Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு பெண் பிள்ளை வேறு இடம் சென்று படிப்பது தவறா?

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

புலத்தில் வாழும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளிற்கும் மிக எளிதில் கருத்து வேறுபாடு வந்து விடுகின்றதே.. இது எதனால??? பிள்ளைகள் பெற்றோரை புரிந்து நடப்பதில்லையா? இல்லை தாம் நினைப்பதுதான் தம் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதாலா??

சரி இப்போ விடயத்திற்கு வாருகிறேன்... இங்கு கல்வி கற்கும் மாணவர்களிற்கு (bachelor/master) அவர்களின் 3வது அல்லது 4வது வருடத்தில் ஒரு பகுதியோ இல்லா முழுமையாகவோ வேறு நாடு சென்று கல்வி கற்க சந்தர்ப்பம் உள்ளது. எனைய மாணவர்கள் போல தமிழ் மாணவர்களிற்கும் வேறு நாடு சென்று படிக்க வேண்டும் என்னும் ஆசை இருக்க கூடதா? இதனை ஏன் பெற்றோர் புரிந்து கொள்வதில்லை? ஏன் வேறு நாடு செல்வதர்க்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை??

அவர்களை கேட்கும் போது அவர்கள் சொல்கிறார்கள்:

1. கல்வி கற்க செல்ல இருக்கும் நாட்டில் உறவினர்கள் இருந்தால் பறவாயில்லை, அவர்களுடன் தங்கி இருந்து படிக்கலாம், ஆனால் எனைய மாணவர்களுடன் விடுதியில் தங்கி இருந்து படிப்பது சரி வாறது.

2. ஆண் பிள்ளை என்றால் கூட பறவாயில்லை......

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??? ஒரு பெண் பிள்ளை வேறு இடம் சென்று படிப்பது தவறா?

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் அருகில் இருக்கும் போதே பெற்றோருக்குத் தெரியாமல் பல குழப்படிகளைச் செய்திட்டு.. ஏன் காதலிச்சிட்டு.. அலுவல் எல்லாம் முடிச்சிட்டு.. நைசா கழற்றி விட்டிட்டு.. பெற்றோர் முன்னால நல்ல பிள்ளைக்கு நிற்கிற பெட்டையள் இருக்கேக்க.. எப்படி தூரத்துக்கு துணிஞ்சு விடுவினம்.

பெற்றோர் பிள்ளைகள் படிக்கனும் என்று தான் விரும்பினம். ஆனால் பிள்ளைகள் படிக்கிறதத்தான் செய்யுங்கள் என்றதுக்கு உத்தரவாதம் இல்லையே..!

முதலில பிள்ளைகள் தங்களக் கட்டுப்படுத்திப் பழகனும். படிக்க என்று போனப் படியுங்க. பெற்றோருக்கு தெரியாமல் மறைவில இருக்கிறம் என்ற துணிவில பெற்றோரை ஏமாற்றிற தொழிலைச் செய்யாதீங்க. நீங்க பெற்றோரையே ஏமாற்றிறீங்க என்றா எப்படி அடுத்தவனை ஏமாற்ற மாட்டீங்க என்று நம்பிறது..??! இதால உங்கட வாழ்க்கை பாழாகேக்க உங்களைப் பெற்று வளர்த்த பெற்றோர் உட்பட எத்தனையோ பேர் பாதிக்கப்படுறாங்க..! இதை பிள்ளைகள் சிந்திக்கிறீங்களா..??!

நான் யுனி வழிய கண்டிருக்கிறன்.. பல பெண்பிள்ளைகள் வருகிறார்கள். நைற் அவுட் என்று போய் தண்ணியப் போட்டிட்டு வீதியில கட்டிப்புரண்டு கொண்டு கிடக்கிறார்கள். மரங்கள்.. பத்தையளுக்குள்ள இருந்து கொண்டு கசமுசா பண்ணுறீங்க.. சிலது பார்க் வழிய போய் குடும்பமே நடத்துது... சிலது ஸ்ருடண்ட் கவுஸில லிவ்விங் ருகெதரா இருந்து அபோசனும் பண்ணிக்குது.. போதைக்கு அடிமையாகிறீங்க..தமிழ் பெண்கள் உட்பட. இதுதானா நீங்கள் படிக்கும் இலட்சனம். இன்னும் சிலது பார்க்க போர்த்துக் கொண்டு திரியும். ஆனால் நசுக்கிடாம பல விசயங்கள் செய்திடுதுகள்..! ஆனால் பெற்றோருக்கு முன்னால் பதுமைகளா இருக்குங்கள். தாங்கள் பிடிபட்டிடுவமோ என்று தொடர்சியா பொய்களை சொல்லிட்டு.. ஒழிச்சுத் திரியுறதுகளும் இருக்குதுகள். இப்படி தங்களையும் ஏமாற்றி தாம் சார்ந்தோரையும் ஏமாற்றும் பிள்ளைகளால் எவ்வளவு சீரழிவுகள்.

இப்படி எல்லாம் நீங்க படிக்கப் போற இடத்தில நடந்துக்கிறதாலதான் பெற்றோர் உங்களை நம்பினம் இல்ல..! நாளைக்கு என்ர பிள்ளையை யாரேனும் பழுதாக்கிப் போடுவினமோ என்ற கவலைல தான் அவங்க தூர இடங்களுக்கு விடப் பயப்பிடுறாங்களே ஒழிய.. பிள்ளை படிக்கக் கூடாது என்று எந்தப் பெற்றோரும் நினைக்கிறதில்ல..! பிள்ளைகள் மனதில உறுதியோட படிக்கப் போன படிக்கிற அலுவலை மட்டும் பார்ப்பியள் என்ற நம்பிக்கையை பெற்றோரிடத்தில வளர்த்திங்க என்னா.. அவங்க நம்பிக்கைக்கு பாத்திரமா நடந்தும் காட்டினீங்கன்னா.. பெற்றோரும் வருத்தப்படத் தேவையில்ல நீங்களும் வாழ்க்கையில வருந்தத் தேவையில்ல. படிக்க வாற பசங்களும் தங்கட பாட்டில படிச்சிட்டுப் போவாங்க.. எவரும்.. விட்ட.. விடுகின்ற தவறுகளுக்காக... வருந்த வேண்டிய அவசியமும் இல்ல..!

பெண்பிள்ளைகளோ ஆண் பிள்ளைகளோ தாங்க விடுற தப்பாலதான்.. தங்களுக்கான அரிய சந்தர்ப்பங்களை இழக்கக் காரணமாகிடுறாங்க..! :lol::lol:

Edited by nedukkalapoovan

18 வயசுக்கு மேல் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிட யாருக்குமே உரிமை இல்லை. இந்த கால கட்டத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல நண்பனாக அல்லது நண்பியாக இருக்க வேண்டும்.

இன்று எல்லா பல்கலைகழகங்களும் இப்படியான Overseas Attachment தருகின்றன. இத்தனை பயன்படுத்துவது பல் நாட்டு கலாச்சாரம், வேலை வாய்ப்பு , மற்றும் பல அனுபவங்களை தரும். குறிப்பாக மேலை தேச மாணவர்கள் அதிகமாக கிழைதேச நாடுகளுக்கு செல்வர். இன்று கிழைதேச மாணவர்களும் மேலை தேசம் செல்கின்றனர். இதில் ஆண் பெண் பேதம் எதுவும் இல்லை.

நம்மில் பெரும்பலானவர்கள் படிக்க வெளிய வந்தவர்கள்.. நாங்க நல்லா இல்லையா..எதோ வெளிநாட்டில் தமிழ் பெண்கள் நல்லா இல்லை என்ற மாதிரி சொல்லுறிங்க .. கெட்டுப்போக நினைத்தால், அது பெற்றோர் கூட இருக்கும் போதே முடியும்.

இப்படியான குறுகிய சிந்தனைகளை விட்டு பெண்களை சம உரிமையுடன் வாழ விடுங்கோ ..!

  • தொடங்கியவர்

பெற்றோர் பிள்ளைகள் படிக்கனும் என்று தான் விரும்பினம். ஆனால் பிள்ளைகள் படிக்கிறதத்தான் செய்யுங்கள் என்றதுக்கு உத்தரவாதம் இல்லையே..!

நீங்கள் சொல்வது சரி தான்... பெற்றோரின் அதீத அக்கறைதான் அவர்கள் இப்படி சொல்வதர்க்கு காரணம் ஆகிறது.

ஆனாலும் ஒரு தீய செயலை செய்ய எண்ணும் பிள்ளை வேறு நாடு சென்றுதான் செய்ய வேண்டும் என்னும் தேவை இல்லயே. நீங்கள் சொல்வது போல் பெற்றோருடன் இருந்தும் அவர்களிற்கு தெரியாமல் செய்யலாம் தானே..... நாங்கள் இன்னும் சிறுபிள்ளைகள் இல்லயே எது சரி எது பிழை என்று தெரியாமல் விடுவதர்க்கு....

படிக்க என்று போகும் பிள்ளை, படிப்பதை மட்டும் மனதில் வைத்தால் நீங்கள் சொல்லும் பிரச்சனை எல்லாம் வரவும் மாட்டாது.... இதனால் நன்மை மட்டும் தான் உள்ளது, CV உடைய மதிப்பு தான் கூடும்...

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான குறுகிய சிந்தனைகளை விட்டு பெண்களை சம உரிமையுடன் வாழ விடுங்கோ ..!

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் படிப்பதற்காக அனுப்புகின்றனவே தவிர கும்மாளம் அடிக்கவல்ல..!

18 வயதில் சுதந்திரம் என்பதை சரியாக கணிப்பிடுறது முக்கியமில்ல.. அந்தச் சுதந்திரம் தருகின்ற பொறுப்புக்களை உணரவும் இனங்காணவும் வேண்டும் என்பதைத்தான் பெற்றோர் உட்பட பலரும் எதிர்பார்க்கின்றனர்.

18 வயதுக்குப் பின்னர் பெற்றோருக்கல்ல.. நாட்டின் சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட வேண்டிய பொறுப்பு பெண்கள் உட்பட எல்லோருக்கும் உண்டு..! எல்லை மீறிப் போகும் பெண்கள் தண்டிக்கப்படுவதை நான் அவதானித்திருக்கிறேன். பின்னர் கிடந்து புலம்பிப் பயனில்லை..!

மேலை நாடுகளிலும் பல்கலைக்கழக சமூகத்திடம் ஒரு கவலை உண்டு. பல்கலைக்கழகத்துக்கு வரும் 10 பெண்களில் 8 பேர் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்துக்கு இலக்காகின்றனர் என்று. இது அவர்களின் கல்விச் சூழலில் செய்யும் தாக்கம் பற்றி குறுகிய சிந்தனை என்று சமாளிப்புக்கேசன் களை அள்ளிவிடுபவர்கள் சிந்தித்திருக்கிறீர்களா..??!

இதனால் கல்வியில் எதிர்பார்க்கப்பட்ட பயன் கிடைக்காமல் போவதையிட்டு சிந்தித்திருக்கிறீர்களா..??!

உங்களின் சிந்தனை வட்டம் ஏதோ பெண்கள் இதனால் அடிமைப்படுகிறார்கள்.. அவர்களை வெளியில போய் படிக்க விடுறது சம உரிமை அளிப்பு என்று நினைச்சுக்கிறீங்க.

பெண்கள் தாராளமாகவே எங்கும் போய் படிக்கலாம். அதை எவரும் தடுக்கவில்லை. ஆனால் படிக்க என்று போய் பெண்கள் சீரழிவதை கவனிக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அதில் பெற்றோருக்கும் பங்குண்டு என்பதை நிராகரிக்க முடியாது. பெண்கள் படிக்கப் போய் படிக்கிற அலுவலை பார்க்கத் தான் சொல்லினமே தவிர.. பெண்களைப் படிக்கவே போக வேணாம் என்று சொல்லவில்லை. :lol:

Edited by nedukkalapoovan

உளவியல் தாக்கங்கள் இரு பாலருக்கும் உண்டு. பல்கலை கழக வாழ்கை ஒரு நல்லஅனுபவம். கூத்தும் இருக்கும். கும்மாளமும் இருக்கும். அதே நேரம் படிப்பையும் யாரும் கைவிடுவது இல்லை.

பெற்றோர் சுதந்திரம் கொடுத்தால் பொறுப்பு தானால் வரும். சும்மா சம்பிரதாயம் என்ற போர்வையில் ஒடுக்காதீர்கள். ..! மற்ற நாடு மாணவர்களை பாருங்கள். குறிப்பாக கீழைதேச நாடுகளான சீனா, சிங்கப்பூர், மற்றும் இந்திய மாணவர்கள் (குறிப்பாக பெண்கள் ) எப்படி சம்பிரத்யங்களை உடைத்து முன்னேருகின்றார்கள்..!

உளவியல் தாக்கம் இருபாலாருக்கும் உண்டு என்பதிலும் பெண்கள் மத்தியில் அதிகம் என்பதும் அதற்கு அவர்கள் பல்கலைக்கழகச் சூழலில் ஆண் மாணவர்களோடு ஏற்படுத்தும் உடல் ரீதியான நெருக்கமும்.. அதனால் ஏற்படும் விளைவுகளும்.. வன்முறைகளும் முக்கிய பங்களிக்கின்றன என்பதை இலகுவாக மறைச்சிடுறீங்கள்.

கீழைத்தேய மாணவர்களில் பெண்கள்.. படும் இன்னல்களை நீங்கள் கண்டிருக்கிறீர்களா..??! அவர்களின் கதை சோகக் கதைகள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டு.. தவறான வழிக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணவிகள் பலர்..! ஏன் போதைக்குக் கூட அடிமையாக்கப்பட்ட மாணவிகள் உளர். இவற்றை எல்லாம் நீங்கள் சம்பிரதாயத்தை உடைத்து வெளியே வருதலாகவா இனங்காண்கிறீர்கள்.

ஜீன்சும் பெனியனும் போடுவதல்ல சம்பிரதாயத் தகர்ப்பு. ஒரு மாணவி என்ன கல்வி நோக்கத்துக்காக வந்தாளோ அதை அடைவதும்.. தன்னை எல்லா வழியிலும் தற்காத்துக் கொள்வதும்... மற்றவர்களை வேதனைக்குள் தள்ளாத சூழலை ஏற்படுத்தி வாழ்வதும் தான் சமுதாயத் தேவை. இதை உணர்ந்த எத்தனை மாணவிகள் உளர்..???! :lol:

பாடசாலைகளிலேயே நிலை இப்படி.....

"A 2002 study of students in the 8th through the 11th grade by the American Association of University Women (AAUW) revealed that 83% of girls have been sexually harassed, and 78% of boys have been sexually harassed."

http://en.wikipedia.org/wiki/Sexual_harassment

Edited by nedukkalapoovan

பெற்றோர் அருகில் இருக்கும் போதே பெற்றோருக்குத் தெரியாமல் பல குழப்படிகளைச் செய்திட்டு.. ஏன் காதலிச்சிட்டு.. அலுவல் எல்லாம் முடிச்சிட்டு.. நைசா கழற்றி விட்டிட்டு.. பெற்றோர் முன்னால நல்ல பிள்ளைக்கு நிற்கிற பெட்டையள் இருக்கேக்க.. எப்படி தூரத்துக்கு துணிஞ்சு விடுவினம்.

ஒரு சில ஏமாளிகள் இது போன்ற சந்தர்ப்பவாதப் பெண்களிடம் ஏமாந்து இருக்கலாம். அதற்காக எல்லாப் பெண்களையும் ஏமாற்றுக் காரர்களாகவோ அல்லது எல்லா ஆண்களையும் ஏமாளிகளாகவோ நினைப்பது தப்பு. :lol:

உளவியல் தாக்கம் இருபாலாருக்கும் உண்டு என்பதிலும் பெண்கள் மத்தியில் அதிகம் என்பதும் அதற்கு அவர்கள் பல்கலைக்கழகச் சூழலில் ஆண் மாணவர்களோடு ஏற்படுத்தும் உடல் ரீதியான நெருக்கமும்.. அதனால் ஏற்படும் விளைவுகளும்.. வன்முறைகளும் முக்கிய பங்களிக்கின்றன என்பதை இலகுவாக மறைச்சிடுறீங்கள்.

கீழைத்தேய மாணவர்களில் பெண்கள்.. படும் இன்னல்களை நீங்கள் கண்டிருக்கிறீர்களா..??! அவர்களின் கதை சோகக் கதைகள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டு.. தவறான வழிக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணவிகள் பலர்..! ஏன் போதைக்குக் கூட அடிமையாக்கப்பட்ட மாணவிகள் உளர். இவற்றை எல்லாம் நீங்கள் சம்பிரதாயத்தை உடைத்து வெளியே வருதலாகவா இனங்காண்கிறீர்கள்.

ஜீன்சும் பெனியனும் போடுவதல்ல சம்பிரதாயத் தகர்ப்பு. ஒரு மாணவி என்ன கல்வி நோக்கத்துக்காக வந்தாளோ அதை அடைவதும்.. தன்னை எல்லா வழியிலும் தற்காத்துக் கொள்வதும்... மற்றவர்களை வேதனைக்குள் தள்ளாத சூழலை ஏற்படுத்தி வாழ்வதும் தான் சமுதாயத் தேவை. இதை உணர்ந்த எத்தனை மாணவிகள் உளர்..???! :lol:

என்ன செய்வது உங்கள் பிற்போக்கு வாதத்தை நீங்கள் மாற்ற மாட்டீர்கள் :lol: . பெண்களின் கல்வி, பொருளாதார, சமுக, உளவியல் முன்னேற்றம் இன்று நல்லாகவே உள்ளது. அது அனைவருக்கும் தெரியும். என்ன செய்வது எங்க சமுதாயம் உங்க மாதிரியானவர்கள் பலரை தாண்டித்தான் ஜெயிக்க வேண்டியுள்ளது. ..!

பரீட்சைப் பெறுபேறுகளில் கூட தற்போது ஆண்களை விடப் பெண்களே சிற்ந்த முறையில் சித்தி பெறுகிறார்கள். (இங்கிலாந்து உட்பட)

எனவே ஆண்களைப் போலப் பெண்களையும் விரும்பியவிதமாய் கல்வி கற்க அனுமதிப்பதே சரி.

தவறுசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வெளிநாடு போய்த் தான் தவறு செய்ய வேண்டும் என்பதில்லை.

  • தொடங்கியவர்

பெண்கள் ஆண்கள் என்று பிரித்து பார்ப்பது எங்கள் சமுதாயத்தில் பிரிக்க முடியாத ஒன்றாக ஒட்டி இருக்கிறது, அது இன்றுவரை மாறாது இருப்பது கவலைக்குரிய விடயம்.

யாருமே விரும்பி தப்பு செய்வதில்லை, ஆண்களோ பெண்களோ தப்பு செய்வதர்க்கு சந்தர்ப்பமும் சூழ் நிலையும் தான் காரணம். நாம் நமது மனதில் ஒன்றை ஆழமாக நினைத்து அது நிறைவேறும் வரை போராடினால், நாம் வாழ்க்கை நிச்சயம் நாம் விரும்பியது போல் இருக்கும்.

சோ என்ன எதிர்ப்பு வந்தாலும், நம்மில் நாம் நம்பிக்கை வைத்து செயல்பட்டால்... எதிர்த்தவர்கள் கூட ஒரு நாள் நம்மை பார்த்து பெருமை அடைவார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ பிழையோ எனக்கு தெரியா ஆனா அப்படி போய் படித்தா தான் கெளரவமா இருக்கு பெற்றோர்களுக்கும் பிள்ளை கனடா,அமெரிக்கா போய் படிக்கிறாள் என்று பீத்திக்க முடியும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் குடியேறுபவர்கள் பிரித்தானியா மக்கள் சமூகத்துடன் எப்படி ஒன்றி வாழவேண்டும், அவர்களின் மேற்கத்தைய கலாச்சாரத்தை அறிந்து வைத்திருக்கவேண்டும் என்றெல்லாம் சோதனை வைக்கிறார்கள்.. ஆனால் இப்போதும் 60 - 70 களில் இருப்பதுபோல பெண்பிள்ளை தனியே சென்று படிப்பது நல்லதா இல்லையே என்று நாம் விவாதித்துக்கொண்டிருக்கிறோ

எல்லாருக்கும் வணக்கம்,

புலத்தில் வாழும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளிற்கும் மிக எளிதில் கருத்து வேறுபாடு வந்து விடுகின்றதே.. இது எதனால??? பிள்ளைகள் பெற்றோரை புரிந்து நடப்பதில்லையா? இல்லை தாம் நினைப்பதுதான் தம் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதாலா??

சரி இப்போ விடயத்திற்கு வாருகிறேன்... இங்கு கல்வி கற்கும் மாணவர்களிற்கு (bachelor/master) அவர்களின் 3வது அல்லது 4வது வருடத்தில் ஒரு பகுதியோ இல்லா முழுமையாகவோ வேறு நாடு சென்று கல்வி கற்க சந்தர்ப்பம் உள்ளது. எனைய மாணவர்கள் போல தமிழ் மாணவர்களிற்கும் வேறு நாடு சென்று படிக்க வேண்டும் என்னும் ஆசை இருக்க கூடதா? இதனை ஏன் பெற்றோர் புரிந்து கொள்வதில்லை? ஏன் வேறு நாடு செல்வதர்க்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை??

அவர்களை கேட்கும் போது அவர்கள் சொல்கிறார்கள்:

1. கல்வி கற்க செல்ல இருக்கும் நாட்டில் உறவினர்கள் இருந்தால் பறவாயில்லை, அவர்களுடன் தங்கி இருந்து படிக்கலாம், ஆனால் எனைய மாணவர்களுடன் விடுதியில் தங்கி இருந்து படிப்பது சரி வாறது.

2. ஆண் பிள்ளை என்றால் கூட பறவாயில்லை......

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??? ஒரு பெண் பிள்ளை வேறு இடம் சென்று படிப்பது தவறா?

ஓம் பெண்பிள்ளைகளை தனிய அனுப்பி வைக்கிறது ரொம்பத்தப்பு. நான் அறிஞ்சவரையில் இப்பிடி தனியா போனதுகள் உருப்பட்டதா தெரிய இல்ல.

நெடுக்கு நல்லாத்தான் கவனிச்சு இருக்கிறீங்கள். நீங்கள் சொன்னது உண்மைதான்.

சும்மா ஸ்டூடந்த் யூனியன், அந்த யூனியன், இந்த யூனியன், அந்த கிளப், இந்த கிளப் எண்டு கூத்தடிச்சுபோட்டு, படிப்பையும் கோட்டைவிட்டுப் போட்டு கடைசியில அம்மாவாகின பொண்ணுங்கள் கனபேர் இருக்கிறீனம்.

யூனிக்குபோய் அம்மாவாகிறது பிழை இல்லை. நீங்கள் பெற்றோரைவிட்டு படிப்பதற்கு பிரிந்துபோகும்போது நான் இனி திரும்பி வரமாட்டன். அப்பிடியே வேறநாட்டுக்காரன் இல்லாட்டி வேற ஒருத்தனோட படிபோட படிப்பா குடும்பமும் நடத்தி குழந்தைகள பெற்று சந்தோசமா வாழப்போறன் எண்டு சொல்லீட்டுப் போகலாம்.

இப்படியான பெற்றோருக்கும் நல்லா வேணும். ஏன் எண்டால் இப்படியான ஆக்கள்தான் மற்ற ஆக்களுக்கு தன்ர பிள்ளை வெளிநாட்டில ஸ்கொலர்சிப்பில படிக்கிது எண்டு சொல்லி புளுகிக்கொண்டு திரியுறது. அவேக்கு அங்க பிள்ள என்ன செய்யுது எண்டு தெரியாது.

சுத்துறது, டா அடிக்கிறது, காதல் பண்ணுவது எல்லாம் சுதந்திரம். அவரவர் விருப்பம். ஆனா, இவேள் பெற்றோருக்கு தெரியாமல் செய்யுற கூத்துகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. கடைசியிலதான் எல்லாத்தையும் போட்டு உடைப்பீனம். அதுவும் அவேள் சொல்லிறது இல்ல. வேற யாராவது கண்டவன், போனவன் இப்பிடி இப்பிடி நடக்கிது எண்டு வேற யாருக்காவது சொன்னது பெற்றோர் காதுக்கு போய் இருக்கும்.

ஆண்கள் இப்படி பெற்றோருக்கு தெரியாமல் காரியங்கள் செய்வது இல்லை எண்டு நினைக்கிறன். இப்ப என்னை எடுத்தால் நான் செய்யுறதுகளை எல்லாம் எனது அப்பா, அம்மாவுக்கு சொல்லுவன் சின்னனில இருந்தே.

பெரும்பாலான பெண்கள் தாங்கள் என்ன செய்யிறீனம் எண்டு செய்யுறதுகள பெற்றோருக்கு சொல்லாமல் நசிஞ்சு கொண்டு திரிவீனம். இதாலதான் பல பிரச்சனைகள் வாறது.

எனக்கு ஒரு பெண்பிள்ளை இருந்தால் நான் இப்பிடி தெரியாத ஒரு இடத்துக்கு பிள்ளையை அனுப்பி வைக்கமாட்டன். மிகவும் நல்ல ஒரு படிப்பாக இருந்தால் மட்டும், வேற, வேற வெளிநாட்டில் உள்ள எனக்கு தெரிஞ்ச ஆக்கள், நண்பர்கர்கள் உறவினர்களிடம் சொல்லி பிள்ளையை கண்காணிக்குமாறு கூறியே அனுப்பி வைப்பன்.

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி!

உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனாவா நீ பிறந்தாய்? :lol:

கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி! :lol:

  • தொடங்கியவர்

ஓம் பெண்பிள்ளைகளை தனிய அனுப்பி வைக்கிறது ரொம்பத்தப்பு. நான் அறிஞ்சவரையில் இப்பிடி தனியா போனதுகள் உருப்பட்டதா தெரிய இல்ல.

யூனிக்குபோய் அம்மாவாகிறது பிழை இல்லை. நீங்கள் பெற்றோரைவிட்டு படிப்பதற்கு பிரிந்துபோகும்போது நான் இனி திரும்பி வரமாட்டன். அப்பிடியே வேறநாட்டுக்காரன் இல்லாட்டி வேற ஒருத்தனோட படிபோட படிப்பா குடும்பமும் நடத்தி குழந்தைகள பெற்று சந்தோசமா வாழப்போறன் எண்டு சொல்லீட்டுப் போகலாம்.

இப்படி சொல்லி சொல்லி பெண்களை முன்னேறவே விடமாட்டீங்க போல :lol:

உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி!

உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனாவா நீ பிறந்தாய்? :lol:

கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி! :lol:

புரியல.... எது கடவுள் செய்த குற்றம்?? :lol::lol:

தவறு என்பது கண்ணோட்டத்தை பொறுத்து விஸ்தாரமாயம் விபரீதமாயம் தெரியும்..பெற்றோருடைய அடிப்படை கண்ணோட்டம் பழமையாய் இருக்கு..குழந்தைகளுக்கு தவறை சொல்லிப்புரியவைத்துவிட்டு..அ

வர்களை சுதந்திரமாக விடவேண்டும்..அடிக்கடி சொல்லும் அறிவுரை ஆபத்து..

படிப்பு விடயத்தில் சரி எதிலும் சரி..இக்கால பிள்ளைகளை அணை போட்டு தடைபோட முடியாது..

என்னைப் பொறுத்தவரை..நம்பிக்கையை செயல்ல காட்டுங்க..நம்பிக்கையின்மையை வார்த்தையில காட்டினா..பிள்ளை தவறான பாததையில போறது நிச்சயமாகும்..அதிகமாகும்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது உங்கள் பிற்போக்கு வாதத்தை நீங்கள் மாற்ற மாட்டீர்கள் :lol: . பெண்களின் கல்வி, பொருளாதார, சமுக, உளவியல் முன்னேற்றம் இன்று நல்லாகவே உள்ளது. அது அனைவருக்கும் தெரியும். என்ன செய்வது எங்க சமுதாயம் உங்க மாதிரியானவர்கள் பலரை தாண்டித்தான் ஜெயிக்க வேண்டியுள்ளது. ..!

பெண்களை இப்படி உசுப்பேத்தினாத்தான் நாங்க நைட் அவுட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் ஒரு கூத்தடிக்கலாம். இல்லைன்னா பெரிய போரப்பா..!

ஐயா உங்களின் முற்போக்கு எந்தளவுன்னு.. நான் நங்கே அறிவேன்..! அதாலதான் கிட்டத்தட்ட எல்லா யுனிப் பொண்ணுகளும் கருக்கலைப்புக்கு ஆலோசனை கேட்டு வாறாங்க. இதுக்கா யுனிக்கு வாறீங்க..??! உதிலும் ரோட்டில நின்று விபச்சாரம் செய்யலாம்..! அது நல்ல முற்போக்கா இருக்கும்..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தவறு என்பது கண்ணோட்டத்தை பொறுத்து விஸ்தாரமாயம் விபரீதமாயம் தெரியும்..பெற்றோருடைய அடிப்படை கண்ணோட்டம் பழமையாய் இருக்கு..குழந்தைகளுக்கு தவறை சொல்லிப்புரியவைத்துவிட்டு..அ

வர்களை சுதந்திரமாக விடவேண்டும்..அடிக்கடி சொல்லும் அறிவுரை ஆபத்து..

படிப்பு விடயத்தில் சரி எதிலும் சரி..இக்கால பிள்ளைகளை அணை போட்டு தடைபோட முடியாது..

என்னைப் பொறுத்தவரை..நம்பிக்கையை செயல்ல காட்டுங்க..நம்பிக்கையின்மையை வார்த்தையில காட்டினா..பிள்ளை தவறான பாததையில போறது நிச்சயமாகும்..அதிகமாகும்...

சுதந்திரம் என்பதை எப்படி வரையறுக்கிறீங்க. சும்மா சுதந்திரம் சுதந்திரம் என்று பீற்றிக்காதீங்க. அதால பல பேரின்ர வாழ்க்கை சீரழிஞ்சு போகுது.

ஒவ்வொரு யுனிக்கும் அருகில் உள்ள கிளப்புக்கும் பப்புக்கும் வெள்ளி இரவு போங்க. அப்ப தெரியும் சுதந்திரத்தின் மகிமை என்னென்று..!

தயவுசெய்து பிள்ளைகளை சுதந்திரம் என்ற பெயரில தவறா வழிநடத்தாதீங்க.

அண்மையில் பிரிட்டன் எதிர்கட்சி தலைவர் கூட குடும்பப்பற்றற்ற குழந்தை வளர்ப்பால் தான் பிரிட்டனில் இளையோர்.. படுகொலைகள் உட்பட வன்முறைகளில் அதிகம் இறங்குவதாகவும் பிரிட்டனின் சமூக அமைப்பு பாரிய மாற்றத்துக்கு உள்ளாகாவிடத்து இது மோசமாகும் என்றும் தெரிவித்திருந்தார்..!

இவையெல்லாம் பிற்போக்குவாதங்கள் அல்ல. சமூகம் கண்டுள்ள ஆபத்தான வளர்ச்சிப் போக்கை கண்டெழுந்துள்ள அச்சம்..! நீங்க இப்பதான்.. ஊரில இருந்து சுதந்திரத்துக்கு வாறீங்க. அவங்க அந்தச் சுதந்திரம் தரும் பாதிப்பைப் பற்றி யோசிச்சிட்டு இருக்காங்க..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் பிள்ளை வேறு இடம் சென்று படிப்பது தவறா?

தவறே இல்லைங்க. படிக்கிற பிள்ளை எங்கே எண்டாலும் படிக்கும் . படிப்பது தவறும்இல்லை

வெளிநாடுகளில் சென்று படிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அது ஒரு நல்ல அனுபவம். தங்கள் பிள்ளைகளின் மேல் நம்பிக்கை இல்லாத பெற்றோர்தான் இப்படி மறுப்பார்கள். எனக்குத் தெரிந்து எத்தனையோ பெண் பிள்ளைகள் பல நாடுகளுக்கும் சென்று படித்து விட்டு வந்திருக்கிறார்கள். நல்ல மார்க்ஸ் எடுத்து, யூனிக்குப் போனது மட்டுமல்லாமல் அங்கும் நல்ல மார்க்ஸ் எடுத்துக் காட்டியபின்னும் பெற்றோருக்குப் பிள்ளைகள் மேல் நம்பிக்கை வரவில்லை என்றால் அந்தப் பெற்றோரில்தான் தவறு இருக்க முடியும். தவறு செய்யும் பிள்ளை எங்கிருந்தாலும் தவறு செய்யும். பள்ளிக்கூடக் காலங்களிலேயே தவறு செய்யும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். படித்து முடித்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னரும் பெற்றோரின் சொல் கேட்டு நடக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். பெற்றோரின் வளர்ப்பு முறையிலேயே பெற்றோர், பிள்ளைகளின் புரிந்துணர்வும் உள்ளது. பல பிள்ளைகள் தவறான வழிக்குப் போவதற்குக் காரணமே பெற்றோரின் கவனிப்பு முறைதான். சிறுவயதில் செல்லங் கொடுத்தோ அல்லது தங்களது பிள்ளைகள் தவறான வழிக்குப் போகமாட்டார்கள் என்று நம்பியோ வளர்ப்பதால்தான் அவர்கள் தவறான வழிக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கண்டிப்பான பெற்றோராக இருப்பதைவிட்டு, நண்பர்களாக இருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். கண்டிப்பாக வளர்க்கப்படும் பிள்ளைகள்தான் வளர்ந்ததும் தவறான வழிக்குச் செல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்றோர் அருகில் இருக்கும் போதே பெற்றோருக்குத் தெரியாமல் பல குழப்படிகளைச் செய்திட்டு.. ஏன் காதலிச்சிட்டு.. அலுவல் எல்லாம் முடிச்சிட்டு.. நைசா கழற்றி விட்டிட்டு.. பெற்றோர் முன்னால நல்ல பிள்ளைக்கு நிற்கிற பெட்டையள் இருக்கேக்க.. எப்படி தூரத்துக்கு துணிஞ்சு விடுவினம்.

பெற்றோர் பிள்ளைகள் படிக்கனும் என்று தான் விரும்பினம். ஆனால் பிள்ளைகள் படிக்கிறதத்தான் செய்யுங்கள் என்றதுக்கு உத்தரவாதம் இல்லையே..!

முதலில பிள்ளைகள் தங்களக் கட்டுப்படுத்திப் பழகனும். படிக்க என்று போனப் படியுங்க. பெற்றோருக்கு தெரியாமல் மறைவில இருக்கிறம் என்ற துணிவில பெற்றோரை ஏமாற்றிற தொழிலைச் செய்யாதீங்க. நீங்க பெற்றோரையே ஏமாற்றிறீங்க என்றா எப்படி அடுத்தவனை ஏமாற்ற மாட்டீங்க என்று நம்பிறது..??! இதால உங்கட வாழ்க்கை பாழாகேக்க உங்களைப் பெற்று வளர்த்த பெற்றோர் உட்பட எத்தனையோ பேர் பாதிக்கப்படுறாங்க..! இதை பிள்ளைகள் சிந்திக்கிறீங்களா..??!

நான் யுனி வழிய கண்டிருக்கிறன்.. பல பெண்பிள்ளைகள் வருகிறார்கள். நைற் அவுட் என்று போய் தண்ணியப் போட்டிட்டு வீதியில கட்டிப்புரண்டு கொண்டு கிடக்கிறார்கள். மரங்கள்.. பத்தையளுக்குள்ள இருந்து கொண்டு கசமுசா பண்ணுறீங்க.. சிலது பார்க் வழிய போய் குடும்பமே நடத்துது... சிலது ஸ்ருடண்ட் கவுஸில லிவ்விங் ருகெதரா இருந்து அபோசனும் பண்ணிக்குது.. போதைக்கு அடிமையாகிறீங்க..தமிழ் பெண்கள் உட்பட. இதுதானா நீங்கள் படிக்கும் இலட்சனம். இன்னும் சிலது பார்க்க போர்த்துக் கொண்டு திரியும். ஆனால் நசுக்கிடாம பல விசயங்கள் செய்திடுதுகள்..! ஆனால் பெற்றோருக்கு முன்னால் பதுமைகளா இருக்குங்கள். தாங்கள் பிடிபட்டிடுவமோ என்று தொடர்சியா பொய்களை சொல்லிட்டு.. ஒழிச்சுத் திரியுறதுகளும் இருக்குதுகள். இப்படி தங்களையும் ஏமாற்றி தாம் சார்ந்தோரையும் ஏமாற்றும் பிள்ளைகளால் எவ்வளவு சீரழிவுகள்.

இப்படி எல்லாம் நீங்க படிக்கப் போற இடத்தில நடந்துக்கிறதாலதான் பெற்றோர் உங்களை நம்பினம் இல்ல..! நாளைக்கு என்ர பிள்ளையை யாரேனும் பழுதாக்கிப் போடுவினமோ என்ற கவலைல தான் அவங்க தூர இடங்களுக்கு விடப் பயப்பிடுறாங்களே ஒழிய.. பிள்ளை படிக்கக் கூடாது என்று எந்தப் பெற்றோரும் நினைக்கிறதில்ல..! பிள்ளைகள் மனதில உறுதியோட படிக்கப் போன படிக்கிற அலுவலை மட்டும் பார்ப்பியள் என்ற நம்பிக்கையை பெற்றோரிடத்தில வளர்த்திங்க என்னா.. அவங்க நம்பிக்கைக்கு பாத்திரமா நடந்தும் காட்டினீங்கன்னா.. பெற்றோரும் வருத்தப்படத் தேவையில்ல நீங்களும் வாழ்க்கையில வருந்தத் தேவையில்ல. படிக்க வாற பசங்களும் தங்கட பாட்டில படிச்சிட்டுப் போவாங்க.. எவரும்.. விட்ட.. விடுகின்ற தவறுகளுக்காக... வருந்த வேண்டிய அவசியமும் இல்ல..!

பெண்பிள்ளைகளோ ஆண் பிள்ளைகளோ தாங்க விடுற தப்பாலதான்.. தங்களுக்கான அரிய சந்தர்ப்பங்களை இழக்கக் காரணமாகிடுறாங்க..! :lol::lol:

வணக்கம் அண்ணை,

நீங்க சொல்லுற தவறுகளை பெண்களும் செய்யுறாங்கள், ஆண்களும் செய்யுறாங்கள், நீங்கள் என்ன என்றால் வழக்கம் போல பெண்கள் மட்டுமே தவறுகள் செய்யிறதா சொல்லுறீங்கள்!

என்னை பொறுத்த வரை, ஒரு படிக்கிற பெண் எங்கையும் படிக்கலாம். தப்பு செய்யணும், பெற்றோர்களை ஏமாத்தணும் என்றால், வீட்டில் இருந்து கொண்டும் ஏமாத்தலாம், இதற்காக வேறு நாடு போய்தான் பெற்றோர்களை ஏமாத்தணும் என்று இல்லை.

நெடுக்கண்ணா உங்களுக்கு தெரிஞ்ச ஒரு பெண் குறக்கால போனதால உங்க மனசு இப்படி புளுங்குது போல...சரி நீங்க எப்டி திருத்துவீங்க எப்டி கட்டுபடுத்துவீங்க சொல்லுங்க..

  • தொடங்கியவர்

நான் சொல்றன் விகடகவி,

நெடுஸ் அண்ணா தான் கலியாணம் செய்ய போறதில்லையே... சோ அவருக்கு எப்படி பெண் பிள்ளை??? நான் சொல்றது சரிதானே நெடுஸ்? :lol:

சப்போஸ் கல்யாணம் செய்து ஒரு பெண் பிள்ளை பிறந்தால், எப்படி இருக்கும்??? அசோ நினைக்க பயமா இருக்கு...... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்றன் விகடகவி,

நெடுஸ் அண்ணா தான் கலியாணம் செய்ய போறதில்லையே... சோ அவருக்கு எப்படி பெண் பிள்ளை??? நான் சொல்றது சரிதானே நெடுஸ்? :)

சப்போஸ் கல்யாணம் செய்து ஒரு பெண் பிள்ளை பிறந்தால், எப்படி இருக்கும்??? அசோ நினைக்க பயமா இருக்கு...... :rolleyes::)

1. ஒரு நாளும் என் பிள்ளை நான் உங்க கூட இருந்தாத்தான் கெடுவன் தூரப் போனா கெடவே மாட்டன் என்று சொல்லி பெற்றோரை ஏய்க்காது.. அல்லது வசனம் பேசாது. அது யதார்த்தத்தை உணரும் பேசும்.

2. என் பிள்ளை இயலுமானவரை உண்மை பேசும். பெற்றோருக்கு மறைச்சு எதையும் செய்ய வேண்டிய தேவையக் கொண்டிராது.

3. என் பிள்ளை எதையும் பெற்றோரிடம் எதிர்பார்க்காத வகையில் பெற்றோர் செய்வினம். அதேபோல் பெற்றோரின் எதிர்பார்ப்பை பிள்ளை தானா உணர வளர்க்கப்படும்.

4. ஒழுக்கம்.. நீதி.. நேர்மை.. மனித நேயத்தை பிள்ளை தெளிவா அறிஞ்சிருக்கும். கெட்டது கொடியது விலக்க வேண்டியது விலக வேண்டியது இவற்றை தெளிவா அறிஞ்சிருக்கும்.

5. இதையெல்லாம் தெரிஞ்ச பிள்ளை... நிச்சயம் எங்கும் போய் சாதிக்க வேண்டியதை சாதித்து வரும். பெற்றோருக்கு பிள்ளை பற்றிய கவலை தேவையில்லை..!

6. என் பெற்றோர் கூட நான் புறப்படும் போது என்னை எதற்கும் அறிவுறுத்தல்ல. அந்தளவு நம்பிக்கையை வைத்திருந்தாங்க. நான் அவங்க நம்பிக்கையை என்னால இயன்றவரை காத்திருக்கிறன்..! அந்த ஜீன் இருக்குமில்ல..! :D:lol:

நெடுக்கண்ணா உங்களுக்கு தெரிஞ்ச ஒரு பெண் குறக்கால போனதால உங்க மனசு இப்படி புளுங்குது போல...சரி நீங்க எப்டி திருத்துவீங்க எப்டி கட்டுபடுத்துவீங்க சொல்லுங்க..

நான் இன்னொருவன்/ள் வேண்டும் என்றே செய்யும் தவறுக்காக வருந்துவதுமில்ல.. அதைப் பெரிது படுத்துவதுமில்லை. அவர்கள் திருத்தப்படவே முடியாதவர்கள். ஆனால் தவறுகள் திரும்பக் கூடாது.. சமூகம் அதனால் பாதிக்கப்படக் கூடாது என்ற அக்கறை இருக்குது.. அதனால் சில சமூக நிகழ்வுகளை கருத்தில் பிரதிபலிப்பேன். அது எனது அனுபவமல்ல. அவதானிப்புகள். :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.