Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத் தீர்வை கைவிடுமாறு கொடுக்கப்பட்டிருக்கும் அழுத்தத்தை இலங்கை புறக்கணிக்குமானால், ஐ.நா. சாசனத்தின் சரத்து 99 ஐப் பயன்படுத்தி இந்த விடயத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் எழுப்ப முடியும்!

Featured Replies

இலங்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் பொதுமக்கள் மரணமடைவது சடுதியாக அதிகரித்திருப்பதாகவும் சமாதானத்திற்கான விருப்பத்தை தற்போதைய அரசாங்கம் சிறிதளவே வெளிப்படுத்துவதாகவும் ஜெனீவாவிலுள்ள சிறிய ஆயுதங்கள் தொடர்பான மதிப்பீட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் ரொபேர்ட் முக்கா தெரிவித்துள்ளார்.

கனடாவின் 'த ஸ்டார்' பத்திரிகையில் ரொபேர்ட் முக்கா எழுதியுள்ள கட்டுரை வெளியாகியுள்ளது.

இராணுவத் தீர்வை கைவிடுமாறு கொடுக்கப்பட்டிருக்கும் அழுத்தத்தை இலங்கை புறக்கணிக்குமானால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையில் முன்னுரிமை கொடுக்கப்படும் பொதுவான முறைமைகளிலிருந்து வாபஸ்பெறுவது குறித்து பரிசீலனை செய்ய முடியுமென்றும் ஆயுத வன்முறைகள் தொடர்பாக ஆவணப்படுத்துவதற்காக ஐ.நா. விசேட தூதுவரொருவரை நியமிக்க வேண்டும் எனவும் ஐ.நா. சாசனத்தின் சரத்து 99 ஐப் பயன்படுத்தி இந்த விடயத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் எழுப்ப முடியுமென்றும் ரொபேர்ட் முக்கா தனது கட்டுரையில் சிபார்சுகளை முன்வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக ரொபேர்ட் முக்கா மேலும் தெரிவித்திருப்பதாவது;

ஜெயவர்த்தனா, பிரேமதாச, குமாரதுங்க ஆகியோரின் முன்னைய நிர்வாகங்களைப் போன்றே விடுதலைப் புலிகள் பிரச்சினைக்கு யுத்த ரீதியான தீர்வை ராஜபக்ஷவும் பற்றிப்பிடித்திருக்கிறார்.

ஒரு முக்கியமான விடயத்தில் தற்போதைய அரசாங்கம் வேறுபட்டுள்ளது. அரசியல் தீர்வுக்காக பேசுவதென்ற சகல பாசாங்குத்தனத்தையும் இது கைவிட்டுள்ளது.

தெற்காசியாவின் பிராந்திய வல்லரசான இந்தியாவின் முயற்சியானது இலங்கை வன்செயலின் பக்கம் சாய்வதை தடுத்து நிறுத்துவதில் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலேயே உள்ளது. இலங்கை விவகாரத்தில் நீண்ட கால பங்களிப்பினை இந்தியா வழங்கி வந்தாலும் நீடித்துச் செல்லும் போரின் விளைவுகள் குறித்து புதுடில்லி விழிப்படைந்துள்ளது.

தென்னிந்தியாவில் 2 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் வேதனையில் வாடுவதாகவும் யுத்தம் மீண்டும் ஆரம்பமானதையடுத்து மேலும் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக புகலிடம் கோரியிருப்பதாகவும் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முடிவில்லாமல் யுத்தம் தொடரும் சாத்தியமே உள்ளது. தற்போதைய இராணுவ தந்திரோபாயத்தில் மாற்றம் ஏற்படாவிடின் இலங்கையில் முழுமையாக பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இராணுவத் தீர்வு சாத்தியமற்றது என்பது தொடர்பாக அரசாங்கமும் புலிகளும் நம்புவதற்காக எச்சரிக்கையுடனான இராஜதந்திரரீதியிலான அழுத்தங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

இரண்டாவதாக இலங்கை அரசாங்கம் புறக்கணித்தால் முன்னுரிமையளிக்கும் பொது முறைமை விடயங்களை வாபஸ்பெறுவது குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக இலங்கையின் ஏற்றுமதிகளான ஆடைகள், தேயிலை போன்றவற்றுக்கான வரிகள், தீர்வைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இலங்கையில் மனித உரிமைகளை கண்காணிக்கும் சர்வதேச அவதானிகள் இல்லை. ஆதலால் இலங்கைக்கு இது தொடர்பாக விசேட தூதுவரை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் நியமிக்க முடியும். அடுத்ததாக ஐ.நா. சாசனத்தின் சரத்து 99 ஐப் பயன்படுத்தி இந்த விடயத்தை பாதுகாப்பு சபை ஆராய்வதற்கு எடுத்துக் கொள்ளுமாறு அதனை ஊக்குவிக்க முடியும்.

விசேட தூதுவரை நியமித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவதற்கான விதத்தில் அரசியல், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களை பாதுகாப்புச் சபையால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

ஐ.நா. சாசனத்தின் அத்தியாயம் 15 இன் சரத்து 99 இல் சர்வதேச சமாதானம், பாதுகாப்பைப் பேணுவதற்கு குறித்ததொரு விடயம் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்பது குறித்து செயலாளர் நாயகம் அபிப்பிராயப்பட்டால் அந்த விடயத்தை அவர், பாதுகாப்புச் சபையின் கவனத்திற்கு கொண்டு வரமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு : ரொபேர்ட் முக்கா ஜெனீவாவில் சிறிய ஆயுதங்கள் மதிப்பீட்டு விவகார ஆய்வுப் பணிப்பாளரும் 'பழைய இடங்களுக்கு திரும்புவதில் தோல்விகளும் இலங்கையில் உள்நாட்டு இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான சிறிய வரலாறும்' என்ற நூலின் ஆசிரியருமாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி : தீப்பொறி

அருமையான எச்சரிக்கை....

உப்பிடி கனக்க எச்சரிக்கைகளை விடாமல் உருப்படியா எதையாவது செய்வார்களா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்வதற்குத் தூண்டவேண்டியது நாங்களே தவிர, அவர்கள் அல்ல. ஏனென்றால் தமிழீழம் எங்களுக்குரியது.

சும்மா போங்கோ பொன்னையர்... தூண்டி தூண்டி இனி திரிலைதான் பத்தவைக்கவேணும்..

சரி சரி .... கோவிக்காதேங்கோ... தொடர்ந்து தூண்டுவம்...

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்கோ பொன்னையர்... தூண்டி தூண்டி இனி திரிலைதான் பத்தவைக்கவேணும்..

சரி சரி .... கோவிக்காதேங்கோ... தொடர்ந்து தூண்டுவம்...

இது மீண்டுமோர் அரிய சந்தர்ப்பம். சர்வதேச அரசியலில் துண்டுவது என்பதை சர்வதேச சமூகத்துடன் adjes பண்ணுவது என்று புரிந்து கொள்ளவேண்டும். 1.ஆயுதபாணிகளாக இருத்தல் 2.விடுதலைப் பிரதேசங்களை வைத்திருத்தல் 3. உள்ளக அல்லது வெளிவாரி சுய நிர்ணய உரிமை கோரிக்கையை முன்நிலைப் படுத்தல் என்கிற அம்சங்களில் மட்டுமே உறுதியாக இருத்தலும் ஏனையவற்றில் அவசியமான விட்டுக் கொடுப்புகளுக்குத் தயாராதலும் என்பதே நம்முன் உள்ள வரலாற்றுச் சவாலாகும்.

இது கடந்தகாலத்தில் சர்வதேச சமூகம் நமது உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள் அவற்றின் மூல உபாயங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக எழுப்பிய கேழ்விகளின் அடிப்படையிலான சுயவிமர்சன அடிப்படையிலான மீழ் மதிப்பீட்டை கோரி நிற்க்கிறது.

சர்வதேச அமைப்புகள் களத்திலலும் நிற்பதால் பெரும்பாலான விடயங்களில் அவர்கள் எம்மில் பலரைவிட அதிக தகவல்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே வளமையான பிரச்சாரத்தையும் நியாயப் படுத்துதல்களையும் மீழ்சுற்றுக்கு விடுவது அவசியமில்லை.

புதிய சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள நமது வெளிநாட்டு அமைப்புகள் கடந்தகால ANC மற்றும் எரிதிரிய அமைப்புகளின் உபாயங்களையும் ஆற்றலையும் வரித்துக்கொள்வது அவசியமாகும்.

1. யுத்த தந்திரத்தர அடிப்படையிலலான கேழ்வி தாக்குதல்களளில் தற்கொலை அம்சம் பற்றியதாகும்.கடல் இலக்குகலைவிட தரை இலக்குகளில் இது மிகவும் வெளிப்படையானதாக அமைகிறது 2. அரசியல் ரீதியான முக்கியமான கேள்வி வெளியேற்றப் பட்ட முஸ்லிம் அகதிகள் சம்பந்தப் பட்டதும் (இது இனச் சுத்திகரிப்பாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது)மற்றும் கிழக்குமாகாணதின் முஸ்லிம்கள் தொடர்பான கொள்கை சம்பந்தப்படதுமாகும் (சரியான கொள்கை முன்வைக்கப் பட்டால் சர்வதேச கண்ணோட்டத்தில் கிழக்குமாகானம் நமது பெலமான அங்கமாகிவிடும்) 3. வெளிநாட்டு அமைப்புகள் அரசுகளுக்குள் அரசாக இயங்கும் எந்த அம்சமும் இல்லாத வடிவத்தை உறுதிப் படுத்துதலும். இது வெளிநாட்டு அமைப்புகள் அங்கீகாரம் பெறுவது சம்பந்தப் பட்டதாகும். 4. நமது அரசியல் ராஜதந்திர Capacity ஆற்றலலை வளர்தெடுத்தல்

பிந்திப்போகாமல் நாம் இந்த சவால்களை மேற்கொள்ள முடியுமானால் மட்டுமே வெற்றிப் பாதையயில் நடைபோடுவது நிச்சயம்.

Edited by poet

பிரித்தானிய அமைச்சரும் இண்டைக்கு சொல்லியிருக்கிறார் தமிழீழம் பிரகடனப்படுத்தப்பட்டால் அங்கீகரிக்கமாட்டம் எண்டு சொல்ல முடியாது எண்டு. திடீர் எண்டு எல்லாம் ஒரு புள்ளியில சந்திக்கலாம் எப்பவும் என்ன வேணும் எண்டாலும் நடக்கலாம் எண்ட நிலையிலான் இருக்கிறம்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=24796

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய அமைச்சரும் இண்டைக்கு சொல்லியிருக்கிறார் தமிழீழம் பிரகடனப்படுத்தப்பட்டால் அங்கீகரிக்கமாட்டம் எண்டு சொல்ல முடியாது எண்டு. திடீர் எண்டு எல்லாம் ஒரு புள்ளியில சந்திக்கலாம் எப்பவும் என்ன வேணும் எண்டாலும் நடக்கலாம் எண்ட நிலையிலான் இருக்கிறம்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=24796

குறுக்கர் நாங்கள் எல்லோரும் சின்னச் சின்ன பிரச்சினைகளை மறறந்து ஒன்றுபட்டால் மட்டும்தான் புதிய சூழலை கையகப் படுத்தும் ஆற்றலை வலர்க்க முடியும் இல்லையா.

புதிய சூழல் எண்டு என்னத்தை சொல்லுறியள்?

கொசவோ பிரகடனப்படுத்திவிட்டது அதை பல முன்னணி நாடுகள் அங்கீகரித்துவிட்டது ஆகவே தமிழீழத்தையும் கும்பல்ல கோவிந்தாவாக பிரகடனப்படுத்தினால் தமிழீழத்திற்கும் கொசவோவிற்கும் வித்தியாசம் தெரியாமல் மாறிக் கீறி அங்கீகரிக்கிறம் எண்டு யாரும் 1 நாடு தப்பித்தவறி அறிக்கை விட்டாலும் விடுவங்கள் எண்ட எங்கடை அங்கலாய்ப்புகளை சொல்லுறியளோ?

இல்லாட்டி கொசவே பிரகடனமும் அதற்கு கிடைத்த அங்கீகாரத்தையும் சிறீலங்கா சற்றும் எதிர்பார்க்கவில்லை எண்டு எங்களுக்கு நாங்களே காதுகுத்துறதைச் சொல்லுறியளோ?

இல்லாட்டி சிறீலங்காவோட சேர்ந்து மேற்குலகும் ஏதோ கொசவோவை வைத்து சிறீலங்கா மீது அழுத்தம் கொடுப்பதாக நடித்து தமிழர் தரப்பின் பலவீனங்கள் பேரம்பேசல்கள் விட்டுக் கொடுப்புகளின் எல்லைகளை அறிய முற்படுவதை சொல்லுறியளே?

:D

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சூழல் எண்டு என்னத்தை சொல்லுறியள்?

இல்லாட்டி சிறீலங்காவோட சேர்ந்து மேற்குலகும் ஏதோ கொசவோவை வைத்து சிறீலங்கா மீது அழுத்தம் கொடுப்பதாக நடித்து தமிழர் தரப்பின் பலவீனங்கள் பேரம்பேசல்கள் விட்டுக் கொடுப்புகளின் எல்லைகளை அறிய முற்படுவதை சொல்லுறியளே?

:D

புரிந்துகொண்டு புரியவில்லை என்கிறியள். குறுக்கர் குடுமி சும்மா ஆடாது இல்லையா? கொசொவோ பிரகடனத்தையல்ல எம்மைப்போல எதிரியும் (சிங்கள அரசு சக சிங்கள கடும்போகாளர்கள்) சர்வதேசரீதியாக தனிமைப்ப படுகிறான் என்று சொல்லிறேன் காணும். ஜேவிபி இந்தியா முறுகலையும் பாருனம்காணும் என்கிறேன். எதிரியும் தன்மைப் படும் சூழலைச் சொல்லி இந்தக் கிணற்றுக்குள் இறங்கின எதிரியின் முதுகில் ஏறி வெளியே பாய்த்துவிடவேணும் எனண்கிறேன் காணும். இச்சூழலில் நமது தனிமைப் படலை தீவிரமாக உடைக்கவேண்டும் என்கிறதைத்தான் சொன்னேன். இந்த அப்பாவிக்கு முன்னம் மீண்டும் குடுமியை ஆட்டாமல் விசயத்துக்கு வாங்க குறுக்கர்.

Edited by poet

கவிதைக்குத்தான் பொய் அழகு எண்டு கேள்விப் பட்டிருக்கிறன். நீங்கள் போராட்டத்தின் பெயரால் பொழுது போக்காட்டவும் பொய் அழகு எண்டு நிரூபிக்கிறியள். யுஆ றியலி கிறேற்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்குத்தான் பொய் அழகு எண்டு கேள்விப் பட்டிருக்கிறன். நீங்கள் போராட்டத்தின் பெயரால் பொழுது போக்காட்டவும் பொய் அழகு எண்டு நிரூபிக்கிறியள். யுஆ றியலி கிறேற்.

தயவுசெய்து என்னுடைய வரைவை மீண்டும் ஆறுதலாக வாசித்துப்பாருங்கள். நாங்கள் முரண்படகூடும் . முரண்பாடுகள் அரோக்கியமான தேடலின் ஆரம்பமாவது போராட்டத்துக்கு அழகு. முரண்படுகிறபர்கலை பொய்யர் என்பது எதிர் விடுதலை அணுகுமுறையல்லவா குறுக்கர். போராடத்தின் பெயெரால் பொழுழுதுபோக்குபவன் என்று நெஞ்சைத் தொட்டு சொல்லமுடியுமா குறுக்கர். தயவு செய்து மீண்டும் ஒருமுறை வாசித்துப்பாருங்கள்.

எல்லாரும் கையக் கோத்துக் கொண்டு பின்னால நிப்பம். அவர் குறுக்கால போயாவது வெண்டு தருவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.