Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் பாராளமன்ற உறுப்பினரை கொலை செய்தது சிறீலங்கா இராணுவம்- த நேசன்.

Featured Replies

கடந்தவாரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் தமிழ்பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்பட்டிருந்தார். கொழும்பில் இருந்து வெளி வரும் வாரந்த இதழான த நேசன் அதனது பாதுகாப்பு பத்தியில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்தச் செய்தியால் உற்சாகமடைந்த இராணுவத்தினர் புளியங்குளம் பகுதியில் புதிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருக்கிறது.

Buoyed also, by the Army’s deep penetration unit claymore mine killing of Jaffna District MP Srinivesan north of Puliyankulam last week, soldiers on Monday took on hordes of Tiger cadres in the Pulliyankulam area west of the A9 Road, killing dozens of them. -The Nation 16.03.2008

  • கருத்துக்கள உறவுகள்
:) அப்ப சிங்கள ராணுவம் ஓர்மத்தோட போர் புரியத் துவங்கி விட்டுது என்று சொல்லுறியள். இப்பத்தானே விளங்குது எப்படி எப்படியெல்லம் சிங்கள ராணுவம் தனது ஓர்மத்தை வளர்த்துக்கொள்ளுது எண்டு . அதற்காக நீங்கள் சும்மா இருக்க வேண்டாம். தொடர்ந்து அதற்கு சல்லரியைத் தட்டுங்கோ, இல்லாட்டி ஓர்மம் குறைந்தாலும் குறந்துவிடும், என்ன நான் சொல்லுறது ?

எல்லா ஓர்மத்தையும் சண்டையில் விட்டுவிட்டால் திரும்பி ஓடுவதற்கு ஓர்மம் இல்லாமல் போய்விடும். ஓர்மத்தை இனி வருங்காலத்தில் எங்கிருந்தாவது இறக்குமதி செய்ய வேண்டித்தான் வரும். அடிக்கடி மகிந்தவும் பொன்சேகாவும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஓடுவது ஓர்மம் தேடித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

<_< ஓ...ஓ அதுக்குத்தான் இப்படி ஆளாளுக்கு ஆலய்ப் பறக்கிறார்களா ? சனம் பறந்து பறந்து ஓர்மம் வேண்டத் திரியுது, இங்க ஒருவர் சரியாகக் கஷ்ட்டப்பட்டு ஓர்மம் சேர்த்தல்லொ வைத்திருக்கிறார்.

பாவம் , சிங்களவன்ர செய்தியைக் கண்ணை மூடிக்கொண்டு நம்புறதால, இங்குள்ள லங்காபுவத்திற்கு வன்னியின்ர பிரதேச அமைப்புக் கூடத் தெரியாமல் போய்விட்டது எண்டு நினைக்கிறன். எந்தப் புளியங்குளம் எண்டு செய்தி போட முதல் வாசிக்கவாவது வேண்டாமா?

சிலவேளை ஓர்மம் அதிகரித்ததால விமானத்தில இருந்து குதித்து புளியங்குளத்தைப் பிடிச்சாளும் பிடிச்சிருப்பினம்! ஓர்மத்தை அவங்களுக்கு வழங்குறது என்ன லேசுப்பட்ட ஆளே ?!

சிங்களவனுக்கு பக்கப்பாட்டு பாடுறது நல்ல விஷயம்தான், ஆனால் பாடுறதையும் ஓரளவுக்காவது நம்பும்படியா பாடினால் தான் கேட்கிற ரெண்டு மூண்டு சனமாவது கேட்கும்!

  • தொடங்கியவர்

இங்கு கவனிக்க வேண்டியது ஒரு சிங்கள தென்னிலங்கை ஊடகமே சிறீலங்கா இராணுவம் தான் பாராளமன்ற உறுப்பினரை கொன்றது என்று எழுதியுள்ளதை. இதே போல் முன்பும் கருணா குழு கிழக்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்தியதைக் குறிப்பிட்டிருந்தார்கள். பின்னர் பிரிகேடியர் தமிழ்செல்வன் உட்பட்ட பேச்சுவார்த்தைக் குழுமீது கட்டுநாயக்கா விமானநிலையத்தில் தற்கொலைத்தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். பாராளமன்றத்தில் கூட கருணா குழுவின் ஏற்பாட்டில் தற்கொலைத்தாக்குதல் நடத்த விட்டு புலிகள் மீது பழிசுமத்தும் திட்டம் இருந்தாக குறிப்பிடப்பட்டிருக்கு. தற்கொலைத் தாக்குதல்களை அல்லது அவை போன்று அரங்கேற்றிவிட்டு புலிகள் மீது குற்றம் சாட்டுவதை எதிர் கொள்ள இப்படியான செய்திகள் உதவலாம்.

சிங்களவன் ஓர்மமாக சண்டை பிடிக்கிறானோ இல்லையோ எண்டதுகளை கவனிக்க வேறு பல உதாரணங்கள் கிழக்கு முழுவதும் இருக்கு ஏன் யாழ்பாணமும் இருக்கு. வன்னிக்குள்ளை முன்னேற முடியாது வைத்திருந்தால் போல தமிழீழம் கிடைத்துவிடாது. புலம்பெயர்ந்த மந்தைகளிற்கு தற்போதைக்கு வன்னி மாத்திரம் தான் தமிழீழம் எண்டு ஒரு வட்டத்தை கீறிப்போட்டு திருப்த்தி கொள்ளுவதை விட வேறு வழியில்லையோ? <_<

வன்னி என்ன வன்னி?

வறணி மட்டுமா இருந்தாலும் அதுதான் எங்களுக்கு தமிழ் ஈழம் ....

அது சரி ஆர் ஆர் மாம்பழம் கொண்டு போக வாறியழ்?

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கேள்விக்கு பதிலைச்சொல்லிப்போட்டு வேறு கதைக்குப் போகலாம். புளியங்குளத்திற்கு ஆமி போனது எப்படி ? நீங்கள் குறுக்கால கொண்டுபோய் விட்டனீங்களோ ?

சிங்களவன் ஓர்மத்தோட சண்டைபிடிக்கிறது தமிழ் மக்களையும், எம்.பி மாறையும் போட்டுத்தள்ளித்தான் எண்டு நீங்களே சொன்னபின் நாங்கள் எப்படி நம்பாமல் இருக்கிறது ? அதேமாதிரி ஆமி புளியங்குளத்தையும் பிடிச்சதை நம்புவோமாக!

சிங்களவனிற்ற வடக்குப் போட்டுது, கிழக்குப் போட்டுது எண்டு புலம்பிறத விட அதை எப்படிப் பிடிக்கலாம் எண்டு யோசிக்கிறது நல்லது ? போராட்டம் தொடங்கமுன் ஒரு சிறு துண்டு நிலம் கூட எங்களிடம் இருக்கவில்லை. எல்லாமே போராளிகளின் தியாகங்களினால் கிடைத்தவைதான். அடுத்தது நிலங்கள் பறிபோவதும், கைவசப்படுவதும் போரில் தவிர்க்க முடியாதது என்பதை மேதையான உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியமில்லை.

வீணே எங்களுடன் விதண்டாவாதம் செய்வதாக எண்ணிக்கொண்டு நீங்கள் செய்வதெல்லாம் போராட்டத்தையும், அதை வழிநடத்தும் தலைமையையும், களத்தில் நிற்கும் போராளிகளையும் கேவலப்படுத்துவதுதான். இது தேவைதானா என்பதை யோசித்துப் பாருங்கள். மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  • தொடங்கியவர்

அங்காலை ஒருத்த 13 பாராளமன்ற உறுப்பினர்களோடையும் நேரகதைச்சமாதிரி ஆமி புளியங்குளத்துக் போயிட்டான் என்று ரீல் விடவில்லை.

எழுதியதன் மூலத்தை குறிப்பிட்டு அவர்களுடைய வசனத்தையும் அதிலேயே போட்டிருக்கு. இந்தத்திரியின் தலையங்கம் மொழிபெயர்த்து தமிழில் எழுதிய பகுதிகளில் இருந்து வாசிக்கும் எவருக்கும் விளங்கு இது என்ன நோக்கத்துக்காக பதியப்பட்டது என்று. இங்கு புளியங்குளத்தை தூக்கி வைத்து பன்னாடைத்தனமாக விதண்டவாதம் பண்ணுவது யார் என்றும் புரியும்.

இல்லை பன்னாடைத்தனமாக புளியங்குளத்தை ஆமி பிடிச்சதை தான் ஆய்வு செய்ய வேணும் எண்டா வாகரை மூதூர் எழுவான் கரை படுவான் கரை குடும்பிமலை எண்டு ஒவ்வொண்டா பாக்கலாம் பிரச்சனையில்லை. பிறகு இங்காலை சிலாவத்துறையில இருந்தும் விருப்பம் எண்டா தொடங்கலாம் :huh:

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பன்னாடைத்தனமாக புளியங்குளத்தை ஆமி பிடிச்சதை தான் ஆய்வு செய்ய வேணும் எண்டா வாகரை மூதூர் எழுவான் கரை படுவான் கரை குடும்பிமலை எண்டு ஒவ்வொண்டா பாக்கலாம் பிரச்சனையில்லை. பிறகு இங்காலை சிலாவத்துறையில இருந்தும் விருப்பம் எண்டா தொடங்கலாம்.

அண்ணாச்சி.. இப்ப என்ன சொல்லவாரார் என்றால்.. சிங்களவனின் ஓர்மத்தை உந்த இடங்களில் பார்த்தது போல வன்னியிலும் கெதியில பார்க்கப் போறியள்.

தமிழீழம் எல்லாம் கனவு. சும்மா இங்க உடாண்சு விடாதேங்க. ஆனால் தான் வரையிற காட்டூணுக்கு கருணை காட்டுங்க தமிழீழம் கிடைக்கும் என்றாரு..! என்ன அறிவார்த்தமான சிந்தனை தனது என்றார். எல்லாரும் ஒருக்கா ஜோரா கைதட்டி அண்ணாச்சியை உச்சாரக் கொப்பில இருத்திவிடுங்கோ..! :lol::huh:

ஓ(ர்)மம் இந்தியாவிலும் சீனாவிலும் குறைந்த விலையிலா கிடைக்கிறது.? அங்கே, இங்கே என்று உருட்டிப் பிரட்டி , இந்த வயிற்று வலிக்கு ஓ(ர்)மம் வாங்கிவந்தால், இங்க பிள்ளைகள்(இராணுவம்) சரியாகக் குடிக்கிறார்களில்லை. அப்படிப்பட்ட குறையைக் கண்டதால்தான், இங்கே இவர் இல்லை அவர்கள் கிழக்க வரைக்கும் நன்றாகத்தான் குடித்தவர்கள், இப்பதான் ஏனோ தெரியவில்லை மறுக்கிறார்கள் என்கிறார் .

  • தொடங்கியவர்

சிங்களவனுக்கு ஓர்மம் இந்தியாவிலும் சீனாவிலும் கிடைப்பதை விட மலிவாக பல்குழல் ஏவுகணைகள் கொக்குச் சுடும் ஏவுகணைகள் வாட்டஜெற்றில பூட்டியடிக்கிற ஒலிகனுகள் தனிநாட்டுப் பிரகடனங்கள் நல்ல மலிவாக புலம்பெயர்ந்த மந்தைகளிற்கு கிடைக்குது.

சிங்களவனிற்கு மலிவாக கிடைச்ச ஓரம்ம கிழக்கிலாவது வேலை செய்திருக்கு என்று ஒத்துக் கொள்ளுறியள்

இனி என்ன புவிறிஸ் வன்னியை வீரகேசரியில பிரகடனம் செய்ய வேண்டியானே?

  • கருத்துக்கள உறவுகள்
:huh: குறுக்கு நீங்கள் செய்திபோட்டதன் நோக்கம் இலங்கை ராணுவத்தால்தான் சிவனேசன் கொல்லப்பட்டார் என்பதைக் காட்டுவதற்கு என்றால் நல்ல விஷயம்தான். நான், செய்தியின் பிற்பகுதியில் உள்ள "இத்தாக்குதலின் பின் ராணுவத்தினர் உற்சாகமடைந்து புளியங்குளத்தைப் பிடித்தனர்" என்பதைத்தன் நீங்கள் வழக்கம் போல தூக்கிப்பிடித்தீர்களோ என்று நினைத்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.