Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் 2008: இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? கெட்டதா??

இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? கெட்டதா? 27 members have voted

  1. 1. இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? கெட்டதா?

    • நல்லது!
      9
    • கெட்டது!
      10
    • தெரியவில்லை!
      6
    • வேறு ஏதாவது பதில்!
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

பேபி நீங்க நல்ல யாக்கரையாகத்தான் இருக்கீங்க,,,,,,

இப்படி பலரின் அனுபவம் உங்களுக்கு உதவியாக இருக்குது போல...

ம்ம்ம்....எல்லாரின்ட அநுபவமும் பேபிக்கு பல பாடங்களை கற்று தந்திருக்கிறது என்றா பாருங்கோவேன் :lol: அது சரி இனி உங்க அநுபவத்தை கொஞ்சம் சொல்லுங்கோ :lol: ...பெரியவா தானே பேபிகளிற்கு சொல்லி தரவேண்டும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எமக்கு முன் பதிந்த திரு கலைஞன் (நம்ம பழைய மாப்பு..) அவர்கள் ஒரு விசமத் தனமான பிரச்சாரத்தை காதலுக்கு ஆதரவு என்ற பெயரில் முன்னெடுத்துச் செல்கிறார். காதலென்பதே வேலை மினக்கெட்ட வேலை என்கிறோம். அதற்கு இணையத்தை வீணடிப்பானேன் என்பதே எமது முதல் கேள்வி..

சரி இருக்கட்டும்.. காதல் ஒரு புனிதமான கத்தரிக்காய் என்றே வைத்துக் கொள்வோம். :wub: இரண்டு பேர் இணையத்தின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி காதலை வளர்த்தார்கள் என்றால் (பார்க்காமலே காதல்..) அது எதிர்ப்பால் மீதுள்ள சாதாரண கவர்ச்சி அன்றி வேறென்ன? :lol: இணையத்தில் டைப் அடிக்கும்போது என்ன புலுடாவும் விடலாம்.. அதாவது அது ஒரு ஏமாற்று வேலை. நேருக்கு நேர் சந்திக்கும் போதே ஆயிரத்தெட்டு பம்மாத்து. இணையத்தில் சொல்லவா வேணும். ஆக அது சரிப்பட்டு வராது.

ஏற்கனவே அறிமுகமாகி பின் இணையம் மூலம் பரிமாறிக் கொள்வது பரவாயில்லை. ஆனால் காதல் என்பதே எதிர்ப் பால் கவர்ச்சி என்று இருக்கும் போது இணையத்தில் டைப் செய்து என்ன பயன். நேர விரயம் இல்லையா? மனதில் ஒரு நோக்கத்தை வைத்துக்கொண்டு ஏன் புலுடா விடுவது? ஓப்பிணா மேட்டரைச் சொல்லி நேருக்கு நேர் டீல் பண்ணினால்தானே பலன் அதிகம். :wub: அதைவிட்டுட்டு புனிதமான காதல் அது இது என்று டைப் அடிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை. அது பகல் வேசம்..

நேருக்கு நேர் சந்திக்கும்போது சிலசமயங்களில் கண்ணைப்பார்க்கும்போதே கள்ளம் செய்வது பிடிபட்டு விடும். இணையத்தில் வெறும் டைப் அடிப்பதால் கள்ளம் பிடிபட சான்ஸ் குறைவு. எனவே இணையக் காதல் கூடவே கூடாது. :)

ரசிகப் பெருமக்களே மீண்டும் வணக்கம்,

மதிப்புக்குரிய டங்குவார் அவர்கள் மீண்டும், மீண்டும் பழைய சோற்றையே பிசைஞ்சு கொண்டு இருக்கிறார்.

புதிதாக அவர் இங்கே சொல்வது ஒரே ஒரு விசயம் மட்டுமே. அதாவது காதல் என்பது எதிர்ப்பால் கவர்ச்சி என்றும் எனவே இந்த எதிர்ப்பால் கவர்ச்சியை போக்கிக்கொள்ள இணையத்தில் டைப் அடித்து மினக்கெடுவதைவிட நேருக்கு நேர் சந்தித்து டீல் பண்ணுவதே சரியானது என்று கூறுகின்றார்.

எமது முதலாவது கேள்வி எதிர்ப்பால் கவர்ச்சி என்பது தவறானதா? இந்தக்காலத்தில் எதிர்ப்பாலில் கவர்ச்சி வராமல் ஒரே பாலில் கவர்ச்சி வருவதால்தான் ஆண் ஆணை காதலித்துக்கொண்டும், பெண் பெண்ணை காதலித்துக்கொண்டும் இருக்கின்றார்கள். இப்படியான ஆங்கிலத்தில் கூறப்படும் கே, லெஸ்பியன் எனப்படுகின்ற சமூகங்கள் உருவாகுவது வரவேற்கத்தக்கதா?

இப்படி பார்த்தால் எதிர்ப்பால் கவர்ச்சி என்பது கூட ஒரு நல்லவிடயமாகவே உள்ளது. மேலும், எதிர்ப்பால் கவர்ச்சி இருப்பதால்தான் பலர் பல சாதனைகளை செய்கின்றார்கள். எதிர்ப்பால் கவர்ச்சி ஒரு ஊக்கியாக செயற்பட்டு மனிதனை வாழ்வில் முன்னேறவும், சுறுசுறுப்பாக இருக்கவும் உதவியாக இருக்கின்றது. இந்தவகையில் எதிர்ப்பால் கவர்ச்சி இணையம் மூலம் ஏற்படுவதில் ஏதாவது தவறு இருப்பதாக நாம் கருதவில்லை.

மனிதனில் இருக்கும் ஓர் அற்புதமான உணர்வை பாலியல் கவர்ச்சி என்ற பாணியில் கீழ்த்தரமாக எடைபோடுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

காதலில் எதிர்ப்பால் கவர்ச்சியும் ஓர் அங்கமாக இருப்பது தவறானதா? அல்லது அவ்வாறு இருக்கக்கூடாது என்று இவர் கூறுகின்றாரா?

மனிதனில் உள்ள அடிப்படை உணர்வுகளை சரியாகப் புரிந்துகொள்ளாது எமது உணர்வுகளையே நாம் வெறுத்துக்கொள்வது எம்மில் மனவியாதிகளை மாத்திரமே தோற்றுவிக்கும் என்பது தவிர வேறு ஒன்றும் பயனுள்ளதாக நடக்கப்போவதில்லை.

ரசிகப் பெருமக்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்..

நன்றி! வணக்கம்!

கலைஞன் இது நல்ல விவாதம்

என் அனுவப்படி இணைய காதல் என்பது ஒரு வித மயக்கம் தான். எனக்கு தெரிந்த பலர் இணையத்தின் ஊடாக காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்து வாழ்கின்றனர்.

கனடா - கனடா (இதில் ஒரு ஜோடி ஆண் 41 வயது பெண்ணுக்கு 19 வயது)அமெரிக்கா - பிரான்ஸ்

லண்டன் - டுபாய் ( இந்த ஜோடி இருவரும் திருமணமானவர்கள்.)

கனடா - அவுஸ்ரேலியா

கனடா - இந்தியா (இதில் ஒரு ஜோடிக்கு வயசு 55+)

கனடா - ஜேர்மனி

இன்னும் இப்படி எத்தனை உள்ளன.

காய் கேள்ஸ் காய் பாய்ஸ் முதலில் அப்புவின் காய் !!!! :wub:

அப்புறம் சிகப்பு அடையாளமிட்ட ஜோடிக்கு என் வாழ்த்துக்கள் நல்ல பொருத்தம் என்ன அவங்கட காலம் பிரிந்து வி்ட்டார்கள் :wub:

அப்புறம் டம்பீ கலைஞா !!! நேராபாத்து அடிக்கிற இளவு (அது தானப்பு லவ்வு) நிலைக்கிதில்லை இதிலை ம்

அண்டைக்கு ஒரு பெடியைக்கண்டன் ஒரு பெட்டையோடை போனான் யாரப்பு தங்கச்சியோ எண்டன் பெட்டையின்ர மூஞ்சியை பாக்க ஏலாது !!!! :D அதுக்கு அவன் சொன்னான் என்ர காதலி எண்டு எட நாசமாப்போவானே அப்ப நான் முதல் கண்ட பெட்டை அட அப்பு நீங்்கள் இப்பவும் 49 இல இருக்கிறீங்கள் எண்டு அப்பு நான் நெட் இல இருந்தால் .............. :wub:

ஓய் மக்கள் காதல் என்பது என்னைப்பொறுத்தமட்டில மிகவும் புனிதமானது ஏன் எண்டா நானும் காதல் திருமணம் அதுவும் வெளிநாட்டில!!!!!!! நான் காதல் பண்ணும் போது எனக்கு கடன் வேற அதுவும் 1988 இல என் காதலி (தற்போது மனைவி) முகம் சுளிக்கவில்லை மாறாக பலவளிகளில் உதவினாள் ம் இப்ப இணையத்தில் நடப்பது காதல் அல்ல அழகு இருக்கும் பொருள்கள் ( கீழ பதிச்சு அடிச்ச BMW :icon_mrgreen: )

MSN Messenger சைட் இல அந்தபடத்தைப்போட்டா :lol: சும்மா அதிருமில்லேலே

என்னைப்பொறுத்த மட்டில இணையம் என்பது வேறு பல முக்கியமான வேலைகளுக்கு பயன்பட வேண்டியது காதலுக்கு அல்ல எனவே நேரில் பார்த்து பேசி மனதை பறிகொடுத்து அதுவும் பெண்கள் எண்டா பெடிபோடுற காற்சட்டையைப் பார்த்து ( 4 பேர் உள்ள போகக்கூடிய காற்சட்டையாக இருக்கவேணும் ) மனதை பறிகொடுங்கோ !!!!!!

எல்லாம் இருக்கட்டும் என்ர குஞ்சு tamillinux வலுவிலாவாரியா சொல்லுறீர் கணக்கு :D

அப்ப நானும் வரட்டாாாாாாாாாாாாாாாாாாாாா

ம்ம்ம்....எல்லாரின்ட அநுபவமும் பேபிக்கு பல பாடங்களை கற்று தந்திருக்கிறது என்றா பாருங்கோவேன் அது சரி இனி உங்க அநுபவத்தை கொஞ்சம் சொல்லுங்கோ ...பெரியவா தானே பேபிகளிற்கு சொல்லி தரவேண்டும்

அப்ப நான் வரட்டா!!

ஓய் மற்றவையின்ர அனுபவம் இருக்கட்டும் 24 மணிநேரமும் லைன்னில நிண்டு நீர் செய்யிற யாகத்தையும் சும்மா சொல்லுமன் :icon_mrgreen:

இப்ப யார் பெரியவாட்டை அனுபவத்தை கேக்கினம் சின்னவாவின்ர அனுபவம் தானே வலு விசேசமா இருக்கு

அப்ப நானும் வரட்டாாாாாாாாாாாாாா

நெடுக்கு ! இஞ்சை என்ன கணக்குப்பாடமே படிப்பிக்கிறியள் ????????

மனுசனுக்கு ஒரு நாசமறுப்பும் விளங்கேல்லை :icon_mrgreen::lol:

:wub::wub::wub::lol::lol::):D:D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பார்த்தால் எதிர்ப்பால் கவர்ச்சி என்பது கூட ஒரு நல்லவிடயமாகவே உள்ளது. மேலும், எதிர்ப்பால் கவர்ச்சி இருப்பதால்தான் பலர் பல சாதனைகளை செய்கின்றார்கள். எதிர்ப்பால் கவர்ச்சி ஒரு ஊக்கியாக செயற்பட்டு மனிதனை வாழ்வில் முன்னேறவும், சுறுசுறுப்பாக இருக்கவும் உதவியாக இருக்கின்றது. இந்தவகையில் எதிர்ப்பால் கவர்ச்சி இணையம் மூலம் ஏற்படுவதில் ஏதாவது தவறு இருப்பதாக நாம் கருதவில்லை

மாப்புவின் இந்தக்கருத்து மிகவும் நன்றாக உள்ளது.ஆனால் நிலமை தலை கீழ் ஆகும் போது மேற்க்கூறிய விடையங்களும் தலை கீளாக வாய்ப்புன்டு்்் :icon_mrgreen:

ஓய் மற்றவையின்ர அனுபவம் இருக்கட்டும் 24 மணிநேரமும் லைன்னில நிண்டு நீர் செய்யிற யாகத்தையும் சும்மா சொல்லுமன் :icon_mrgreen:

இப்ப யார் பெரியவாட்டை அனுபவத்தை கேக்கினம் சின்னவாவின்ர அனுபவம் தானே வலு விசேசமா இருக்கு

அப்ப நானும் வரட்டாாாாாாாாாாாாாா

காய்...காய் சின்னப்பு தாத்தா கவ் ஆர் யூ..கவ் இஸ் சின்னாச்சி அன்ட் கவ் இஸ் மை செல்லம் அது தான் உங்க மகளை கேட்டனான் பாருங்கோ :lol: ...சின்னா தாத்தா 24 மணித்தியால லைனில நிற்கிறது முக்கியமில்லை எத்தனை பேருக்கு லைனை போட்டோம் என்பது தான் முக்கியம் பாருங்கோ..(ஜம்மு பேபியின் சிந்தனை :lol: )..நேக்கு 24 மணித்தியாலம் நிற்க எங்கே நேரம் இருக்கு சின்னா தாத்தா அப்படி 24 மணி நேரம் எம்.எஸ்.என்னில் படுத்திருப்பவர் எங்கள் அண்ணண்...கடலை மன்னன் சுண்டல் அண்ணாவிட்ட தான் உதை பற்றி கேட்க வேண்டும் :wub: ...நேக்கு உதை பற்றி எல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை தாத்தா பாருங்கோ எம்.எஸ்.என் எல்லாம் நான் வாரதே இல்லை இப்ப கொஞ்ச நாளா வந்தனான் உந்த சுண்டல் அண்ணா என்ன செய்யிறார் என்று பார்க்க (அது தான் எவ்வளவு நேரம் நிற்கிறார் என்று பார்க்க தான் :) )...மற்றுபடி நமக்கு யாழ் தான் உது தான் என்னை மாதிரி பேபிகளுக்கு எல்லாம் சேவ்டியான பிளேஸ் பாருங்கோ.. :wub:

பிறகு என்னத்தை தாத்தா நான் சொல்லுறது யாழில இருந்து என்ன செய்யமுடியும் அது உங்களுக்கு தெரியாததா என்ன..அப்படி செய்தா தங்காவிட்ட ஏச்சு அல்லோ வாங்கவேண்டும் சோ நேக்கு உதில எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் இல்லை பாருங்கோ :wub: ...சா நான் 24 மணி நேரம் நிற்கிறேன் என்று கண் வைத்து வைத்து இப்ப எனக்கு வரவே நேரம் கிடைகுதில்லை என்னும் கொஞ்ச நாளாளா இந்த பக்கம் வரவே முடியாது போல இருக்கு :D ... சா நான் எப்பவும் பெரியவா சொல்லுறதை தான் கேட்கிறனான் சின்னா தாத்தா சோ சொல்லுங்கோ உங்களின்ட எக்ஸ்பீரியன்ஸை :lol: ...வேண்டும் என்றா நான் வந்து மம்மி கூட கடலை போடுறதை தான் சொல்லலாம் ஏனென்றா அவா கூட ஒரு நாளிள 2 மணித்தியாலம் கடலை போடுவேன் (என்னடா மம்மி கூட கதைக்கிறதை கடலை என்று சொல்லுறானே என்று பார்கிறியளோ.... :D )

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

சுஜி ரவி எனப்படும் யாழ் வாசகர் தனது கருத்தை மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார்.

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க

தொடக்கத்தில் பார்த்து பார்த்து காதல் செய்தனர். பின்(சினிமாவில்) பார்க்காமல் தொலைபேசி என காதல் விரிந்தது. இப்போது இணையக்காதலாம். சொல்லுங்கள் எத்தனைபேர் அன்பை பார்த்து காதலிக்கின்றீர்கள்? காதலில் முதலில் ஆராயப்படுவது அழகுதான். நீங்கள் அழகில்லாத பெண்ணை மணமுடிக்க தயாரா? என்றால் எத்தனைபேர் முன்வருவீர்கள்?

பார்க்காமல் இணையத்தில் தொலைபேசியில் காதலிப்பது சினிமாவுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். நிஜத்திற்கு அது சரிவராது. கொஞ்ச காலத்திற்கு முன்னர் யாழில் ஒரு செய்தி சுவாரசியமாக அலசப்பட்டது. இந்தியாவிலிருந்து ஒரு பெண் கனடாவிலுள்ள ஆணை இணையத்தில் தொடர்பு கொண்டு ஒரு நடிகையின் போட்டோவை தான் என்று கூறி அந்த இளைஞனிடம் ஏராளமான பணம் பெற்றதை.

இணையத்தில் பெரும் ஏமாற்றங்கள் தான் காத்திருக்கும். காதல் எப்படி உருவாகிறது?. ஒருவரையொருவர் பார்த்து பழகி புரிந்து கொண்டு வருவது. கண்டதும் வருவது காதலல்ல காமம். அல்லது சலனம்.

இணையத்தில் எப்படி ஒருவரையொருவர் புரிந்து கொள்ளமுடியும்.?

என்னை பொறுத்தவரை காதலிப்பது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை போன்றது. மற்றையதொல்லாம் புட்டிப்பால் கொடுப்பதை போன்றது.

ஒரு ஆரோக்கியமான நோயற்ற குழந்தை வேண்டுமென்றால் தாய்ப்பால் கொடுங்கள். எப்படியாவது வளர்ந்தால் போதுமென்றால் புட்டிப்பால் கொடுங்கள்.

இணையத்தில் ஏதோ ஒன்று இரண்டு வெற்றி பெறலாம்.ஆயிரத்திற்கு ஒன்று வெற்றிப்பெற்றால் அது பெரிதல்ல.

பார் இது காதலியுங்கள். உங்கள் துணையை துணையாக தேர்ந்தெடுங்கள்.

இணையங்கள் மூலம் வைரசுக்கள்தான் வரும்.

வாசகரிற்கு நன்றி! நீங்களும் உங்கள் கருத்துக்களை kalainjan@yarl.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கலாம். நன்றி!

:huh: நான் தெரியவில்லை என்றுதான் வாக்களித்தேன். ஏனென்றால் இன்ரனெர்றில் காதல் செய்து நல்லா வாழுறவங்களையும் பார்திருக்கிறேன், அந்தக்காதலால சீரழிஞ்சு போனவங்களையும் சந்தித்திருக்கிறன், :wub:

:wub: இதைத்தவிர கனடாவில் வசிக்கும் பெண் ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பையனை ஈன்டெர்னெட் மூலம் காதலித்தார். சில வருடங்களின் பின்பு இருவரும் கல்யாணம் செய்து கொள்வதென்று முடிவெடுத்து பெண் இந்தியவிற்க்கு சென்றார், எயார்போட்டில் பையனை நேரில் பார்த்தவுடன் அவரைப்பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு திரும்பி விட்டார் அந்த பெண். :wub:

  • தொடங்கியவர்

ரசிகப் பெருமக்களிற்கு வணக்கம்,

எமது தரப்பில் சொல்லவேண்டியவை எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டோம். இங்கு இணையம் மூலம் காதல் செய்வது கெட்டது என்று கூறுபவர்கள் திரும்பவும், திரும்பவும் ஒரே கருத்தையே கூறுகின்றனர்.

எமது தரப்பு தொகுப்புரையை எனது சீடன் யமுனா அவர்கள் விரைவில் வந்து தருவார்.

காதல் செய்வது கூடாதது என்று கூறும் எதிரணியினரும் ஒரு தொகுப்புரையை தருவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

இதன்பின் மாண்புமிகு நடுவர்கள் வந்து தீர்ப்பு கூறுவார்கள்.

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள்!

நன்றி! வணக்கம்!

  • தொடங்கியவர்

நடுவர்களை இன்னும் காண இல்ல.. :lol:

மதிப்புக்குரிய நடுவர் பெருமக்கள் உங்கள் கருத்துக்களை கூறும்படி அன்புடன் அழைக்கின்றேன்.

நன்றி!

குருவே நான் தொகுபுரை வழங்கவேண்டும் அது மட்டும் நடுவர்கள் வரகூடாது சொல்லிட்டேன்....பட் நாளைக்கு தான் வழங்குவேன் நேக்கு நித்தா வருது.. :lol:

அப்ப நான் வரட்டா!!

சரி ஜமுனாவின் தொகுப்புரையைத் தொடர்ந்து நாங்கள் எழுதுகிறோம். ஆனால் ஜமுனா மிகவும் தாமதிக்க வேண்டாம்.

லேடிஸ் அன்ட் ஜேன்டில்மன்ஸ் எல்லாருக்கும் வணக்கம்...வணக்கம்.வணக்கம் "இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா?கெட்டதா? என்ற விவாதத்தின் இறுதி பகுதிகுள் நுழைந்திருக்கிறோம் :D மதிபுகுரிய நடுவர் அவர்களே "காதல்" என்றால் அது முகம் பார்த்து வேஸ் பார்த்து மலர்வதில்லை அது எல்லாம் காதல் என்ற போர்வையில் நடக்கும் வேற மாட்டர்ஸ் :D ..ஆனால் இணைய மூலம் காதல் அப்படி இல்லை இரு மனங்களின் புரிந்துணர்வு இருவரும் ஒருவரின் மனங்களை காதலிக்கிறார்களை தவிர அவரின்ட பொக்கடில் எவ்வளவு துட்டு இருக்கும் என்று காதலிப்பதில்லை.. :D

மதிபுகுரிய டங்குவார் அண்ணா கூறி சென்றார் அதாவது இணையத்தில டைப் பண்ணும் போதும் புலூடாவும் விடலாம் என்று நான் கேட்கிறேன் எத்தனையோ வெளிநாட்டு மாப்பிளை மார்களை இலங்கையில சாதகம் எல்லாம் பார்த்து கட்டி விட பெண்ணை மணந்து சொத்தை எல்லாம் தன்ட பெயரில எடுத்து விட்டு காணாம போனவை பற்றி உங்களுக்கு தெரியாதோ :D ..பிறகு பெண்ணிண்டா தகப்பன் வெளிநாட்டிற்கு வந்து மாப்பிள்ளையை தேடி கொண்டு இருக்கிறது...(நல்லா பிடிபட்டான் அவன்)...இப்படி பொருத்தம் எல்லாம் பார்த்து நடக்கிற திருமணங்களையே இப்படியாகும் போது ஒரு சில இணைய காதலர்கள் அவ்வாறான பிழையா வழியில் செல்வதிற்கு ஒட்டு மொத்த இணைய காதலையும் கேவலபடுத்துவது அழகல்ல நடுவர் அவர்களே இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் குரு சார்பாக... :D

அடுத்து எதிர்பால் கவர்ச்சி என்று சொல்லி சென்றார் எதிரணி விவாதி மதிபுகுரிய டங்குவார் அண்ணா....இப்ப பாருங்கோ நேரா பார்க்கும் போது எதிர்பால் கவர்ச்சி தானே அண்ணா இதை பற்றி என்ன சொல்லுறியள்..அது என்ன இணையத்தில் காதலிப்பது மட்டும் எதிர்பால் கவர்ச்சி என்ற போர்வையை போக்கிறீர்கள்..நான் கேட்கிறேன் நேரகா அதாவது இணையம் அல்லாது நடந்த காதலில் எத்தனை சதவீதம் வெற்றி கண்டுள்ளது எல்லாம் வெற்றி கண்டுள்ளதா இல்லையே :lol: அதை போல் "இணைய காதலிலும்" சில காதல்கள் இதயத்தை இழந்து தவிர்கின்றன் அதற்காக எல்லா "இணைய காதலையும்" எப்படி நாம் குறை சொல்வது...

அடுத்து ஒரு பெண்ணிடம் நேராக சென்று "ஜ லவ் யூ" சொல்லுகிறோம் அவாவும் ம்ம்ம் என்று சொல்ல நல்லா ஊர்சுற்றி செய்யிறது எல்லாம் செய்து போட்டு கையை விரித்தா அந்த காதலின் நிலைமை என்ன ஆனா இணையத்தில் அப்படி இல்லையே மதிபுகுரிய டங்குவார் அண்ணா அவர்களே இணையத்தில் பரிமாறபட்டதிற்கான ஆதாரங்கள் இருக்கும்..(சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்)...இதை பற்றி சற்று சிந்திக்கலாம் பரிசீலணை செய்யலாம் அல்லவா மதிபுகுரிய எதிரணி வாதி டங்குவார் அண்ணா அவர்களே... :lol:

அடுத்து எதிரணி வாதி சுஜிரவி என்பவர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்திருந்தார்..

தொடக்கத்தில் பார்த்து பார்த்து காதல் செய்தனர். பின்(சினிமாவில்) பார்க்காமல் தொலைபேசி என காதல் விரிந்தது. இப்போது இணையக்காதலாம். சொல்லுங்கள் எத்தனைபேர் அன்பை பார்த்து காதலிக்கின்றீர்கள்? காதலில் முதலில் ஆராயப்படுவது அழகுதான். நீங்கள் அழகில்லாத பெண்ணை மணமுடிக்க தயாரா? என்றால் எத்தனைபேர் முன்வருவீர்கள்?

அண்ணா இப்ப நீங்கள் ஒருவாவை திருமணம் செய்யிறீர்கள் என்று வைத்து கொள்வோமே ஒரு விபத்தில் அவாவின் அழகு போய்விடுகிறது என்றால் அவாவை வெறுத்து ஒதுக்கி விடுவீர்களா :D ...என்னால் நிச்சயம் முடியாது இறுதிவரை அவாவுடன் தான் இருப்பேன் அது போல தான் இந்த இணைய காதலும்..நாங்கள் கதைப்பது காதலை மட்டும் தான்...கடலை போடுவதை பற்றி அல்ல இணையத்தில்...(சுண்டல் அண்ணா கோவித்து போடாதையுங்கோ என்ன)...

எதிரணிவாதி சுஜிரவி அண்ணா சொல்லி சென்றார் இணையம் மூலம் வைரஸ் தான் வரும் என்று நேராக காதலித்தாலும் வைரஸ் வருகிறது அண்ணா இணைய வைரஸால கணணிக்கு தான் பிரச்சினை பாருங்கோ மற்ற வைரஸால உயிருக்கே பிரச்சினை பாருங்கோ..ஆகவே இணைய மூலம் காதல் சேவ்டி என்று நீங்களே ஒப்புகொள்கீறீர்கள் என்பது தெளிவாக விளங்குகிறது பிறகு ஏன் அண்ணா விதண்டாவாதம்...

அடுத்து சுஜிரவி அண்ணா இங்கே தாய்பால்.புட்டி பால் பிரச்சினை இல்லை பிரச்சினை வந்து காதல் பால்..இந்த பால் எங்கே எப்ப வருவது என்று தெரியாது அது இணையத்தில் வருவது என்ன பிழை என்று கேட்கிறேன் இப்ப பாருங்கோ புட்டி பாலை எல்லாருக்கும் முன்னால கொடுக்கலாம் நான் சொல்லுறது சரி தானே (அது நீங்கள் சொல்லும் காதல்)...தாய்ப்பால் அப்படியா அது அன்பு நிறைந்த பால் அல்லவா (அது இணையத்தில் காதல்)..இப்ப விளங்கிச்சோ வித்தியாசம் நீங்கள் குழம்பிட்டீங்க என்று நினைக்கிறேன் எனி தெளிவாகிடுவீங்க என்று நினைக்கிறேன்... :D

ஆகவே மதிபுகுரிய நடுவர் அவர்களே இணையத்தின் மூலம் சில காதல்கள் கனக்சன் அற்று போனதிற்காக எல்லா காதல்களையும் அந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது தப்பு "இணைய மூலம் காதல்" உறுதியான கனக்சனை கொண்ட காதல் என்று கூறி.."இணைய மூலம் காதல் சிறந்தது சிறந்தது சிறந்தது என்று கூறி" என் தொகுபுரையை முடித்து கொள்கிறேன்....

நேக்கு இந்த வாய்பினை நல்கிய என் குருவிற்கு நன்றிகளை கூறி என்னுடைய பேச்சை கேட்கிற ஆட்களிற்கு சொறி சொல்லி உங்களிடன் இருந்து விடை பெற்று கொள்கிறேன்... :D

நன்றி,

வணக்கம்.

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.