Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்ந்தும் தவறிழைக்கும் நடுவர்கள் 3 தடவைகள் சைமண்ட்சை காப்பாற்றினர்!!!wow

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் தவறிழைக்கும் நடுவர்கள் 3 தடவைகள் சைமண்ட்சை காப்பாற்றினர்

[04 - January - 2008] [Font Size - A - A - A]

சிட்னி டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய வீரர்கள் முதல் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆர்.பி.சிங், ஹர்பஜன்சிங் ஆகியோர் தொடக்கத்தில் மிரட்ட, 134 ஓட்டங்களுடன் 6 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா இழந்தது.

ஆனால், சைமண்ட்சின் சதம் அவுஸ்திரேலியாவை நிமிர வைத்துவிட்டது. அவர் 137 ஓட்டங்கள் குவிக்க நடுவர்கள் கொடுத்த தவறான முடிவுகளே காரணமாகும். நடுவர்களின் `கருணை'யால் சைமண்ட்ஸ் மொத்தம் 3 தடவை ஆட்டமிழப்பிலிருந்து தப்பினார்.

30 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த நிலையில், இஷாந்த் ஷர்மா வீசிய பந்தை அடித்தபோது அது துடுப்புமட்டையில் உரசிக் கொண்டு விக்கெட் கீப்பர் டோனியிடம் கட்ச்சாக தஞ்சம் அடைந்தது. ஆனால், அடுத்த சில விநாடிகளில் டோனி மற்றும் இஷாந்தின் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிர்ச்சியே தென்பட்டது. காரணம், நடுவர் ஸ்ரீவ் பக்னர் (மேற்கிந்தியா) அவுட் இல்லை என்று வழக்கம் போல் தனது தலையை அசைத்தார்.

ரீ.வி. ரீப்ளேயில் பந்து துடுப்பில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. இதன் பின் சைமண்ட்ஸ் மேலும் 107 ஓட்டங்கள் குவித்தது கவனிக்கத்தக்கது.

2 ஆவது தடவையாக சைமண்ட்ஸ் 48 ஓட்டங்களிலிருந்த போது தப்பினார். கும்பிளே பந்து வீச்சில் டோனி ஸ்ரம்பிங் செய்துவிட்டு அவுட் கேட்டு முறைப்பாடு செய்தார். இதையடுத்து 3 ஆவது நடுவர் கவனத்திற்குச் சென்றது. ரீ.வி. ரீப்ளேயில் சைமண்ட்சின் கால் தரையில் ஊன்றாமல் அந்தரத்தில் இருக்கும்போது, பெய்ல்ஸ் கீழே விழுவது தெரிந்தது. இருப்பினும், 3 ஆவது நடுவரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புரூஸ் ஆக்ஷன் போர்ட் ஆட்டமிழக்கவில்லை என்று அறிவித்தார்.

3 ஆவது முறையாக அவர் 106 ஓட்டங்களில் நின்றபோது, நல்ல எல்.பி.டபிள்யூ.வை மற்றொரு நடுவர் மார்க் பென்சன் (இங்கிலாந்து) மறுத்து விட்டார். சைமண்ட்ஸ் அந்தப் பந்தை காலால் தடுத்திருக்காவிட்டால் அது நடு விக்கெட்டைத் தகர்த்திருக்கும்.

இதேபோல் அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங்கும் விரைவிலேயே ஆட்டமிழக்க வேண்டியிருந்தது. அவர் 17 ஓட்டங்களிலிருந்த போது, கங்குலியின் ஓவரில் பந்து துடுப்பு விளிம்பில் பட்டு கீப்பர் டோனியிடம் பிடிபட்டது. இதனை மார்க் பென்சன் அவுட் இல்லை என்று கூறிவிட்டார்.

இந்தத் தவறுக்குப் பரிகாரமாக பொண்டிங் 55 ஓட்டங்களில் இருந்தபோது எல்.பி.டபிள்யூ. கொடுத்தார். ஆனால், இந்த முடிவு தவறு என்பது ரி.வி. ரீப்ளேயில் தெரிந்தது. ஏனெனில், பந்து அவரது துடுப்பில் பட்டு, அதன் பிறகு கால்காப்பில் பட்டது. அவுட் என்று நடுவர் விரலை உயர்த்தியதும் அதிருப்தியுடன் வெளியேறினார் பொண்டிங்.

thinakural.com

  • கருத்துக்கள உறவுகள்

There was one more life to Symonds. He was stumped off Harbhajan, but Bucknor didn't even call for the 3rd umpire.

Edited by Danguvaar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டமிழந்தது உண்மையே ஒப்புக்கொள்கிறார் சைமண்ட்ஸ்

[04 - January - 2008] [Font Size - A - A - A]

சிட்னி டெஸ்டின் முதல் இனிங்ஸில் தான் ஆட்டமிழந்தபோதும் அதனை நடுவர்கள் கொடுக்கவில்லை என்பதை அவுஸ்திரேலியாவின் அன்றூ சைமண்ட்ஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

சைமண்ட்ஸ் 30 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த போது பந்து துடுப்பு மட்டையை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டோனியிடம் சென்றது. அதனை டோனியும் கச்சிதமாக கேட்ச் செய்தார். ஆனால், அந்தப் பந்து துடுப்பில் படவில்லை என்று கருதி நடுவர் பக்னர் சைமண்ட்ஸுக்கு அவுட் கொடுக்க மறுத்து விட்டார் . இந்த நிலையில் அந்தப் பந்து தனது துடுப்பில் உரசியதை சைமண்ட்ஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

`நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 30 ஓட்டங்களில் அவுட்டாக வேண்டியிருந்தது . அவுட் கொடுக்கப்படவில்லை. கிரிக்கெட்டில் இது எல்லாம் சகஜம். இது போன்ற தவறான முடிவுகள் கிரிக்கெட்டில் பல தடவை வழங்கப்பட்டுள்ளதை என்னால் சொல்ல முடியும். அதில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு அவுட்டையும் 3 ஆவது நடுவர் ஆராய வேண்டும் என்று சொல்வது தேவையற்றது. நடுவரின் பணியை மேம்படுத்த எவ்வளவோ வழிகள் உள்ளன.

தவறுகள் செய்வது மனித இயல்பு. மக்கள் தவறு செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வீரர்கள் தவறு செய்கிறார்கள். இதுபோன்று தான் நடுவர்களின் தவறும் இயல்பானது.

சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் திருப்தியடைந்ததாக உணர்கிறேன். 400 ஓட்டங்கள் குவித்தாலே அது போட்டி அளிக்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

thinakural.com

  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்தில் நடந்த பல சம்பவங்களால் சிட்னி போட்டியானது மறக்கமுடியாத போட்டியாக மாறிவிட்டது.

அவுஷ்திரேலியா முதலாம் இன்னிங்சில் துடுப்பெடுத்து ஆடும்போது அன்ட்ரூ சிமென்ச் மூன்றுமுறை ஆட்டமிழந்தபோதும் நடுவரால் தொடர்ந்தும் விளையாடுமாறு அநுமதியளிக்கப்பட்டார். இதனால் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வேண்டியவர் 167 ஓட்டங்களெடுத்து அவுஷ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கயை 469 ஆக உய்ர்த்தினார்.

அவ்வாறே இந்திய அணி ரெண்டாம் முறை துடுப்பெடுத்து ஆடும்போது, ட்ராவிடின் கால் மட்டையில் பட்டுப் போன பந்தை துடுப்பில் பட்டதாக அவுஷ்திரேலியர்கள் கூச்சலிட்டதால் நடுவர் அவரை ஆட்டமிழந்தவராக தீர்ப்பிட்டார். இதன்போதும் பந்து வீசியவர் அன்ட்ரூ சிமென்ச் தான்.தீர்ப்பளித்தவர் சிமென்சுக்கு மூன்றுமுறை வாழ்வளித்த நடுவரான ச்டீவ் பக்னோர் என்பவர்.

மேலும் கங்குலியின் பிடியை எடுத்ததாக அவுஷ்திரேலியர்கள் கேள்வி எழுப்பியதால் நடுவர்கள் அவரை ஆட்டமிழந்ததாக அறிவித்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், பந்தை ச்லிப்ச் களத்தடுப்பாளர் கிளாக் நிலத்தில் பட்ட பின்னரே பிடித்தார். இதைக் கண்ட கங்குலி தனது கிறீசில் அசையாது நிக்கவே நடுவர்கள் அவுஷ்திரேலிய அணித்தலைவரிடம் கேட்க, அவரும் அதை சரியான பிடிதான் என்று கூறவே கங்குலி வெளியில் செல்ல வேண்டியதாயிற்று.

இறுதியாக இந்தியாவின் ஆர்.பீ. சிங் துடுப்பெடுத்தாடும்போது வெளியில் செல்லும் பந்தை விக்கெட்டுக்குச் செல்வதாக அவுஷ்திரேலியர்கள் கூச்சலிட்டதால் அவரும் ஆட்டமிழந்தவராக தீர்ப்பளிக்கப்பட்டார்.

இப்படியாக இந்தியாவுக்கு எதிரான நடுவர்களின் மோசமான தீர்ப்பினால் இந்தியா இப்போட்டியில் வெற்றியீட்ட வேண்டிய வாய்ப்பை இழந்தது.

இதனால் போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேரும்போது அனில் கும்பிளே வேண்டுமென்றே நடுவர்களுடன் கைகுலுக்காது தவிர்த்ததைக் காண முடிந்தது.

மேலும் ஆட்டத்தின் பின் இடம்பெற்ற பேட்டியொன்றில் இந்திய அணித் தலைவர் கும்பிளே அவுஷ்திரேலியர்களின் விளையாட்டு நாகரீகம் பற்றிக் கேள்வி எழுப்பினார். இன்று விளையாடிய அணிகளில் ஒரு அணி மட்டும்தான் நாகரீகமான முறையில் விளையாடியதாகக் கூறினார்.

தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அவுஷ்திரேலிய வர்னணையாளர்களே அவுஷ்திரேலிய அணியின் நாகரீகமற்ற விளையாட்டுப் பற்றியும், நடுவர்களின் மோசமான தீர்ப்புகள் பற்றியும் மிகவும் காரசாரமான குற்றச் சாட்டுக்களை முன்வைத்ததை காண முடிந்தது. இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், அவுஷ்திரேலியர்கள் ஆடிய எல்லாப் போட்டிகளிலும் மிகவும் அகம்பாவத்துடனேயே ஆடுகிறார்கள் என்று கூறியதோடு, பிழையான தீர்ப்பு வழங்கிய நடுவர் போட்டிகளிலிருந்து நீக்கப்படவும் வேணும் என்று கூறியதையும் கேட்க முடிந்தது.

இதே ஆட்டத்தின்போது அவுஷ்திரேலிய வீரரான சிமென்சை குரங்கு என்று கூறியதற்காக இந்திய சுழற் பந்து வீச்சாளரான கர்பஜான் சிங்குக்கு 4 போட்டிகளில் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இக்குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை என்று கூறியுள்ள இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இத்தீர்ப்புக்கு எதிராக அப்பீல் பண்ணப்போவதாகக் கூறியுள்ளது. இதன்மூலம் சிங் தொடர்ந்து அவுஷ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விளையாட சந்தர்ப்பம் கிடைப்பதோடு, விசாரணை பிற்போடப்படுவதற்கும் வாய்ப்புகளுண்டு.

இவ்வாறான இன்னொரு குற்றச்சாட்டில் அவுஷ்திரேலிய துடுப்பாட்டக்காரரான பிரட் கொக் துடுப்பெடுத்தாடும்போது இந்திய அணியினர் அவரை தூசித்ததாக முறையிடப் பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக வந்த தகவல்களின்படி, இந்திய சுழற் பந்து வீச்சாளரான கர்பஜன் சிங்குக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாடத் தடை வருமானால் இந்திய அணி இன்னும் மீதமிருக்கும் ரெண்டு போட்டிகளிலும் விளையாடாது நாடு திரும்பப் போவதாக எச்சரித்திருக்கிறது. நேற்று போட்டியின்பின் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது இந்திய அணித் தலைவர் மிகவும் சினத்துடன் காணப்பட்டதுடன் அவுஷ்திரேலிய அணியினரைக் கடுமையாகக் குற்றம் சாட்டியதோடு, இந்திய மனேஜர் பிழையான தீர்ப்பு வழங்கிய நடுவர் எதிர்வரும் போட்டிகளில் இருந்து நீக்கப்படவும் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதே பத்திரிகையாளர் மாநாட்டின்போது, இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அவுஷ்திரேலிய அணித்தலைவரிடம் " நீங்கள் நிலத்தில் வீழ்ந்த பந்தைப் பிடித்ததாக எப்படி கேள்வி எழுப்பலாம்" என்று வினவியதற்கு அவர் " எனது நேர்மை பற்றி கேள்வி கேட்கும் நீங்கள் இம்மாநாட்டில் இருக்கக் கூடாது " என்று சினத்துடன் பதிலளித்தார். மேலும் இன்னொரு கேள்வியின்போது" நடுவருக்கு ஆட்டமிழப்புப் பற்றிச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது" என்று கேட்டபோது " எனது அணியில் ஒருவர் பிடியைச் சரியாக எடுத்தார் என்பது எனக்குத் தெரியும், அதனால்த் தான் நான் நடுவரிடம் அவர் ஆட்டமிழந்ததாகக் கூறினேன்" என்று சர்வ சாதாரணமாகக் கூறினார்.

நான் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று எப்போதுமே விரும்பியதில்லை. ஆனால் நேற்றய ஆட்டத்தைப் பார்த்தபோது அவுஷ்திரேலிய அணி வெற்றி பெறக்கூடாது என்று விரும்பினேன். இப்போட்டி அவுஷ்திரேலிய அணியின் கடந்தகால வெற்றிகளின் நம்பகத்தன்மை பற்றி நிறையக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்தியாவை வீழ்த்திய 13 பேர்!!

திங்கள்கிழமை, ஜனவரி 7, 2008

cricketindiaio3.png

சிட்னி: சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை ஆஸ்திரேலிய அணியின் 11 வீரர்களும், அவர்களுக்குத் துணையாக 2 நடுவர்களும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தால் கிரிக்கெட் உலகமே பரபரப்பாகி காணப்படுகிறது.

இந்தியாவை ஆஸ்திரேலியாவின் 11 வீரர்களுடன் சேர்ந்து, ஸ்டீவ் பக்னர் மற்றும் மார்க் பென்சன் ஆகிய இரு நடுவர்களும் வீழ்த்திய விதம் இதோ ..

நாள் 1: ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ். கங்குலி வீசிய பந்தை ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் அடித்தார். பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் டோணியின் கைகளுக்குள் அழகாக தஞ்சம் புகுந்தது. ஆனால் நடுவர் மார்க் பென்சன் அவுட் சொல்லாமல், மயான அமைதி காத்தார். தொடர்ந்து ஆடிய பான்டிங் 55 ரன்களைச் சேர்த்தார்.

இஷாந்த் சர்மா வீசிய பந்தை ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அடித்தார். க்ரீஸை விட்டு அவர் வெளியேற டோணி, மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்ட் செய்தார். இந்திய அணியினர் அவுட் கோர, நடுவர் ஸ்டீவ் பக்னர், வாயை மூடி, சிரித்தபடி அமைதி காத்து இந்திய வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அப்போது 30 ரன்களில் இருந்த சைமண்ட்ஸ் பக்னர் உதவியால் தொடர்ந்து விளையாடி 162 ரன்களைக் குவித்தார்.

போட்டியின் 3வது நடுவர் ஆக்ஸன்போர்டிடம் அப்பீல் போனது. ஆனால் சந்தேகமாக இருப்பதாகவும், அதன் பலனை சைமண்ட்ஸுக்குக் கொடுப்பதாகவும் அவர் தீர்ப்பளித்தார். இத்தனைக்கும் 3வது நடுவர் என்பவர் டிவி ரீப்ளேயைப் பார்த்து தீர்ப்பு சொல்பவர். டிவி ரீப்ளேயில் சைமண்ட்ஸ் அவுட் ஆவது அழகாக தெரிந்தும் கூட, அது ஆக்ஸன்போர்டு கண்களுக்கு மட்டும் தெரியாமல் போனது மாபெரும் மாயாஜாலம்தான்!

நாள் 2: மறுபடியும் சைமண்ட்ஸ் அவுட் ஆனார். கும்ப்ளே வீசிய பந்தை அடிக்க கிரீஸை விட்டு இறங்கி வந்தார் சைமண்ட்ஸ். அப்போது டோணி அழகாக ஸ்டம்ப்ட் செய்தார். ஆனால் நடுவர் பக்னர் வழக்கம்போல கப்சிப். அப்போது சைமண்ட்ஸின் ஸ்கோர் 148 ஆக இருந்தது.

ஆஸி வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ வேகமாக பந்து வீசினார். ஆனால் க்ரீஸை விட்டு வெளியே வந்து வீசினார். இதை நோ பால் என்று நடுவர் பக்னர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர் சொல்லவில்லை. அந்தப் பந்தில் வாசம் ஜாபர் ஆட்டமிழந்தார்.

நாள் 4: ஆர்.பி. சிங் வீசிய பந்தில் கேட்ச் ஆனார் ஹூஸே. ஆனால் அதை நடுவர் பென்சன் இல்லை என்று கூறி விட்டார். அப்போது ஹூஸே எடுத்திருந்த ரன்கள் 45. ஹூஸே அவுட் ஆனது டிவி ரீப்ளேயில் மிகத் தெளிவாக தெரிந்தது.

நாள் 5: சைமண்ட்ஸ் வீசிய பந்தை அடிக்க முயலுகிறார் டிராவிட். பந்து பேட்டில் படாமல் கேட்ச் ஆகிறது. இருந்தாலும் டிராவிட் அவுட் என்று கூறி மீண்டும் தவறு செய்தார் பக்னர். அப்போது டிராவிடின் ஸ்கோர் 38.

கங்குலி அடித்த பந்தைப் பிடிக்கிறார் மைக்கேல் கிளார்க். ஆனால் பந்து கங்குலியின் பேட்டிலேயே படவில்லை. இருந்தாலும் நடுவர் பென்சன், ஆஸ்திரேலிய கேப்டன் பான்ட்டிங்கிடம் ஆலோசனை கேட்டு அவர் சொன்னதால், அவுட் என்று கூறி கங்குலியை வெளியேற்றுகிறார். அப்போது கங்குலியின் ஸ்கோர் 51.

இப்படி முதல் நாள் முதல் கடைசி நாள் வரை இரு நடுவர்களும் மாறி மாறி இந்தியாவுக்கு ஆப்படித்து, கடைசி வரை இந்தியாவை விளையாட விடவே இல்லை.

முதல் இன்னிங்ஸில் பக்னரும், பென்சனும் தவறு செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் போட்டியில் இந்தியா வென்றிருக்கும். காரணம் இந்தியப் பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மென்களும் நல்ல பார்மில் இருந்தனர். அதேபோல 2வது இன்னிங்ஸில் தவறு செய்யாமல் இருந்திருந்தால் போட்டி டிராவில் முடிந்திருக்கும்.

ஆனால் இந்த இரண்டில் எது நடந்தாலும் அது ஆஸ்திரேலியாவைப் பாதிக்குமே என்ற பதைபதைப்பில் இரு நடுவர்களும் நடந்து கொண்டார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது பக்னர், பென்சனின் செயல்பாடுகள்.

சிட்னி டெஸ்ட் மூலம் தெரிய வரும் ஒரே விஷயம், தங்களை விட யாரும் சிறப்பாக விளையாடி விடக் கூடாது, அப்படியே விளையாட முயற்சித்தாலும் அதை அனுமதிக்கக் கூடாது என்ற ஆஸ்திரேலிய எண்ணமே மேலோங்கித் தெரிகிறது.

சிட்னி டெஸ்ட்டில் வி.வி.எஸ்.லட்சுமண், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் போட்ட அபார சதங்கள் ஆஸ்திரேலியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் நடந்து கொண்ட விதம் காட்டுகிறது.

அதேபோல கும்ப்ளே, உள்ளிட்டோரின் பந்து வீச்சும் அபாரமாக இருந்ததும் அவர்களை கோபப்படுத்தி விட்டது.

குறிப்பாக ஹர்பஜன் சிங், பிரெட் லீ பந்துகளை சிதறடித்து அரை சதத்தைக் கடந்த போது ஆஸ்திரேலிய வீர்ரகளால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஹர்பஜன் அரை சதத்தைப் போட்ட பிறகுதான் சைமண்ட்ஸ் வெடித்தார். அவர்தான் முதலில் ஹர்பஜனுடன் சண்டைக்குப் போனதாக ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளே செய்தி வெளியிட்டுள்ளன.

ஹர்பஜன் அடித்து நொறுக்கியதால் அப்செட் ஆன லீக்கு தெம்பூட்டும் வகையில்தான் ஹர்பஜனை சீண்டினார் சைமண்ட்ஸ் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மொத்தத்தில் சிட்னி போட்டியில் நடந்த நிகழ்வுகள், நடுவர்களின் செயல்பாடுகள் ஆகியவை இந்திய அணியை குறி வைத்து நடந்தவையாகத்தான் தோன்றுகின்றன.

முன்பு முரளீதரனை குறி வைத்து மிக அநாகரீகமாக நடந்து கொண்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆனால் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டுக்கும் பெயர் போன இந்தியர்களைப் பார்த்து, இனவெறி புகாரைக் கூறி பிரச்சினைகளை திசை திருப்பப் பார்த்துள்ளனர்.

சிட்னியில் நடந்தது நிச்சயம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

நன்றி தற்ஸ்தமிழ்

இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய பத்திரிகைகள் ஆதரவு

திங்கள்கிழமை, ஜனவரி 7, 2008

சிட்னி: சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நடந்து கொண்ட விதத்தை ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கடுமையாக சாடியுள்ளன.

ஆஸ்திரேலிய பத்திரிகைகள் அனைத்துமே சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் செய்த குழப்பத்தையும், ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தையையும் கடுமையாக சாடியுள்ளன. இந்தியா இப்போட்டியில் ஒன்று வெற்றி பெற்றிருக்கும் அல்லது டிரா செய்திருக்கும். ஆனால் அதை நடுவர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் தடுத்து விட்டதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.

ஆஸ்திரேலியன் நேஷனல் செய்தித்தாளில் பிரபல கிரிக்கெட் விமர்சகர் மைக் கோவர்ட் எழுதியுள்ள கட்டுரையில், ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் ஆகிய இருவரும் மிக மோசமான தீர்ப்புகளை அளித்தனர்.

ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தையும் படு மோசம். சிறப்பாக ஆடி வென்றிருக்க வேண்டிய ஆஸ்திரேலிய வீரர்கள் இப்படி அவப்பெயருடன் ஆடி வென்றது அவமானத்துக்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும், அவர்களின் நடத்தை கேள்விக்குறியதாகியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடுவர்களின் செயல்பாடுகளும் படு மோசம். தங்களது செயலுக்கு இரு நடுவர்களும் வருந்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் இதழில் எழுதியுள்ள பீட்டர் ரோபக், இது ஒரு மிக மோசமான போட்டி. இந்தியா கைவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பெற்ற வெற்றியை, கிரிக்கெட்டை நேசிக்கும் யாருமே ரசிக்க மாட்டார்கள்.

இந்திய பேட்டிங் வரிசை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆடியது. சிறந்த ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஆனால் சிட்னி போட்டி அவர்களுக்கு பெரும் கசப்பான அனுபவமாக மாறி விட்டது என்று கூறியுள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்

அவுஸ்ரேலியவீரர்கள் சிறப்பாக விளையாடினாலும்.. சில தவறான வழிமுறைகளை கையாள்வது... தவறு...

கோபத்தை தூண்டிக் குளிர்வதில் பொண்டிங் கெட்டிக்காரர்...

இந்தியவீரர்கள் உணர்வுபூர்வாமாக இருப்பதை அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்..

தவறான நடுவர் தீர்ப்புகள.. அவுஸ்ரேலிய அணியின்மேல் மேலும் கசப்பை உண்டுபண்ணும்.

இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய பத்திரிகைகள் ஆதரவு

திங்கள்கிழமை, ஜனவரி 7, 2008

சிட்னி: சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நடந்து கொண்ட விதத்தை ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கடுமையாக சாடியுள்ளன.

ஆஸ்திரேலிய பத்திரிகைகள் அனைத்துமே சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் செய்த குழப்பத்தையும், ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தையையும் கடுமையாக சாடியுள்ளன. இந்தியா இப்போட்டியில் ஒன்று வெற்றி பெற்றிருக்கும் அல்லது டிரா செய்திருக்கும். ஆனால் அதை நடுவர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் தடுத்து விட்டதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.

ஆஸ்திரேலியன் நேஷனல் செய்தித்தாளில் பிரபல கிரிக்கெட் விமர்சகர் மைக் கோவர்ட் எழுதியுள்ள கட்டுரையில், ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் ஆகிய இருவரும் மிக மோசமான தீர்ப்புகளை அளித்தனர்.

ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தையும் படு மோசம். சிறப்பாக ஆடி வென்றிருக்க வேண்டிய ஆஸ்திரேலிய வீரர்கள் இப்படி அவப்பெயருடன் ஆடி வென்றது அவமானத்துக்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும், அவர்களின் நடத்தை கேள்விக்குறியதாகியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடுவர்களின் செயல்பாடுகளும் படு மோசம். தங்களது செயலுக்கு இரு நடுவர்களும் வருந்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் இதழில் எழுதியுள்ள பீட்டர் ரோபக், இது ஒரு மிக மோசமான போட்டி. இந்தியா கைவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பெற்ற வெற்றியை, கிரிக்கெட்டை நேசிக்கும் யாருமே ரசிக்க மாட்டார்கள்.

இந்திய பேட்டிங் வரிசை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆடியது. சிறந்த ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஆனால் சிட்னி போட்டி அவர்களுக்கு பெரும் கசப்பான அனுபவமாக மாறி விட்டது என்று கூறியுள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்

அப்படி சொல்ல முடியாது இன்றைய ஹெரால்ட் சன்னில் லீமன் கறுப்பு **** என சொன்னதற்கு தண்டனை அளிக்கப்பட்டது ஆனால் பாக்கிஸ்தான் விக்கட் கீப்பர் ஒருவர் கில்கிரிஸ்டை வெள்ளை ***** என சொன்னதற்கு தண்டனை அளிக்கவில்லை என எழுதி இருந்தது இதன் பொருள் என்ன .

குரங்கு எனப்படுவது ரேசிச்சம் என தெரிவது உவங்களுக்கு மட்டும்தான் ஆனால் மக்ராத் தூசிப்பது எல்லாம் என்ன பிரட் ஹக் தூசித்தது குரங்கினை விடபரவாய்ல்லை

இந்திய கிரிக்கட் சங்கத்தின் அறிவிப்பால் ஆடிபோய் இருகிறது அவுஸ்திரேலிய க்9இரிக்கட் சங்கம் ஏன் எனின் இந்த போட்டி தொடரில் இருந்து விலகினால் இந்திய கிரிக்கட் சங்கத்துக்கு 2 மில்லியெண் டலர் நட்டம் ஆனால் அவுஸ்திரேலிய கிரிக்கட் சங்கத்துக்கு 50 மில்லியென் டலர் நட்டம் ஏற்படும் அதனால் ca ஆடிபோயிருப்பதை இன்றைய பத்திரிகையில் அறியகூடியதாக இருகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக அவுஸ் பிரதமர் அவுஸ் கிரிக்கட் சங்கத்திடம் தயங்காது இந்த பிரச்சினையை முடிக்கும் படி கேட்டு இருகின்றார் பொண்டிங் இந்த சின்னபிரச்சினைகாக 100 வருட கிரிக்கட் தொடர்பை துண்டிக்க முனைவது எக்ரீமானது என புலம்பி இருகின்றார்

இந்திய கிரிக்கட் சங்கத்தின் முடிவு இன்றைய மெல்பேனில் வெளிவரும் த ஏஜ்,ஹெரால்ட் சன்,தி ஒஸ்ரேலியனில் தலைப்பு செய்தி அதிலும் தி ஏஜ் பொண்டிங்கை தூக்க வேண்டும் என சொல்லி இருகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

2002 - 2003 ஒரு நாள் போட்டியில் சிறிலங்கா வீரர் ஜெயசுரியாவைப் பார்த்து அவுஸ்திரெலியா வீரர் டரன் லீமன் கறுப்பு குரங்கு என்று சொன்னதற்காக சில போட்டிகளில் விளையாட டரன் லீமனுக்கு அனுமதி தடை விதிக்கப்பட்டது. இதனால் 2003 உலகக்கிண்ணப்போட்டிகளில் ஆரம்பப் போட்டிகளில் டரன் லீமன் விளையாட முடியவில்லை.

இந்தியா வீரர் கர்பஜன் சிங், அவுஸ்திரெலியா வீரர் சைமனைப் பார்த்து குரங்கு என்று சொன்னதற்காகவே தற்பொழுது 3 போட்டிகளில் விளையாட தடை ஏற்பட்டது. சைமன் இங்கிலாந்தில் பிறந்து அவுஸ்திரெலியா நாட்டில் வசிப்பவர். அண்மையில் இந்தியாவுக்கு அவுஸ்திரெலியா அணி சென்றபோது குறிப்பாக மும்பையில் சைமன் விளையாட வரும் போது இந்தியா இரசிகர்களில் சிலர் சைமனைப் பார்த்து குரங்கு என்று கத்தினார்கள். அதைவிட சிலர் கங்காருகளுக்குள் ஒரு குரங்கு என்று எழுதி சைமனைக் கேலி செய்தார்கள். தற்போது உள்ள பிரச்சனை என்ன வென்றால் , கர்பஜன் சிங் உண்மையில் சைமனைப் பார்த்து குரங்கு என்று சொன்னாரா?. அவுஸ்திரெலியா வீரர்கள் சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தியா வீரர் டெண்டுல்கர் கர்பஜன் சிங் சொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.

தற்பொழுது டெஸ்ட் போட்டிகளில் உள்ள நடுவர்கள் விளையாடும் இரு நாட்டைத்தவிர்ந்த வேறு நாடுகளில் இருந்து தான் சர்வதேச துடுப்பாட்ட வரியத்தினால் தெரிவு செய்யப்படுகிறது. இதன் படி இம்முறை மேற்கிந்தியா தீவுகளைச் சேர்ந்த ஸ்டீவ் பட்ணர், இங்கிலாந்தைச் சேர்ந்த பென்சன் ஆகியோர் நடுவர்களாக உள்ளார்கள். ஸ்டீவ் பட்ணர் ஆரம்பகாலத்தில் சிறந்த நடுவராக உள்ளார். ஆனால் அண்மைக்காலத்தில் அவர் சில பிழையாகத் தீர்ப்பளித்து வருகிறார்.

2001ல் கல்கதாவில் நடைபெற்று இந்தியா வெற்றி பெற்ற பிரபல்யமான போட்டியில்(அவுஸ்திரெலியாவுக

கந்தப்பு

நீங்கள் எந்த அடிப்படையில் மேலேயுள்ளவற்றை எழுதியுள்ளீர்கள் என்பது புரியவில்லை. இருக்கும் நாட்டிற்கு விசுவாசமாக எழுதவேண்டுமென்பதற்காக எழுதினீர்களோ புரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ளதில் இந்தியாவில் அண்மையில் அவுஸ்திரெலிய அணி க்கு எதிராக இந்திய இரசிகர்கள் சிலர் சைமனைப் பார்த்து குரங்கு என்று கத்தினார்கள் என்பது மட்டும் உண்மை. அதற்கு இந்திய அரசும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. ஏனைய நீங்கள் எழுதியவை உண்மையில் ஏற்கனவே நடைபெற்றிருந்தால் சும்மாவே தாம் தூம் எனக் குதிக்கும் அவுஸ்திரெலிய அணி சும்மா இருந்திருக்குமா??

கர்பஜன் சிங்கின் அபார ஆட்டத்தைப் பார்த்து ஆத்திரமுற்ற சைமன் தான் கர்பஜன் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை எப்படியாவது வெளியேற்ற வேண்டுமென முனைப்புடன் செயற்பட்டதாக அவுஸ்திரெலிய பத்திரகைகளே சுட்டிக் காட்டியுள்ளன. குறிப்பாக ஹர்பஜன் சிங், பிரெட் லீ பந்துகளை சிதறடித்து அரை சதத்தைக் கடந்த போது ஆஸ்திரேலிய வீர்ரகளால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஹர்பஜன் அரை சதத்தைப் போட்ட பிறகுதான் சைமண்ட்ஸ் வெடித்தார். அவர்தான் முதலில் ஹர்பஜனுடன் சண்டைக்குப் போனதாக ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளே செய்தி வெளியிட்டுள்ளன. ஹர்பஜன் அடித்து நொறுக்கியதால் அப்செட் ஆன லீக்கு தெம்பூட்டும் வகையில்தான் ஹர்பஜனை சீண்டினார் சைமண்ட்ஸ் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் குரங்கு என்று தன்னைப் பழித்ததாக சைமண்ட்ஸ் சொன்னது முழுவதுமாக இட்டுக்கட்டப்பட்டது என்றே பலரும் நம்புகின்றார்கள்.

போட்டியின் 3வது நடுவர் ஆக்ஸன்போர்டிடம் அப்பீல் போனது. ஆனால் சந்தேகமாக இருப்பதாகவும், அதன் பலனை சைமண்ட்ஸுக்குக் கொடுப்பதாகவும் அவர் தீர்ப்பளித்தார். இத்தனைக்கும் 3வது நடுவர் என்பவர் Vidio replayயைப் பார்த்து தீர்ப்பு சொல்பவர். Vidio replayயில் சைமண்ட்ஸ் அவுட் ஆவது அழகாக தெரிந்தும் கூட, அது ஆக்ஸன்போர்டு கண்களுக்கு மட்டும் தெரியாமல் போனது மாபெரும் மாயாஜாலம்தான்!

இந்திய அணியின் புகாரைத் தொடர்ந்து பக்னர் நீக்கப்படுவார் எனக் கருத்துத் தெரிவித்த ஐசிசி, பின் பல்டி அடித்தது. பின் உலகஅரங்கில் ஐசிசி க்கு எதிராக எழுந்த விமர்சனங்களால் தற்போது பக்னர் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் புதிய நடுவராக நியூசிலாந்தைச் சேர்ந்த பில்லி பவுடன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை ஐசிசி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதேபோல ஹர்பஜன் சிங் தன் மீதான தடையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதால் அவர் தொடர்ந்து விளையாடலாம். எனவே பெர்த் டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் விளையாடத் தடை இல்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் மீதான தடை விவகாரத்திற்கும் புதிய தீர்ப்பு வரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.