Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு விரோதமான செய்திகளை பரப்புவதே இலங்கை அரசாங்கத்தின் வாடிக்கையாகி விட்டது -வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு விரோதமான செய்திகளை பரப்புவதே இலங்கை அரசாங்கத்தின் வாடிக்கையாகி விட்டது வைகோ

1/3/2008 9:10:37 PM

வீரகேசரி இணையம் - பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா என்ற விவகாரம் குறித்து இலங்கை அரசு பரப்பி வரும் செய்தியில் துளியும் உண்மையில்லை என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் தமிழர்களுக்கு விரோதமாக பொய்யான செய்திகளை பரப்பி வருவதே இலங்கை அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது எனத்தெரிவித்த அவர் இலங்கை சுதந்திர தினவிழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளா புதிய அணையை கட்ட அலுவலகம் கட்டி திறக்கப்பட இருப்பதாக அம்மாநில முதல் மந்திரி கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அணை கட்ட உள்ளனர். இது குறித்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

சென்னையில்தான் மின்வெட்டு குறைவõக உள்ளது. சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் மின்சார தடை அதிகமான அளவில் உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டு பாதிப்பு, உரத்தட்டுப்பாடு, நெல்லுக்கு விலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 11 ஆம் திகதி தென்மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி கோவில்பட்டியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ம.தி.மு.க கட்டுக்கோப்பான கட்சியாக உள்ளது. இந்த ஆண்டை நம்பிக்கையோடு நாங்கள் சந்திக்கிறோம். அ.தி.மு.க தோழமை மேலும் வலுப்பெற்று வருகிறது. தி.மு.க அரசை மக்கள் சக்தியை திரட்டி அகற்றுவது என்று அ.தி.மு.க.வோடு கரம் சேர்த்து தோழமை வளர, வலுப்பெற பணியாற்றி வருகின்றோம். இந்த ஆண்டு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் . மத்திய அரசு தனது செல்வாக்கை வேகமாக இழந்து வருகின்றது. குஜராத், இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் கடைசிவரை இந்த அரசுக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள். எனவே இந்த ஆண்டே பாராளுமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது. அது மாற்றத்தை உருவாக்கும் அதன் எதிர்விளைவுகள் தமிழகத்திலும் பிரதிபலிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைகோ அவர்களே அப்படியென்றால் உங்கள் ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு ஆதரவா பிரச்சாரம் செய்கின்றாரா??

இல்லை வைகோ உங்கள் திறமையான தமிழ் பேச்சால் ஈழத்தமிழரை முட்டாளாக்க பார்க்கின்றீர்களா??

சத்தியமா உங்கள் கொள்கை என்னவென்றே விளங்கவில்லை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ,தமிழ் நாட்டின் அரசியல் பல்டிக்கு ஏற்ற படி பல்டி அடித்து தனது நிலையை ஸ்திரப்படுத்தி கொள்கிறார்.அதே நேரம் எக்கட்சியில் தான் இருந்தாலும் ஈழதமிழருக்காக அன்றும் இன்றும் குரல் கொடுக்கிறார்.இதில் ஏதும் சூட்சுமம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

அவருக்கு முடிந்தது அவ்வளவுதான்... உபயோகம்தான் இல்லை எண்டு ஆகிப்போச்சு அட்லீஸ்ட் வடிவுக்கு வச்சுக்கொள்ளவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்கள் இங்கு ஒன்றை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

தமிழ் நாட்டில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசும் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவர்களே.

இந்தியாவும் ஈழத்தமிழருக்கு எதிரான போக்கை கொண்டுள்ளது என்பது வெளிப்படையான உண்மை.

அதே நேரம் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழருக்கு வேறு ஏகாதிபத்திய நாடுகள் உதவ விடாது தடுப்பதற்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை உபயோகிக்கின்றது என்பது தான் உண்மையாகும்.

Edited by tamillinux

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு முடிந்தது அவ்வளவுதான்... உபயோகம்தான் இல்லை எண்டு ஆகிப்போச்சு அட்லீஸ்ட் வடிவுக்கு வச்சுக்கொள்ளவேண்டியதுதான்

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற வகையில் தான் பார்க்க வேண்டும்.கருணாநிதி போன்றோர் பதவியில் இருந்தும் மத்திய அரசுக்கு ஜால்ரா போடுபவர்களாகவே உள்ளார்கள்.இவர்களுடன் ஒப்பிடும் போது வை.கோ, திருமாவளவன் போன்றோரின் செயலுக்கு ஈழ தமிழ் மக்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ அவர்களை விமர்சிப்பவர்கள்

அவர் எங்கஞக்காக பட்ட துன்பங்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும்

இன்று சில எம்எல் ஏ க்கஞம் இந்த பக்கஆதரவும் இல்லையென்றால்

அவரை மத்திய அரசல்ல

கருணாநிதியே அழித்திருப்பார்

இந்தப்பகையே எம்மோடு ஒட்டியதால்தானே அவருக்கு வந்தது

எனவே நன்றி சொல்லாவிட்டாலும

தீமை சொல்லாதிருப்போம்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட எமக்கு இன்னல் ஏற்பட்டபோதெல்லாம்

தன்னை நினையாது

தான் எந்த இடத்தில் இருந்தாலும்

ஓங்கியொலிக்கும் குரல் அவருடையது மட்டும் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பகையே எம்மோடு ஒட்டியதால்தானே அவருக்கு வந்தது

அப்படியென்றால் இப்போ ஜெயலலிதாவுடன் நட்பு வந்தது எதனால்?

தமிழக அரசியல்வாதிகளையும் தமிழகத்தையும் இந்தியாவையும் நம்பி இருந்ததனால் தான் ஈழ மக்கள் இப்படி அல்லல் பட வேண்டியுள்ளது.

இவர்கள் செய்வது தாமும் உதவ மாட்டார்கள் அதே நேரம் ஈழத்தமிழரை வேறு வல்லரசுகளுடன் நட்புறவு கொள்ளவும் விட மாட்டார்கள். இது அவர்களுடைய இராஜ தந்திரம் அல்லது இந்திய ரோவின் திறமையான காய் நகர்த்தல் எனவும் எண்ணலாம்.

சேகரித்த உணவை கூட அனுப்ப முடியாத நிலையில் இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்

தமிழ்மக்கள் ஏற்க்காத ஒரு ஒப்பத்ததையோ இல்லை ஒரு சிறு குண்டையாவது கொடுக்கமல் தடுக்க முடிந்ததா?

தமிழ்நாட்டை நம்பி இருந்தால்? தமிழ் செல்வன் அண்ணா அதன் பின் யாரோ???????

தமிழீழம் அமைவதுக்கு எவளவு போராளிகள் பறி கொடுத்தாச்சு எத்தனை நல்ல தலைவர்கள்(கிட்டு அண்ணா) வில் இருந்து பல ஆயுத கப்பல்கள் அழிக்கபப்ட்டன எல்லாம் யாரால்?

சரி தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் பலம் என்ன மத்திய அரசில்????????????

சரி தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை வெறுக்க சொல்லவில்லை அவர்கள் கொடுத்தை ஆதரவு கையை பற்றி கொண்டு மேலும் பல ஆதரவு கரங்கலை தேடிபிடிப்போம்...........

அப்படியென்றால் இப்போ ஜெயலலிதாவுடன் நட்பு வந்தது எதனால்?

தமிழக அரசியல் கொஞ்சமாவது தெரிஞ்சு இருந்தால் இப்படிக் கேள்விகள் வராது.

தமிழக அரசியல்வாதிகளையும் தமிழகத்தையும் இந்தியாவையும் நம்பி இருந்ததனால் தான் ஈழ மக்கள் இப்படி அல்லல் பட வேண்டியுள்ளது.

அண்ணா இந்தியாவை தமிழக அரசியல் வாதிகளை நம்பிப் போராட்டத்தை நடத்தினவை யார் தெரியுமோ? டெல்லோ, புள்ளட், ஈப்பி.ஆரு.எல்லு.எப்பு எண்ட ஆக்கள்தான். இந்தியாவை நம்பி புலிகள் போராட்டத்தை தொடக்கவில்லை.

இவர்கள் செய்வது தாமும் உதவ மாட்டார்கள் அதே நேரம் ஈழத்தமிழரை வேறு வல்லரசுகளுடன் நட்புறவு கொள்ளவும் விட மாட்டார்கள். இது அவர்களுடைய இராஜ தந்திரம் அல்லது இந்திய ரோவின் திறமையான காய் நகர்த்தல் எனவும் எண்ணலாம்.

ஐயோ அமெரிக்கா, சீனா, ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் எண்டு ஈழத்தமிழருடன் நட்வுறவு கொள்ள உதவிகளை அள்ளி வழங்க இவ்வளவு காலமாத் துடியாகத் துடித்துக் கொண்டு நின்கிறனம். இந்த கேவலம் கெட்ட இந்தியன் விடுறானில்லையே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ அமெரிக்கா, சீனா, ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் எண்டு ஈழத்தமிழருடன் நட்வுறவு கொள்ள உதவிகளை அள்ளி வழங்க இவ்வளவு காலமாத் துடியாகத் துடித்துக் கொண்டு நின்கிறனம். இந்த கேவலம் கெட்ட இந்தியன் விடுறானில்லையே!

மின்னல் ஏலியன்சும் அள்ளி கொடுப்பாங்களா :D . அது சரி உங்கள் அறிவுபூர்வமான கருத்துக்களை எப்படி நீக்கினிர்கள் :lol::lol:

ஆனால் என்னிடம் யாழ் களத்தின் Back up உண்டு :):lol:

Edited by tamillinux

நீங்கள் மேற்கோள் காட்டிய எனது கருத்துக்கு என்னமா பதில் எழுதியிருக்கிறீர்கள். சும்மா சொல்லக்கூடாது சும்மா புகுந்து விளாடுறீங்க சாமியோவ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உங்கள் அறிவுபூர்வமான கருத்துக்களை எப்படி நீக்கினிர்கள்

ஆனால் என்னிடம் யாழ் களத்தின் Bஅcக் உப் உண்டு

என்றாலும் உங்கள் கருத்தோ கருத்து தான் .யாழை பிச்சிடுறீங்க பாருங்க. அட சும்மா சொன்ன்னனுங்க.அப்பிடியே அசந்திட்டீங்க போல. :):lol::lol:

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினக்ஷ், உங்கள் கருத்துக்களுக்கு மரியாதை கொடுப்பவன் நான். ஆனாலும் வைக்கோவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. நெடுமாறன் பொன்ற இன்னொருவர்தான் வைக்கோ! தமிழ்ப்பற்று என்பது அவரின் ரத்தத்தில் ஊறியது. அதை வெறும் அரசியல் வியாபாரப் பொருள் என்று நீங்கள் நினைப்பது தவறு. ஜயலலிதாவுடன் அவர் செய்து கொண்டிருப்பது ஒரு அரசியல் கூட்டணியே. அதற்கும் இனமானத்திற்கு சம்பந்தமில்லை. அக்கூட்டணியிலிருந்தும் அவர் தமிழர்க்காக குரல் கொடுக்கத் தவறவில்லை.

ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள், தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் குரலுக்கு மத்தியில் உள்ள மரியாதை வெகு குறைவே. அவர்களும் அங்கே ரெண்டாம்தரக் குடிமக்கள் தான்.

யூட் எழுதிய கருத்து எங்கே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.