Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் போர் செய்யும் படையினர் கண்ட முன்னேற்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

map1.jpg

மூலம்: http://www.sundaytimes.lk/

கடந்த 10 மாத இராணுவ முன்னெடுப்புகளின் பயனாக மன்னார் கள முனையில் கைப்பற்றப்பட்ட இடங்களில் ஒரு பகுதி.

(தடித்த முறிவு உள்ள கோடு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்னான நிலைகளைக் குறிக்கிறது, சரிவுக்கோடுகளால் நிழற்றப்பட்ட பகுதி இராணுவத்தால் புதிதாக அல்லது மீளக் கைப்பற்றிய இடங்களைக் காட்டுகிறது.)

20071229_01.jpg

இவற்றுக்கு மேலதிகமாக வன்னியின் மேற்குக் கரையை ஒட்டிய மன்னார் கள முனையில் பரப்பான் கண்டல் பகுதியில் நேற்றைய தினம் இராணுவம் 1 கிலோமீற்றர் தூரத்தைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. புலிகள் இப்பகுதியில் கடும் சமர் இடம்பெறுவதாக மட்டும் சொல்லியுள்ளனர். (இச்செய்தியை சுயாதீன ஊடகங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இப்படம் உட்பட இச்செய்தி சிறீலங்கா பாதுகாப்பமைச்சுக்குச் சொந்தமானது.)

வன்னி நோக்கி முன்னேறும் பொருட்டு படை நடவடிக்கையில் இறங்கியுள்ள சிறீலங்காப் படையினர் மன்னார் கள முனையில் தரையில் சில வெற்றிகளைப் பெற்றுள்ளனர். மன்னார் கள முனையில் சில பகுதிகளை( விடுதலைப்புலிகள் சில காரணங்களுக்காக அப்பகுதிகளில் இருந்து வெளியேறிய பின்) கைப்பற்றியுள்ளனர். சில பகுதிகளைக் கடும் சண்டைக்குப் பின்னர் கைப்பற்றியுள்ளனர்.

இராணுவத்தின் முன் நகர்வு முயற்சிகள் பெரிதாக இருப்பினும் சிறுகச் சிறுகவே அவர்களின் நில ஆக்கிரமிப்பு என்பது இருக்கிறது. ஆனால் அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இது போரியல் ரீதியில் புலிகளுக்கு ஆபத்து மிக்க ஒன்றாகவே இருக்கும்..!

மேலும் நெடுந்தீவுக் கடற்பரப்பில் நடந்த தாக்குதலில் கடற்படைத்தரப்புக்கு ஏற்பட்ட முழுமையான பாதிப்பு என்பது வெளிவந்ததை விட அதிகம் என்று தெரிகிறது. இருந்தாலும் சிறீலங்காவில் உள்ள செய்தித் தடைகளால் அவற்றை வெளியிடுவதில் செய்தியாளர்கள் பின்னடிக்கின்றனர்..!

The Navy also dismissed LTTE claims that another fast attack craft was badly damaged whilst a third was also hit. Some of the other details related to this incident, though very much in the public interest, cannot be revealed for more than one reason.

மேலும் கள நிலவரங்களை அறிய.. இவ்விணைப்பை அணுகுங்கள்..!

http://www.sundaytimes.lk/071230/Columns/sitreport.html

குறிப்பு: இராணுவக் கள நிலவரங்களைப் பதியும் இப்பந்தி சிங்கள தேசத்தில் வசிக்கும் இக்பால் அத்தாஸ் என்ற பத்திரிகையாளரால் எழுதப்பட்டது. அவரின் குறிப்புகள் 100% சரியானவை என்பதை எம்மால் உறுதி செய்ய முடியாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெறுமையோடு இருப்போம்

நீ உண்மையானவனாயின் இறுதி வெற்றி உணக்கே

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகள் கள நிலைமையை இராணுவ ரகசியங்களை பேணும் பொருட்டு வெளியிடாமையின் வெளிப்பாடே அரசின் புளுகோ இல்லையோ நம்பவேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சுயாதீன ஊடகங்கள் உண்மை நிலையை வெளியில் சொல்லி விடுவார்கள் என்பதற்காக அவர்களை இராணுவம் எக்காரணம் கொண்டும் அனுமதிப்பதில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம் புலிகள் தடுக்கும் தாக்குதலை நிறுத்தி முன்னோக்கிய தாக்குதலை நடத்தாதவரை அவர்களை ஆபத்து நெருங்குகிறது என்று அர்த்தமாகும்.

களம் விரிவடையும். அப்போது இவைகள் காணாமற்போகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.