Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு எதிராக ஜேவி.பி போர்க்கொடி

Featured Replies

இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிககை எடுக்த் தூண்டுவதற்குமாக இன்று முதல் பெரும் பிரசாரப் போர் ஒன்றை மேற் கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது என கூறப்படுகின்றது.

இனப்பிரச்சினைத் தீர்விற்காகன அரசியல் யோசனையாக அரசைமைப்பின் 13 வது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன் வைத்தமைக்கு இந்தியவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக்குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் இந்தியாவின் புதிய நடவடிகககைளினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான ஜே.வி.வியின் முதலாவது பேரணி இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது குறித்துத்து தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கண்டி, காலி போன்ற நகரங்களிலும் இவ்வாறான பேரணிகளை நடத்துவதற்கும் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் வேண்டுகோளுக்கும் அழுத்தத்திற்கும் இணங்கவே இலங்கை அரசு அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் முடிவை திடீரேன எடுத்தது என ஜே.வி.பி கருதுகிறது.

13வது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரங்களை வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்த்லாக அமையாலம் என ஜே.வி.பி அச்சம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிற்கு இடைக்கால நிர்வாக சபைகளை வழங்குவதையும் அக்கட்சி எதிர்க்கிறது.

கட்சியின் மத்தி குழுக் கூட்டத்தில் இவ்விடயங்கள் குறித்து முக்கிமாக ஆராயப்பட்டது.

இலங்கையில் தனது பிடியை இறுக்கிக் கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே 13 வது திருத்தத்திற்கான அழுத்தத்தை இந்தியா கொடுப்பதாக ஜே.வி.பி யின் மத்தி குழுக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

திருகோணமலையில் எரிபொருள் சேமிப்புக் குதங்களை ஆக்கிரமித்துள்ள இந்தியா, இப்போது அங்கு அனல் மின்சார உற்பத்;தி நிலையம் என்ற பெயரில் காலுன்ற முயற்சிப்பதாகவும் ஜே.வி.பி யின் மத்தியக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதே வேளை, அக்கூட்டத்தில் மஹிந்த அரசின் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கபட்டதாக அறியப்படுகிறது.

இதற்கான முதாலவது கூட்டம் எதிர்வரும் 23ம் திகதி இடம் பெறவுள்ளது.

அரசு இந்த யுத்தத்தையும் அதன் பெறுபேறுகளையும் அரசியல் இலாபம் தேடுவதற்காகப் பயன்படுத்துகிறது என ஜே.வி.பி தலைவர் சோமவன்ஸா பொதுக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அரச செலவில் ஆடம்பரக் கொண்டாட்டங்கள் இடம் பெறுகின்ற அதே வேளை, பொதுமக்களும் படையினரும் எதிர்கொள்ளும் துயரங்கள் அலட்சிம் செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்கள் பொருளாதார நெருக்கடிகளை தாங்கிக் கொள்கின்ற அதே வேளை, அரசு மக்களினதும் இராணுவத்தினரினதும் துயரங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபமீட்டும் நடவடிக்ககைளில் ஈடுபட்டள்ளதாக சோமவன்ஸா அங்கு கடுமைகயாகக் குற்றம் சுமத்தினார்.

அரசுக்கு எதிரான ஜே.வி.பியின் தற்போதைய பிரசார நடவடிக்கைகளை ஏப்பிரல் 23ம் திகதி வரை முன்னெடுக்கவும் தீர்மானிக்கபட்டுள்ளது.

ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தியாவிற்கும் அரசுக்கும் எதிராக இரட்டைப் பிரசாரத்;தை ஒரே சமயத்தில் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நன்றி சுடர் ஒளி

ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தியாவிற்கும் அரசுக்கும் எதிராக இரட்டைப் பிரசாரத்;தை ஒரே சமயத்தில் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆகா... ஆரம்பிச்சிட்டாங்கையா மறுபடியும்!

சுடரொளியும் இப்படியான செய்திகளுக்கு சுடச்சுட வெளியிட்டு, ஏதோ தமிழ்மக்களை போதையில் வைத்திருக்க ஜே.வி.பியுடன் இணைந்து செயலாற்றுகின்றது!

உந்த செய்தியை போட்டவர்கள் இதையும் இணைதார்களா? அல்லது JVP யின் மத்தியகளு இதை சொன்னதா?

JVP இன்ர அடுத்தகட்டம் என்னவெண்டு யோசிக்காதேங்கோ...

இதைதான் சொல்லுறாங்கள்

அரசுக்கு எதிரான ஜே.வி.பியின் தற்போதைய பிரசார நடவடிக்கைகளை ஏப்பிரல் 23ம் திகதி வரை முன்னெடுக்கவும் தீர்மானிக்கபட்டுள்ளது.

இதன் அர்த்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தலையீட்டால் பேராபத்து பெரும் பிரசாரக் களத்தில் ஜே.வி.பி. இன்று தொடக்கம் நாடளாவிய ரீதியில்

இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவடிக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கிறது ஜே.வி.பி. அது தொடர்பாக நாட்டு மக்களை எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதற்குமாக இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் பெரும் பிரசாரக் களத்தில் இறங்குவதற்கு அக்கட்சி தீர்மானித்திருப்பதாக அறியவருகிறது.

இனப்பிரச்சினைத் தீர்விற்கான அரசியல் யோசனையாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன்வைத்தமைக்கு இந்தியாவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக் குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி., புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.

அதன்படி

இலங்கையில், இந்தியாவின் புதிய நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான ஜே.வி.பியின் முதலாவது பேரணி இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது குறித்துத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கண்டி, காலி போன்ற நகரங்களிலும் இவ்வாறான பேரணிகளை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

இடைக்கால நிர்வாக

சபைக்கும் எதிர்ப்பு

இந்தியாவின் வேண்டுகோளுக்கும் அழுத்தத்திற்கும் இணங்கவே இலங்கை அரசு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் முடிவைத் திடீரென எடுத்தது என ஜே.வி.பி. கருதுகின்றது.

13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரங்களை வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என ஜே.வி.பி. அச்சம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிற்கு இடைக்கால நிர்வாக சபைகளை வழங்குவதையும் அக்கட்சி எதிர்க்கின்றது.

கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இவ்விடயங்கள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.

இலங்கையில் தனது பிடியை இறுக்கிக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே 13 ஆவது திருத்தத்திற்கான அழுத்தத்தை இந்தியா கொடுப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருகோணமலையில் எரிபொருள் சேமிப்புக் குதங்களை ஆக்கிரமித்துள்ள இந்தியா, இப்போது அங்கு அனல் மின்சார உற்பத்தி நிலையம் என்ற பெயரில் காலூன்ற முயற்சிப்பதாகவும் ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதாம்.

இதேவேளை, அக் கூட்டத்தில் மஹிந்த அரசின் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் நாடளாவிய பிரசாரத்தை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இதற்கான முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

யுத்த வெற்றி அரசியல்

இலாபம் தேடுவதற்கு

அரசு இந்த யுத்தத்தையும் அதன் பெறுபேறுகளையும் அரசியல் இலாபம் தேடுவதற்காகப் பயன்படுத்துகிறது என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அரச செலவில் ஆடம்பரக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்ற அதேவேளை, பொதுமக்களும் படையினரும் எதிர்கொள்ளும் துயரங்கள் அலட்சியம் செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மக்கள் பொருளாதார நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்கின்ற அதேவேளை, அரசு மக்களினதும் இராணுவத்தினரினதும் துயரங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபமீட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சோமவன்ஸ அங்கு கடுமையாகக் குற்றம் சுமத்தினார்.

அரசுக்கு எதிரான ஜே.வி.பியின் தற்போதைய பிரசார நடவடிக்கைகளை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தியாவிற்கும் அரசுக்கும் எதிராக இரட்டைப் பிரசாரத்தை ஒரே சமயத்தில் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உள்விவகாரத்தில் தொடர்ந்தும் தலையிட்டால் இந்தியப் பொருட்கள் பகிஷ்கரிக்கப்படும்

[21 - February - 2008]

*ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை

இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தொடர்ந்தும் தலையிட்டால் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுக்கப்படுமென ஜே.வி.பி. எச்சரித்துள்ளது.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த இந்தியா தவறுமானால் இந்திய உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு ஜே.வி.பி. பொதுமக்களைக் கோரும் என்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட- கிழக்குப் பகுதிகளில் அதிகாரப் பரவலாக்கல் பொதியை அமுல்படுத்துமாறு மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை இந்தியா பலவந்தப்படுத்துவதாக அமரசிங்க தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை- இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தமானது இலங்கையர் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டதொன்று என்பது ஜே.வி.பி.யின் நிலைப்பாடாகும்.

பாராளுமன்றத்தில் 38 எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி.யின் அழைப்பை இலேசானதாக எடுத்துக் கொள்ளும் நிலைமையில் அரசாங்கம் இல்லை. அரசு நீடித்து நிலைத்திருப்பதற்கு ஜே.வி.பி. யின் ஆதரவு தேவையாக உள்ளது.

இந்தியப் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு ஜே.வி.பி. கோரிக்கை விடுத்தால் அந்தக் கோரிக்கை செவிசாய்க்கப்பட்டால் அது இந்தியாவுக்குப் பாரிய இழப்பாக அமையுமென ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை சுட்டிக்காட்டுகிறது.

வருடாந்தம் இலங்கைக்கு 1.8 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. தெற்காசியாவில் இலங்கையானது இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. இலங்கையில் முதலீடுகளை அதிகளவு மேற்கொண்ட நான்காவது வெளிநாடாக இந்தியா உள்ளது.

500 மில்லியன் டொலர்களை இந்தியா இலங்கையில் முதலீடு செய்துள்ளது. அத்துடன் கடந்த நான்கு வருடங்களில் 281 மில்லியன் டொலர்களை புதுடில்லி இலங்கைக்கு கடன் அடிப்படையில் வழங்கியுள்ளது.

அதேசமயம் இந்தியா பதில் நடவடிக்கையை மேற்கொண்டால் இலங்கைக்கும் அதிகளவில் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் 2000 இல் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பின்னர் இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி அதிகரித்து 500 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் 1987, 1988 காலப்பகுதியில் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிப்பதற்கு ஜே.வி.பி. முயற்சித்தது. இலங்கை- இந்திய உடன்படிக்கை மற்றும் 13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஜே.வி.பி. இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

"இந்திய நாய்கள் வீட்டுக்குப் போக வேண்டும்" என்பதும் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுலோகங்களில் ஒன்றாகும். இலங்கையின் அன்றாட உணவுப் பொருட்களில் ஒன்றான பம்பாய் வெங்காயத்தை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அச்சமயம் ஜே.வி.பி. மக்களைக் கோரியிருந்தது.

தற்போதைய ஆளும் கட்சியான ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1987 காலப்பகுதியில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. இதுவும் காந்தி வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டங்களையும் அச்சமயம் நடத்தியது.

ஆரம்பத்திலேயே மக்கள் நிராகரித்தவற்றை இப்போது ராஜபக்ஷவின் அரசாங்கம் அமுல்படுத்த முயற்சிப்பதாக அமரசிங்க கூறியுள்ளார்.

பிரிவினைவாதத்திற்கு எதிராக எப்போதுமே ஜே.வி.பி. பேசி வருகிறது. அத்துடன் அதிகாரப் பகிர்வுக்கு எப்போதுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. நாங்கள் ஒற்றையாட்சியையே உறுதியாக வலியுறுத்துகின்றோம் என்று சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார்.

புலிகளுக்கு எதிரான யுத்தம் முக்கியமான கட்டத்தில் இருக்கையில் வடக்கு- கிழக்கிற்கான எந்தவொரு அதிகாரப் பகிர்வும் தவறான விடயம் என்று ஜே.வி.பி. கூறுகிறது.

எவ்வாறாயினும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரத் தீர்வுப் பொதியை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இந்த விடயம் ஏற்கனவே கருத்தொருமைப்பாடு கண்டதொன்று என்றும் நாட்டின் சட்டத்தின் ஓரங்கமாக ஏற்கனவே பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதொன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளில் ஜே.வி.பி. உட்பட சகல கட்சிகளும் பங்குபற்றியுள்ளன. இப்போது அதனை முழுமையாக அமுல்படுத்தவே தான் முயற்சிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆனால், 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு புதுடில்லி அழுத்தம் கொடுத்து வருவதாக ஜே.வி.பி.யும் ஊடகங்களும் கூறுகின்றன.

இது தொடர்பான இந்தியாவின் பங்களிப்பானது இலங்கை மீது தொடரும் இந்திய மேலாதிக்கமென அவர்கள் கருதுகின்றனர். தமது நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் கூறுவது ஜனாதிபதியின் 13 ஆவது திருத்த அமுலாக்க யோசனையை இந்தியா அசாதாரணமான முறையில் வரவேற்றிருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை தொடர்பான ஏனைய பல விடயங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து வரும் இந்தியா 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் யோசனைக்கு உடனடியாகவே வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தது.

thinakural.com

  • கருத்துக்கள உறவுகள்

ஏனிந்த நாடகம் ? இலங்கை கேட்பதற்கும் மேலாக இந்தியா உதவி செய்து வருவது இவர்களுக்குத் தெரியாதா என்ன ?

இலங்கை விவகாரத்தில் தலையிடுகிறது என்று அழும் இவர்கள் ஏதோ தமிழர்களுக்குச் சார்பாக தலையிடுவதுமாதிரித்தான் கதைவிடுகிறார்கள்.

இப்போது வேடிக்கை என்னவென்றால் தமிழர்களும் இந்தியா தலையிடக்கூடாது என்கிறார்கள், சிங்களவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். அப்படியானால் இந்தியா யார் சார்பாகத்தான் தலியிடுகிறதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் ஆரிய இந்து, இந்தி, இந்தியா என்ற பரந்த பாரதக் கோட்பாட்டுக்காகவே தலையை ஓட்டுகிறது. இலங்கையில் சீதை குளித்த மற்றும் கழிவகற்றிய இடங்களை அறிய சமஸ்கிரத பண்டிதக்கூட்டம் விரைவில் வரப்போகிற செய்தியும் வந்ததல்லவா?

- இவர்கள் சீதை கழிவகற்றி, குளித்த இடத்தைக் கண்டுபிடித்து(!) புனிதத் தீர்த்தம் வழங்கும் இடமாகப் பிரகடனப்படுத்தினாலும் ஆச்சரியப்பட என்னதான் இருக்கு?

- குரங்குகளும் அணிலுமாகப் போட்ட பாலத்தின் விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் மதிகிறங்கியுள்ள கூட்டத்தால் என்னதான் செய்ய முடியும்?

அரோகரா அரோகரா......

:wub:

அடியடா சக்கை எண்டானாம் அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி. முன்னெடுக்கும் இந்திய எதிர்ப்புப் போர்....

[23 - February - 2008]

இந்தியாவுக்கு எதிரான புதிய போராட்டம் ஒன்றை ஜே.வி.பி. ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் அதிகரித்துவரும் இந்தியத் தலையீடு உருவாக்கியிருக்கும் ஆபத்தான நிலைமைகளையிட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கத்துடனேயே இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது. அண்மைக் காலம் வரையில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான நட்புறவைப் பேணிவந்த ஜே.வி.பி. திடீரென இந்தியாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கக் காரணம் என்ன என்பதும் இதன் மூலம் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் எத்தகையவை என்பதும் இன்று கேள்விக்குரிய விடயங்களாக இருக்கின்றன.

இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி. திடீரென போர்க்கொடி தூக்கியிருப்பதற்கு இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று 13 ஆவது திருத்தத்துக்கமைய இனநெருக்கடிக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என இந்தியாவே கொழும்புக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக ஜே.வி.பி. கருதுகின்றது. வடக்கு, கிழக்குக்கு மாகாண சபைகளை அமைத்துக்கொள்வது பிரிவினைக்கான முதலாவது படியென்றே ஜே.வி.பி. கருதுகின்றது. இரண்டாவதாக தற்போதைய சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இலங்கையில் இந்தியா மேற்கொண்டுவரும் பாரியளவிலான முதலீடுகள், வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதாக அமைந்துவிடும் என ஜே.வி.பி. கருதுகின்றது. குறிப்பாக திருமலைப் பகுதியில் தனது கேந்திர நலன்களை நோக்கமாகக் கொண்டு இந்தியா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அந்த துறைமுக நகரில் இந்தியாவின் செல்வாக்கை மேலோங்கச் செய்திருக்கின்றது.

ஜே.வி.பி. இந்திய எதிர்ப்புக் கோஷத்தை திடீரென முன்வைத்திருப்பதற்கு இந்த இரண்டும்தான் காரணமாகக் கூறப்படுகின்றது. அநுராதபுரத்தில் தனது முதலாவது `இந்திய எதிர்ப்பு' பேரணியை நடத்திய ஜே.வி.பி. காலி, கண்டி என தனது போராட்டத்தை ஏனைய முக்கிய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கத் தீர்மானித்திருக்கின்றது. ஆக, ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் இன்றைய காலகட்டத்தில் அவர்களுடைய அரசியல் இருப்பைப் பாதுகாப்பதற்கு ஏதோ ஒரு வகையில் இந்திய எதிர்ப்புவாதத்தை கைகளில் தூக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அதற்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் போராட்டம் எந்தளவுக்கு தொடரும் என்பதும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதும்தான் இன்று ஆராயப்பட வேண்டிய விடயங்கள்!

அண்மைக் காலங்களில் இந்தியாவுடனான நட்புறவை ஜே.வி.பி. வலுப்படுத்திக் கொண்டிருந்த போதிலும் கூட, " இந்திய எதிர்ப்பு வாதம்" ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகவே இருந்துள்ளது. 1971 மற்றும் 1989 காலப் பகுதியில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு ஆயுதப் புரட்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்டிருந்தது. இந்த இரண்டு புரட்சிகளிலுமே ஜே.வி.பி. தோல்வியடைந்திருந்தாலும் இந்திய எதிர்ப்புவாதம் என்பது இந்தப் புரட்சிக்கான அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாக இருந்துள்ளது. இந்தப் புரட்சிகளுக்கான தயாரிப்புக்களில் ஈடுபட்ட ஜே.வி.பி., அதற்காக இளைஞர், யுவதிகளுக்கு இரகசிய வகுப்புக்களை நடத்தியது. இந்த இரகசிய வகுப்புகளில் ஐந்து பாடங்கள் போதிக்கப்பட்டன. இந்த ஐந்து பாடங்களில் ஒன்றாக `இந்திய விஸ்தரிப்பு வாதம்' என்ற தலைப்பில் விரிவுரைகள் நடத்தப்பட்டன.

இலங்கையை ஆக்கிரமிப்பதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிரதான அம்சம் எனவும் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவுமே இந்த விரிவுரைகளின்போது முக்கியமாக ஆராயப்பட்டது. இந்தியா தொடர்பிலான ஒரு அச்சத்தை சிங்களவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. 1987 இந்திய- இலங்கை உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்தியப்படை வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிலை கொண்டபோது, இந்தியா தொடர்பிலான அச்சத்தைப் பயன்படுத்தியே தமது போராட்டத்தை ஜே.வி.பி. துரிதப்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகள் தொடர்பிலான தமது அணுகுமுறையை 1990 களின் பிற்பகுதியில் இந்தியா மாற்றிக்கொண்டபோது ஜே.வி.பி.யும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டது. ஆக, இன நெருக்கடி தொடர்பிலான இந்தியாவின் அணுகுமுறைதான் இந்தியா தொடர்பிலான ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது எனக்கூறலாம். இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான மத்தியஸ்த முயற்சிகளில் நோர்வே இறங்கிய போது அதற்கெதிரான நிலைப்பாட்டை எடுத்த ஜே.வி.பி. இந்தியா மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்குத் தகுதிவாய்ந்ததெனத் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தமையால் அதன் மூலம் முன்வைக்கப்படும் தீர்வு எதுவும் சிங்கள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதாகவே இருக்கும் என ஜே.வி.பி கருதியது இதற்கான காரணங்களிலொன்றாக இருக்கலாம். இருந்தபோதும் இப்போது 13 ஆவது திருத்தத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஜே.வி.பி கருதுவதுதான் அதன் போராட்டங்களுக்கு அடிப்படை. கேந்திர மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பாக இந்தியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஜே.வி.பி.யின் சீற்றத்துக்குக் காரணமல்ல என்பது உண்மை. அவ்வாறிருந்திருந்தால் திருமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிக்கப்பட்ட போதே ஜே.வி.பி. கொதித்தெழுந்திருக்க வேண்டும்.

ஆக, இதன் மூலம் ஜே.வி.பி. வெளிப்படுத்தும் செய்தி என்னவென்றால், புலிகளுக்கு எதிரான யுத்த முனைப்புகளுக்கு உதவிபுரியும் இந்தியா தன்னுடைய பணியை அத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும் எந்தவித திட்டங்களுக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடாது. அதே வேளையில், யுத்த முனைப்புகளுக்கு இந்தியா தாராளமாக உதவும் நிலையில் இந்தப் போராட்டத்தை ஜே.வி.பி. ஒரு எல்லைக்கு மேல்கொண்டு செல்லாது எனவும் நம்பலாம்.

ஆனால், 13 ஆவது திருத்த யோசனையை கிடப்பில் போடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தப் போராட்டம் உதவிபுரியலாம்!குறைந்த பட்ச அரசியல் தீர்வைக்ககூட தடைசெய்வதற்கான உபாயமாகவே இந்திய எதிர்ப்பு என்ற கோஷம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் தவிர்க்க முடியாமல் எழுகின்றது.

http://www.thinakkural.com/news/2008/2/23/...l_page46359.htm

இந்த மீன் குஞ்சுகள் கடித்தால் அந்த முதலைக்கு வலிக்கவாபோகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சீதை குளித்த இடம் தெரிந்தால் சிங்களவர்கள் விட்டு வைப்பார்களா என்ன ? டிக்கெட் வித்து ஒரு கண்காட்சியே நடத்தியிருப்பார்கள்.

சூராவளி, அடியடா சக்கை எண்டு எதைச் சொல்லுகிறீர்கள்? கிளேமோரோ எண்டு பயந்து போனன். எதுக்கும் கொண்டுபோய் சிங்களவன்ர இடமாப் பாத்து அடியுங்கோ, ஒண்டு ரெண்டு ஊர்காவல் படையாவது விழும்.

ரகு ! சீதை இவ்வளவு காலத்திற்கும் குளித்துக் கொண்டிருப்பாளா? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடிக்கிற மாதிரிக் கடியுங்கோ நான் அழுகிற மாதிரி அழுகிறன் எண்டு சொன்னதும் அந்த முதலைதானே , அப்புறமேன் வலிக்கப் போகுது ?!

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன், நீங்க வேற, அவள் இப்போதும் குளிக்கத் தேவையில்லை, கதையில அவள் குளித்த இடம் எண்டு சொன்னாலே போதும், நம்ம லொக்கு பண்டாவும், அப்புகாமியும் ஓடோடெண்டு ஓடி முன்வரிசையில நிப்பினம் டிக்கெட்டு வாங்க !

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி. முன்னெடுக்கும் இந்திய எதிர்ப்புப் போர்....

இந்தியாவுக்கு எதிரான புதிய போராட்டம் ஒன்றை ஜே.வி.பி. ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் அதிகரித்துவரும் இந்தியத் தலையீடு உருவாக்கியிருக்கும் ஆபத்தான நிலைமைகளையிட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கத்துடனேயே இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது.

அண்மைக் காலம் வரையில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான நட்புறவைப் பேணிவந்த ஜே.வி.பி. திடீரென இந்தியாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கக் காரணம் என்ன என்பதும் இதன் மூலம் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் எத்தகையவை என்பதும் இன்று கேள்விக்குரிய விடயங்களாக இருக்கின்றன.

இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி. திடீரென போர்க்கொடி தூக்கியிருப்பதற்கு இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று 13 ஆவது திருத்தத்துக்கமைய இனநெருக்கடிக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என இந்தியாவே கொழும்புக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக ஜே.வி.பி. கருதுகின்றது. வடக்கு, கிழக்குக்கு மாகாண சபைகளை அமைத்துக்கொள்வது பிரிவினைக்கான முதலாவது படியென்றே ஜே.வி.பி. கருதுகின்றது. இரண்டாவதாக தற்போதைய சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இலங்கையில் இந்தியா மேற்கொண்டுவரும் பாரியளவிலான முதலீடுகள், வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதாக அமைந்துவிடும் என ஜே.வி.பி. கருதுகின்றது. குறிப்பாக திருமலைப் பகுதியில் தனது கேந்திர நலன்களை நோக்கமாகக் கொண்டு இந்தியா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அந்த துறைமுக நகரில் இந்தியாவின் செல்வாக்கை மேலோங்கச் செய்திருக்கின்றது.

ஜே.வி.பி. இந்திய எதிர்ப்புக் கோஷத்தை திடீரென முன்வைத்திருப்பதற்கு இந்த இரண்டும்தான் காரணமாகக் கூறப்படுகின்றது. அநுராதபுரத்தில் தனது முதலாவது `இந்திய எதிர்ப்பு' பேரணியை நடத்திய ஜே.வி.பி. காலி, கண்டி என தனது போராட்டத்தை ஏனைய முக்கிய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கத் தீர்மானித்திருக்கின்றது. ஆக, ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் இன்றைய காலகட்டத்தில் அவர்களுடைய அரசியல் இருப்பைப் பாதுகாப்பதற்கு ஏதோ ஒரு வகையில் இந்திய எதிர்ப்புவாதத்தை கைகளில் தூக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அதற்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் போராட்டம் எந்தளவுக்கு தொடரும் என்பதும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதும்தான் இன்று ஆராயப்பட வேண்டிய விடயங்கள்!

அண்மைக் காலங்களில் இந்தியாவுடனான நட்புறவை ஜே.வி.பி. வலுப்படுத்திக் கொண்டிருந்த போதிலும் கூட, " இந்திய எதிர்ப்பு வாதம்" ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகவே இருந்துள்ளது. 1971 மற்றும் 1989 காலப் பகுதியில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு ஆயுதப் புரட்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்டிருந்தது. இந்த இரண்டு புரட்சிகளிலுமே ஜே.வி.பி. தோல்வியடைந்திருந்தாலும் இந்திய எதிர்ப்புவாதம் என்பது இந்தப் புரட்சிக்கான அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாக இருந்துள்ளது. இந்தப் புரட்சிகளுக்கான தயாரிப்புக்களில் ஈடுபட்ட ஜே.வி.பி., அதற்காக இளைஞர், யுவதிகளுக்கு இரகசிய வகுப்புக்களை நடத்தியது. இந்த இரகசிய வகுப்புகளில் ஐந்து பாடங்கள் போதிக்கப்பட்டன. இந்த ஐந்து பாடங்களில் ஒன்றாக `இந்திய விஸ்தரிப்பு வாதம்' என்ற தலைப்பில் விரிவுரைகள் நடத்தப்பட்டன.

இலங்கையை ஆக்கிரமிப்பதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிரதான அம்சம் எனவும் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவுமே இந்த விரிவுரைகளின்போது முக்கியமாக ஆராயப்பட்டது. இந்தியா தொடர்பிலான ஒரு அச்சத்தை சிங்களவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. 1987 இந்திய- இலங்கை உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்தியப்படை வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிலை கொண்டபோது, இந்தியா தொடர்பிலான அச்சத்தைப் பயன்படுத்தியே தமது போராட்டத்தை ஜே.வி.பி. துரிதப்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகள் தொடர்பிலான தமது அணுகுமுறையை 1990 களின் பிற்பகுதியில் இந்தியா மாற்றிக்கொண்டபோது ஜே.வி.பி.யும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டது. ஆக, இன நெருக்கடி தொடர்பிலான இந்தியாவின் அணுகுமுறைதான் இந்தியா தொடர்பிலான ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது எனக்கூறலாம். இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான மத்தியஸ்த முயற்சிகளில் நோர்வே இறங்கிய போது அதற்கெதிரான நிலைப்பாட்டை எடுத்த ஜே.வி.பி. இந்தியா மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்குத் தகுதிவாய்ந்ததெனத் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தமையால் அதன் மூலம் முன்வைக்கப்படும் தீர்வு எதுவும் சிங்கள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதாகவே இருக்கும் என ஜே.வி.பி கருதியது இதற்கான காரணங்களிலொன்றாக இருக்கலாம். இருந்தபோதும் இப்போது 13 ஆவது திருத்தத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஜே.வி.பி கருதுவதுதான் அதன் போராட்டங்களுக்கு அடிப்படை. கேந்திர மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பாக இந்தியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஜே.வி.பி.யின் சீற்றத்துக்குக் காரணமல்ல என்பது உண்மை. அவ்வாறிருந்திருந்தால் திருமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிக்கப்பட்ட போதே ஜே.வி.பி. கொதித்தெழுந்திருக்க வேண்டும்.

ஆக, இதன் மூலம் ஜே.வி.பி. வெளிப்படுத்தும் செய்தி என்னவென்றால், புலிகளுக்கு எதிரான யுத்த முனைப்புகளுக்கு உதவிபுரியும் இந்தியா தன்னுடைய பணியை அத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும் எந்தவித திட்டங்களுக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடாது. அதே வேளையில், யுத்த முனைப்புகளுக்கு இந்தியா தாராளமாக உதவும் நிலையில் இந்தப் போராட்டத்தை ஜே.வி.பி. ஒரு எல்லைக்கு மேல்கொண்டு செல்லாது எனவும் நம்பலாம்.

ஆனால், 13 ஆவது திருத்த யோசனையை கிடப்பில் போடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தப் போராட்டம் உதவிபுரியலாம்!குறைந்த பட்ச அரசியல் தீர்வைக்ககூட தடைசெய்வதற்கான உபாயமாகவே இந்திய எதிர்ப்பு என்ற கோஷம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் தவிர்க்க முடியாமல் எழுகின்றது.

sooriyan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.