள் புலிகளுக்கு அழுத்தம் குடுக்கும் போது புலிகள் யாழைப்பிடிப்பதை நிற்பாட்ட மாட்டார்களா?.

அண்ணாமார்களே, விடுதலைப்பபுலிகளுக்கு தாங்க என்ன செய்யவேண்டும் என்பது தெரியும் தானே. சும்மா பின்ன என்ன இதுகளைப்போயி கதைத்து சும்மா நேரத்தினை வீணாக்குவான். இந்த நேரத்தில எப்படி புலம் பெயர்ந்த தமிழர் மீன்டும் கைகோர்த்து, பிறநாட்டவனை எம் போராட்டம் பக்கம் திசை திருப்ப முடியுமோ என்று பார்ப்பமோ?

  • கருத்துக்கள உறவுகள்

உது பொறுப்பான கதை கண்டியளோ ? நாங்கள் இங்கு செய்ய வேண்டியதைச் செய்வம், யாழ்ப்பாணத்தைத் தலைவரிட்ட விட்டு விடுவம் ! அவர் பாத்துக் கொள்வார்.

  • தொடங்கியவர்

நாட்கள் எண்ணப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும் ! நம்பிக்கையுடன் இருப்போம். நம் கைய்யே நமக்குதவி !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.