Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருடப்பட்ட தலைமுறை-கானா பிரபா

Featured Replies

ஓவ்வொரு பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப்பழங்குடியினரைப்(Aborigines) பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு.

stolen1.jpg

சுமார் 70 ஆயிரம் வருடங்கள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை ப்ரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்ட பூர்வகுடிகளைப் பலவந்த வெளியேற்றல்கள் துப்பாக்கி முனையில் தான் நடாத்த வேண்டி ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பூர்வகுடிகள் கங்காருக்கள் போல வேட்டையாடப்பட்டனர். இந்தக் காலனித்துவம் நிகழ்ந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 750,000 பூர்வ குடிகள் வாழ்ந்திருந்தார்கள் என்பது காலக் கணக்கெடுப்பு சொல்லும் செய்தி.

4.jpg

ஜனவரி 1, 1901 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பு சார்ந்த அவுஸ்திரேலியா (Commonwealth of Australia) என்று இந்த நாடு மாற்றப்பட்டபோதும் கூட இந்தப் பூர்வகுடிகள் தேசிய கணக்கெடுப்பில் அடங்காதவாறு சட்டம் இயற்றப்பட்டதோடு இவர்களை Fauna (நாட்டின் பூர்வ பிராணிகள்) என்ற வகையிலேயே அடக்கினார்கள்.

3.jpg

1910 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை சுமார் 100,000 வரையிலான சிறுவர்கள் பொலிசாரினாலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் தம் குடும்பங்களில் இருந்து பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழேயானவர்கள். அப்போது இந்தக் கொடு செயலைத் தடுக்க சட்டமேதும் கிடையாது. அவுஸ்திரேலிய பூர்வ குடி என்ற முகவரி மட்டும் இருந்தால் போதும், மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறீஸ்தவ தேவாலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் தத்தெடுப்புக்கு ஆளானார்கள். இதுவரை இயற்கையோடு வாழ்ந்து தமக்குப் பிடித்த உணவை மட்டும் உண்டு வந்த இவர்களுக்கு அட்டவணைப் பிரகாரம் உணவு என்னும் பெயரில் ஏதோவெல்லாம் கிடைத்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அபலைகள் கூட உண்டு. அடிப்படைக் கல்வியாவது கிடைக்குமென்றால் அதுவும் இல்லை. காடு, கழனிகளுக்கான வேலையாட்கள் தான் உற்பத்தியாயினர்.

2.jpg

இவர்களைத் தான் ‘Stolen Generations’ அதாவது திருடப்பட்ட தலைமுறை என்று அடையாளம் இட்டு இன்று வரை அல்ல என்றுமே மாறா வடு முத்திரை பதிக்கப்பட்டுவிட்டது.

அடுத்ததாக ஆதிப்பழங்குடியோடு கலந்து பிறப்பெடுத்த ஐரோப்பிய கலவைக் குழந்தைகள் தான் அதிகளவு இலக்கு வைக்கப்பட்டனர். 1937 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலிய பூர்வகுடிகளோடு கலந்து பிறந்த ஐரோப்பியக் கலப்பினக் குழந்தைகளைப் பலவந்தமாகப் பிரித்தெடுத்து அரசின் மேற்பார்வையில் வாழவைக்கும் நடைமுறையும் பாய்ந்தது. இந்தக் கொடூரம் 1970 ஆம் ஆண்டு வரை பூர்வகுடிச்சனத்தொகையில் 10% இலிருந்து 30% வீதமாக இருந்திருக்கின்றது.

இதன்மூலம் இந்த நாட்டுக்கு வந்து காலனித்துவ அரசு அமைத்துக்கொண்டவர்கள் சாதிக்க நினைத்தது இது தான்:

1. இரண்டு மூன்று தலைமுறைக்கு தொடரும் இவ்வாறான பிரித்தெடுத்து வளர்த்தல் என்னும் முறைமை "பூர்வ குடிகள்" என்ற சமுதாயமே இல்லை என்ற நிலைக்கு மாற்றமுடியும்.

2. பூர்வகுடிகளின் பேச்சு வழக்கையும், சடங்குகளையும் இல்லாதொழித்தல்

இந்த நோக்கங்களை அமுல்படுத்த அப்போதிருந்த ஆட்சியாளர்கள் பகீரதப்பிரயத்தனம் கொண்டு உழைத்தார்கள். பிள்ளைகளைத் தேடி ஓடி வரும் பெற்றோர்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள். பல பிள்ளைகள் இந்த நாட்டிலேயே இல்லாமல் எங்கோ ஒரு இன்னொரு காலணி நாட்டுக்குத் தொலைந்து போயினர். இதை Rabbit-Proof Fence என்ற ஆங்கிலப் படமும் காட்சிப்படுத்தியிருக்கின்ற

  • தொடங்கியவர்

Brits refuse to say sorry

Email Printer friendly version Normal font Large font February 14, 2008 - 6:49AM

Advertisement

The British Government has dismissed calls for it to apologise for its role in the removal of thousands of indigenous Australian children from their families.

Britain has been urged by prominent human rights lawyer Geoffrey Robertson to endorse an apology delivered by Australian Prime Minister Kevin Rudd because English intellectuals had inspired the policy of seizing the children.

But the British Government is refusing to follow Mr Rudd's lead in saying sorry to the stolen generations.

"The apology offered in the Australian Parliament is a matter for the Australian people and addresses laws and policies of successive Australian parliaments and governments," a British Foreign Office spokeswoman said.

Mr Robertson has argued Britain bore a "heavy historic responsibility" for the stolen generations and should apologise.

He said the policy of removing indigenous children from their families was based on the theories of English eugenics intellectuals, who believed aboriginality to be a degenerate trait and should be bred out.

AAP

http://www.theage.com.au/news/national/wer...2760432552.html

  • கருத்துக்கள உறவுகள்

2. பூர்வகுடிகளின் பேச்சு வழக்கையும், சடங்குகளையும் இல்லாதொழித்தல்

தமிழர்களைப் போல பகுத்தறிவு இல்லாமல் சடங்குகளை கொண்டாடி இருக்கினம் போல இருக்கு. தமிழர்களுக்கு அதிஸ்டவசமாக ஒரு இராமசாமி கிடைச்ச மாதிரி இம்மக்களுக்கும் பிரித்தானியர்கள் கிடைத்து பகுத்தறிவு புகட்டி இருக்கிறார்கள் என்பதை நினைக்க சந்தோதோதோசமா இருக்கிறது. இல்லாவிடில் சில தமிழர்கள் பகுத்தறிவு இல்லாமல் சடங்குகளை கொண்டாடுவது போல் இவர்களும் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள

இவர்கள் நம்மவர்கள் போல இருக்கிறார்களே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.