Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயிரத்தில் ஒருவன் ஐயா நீ! ,தமிழருக்காகக் குரல் கொடுக்கும் சிங்களர் டாக்டா பிரயன் செனிவிரத்தின

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில் ஒருவன் ஐயா நீ!

தமிழருக்காகக் குரல் கொடுக்கும் சிங்களர்

(உங்களில் பலர் டாக்டா பிரயன் செனிவிரத்தின பற்றி அறிந்திருக்கக் கூடும். ஈழத்தமிழர் உரிமைக்காக உலகம் முழுவதும் சென்று பேசியும் எழுதியும் வரும் இவர் ஒரு சிங்கள மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களுடைய போராட்டத் தையும் அதில் இருக்கும் நியாயத்தையும், தமிழ் மக்கள் படும் அவலங்களையும் உலக அரஙகில் எடுத்துச்சொல்லி இலங்கை அரசாங்கத்தைத் தலைகுனிய வைப்பதுடன் தமிழ் மக்கள் மீது கட்ட விழ்த்துப் விடப்பட்டிருக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றித் தன் சொந்த செலவில் குறுவட்டுக்கள், துண்டுப் பிரசுரங்கள் முதலியவற்றைப் பிரசுரித்து இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட தமிழ்மகனும செய்திருக்காத ஒருபெரும் விழிப்புணர்வை உலகளாவிய விதத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு இணையதளத்தில் இவர் கூறியுள்ள கருத்துக்கள் ஒவ்வொரு ஈழத்தமிழனும் கவனிக்க வேண்டிய செய்திகளாகும். இடம் கருதி அக்கட்டு ரையின் சில பகுதிகளை மாத்திரம் சுருக்கமாக இங்கே தந்துள்ளேன்.

"பல நாடுகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள தமிழர்கள் முன் நான் பேசும்போது நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தோமானால் சிங்கள ஆயுதப்படை யினாரால் கிழக்கிழங்கையில் நடந்தது வடக்கிலும் தொடரும் என்று கூறினேன். நாம் ஒன்று செய்யாமல் இருந்தோம். அதனால் வடக்கிலும் அது நடைபெறு கிறது. பின் வன்னியிலும் அது நடக்கும்.

நாம் என்ன செய்யலாம்?

நாம் எவ்வளவோ செய்யலாம். ஏனெனில் மூன்று சக்திகள் மாத்திரமே ராஜபக்சேவின் நாசகாரமான போரைத் தடுத்து நிறுத்த முடியும். அவை:

1. உலக சமூகம் - குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள்.

2. விடுதலைப்புலிகளின் போர்த்திறன்.

3. தென் இலங்கையில் வாழும் சிங்கள மக்களின் அரசியல் தாக்கம்.

உலக சமூகம் என நான் குறிப் பிடுவது வெளிநாட்டு அரசாங்கங்கள் அந்நாடுகளின் எதிர்கட்சித் தலைவர்கள், இந்நாடுகளில் வாழும் சாதாரண மக்கள், புலம்பெயர்ந்து வாழுகின்ற பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள், ஆகியோரையே.

2007ம் ஆண்டு சூன் மாதம் நான் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அங்கே கொட்டும் மழையில் ஐ.நா. காரியாலயத் திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடாத்திய 15000க்கும் மேற்பட்டோா பங்குபற்றிய கூட்டத்தில் உரையாற்றினேன்.

தமிழர்களுக்குத் தம் உரிமையை வென்றெடுக்க கூடிய கால இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. கொடூர மான சிங்கள அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும், அவற்றை முன்னின்று நடாத்தும், காவி உடை அணிந்த பிக்குகளினதும், தேசிய காவலர்கள் என்று சொல்லிக் கொள்வோரின் சிங்கள-பெளத்த பேரினவாதத்தை வெளிப்படுத்துவதும், அதனை பிரச்சாரப்படுத்துவதன் மூலம் தான் உலக நாடுகளின் ஆதரவை, அநு தாபத்தை தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்குச் சார்பாகப் பெறமுடியும்.

நாம் சரியான முறையில் செயற் பட்டிருந்தோமானால் இந்த இனத் துவேஷிகளையும் அரசியல் பச்சோந்தி களையும் உலக அரங்கில் நிறுத்தி, இப்படியான கொடூரமான மிருகக் குணங் கொண்ட அரசாங்கத்தின் முன்னாள் தனி அரசை நிறுவுவதைத் தவிர வேறு வழியில்லை என்று காட்டியிருக்க முடியும்.

நாம் அதைச் செய்யத் தவறி விட்டோம். எமக்குக் கிடைத்த காலக் கெடு குறைந்துகொண்டே வருகிறது. அத்துடன் கிழக்கிலும் வடக்கிலும் தமிழ் மக்களை சிறிது சிறிதாக இழந்து வருகிறோம்.

இப்போது என்ன நடக்கிறது?

வடக்கிலும், கிழக்கிலும இன்னும் எத்தனை தமிழர்கள் மிஞ்சி இருக் கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. 10 இலட்சத்திற்குக் குறைவானதாகவே இருக்கும் என நம்புகிறேன். ஆனால் கொழும்பிலுள்ள சிங்கள ஆட்சியாளர் களும், அவர்களது கொலைவெறிப் பிடித்த அரச படைகளும், புத்தரைப் பின்பற்றுவார்கள் என நம்ப்பப்படும் மஞ்சள் அங்கி அணிந்த பிக்குகளும் சிங்கள ஆதிக்க வெறியர்களும், மீதமுள்ள ஒவ்வொரு தமிழனையும் அழித்தொழிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்களா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்விக்குறி யாகும். அப்படியானால் அது இன அழிப்பே அன்றி வேறொன்றுமில்லை.

இதை எம்மால் தடுத்து நிறுத்த முடியுமா?

ஆம்! முடியும். ஆனால் காலம் கடந்து கொண்டிருக்கிறது. நான் திரும்பத் திரும்பச் சொன்னதுபோல் எம்மிடம் உள்ள ஆகப்பெரிய சக்தி புலம்பெயர்ந்து, பணம்படைத்த நாடுகளில் வாழும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஆகும்.

ஈழப்போராட்டம் மற்றைய விடுதலைப்போராட்டங்களிலும் பார்க்க இரண்டு விதங்களில் மாறுபட்டது. ஒன்று, வெளிநாடுகளில் வாழும் பயிற்சி பெற்ற திறன் வாய்ந்த தமிழ்ச் சமூகம், மற்றையது, மிகவும் திறமையான பயிற்சிபெற்ற, கட்டுப்பாடுடைய புலிகளின் தரைப்படை, ஆகாயப்படை, கடற்படைகளாகும். உலகத்தில் வேறெந்த விடுதலை இயக்கத்திடமும் இத்தகைய வலிமை கிடையாது.

புலிகளை நசுக்கிவிடப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அவர்களால் அது முடியாது என்றே நான் நம்புகிறேன். இந்தப் பிரச்சனைக்கு புலிகளே மூல காரணம் என்று இதைப்பற்றி நன்கு அறி யாதவர்கள் நினைக்கிறார்கள். அது தவறு.

இந்தப் பிரச்சனைக்கு மூல காரணம் சிங்கள பெளத்த ஏகாதிபத்திய வாதிகளே. இவர்கள் முன்வைக்கும் தீர்வு-கிபீர் விமானங்களும், பல்குழல் பீரங்கிகளும் இன ஒழிப்பும்தான். அவர்களுடைய கனவு இரத்தத்தில் ஊறிய ஒரு சிங்கக் கொடியினால் சுற்றப் பட்ட பெளத்த சிங்கள இலச்சினையைக் கொண்ட இலங்கையாகும். ஆனால் இதனிலும் பார்க்க ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும். அது ஒரு பிரிவுபட்ட நாடாக இருந்தாலும் கூட.

ஒன்றை மட்டும் நான் நிச்சயமாக நம்புகிறேன். எதை அரசாங்கம் நசித் தாலும், இந்த இனத்துவேசங்கொண்ட, கொலைவெறி கொண்ட சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டி நிற்கும் தமிழர்களின் விடுதலை வேட்கையை அவர்களால் ஒருபோதும் நசித்துவிட முடியாது.

ஆனால் இந்த விடுதலை வேட்கைக்கு எதிராக அரசாங்கம் உபயோகிக்கும் ஆயுதம் அழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் மட்டுமே. இதைத் தடுத்து நிறுத்தும் வலிமை எம்மிடம் இல்லை. ஆனால் இதை எதிர்த்துப் போராட வேண்டியது எமது தலையாய கடன் ஆகும்.

தமிழ் மக்களடைய மனநிலை இன்னும் சுதந்தரம் - பெறுவதற்கு முன்பிருந்த நிலையிலேயே உள்ளது. இது இன்றைய நிலைப்பாடுகளை கணக்கி லெடுத்து ஒரு தனி நாட்டிற்கான மனநிலையாக மாற்றப்படல் வேண்டும். இதைவிட வேறு வழி கிடையாது.

இது நாட்டைப் பிரித்து நாட்டின் அபிவிருத்தியைப் பாதிக்கும் நோக்க மல்ல. பிரிந்த நாடுகள் தனித்தனியே அபிவிருத்தி செய்யும் நோக்கம் ஆகும். இந்த மனநிலையைப் பெற்றபின் எல்லோரும் ஒன்று சேர்ந்து அதற்காகப் போராட வேண்டும். போராட்டத்தில் பங்கு பெறவேண்டும்.

இதற்கு ஓரளவு தியாக மனப் பான்மை, பெருந்தன்மை, பொறுப் புணர்ச்சி வியர்வை சிந்துதல் தேவைப் படும். இதன் பலன் நாம் எல்லோரும் பெருமை கொள்ளக்கூடிய ஒரு நாட்டின் உதயமாக இருக்கும்.

சிங்கள அரசாங்கத்தின் உண்மைக் குப் புறம்பான பரப்புரைகள் திட்டமிட்ட வகையில் மிகுந்த பணச்செலவில் சிறந்த முறையில் கையாளப்படுகிறது. தமிழர் தரப்பில் தேவையானதெல்லாம் பலம் வாய்ந்த, முறையாக ஒழுங்கு செய்யப் பட்ட பிரச்சாரமேயாகும்.

இது சிங்கள அரசாங்கங்கள் கடந்த 50 வருடங்களாக நடந்து கொண்ட விதத்தையும், தமிழர்களுக்கு எந்த விதமான நியாயமான தீர்வையும் வழங்கும் யோசனை இல்லையென்பதை யும் உலக அரங்கின் முன் வைத்தல் ஆகும்.

சிங்கள மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று நான் இங்கு குறிப்பிடப்போவதில்லை. ஆனால் கூடிய விரைவில் அவர்களுக்கு உண்மை நிலையை விளக்கி ஒரு குறுவட்டை வெளியிட இருக்கிறேன். தென் இலங்கையில் இந்தப் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதில் ஆர்வமுள்ள சில குழுக்கள் உள்ளன. அவற்றிற்கு ஆதரவு அளிப்பது அவசியமானது.

கடைசித் தீர்வு என்ன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கடந்த நூறு வருடகாலத்தில் எந்த விடுதலை இயக்கமும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை. இலங்கை மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கமுடியாது.

ஜெனீவாவில் ஐ.நா. அலுவலகத் தின் முன்றல் அங்கத்துவ நாடுகளின் கொடிகளின் வரிசையின் எல்லையில் சில வெற்றிடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஈழத்தின் கொடிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது."

அவரது கருத்தின் சுருககம் இதுதான். இது போன்ற தமிழருக்காக, மறுக்கப்பட்ட தமிழரின் உரிமைகளுக்காக, நிகழ்த்தப்படும மனித உரிமை மீறல்களுக் காக குரல் கொடுக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில சிங்களச் சகோதரர் களை நாம் சரியான வகையில் புரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் தவறி விட்டோமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.

- இரகு.

-தென் செய்தி

டாக்டா பிரயன் செனிவிரத்தின, அவர்களைப் பற்றித் தெரியாத தமிழர் இருக்கமாட்டார்கள். இவரை சிங்களவர் ஒரு சங்கரியாக டக்ளஸாக எண்ணமாட்டார்களா?

அப்படி நினைப்பதற்கு தமிழர்கள் பதவி பணம் கொடுத்தா அவரை மயக்கி வைத்திருக்கிறார்கள்? அவர் தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்ற அடிப்படையில் ஒரு சிங்களவராக குரல் கொடுக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய பிரயன் செனவிரத்தினா அவர்கள் பண்டார நாயக்காவுக்கு மிக நெருங்கிய உறவினராவர்.

ஆம் அவர் பண்டாரநாயக்கா குடும்பத்தினர்தான். தமிழர் ஏன் போராட்டம் நடத்துகிறர்கள் என்பதைவிட இலங்கையில் என்ன நடக்க வேண்டும் என்ற தொனியில்தான் அவரது பேச்சினை எழுத்துக்களை அவதானிப்பவர்களுக்குப் புரியும். அவரது மேடைநிகழ்வுகளுக்குச் சென்றுள்ளேன். தமிழரின் இறுதித் தீர்வு சம்பந்தமான சில கேள்விகளுக்கு விடை நேரடியாகக் கொடுக்காமல் சறுக்கலான பதில்களைக் கொடுத்தார்.

தமிழர் சார்பாக அவர் பேசுவதில்லை. இலங்கை எனது நாடு என்ற அடிப்படையில்தான் பேச்சுக்கள் அமைந்திருக்கும். மிக அண்மையிலும் அவரது பேச்சினைக் கேட்கசந்தர்ப்பம் கிடைத்தது. அதில் முக்கியமாக இடம்பெற்ற விடயம், சர்வதேசங்கள் எதற்காக இலங்கையை இவ்வாறு ஆட்டிவைக்கின்றது என்ற தொனியில்தான் அமைந்தது. அதற்கு அவர் கூறிய காரணம் மாறிவரும் சிங்கள ஆட்சியாளரின் போக்கு. தமது தேவைகளுக்காக நாட்டைக் கெடுக்கின்றார்கள் என்பதுதான்.

-1- தமிழரின் போராட்டம் நியாயமானது அவர்கள் அடக்குமுறையை எதிர்கொள்கிறார்கள் என்பது முதல் விடையம்.

-2- அந்த அடக்குமுறையின் தன்மை-வீரியம் என்பது அடுத்த விடையம். தனிய வேலை-கல்வி வாய்ப்புகளின் சம உரிமை இல்லை என்பதா அல்லது திட்டமிட்ட இன அழிப்பு குடியேற்றம் சுத்திகரிப்பு அளவிற்கு நடக்கிறதா என்பது.

-3- இந்த அடக்கு முறைக்கு (இறுதித்) தீர்வு என்ன என்பது அடுத்த விடையம்.

-4- அந்த தீர்வுக்கான (போராட்ட) வழி முறை(கள்) என்ன என்பது அடுத்த விடையம்.

-5- இதற்காக தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்துவது யார் தலமை தாங்குவது யார் என்பது இறுதி விடையம்.

இந்த 5 விடயங்களிலும் தமிழருக்குள்ளேயே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரயன் செனவிரத்தினவோ எரிக் சொல்கைமோ யுசி அக்காசியோ றொபோட் ஓபிளேக்கோ தமிழருக்காக குரல் கொடுக்கவில்லை இறுதித் தீர்வு விடையத்தில் எங்கடை நிலைப்பாட்டை எடுக்கவில்லை மழுப்பலாக பதில் தாறார் சுழுக்கலாக பதில் தாறார் எண்டது ஒரு பெரிய கண்டு பிடிப்பில்லை.

தமிழரே தங்கடை சொந்த அனுபவங்கள் (கோபதாபம் பழிவாங்கல்), சொந்த நலன்கள், நம்பிக்கைகளை உள்வாங்கி மாத்திரமல்ல பல சந்தர்ப்பங்களின் முன்னுரிமை கொடுத்தும் தான் எமது போராட்டத்தின் ஒவ்வொரு விடையங்கள் விபரங்கள் பற்றி தமது நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் இயங்கவும் முற்படுகிறார்கள்.

இந்த நிலையில் பிறையன் செனவிரத்தின தமிழர் சார்பாக பேசாது இலங்கை எனது நாடு என்று தான் பேசுகிறார் சிறீலங்காருக்காவை சர்வதேசம் ஆட்டி வைப்பதற்கு காரணம் சிங்கள அரசுகளின் தவறு என்ற தொனிப்படத்தான் பேசுகிறார் என்பது ஒரு பெரிய விடையம் அல்லவே.

நாம் தமிழர்கள் என்ற இன தேச அடையாளத்தில் நம்பிக்கை மதிப்புக் கொண்ட ஒருவரால் தான் உண்மையாக தமிழர் சார்பாக பேச முடியும் செயற்பட முடியும். வேறு யாரிடமும் எதிர்பார்ப்பது எமது தவறு. ஒவ்வொரு தரப்பிற்கும் அவரவர் நிலைப்பாடுகள் நம்பிக்கையின் அடிப்படையில் நலன்கள் உண்டு. அவற்றில் சிலவோடு எமக்கு ஒற்றுமைகள் இருக்கும் எல்லாவற்றோடும் அல்ல! ஒற்றுமைகளை இனங்கண்டு அந்த வரையறையுள்ள எமது நலன்களை கூட்டாக முன்னகரத்த முடியுமா என்று தான் பார்க்க வேண்டுமே அல்ல அவர் எங்களோடு ஏன் உடன்கட்டை ஏறாவறார் இல்லை எண்ட அங்கலாய்ப்பு அல்ல.

தமிழருக்கு தமக்காக யாரோ குரல் கொடுக்கிறார்கள் உழைக்கிறார்களாம் என்றால் கோடி சந்தோசம். ஏன் என்றால் அப்படி ஒருவரும் சும்மா செய்ய மாட்டார்கள் என்ற அடிப்படை பகுத்தறிவு இல்லாத மந்தைக் கூட்டம். மந்தைக் கூட்டம் அவர் குரல் கொடுக்கிறாராம் உழைக்கிறாராம் எண்டு கவிதை-தேவாரம் படி காவடி ஆடி அவதாரம் ஆட்டுக் குட்டி எண்டு கோயில் கட்டி கும்பாவிசேகம் நடத்தும். பிறகு உண்மை தெரிஞ்சவுட முற்று முழுக்க எதிரயாக்கி சீவியகாலம் முழுக்க வம்பு வழப்பினம். இந்த 2 துருவ நிலைப்பாடுகளிற்கும் இடையில் ஒரு யதார்த்தமான தந்திரமான நலன்களின் அடிப்படையில் இயங்கும் நடை முறை உலகு இருக்கு எண்டதை எப்ப உணரப் போகினம்? அதை விளங்குவது அதன் படி இயங்க முனைவு எல்லாம் கவிதை எழுதி கோயில் கட்டி கூத்தாடுவது அல்லது பரம எதிரியாக்கி இரைமீட்டு பொழுது போக்குவதை விட சிக்கலானது என்பது தான் காரணமோ?

குறுகர்!

சொன்னதெல்லாம் சரி ஆனாலும் அந்த கடைசி பந்தீல கொஞ்சம் சொதப்பீட்டீங்க....

தமிழ் மக்கள் எப்பவும் யாரையும் எதிபார்த்து இருப்பார்கள் என்பது ஏதோ உண்மைதான் ஆனாலும் மந்தைகள் என்ற கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிரேன்...

எங்களுக்கு ஆதரவாகக் கதைத்தால் அவரைத் தலையில் தூக்கி வைப்பதும், எதிராகக் கதைப்பவர்களை கண்டபடி தூற்றுவதும் தமிழரின் பாரம்பரியமாகும். இதற்கான ஆதாரங்கள் எமது பண்டைய கால நூல்களில்கூட கூறப்பட்டுள்ளது.

செனிவிரட்ன எமது போராட்டத்தை ஆதரிப்பது பாராட்டுக்குரியதுதான். எமது போராட்டம் அரசியல்மயப்படுத்தப்பட்டு விட்டது. நாமும் உலகத்தின் போக்கோடு போகவேண்டிய கட்டாயம் எமக்குள்ளது. ஆகவே, நாமும் அரசியல்ரீதியாக நடந்து கொள்ளவேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஒரு கருவிதான் செனிவிரட்னவே தவிர, அவர் உணர்வு ரீதியாக எமக்கு அதரவளிப்பவர் அல்ல.

குறுக்காரை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன்....

மந்தைகள் தறிகெட்டுதிரிவதுக்கு காரணம் ஆயர்கள் இல்லாமையே!

நன்றி குறுக்கண்ணா,

உங்களுடைய கருத்துக்களை இது போன்று நல்ல முறையில் இப்படியே எழுதலாமே!

குறுக்கரை ஒரு வழி பண்ணிவிட்டோம் என்கிறீர்கள்.?

Edited by Iraivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka: Peace and justice for Tamils needs international action

Sunday, 17 February 2008

Margaret Gleeson, Brisbane

A packed public meeting at Brisbane’s Activist Centre on February 6 heard Brian Senewiratne, a Sinhalese consultant physician in Brisbane, deliver a passionate and informative presentation on the long struggle of Sri Lanka’s Tamil-speaking minority against persecution by that country’s Sinhalese-dominated government.

Senewiratne, who comes from the family that has produced three of Sri Lanka’s prime ministers, has been involved for more four decades - since 1948 - in exposing the human-rights abuses perpetrated against Tamils by the Sri Lanka government and Sinhalese militias. He has often been the target of abuse and threats by anti-Tamil elements, both in Australia and overseas. Books he has had published in Australia on the Tamil struggle have been banned in Sri Lanka where he has been labelled a "terrorist".

Senewiratne told the meeting that, in spite of the 2002 cease- fire agreement between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam - the armed liberation movement fighting for national self-determination for the Tamil-speaking people who make up a majority of the inhabitants island’s northern and eastern province - massacres of Tamils have continued.

The Sri Lankan government has launched a number of military offensives against the LTTE since late 2005, and on January 3 it formally announced that it had decided to abandon the cease-fire. Film footage screened at the meeting showed that women and children where the main victims of the Sri Lankan military’s operations against the Tamil Tigers.

The Sri Lankan army, with 175,000 troops, has 55,000 troops occupying the peninsula around Jaffna, the capital of the northern province, held by the Tamil Tigers in 1990-95.

Senewiratne said the Sri Lankan government’s 25-year "genocidal war" against the Tamils has resulted in 75,000 civilians being killed and 400,000 made refugees. Since the commencement of the "cease-fire" in February 2002, 7000 people had been killed - including 1200 children - up to November 2005. The Sri Lankan air force had bombed 52 schools, 1607 Hindu temples, 32 hospitals and the public library of Jaffna, the repository of much Tamil cultural history.

The fertile area around Jaffna has been quarantined by the declaration of a "high security zone". The only highway linking Jaffna to the rest of the island has been blocked since August 11, 2006. As a result, the city’s 600,000-strong population is facing starvation.

"Ethnic chauvinism is not the issue - the issue is the Indian Ocean", Senewiratne told the meeting, arguing that strategic importance of Sri Lanka’s position in relation to the shipment of oil from the Persian Gulf through the Indian Ocean

to the energy markets of east Asia means that Washington wants the "security" of Sri Lanka settled through the crushing of the Tamil Tigers.

Senewiratne argued there were two struggles being carried out simultaneously - the Tamil liberation struggle and the struggle against capitalism.

The war against the Tamil people is also big business. Expenditure by the Sri Lankan government had doubled since 1977, with a large part of this increasing spending going to arms purchases from the China, India, Israel and the US.

International aid money provided to Colombo enables to it divert other funds to war spending.

Senewiratne warned of a slide to dictatorship in Colombo, with journalists and opposition MPs being assassinated by suspected government-backed death squads. Earlier this year, Sri Lankan defence secretary Gotabaya Rajapakse advocated harsh punishments for critical reporting on military expenditure.

"I think that there is no need to report anything on the military", Rajapakse told the January 27 Sunday Lankadeepa. "People do not want to know how many and what kind of arms we acquired. That is not media freedom. I say without fear that if I have the power I will not allow any of these things to be written... we need to bring in laws that stipulate harsh punishments for such reporting."

Senewiratne said there were three possible ways to "resolve" the conflict in Sri Lanka - no real change (with only token development of the poorer Tamil areas), creating a federation with an autonomous Tamil state, or two separate states, one Tamil, the other Sinhalese.

The first option is no solution, he argued, and the time has long gone for the second possibility. He said it will take pressure from the "international community" to achieve the only realistic solution, an independent state of Tamil Eelam.

He called for an international campaign to demand an international human rights mission to investigate human rights in Sri Lanka; the restarring of peace talks between Colombo and the LTTE and international sanctions against the Sri Lankan government. There was a lot of support at the meeting for such a campaign, in particular a focus during tours by the Sri Lankan cricket team.

Senewiratne, an active member of Socialist Alliance, concluded the meeting by urging Tamils in the audience who were not already members to join the Socialist Alliance and work for an alternative to the capitalist system, and for the liberation of all oppressed peoples.

From: Comment & Analysis, Green Left Weekly issue #740 20 February 2008.

http://www.greenleft.org.au/2008/740/38320

Edited by இன்னிசை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.