Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகமது நபியின் காட்டூன்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல தடவை வலியுறுத்திய ஒன்று றகு.

ராமசாமியின் நாயக்கர் வம்சமும் கீழ்மட்ட சாதிகளை வருத்திப் பிழைத்த கூட்டம் தான். அவரின் போராட்டம் அதற்கு எதிராக ஒரு போதும் அமைந்ததில்லை. சொல்லப் போனால் கீழ்சாதி எனக் கணிக்கப்பட்ட மட்டகளைக் கூலிகளாக வைத்து அடிமைப்படுத்தியது அவர்கள் தான். பிராமணிகள் கூட இந்த அளவு கொடுமை செய்ததில்லை. ஆனால் தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி போடுகின்ற குள்ளநரித்தனத்தை ஆதரிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

திரு சாணக்கியன் அவர்களே

முஸ்லீம்கள் நமக்குச் சகோதரர்களில்லையென்று கூறுகிறீர்கள். இலங்கை முஸ்லீம்கள் தாம் பிற இனத்தவர் என்று தம்மைக் கூறிக்கொண்டாலும் அவர்கள் நமக்குச் சகோதரர்களே. ஏனென்றால் அவர்களுக்கும் எமக்கும் தாய்மொழி தமிழே. அரசியல் காரணங்களுக்காகத் தம்மை அவர்கள் வேறாக்கிக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் இவ்வாறு முஸ்லீம்கள் தம்மை வேறுபடுத்துவதில்லை. தமிழனென்றே கூறுவார்கள். இந்தியாவின் முந்திய ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் தம்மை தமிழனென்றே கூறிக்கொள்ளுவார்.

நான் பல பாகிஸ்தான் நண்பர்களுடன் பழகியிருக்கிறேன். குறிப்பாக ஆசாத் காஸ்மீரைச் சேர்ந்தவர்கள் நம்மை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. தாங்களும் இந்தியாவினால் பல ஒடுக்குமுறைகளுக்கு ஆளாவதால் சுதந்திரத்தின் பெறுமதியை அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். தேசியத் தலைவருட்பட ஈழப்போராளிகளின்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். இவ்வுலகில் அடக்கியொடுக்கப்படும் எல்லா மக்களும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே.

தங்களது உயிரைக் கொடுத்து தற்கொலைத்தாக்குதல்களில் அடக்குமுறைக்கெதிராக இஸ்லாமியர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களைப் பார்த்துத்தான் நாமும் அதைக் கற்றுக்கொண்டோம்.

முழுமையான வெறுப்பை அவர்கள்மீது கொட்டுவது தவறானது. மேற்குலகம் இஸ்லாத்தையென்ன நம் எல்லோரையுமே இழிவாகத்தான் பார்க்கின்றது. இன்று நபிபெருமானுக்கு எற்படுத்தப்படும் இழுக்கு நாளை ஒரு இந்துக்கடவுளுக்கும் ஏற்படுத்தப்படலாம். ஆனால் இஸ்லாம் மார்க்கம் இழிவு படுத்தப்படும்போது முஸ்லீம்கள் கொதித்தெழுகிறார்கள். மற்றைய சமயத்தினர் அப்படியில்லை. அது அவர்களைப் பொறுத்தது. நாங்கள் அவமதிக்கப் படுகிறோம்தானே ஏன் இஸ்லாமியர்களையும் அவமதிக்கக்கூடாது என்பதில் உள்ள நியாயம் எனக்குப் புரியவில்லை. நான் அவதானித்திருக்கிறேன் முஸ்லீம்கள் தமது சமயத்தில் பற்றாக இருப்பார்கள் ஆனால் பிற சமயங்களை நிந்தனை செய்யமாட்டார்கள்.

இந்தியாவிலுள்ள முஸ்லீமகள் எதிர்நோக்கும் அவமதிப்புகளோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் கௌரவமாக வாழ்கின்றனர். இது உலக அபிப்பிராயமாகும்.. நான் கூறுவது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் உண்மை இதனை விசாரித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வசி,

பெரியார் தனது ஆரம்பகால வாழ்வில் தனது தந்தை அநுபவித்த அதே மேட்டுக்குடி வாழ்வை வாழ்ந்ததை நான் மறுக்கவில்லை. ஆனால் பின்னாளில், அவருடன் அணிசேர்ந்த பலரில் அவரின் கீழ் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பலரும் உடனிருந்ததாக நினைவு. நாம் பெரியரை இந்து மதத்திற்கு எதிரானவராகப் பார்ப்பது தவறு. இந்துமதத்தைக் காரணம் காட்டி சமூகத்தில் மற்றவர்களை தாழ்த்தி, ஒடுக்கிய சில பிராமணியருக்கு எதிரானதாகத்தான் அவரது புரட்சி இருந்ததாக நான் பார்க்கிறேன். இதைப்பற்றி நான் சொல்வதற்கு இனி ஒன்றுமில்லை. ஏற்கனவே விவாதிக்கப்பட்ட ஒரு தலைப்பை மீண்டும் கிளரி, களத்திலுள்ளோரை சலிப்படையச் செய்ய நான் விரும்பவில்லை.

மதம் சாதி பிரதேசம் நாடுகளிற்கு அப்பால் தமிழராக ஒன்று சேர்ந்து முதல் தமிழ்த்தேசியம் எழுச்சி பெற வேண்டும்.

இதற்கு இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் தமிழரும் விதிவிலக்கல்ல.

கடந்த கால கசப்பான அனுபவங்களை நிவர்த்தி செய்து ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டி பாரிய கடமை எம்எல்லோரிடமும் இருக்கு. இதில் விட்டுக் கொடுப்புகள் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் என்று பல வழிகளில் முன்னேற வேண்டியிருக்கு.

இந்தியாவிற்கு பாக்கிஸ்தான் போல் தமிழீழாத்தால் ஒன்றை தாங்க முடியாது.

வேறு மத கலாச்சார பின்னணிகளை கொண்ட ஒருவரால்; தமது அனுபவங்கள் விரக்த்திகளின் பின்னணியில் இன்னொரு மதம் கலாச்சாரம் பற்றி உருவாக்கிய கார்ட்டுன்களை இந்து மதம் பற்றி நாமே விமர்சிப்பதோடு ஒப்பிட முடியாது.

தமிழ் இனத்திற்கு இன்று முன்னுள்ள முதன்மையான சவால் என்ன என்பதை சிந்தித்தால் உணர்ந்தால் பல விதண்டவாதங்கள் மத உரிமை ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்பவற்றின் பெயரால் வராது.

முஸ்லீம் மக்களில் சிலர் செய்யும் தவறுகளுக்காக எல்லா முஸ்லீம் மக்களினதும் மனது புண்படும்படி அவர்களின் தெய்வமான முகமது நபியை கேவலப்படுத்த வேண்டிய நியாயம் எதுவுமில்லை. இந்த விடயத்தில் வசியின் கருத்தே எனது கருத்தும். மதமென்பது அவரவரின் நம்பிக்கையைச் சார்ந்தது. அம்மதத்தில் கூறப்பட்ட கருத்துக்களோ வழிமுறைகளோ அம்மதத்தை பின்பற்றுவோரின் பிரைச்சினை. அதை விடுத்து அம்மதம் சாராதவர்கள் அவ்விடயம் பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே மொட்டந்தலைக்கும் முழந்தாலுக்கும் சிலர் முடிச்சுப் போடுவதும் அதைக் களம் வேடிக்கை பார்ப்பதும் யாருக்குக் கேவலமென்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா???

***

*** நிர்வாகம் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

சற்று மாதங்கள் முன்னர் கனடாவில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம். இங்குள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் உபயோகித்த விளம்பரம் தொடர்பிலானது அந்த சம்பவம். அவ்விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ஒரு ஜப்பானிய இன இளம் பெண்ணின் சட்டையில் அணியப்பட்டிருந்த ஒரு பொத்தானில் பொறிக்கப்பட்டிருந்த ஒரு விடயம் யூத மக்களிற்கு offensive வான ஒன்றாக அமைந்து விட்டது. இந்த விளம்பரத்தைச் சரிபார்த்து அனுமதித்த தொலைத்தொடர்பு நிறுவனத்தினர், விளம்பரத்தின் மாதிரியினை சிறிய அளவில் பார்வையிட்டதால் அவர்களிற்கு அப்பொத்தான் சமாச்சாரம் புலப்படவில்லை. விளம்பரமும் அனுமதிக்கப்பட்டு வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் அவ்விளம்பரங்களில் ஒன்று உருப்பெருப்புச் செய்யப்பட்டு, பயணிகளின் கவனத்தைக் கவரும் பொருட்டு ஒரு நிலக்கீழ் புகையிரத நிலைய சந்திப்பில் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. இப்போதும், குறிப்பிட்ட சட்டைப் பொத்தான் ஒப்பீட்டளவில் சிறியதாய் தான் இருந்த போதும், ஓரளவிற்கு அதில் இடம் பெற்றிருந்த விடயத்தைப் பார்வையாளர்கள் கிரகிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. அவ்வளவு தான், கனடாவின் அப்பிரதேச ஊடகங்கள் அனைத்தும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தன. மறு நாள் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனம் அவ்விளம்பரத்தை முற்றாகப் பாவனையில் இருந்து அகற்றியதோடு பகிரங்க மன்னிப்பும் கோரியது.

எதனால் குறிப்பிட்ட பொத்தான் யூத மக்களிற்கு offensiveவாய் அமைந்தது என்றோ, கருத்துச் சுதந்திரம் பற்றியோ எவரும் ஆராயவில்லை.

இதுபோன்றே, நியூயோர்க் நகரின் மீதான தாக்குதல் நடந்தததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பொழிந்து தள்ளிய வேளையில், அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை மன்னர்களில் ஒருவரான, பில் மாகர் எதேச்சையாய் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார் "வானில் இருந்து குண்டு போட்டுட்டு ஓடிப்போவது ஒன்றும் மாவீரம் அல்ல" என்ற தொனியில் அமைந்தது அவரது கூற்று. அவ்வளவு தான், அமெரிக்காவின் வீரப் புதல்வர்களை விமரிசித்த பில் மாகர் தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நெடுங்காலம் அவர் முற்று முளுதாகப் பல முனைகளில் புறக்கணிக்கப்பட்டார்.

கனடாவின் சஸ்கச்சுவான் பிரதேச பழங்குடித் தலைவர் டேவிட் அகனகியூ. இவர் "ஓடர் ஒவ் கனடா" என்ற விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற பெருமதிப்பிற்குரியவராக இருந்தார். இந்நிiலியில் ஒரு நாள் ஒரு பேட்டியில் எதேச்சையாக ஹிட்லரின் நாசிப்படைகள் யூதரைக் கொன்று குவித்தமை தொடர்பிலான தனது அபிப்பிராயம் ஒன்றை சற்று வெளிப்படையாக முன் வைத்தார். கருத்து எத்தனை அபாண்டமானது என்பது அல்ல இங்கு முக்கியம். அவரது பார்வையில் அச்சம்பவம் அப்படிப் பார்க்கப்பட்டது. அவ்வளவு தான், இன்று டேவிட் அகனகியூ பல துன்பங்களின் பின்னர் செல்லாக்காசாக வாழ்கின்றார்.

கருத்துச் சுதந்திரம், சனநாயகம், பெருந்தன்மை போன்ற விடயங்கள் ஒரு போதும் மேலெழுந்த வாரியாகப் பார்க்கப்படக் கூடாதன. யாரால் எதற்காக எங்கு என்ன விடயம் முன்னிறுத்தப்படுகின்றது என்று ஆராய்வது அவசியம்.

முகமது நல்லவரா, முஸ்லீம்கள் காட்டு மிராண்டிகளா என்பது அல்ல இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இது கருத்துச் சுதந்திரம் பற்றிய ஒன்றே அல்ல. இது, இன்றைய உலகின் பாரபட்சமான இன்னமும் சொல்வதாயின் ஒடுக்குமுறை நீதி பற்றியது. அடாவடித்தனம் பற்றியது.

முஸ்லிம்களிற்கு மேற்படி காட்டுன் ஏன் ஒபன்சிவாக அமைகிறது என்பது எமது பிரச்சினை அல்ல. அவர்களிற்கு எது ஒபன்சிவ் என்பது அவர்கள் தீhமானிக்க வேண்டியது. அவர்கள் கூறுகிறார்கள் எங்களை இது புண்படுத்துகின்றது செய்யாதீர்கள் என்று. இல்லை செய்வோம் என்பதனால் எதனைச் சாதிக்கின்றார்கள் பத்திரிகைக் காரர்கள்? பலம் பொருந்திய யூதர்களோடு இவ்வாறு விவாதிக்கப் பயப்படுவோர் ஏதிலிகளைக் கண்டதும் எகிறிக் குதிப்பது எதனால்?

சரி, இன்னுமொரு கோணத்தில் பார்ப்போம். இஸ்லாமிய அடிப்படைவாதம் இன்று அனைத்துலகையும் பாதிக்கின்றது. நியூயோர்க், லண்டன், கைதராபாத், ஸ்பெயின் என்று எங்கும் இது விரிகிறது. நானோ நீங்களோ இன்று ஒரு இஸ்லாமிய தீவிரவாதியின் குண்டினால் அர்த்தமின்றி மாண்டுபொகலாம். எனவே இஸ்லாமிய தீவிர வாதம் இஸ்லாமியர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. எம்மைப் பாதிக்கும் இவ்விடயம் பற்றி நாம் பேசலாம், அதற்கான நியாயம் எமக்குண்டு என்று பத்திரிகைக் காரர்க்கள் கூறுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படிப் பார்த்தால், இஸ்ரேலிய அட்டுளியங்கள் கொஞ்ச நஞ்சமா? நாசிப் படைகளின் றேஞ்சுக்கு சில சமயங்களில் நடந்து கொள்ளும் இஸ்ரேலியர்கள் தங்களை இன்னமும் victimகளாக மட்டுமே பார்க்கவேண்டும் என்றொரு எழுதாவிதி வைத்திருப்பது பற்றி இப்பத்திரிகையாளரிற்கு தில் இல்லாது போனது ஏன்? இஸ்ரேலிய அட்டுளியங்களை இந்த முகமது காட்டுன்கள் தோரணையில் வரைந்தனுப்பினால் எத்தனை பத்திரிகைக் காரரிற்கு பிரசுரிக்கத் தோன்றும்?

வெறும் சுவாஸ்டிக்கா குறியீடே இன்று மாபெரும் தடைசெய்யப்பட்ட குறியீடாக விளங்குகின்றது. ஹேற் கிறைம்ஸ் என்று சட்டங்களே கனடா போன்ற நாடுகளில் இயற்றப்படுகின்றன. சட்டங்கள் எல்லாம் என்ன பலம் பொருந்தியோரைப் பாதுகாக்க மட்டுந்தானா?

இங்கு இக்காட்டுன்களை மதம் சார்ந்து பார்ப்பது சரியானதா என்பது கேள்விக்குரியது என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

ஆனா சுவாஸ்ரிக்க இன்னமும் இந்து மதத்தின் பெயரால் தாராளமாக எல்லா இடமும் பாவிக்கப்படுகிறதே? சயனிசத்தை விட சக்த்திவாய்ந்ததாக இந்துத்துவம் இருக்கிறதா என்ற கேள்வியையும் கேட்க வேணும் போல கிடக்கு.

  • தொடங்கியவர்

தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்ட அனைவருக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.