Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாலை தொடக்கம் மன்னார் கள முனையில் கடும் சண்டை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் மன்னார் களமுனையில் படையினரால் புதிதாக கைப்பெற்றப்பட்ட பரப்பான் கண்டல் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே கடும் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

சண்டயை அடுத்து மன்னார் - மதவாச்சி வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது. அம்புலன்ஸ்கள் காயமடைந்த படையினரை ஏற்றிக் கொண்டு அனுராதபுரம் நோக்கி விரைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

படையினர் தள்ளாடி மற்றும் வங்காலையில் இருந்து கடும் பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதலை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..!

Heavy fighting erupts in Parappaangka'ndal, Mannaar

[TamilNet, Saturday, 08 March 2008, 09:11 GMT]

Heavy fighting has broke out between the Sri Lanka Army (SLA) and the Liberation Tigers of Tamileelam (LTTE) in Parappaangka'ndal area in Mannaar from early morning Saturday. The main road linking Mannaar and Mathavaachchi was blocked from 10:00 a.m. till noon when ambulances were busy transporting casualties to Anuradhapura from Uyilangku'lam junction and a Sri Lanka Air Force (SLAF) helicopter was engaged in air-ambulance sorties from a landing pad near Tha'l'laadi.

The SLA had also parked several military vehicles and ambulances between Uyilangku'lam and Pa'raiyanaalangku'lam on the road which was later blocked for public access, according to civilians who reached Mathawaachchi in the morning.

At least 10 rushing ambulances were observed by eyewitnesses in Mathawaachchi.

Meanwhile, sources in Mannaar said normalcy was not disturbed in the city although the SLA was firing Multi-Barrel Rocket Launcher (MBRL) shells from its artillery launchpads in South Bar, Tha'l'laadi and Vangkaalai.

The warring parties are yet to release details of the fighting as heavy clashes were continuing in Parappaangka'ndal area which the SLA recently claimed to have captured from the Tigers.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னார் பரப்புக்கண்டல் பகுதிகளில் இன்று காலை கடும் மோதல்கள்

இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் மன்னார் பரப்புக்கண்டல் பகுதியில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி காலை 10 மணிமுதல் முதல் மதியம் வரை தடைசெய்யப்பட்டிருந்ததாகவும

மன்னார் பகுதியில் நேற்றும் இன்றும் சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம் முறியடிப்புத் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

மன்னாரில் இன்றும் ஸ்ரீலங்காப் படையினர் மேற் கொண்ட முன்னநகர்வு நடவடிக்கைகளை தமிழிழ விடுதலைப்புலிகள் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 22 ஸ்ரீலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் 72 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருக்கேதீஸ்வரம் மாந்தையில் இருந்து சேதுக்குளம் ஊடாக பாப்பாமோட்டைக்கு ஸ்ரீலங்கா படையினர் முன்னநகர்வை மேற்கொண்டனர். இதன் போது தமிழிழ விடுதலைப்புலிகள் பாரிய பதிலடி தாக்குதலை நடத்தினர்.

இந்த மோதல் சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை பண்டிவிரிச்சானில் இருந்து மடுவை நோக்கிய படைநகர்வை தமிழிழ விடுதலைப்புலிகள் முறியடித்தபோது 10 ஸ்ரீலங்கா படையினர் கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஸ்ரீலங்காவின் தெற்கு மொனராகல செல்லக்கதிர்காம பிரதேசத்தில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் நான்கு படைவீரர்கள் கொல்லப்பட்டனர் இருவர் காயமடைந்தனர்.

செல்லக்கதிர்காமம் பழைய புத்தள வீதியின் 53 வது மைல்கல்லுக்கு அருகில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. உழவூர்தி ஒன்றில் சென்ற படையினரே தாக்குதலுக்கு இலக்காகினர்.இந்த சம்பவவத்தை அடுத்து பிரதேசத்தில் பாரிய சோதனை நடவடிக்கை ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதேவேளை இந்த தாக்குதலை தமிழிழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக அமைப்பின் இராணுவப்பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் நான்கு படையினர் பலியானதாக அவர் தெரிவித்துள்ளார் எனினும் ஸ்ரீலங்காவின் இராணுவப்பேச்சாளர் உதய நாணயக்கார சம்பவத்தில் ஒரு படைவீரரே பலியானதாக தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள தள்ளாடி சௌத்பார் மற்றும் தோமஸ்புரி நானாட்டான் ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.15 முதல் நேற்று மதியம் வரை தமிழிழ விடுதலைப்புலிகளின் அடம்பன் மற்றும் மாந்தை மேற்குப் பகுதிகளை நோக்கி பாரிய எறிகனை வீச்சுக்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை 7 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை மன்னார் மதவாச்சி வீதி மூடப்பட்டிருந்தது. இதன்போது முருங்கன் சந்தியில் கடும் வாகன சோதனைகளும் நடத்தப்பட்டன.

- http://www.ajeevan.ch/

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் முன்நகர்வுகள் முறியடிப்பு: 22 படையினர் பலி- 72 பேர் படுகாயம்

[saturday March 08 2008 02:55:48 PM GMT] [puthinam]

மன்னார் பகுதியில் நேற்றும் இன்றும் சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம் முறியடிப்புத் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சேத்துக்குளம்

மன்னார் திருக்கேதீச்சரம் பகுதியில் மாந்தையிலிருந்து சேத்துக்குளம் வழியாக பாப்பாமோட்டை நோக்கி சிறிலங்காப் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மிகச்செறிவாக சகல ஆட்டிலெறி மற்றும் மோட்டார் நிலைகள் தளங்களில் இருந்தும் சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களுடனும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களுடனும் டாங்கிகள் பின்தளங்களிலிருந்து செறிவான பீரங்கித் தாக்குதல்களுடனும் சிறிலங்காப் படையினர் நேற்று முற்பகல் பாரிய அளவில் இம் முன்நகர்வை மேற்கொண்டனர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

4 மணிநேரம் வரை நடத்தப்பட்ட செறிவான முறியடிப்புத்தாக்குதலில் படையினர் மீது செறிவான எறிகணைத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர்.

இதில் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்கு ஓடிவிட்டனர்.

இன்று மீண்டும் அதே பகுதியில் முன்நகர்வுத்தாக்குதலை நடத்தினர். இன்று சனிக்கிழமை முற்பகல் 9:00 மணிக்கு இந்த முன்நகர்வு மிகச்செறிவான எறிகணை வெடிகணை வீச்சுக்களுடன் டாங்கிகளின் பீரங்கிச் சூடுகளுடனும் சிறிலங்காப் படையினர் நகர்வை மேற்கொண்டனர்.

இன்றைய படை முன்நகர்வும் விடுதலைப் புலிகளின் செறிவான முறியடிப்புத்தாக்குதலின் மூலம் முறியடித்து படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்தனர்.

பிற்பகல் 3:00 மணிவரை நடத்தப்பட்ட இன்றைய முறியடிப்புத் தாக்குலில் சிறிலங்காப் படையினரில் 12 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் அதிக படையினர் காயமடைந்தனர்.

மடு

இதனிடையே நேற்று பண்டிவிரிச்சானிலிருந்து மடுவை நோக்கிய பெருமெடுப்பிலான நகர்வு சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்டது. படையினரின் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்தாக்குதல் நடத்தினர்.

முற்பகல் 11:00 மணிக்கு தொடங்கிய மோதல் மாலை 6:00 மணிவரை நீடித்தது.

இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன. இதில் 10 படையினர் கொல்லப்பட்டனர். 30 படையினர் காயமடைந்தனர்.

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

என்ன பெடியல் ஒரு கருத்தும் எழுதவில்லை?

ஆதரம் இல்லாத படியாலையோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.