Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் கிளைமோர் தாக்குதல் - 8 பொதுமக்கள் பலி

Featured Replies

வன்னியில் இன்று சிறிலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட இருவேறு கிளைமோர் தாக்குதல்களில் எட்டு அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

முதலாவது தாக்குதல் பகல் 1.50 மணியளவில் மூன்றுமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள பனங்காமம் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. உழவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் இச்சம்பவத்தின்போது உயிரிழந்தனர். உயிழந்தவர்கள் பார்த்தீபன்(18), சண்முகலிங்கம் தவராசா, செல்வரத்தினம் செந்தூரன், மற்றும் குணபாலசிங்கம் ஜெககீர்த்தன் ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மருதோடைப்பகுதியில் இருந்து ஒலுமடு நோக்கி உழவூர்தியில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு 8.30 மணியளவில் இரண்டாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதும் நான்கு பொதுமக்கள் உயிரிழந்தனர். உயிழந்தவர்கள் விமலதாஸ், கந்தசாமி, மரியன், மற்றும் விஜயகுமார் ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான தமிழ்நெட்டின் செய்தி:

8 civilians killed in SLA DPU attacks in Vanni

[TamilNet, Wednesday, 27 February 2008, 18:01 GMT]

Eight innocent civilians riding in tractors were killed in two different Claymore attacks carried out by Sri Lanka Army (SLA) Deep Penetration Unit teams that had infiltrated into Liberation Tigers of Tamileelam (LTTE) controlled areas on either sides of the A9 road, north of Vavuniyaa on Wednesday. The first attack, in which four civilians were killed, was reported at Panangkaamam in Moon'ru Mu'rippu GS area of Maanthai East division in Mullaiththeevu district at 1:50 p.m. The second attack was reported at 8:30 p.m. in which another four civilians were slain while they were riding in a tractor from Maruthoadai to Olumadu.

The victims of the DPU attack in Panangkaamam were identified as Parthipan, 18, Shanmugalingam Thavarasa, Selvaratnam Senthooran and Kunapalasingham Jegagiritharan. All the four were killed on the spot.

The victims of the second attack were identified as Vimalathas, Kandasamy, Mariyan and Vijayakumar.

Further details are not available at the moment.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் ஆள ஊடுரும் அணியினரின் தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

[Wednesday February 27 2008 08:47:59 PM GMT] [யாழ் வாணன்]

ஏ9 பிரதான பாதைக்கு அண்டிய வவுனியா பகுதியிலும் மற்றும் முல்லைத்தீவிலும் உழவு இயந்திரத்தில் சென்ற பொது மக்கள் மீது இன்று ஆள ஊடுரும் அணி கிளை மோர் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் போது 8 பொதுமக்கள் கொள்ளபட்டுள்ளனர்

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். ஆனால் தென்னிலங்கையில் பழிவாங்கல் தாக்குதல் நடந்தால் மட்டும், அடித்து பிடித்துக்கொண்டு "மோட்டு சிங்களவன் பயந்து தமிழீழத்தை தரப்போகிறான்", "ஸ்கோர் காணாது" என்று நய்யாண்டி செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த பொது மக்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இராணுவத்தின் இழப்புகளை துல்லியமாக வெளியிடுவது மற்றும் பொதுமக்கள் இழப்புகளை புகைப்படத்துடன் வெளியிடுவது போன்றவற்றில் உள்ள ஆர்வத்தை பொதுமக்களை பாதுகாப்பதில் செலுத்தலாம்!

உலகம் சொல்கிறது "பொதுமக்கள் இழப்புகள் எங்களுக்கு புதிதில்லை, ஈராக்கில் நாங்கள் பார்க்காததா....! வெற்றிகள் இருந்தால் கொண்டுவாருங்கள் பேசித்தீர்க்கலாம்" என்று!

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன், நீங்கள் சொல்வது சரிதான் . ஆனால் சாதியமா என்பது கேள்விக்குறிதான். தமிழீழ எல்லைகள் அனைத்திற்கும் பாதுகாப்பு வேலி போடுவதென்பது ஆள்பலத்தில் குறைந்த புலிகள் போன்ற அமைப்பிற்கு முடியாத காரியம். சுமார் ரெண்டரை லட்சம் ராணுவம், கடற்படை, விமானப்படை, பொலீசு, ஊர்காவல்படை என்று முப்படைகளையும் வைத்திருக்கும் அரசுக்கே இது சாத்தியப்படாதபோது எம்மால் இது சாத்தியப்படுமென்பது கஷ்ட்டம்தான்.

இதற்காகத்தான் பொதுமக்கள் விழிப்புணர்வு, எல்லைப்படை போன்றவற்றை புலிகள் ஊக்குவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எமது எல்லைகளில் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டிருக்கிறது. இது எதிரிக்கு இலகுவான ஒரு ஊடுருவலை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் முகமாலை போன்ற பரந்த வெளிகளை கொண்ட முன்னரங்குகளில் ராணுவ ஊடுருவல் என்பது கடிணமானது.

ராணுவத்தின் இழப்புகளையும், பொதுமக்களின் இழப்புகளையும் துல்லியமாகவும், புகைப்படத்துடனும் வெளியிடுவதன் நோக்கம் பிரச்சார நலன் சார்ந்தது. பிரச்சாரப் போரில் நாம் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமானதுதானே ?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தின் இழப்புகளை துல்லியமாக வெளியிடுவது மற்றும் பொதுமக்கள் இழப்புகளை புகைப்படத்துடன் வெளியிடுவது போன்றவற்றில் உள்ள ஆர்வத்தை பொதுமக்களை பாதுகாப்பதில் செலுத்தலாம்!

உலகம் சொல்கிறது "பொதுமக்கள் இழப்புகள் எங்களுக்கு புதிதில்லை, ஈராக்கில் நாங்கள் பார்க்காததா....! வெற்றிகள் இருந்தால் கொண்டுவாருங்கள் பேசித்தீர்க்கலாம்" என்று!

உலக வல்லரசு நாட்டிலேயே 100 வீதம் பாதுகாப்பில்லை. ஒரு விடுதலைக்காக போராடும் அமைப்பு எப்படி 100 வீதம் பாதுகாப்பு கொடுக்கமுடியும். இதுக்கெல்லாம் வன்னியிலை இரண்டு வெடித்தால் தெற்கிலை நாலு வெடிக்கவேணும் அப்பதான் அடங்குவார்கள்.

உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது தெரிகிறது நீங்கள் பெயரளவில்தான் சாணக்கியன்.

உயிரிழந்த எம் உறவுகளுக்காக எனது அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா படையின் ஆழஊடுருவும் அணியின் தாக்குதல் : 8 பொதுமக்கள் பலி

சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு வேறுபகுதிகளில் பொருத்திய கிளைமோர் வெடித்ததில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

முதலாவது கிளைமோர் தாக்குதல் புதன்கிழமை மதியம் 1.50மணியளவில் வவுனியா வடக்கு பகுதியில் ஏ-9 வீதியில் பனங்காமம் மூன்று முறிப்பு கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உழவியந்திரத்தில் பயணம் செய்த பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டாவது தாக்குதல் இரவு 8.30 மணியளவில் மருதோடை ஒலுமடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போதும் உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர்.

முதலாவது தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பிரதீபன் (அகவை 18), சண்முகலிங்கம் தவராசா, செல்வரத்தினம் செந்தூரன், மற்றும் குணபாலசிங்கம் ஜெகந்திரையன் என இனம்காணப்பட்டுள்ளது.

இரண்டாவது தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் விமலதாஸ், கந்தசாமி, மரியன், மற்றும் விஜயகுமார் என இனம்காணப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

வவுனியா மாவட்டம் வடக்கு நெடுங்கேணி மருதோடைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் 4 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.