Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் 2008: எங்கள் காதல் அனுபவங்கள்!

உங்களிற்கு எத்தனை தடவைகள் காதல் வந்துள்ளது? 17 members have voted

  1. 1. உங்களிற்கு எத்தனை தடவைகள் காதல் வந்துள்ளது?

    • ஒரு தடவை!
      3
    • இரண்டு தடவைகள்!
      1
    • மூன்று தடவைகள்!
      1
    • நான்கு தடவைகள்!
      2
    • ஐந்து தடவைகள்!
      1
    • அளவுகணக்கு இல்லை!
      7
    • இனித்தான் வரவேணும்!
      0
    • ஒருபோதும் வரப்போவதில்லை!
      0
    • தெரியவில்லை!
      2
    • வேறு ஏதாவது பதில்!
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

எங்கள் காதல் அனுபவங்கள் என்ற இந்தத் தலைப்பு சாணக்கியன் அண்ணா தனது காதல் அனுபவங்களை எங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுவார் என்று வாக்குறுதி தந்தபின் அவரது ஆசியுடன் ஆரம்பிக்கப்படுகின்றது.

உங்கள் காதல் அனுபவங்களையும் நீங்கள் எம்முடன் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

நான் எனது நண்பன் ஒருவரின் காதல் அனுபவம் ஒன்றை இதில்கூறி கருத்தாடலை ஆரம்பித்து வைக்கின்றேன்.

எண்ட நண்பனுக்கு அப்ப வயசு பதின்மூன்று. அவர் எங்கட வகுப்பில படிச்ச பெண் ஒன்றை லவ் பண்ணத் துவங்கினார். (பிஞ்சிலை முத்தினவர் எண்டு வச்சுக்கொள்ளுங்கோவன்) எங்களுக்கு அப்ப இந்த காதல் பற்றி விளக்கம் எல்லாம் குறைவு (இப்ப கூட இதுகள் பற்றி சரியான விளக்கம் இருக்கிது எண்டு சொல்லிறதுக்கு இல்லை :icon_mrgreen: )

அப்ப என்ன நடந்திச்சிது எண்டால் இவர் லவ் லெட்டர் ஒண்டு எழுதி அவளுக்கு குடுத்தார். அவள் லவ் லெட்டர பாத்துபோட்டு இவன வாய்க்கு வந்தபடி உனக்கு வேற வேலை இல்லையோ? நா**, பே**, சனி**, மூ** எண்டு எல்லாம் கண்டபடி பேசிப்போட்டா. இவர் மனம் சரியா உடைஞ்சு போனான். :wub:

நண்பன் பிறகு என்ன செய்தார் தெரியுமோ?

கத்தியால கையில தோலை உரிச்சு அவளிண்ட பெயர எழுதினார். இரத்தம் சொட்டி அவளிண்ட பெயர் கையில தடிச்ச தோலில சிவப்பா இருந்திச்சிது. :lol: பிறகு...

நண்பன் தனது வீட்டுக்குபோய் ஏராளம் தூக்கமாத்திரைகள போட்டுட்டார். :wub:

இவரிண்ட தகப்பன் ஒரு வைத்தியர். பெடியன் ஏன் ஒரு மாதிரி இருக்கிறான் எண்டு ஏதோ சந்தேகிச்சு போட்டு கடைசியில இவன் தூக்க மாத்திரை சாப்பிட்டத அவர் கண்டுபிடிச்சிட்டார்.

தகப்பன் என்ன செய்தார் தெரியுமோ மகனுக்கு?

அப்பிடியே நண்பனை காதில பிடிச்சு இழுத்துக்கொண்டுபோய் கிணற்று அடியில உட்கார வச்சுப்போட்டு பச்சத்தண்ணியால இன்னொருவனுக்கு மகன குளிப்பாட்ட சொல்லிப்போட்டு, பனை மரத்தில இருந்து நல்ல ஒரு பச்ச மட்டைய எடுத்து அவனுக்கு உடம்பு எல்லாம் சாத்தோ சாத்து எண்டு ஆடு, மாட்டுக்கு அடிக்கிறமாதிரி கண்டபடி அடிச்சுப்போட்டார்..

அவன் அடி தாங்க ஏலாமல் வேதனையில அய்யோ.. குய்யோ எண்டு கத்திக்குளறி தூக்கம் களைய, பக்கத்துவீட்டுக்காரர் எல்லாம் பதறி அடிச்சு ஓடிவந்து என்ன எண்டு கேட்க... கடைசியில இந்தவிசயம் பள்ளிக்கூடம் எல்லாம் பரவி நாங்கள் எல்லாரும் ஒரே சிரிப்பு.

இப்ப மச்சான், கலியாணம் கட்டி மனைவி, பிள்ளைகளோட சந்தோசமா வெளிநாட்டில இருக்கிறார். :wub:

நீங்களும் உங்கட இல்லாட்டி தெரிஞ்ச ஆக்களிண்ட காதல் அனுபவங்கள கொஞ்சம் சொல்லுங்கோ.

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

காதல் அனுபவங்கள்...

காதல் என்பது காலத்தால் மட்டுமே கரைசேரக்கூடியது...

என்னை பொறுத்தவரை தற்காலக் காதல் ஏனோதானோ என்ற நிலைமை இருப்பதால்..பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.. சொல்லவேண்டுமானால்..ஒரு சிறு சம்பவம்...

ஒரு தடவை விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அங்கே .ருந்த பெண்ணுக்காக.. இரு இளைஞர்கள்..சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்..அ

து 4வது மாடி..நான் மேலிருந்து கடற்கரை அழகை இரசித்துக்கொண்டிருந்தேன்..இவ

ர்கள் கீழே விழுந்துவிடுவார்கள் போல் சண்டை பிடித்தார்கள்.. என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல்.. இருவரையும் விலக்கி கதவின் வழி ஒருவரை உள்ளை தள்ள முயற்சிக்க..

(யாரோ அம்மாவிடம் பெட்டைக்காக பெடியள் சண்டை போடுறாங்க..அதில உங்கட மகனும் நிற்கிறார் எண்டு போட்டுக்குடுக்க.. அம்மா வேகமாய் வந்து என்ன நடந்தெதெண்டு விசாரிக்காம விட்டார் பாருங்கள் ஒரு அறை.. எனக்கு நினைவு தெரிந்த நாளில் வளர்ந்த பின் அம்மா அடித்த முதல் அடி ) பிறகு உள்ள போ என்றார்.. அவ்வளவுதான் நான் எதுவுமே சொல்லாமல் உள்ளே போய்விட்டேன்..

மறுநாள்..அந்தப்பெண் என்னிடம் வந்து "உங்கள பார்க்க பாவமா இருந்துது நீங்க ஏன் அம்மாகிட்ட ஒண்ணடம் சொல்லே;ல... பாவம்.. நீங்க "(அதுதான் அடி விழுந்திட்டுதே..)..நான் சிரித்துவிட்டு போய்விட்டேன்..மறுநாள்..பொழுது போகாமல் ஏதோ கிறுக்கிகொண்டிருந்தேன்.. வந்து பார்த்தவள்..எனக்கொரு மச்சான் இருக்கார் அவரும் நல்லா படம் கீறுவார் என்றாள்..மூன்றாம் நாள்.. ஒரு கவிதைப்புத்தகம் தந்தாள் நல்ல கவிதை படியுங்கள் என்றாள்..அதில் பல வரிகள் ஹைலைட்டரால் அடிக்கோடிடப்பட்டிருந்தது என் பெயர் விளங்குமாறு ..சில வரிகள் காதலை வெளிப்படுத்துமாறு..நான் திருப்பிக்கொடுத்துவிட்டேன்..

ஒழுங்காக படித்தீர்களா என்று கேட்டார்..படித்தேன்.. பிறகுதான் புரிந்தது ஏன் ரெண்டு பையன்கள் இந்தக் கெதிக்கு ஆளானாரகள் என்று என்று சொன்னேன்.. அவர்களோடு தான் கதைத்ததே இல்லை..

என்றவள் நாளை முடிவு சொல்லுங்கள் என்று போய்விட்டால் என்ன முடிவைக் கேட்கிறாள் என்ற தெளிவில்லாத நிலையில் மறுநாள்..நாங்கள் வீட்டு இட்ம்மாறிவிட்டோம்..அவளிடம் சொல்லவில்லை.அதற்குபிறகு அவளைக் காணவில்லை..ஆனால் அவள் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது..

காதலுக்காக பெண் பின் செல்லுவது கேவலமென்று நினைத்தேன்.. ஆனால் இப்போது அவளை தவறவிட்டதை தவறோ என்று யோசிக்கிறேன்.

நண்பர்களே காதல் கதவைத் தட்டும்போது இதயத்தை மூடிக்கொள்ளாதீர்கள்..

காதல் உள்ளுக்குள் இருந்தால் மறைத்துவிடாதீர்கள் காலத்தால் இழந்த காதல்..

நினைவுகளில் நீங்காது வாடல் தரும்.

ஜெனரல்!!

நேக்கு அழுகை அழுகையா வருது :D என்னட்ட போய் காதல் அநுபவத்தை கேட்டாலும் பரவாயில்லை எத்தனை தரம் காதல் வந்தது என்று வேற கேட்டு இருக்கிறியள் யாரோ இரண்டு பேர் "அளவுகணக்கே" இல்லை என்று வாக்களித்து இருக்கீனம் அவைக்கு முதல் கண் என் நன்றிகள் உண்மையை சொன்னதிற்கு :icon_mrgreen: ...நான் எனி தான் வாக்களிக்க போறேன்..(நான் வாக்களிக்கும் போது எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ என்ன )..

இப்ப வாரேன் மாட்டருக்கு நான் வந்து சிம்ரனில இருந்து இப்ப பாவனா வரை எத்தனையோ பேரை காதலித்து போட்டேன் பாருங்கோ...(ஆனா என்ன ஒருத்தரும் என்னை தான் காதலிக்கவில்லை அதை பற்றி நான் பீல் பண்ணவே இல்லை).. :lol:

அக்சுவலா நேக்கு யாரையும் காதலிக்க வேண்டும் என்று எல்லாம் யோசணை வாறதில்லை நம்ம யோசணை எல்லாம் பிரண்ஸ் கூட ஊர் சுத்த வேண்டும் ஏதாவது லொள்ளு பண்ணி கொண்டிருக்க வேண்டும்..(அதற்காக என்னை கெட்ட பெடியன் கட்டகரிகுள்ள சேர்த்து போடாதையுங்கோ ஒவரா எல்லா போகமாட்டோம் எல்லாம் ஒரு லிமிட் தான் :wub: )...இது தான் நம்ம விருப்பம் என்று சொல்லலாம் ஆனா இதுவரை நேக்கு கிடைத்த லவ்லெட்டர் வந்து குருவே 6 (லெட்டர் மீண்ஸ் விளங்கும் தானே பாருங்கோ)...எல்லா லெட்டரும் மம்மிக்கு தெரியும் குருவே அவாவிற்கு போய் சொல்லி சிரித்தது போயும்..போயும் எனக்கு எல்லாம் லவ்லெட்டர் தாறாங்களே :wub: என்று தான் பட் அவையள் எல்லாருக்கும் உடனே என்னுடைய முடிவை சொல்லி என்னால காதலிக்க ஏலாது எனக்கு இப்ப அந்த ஜடியாவும் இல்லை என்று கூறி விலகிட்டேன் சில பேர் இப்பவும் என்னோட நல்ல பிரண்டாக இருக்கீனம் அவைக்கு காதலனும் இருக்கிறார்கள்...(இப்ப தான் நினைக்கிறேன் இங்கே நின்று புலம்பாமல் பேசாம ஒன்றை காதலித்து இருக்கலாம் என்று )...

என்னவோ அப்ப எல்லாம் நமக்கு காதலிக்கிற மூட் இல்லை இப்பவும் இல்லை என்ட பிரண்ஸ் சொல்லுவீனம் நேற்று கூட உந்த டயலக் சொன்னவை காதலித்து பாருடா மச்சி அப்ப தானாம் அதில இருக்கிற சுகம் தெரியுமாம் என்று நான் என்ன சொல்லி இருப்பேன் என்று தெரியும் தானே..(வேறேன்ன இப்பவும் கூட காதலித்து கொண்டிருக்கிறேன் என்னை சுற்றி என் மேல் அன்பை வைத்திருப்பவர்களை அது காணும் என்று..நேற்று கூட நம்ம தங்கா என்னோட டூஊஊஊஊஊ போட்டிட்டா சரியான கவலை கதைக்கவும் இல்லை பாருங்கோ குருவே வேறேன்ன நான் சொல்லு கேட்கவில்லை என்று தான் (இப்படி என் மேல பாசமா எல்லாரும் இருக்கும் போது நேக்கு காதலிக்க வேண்டும் போலவே இல்லை) :lol: ...என்னும் வயசு இருக்கு தானே ஒரு வேளை காதல் மலர்ந்தா சொல்லுறேன் என்ன...

ஓவரா அலட்டிட்டேன் என்று நினைக்கிறேன் இப்ப மாட்டருக்கு வாரேன் "காதல் அநுபவத்தை கேட்டு இருந்தீர்கள்" நேக்கு இல்லை என்ட பிரண்ஸ்மாருக்கு எல்லாம் இருக்கு இதில் பிரண்ஸ் என்று சொல்ல ஏலாது எனக்கு வேண்டிய முக்கியமான ஒருத்தர் யாரென்று சொல்லமாட்டேன்..

அவரும் அவரின் ஆசை நாயகியும் முதன் முதலில் சந்தித்தது "தமிழ் சாட் வேர்லில்" இருவரும் பல மணித்தியால கடலை போடுறது தான் ஆனா ஒருத்தருக்கும் அவைய பற்றி தெரியாமலே காதல் மலர்ந்துவிட்டது இவ்வளதிற்கு முகம் கூட தெரியாது என்பது தான் இந்த காதலில் சிறப்பு அவை காதலித்து 3 வருசதிற்கு பின் தான் முதன் முதலில் இருவரும் தங்கள் போட்டோவை பறிமாறி கொண்டவை என்றா பாருங்கோவேன்..அப்படி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு காதலித்தவை இன்றும் அந்த காதல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன குருவே... :lol:

ஆனா இருவரும் சண்டை போடுறது என்றா அதையும் கேட்க வேண்டாம் (ஒன்றை சொல்ல மறந்துட்டேன் இருவரும் வேற வேற நாடுகளிள் என்பது குறிபிடதக்கது)...கேட்டா சொல்லுவீனம் சண்டை போட்டால் தானாம் காதல் கூடும் என்று...இதை எல்லாம் கேட்க வேண்டிய நிலைமை என்ட நிலைமை..

உதில என்ன காமெடி என்றா இருவரும் சண்டை பிடித்து போட்டு இரண்டு பேரும் கதைக்கமாட்டீனம் ஒருவருகொருவர் அவர் எனக்கு அடிப்பார் போன் மச்சான் அவா உன்னோட கதைத்தவவா என்று கொஞ்ச நேரத்தில அவா அடிப்பா அண்ணா அவர் உங்களொட கதைத்தவரோ என்று..(இந்த கொடுமை எல்லாத்தையும் ஏன் கேட்பான்)...இரண்டு பேரும் தாங்கள் முதலில் கதைக்கமாட்டோம் என்பது தான் பிரச்சினை இதில நடுவில சிக்கி தவிர்கிறது பச்சைபாலகன் ஜம்மு பேபி... :D

ஆனா என்ன பிரச்சினை என்றா அன்றைக்கு முழுவதும் அவாவிட்ட இருந்து எனக்கு கோல் வரும் என்ன செய்யிறார் அவர் எப்படி இருக்கிறார் என்று (என்ட நிலைமையை பார்த்தியளோ)...பிறகு இவைய சமாதானபடுத்தி வைக்கிறதே நமக்கு பார்ட் டைம் ஜோப்பா போயிட்டு என்றா பாருங்கோ..என்றாலும் அவையின் காதல் உண்மை காதல் என்றும் நிலைத்திருக்கும்... :)

இது ஒரு உண்மை காதலின் அநுபவமும் அதனால் நான் பெற்று கொண்ட எக்ஸ்பீரியன்சும் இன்னும் பல இருக்கிறது இது தான் எல்லாவற்றிலும் என்னை கவர்ந்த காதல்... :wub:

விகடகவி மாமாவின் காதல் பற்றிய அநுபவம் நல்லா இருக்கு மாமா அதில் மாமாவின் தத்துவங்கள் சூப்பர் பாருங்கோ வாழ்த்துக்கள் மாமா நான் சொன்னது தத்துவதிற்கு...

ஜம்மு பேபி பஞ்-

"காதல் தாகதிற்கு மருந்து அதுவே டோஸ் கூடினா பொயிசன்"

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

காதலே இல்லை :icon_mrgreen: எப்படி அனுபவம் வரும்

எங்கள் காதல் அனுபவங்கள் என்ற இந்தத் தலைப்பு சாணக்கியன் அண்ணா தனது காதல் அனுபவங்களை எங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுவார் என்று வாக்குறுதி தந்தபின் அவரது ஆசியுடன் ஆரம்பிக்கப்படுகின்றது.

மாப்பு.....இப்பிடி கவுப்பீங்கள் என்று கனவிலை கூட நினைக்கேலை....!

எதோ ஒரு அவசரத்தில "நேரமிருந்தா அங்காலப்பக்கம் வாரன்"எண்டதுக்காக இப்பிடியா?

என்ரை காதல் கதையை சொல்லப் போய் முகமூடிக்காலை முகம் பிச்சுக் கொண்டு வந்திருமோ எண்டு பயமாயிருக்கு.....ஏன் எண்டா ஊரில நல்ல நாறின கதை! எனி எங்கடை ஊரிலை உதுகளை பொத்தி வைக்க ஏலுமே! சும்மா தும்மினாலே ஊதிப் பெரிசாக்கிடுவாங்கள்! அதாலை எல்லாக் கதையும் சொல்ல ஏலாது, கொஞ்சமா சொல்லுறன் குறைவிளங்காம கேளுங்கோ!

எனக்கு 22 வயதிலைதான் உது வந்தது பாருங்கோ....அதுக்கு முதல் துவானம் மாதிரி அங்கை ஒண்டு இஞ்சை ஒண்டு என்டு வந்திருக்கும் ஞாபகமில்லை..... :icon_mrgreen: ஆன இது அடைமழை மாதிரி பெஞ்சு சேறும் சகதியுமான மனத்தில ஆழமா பதிஞ்சிட்டு பாருங்கோ!

பாரதி ராஜா படத்தில வாரமாதிரி ஆனா ஒரு நகர்ப்புற நூலகத்தில ரம்மியமான ஒரு சூழலிலதான் கதை ஆரம்பிக்குது. கதாநாயகன் ஒர சராசரி யாழ்ப்பாணத்து இளைஞன், கதாநாயகியும் அப்படித்தான். ஆனா அவாவை காணேக்கை அந்த இளைஞனுக்கு அவா ஏதோ சிம்ரன் மாதிரி இருந்தா... அவாவை அவனுக்கு ஏற்கனவே தெரியும்.....பாலர் பாடசாலையில ஒன்றா படிச்சு பிறகு பிரிஞ்சு போனவை திருப்பி கல்லூரி காலத்தில சந்திக்கினம். அந்த சின்னப் பெட்டையே இவா என்று ஆச்சரியத்தால கண்கள் விரிய அதைக் கண்ட அவாவின் கண்கள் உடன வெட்டிக் கொண்டு நிலத்தில எதையோ தேடிச்சு. அப்பவே அதுதான் இது எண்டு இவன் உறுதியா நம்பத் தொடங்கீட்டான். பிறது ஒழிச்சுப் பிடிச்சு விழையாட்டில ஒரு மாதம் போயிட்டு.

பிறது ஆம்பிளைதான் முதல் அடி வைக்க வேணும் என்று விதி காரணமாக காதலன், இது வரை எந்த சினிமாப்படத்திலையும் வராதமாதிரி ஒரு நகர்வை செய்யிறார். (அந்த நகர்வு தணிக்கை செய்யப்படுகின்றது). அதை செய்தது யார் என்று அறிய அவாவும் ஒரு பரிசோதனை செய்து பார்க்கிறா. அதன் பெறுபேறு அவன் தான் என்றே அமைகிறது. பிறகு இருவரும் ஓருவரை ஒருவர் சந்தித்துப் பேச ஒத்துக்கொள்கின்றனர். அது ஒரு பசுமையான மைதானத்தின் பின்னனியில் நிகழ்கின்றது. (இங்கே ஒரு காதல் பாடல் வருகின்றது - பாடலிலேயே என்ன கதைத்தார்கள் என்பது சொல்லப்பட்டு விடுகிறது). வெற்றிகரமாக அமைந்த அந்த சந்திப்பை தொடர்ந்து இரண்டாவது சந்திப்பு இடம் காலம் என்பன முடிவு செய்யப்படுகின்றது.

இஞ்சைதான் வில்லன் வாரார். கதைக்கப்போன இடத்தில நேரகாலம் தெரியாம கதைச்சு வகுப்பு முடியிற நேரத்தையும் தாண்டி கதைச்சு தாமதமா வீட்டை போனது வினையா போயிட்டுது. வழக்கமா ஒரு யாழ்ப்பாண பெற்றொருக்கு வார அந்த சந்தேகம் வந்ததோட மட்டுமில்லை. அவை கதைச்சுக் கொண்டு நிண்டதை அந்த நேரத்தில அதாலை போன அவையளுக்கு தெரிஞ்ச, ஆனால் அவளுக்கு பிடிக்காத உறவுக்ககாரன் போட்டுக் கொடுத்திட்டான். (கடவுள் எப்படித்தான் இதையேல்லாம் இருந்து யோசிச்சு செய்கிறாரோ தெரியாது) அதுவும் ஒரு கிழமை கூட ஆகேலை அதுக்குள்ள. பிறது என்ன, "படிப்பு வேண்டாம்", "வீட்டை இருந்து படி" எண்டு தொடங்கி பிறகு யாராவது ஒருவருடைய பாதுகாப்போட போய் வருகிற ஏற்பாட்டில வந்து நின்றது.

பிறகு என்ன இதில தான் கதாநாயகனின்டை படை பலம், புலநாய்வு பலம் எல்லாம் வெளிப்படுத்தப்படுகுது. அதுதான் சந்தி சந்தியா நண்பர்களை நிக்க வைச்சு எந்தப்பாதையால எத்தினை பேரோடை வாறா எண்ட தகவல்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு, சைக்கிள் கப்பில அவாவோடை யார்கண்ணிலையும் படாம கதைக்கிறது தான் அந்த மகா திட்டம். சில நேரங்களில "பார்வை ஒன்றே போதும" என்ற கதைதான். இதுக் கெல்லாம் வாய்ப்பா இருந்தது கதாநாயகன் யார் எண்டு வீட்டுக்காரருக்கு தெரியாததுதான். இந்த விளையாட்டிலையும் அலுப்படிச்சுப் போக கதாநாயகன் ஒரு நாள் எப்பவுமே எதிர்மறையா சிந்திக்கிற ஒரு நண்பனுடன் சேர்ந்து ஒரு பெரிய தப்பான முடிவை எடுக்கிறார். (அது தப்பா சரியா என்று இன்னமும் முடிவு செய்யவில்லை என்பது வேறுகதை!) அது தான் நாயகின் வீட்டுக்கு தடாலடியான உட்பிரவேசம். (என்ன ஏதோ ஒரு தமிழ் படத்தை எடுத்து உல்டா விடுகிறான் எண்டு நினைக்கிறது தெரியிது, ஆனா என செய்ய அது அப்பிடித்தான் நடந்தது)

சரி நேர போய் என்ன நடந்தது? புலனாய்வுத் தகவல்கள் தவறாக போய் வழமையான தமிழ் படங்களுக்கு மாறாக நாயகன் வீட்டுக்குள்ள போகேக்க நாயகி அங்க இல்லை! பிறகு என்ன தங்கர்பச்சன் படம் மாதிரி "நான் தான் அவர். அவாவை காதலிக்கிறன்" எண்டு தொடங்க பெற்றோர் கேட்டிச்சினம்......."அதுக்கு இப்ப என்ன?".....சீ.....இப்படி ஒரு அசிங்கம் தேவையா என்று யோசிச்சுக் கொண்டிருக்க, ...."படிக்கிற வயசில படிப்பை பாருங்கோ!"....என்று புத்திமதி வேறை சொல்லி கேட்டை துறந்து விட்டினம்.

நடந்த அவமானத்தில இரண்டு நாளா வெளியில தலைகாட்டேலை, யோசனை தந்த பொடியனை பிடிச்சு சாத்தோணும் போல இருந்துச்சு. ஆனா அதுக்குள்ள எல்லாம் தலைகீழா போயிட்டு, தனக்கு சொல்லாம தன்ரை வீட்டை வந்து தன்னை மாட்டி விட்டதோடு நிற்காம, அவமானபட்டது வேறை எண்டு சொல்லி நாயகி கடும் கோபத்தில இனி ஒரு காதலும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை என்று தன்ரை ஒரு தூதுவியிட்டை சொல்லிவிட்டா. சரி என்ன இது சின்ன ஊடல் தானே சரி செய்திடலாம் என்று பாத்தா அது சரியாகிற மாதிரி தெரியேல்ல. விட்ட தூதுகள் எல்லாம் பிங்பொங் பந்து போல போன வேகத்தில திரும்பி வந்திட்டுது. அப்பதான் காதல் முதல் முதலா வலிக்கத் தொடங்கிச்சு. அழகான பொண்ணுக்குள்ள இத்தனை அழுத்தமா என்று வியப்பா இருந்திச்சு!

கடைசியா ஒருக்கா நேரில சந்திக்கிற ஒரு வாய்ப்பு வருகுது. அது ஒரு விழா, ஞாயிற்றுக் கிழமை, நிச்சயமா அவா அங்கை சான்றிதள்களை பெற வந்தேயாக வேணும். அப்ப எப்படியாவது நேரில சந்திச்சு மன்னிப்பு கேட்டாவது சமாதானப்படுத்திடலாம் என்று தவிப்போட காத்திருக்க. சனிக்கிழமை இடி போல வந்திச்சு ஒரு செய்தி. ஆ... காதல்வயப்பட்டதில நாட்டு நடப்பை பற்றி சொல்ல மறந்திட்டன், யாழ்ப்பாணத்தை கைப்பற்ற ராணுவம் முன்னேறி வந்து கொண்டிருந்து. அங்காங்கை செல்கள் இடி போல வந்த விழுந்தாலும் என்ரை கடைசி ஞாயிற்றுக்கிழமைக்காக மிகவும் எதிர்பார்ப்போட காத்துக் கொண்டிருந்தன்.... காலை நேரம் அந்த செய்தி செல்களை விடவும் பெரிய இடியாக வந்து விழுந்தது.... அதுதான் யாழ்ப்பாணத்தை விட்டு சனத்தை எழும்பட்டாம்.....அப்ப அரசியல் வடிவா தெரியாட்டிலும்.... யாழ்ப்பாணத்தை பொடியள் ஒரு போதும் கைவிடமாட்டாங்கள் எண்டு யாரோ சொன்னதை நம்பிக் கொண்டிருந்தன்! எதுக்கும் ஒருக்கா விழா மதியம் நடக்குமா எண்டு பார்க்க அந்த மண்டபத்திற்கு போனால், "விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று மட்டை கேட்டடியில் தொங்கிக் கொண்டிருந்தது! சில சனம் அப்பவே பெட்டி, பாய், படுக்கையுடன் எழும்பி போகத் தொடங்கீட்டுது. நான் எங்க போறது எண்டு தெரியாமல் திகைச்சுப் போய் நிண்டன்.....!

இடைவேளை.....

(மிகுதி வாசகர்களின் கருத்துக்களை பொறுத்து அமையும்!)

  • தொடங்கியவர்

விகடகவி, யமுனா, சாணக்கியன் அண்ணை எல்லாரிண்ட காதல் அனுபவங்களூம் கேட்க நல்லா இருக்கிது. ஆனா, இதன்பின்னால் அனுபவித்த துன்பங்கள், வேதனைகள் உங்களுக்குத்தான் தெரிஞ்சு இருக்கும்.

யமுனாவுக்கு இதுவரை ஆறுபேர் லவ்லெட்டர் தந்திச்சீனமா? :huh: என்ன இருந்தாலும் அவர்கள் அன்புடன் உங்களுக்கு தந்த அந்த லெட்டர்களை அம்மாவுக்கு காட்டி பகிடிவிட்டது கேட்பதற்கு நன்றாக இருக்கவில்லை. சிரிக்கவும் முடியவில்லை. உங்களுக்கு விருப்பம் இல்லை எண்டால் சொல்லிவிடவேண்டியது தானே விருப்பம் இல்லை எண்டு. இதை ஏன் அம்மாவுக்கு எல்லாம் காட்டுவான்? இப்படியே நீங்கள் யாரும் பொண்ணுக்கு கொடுத்த லவ் லெட்ட்டரை அவ தனது அம்மாவுக்கு காட்டினாள், பகிடி பண்ணினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

விகடகவி, நீங்கள் ஒரு முக்கியமான விசயம் சொல்லி இருக்கிறீங்கள். அதாவது நாங்கள் எங்கட அன்பை, காதலை வெளிப்படுத்த வெக்கப்பட்டுக்கொண்டு இல்லாட்டி பயந்துகொண்டு இருக்ககூடாது.

எத்தனையோ பேருக்குஎத்தனையோ காதலுகள் ஊமையாக அவர்களுக்கு உள்ளுக்குள் இருந்து மறைஞ்சு இருக்கிது. வாழ்வதற்கு தானே இந்த வாழ்க்கை? எங்கள் உணர்வுகளை ஒளித்துவைத்து பொய்யாக வாழ்வதைவிட எங்கையாவது மடத்தில சாமியாரா, சாமியம்மாவா, பாதிரியாரா, கன்னியாஸ்திரியா போறது மேல்!

சாணக்கியன் அண்ணை, பெயருக்கு ஏற்றபடி நீங்கள் சாணக்கியமா காதல் செய்து இருக்கிறீங்கள். தயவுசெய்து தணிக்கைகள் செய்யாது முழுக்கதையையும் விபரமா சொல்லுங்கோ. உங்கட கதை நல்லாபோகிது. கதை முழுவதையும் பார்திட்டு பிறகு படமாக்கிறது பற்றி யோசிப்பம்.

மிச்சம் கதையும் கேட்க ஆர்வத்துடன் இருக்கின்றேன். மற்ற ஆக்களும் உங்கட கதைகள அவிட்டு விடுங்கோ.

நன்றி!

யமுனாவுக்கு இதுவரை ஆறுபேர் லவ்லெட்டர் தந்திச்சீனமா? :huh: என்ன இருந்தாலும் அவர்கள் அன்புடன் உங்களுக்கு தந்த அந்த லெட்டர்களை அம்மாவுக்கு காட்டி பகிடிவிட்டது கேட்பதற்கு நன்றாக இருக்கவில்லை. சிரிக்கவும் முடியவில்லை. உங்களுக்கு விருப்பம் இல்லை எண்டால் சொல்லிவிடவேண்டியது தானே விருப்பம் இல்லை எண்டு. இதை ஏன் அம்மாவுக்கு எல்லாம் காட்டுவான்? இப்படியே நீங்கள் யாரும் பொண்ணுக்கு கொடுத்த லவ் லெட்ட்டரை அவ தனது அம்மாவுக்கு காட்டினாள், பகிடி பண்ணினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

ம்ம்...குருவே ஆறு பேரும் ஒரடியா தரவில்லை :wub: இது வரையில் என்று சொன்னேன் உங்களுக்கே நம்ப கஷ்டமா இருக்கு என்றா நேக்கு எப்படி இருக்கும் பாருங்கோ :wub: ..அச்சோ அவைய நினைத்து பகிடிவிட்டவில்லை குருவே அம்மா எனக்கு தான் நக்கல் அடித்தவா உன்னையும் நம்பி ஒன்று லெட்டர் தருதே என்று :lol: ...ம்ம்ம் எனக்கு சின்னனில இருந்து ஒரு பழக்கம் என்ன குழப்படி செய்தா என்ன என்னவும் மம்மியிட்ட சொல்லிடுவேன் அதை மாதிரி தான் இதையும் காட்டினான்.. :lol: (இப்ப கூட எல்லாம் மம்மிக்கு சொல்லுவேன் அந்த பழக்கத்தை விட ஏலாது என்னால சோ மம்மியும் நானும் பிரண்ட் மாதிரி எல்லா விசயத்தையும் கதைக்க ஏலும் அல்லோ :lol: )...டாடி கூட எல்லாம் இப்படி கதைக்கமாட்டேன் குருவே...அந்த பெண்களிற்கு வடிவாக நான் விளங்கபடுத்தினான் இப்ப என்னால் காதலிக்க எல்லாம் ஏலாது இப்ப அந்த சிந்தனையும் இல்லை என்று குருவே பிறகு தான் மம்மிக்கு இதுகளை எல்லாம் அனுப்பினான் பாருங்கோ... :) (மற்றபடி அவையின்ட மனதை எல்லாம் புன்படுத்துறபடி நடக்கமாட்டேன் அப்படி எனக்கு தெரியாது :wub: )..அப்படி நான் செய்திருந்தா அவை இன்றைக்கும் என்ட பிரண்ஸாக இருப்பீனமா குருவே...இப்ப கிளியர் ஆச்சா...

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

விளக்கத்திற்கு நன்றி யமுனா. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சாணக்கியன் அண்ணை, கதை எங்க மிச்சத்தகாண இல்ல? இடைவேள விட்டு ரெண்டுநாள் ஆகப்போகிது. கெதியில வந்து மிச்சக் கதையையும் சொல்லுங்கோ.

எல்லோருடைய அனுபவங்களும் நல்லா இருக்கு

என்னுடையதை நேரம் இருக்கும் போது எழுதிகிறேன் :D:D

  • கருத்துக்கள உறவுகள்

இதயத்துள் அமரத்துவமாகி விட்டது. குறிஞ்சி மலர் போல எப்போதாவது அந்தக் கர்ப்பக் கிரகத்துக் கதவைத் திறந்து அந்தச் சுடரை பார்ப்பதுடன் நடை சாத்தப்பட்டு விடும். அதிகாலைப் புல்லின் நுனியில் பனித்துளிபோல் அந்தக் கணங்கள் புனிதமானவை. :):)

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா எல்ாரை கதையும் நல்லா இருக்கு.ஆனால் அந்த மறுபக்கம் அதுதான் சோகங்கள் அல்லது வலிகள் அவை வைக்குத்தான் தெரியும்.

இந்த மாப்பிக்கு காதல் வியாது ரொம்ப முத்திப்போச்சு, யாராச்சும் காப்பத்துங்கப்பா............

  • தொடங்கியவர்

இந்த மாப்பிக்கு காதல் வியாது ரொம்ப முத்திப்போச்சு, யாராச்சும் காப்பத்துங்கப்பா............

என்மீது நீங்கள் காட்டும் அக்கறைக்கு நன்றி! :):)

என்மீது நீங்கள் காட்டும் அக்கறைக்கு நன்றி! :):)

கொஞ்ச நாள் இந்த பக்கம் எட்டிப்பாக்காமல் விட்டா இந்த மாப்பி வியாதி முத்திப்போயிடும்

  • தொடங்கியவர்

கொஞ்ச நாள் இந்த பக்கம் எட்டிப்பாக்காமல் விட்டா இந்த மாப்பி வியாதி முத்திப்போயிடும்

ஓம் அண்ணை, நீங்கள் சொல்லிறது சரிதான். காதல் வியாதி முத்தி இப்ப நான் ஆஸ்பத்திரியில இண்டன்சீவ் கெயாருக்க இருந்து உங்களோட கதைச்சுக்கொண்டு இருக்கிறன். இனி என்ன டொக்டேர்ஸ் பாத்துக்கொள்ளுவீனம். நீங்கள் ஒண்டும் யோசிக்காதிங்கோ. என்னில உங்களுக்கு இரக்கம் இருந்தால் ரெண்டு ஹோர்லிக்ஸ் போத்தல், அப்பிள், ஒரேஜ்ன்ச், லொல்லிப்பொப், சொக்கா, பிக்கா எல்லாம் வாங்கி அனுப்பிவிடுங்கோ. :(:D

எல்லோருடைய அனுபவங்களும் நல்லா இருக்கு

என்னுடையதை நேரம் இருக்கும் போது எழுதிகிறேன் :):)

ஓம் அக்கா உங்கட அனுபவங்களையும் நேரம் இருக்கேக்க சொல்லுங்கோ.

இதயத்துள் அமரத்துவமாகி விட்டது. குறிஞ்சி மலர் போல எப்போதாவது அந்தக் கர்ப்பக் கிரகத்துக் கதவைத் திறந்து அந்தச் சுடரை பார்ப்பதுடன் நடை சாத்தப்பட்டு விடும். அதிகாலைப் புல்லின் நுனியில் பனித்துளிபோல் அந்தக் கணங்கள் புனிதமானவை. :):(

செத்தவீடு எல்லாம் வச்சு முடிஞ்சுதோ? அப்ப ஒவ்வொரு காதலர் தினம் வரேக்கயும் வருசா வருசம் துவசம் செய்யவேண்டியதுதான். :huh:

ஆகா எல்லாற்ரை கதையும் நல்லா இருக்கு.ஆனால் அந்த மறுபக்கம் அதுதான் சோகங்கள் அல்லது வலிகள் அவை வைக்குத்தான் தெரியும்.

சோகங்கள மற்ற ஆக்களோட பகிர்ந்துகொண்டால் வலி குறையும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனைவரினதும் காதல் கதைகள் சுவாரிசமாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். தமிழரின் தனித்துவத்தைக் காக்க, இதற்கும் தனி விழாவாக இருக்கின்றதை எல்லாம் கெடுக்க கருணாநிதி ஐயா ஏதாவது செய்வார் என நம்புகின்றேன்.

இந்த வசனத்தில் சாணக்கியனின் கருத்துக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன்.

அதுதான் யாழ்ப்பாணத்தை விட்டு சனத்தை எழும்பட்டாம்.....அப்ப அரசியல் வடிவா தெரியாட்டிலும்.... யாழ்ப்பாணத்தை பொடியள் ஒரு போதும் கைவிடமாட்டாங்கள் எண்டு யாரோ சொன்னதை நம்பிக் கொண்டிருந்தன்! எதுக்கும் ஒருக்கா விழா மதியம் நடக்குமா எண்டு பார்க்க அந்த மண்டபத்திற்கு போனால், "விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று மட்டை கேட்டடியில் தொங்கிக் கொண்டிருந்தது! சில சனம் அப்பவே பெட்டி, பாய், படுக்கையுடன் எழும்பி போகத் தொடங்கீட்டுது. நான் எங்க போறது எண்டு தெரியாமல் திகைச்சுப் போய் நிண்டன்.....!

நீங்கள் நம்பியது பற்றிச் சொன்னீர்கள். ஏற்கின்றேன். ஆனால் அந்த நேரத்தில் போராட்டத்திற்கு வீட்டுக்கொருவர் வரவேண்டும் என்று கேட்டது பற்றி ஒன்றுமே சிந்திக்கவில்லையா? வெறும் 4,5 பேராக நின்று, ஆயிரக்கணக்கான எதிரிகளைச் சந்திக்கமுடியும் என எப்படி நம்பினீர்கள். அன்றைக்கு வீட்டுக்கு ஒருவர் போயிருப்பின் இந்த நிலை, அல்லது அந்த இடப்பெயர்வு வந்திருக்குமா?

இது உங்களைக் குறை சொல்வதற்காக இல்லை. புலிகளை நம்பினான். ஆனால் அவர்கள் விட்டுவிட்டார்கள் என்று குறை சொல்பவர்களுக்கான ஆட்சேபனை மட்டுமே.

  • தொடங்கியவர்

நன்றி தூயவன் அண்ணை...

தமிழரின் தனித்துவத்தைக் காக்கும் தமிழரின் தனி விழா என்று காதலர் தினத்தை போற்றிப் புகழ்ந்து இருக்கிறீங்கள். இந்தக்கூற்று நீங்கள் ஒரு தமிழன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால்..

கருணாநிதி ஐயா எண்டு ஏதோ சொன்னதுதான் விளங்க இல்ல. :icon_mrgreen: எங்கட காதலர் தினத்துக்கு அவர் ஆப்பு வைக்கபோறாரா? ஏன் அவரும் எங்கட நெடுக்காலபோவான் மாதிரி காதலிற்கு ஆதரவு கொடுக்காத ஆளோ? என்ன சொல்லிறீங்கள்? விளங்க இல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கலையும், புதுவருடத்தையும் குழப்பியடித்த மாதிரி, அதையும் குழப்பியடிக்கமாட்டாமலோ போகப் போறார் என்று கேட்டேன்.

காதலர் தினமோ, காதலோ தப்பு என்ற எண்ணம் கிடையாது. ஆனால் அது பெப்பரவரி 14இல் கொண்டாட வேண்டும் என்று சொல்வதை வரவேற்க முடியாது. அத்தோடு காதல் புனிதமானது, உயர்வானது, என்று ஏமாற்றிக் கொள்வதையும் ஏற்க முடியவில்லை. சொல்லப் போனால், அவை எல்லாம் சுத்த ஏமாற்றுத்தனமே. அது காமத்தை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு, சாயம் பூசி வெளியால் ஏமாற்றிக் கொள்கின்றோம்.

தூயவன் அப்படி சொல்லாதீங்கோ.. நூற்றில ஒண்டு நல்ல காதலா இருந்து.. இப்ப ஆயிரத்தில ஒண்டா மாறிட்டு..காதலுக்கு காம்மதான் மூலகாரணம் எண்டா அது பொய்..

அதுக்கு குறிப்பிட்ட ஆளை தேடி அலையிறது..உயிர்விடுறது பைத்தியமாறது எல்லாம் நடக்குமோ..பொருளை மாதிரி காமத்துக்கும்தான்..கடைகள் போட்டிருக்கே இந்த உலகம் அதுபோதாதா...

காதல் உணர்வு சம்பந்தப்பட்டதுதான்..காமமும் அதில இருக்கும்.. கண்ணில பார்க்கிற நிறைய குப்பைகளை வைச்சு காதலை தப்பா சொல்லாதீங்க இன்னும் அன்பும் மனிதநேயமும் காதலாலதான் கொஞ்சமாவது இருக்கு

வாசகர்களுக்கு வணக்கம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இடைவேளை நீண்டு விட்டது!

மிக விரைவில் மிகுதி பகுதியும் வரும்! எப்படியும் காதலர் தினத்திற்கு முன் நிறைவு செய்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது விகடகவி. காமம் இல்லாத காதலைச் செய்து பெருவாழ்வு வாழ்க. காமத்துக்குத் தடை என்றால் ஒருத்தனும் காதல் என்று அலையமாட்டான். நீங்கள் சொல்லுகின்ற குப்பைகள் தான் மனுதனுடைய முகங்கள். உண்மையானது எனத் தாங்கள் கருதுவது சாத்தியமற்ற ஒன்று. கனவுலகில் சஞ்சரிக்கமட்டுமே உதவும்.

  • தொடங்கியவர்

வாசகர்களுக்கு வணக்கம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இடைவேளை நீண்டு விட்டது!

மிக விரைவில் மிகுதி பகுதியும் வரும்! எப்படியும் காதலர் தினத்திற்கு முன் நிறைவு செய்கிறேன்!

நன்றி சாணக்கியன் அண்ணை, மிச்சக்கதையையும் கேட்க ஆர்வத்துடன் இருக்கின்றேன். விரைவில் மிகுதியையும் சொல்லுங்கோ.

காதல் அது பாட்டுக்கு வரும் போகும்

வாழ்கை மட்டும் கட்டின மனிசியோட இனிதே போகும்.

காமம் இல்லாத காதலா?????

இதை கடுமையாக எதிர்க்கிறேன்.

அப்படி காதலிப்போரின்

ஜோடிகளை வேறுயாரவதுதான்

காப்பாற்ற வேண்டும்.

  • தொடங்கியவர்

எங்க சாணக்கியன் அண்ணைய காண இல்ல? ஆள் தலைமறைவு? :lol:

சாணக்கியன் அண்ணை, மிச்சக்கதை எங்க? வாற வருசமோ கதையின் அடுத்த பாகம்? :D

உங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்! :D

எங்க சாணக்கியன் அண்ணைய காண இல்ல? ஆள் தலைமறைவு? :lol:

சாணக்கியன் அண்ணை, மிச்சக்கதை எங்க? வாற வருசமோ கதையின் அடுத்த பாகம்? :D

உங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்! :D

அனைவரும் மன்னிக்கவேணும், மிகுதிக்கதையை தனக்கு காட்டாம திரையிடக்கூடாது என்று எனது முன்நாள் காதலியான தற்போதய ஆத்துக்காரி கண்டிப்பான உத்தரவு போட்டதால எப்படி எழுதிறது என்று குழம்பிப்போய் இருக்கிறன். காதலர் தினம் இன்டையோட முடிஞ்சாலும் காதல் மிகுதி 365 நாளும் இருக்கும் தானே! (இது லீப் வருடம்)

எப்படியும் சென்சாரிலை அனுமதி பெற்று மிகுதியை கூடிய விரைவில் தருகிறேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.