Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரை மாதப் பிறப்பையே புத்தாண்டாக கொள்ளவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில கேள்விகள்

1. சிறிலங்காவில் தமிழர்கள் வகைதொகையின்றி அழிக்கபபடும் போது இந்த இந்து மாமன்றம் எங்கே இருந்ததாம்.

2. ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துவரும் இவ்வேளையில் சிறிலங்காவின் இராணுக் கெடுபிடிகளுக்குத் தூபமேற்றி ஆதரவு வழங்கும் அண்டை நாடான இந்து நாடுக்கு இந்த இந்து மாமன்றம் என்ன கோரிக்கையை வைத்தது.

3. கிறிஸ்தவப் புத்தாண்டு அன்று மணிகிலுக்கி பூசை நடாத்திய கொழும்பு இந்துக் கோவில் வளாகத்திலேயே படு கொலை செய்யப்பட்ட பக்தர் மகேஸ்வரன் தோடர்பாக இந்த இந்து மாமன்றம் என்ன செய்தது?

4. சிறிலங்காவின் பெளத்த பேரினவாதத்திற்கெதிரான கலகக் குரலாக ஏதாயினும் இந்த இந்து மாமன்றம் ஏதாயினும் செய்துள்ளதா?

இப்படியாக வினாக்கள் எழ, மேற்படி அறிக்கையைக் காணுகையில் சிரிப்புத்தான் மிஞ்சுகிறது.

சித்திரையில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடும் சிறிலங்கா பெளத்த பேரினவாத புத்தாண்டு நிகழ்வுடன் கைகோர்த்து இந்த இந்து மாமன்றம் தட்சணை பெறுவதற்கு துடிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கு?

ஆகா சிறிலங்்கா மகாவம்ச பெளத்தத்துடன் கை கோத்து இந்து மாமன்றம் கொட்டமடிக்க சித்திரையில் ஒரு நிகழ்வு வருகிறது.

:D

இவர்களெல்லாம் தண்ணி அடிச்சிற்று பஞ்சாங்கம் பாத்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.

Edited by Iraivan

சுழியன்...நீங்கள் கேட்டதெல்லாம் மிக நியாயமானவை.... மிக சிறந்த கேள்விகள்

விடுங்கப்பா.. எப்ப வேணுமானாலும் கொண்டாடிக்கட்டும் ..! முதலில் சனத்துக்கு நிம்மதி வேண்டும்... !

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அறிவிப்பு போடுவதே வேலையாகிட்டுது

வேற வேலையே இல்லை போல.... என்ன செய்ய...

  • கருத்துக்கள உறவுகள்

சில கேள்விகள்

1. சிறிலங்காவில் தமிழர்கள் வகைதொகையின்றி அழிக்கபபடும் போது இந்த இந்து மாமன்றம் எங்கே இருந்ததாம்.

2. ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துவரும் இவ்வேளையில் சிறிலங்காவின் இராணுக் கெடுபிடிகளுக்குத் தூபமேற்றி ஆதரவு வழங்கும் அண்டை நாடான இந்து நாடுக்கு இந்த இந்து மாமன்றம் என்ன கோரிக்கையை வைத்தது.

3. கிறிஸ்தவப் புத்தாண்டு அன்று மணிகிலுக்கி பூசை நடாத்திய கொழும்பு இந்துக் கோவில் வளாகத்திலேயே படு கொலை செய்யப்பட்ட பக்தர் மகேஸ்வரன் தோடர்பாக இந்த இந்து மாமன்றம் என்ன செய்தது?

4. சிறிலங்காவின் பெளத்த பேரினவாதத்திற்கெதிரான கலகக் குரலாக ஏதாயினும் இந்த இந்து மாமன்றம் ஏதாயினும் செய்துள்ளதா?

இப்படியாக வினாக்கள் எழ, மேற்படி அறிக்கையைக் காணுகையில் சிரிப்புத்தான் மிஞ்சுகிறது.

சித்திரையில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடும் சிறிலங்கா பெளத்த பேரினவாத புத்தாண்டு நிகழ்வுடன் கைகோர்த்து இந்த இந்து மாமன்றம் தட்சணை பெறுவதற்கு துடிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கு?

ஆகா சிறிலங்்கா மகாவம்ச பெளத்தத்துடன் கை கோத்து இந்து மாமன்றம் கொட்டமடிக்க சித்திரையில் ஒரு நிகழ்வு வருகிறது.

:(

சிறீலங்காவில் தமிழர்கள் அழிக்கப்படும் நிலையில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் களியாட்டங்களை தவிர்த்து தாயக மக்களின் விடுதலைக்காக தினமும் களமிறங்கி வருகின்றனரா...??! திபெத்திய மக்கள் சீன அரசால் அடக்குமுறைக்குள்ளான வேளையில் உலகெங்கும் உள்ள திபெத்திய மக்கள் வீதிகளில் இறங்கினர். ஏன் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதைச் செய்யாமல்.. ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா.. சமருக்கு.. திருவிழா கொண்டுடாடுவது போல ஜெனீவாவில் கூடிக் கூத்தடிக்கிறதோட நின்றிடுறியள்..???!

அதுமட்டுமல்ல.. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள தமிழர்கள் இஸ்ரேலியப் படைகள் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்து நின்றபோது அதற்கு எதிராக பலஸ்தீன மக்கள் கிளர்ந்தது போல கிளர்ந்து தினமும் கல்லாலும் போத்தலாலும் எறிந்து அவர்களின் இருப்பை வெறுப்பவர்களாக நிஜத்தில் நடந்து கொள்கின்றனரா இல்லையே. இராணுவம் போடும் பிச்சைக்கு அடிபணிந்து நாம் சந்தோசமா இருக்கிறம்.. புலி வாறதாலதான் பிரச்சனை என்று கொண்டெல்லோ இருக்கினம்..???! இவைதான் உண்மையா பாதிக்கப்படுற மக்களா..???! :D

இதே நிலையில் தான் இந்துமாமன்றமும் செயற்பட முடிகிறது இலங்கையில்.. அடக்குமுறைக்கு உள்ளாகி உள்ளதில் அதுவும் ஒன்று. இந்துமாமன்றம் சார்பாக பல தடவைகள் அரசிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அவை கவனத்தில் எடுக்கப்படவே இல்லை. புலிகள் வைத்தே எடுக்கப்படாத கோரிக்கைகளாக உள்ள போது.. இந்துமாமன்றத்தால் ஆகுமா..??! இந்துமாமன்றம்.. இலங்கைக்கு வெளியில் தாயக மக்களின் நலனில் அக்கறையோடு செயற்படுவது உங்கள் கண்ணுக்குப் புலப்படவில்லையா..???!

தற்போது இந்துமாமன்றம் அரசியலுக்கு அப்பால் மக்களிடம் எழுந்துள்ள புத்தாண்டு தொடர்பான சர்ச்சையை தீர்க்க அது பற்றி கூடி ஆலோசித்து தமது முடிவை வெளியிட்டுள்ளனர். அதை ஏற்பதும் விடுவதும் சிறீலங்கா அரசுக்கு வைத்த கோரிக்கைகள் போன்ற ஒன்றுதான். மக்களே முடிவுகளைத் தீர்மானிக்கலாம். இந்துமாமன்றம் ஒன்றையும் திணிக்கவில்லை..! :o:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் படும் துன்பத்தில் இப்போ சித்திரையா , தையா என்பதா முக்கியம் .இவைகளை பின்பு யோசிப்போம்.

முதலில் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி எமக்காக குரல் கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் படும் துன்பத்தில் இப்போ சித்திரையா , தையா என்பதா முக்கியம் .இவைகளை பின்பு யோசிப்போம்.

முதலில் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி எமக்காக குரல் கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.

வன்னி மக்களைத் தவிர வேறு எவரும் துன்பப்படும் மக்கள் என்று இனங்காண முடியவில்லை...! அதுதான் நிலை இன்று. துன்பப்படும் மக்கள் சும்மா போர்த்து மூடிட்டு இருந்தா துன்பம் நீங்காது. ஒன்றில் இராணுவ அடக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டும். அதை வெளி உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். இராணுவம் வழங்கிற வசதிகளோட திருப்திப்பட்டு கம்மென்று வாழுற மக்களை துன்பப்படும் மக்களா.. விடுதலைக்குப் போராடும் மக்களா எப்படி அவர்களை அந்த வகையில் இனங்காண்பது..???! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குப் புதுவருடம் எப்போது? -அ.மயூரன். லண்டன்

புதுவருடம் என்றாலே மனதில் குதூகலமும் சந்தோசமும் நிலவும் நாளாக கணிக்கப்படுகின்றது அத்துடன் கடந்தவருட இன்னல்கள் அனைத்தும் நீங்கி பிறக்கின்ற வருடம் சிறப்பாக அமையவேண்டும். என்கின்ற திறனை எமக்கு வழங்குவது புதுவருடம்

தமிழர்கள் இவ்வளவு நாளும் சித்திரை மாதத்தின் தமிழ் முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இது உண்மையில் தமிழர்களுக்குரிய நாள் அல்ல என்பதே பல அறிஞர்களது கருத்து. ஆகவே தமிழர்களுக்கு தனியான புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். என்ற இவர்களது ஆதங்கம் வரவேற்கத்தக்கதாகும். இந்த நேரத்திலே பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது.

“நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை அல்ல உனக்கு தமிழ்ப் புத்தாண்டு தரணி ஆண்ட தமிழர்க்குத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு”.

என்று தமிழர்களைத் தூக்கதிலிருந்து விழித்தெழ வேண்டினார். அந்தவகையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் கடந்த மாதம் தமிழர்களின் தேசிய திருநாளான தைப்பொங்கல் அன்றே அதாவது தை மாதம் முதல் நாளே தமிழரின் புத்தாண்டு என்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பல வாதப் பிரதி வாதங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அவ்வாறு கருணாநிதி தை மாதத்தை புத்தாண்டாக அறிவிக்க என்ன காரணம் அப்படி என்ன விசேஷம் என நோக்கினால் அது திருவள்ளுவர் பிறந்த மாதம் என்கின்றார்கள் திருவள்ளுவர் கிறிஸ்து பிறப்புக்கு முன் 31ஆண்டுகள் முன்பு பிறந்தார் என்று கூறுகின்றனர். அதனால் தான் கருணாநிதி திருவள்ளுவர் பிறந்த தை மாதத்தை வருடத்தின் முதல்நாளாக கொண்டாட வேண்டும் என அறிவித்திருந்தார்.

இது குறித்து நோக்கும் போது 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லுரியில் தமிழறிஞர் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழ் மாநாட்டில் சுவாமி ஞானப்பிரகாசர் உட்பட 500 மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழருக்கு தனியான புத்தாண்டு ஒன்றைக் கொண்டாடுவது குறித்து விவாதித்தனர்.

அதில் எல்லா மதங்களும் தமது மதத்தை வளர்த்தவர்களின் நினைவையே புத்தாண்டு தினமாக கொண்டாட தமிழர்களுக்கு மதத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தாண்டைக் கொண்டாட முடியாத நிலை ஏனெனில் சைவத்தின் தோற்றம் இன்னதென்று கூறமுடியாது. ஆகவே நமது தாய்மொழியான தமிழின் வரலாற்றினை ஆராய்ந்தார்கள்.

அவ்வரலாற்றில் தொல்காப்பியமே எமக்குக் கிடைத்த ஆதி நூலாகும் அதற்கு முன்பும் பல நூல்கள் தோற்றம் பெற்றாலும் அவை கால வெள்ளத்தால் அழிந்து மண்ணாயின. ஆகவே தொல்காப்பியத்தையே ஆதிநூலாகக் கொள்கின்றனர்.

ஆனால் தொல்காப்பியத்தை ஆக்கியோர் பெயர் தெளிவாக தெரியாமையால் அதனை ஆக்கியோரை தொல்காப்பியர் என அழைத்தனர். எனவே இவரின் தினத்தையும் புத்தாண்டு தினமாகக் கொண்டாட முடியாது.

தமிழில் தெளிவாகத் தெரியக் கூடியதாக இருப்பது திருக்குறளை ஆக்கிய திருவள்ளுவரையே இவர் கி.மு 31இல் பிறந்தார் என்கின்றனர். இதில் கூட பல குழப்ப நிலைகள் இருக்கின்றன. அவர் புத்தரின் காலத்திற்கு முற்பட்டவர் என்றகருத்தும் நிலவுகின்றது ஏனெனில் அவர் காளி விஷ்ணு பற்றிக் தனது குறளில் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் புத்தர் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை எனவே அவர் புத்தரின் காலத்திற்கு முற்பட்டவர் என்கின்றனர். திருவள்ளுவர் புத்தரைக் குறிப்பிட்டுள்ளார். அவர் பகவான் என அழைப்பது புத்தரையே திருவள்ளுவர் காலத்தில் விஷ்ணுவைப் பகவான் என அழைக்கப்படவில்லை. அத்துடன் தாமரை மலரோன் என்பதும் புத்தரையேயாகும். அக்காலத்திற்குப்பின்தான் அது விஷ்ணுவுக்கும் இலட்சுமிக்கும் வழங்கப்பட்டன.

எனவே திருவள்ளுவர் பிறந்தது கி.மு.31இல் ஆகும் என உறுதிப்படுத்தினர். ஆகவே தை மாதம் முதன் நாளையே புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தனர். (உதாரணமாக திருவள்ளுவர் காலம் கி.மு.31 ஆங்கில ஆண்டுடன் கூட்டினால் 2008+31=2039 இதையே ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது). இருந்தும் பார்ப்பணியர்களால் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது இவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் 1945ஆம் ஆண்டு திருச்சி அகிலத்தமிழர் மாநாடு என்ற பெயரில் பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் ஒரு மாநாடு நடை பெற்றது. இதில் கா.சுப்ரமணியனார், மதுரைத் தமிழவேள், பி.டி. இராசன், தெ.பா.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப.சாமி, திரு வி.க.மறைமலை அடிகள தந்தை ஈ.வெ.ரா.பெரியார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் போது தைப்பொங்கல் விழா சமய விழாவா? சமயமற்ற விழாவா, என்பது தொடர்பாகவும். தமிழர்களின் புத்தாண்டை தைமாதத்தில் கொண்டாடுவது தொடர்பாகவும் பலத்த விவாதம் இடம்பெற்றது. இறுதியாக மறைமலை அடிகள். திட்டவட்டமாக கீழ்வருமாறு கூறினார்.

“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பி குழப்பம் விளைவிக்க முயன்றாலும் தை மாதத்தை தமிழர் புத்தாண்டாக ஏற்க முடியாது என வாதிப்பவர்களும் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். என்றும் கூறிய அவர்.

தைப்பொங்கலானது சமய சார்பு அல்லாத விழா எந்தச் சமயக்காரன் எந்தச் சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான். எந்தச் சூத்திரம் எந்த இதிகாசம் இதற்குச் சான்றாக அமைகின்றது. ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலின் சான்று இருக்கின்றது.

அத்துடன் தமிழில் தமிழ் ஆண்டு என்ற பெயரில் இருக்கின்ற “பிரபவ முதல் அட்சய” வரையான 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் பெயர் அல்ல வடமொழிப் பெயர்கள் இது தமிழ்மண, மரபு, பண்பு ஆகியவற்றுக்குப் போருத்தமாக இல்லை. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் சரி தை மாதமே தரணியாண்ட தமிழர்களின் புத்தாண்டாக மாற வேண்டும் என்று மறைமலை அடிகள் முழங்கினார்”. இல்லை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன். என்று தந்தை ஈ.வெ.ரா.பெரியார், தெளிவாகப் பதிலுரைத்தார். சபையிலிருந்த அனைவரும் கையொலி எழுப்பினர்.

இதனையடுத்து மறைமலை அடிகள் இதனைப் பாராட்டி தைப்பொங்கலானது தமிழர்களின் பண்பாட்டு விழா எனவும் சூரிய இளவேனில் காலத்தின் முதன்நாளான தைபொங்கல் தினத்தையே தமிழ்ப்புத்தாண்டாக வருங்காலத்தில் கொண்டாடப்பட வேண்டும். எனவும் இதற்கான முயற்சியை அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இது பற்றி பாமர மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பின்னர் இது ஏனோ நடைமுறைப்படுத்தப் படாது கிடப்பில் போடப்பட்டது நமது துரதிஸ்டமே.

இதற்கு மற்றுமொரு காரணமும் இருப்பதாக நம்பப்படுகின்றது. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சித்திரையிலேயே புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். தந்தை ஈ.வெ.ரா.பெரியார், அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவே தை மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடுவதை அவர் விரும்பவில்லை. ஆகவே இதை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் இடம்கொடுக்கவில்லை. என்றும். அவர் திருச்சி மாநாட்டிலே மறைமலை அடிகளிடமுள்ள மதிப்பின் காரணமாகவும் அந்த மாநாட்டைத் தான் இடையில் குழப்பி கெட்ட பெயரை தான் வாங்காமல் இருக்கவுமே அமைதி காத்தார் எனவும் கூறுபவர்களும் உள்ளனர். எதுவாக இருந்தாலும் தை மாதத்தையே நமது அறிஞர்கள் புத்தாண்டாக ஏற்றுக்கொண்டனர். என்பதே உண்மை.

தமிழ்நாட்டு முதலமைச்சர்களாக வந்தவர்களில் பெரும்பான்மையானோர் வேற்று இடத்தைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர். இதனால் இவர்கள் தமது இனம் சார்ந்த மக்களின் பண்பாட்டையே கடைப்பிடிக்க முயன்றனர். கேரளத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர், அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பங்காற்றியிருந்தாலும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.