Jump to content

உயிர்த்துளியின் ஓரத்தில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உயிர்த்துளியின் ஓரத்தில்

கண்களை மூடிக் கொண்டேன். மெல்லிய இளங்காற்று என் மேனியைத் தழுவிட,

புலன்களால் இனங்காணமுடியாத ஒரு அமானுஸ்ய உணர்வு என்னை ஆக்கிரமித்தது.

கவிந்த இமைகளுக்குள் நிலைத்த விழிகளுக்குள் தவிப்பும், தாகமும் விரிந்தன.

மூடிய கயல்களின் ஓரங்களில் மெல்லிய ஈரக்கசிவு.

எங்கோ பசுமையைச் சுமந்தபடி என் வரவிற்காய் ஏங்கியபடி காத்திருப்பதாய்,

எனக்குள் உணர்த்தியபடியே, புன்னகையை வீசி என்னைத் தனக்குள் ஈர்த்தது பாசம்.

அக்கினித் தகிப்பில் உடலும், உள்ளமும் எரிந்தன.

பனிக்கரங்கள் அணைத்துக் குளிர்ச்சி தரும் வெளிகளில் இருக்கும்

என்னிருப்பின் உணர்வுகள் காலநிலைகளைத் தாண்டி முரண்பட்டுக் கிடக்கின்றன.

அடையாளங் காணப்படாத பிணங்களைப் போன்று எண்ணங்கள் அவலமுறுகின்றன.

எல்லாமே என்னிடத்தில்இருக்கின்றன.

மானிடத்தின் உணர்வுகள் அடங்கிய பெரும் படைப்பு நான்.

உலக வாழ்வியலின் கதம்பக் கோர்வை என்னுள் வியாபித்து வாசம் வீசுவதாக எனக்குள் ஒரு மிதப்பு.

இருப்பினும் ஏதோ.... ஏதோ ஒன்று

அம்மா மடியில் முகம் புதைத்து எதற்காகவோ அழவேண்டும் போல் அடிக்கடி என்னுள் ஏக்கம் வளர்கிறது.

அந்த மடிக்குத்தான் என்னைப் புரியும் என்பதுபோல் எனக்குள் ஒரு பட்டிமன்றம்

ஒவ்வொரு நாழிகையும் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஏன் என்ற கேள்விக்கு என் எழுதுகோலாலும் பதில் சொல்ல முடியவில்லை.

எப்போதுமே கம்பீரமாக நிமிர்ந்து கர்வத்தோடு என்னை நோக்கும் இந்த எழுதுகோலும்

இன்று ஏனோ என்னைப் புரிந்து கொள்ளமுடியாமல் திண்டாடித் திண்டாடி பதிவிட இயலாமல் கனத்துப் போகிறது.

மனதை வசீகரிக்கும் ரம்மியமான கனவுகளும் கடன்தர மறுக்கின்றன.

மனப்பையில் வார்த்தைக் கோலங்கள் பொங்கி வழிந்து,

உணர்வுத் தீயின்மேல் குதித்துத் தீய்ந்து கருகி மறைய,

அவற்றில் பீனிக்ஸ்களாக தவிப்புகள் பிறப்பெடுக்கின்றன.

நரம்புகளின் மூலை முடுக்கெல்லாம் தாகம் பிறக்கிறது.

இது என்ன?... என்மனதிற்குள் புதையுண்டு கிடக்கும் பிரமாண்டம்

என் மூச்சின் வெளிகளை நிரவி வானளாவ வளர்கிறது.

என் அம்மா என்னை அழைக்கிறாள். நான் போக வேண்டும்.

அதோ அம்மா என்னை மறுபடியும், மறுபடியும் அழைத்துக் கொண்டிருக்கிறாள் நான் போக வேண்டும்.

ஐயோ!.... என் தாயின் குரல் ஏன் இவ்வளவு தீனமாக ஒலிக்கிறது?...

என் தாயின் குரலில் பெரு வலி தெரிகிறது.

திடீரென்று முளைத்த தற்கால வலியாகத் தெரியவில்லையே...

நீண்டகால ரணத்தின் ஒலியெழுப்பல் போலல்லவா படுகிறது.

இதென்ன?..... அண்டை அயலெலாம் உற்சாகப்படுத்த என் தாயை

ஒரு கோரப்பிசாசு தன் பற்களினாலும், கோர நகங்களினாலும் காயப்படுத்தி,

ஊனையும், உதிரத்தையும் சுவைத்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது அங்கே?

அம்மாவை ஏன் வதைக்கிறீர்கள்?

வேதனையுடன் கதறுகிறேன்.

ஆ... அங்கே என் சகோதரன் நிற்கிறான்..... அவனாகிலும்.....

சீ.... மானங்கெட்டுப் போனானே.....

அன்னையின் துகிலுரிப்பில் அவனுக்கும் ஒரு பங்கா?......

மனதிற்குள் கோரப்பேயைக் காட்டிலும்,

அன்னை முலையில் எச்சில் பாலுண்ட கருவறைத் தோழன் கருகிப்போனான்.

எனக்குள் சீற்றம் பொங்கப் பொங்க கண்ணீரோடு கத்திக் கொண்டு என்னைச் சுமந்தவளை நோக்கி,

கைகளை நீட்டி ஓடுகிறேன்.

ஆ....... குதிக்காலில் எங்கிருந்தோ வீசப்பட்ட கற்கள் தாக்க,

நிலைகுலைந்து வீழ்ந்தேன் சுற்றும் பார்த்தேன்.

கவன்களைச் சுழற்றியபடி மனித முகமூடி அணிந்த மிருகங்கள் எக்காளமிட்டுச் சிரித்தன.

அம்மாவின் அழைப்பில் இப்போது சீற்றம் பொங்குகிறது.

'வா.... மகவே!

எழு!.... வா....மகவே!

இது பேய் விரட்டும் நேரம் வா!.."

என்று அவளின் குரலில் ஓங்காரம் ஒலிக்கிறது.

சித்திரைப் பறுவம் அம்மாவிற்கான நாள் என்று நோன்பின் விளக்கம் வானொலியில் ஒலிக்கிறது.

ஐயோ!.... வாதைகளின் மையத்திருந்து அம்மா என்னை அழைக்கிறாள்.

நான் போகவேண்டும்... நான் போகவேண்டும்.

'விழுதென்று என்னை வீசி எறியாது இழுத்து அரவணைத்து

முந்தானைத் தொங்கலினால் முகம் திருத்தும்

மனம் பெருத்த அன்னையடி நான் மாசுற்றுப் போவது எப்படி?

அழுதிருக்கும் வேளையிதை அறியாது நிற்பேனோ?

அன்னாய்! அணைத்துந்தன் வலி தீர்க்கும் ஓர் மகவாய்,

உன் உயிர்த்துளியின் ஓரத்தில் நானிருப்பேன்."

Posted

அன்னையின் அவலத்தைத் தவிர்ப்பதற்கு அருகிலிருக்க முடியாவிட்டாலும் பறவாயில்லை. என்னுடைய அன்னை அலங்கோலப் படுத்தப் படுகிறாள் என்ற உண்மையை அகிலத்துக்கு எடுத்துச் சொல்வதற்குக் கூடத் தயாராயில்லாதவர்களாய் அதிகமானோர் இருப்பது வேதனையிலும் வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலத்திற்க்கு ஏற்ற கதை சகாரா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மணிவாசகன், புத்தன் உங்கள் விமர்சனத்திற்கும் , ஊக்கப்படுத்தலுக்கும் நன்றிகள்

Posted

ம்ம்.."உயிர்துளியின் ஓரத்தில்" என்ற சகரா அக்காவின் படைப்பு பலரது ஏக்கங்களை தாங்கி செல்கிறது ஏக்கத்துடனும் தவிப்புடனும்..வாழ்த்துக்கள் சகாரா அக்கா.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த உணர்வுக்குவியலை வாசித்துக் கருத்துச் சொன்ன யமுனாவிற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.