Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ்கள உறவுகளே சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை. இந்த விடயம் சம்பந்தமாக செய்திகள் எதுவும் பெரிதாக வெளி வராததனால் நேசக்கர உறுப்பினர்கள் மட்டும் பார்க்கும் வண்ணம் இந்த விடயத்தினை இணைத்திருந்தேன் ஆனால் தற்சமயம் இந்த வழக்கு சம்பந்தமான செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளதால் இங்கு இணைக்கிறேன்.

சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை.இந்தத்திட்டம் சுமார் இரண்டு மாதங்களிற்கு முன்பே அதன் ஆரம்ப நடவடிக்கைகளை தொடங்கி விட்டிருந்தது ஆனாலும் அதன் முக்கியத்துவம் கருதி இரகசியம்பேணப்பட்டு வந்தது. ஆனாலும் இந்த செய்தி அமெரிக்காவில் வோசிங்ரன்போஸ்ற் பத்திரிகையில் வெளியாகிதை தொடர்நது. தநேசன் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. முழு விபரமாக இல்லாவிட்டாலும். புலம்பெயர் தமிழர்கள் சட்ட நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள விருக்கின்றனர் என்கிற செய்தி வெளிவந்துள்ளது.

சிறிலங்கா அரசு தன்னிச்சையாக போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து சிறிலங்காவில் நடைபெற்றுவரும் தமிழின அழிப்பு இன்னும் தீவிரமாக செயற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி 16ம் திகதி போர் நிறுத்தக்கண்;காணிப்புக்குழு வெளியேறியது

. அன்றிலிருந்து உத்தியோகபூர்வமாக போர்நிறுத்த உடன்படிக்கை செயலற்றுப்போகிறது. இதுவரை இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை பல நாடுகள் கண்டும் காணாமலும் இருந்துவந்துள்ள நிலையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களான கோத்தபாயா ராஜபக்சஇ ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய அமெரிக்க பிரசைகளான இவர்கள் மீது இலங்கையில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்இ மற்றும் பாரிய குற்றச்செயல்களுக்காக அமெரிக்க சட்டங்களுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ரு.ளு.யு.யை தளமாகக்கொண்ட நீதிக்கான தமிழர்கள் அமைப்பு(Tamils for Justice) இதனை முன்னெடுக்கிறது.

அரசியலமைப்பு சர்வதேச சட்டம் போன்ற துறைகளில் விசேட தகைமை பெற்றவரும் 40 ஆண்டுக்கால அனுபவமும் கொண்ட மிகவும் திறமைசாலியான அமெரிக்காவின் முன்னாள் உதவிப் பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன், BRUCEFEIN இவ்வழக்கை நடத்திச்செல்லும் பணியில் இந்த அமைப்புடன் இணைந்து செயலாற்றுகிறார். இவர் தமிழர்கள் சார்பில் வாதாடபோகின்றார் என்கிற செய்தியினை இலங்கையரசு அறிந்ததும் இவரை இந்த வழக்கில் சம்பந்தப்படாமல் விலகியிருக்க வேண்டி தன்னாலான முயற்சிகள் பேரங்கள் எல்லாவற்றையும் முயற்சி பண்ணி தோற்றுவிட்டது.எனவே தமிழர் மீதான இந்த மனிதஉரிமை வழக்கு தாக்கல் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

அமெரிக்க பிரசைகளான இம்மூவரும் தமிழருக்கெதிரான மனித உரிமைமீறல் மட்டுமன்றி பணக்;கையாடல் போன்ற குற்றச்செயல்கள்; தொடர்பிலும் அமெரிக்க சட்டத்துக்கு முன்னர் நிறுத்தப்படவேண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்களை இந்த அமைப்பின் இணையத்தளத்தில் பார்க்கலாம்:

http://www.tamilsforjustice.org/

இது சம்பநதமாக பலரிடம் உதவி வேண்டி நான் கதைத்தபொழுது சிலர் என்னிடம் எதுக்கு இவ்வளவு வீணான பணச்செலவு நேரச்செலவு பேசாமல் ஒரு அரைக்கிலோ வெடிமருந்து காணுமே என்கிற ரீதியில் கதைதத்தனர்.இருக்கலாம் ஆனால் இன்றுஎமது போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு எமது போராட்டத்தின் ஒவ்வொரு அசைவும் சர்வதேச சமூகத்தால் உற்றுக்கவனிக்கப்பட்டுக்கொ

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய குறிப்பு யாழ் நேசக்கர திட்டத்திற்கும் மேலே குறிப்பிட்டுள்ள உலகத்தமிழர்களின் நீதி கேட்கும் சட்ட சம்பவங்களிற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. இந்தத் திட்டத்திற்கு உதவ விரும்புவோர் என்னுடன் தனி மடலில் தொடர்பு கொண்டால் அவர்கள் நேரடியாகவே உதவ ஒழுங்குகள் செய்து தரப்படும். நன்றி.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tamils for justice அமைப்பை ஆரம்பித்த ஜயந்த ஞானக்கோன் வழங்கிய நேர்காணல் மொழிபெயர்ப்பு: யேர்மனியிலிருந்து திருமதி தேவிகாராணி கெங்காதரன்

ஒலியமைப்பு: என்.மகேந்திரன்

http://tamilnews24.com/audio/interviews/tfj.smil

ஆங்கிலத்தில் கேட்க

http://www.eu-avalam.com/audio/gnanakonusa.rm

Edited by sathiri

சாத்திரி

:huh: என்ன வீடு கட்டி குறையிலை நிக்குதோ??? :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

:lol: என்ன வீடு கட்டி குறையிலை நிக்குதோ??? :D

இல்லை இதை நம்பித்தான் அத்திவாரமே வெட்டத் தொடங்கியிருக்கிறன். :wub::lol:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பரிற்காக இந்தவாரம் ஜெர்மனியில் இருந்து

-தமிழ்வாசினி

இலங்கை அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக போரியல்இ அரசியல் நகர்வினூடாக தமிழர் தரப்பு நெருக்கடி கொடுத்துவரும் வேளையில் புலம்பெயர் தமிழர் தரப்பு சட்ட நடவடிக்கைகள் மூலம் நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் குறைத்து மதிப்பிடமுடியாதஇ பிரமாண்டமான சக்தியைஇ விடுதலைப்போராட்டத்துக்குப் பலமூட்டும் பணியில் ஈடுபடுத்துவது அவசியம் என்றே தாயகத்திலிருந்து போராட்டத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார்கள்.

அமெரிக்கக்குடிமக்களோஇ பிரித்தானியக்குடிமக்களோ தமது அரசுஇ அது தாமே

தேர்ந்தெடுத்த அரசாயினும்இ அநியாயமான போர்நடவடிக்கைகளில் இறங்கும்போது அதற்கெதிராகக் குரல் கொடுக்கிறார்கள். போராட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால் சிங்கள மக்களிடமோஇ தலைவர்களிடமோ தமிழருக்கெதிராக நடைபெறும் திட்டமிட்ட இன அழிப்புக்காக குரல்கொடுக்கும் தன்மையை எதிர்பார்க்கமுடியாது. இருந்த ஓரிருவரும் உயிர்ப்பயத்தால் வெளிநாடுகளில் தஞ்சம் புகவேண்டி நேரிட்டுள்ளது.

எனவே தமிழர்கள் தம்மீதான இன அழிப்புக்கெதிரான நடவடிக்கைகளை அவர்கள் தாமே எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்காஇ கலிபோர்னியாவில் நீதிக்கான தமிழர் அமைப்பு (tamilsforjustice.) என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அமெரிக்கக் குடிமக்களான ராஜபக்சவின் சகோதரர்கள் இருவரையும் ( கோத்தபயாமற்றும் பசில்) இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவையும் மனித உரிமை மீறல்இ நீதிக்குப்புறம்பான படுகொலைகள்இ மனிதரைக்கடத்திச்செல்லல்இ பணமோசடி போன்ற விடயங்களில் குற்றம் சாட்டி நீதிக்கு முன் நிறுத்தியுள்ளது. இதை முன்னெடுத்துச் செல்லும் பணியில் கலிபோர்னியாவின் பிரபல சட்டத்தரணி புருஸ் பைன் (Bruce Fein) அவர்களை இந்த அமைப்பு அமர்த்தியுள்ளது. இலங்கைத் தமிழர்களின் தமிழர் தாயகம் குறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோரி அமைப்பின் சட்டத்தரணி புருஸ் பைன்(Bruce Fein) அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதுவருக்கு சவால் விடுத்துள்ளார்.

தற்போது கலிபோர்ணியாவில் வாழும் இலங்கைத்தமிழரான ஜயந்த ஞானக்கோன் இந்த அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 15ம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று இந்த வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

போர்க்குற்றம்இ மனித உரிமை மீறல் தொடர்பில் வரலாற்றைப் பார்க்கும்போது

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜேர்மனி சரணடைந்த சிலவருடங்களில் பிடிபட்ட நாசிப்படைகளின் உயர் அதிகாரிகள்இ போர்க்குற்றவாளிகள் மீது சர்வதேச இராணுவ நியாய சபை" உருவாக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட 24 நாசித்தலைவர்களில் 21 பேர் இதன் முதற்கட்டமாக நீதிக்குமுன் நிறுத்தப்பட்டார்கள்.இது நூறன்பேக் விசாரணை" எனப் பின்னாளில் பிரபலமாகப் பேசப்பட்டது. குற்றச்சாட்டுகள் இலங்கை அமைச்சர்கள்; இராணுவத்தளபதிக்கு எதிராகத் தமிழர்தரப்பில் கூறப்பட்ட அதே மனித உரிமை மீறல்இ மனிதக்கடத்தல்இ கொலை போன்றவைதான். முதல்கட்ட விசாரணை 10 மாதங்களுக்கு விசாரிக்கப்பட்டு 11 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டார்கள். 7 பேர் நீண்டகால சிறைத்தண:டனை பெற்றார்கள். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலர் தாங்கள் தமக்கிடப்பட்ட கட்டளைகளை மட்டுமே வழிநடத்தியதாகக் கூறித் தப்பிக்கப்பார்த்தபோதும் நூறன்பேக் நடுவர்கள் அதனை நிராகரித்து தமது கடுமையான தீர்ப்பை வழங்கினர்.

இதே போல் நாசிகளின் காலத்தில் மனிதவதை முகாம்களில் நாலரை வருடகாலத்தைக் கழித்துப் பின் நேசநாடுகளின்; படைகளினால் மீட்கப்பட்டவரான ஒஸ்ரியாவைச் சேர்ந்த சைமன் வீசன்தால் (Simon Wiesenthal), போர்க்குற்றவாளிகளான நாசிகளை வேட்டையாடிக் கொண்டுவந்து நீதிக்கு முன் நிறுத்தினார். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அவர் இந்தப்பணியில் செலவழித்தார். கட்டடக்கலை நிபுணராகிய நீங்கள் உங்கள்தொழிலைத் தொடர்ந்து செய்திருந்தால் பெரும் கோடீஸ்வரராக வந்திருக்கலாமே என அவரை நண்பர்கள் கேட்டபோது என்னுடன் வதைமுகாமில் இருந்து மீண்டு வராமலே போனவர்களை நான் மறக்கவில்லை. அவர்களுக்காக நீதி கேட்கிறேன் என்று பதில் கொடுத்தார். அவரது 90 ஆவது வயதிலும் இந்தப்பணியை அவர் தொடர்ந்து செய்தார். இதுபோல புலம்பெயர் தமிழர்களும் பாதிப்புக்குள்ளான தமது தாயகத்து உறவுகளை மறக்கவில்லை.

இலங்கை அரசினால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழர்கள் மீது இழைக்கப்பட்டுவரும் மனித உரிமை மீறல்இ படுகொலை போன்ற எவற்றுக்கும் பதில் கிடைக்கவில்லை. நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இலங்கை அரசின் கொடுமைக்கெதிராக கண்டபடி கைது செய்தல்இ காணாமல் போதல் போன்றவற்றுக் கெதிராக சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது கூடத் தெரியாத அப்பாவித் தமிழ் மக்கள் கிராமப் பகுதிகளில் ஏராளம் பேர் உள்ளனர். நாம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை நடத்துகிறோம் என்று சர்வதேசத்தை ஏமாற்றிவரும் சிங்கள அரசின் பொய்ப் பரப்புரைகளை முறியடிக்க எமது தமிழ் ஊடகங்களின் பணி எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு இப்படிப்பட்ட சட்ட நடவடிக்கைகளும் முக்கியம்.

அமெரிக்கக் குடிமக்களாகிய இவர்கள் மூவரும் அமெரிக்க நீதிமன்றின் முன்பு தமது பதிலைச் சொல்லியாகவேண்டும். இவர்களது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் உறவினர் நண்பர்கள் இந்த அமைப்புடன் தொடர்புகொண்டு சாட்சியங்களையும்இ புகைப்படங்கள்இ சத்தியக்கடதாசிகள்இ மரண அத்தாட்சிப்பத்திரங்கள்இ நேரில் கண்ட விடயங்கள் போன்றவற்றையும் இந்த அமைப்பினரிடம் கொடுத்துதவலாம். இந்த சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் பணியில் ஏற்படும் செலவினங்கள் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்புடனேயே நடைபெறுகிறது. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தம்மாலியன்ற உதவிகளை வழங்க முன்வரவேண்டும்.

http://www.tamilsforjustice.org/ என்ற இவர்களின் இணையத்தளம் மேலதிக விபரங்களைத் தருகிறது.

tamilsforjustice@gmail.com என்ற முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல்; எழுதலாம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கப் பிரஜைகளான மூன்று தனி நபர்களுக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படப் போகின்றது. ஆனால் அவர்கள் இலங்கை அரசியிலில் முக்கிய பங்களிப்பைச் செய்வதால் இலங்கப் பிரஜைகளாகவும் உள்ளனர். ஆகவே அவர்கள் செய்த போர்க்குற்றங்கள் இலங்கையிலேயே விசாரிக்கப்படவேண்டியவை என்ற வாதம் முன்வைக்கப்பட்டால் அதை அமெரிக்க நீதிமன்றம் எவ்வாறு மறுக்க முடியுமென்று தெரியவில்லை. ஒரு சட்டத்தரணிக்குரிய நுணுக்கமான சட்ட அறிவு இல்லாததால் இந்த வழக்கில் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் அதன் பலனாக நாம் அடையக்கூடிய பயன்(ஈழத்தின் விடுதலை தொடர்பான) என்ன என்பவற்றை எதிர்வு கூறக்கூடியதாக எதுவும் எனக்குத் தென்படவில்லை. மேற்கு நாடுகளில் சில சட்ட நிறவனங்கள் நோவின், நோமணி என்ற அடிப்படையில் பல வழக்குகளை வாதாடுகின்றன. ஆனால் அவர்கள் செய்யும் எல்லாவகையான கிளறிக்கல் வேலைகளுட்பட்ட நிர்வாகச்செலவுகளை அறவிட்டே தீருவார்கள். இதுவும் அத்தகையவோர் வழக்காக இருக்கக்கூடும். அதாவது நிச்சயமாக வழக்கொன்று தாக்கல் செய்யப்படும். அதற்காகச் செய்யப்படும் அலுவலக வேலைகளுக்கான பணமும் அறவிடப்படும். வழக்கு நீதிமன்றத்தில் வாதாடப்பட்டு வரும் தீர்ப்பை யாரும் எதிர்வு கூறமுடியாது. இந்த வழக்கைப் பொறுத்த அளவில் வெற்றிவாய்ப்பை யாரும் உறுதிப்படுத்த முடியாது. பல அரசியல் ராஜதந்திரக் காரணிகளே வழக்கின் போக்கை தீர்மானிக்க முடியும்.

கரு

மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். மேற்ச்சொல்லப்பட்ட மூவரும் அமெரிக்கப் பிரஜா உரிமையுள்ள இலங்கைப் பிரஜைகள். அவர்கள் இலங்கையில் செய்த குற்றங்களுக்காக இலங்கையில் தான் விசாரணை நடாத்த முடியும்.

மேலே சொன்ன நடவடிக்கை நடைமுறைக்கு ஏற்றதென்றால் அமெரிக்கா யூகோசுலாவியா மீது நேச நாடுகளுடன் சேர்ந்து போர் செய்ய வேண்டிய அவசியமேற்பட்டிருக்காது. போரின் பின் போர்க் கைதியாக இருந்தவர் மீது தான் நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது. நாசிப்படைகள் மீது நடவடிக்கை எடுத்ததும் போர்க் கைதிகளாக இருந்தபோதுதான். ஆனால் ஒரு பேப்பரில் எழுதியவர் போர்க்கைதிகளாக இருந்த நாசிகள் மீது எடுத்த நடவடிக்கையையும் தற்போது எடுக்கப்படவுள்ள நடவடிக்கையையும் ஒப்பிட்டிருப்பது அவரின் அறியாமையையே காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலையை நாம் ஓரு பாதையில் சென்று அடைந்துவிட முடியாது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதைவிட இவ்வாறான விடயங்கள் எமது மக்கள் அடையவிருக்கும் அல்லது அடைந்து கொண்டிருக்கும் துயரங்களை குறைப்பதற்கு எவ்வளோவோ உதவும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எமது மக்கள் எவ்வாறன திட்மிட்ட இனபடுகொலைக்குள் அகப்பட்டிருக்கின்றார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகளே அவசியமானவை. அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மூவருக்கும் வேண்டுமானால் எதுவித தண்டனையும் கிடைக்காது போகலாம். ஆனால் பயங்கரவாதம் என்ற போர்வையை போர்த்திவிட்டு இந்த அனியாயகாரர்கள் செய்யும் அடாவடிதனங்களுக்கு நிச்சயம் முற்றுபுள்ளி வைக்கலாம்.

இத் தகவலை இணைத்தமைக்கு நன்றி சாத்திரியார். சிலர் நித்திரை போல் பாவனை செய்வர் அவர்களை எழுப்புவதற்காக எந்த நிமிடத்தையும் செலவு செய்யாதீர்கள்.

***

வந்தோரை வாழவையுங்கள் என்று எமது முன்னோர் சில விடயங்களில் கவனமெடுக்காது விட்டுவிட்டார்கள். அந்த அற்புதவான்கள் படைத்துவைத்த எவ்வளவோ இன்பங்களை (கலைகள் கலாச்சாரங்கள்) என்று எவ்வளவையோ அனுபவிக்கிறோம். இந்த துன்பத்தையும் அனுபவிப்போம். ஆனால் ஆதே தவறை நாம் அடுத்த சந்ததிக்கு செய்யாமல் விடுவோமாக.

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

எமது விடுதலையை நாம் ஓரு பாதையில் சென்று அடைந்துவிட முடியாது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதைவிட இவ்வாறான விடயங்கள் எமது மக்கள் அடையவிருக்கும் அல்லது அடைந்து கொண்டிருக்கும் துயரங்களை குறைப்பதற்கு எவ்வளோவோ உதவும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எமது மக்கள் எவ்வாறன திட்மிட்ட இனபடுகொலைக்குள் அகப்பட்டிருக்கின்றார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகளே அவசியமானவை. அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மூவருக்கும் வேண்டுமானால் எதுவித தண்டனையும் கிடைக்காது போகலாம். ஆனால் பயங்கரவாதம் என்ற போர்வையை போர்த்திவிட்டு இந்த அனியாயகாரர்கள் செய்யும் அடாவடிதனங்களுக்கு நிச்சயம் முற்றுபுள்ளி வைக்கலாம்.

இத் தகவலை இணைத்தமைக்கு நன்றி சாத்திரியார். சிலர் நித்திரை போல் பாவனை செய்வர் அவர்களை எழுப்புவதற்காக எந்த நிமிடத்தையும் செலவு செய்யாதீர்கள்.

***

வந்தோரை வாழவையுங்கள் என்று எமது முன்னோர் சில விடயங்களில் கவனமெடுக்காது விட்டுவிட்டார்கள். அந்த அற்புதவான்கள் படைத்துவைத்த எவ்வளவோ இன்பங்களை (கலைகள் கலாச்சாரங்கள்) என்று எவ்வளவையோ அனுபவிக்கிறோம். இந்த துன்பத்தையும் அனுபவிப்போம். ஆனால் ஆதே தவறை நாம் அடுத்த சந்ததிக்கு செய்யாமல் விடுவோமாக.

மருதங்கேணி

உண்மையில் நீர் குறிப்பிடுவதுபோல் இவ்விடயத்தால் எந்தவொரு பிரச்சாரமும் ஏற்படப் போவதில்லை. குறிப்பிட்டுட அந்த வக்கீலும் இடையில் இருக்கும் சிலரும் பணம் சுருட்டலோடு தான் இவ்விடயம் முடிவடையும். அமெரிக்காவே ஒரு அடாவடித்தனம் செய்யும் நாடு. அங்கு எமக்குச் சாதகமான நிகழ்வுகள் நடைபெறும் என கனவுதான் காண முடியும்.

***

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.