Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

Featured Replies

‘‘என்ன செய்து கிழித்தார் பெரியார்?’’

பனை ஏறும் தந்தை தொழிலில்

இருந்து தப்பித்து

தலைமைச் செயலகத்தில்

வேலை செய்பவர் கேட்டார்.

“பெரியாரின்

முரட்டுத்தனமான அணுகுமுறை

அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க”

இது

முடிவெட்டும் தோழரின் மகனான

எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

“என்னங்க

பெரியார் சொல்லிட்டா சரியா?

பிராமணனும் மனுசந்தாங்க.

திராவிட இயக்கம்

இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’ பாணியில்

கேட்டவர்

அப்பன் இன்னும்

பிணம் எரித்துக் கொண்டிருக்க

இங்கே

டெலிபோன் டிபார்ட்மென்டில்

சுபமங்களாவை விரித்தபடி

சுஜாதா

சுந்தர ராமசாமிக்கு

இணையாக

இலக்கிய சர்ச்சை

செய்து கொண்டிருக்கும்

அவருடைய மகன்.

ஆமாம்

அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

நன்றி

‘இனி’ மாத இதழ்

1993 அக்டோபர்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாப் புலுடா விடுகின்றீர்கள். மற்றய மாநிலங்களில் ஒன்றும் இது நடக்கவில்லை. தமிழ்நாட்டில் தான் நடந்தது போல.

கதை விடுவதற்கும் அளவு வேண்டாமா?

  • தொடங்கியவர்

நல்லாப் புலுடா விடுகின்றீர்கள். மற்றய மாநிலங்களில் ஒன்றும் இது நடக்கவில்லை. தமிழ்நாட்டில் தான் நடந்தது போல.

மற்றைய மாநில தலைமைச் செயலகங்களில் பார்ப்பனர்கள் தானே இன்றைக்கும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மத்திய அரசு அலுவலகங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் தான் இந்திய அரசின் ஈழம் குறித்த நிலைபாடு தமிழருக்கு எதிராக இருக்கிறது. ஈழத்துக்கு கொஞ்ச நஞ்சம் ஆதரவு இருப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். பெரியார் இங்கே பிறந்திருக்காவிட்டால் அதுவும் இருந்திருக்காது. ஏனென்றால் இன்று உங்களை ஆதரிக்கும் நாங்கள் மாடு மேய்த்துக்கொண்டோ, செருப்பு தைத்துக்கொண்டோ இருந்திருப்போம். ஈழத்தை ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எமக்கென்ன என்று வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்து கிழித்தார் ராமசாமி... நியாயமான கேள்வி தான்.. இன்றைக்குத் தமிழனத்தைக் கூறு போடவைக்கவில்லையா? மற்றய சமுதாயங்களோடு அந்நியப்பட வைக்கவில்லையா? நித்திரையிலும் பார்ப்பானி என்று உங்களைப் புலம்ப வைக்கவில்லையா?

கன்னடர்கள் தமிழனின் தலையில் அரைக்கலாம் என்பதை வெளிப்படுத்தி வைக்கவில்லையா?? இப்படி இன்னோரன்ன தொண்டுகளைச் செய்திருக்கின்றபோது, என்ன செய்தார் என்று கேட்பது நியாயமா??

லக்கி ஈழம் தொடர்பாக உங்களுடைய கருத்துக்களில் என் எதிர்ப்பினைச் சொல்லுவேன். இருக்கின்றதையும் கெடுக்கின்றான் எனப் புலம்புவார்கள். வேண்டாம்...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல கவிதை இணைத்ததற்கு நன்றி லக்கிலுக் ( என்னை உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல தடவைகள் உங்கள் கருத்துக்களை எதிர்த்திருக்கிறேன்..... பின்பு உங்களை இங்கே காண கிடைப்பதிலைலை மீண்டும் வந்திருக்கின்றீர்கள் போல்)

எமது இன்றைய சுகவாழ்விற்கு முன்னையவன் எவ்வாறு பாடுபட்டான் என்பதை மனத இனம் எப்போதுமே மறந்துதான் வந்திருக்கின்றது!

மற்றைய மாநில தலைமைச் செயலகங்களில் பார்ப்பனர்கள் தானே இன்றைக்கும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மத்திய அரசு அலுவலகங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் தான் இந்திய அரசின் ஈழம் குறித்த நிலைபாடு தமிழருக்கு எதிராக இருக்கிறது.

விட்டா இந்தியாவுக்காக ராக்கட் விட்ட அப்துல்கலாம், இந்திய கிறிக் அணியின் தலைவராக இருந்தவர்கள் எல்லாம் பெரியாரின் வளி வந்தவர்களால் தான் ஆனது எண்று சொல்வீர்கள் போல இருக்கே...!!

இந்தியாவில் பார்பணந்தான் ஆழுகைக்கை வைத்து இருப்பது எண்டால் யாதவும், பஸ்வானும் பாராளு மற்ற பக்கமே போய் இருக்க முடியாது... அப்துல்கலாம் ஜனாதிபதியாக கூட முடிந்து இருக்காது... வெங்கட் ராமன்கள் மட்டும்தான் அந்த பதவியில் இருந்து இருக்க முடியும்...!!

  • கருத்துக்கள உறவுகள்

பாரினில் தமிழன்

தான் ஓர் இனம்..!

மனுக்குல உண்மைகள்

மறந்தும் சிலர்

பார்ப்பர்ணியம் உச்சரித்தே

சாதிக்கத் துடிக்கிறார்

இன்னும் தமிழருள் பிரிவினைகள்..!

பெரியார் ஓதாமல்

ஓதிவைத்தான் வேற்றுமைகள்

சிறுமைகள் காட்டி

மதத்தால் ஒதுக்கி

பேசியது என்னவோ

"வேண்டாம் பிரிவினை"..!

உதாரணம் சொல்ல

ஒரு அம்பேத்கார்

யாரவர்..??!

கேள்விகள் முளைக்க

விடைகள் வரும்

"ஒடுக்கப்பட்டவர்"

இப்படித்தான் இன்னும்

அடையாளம் காவுகிறார் தந்திரமாய்..!

இன்னது இல்லையென்று

அத்தனையும் உச்சரிச்சு

மறைமுகமாய் அனைத்தும் காட்டி

சாதிக்க நிற்கின்றார் சிலர்..!

போடும் கோஷம் என்னவோ

"வேண்டாம் ஒழிப்போம்"..!

கேவலம்...

வேஷங்கள் கலைக்கா

கோமாளிகள் தாமென்ற

உண்மை உணரவில்லை அவரும்..!

தமிழனவன் திராவிடன்

தென்னகம் அவன் வாழ்நிலம்

வஞ்சிக்க வந்த அந்நியம் கண்டு

ஆரியம் திராவிடம் வகுந்து

கொண்ட வீரம் தொலைத்து

மருண்டதேனோ..?!

பிரிவினைகள் பாகுபாடுகள்

தந்ததென்று

இன்னும் வரலாறு வரைவதேனோ..?!

மறந்திட வேண்டியவை

மறுபடி வரலாற்றில்

மதிக்கப்படவும் வேண்டுமோ...?!

பார் இன்னும்

பார்ப்பர்ணியம் உச்சரிக்கும்

கூட்டம் இருக்குது...

பெரியார் வழியில்

வந்த சிறுமைகள் அவை

வாய் கிழிய உச்சரிப்பது

இன்னும் என்னவோ

வேற்றுமை தான்..!

பேடிகள்

இந்தக் குள்ளநரிகள்

கையறுத்து

அழிப்போம் மீளப்பதியும்

தந்திரச் சான்றுகள்..!

திராவிட உலகில்

தமிழன் ஓர் மனித இனம்

அதுவே உண்மை...

சாதித்து நின்று

கரம் கோர்ப்போம் ஓரணியில்

மற்றதுகள் மறுப்போம்..!

வடிவங்கள் மாறினும்

புரட்சியாய் தோன்றிலும்

பலரும் போதிப்பது என்னவோ

ஏற்றமும் தாழ்வும்..!

வேண்டாம் அது

இக்குஞ்சுகள் போல

தமிழரும் மனிதராகி

சமத்துவம் காணுவோம்

நமக்குள்ளேயே...!

வேண்டாத உச்சரிப்புகள்

தவிர்ப்போம்...

மறந்தவை மரிக்கட்டும்..

நிரந்தரமாய்..!

http://thedatsaram.blogspot.com/search/lab...%AE%A4%E0%AF%88

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி நெடுங்காலபோவன்

ஒரு விடயம் கண்டீர்களா? பொதுவாகத் திராவிடம் பேசுகின்றவர்களின் தமிழ் என்பது கொச்சைத் தமிழாகவும், ஆங்கிலக்கலப்போடும் , பக்தி, ஆன்மீகம், அல்லது இவர்களுக்கு எதிர்ப்பியல் செய்கின்றவர்களின் தமிழ் தூயதமிழ் தழுவியே அமைந்திருக்கும். வலைப்பூக்களில் ஆக்கிரமிப்புச் செய்திருக்கும் இவர்களின் தமிழைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகின்றது.

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.