Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்கின்றது - டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்கின்றது - டக்ளஸ்

|ஆக்கம்: வா.கி.குமார்

திங்கள், 07 ஜனவரி 2008 17:15

இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவற்றை தடைசெய்யவேண்டுமென ஈ.பி.டி.பி.யின் பொதுச்செயலாளரும் துணை இராணுவக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மின்னல் நிகழ்ச்சியின் மூலம் பல கொலைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்

அடுத்த குறியாக மின்னல் நிகழ்சி செய்யும் ரங்காவை இலக்கு வைத்து விட்டது மகிந்த அன் கோ கொலைகார கம்பனி

அடுத்த குறியாக மின்னல் நிகழ்சி செய்யும் ரங்காவை இலக்கு வைத்து விட்டது மகிந்த அன் கோ கொலைகார கம்பனி

அப்ப என்ன... தைத் திருநாள் அன்று .. (ரங்காவை) அவரையும் .. டக்ளஸ் போடப் போறானோ .??.

யாருக்கு புரிய வைக்க இதை சொல்லி இருப்பார்? :D:lol:

உண்மையில் ஒரு நல்ல நிகழ்ச்சியாக மின்னல் இருந்தாலும் பலரை கொலைக்களத்துக்கு அனுப்புவதர்க்கும் காரணமாய் இது உள்ளது.

சக்தி 'மின்னல்' ரங்காவுக்கு புலிகளுடன் தொடாபு -டக்ளசு

சக்தி தொலைக்காட்சியல் 'மின்னல்'ஐ நடத்தும் ஸ்ரீரங்காவிற்குப் புலிகளுடன் தொடர்புள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ள டக்ளசு, மகேஸ்வரன் எம்.பி. கொலை உட்படப் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஸ்ரீரங்காவை விசாரிக்கும் படியும் பொலிஸ் மாஅதிபரைக் கோரியுள்ளளா..

மகேஸ்வரன் எம்.பி. கொலை தொடர்பான விவகாரத்தில் ஈ.பி.டி.பியின் பெயர் பரவலாக அடிபடும் நிலையில் தகுந்த ஆதராம் மின்னல் நிகழ்ச்சி முன் வைக்கப்படும் சூழலில் இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டிருக்கன்றா.. டக்ளசு.

இவ்விடயம் தொடர்பாக கடந்த நான்காம் திகதி தமது அமைச்சுக்கான கடிதத் தலைப்பில் டக்ளசு பொலிஸ் மாஅதிபர் விக்டர் பெரேராவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றா..

அதில் அவ. கூறியுள்ள விடயங்கள் வருமாரு :-

எனக்கும் அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே ஞாயிறு தோறும் சக்தி தொலைக்காட்சியில் 'மின்னல்' நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகின்றது என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீரங்கா ஜெயரட்ணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நலனைப் பேணும் நோக்குடன், நேர்முகம் அளிப்போரைக் கொண்டு அரசையும் குறிப்பாக என்னையும் தாக்கக் கூடியதாகப் பதிலளிக்கச் செய்யத் தூண்டுகிறார்.

யாழில் இடம் பெறும் கொலைகள் மற்றும் வன்முறைகளுடன் ஈ.பி.டி.பிகே சம்பந்தம் உள்ளது என்று அவர் மகேஸ்வரன் எம்.பி யைக் கொண்டு கூறவைக்க கடந்த டிசம்பர் 30ம் திகதி பல தடவைகள் முயன்றார். ஆனால் அத்தகைய சம்பவங்களில் ஈ.பி.டி.பி ஈடுபடுகின்றது என்று கூறவே விரும்பாத மகேஸ்வரன் யாழைப் பிரதிநிதிப்படுத்தும் நானும், எனது கட்சியும் மேற்படி சம்பவங்களைக் கண்டிக்காமைக்காக எம்மை குறை மட்டுமே கூறியுள்ளார்.

மகேஸ்வரனின் கொலைக்குப் பின்னர் எனது கட்சி மீது அதற்கான பழியைத் தாம் போடுவதற்கு வசதியாக, எனக்கும், எனது கட்சிக்கும் எதிராக மகேஸ்வரனின் வாயால் குற்றச்சாட்டுக்களைப் பெறும் நோக்கோடு பல கேள்விகளை ஸ்ரீரங்கா தொடுத்தார்.

அந்த 'மின்னல்' நிகழ்வை செவிமடுக்காமல், பொறுப்பற்ற ஊடகவியலாளர்களும் எழுத்தாளர்களும் இந்த 'மின்னல்' நிகழ்வில் மகேஸ்வரன் எனது கட்சியைக் கடுமையாக விமாசித்தார் எனத் தமது பத்திரிகைகளில் தவறாக எழுதியுள்ளனர்.

அந் நிகழ்வில், ஒரு நேயரால் மகேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கபட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கக் கூட அவருக்கு ஸ்ரீரங்கா சந்தாப்பம் அளிக்கவில்லை. அந்த ஒருமணி நேர நிகழ்வில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுககள் குறித்துத் தமது விளக்கத்தை அளித்து தமது கருத்தை வெளியிடுவதற்கு மகேஸ்வனுக்கு 30 நிமிட நேரம் கூட வழங்கப்படவில்லை.

புலிகளின் பணிப்புக்கு அமைய மகேஸ்வரனை அழித்து, அந்தக் குற்றச்சாட்டை என் மீது சுமத்தும் நோக்கில் அந்த மின்னல் நிகழ்ச்சி முற்கூட்டியே திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

பின்னர் இடம் பெறக் கூடிய கொலைக்கான முன் ஆயத்த களத்தை ஏற்படுத்திக் கொடுத்து, கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினாகளின் பேட்டிகளை மீள ஒளிபரப்பபும் பட்டியலில் மகேஸ்வரனின் நேர் முகத்தையும் சேர்த்துக் கொள்ளும் இலக்கோடு அந்த முழு நிகழ்வும் தாயரிக்கபட்டமை அதில் தெளிவாகிறது..

ஆகவே, பினனால் நடக்கப் போகும் கொலைக்கான பழியை என் மீது போடும் திட்டத்துடன் மகேஸ்வரனின் கொலையாளிகளுடன் ஸ்ரீரங்கா சேர்ந்து திட்டமிட்டு செயற்பட்டு இந்த நிகழ்வை அரங்கேற்றியிருக்கிறார் எனக் கூறுகிறேன்.

தமிழ் மக்களின் படுகொலைகள் மற்றும் காணமற் போதல் விவகாரங்களுக்கு என் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி அபாண்டமாகப் பழி போடும் வழக்கத்தை பயங்கரவாதிகளின் தூண்டுதலின் பேரில் ஸ்ரீரங்கா, 'சக்தி' தொலைக்காட்சியின் ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமையும் 'மின்னல்' நிகழ்ச்சி ஊடாகச் செய்து வருகின்றார்.

நாட்டில் இடம் பெறும் கொலைகள் மற்றும் வன்முறைச் செயல்களில் எனது ஈ.பி.டி.பி கட்சி ஈடுபடுவதேயில்லை என்; மறுப்பைத தெரிவிக்கின்றேன்.

எனதும், எனது கட்சியினதும் பெயரைக் கெடுக்கும் வகையில் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த 'மின்னல்' நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறித்து நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஸ்ரீரங்கா புலிப்பயங்கரவாதிகளுக்காக வேலை செய்கிறார். புலிகள் தமது கொலை நடவடிக்கைகைளை முன்னெடுப்பதற்கு வசதியாக அவர்களின் தூண்டுதலின் பேரில் இத்கைய ஆத்திரமூட்டும் கேள்விகளை அவர் தொடுக்கிறார் என்று நான் குற்றம் சுமத்துகிறேன்.

ஆகவே, கடந்த மூன்று வருடகால 'மின்னல்' நிகழ்ச்சிகளை ஆராயும் படியும், அரசியல் வாதிகளின் குறிப்பாக மகேஸ்வரனின் கொலை தொடர்பான முன் சதி நடவடிக்கைகளில் அவரின் பங்களிப்பை விசாரிக்கும் படியும் கோருகிறேன்.

புலிகள் சம்பந்தமான அவரது செயற்பாடு மற்றும் தொடர்புகள் குறித்து விசாரிக்கும்படி கோருவதுடன் அது பல கொலைகள் தெடர்பான பதிய சான்றுகள் மற்றும் இரகசியங்களை வெளிக் கொணர்ந்து எதிர்காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றும் என்றும் தெரிவிக்கவிரும்புகிறேன். என்று உள்ளது.

நன்றி சுடர் ஒளி

செய்தியைப் பார்த்தால் மின்னலுக்கும் அரோகர விரைவில் ஸ்ரீரங்காவுக்கும் அரோகரா போலத் தான் தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் நிகழ்ச்சி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவில் கருத்துக்க்ளை ஏற்கமுடியாது-லக்ஷமன்

1/8/2008 1:17:28 PM

வீரகேசரி இணையம் - சக்தியில் ரி.வி.யில் ஒளிபரப்பு செய்யப்படும் மின்னல் நிகழ்ச்சி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசிக கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் மின்னல் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்திருந்த நிலையில், அந்த பேட்டியை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறனதொரு சூழ்நிலையில் மின்னல் நிகழ்ச்சியை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா அவதூறாக பேசியது, நீதிமன்றை அவமதிக்கும் செயலாகவும் கருதப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரங்காவைப் புலிகளுக்கு ஆதரவானவராகக் காட்ட டக்கிளசு முயற்சித்தாலும் அதை யாரும் நம்பப் போவதில்லை. ஏனென்றால் ரங்கா பற்றி எல்லோருக்கும் நல்லாத் தெரியும். அவரைப் பிடிக்கவில்லை என்றால் போட்டுத்தள்ளுறது, அதற்குப் போய் அவருக்கு புலி முத்திரை குத்துவான் ஏன் ?

கருத்தை கருத்தால் வெல்ல விளையும் தோழர் ஏன் இதுவரை இடம்பெற்ற 300 நிகழ்சிகளில் ஓன்றிலாவது தோன்றி தன் கருத்துக்களை முன்வைக்க முன்வந்திருக்கலாமே?

அதை விடுத்து அந்த அரசியல் நிகழ்ச்சியின் கழுத்தை நெரிக்க முயல்வது ஏனோ?

மாற்றுக்கருத்து என்ற போர்வையில் ஒழிந்திருக்கும் தன் கருத்துப் பலவீனம் வெளிப்பட்டுவிடும் என்ற பயமா?

குறிப்பிட்ட அந்த மின்னல் நிகழ்ச்சி வரைக்கும் தமக்கும் மகேஸ்வரனிற்கும் சுமுகமான உறவிருந்ததாக கூறியிருக்கும் இவர் அதன் பிறகு அந்த உறவு பகையாக மாறியது என்று சொல்லாமல் சொல்லும் ஒப்புதல் வாக்கு மூலத்தையும் நீதிமன்றம் கருத்திலெடுக்க வேண்டும்!

யாழ்மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தும் அந்த மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்ற மகேஸ்வரனின் கருத்தை ரங்காவே வற்புறுத்தி வாந்தியெடுக்க வைத்ததாக புலம்பும் இவர் ஏன் இதுவரை மகேஸ்வரனின் அந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை?

ரங்காவை காக்க டக்கிளசின் இந்த முயற்சி வெற்றி பெறுமா?

Edited by சாணக்கியன்

கலோ டங்கு மாமா கவ் ஆர் யூ என்னும் நீங்க திருந்தவில்லையா :) அது தானே பார்தேன் நீங்களாவது திருந்துறதாவது என்று எனிவே உங்களிற்கும் இனிய புதுவருட வாழ்த்துகள் :D ..அவுஸ்ரெலியன் பிரதமர் ஆகினவுடனே மீட் பண்ணுற முதல் ஆள் நீங்களா தான் இருக்கும் :) ஏனென்றா எப்படி கரப்சன் பண்ணுறது என்று உங்களிற்கு தானே தெரியும்.... :D (பிறகு மக்கள் என்னை தப்பா நினைத்து போட கூடாது ஒரு கள்ளனை வைத்து தான் இன்னொரு கள்ளனை பிடிக்கலாம் அது தான் விளங்கிச்சோ :lol: )....

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபியின் வேண்டுகோள் டங்குமாமாவிட்ட-

"டங்கு மாமா நீங்க எப்ப தான் தாடியை எல்லாம் எடுப்பியள் நேக்கு பயமா இருக்கு" :lol:

டக்ளசுவின் நேற்றைய பொலிஸ் மாஅதிபருக்கு எழுதிய கடித்திற்கும், நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கும் ஊடகவியலாளர்கள் சங்கங்கள் இன்று கடும் கண்டனங்கள் தெரிவித்திருந்தன. இக் கடித்தில் ஸ்ரீரங்காவை குறித்துத் தெரிவிக்கப்பட்ட கருத்து ஊடகவியலாளர்கள் மீது புலி முத்திரை குத்துவதைப் போன்ற குற்றச்சாட்டுக்களை உடன் நிறுத்தும்படியும் ஊடகவியலாளர் சங்கங்கள் தெரிவித்திருந்தனர்.

இன்று (7ம் திகதி) காலை மின்னல் ரங்காவைப் பற்றிய கடிதத்தை பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ளாதாகவும் 6ம் திகதி தான் மின்னல் நிகழ்ச்சியை முதன் முதலாகப் பார்த்தேன் என்று டக்ளசு ஊடாகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தது நினைவிருக்கலாம். பொலிஸ் மாதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதம் 4ம் திகதி என்று என்று திகதி குறிப்பிட்டள்ளது. நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு முன்னரே இக்கடிதம் மாஅதிபருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளானவா? 'இது டக்ளசுவின் தடுமாற்றத்தை, கலக்கத்தை வெளிப்படுத்துவதாகத் தெரிகின்றது' என்று முன்னாள் கொழும்பு மேயர் அசாத் அலி சக்தி தொலைக்காட்சிக்கு இன்று கருத்துத் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றிற்கு அமரர் மகேஸ்வரனின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து பாதாதைகள் ஏந்திய வண்ணம் வந்திருந்தனர்.

ஜானா

Edited by Janarthanan

டக்குசு 4 க்கும் 6 க்கும் வித்தியாசம் தெரியாத 9

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த லூசுப்பயல் ஏற்கனவே மின்னல் நிகழ்ச்சியில் பாத்தாதா ஒரு பட்சி சொல்லுது

யாராச்சும் கேள்விப்பட்டியளே............................... :)

டக்கிளசு

நேற்று போராட்டதின் ஆரம்பகாலங்களிலும் உமக்கு போராட கலக்கமும், நடுக்கமும்.

இன்று போராட்டத்தின் அதி நடுபாதையில் பயணிக்கும் புலிகளினை சந்திக்கப்போகின்றீர் என்ற கலக்கமும் நடுக்கமும்.

எப்போதையா நீங்கள் உள்ளே போகலாம், மக்களை வெட்டி பணம் கொள்ளை அடிக்கலாம் என்று நினைக்கும் உங்களுக்கு பாசக்கயிரு எப்படியும் வரும் என்று தெரிந்துபோய் கலங்குகிறீகள் போல. என்ன டக்கிளசு இவ்வளவு வசதியா வாழ்ந்துவிட்ட்டீர்கள். எனிமேல் இருந்து தான் உங்களுக்கு என்ன பயன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரங்காவுக்கு புலி முத்திரை குத்துவதா?

ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்

"மின்னல்' தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீ ரங்காவை புலி சார்பாகச் செயற்படுவர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முத்திரை குத்தியிருக்கின்றமை தொடர்பாக ஐந்து ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை முஸ்லிம் ஊடக அமைப்பு, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் கூட்டமைப்பு, சுதந்திர ஊடக இயக்கம் ஆகியனவே இது தொடர்பாகக் கூட்டாகவிடுத்த அறிக்கையில் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பவை வருமாறு:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "சக்தி' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "மின்னல்' நிகழ்ச்சிக்கு அதை நடத்தும் ஸ்ரீ ரங்கா ஜெயரத்தினத்துக்கும் எதிராக முன்னெடுக்கும் கொடூரமான நடவடிக்கைகள் குறித்து எமது அமைப்புகள் கவனம் செலுத்துகின்றன.

ஜனவரி 7ஆம் திகதி செய்தியாளர் மாநாட்டைக் கூட்டியும் பொஸில் மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியும் அமைச்சர் இந்தக் கொடூர நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

கொலையுண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரீ.மகேஸ்வரன் இறுதியாக "மின்னல்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையை விமர்சித்தார். இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் இந்நிகழ்ச்சி புலிகளுக்கு சார்பானதென்றும் இந்நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தும்படி பொதுமக்கள் தம்மிடம் கேட்டுக்கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு குடிமகனைப் போல் அமைச்சருக்கும் ஊடகத்தை விமர்சிக்கும் உரிமையுள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அந்த விமர்சனம் ஜனநாயக ரீதியாக இருக்கவேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

செய்தியாளர் ஸ்ரீ ரங்கா புலிகளுக்கு சார்பாகச் செயற்படுகிறார் என அமைச்சர் தெரிவித்திருக்கின்றமையை எமது அமைப்புகள் வன்மையாகக் கண்டிருக்கின்றன.

புலி முத்திரை குத்துவதன் மூலம் செய்தியாளர்களை கொலைசெய்வதற்கான பின்னணியை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் செய்தியாளர்களின் படுகொலை செய்யப்படுவதுமான கால கட்டத்தில் இந்நாட்டு செய்தியாளர்கள் கடமையாற்றவேண்டியுள்ளது. அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகளை வெளியிடும் உரிமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான வெளியீட்டின் 19ஆம் ஷரத்தை மதித்து ஜனநாயகத்தின் அடிப்படையை உறுதிப்படுத்தும்படி அமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றோம். என்று உள்ளது. (உ)

http://www.sudaroli.com/pages/news/today/04.htm

டக்கு அண்மைகாலமாக என்ன செய்வது என தெரியாமல் குழம்பி இருப்பது ஏனோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 10-01-2008 23:28 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்]

சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர் தேசத் துரோகி என்கிறார் டக்லஸ் தேவானந்தா

சிறீலங்கா வாழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பளிக்க அவசர, அவசிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சவிடமும், சிறீலங்கா அரசிடமும் அனைத்துலக பத்திரிகையாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ் அனைத்துலக பத்திரிகையாளர் அமைப்பு 110 நாடுகளைச்சார்ந்த 600,000 ஊடகவியலாளர்களைக் கொண்ட அமைப்பாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் ஊடகவியலாளர்களே பெருமளவில் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதோடு, ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தலை மேற்கொள்பவர்கள் தண்டிக்கப்படுவதுமில்லை.

உதயன் பத்திரிகையாலயத்தின் மீது நீண்டகாலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதோடு, உதயன் நாளேட்டின் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், கடத்தப்பட்டும் வருகின்றனர். இந் நாளேட்டின் ஊடகவியலாளர் எம்.வி கானமயில்நாதன் கடந்த ஒரு வருடமாக உதயன் பத்திரிகையாலயத்தை விட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறுவதில்லை எனவும் அனைத்துலக பத்திரிகையாளர் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மற்றும் எம்.பி.சி வானொலி தொலைக்காட்சிச் சேவையைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் செவன் டானியல், கிங்ஸ்லி ரட்னாயக்க, சுசில் கெடல்பிட்டிய ஆகியோருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 7ம் திகதி பத்திரிகையாளர் மாநாட்டில் சமூச சேவைகள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள் சக்தி தொலைக்காட்சியில் ’மின்னல்’ நிகழ்ச்சியை நடத்திவரும் சிறீ ரங்கா ஜெயரட்னத்தை துரோகி எனவும், விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுபவர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறீலங்கா அரசின் ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்த விலகல் ஊடவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை அதிகரிக்கும் எனவும் அனைத்துலக பத்திரிகையாளர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jan 12 9:35:00 2008

மின்னல் ரங்காவிடம் ரூ. 100 பில்லியன் நட்டஈடு கோரி டக்ளஸ் ""நோட்டீஸ்''

சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஸ்ரீரங்கா ஜெயரத்தினம் மின்னல் நிகழ்ச்சியின்மூலம் தனக்கு அவமதிப்பை உண்டுபண்ணிவரும் குற்றச்சாட்டை முன்வைத்து, அதற்கென அவர் நூறு பில்லியன் ரூபா நஷ்டஈடு வழங் கவேண்டும் என்று கேட்டு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது சட்டத்தரணி எம்.கே.பி.சந்திரலால் மூலம் "நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

சக்தி தொலைக்காட்சி மூலம் தனக்கு இழைக்கப்பட்டுள்ள அவமதிப்புத் தொடர்பில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று அமைச்சர் தனது சட்டத்தரணி மூலம் 08.01.2008இல் சக்தி தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கேட்டுள்ளார்.

இந்த சட்டத்தரணி நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், கடந்த 2007. 12.30ஆம் திகதி ஸ்ரீரங்கா ஜெயரட்ணம், தமது மின்னல் நிகழ்ச்சியில் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனுடன் கலந்துரையாடும்போது அவருக்கு அவசியமான வகையில் மகேஸ்வரனிடம் இருந்து பதில்களைப் பெற்றுக்கொள்ளும் முக மாக கேள்விகளை முன்வைத்து கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற தி.மகேஸ்வர னின் கொலை எனது கட்சிக்காரர் மீது குற்றஞ் சுமத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பல சந்தர்ப் பங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரு கின்ற மனித உரிமை மீறல்கள், மனிதப் படு கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் எனது கட்சிக்காரரின் பெயரை தொடர்புபடுத்திக்கொள்வதற்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.