Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெண்புறா இன்னிசை நிகழ்வு

Featured Replies

எகோபித்த மக்களின் ஆதரவுடன் வெண்புறா இன்னிசை நிகழ்வு பல சிரமங்களின் மத்தியில் நடந்து முடிந்தது.

ஆதரவுக்கரம் தந்த மக்கள் வரிசையில் நின்று மண்டபத்திற்குள் செல்வதற்கே களைத்து விட்டார்கள்.

காட்டி கொடுப்புகள் துரோகத்தனங்கள் பலமுட்டுக்கட்டைகளால் நிகழ்ச்சி சோபை இழந்துதான் நடந்தது.

தென்னிந்திய கலைஞர்களின் வருகைக்கான விசாவை இழுத்தடித்து வெள்ளையன் புத்தி போல் கடைசி நேரத்தில் கொடுத்தனால் கலைஞர்கள் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு தான் விமான நிலையத்தை வந்தடைந்தார்கள். அப்படியே நேரடியாக மேடைக்கு வரும் போது இரவு 8.30 மணி ஆகிவிட்டது. அவர்கள் களைப்புடன் மேடை யில் நிகழ்ச்சியை தந்தார்கள்.

மேடையில் வந்த அத்தனை பேரும் தங்களுக்கு வந்த மிரட்டல்கள் எல்லாவற்றையும் பார்வையாளர்களிடம் சொன்னார்கள்.

சிங்கள தூதுவராலய உளவுபடையின் சொல்படி கேட்டு எங்களை வஞ்சிக்கும் பிரிட்டிஸ் உள்துறை அரசை வன்மையாக கண்டிக்க வேண்டும்..

விசாவை இழுத்தடித்து கடைசி நேரத்தில் கொடுத்து வெண்புறா நடாத்தும் நிகழச்சிக்கான மக்களின் ஆதரவை வரும் காலங்களில் இல்லாமல் செய்வதே இவர்களின் நோக்கமாக இருந்திருக்கின்றது.

இருந்தாலும் பயணக்களைப்புடன் நேரே மேடைக்கு வந்து எங்களுக்காக நிகழ்ச்சியை நிறைந்த மனதுடன் தந்த தமிழக கலைஞர்களுக்கு நன்றி.

நல்ல காரியத்திற்காக தாங்கள் உதவி செய்தோம் என்ற பெருமனதுடன் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் பொறுமை காத்து நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற உதவிய அனத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றிகள்.

நேசன் இது நீங்கள்விட்ட அறிக்கையோ? நீங்கள் வெண்புறா அமைப்பில இருக்கிறீங்களோ? இல்லாட்டி வேறு செய்தியா? செய்தி மூலத்த காண இல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்களில் யார் கலந்து கொண்டார்கள்?. எனென்றால் அவர்களில் சிலர், சிலரது துரோகத்தனங்களினால் கலந்து கொள்ளவில்லை என்று கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவாலை எதிர்கொண்ட வெண்புறாவின் "பொங்கல் விழா" – 5000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்

http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகத்தில் தமது கால்களை இழந்திருக்கும் 800 பேருக்கு கால் வழங்கும் திட்டமொன்றை பிரித்தானிய வெண்புறா அமைப்பு தற்பொழுது முன்னெடுத்து வருகின்றது.

http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&

  • தொடங்கியவர்

நேசன் இது நீங்கள்விட்ட அறிக்கையோ? நீங்கள் வெண்புறா அமைப்பில இருக்கிறீங்களோ? இல்லாட்டி வேறு செய்தியா? செய்தி மூலத்த காண இல்ல.

நான் நிகழ்வுக்கு சென்றேன். அங்கு நடந்ததை தகவலாக எழுதி இருந்தேன் ஏனெனில் வெண்புறா செய்கின்ற பணி அளப்பரியது. அவர்கள் ஒரு நிகழ்வை ஒழுங்காக திட்டமிட்டுதான் செய்வார்கள். வெளியில் நின்று பார்ப்பவர்கள் எதையும் சொல்லலாம் இவங்களுக்கு நிகழ்ச்சிகளை ஒழுங்கு அமைக்க தெரியாது எல்லாம் காசுக்காகதான் என்று நிறைபேர் குறை கூறுவார்கள்.

எனவே தான் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நிகழ்வுக்கு சென்றவர்கள் புரிந்திருப்பார்கள். செல்லாதவர்கள் அறிவதற்காக தான் இங்கு சில தகவல்களை எழுதினேன்.

நாங்கள் எவ்வளவு விழிப்பாக இன்னும் செயற்பட வேண்டும் என்பதற்கு இவைகள் ஒரு உதாரணம்.

பணத்தால் மாத்திரம் இல்லை விசமபரப்புரைகளுக்கெதிராக தமிழர்கள் களம் இறங்கி விடுதலைக்கு பலம் சேர்க்க வேண்டும்

அதுசரி வசதிக்கேற்றவாறு தொப்பியை பிரட்டிப் போட்டால் எல்லாமே மாறிவிடுமா என்ன?? தமிழனின் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் இந்திய சினிமா என்று பரப்புரை வழங்கி அவற்றை புறக்கணிக்கச் சொல்லி போராடுவீர்கள். தனிப்பட்டவர்கள் யாராவது இந்தியக் கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால் அவற்றைப் புறக்கணிக்கச் சொல்லிக் கோஷம் போடுவீர்கள்.

அப்புறம் உங்கள் இரசனைக்காக இந்தியக் கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி ஓடிவாருங்கள் ஓடிவாருங்கள் வந்து ஆதரவு தாருங்கள் என்று விளம்பரம் பண்ணுவீர்கள். மக்களும் உங்களின் முன்னைய கோஷங்களை மறந்து விடுவார்கள் என எதிர்பார்ப்பீர்கள். கேட்டால் கால் வழங்க, கை வழங்க எனப் பிரச்சாரம் பண்ணுவீர்கள். அதற்கு உந்த நிகழ்ச்சிகள் நடத்தும் செலவே போதுமானது. 30000 பேர்களுக்கு மேல் கொள்ளக் கூடிய ஒரு மண்டபத்தினுள் வெறும் 5000 பேர்கள் வந்ததாக குறிப்பிடுவது கேவலமாக இல்லையா?? அந்த மண்டபத்திற்கு செலுத்திய வாடைகையே போதுமானது பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு உதவி செய்ய.

செய்வதெல்லாவற்றையும் நீங்களே செய்து கொண்டு இலகுவாக அடுத்தவனில் தவறைப் போட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றீர்கள்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பயாவது தழிழர் வாசனை தெரிந்ததே எங்கெ அண்ணன் சீமான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு உந்த நிகழ்ச்சிகள் நடத்தும் செலவே போதுமானது. 30000 பேர்களுக்கு மேல் கொள்ளக் கூடிய ஒரு மண்டபத்தினுள் வெறும் 5000 பேர்கள் வந்ததாக குறிப்பிடுவது கேவலமாக இல்லையா?? அந்த மண்டபத்திற்கு செலுத்திய வாடைகையே போதுமானது பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு உதவி செய்ய.

செய்வதெல்லாவற்றையும் நீங்களே செய்து கொண்டு இலகுவாக அடுத்தவனில் தவறைப் போட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றீர்கள்.

:unsure: 30000 பேர்களுக்கு மேல் கொள்ளக் கூடிய ஒரு மண்டபத்தினுள் வெறும் 5000 பேர்கள் வந்ததாக குறிப்பிடுவது கேவலமாக இல்லையா??

http://www.alexandrapalace.com/exhibitions_greathall.html

Edited by tamillinux

உங்க விளக்கத்திற்கு நன்றியுங்க.

உங்க விளம்பரதாரருங்க தானுங்க முன்பு நடந்த பல நிகழ்ச்சிகளின்போது ஐபிசி வானொலியில் 30000 பேர்களுக்கு மேல் கொள்ளக் கூடிய மண்டபமென்று விளம்பரம் பண்ணினாங்கோ!!! :wub::unsure:

இதிலிருந்து ஒரு உண்மை தெரியுது இப்போ; 5000 பேர்கள் வரை வந்தார்கள் என்று சொல்வதும் கப்சாவென்று. :wub::lol:

வக்கணையா கேள்வி கேட்க தெரிந்தவங்கள் தான் தனது இனத்ததிற்காக என்ன செய்கிறான்னு சொன்னா .. மற்றவங்களும் ஏதாவது உபயோகமான நடவடிக்கைகளில் ஈடுபட வசதியாக இருக்கும்!

பாலில் ஒரு துளி விசத்தை கலந்துவிடலாம்.. ஆனால் கலந்த நஞ்சை வெளியே எடுப்பதுதான் பிரச்சினையே.. இதுதான் இன்று வேகமாக நடைபெறுகிறது.. எனவே, நஞ்சகள் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருப்பதுதான் சிறந்த வழி.

உண்மைதான் சோழியான்

இங்கு பிரைச்சினையே பாலில் நஞ்சைக் கலந்தவர்களே மற்றையவர்களில் பழியைப் போட்டு தப்பிக்கப் பார்ப்பதே!!!!!

ஓகோ.. அப்படி என்றால் விபரமா எழுதுங்க.. அரைகுறையா வாசிச்சு அரைகுறையா எங்காவது மாட்டிக்கப் போறேன்.. :unsure:

இதிலிருந்து ஒரு உண்மை தெரியுது இப்போ; 5000 பேர்கள் வரை வந்தார்கள் என்று சொல்வதும் கப்சாவென்று. :unsure::wub:

''''and can accommodate between 2500 and 7250 people.''''

http://www.alexandrapalace.com/exhibitions_greathall.html

:wub:

இதுக்கு பேர் பொறாமையுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

[. 30000 பேர்களுக்கு மேல் கொள்ளக் கூடிய ஒரு மண்டபத்தினுள் வெறும் 5000 பேர்கள் வந்ததாக குறிப்பிடுவது கேவலமாக இல்லையா?? அந்த மண்டபத்திற்கு செலுத்திய வாடைகையே போதுமானது பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு உதவி செய்ய.

இம்மண்டபத்தில் 6000 பேர் தான் கலந்து கொள்ளலாம். முன்பு ஜ.பி.சி வானொலி நிதிசேகரிப்புக்காக கரிகரனை 1999ம் ஆண்டில் அழைத்திருந்தார்கள். இதில் 5000 - 6000 பேர் கலந்து கொண்டார்கள்.

ஏனுங்கோ எல்லாரும் வசம்புவ போட்டு தாக்குறீங்கள். முதலில அவர் கேட்ட கேள்விகளுக்கான பதில யாராவது தாருங்கோ பார்ப்பம்?

காசு சேர்ப்பதற்கு இந்திய சினிமா தவிர வேறு வழி இல்லையா?

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

ஏனுங்கோ எல்லாரும் வசம்புவ போட்டு தாக்குறீங்கள். முதலில அவர் கேட்ட கேள்விகளுக்கான பதில யாராவது தாருங்கோ பார்ப்பம்?

காசு சேர்ப்பதற்கு இந்திய சினிமா தவிர வேறு வழி இல்லையா?

எத்தனை ஈழத்தமிழர் வெண்புறா வுக்கு விரும்பி உதவி செய்கிறீர்கள் ஒன்றும் இல்லை. நீங்கள் கொடுக்கும் 5 பவுனுக்கு கால் செய்து கொடுக்க இயலாது கருக்கு மட்டை தான் வெட்டி கட்டலாம்.

நல்ல உதவி க்காக தமிழக பாடகர்களை வரவழைப்பது பணம் சேர்ப்பது ஒன்றும் தப்பில்லை. இதில் வரும் பணம் நேரடியாக உதவிகளூக்கு செல்கின்றது.

சும்மா இடையில் சங்கங்கள் , பாடசாலைகள் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து விட்டு சனத்தை வரவழைப்பதற்காக வரும் நிதியில் ஒரு பங்கு தாயக உதவிக்கு அனுப்ப படும் என்று விளம்பர படுத்துவார்கள். பிறகு கணக்கு பார்த்தா மிச்சம் வரவில்லை நாங்க கையால போட்டு கட்டினாங்க என்றுதான் சொல்வார்கள். உதவிக்கு அனுப்ப முடியேல்ல பார்ப்பம் அடுத்த முறை என்பார்கள்.

அதோடு ஒப்பிடும் போது நேரடி உதவி செய்ய்யும் நிறுவனம் நிகழ்ச்சியை நடாத்தி உதவி க்கு பணம் கோருவது மிகவும் சரியானது. அது தமிழக கலைஞர்களாக இருந்தால் என்ன, ஈழகலைஞர்களாக இருந்தால் என்ன. தமிழ் பண்புக்கு ஏற்றவாறு நிகழ்சிகளை நடாத்துவது சரியே

Edited by நேசன்

நேசன்் உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நானும் வசம்புபுவின் கருத்தை பார்த்து முதலில் குளம்பிவிட்டேன்.

எப்போது பார்த்தாலும் ஒரு சில பேர் குட்டைய குழப்பி மீன் பிடிக்கத்தான் இருக்கிறார்கள்.

உதவிசெய்யாட்டியும் பறவாய் இல்லை,உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாமே

Edited by கலைநேசன்1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.