Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் விடுதலைப்புலிகளுக்கு உதவியாக அமைந்து விடும் சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி விவாதம்

Featured Replies

சேது சமுத்திர திட்ட வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடிய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விடுதலைப்புலிகளுக்கு உதவியாக அமைந்து விடும் என்று கூறினார்.

சேது சமுத்திர திட்ட வழக்கு

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று கோரி இந்து அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரும் இதேபோன்று மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பன்சால் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சுப்பிரமணியசாமி ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவில் விடுதலைப்புலிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக அமைந்து விடும் என்று இந்திய கடற்படை தளபதியும், கடலோர காவல் படை இயக்குனரும் எச்சரித்து இருப்பதை புறக்கணித்து விடக்கூடாது. மேலும் இப்போது உள்ள திட்டப்படி சேதுக் கால்வாயை அமைத்தால் கப்பல்கள் எளிதில் செல்வதற்கு உகந்ததாக இருக்காது என்று நிபுணர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் மத்திய அரசு அதை புறக்கணிக்கிறது. அப்படி புறக்கணித்தால் இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சினையில் சமரசம் செய்து கொண்டதாக அமைந்துவிடும்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் விடுதலைப்புலிகள் தங்கள் தளத்தை கேரளாவில் உள்ள கொச்சிக்கு மாற்றுவதற்கு உதவி செய்வதாக அமைந்துவிடும். ஏனெனில் அவர்கள் கொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எளிதில் சென்றுவிட முடியும்.

மத நம்பிக்கை

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுமானால், அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் 80 கோடி இந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை மத சுதந்திரத்தை மீறியதாக அமைந்து விடும்.

இந்த பிரச்சினையில் மத்திய அரசும் தமிழக அரசும் இரட்டை நிலையை மேற்கொள்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட போது, அது மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று தமிழக அரசு கூறியது. இந்த வழக்கு தொடர்பான ராமர் பாலம் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். இந்த உண்மையை மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

விசாரணை

இப்போது உள்ள திட்டப்படி சேது கால்வாய் தோண்டினால் அந்த பணி முடிவற்றதாகி விடும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் எந்த கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது அந்த கம்பெனிகளை நிர்வகிப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியசாமி வாதாடினார்.

நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது ஒரு கட்டத்தில் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் குறுக்கிட்டு பேசுகையில்; கடலுக்குள் இருக்கும் பாலத்தை வழிபாட்டு தலமாக கருத முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதுபற்றி நேற்று தனது வாதத்தின் போது பேசிய சுப்பிரமணியசாமி; "நாம் சூரியனை வணங்குகிறோம். அதற்காக யாரும் சூரியனிடம் செல்வது கிடையாது'' என்று கூறினார்.

இந்து முன்னணி

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் சார்பில் வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார்.

அவர் வாதாடுகையில்; சேது சமுத்திர திட்ட கால்வாய் திட்டத்துக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அந்த திட்டத்தை 4-வது வழித்தடத்தில் செயல்படுத்துவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றும் கூறினார். இந்த திட்டத்தை உருவாக்கிய ராமசாமி முதலியாரும் 6-வது வழித்தடத்தை பரிந்துரைக்கவில்லை என்றும் 2006-ம் ஆண்டில்தான் 6-வது வழித்தடத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறினார

http://isoorya.blogspot.com/

space.gif

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் மனுசர். இராமர் பாலத்தைத் தினமும் போய் வணங்குகின்ற அவருக்குப் போய் இப்படி ஒரு சோதனையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் மனுசர். இராமர் பாலத்தைத் தினமும் போய் வணங்குகின்ற அவருக்குப் போய் இப்படி ஒரு சோதனையா?

தூயவன் இந்த விசயத்தில் என்ன இப்படி பேசிட்டிங்க. இன்னும் விரிவாக உங்களிடம் இருந்து கருத்தை எதிர்ப்பார்த்தேன். பகவான் ராமர் , அனுமார், குரங்குகள் கட்டிய பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா. இதற்கு முன் இது பற்றிய உங்கள் கருத்துக்கள் எனக்கு தெரியாததால் இதை கேட்டிருக்கிறேன். :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26943

ஏற்கனவே இது போன்ற ஒரு தலைப்பில் விவாதித்து தலையைப் பிய்த்துக் கொண்டோம்.

பொறுமை இருந்தால் படித்துப் பாருங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் இந்த விசயத்தில் என்ன இப்படி பேசிட்டிங்க. இன்னும் விரிவாக உங்களிடம் இருந்து கருத்தை எதிர்ப்பார்த்தேன். பகவான் ராமர் , அனுமார், குரங்குகள் கட்டிய பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா. இதற்கு முன் இது பற்றிய உங்கள் கருத்துக்கள் எனக்கு தெரியாததால் இதை கேட்டிருக்கிறேன். :lol:

நண்பர் பகுத்தறிவு(?)

சேது சமுத்திரத்திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அது இராமர் பாலம், இருந்தாலும் இல்லாவிட்டாலும் வரவேற்கப்பட வேண்டியது.

ஆனால் இராமர் பாலம் தொடர்பாக உண்மையான ஆராட்சி செய்து பாருங்கள் என்பதே எம் வேண்டுகோள். அது ஆரியர் எழுதின நூல் என்ற ஒரே நோக்கத்திற்காக எதிர்க்கின்ற உங்களின் பிழைப்பை நாங்கள் வரவேற்கவில்லை. அது பகுத்தறிவும் கிடையாது.

பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூதறிஞர் இராஜாஜியே கம்பராமாயணத்தை "சக்கரவர்த்தித் திருமகன்" என்று தனது பாணியில் மீண்டும் எழுதிய போது முன்னுரையில் கற்பனைப் பாத்திரமாகிய இராமன் எனக் குறிப்பிட்டுள்ளார். இராமனையே அவர் கற்பனையென்று கூறும் போது இராமனால்க் கட்டப்பபட்டதாகச் சொல்லப்படும் அணையை எப்படி நிஜம் என்பார்கள்??

நண்பர் பகுத்தறிவு(?)

சேது சமுத்திரத்திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அது இராமர் பாலம், இருந்தாலும் இல்லாவிட்டாலும் வரவேற்கப்பட வேண்டியது.

ஆனால் இராமர் பாலம் தொடர்பாக உண்மையான ஆராட்சி செய்து பாருங்கள் என்பதே எம் வேண்டுகோள். அது ஆரியர் எழுதின நூல் என்ற ஒரே நோக்கத்திற்காக எதிர்க்கின்ற உங்களின் பிழைப்பை நாங்கள் வரவேற்கவில்லை. அது பகுத்தறிவும் கிடையாது.

சேது கால்வாய் வெட்டப்படுவதால் யாருக்கு நன்மை...??? அதை ஏன் வரவேற்கிறீர்கள்...??

சேதுகால்வாயால் வரும் வருமானத்தில் பங்கு எப்படியும் இலங்கை படைகளுக்கு ஆயுதம் வாங்க கொடுக்கப் போகிறார்கள்... இலங்கையை சமாதானப்படுத்த எண்று அதுக்கு விஜயகாந்து போண்ற குடிகாறனை வைத்து சொல்லவும் செய்வார்கள்... அதனால் ஈழத்தமிழனுக்கு என்ன நன்மை...??

அந்த கால்வாய் வெட்டப்படுவாதால் தமிழக்கத்தார் கூட 100% தம் பயன் அடையப்போவதில்லை என்பதோடு.. மன்னார் பக்கம் மீன் பிடிக்கும் எங்கட தொழிலாளர்களின் வலைகள் சேதமாக்கப்படும் கப்பல் களிவுகளால் சுற்றாடலும் அசுத்தமாகும்...

அதை ஈடுகட்ட ஏதாவது உதவி செய்வார்கள் என்கிறீர்கள்...?? நிற்சயமாக மாட்டார்கள்... வேண்டுமானால் இன்னும் ஈழத்தமிழன் வதை பட காரணமாக இருக்கும் அந்த கால்வாய்...!

எந்த கால்வாயை வேண்டுமானாலும் வெட்டட்டும் அதில் சந்தோசப்பட ஈழத்தமிழனுக்கு ஒண்றும் இல்லை....!

சேது கால்வாய் வெட்டப்படுவதால் யாருக்கு நன்மை...??? அதை ஏன் வரவேற்கிறீர்கள்...??

சேதுகால்வாய் திட்டமென்றால் என்னவென்றே தெரியாமல் தான் எதிர்க்கிறீர்களா?

அத்திட்டம் நிறைவேற்றப்படுமானால் பாண்டியர்கள் காலத்தில் பரபரப்பான துறைமுகமாக இருந்த தூத்துக்குடி துறைமுகம் மீண்டும் தன் பழம்பெருமையை மீட்க இயலும். இதனால் வறுமையில் வாடும் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நிறைய தொழில் வாய்ப்பு கிடைக்கும். ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலைவாய்ப்பு இல்லாததால் தான் அவனவன் கத்தியை தூக்கிக்கொண்டு சாதிச்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். வேலைவெட்டி ஏதாவது கிடைத்து, கையில் கொஞ்சம் பணம் புழங்கத் தொடங்கினால் அவனவன் குழந்தை, குட்டி என்று பிழைப்பை பார்ப்பான்.

இது தமிழர் முன்னேற்றத்துக்கான திட்டம் என்பதால் தான் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக வடநாட்டு தொழிலதிபர்கள் மும்பை துறைமுகத்தின் வருவாய் குறைந்துவிடுமே என்று எதிர்க்கிறார்கள்.

சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உண்மையில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை துறைமுகங்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும். இதனாலேயே சிங்கள அரசு கூட இத்திட்டத்தை எதிர்க்கின்றது.

சேது என்பது நந்தி.... அந்த கடலை நந்திக்கடல் எண்று அழைப்பர்... யாழ்ப்பாண இராசதானியின் கொடியும் நந்தி.. பாண்டியர்களின் நாணயம சேதுவின் தலையும் நந்தி... இப்படி அந்தக்கடலுக்கு இருபக்கமும் நந்தி பொதுவாக இருந்ததால், நடந்த கடல் வாணிப போக்குவரத்துக்கும் பொதுவான அதை சேது எனும் நாணயத்தை கொண்டு சேது கடல் ( நந்திக்கடல் எண்றும்) அழைத்தனர்... அங்கே வெட்டப்படுவது சேதுகால்வாய்...!

இப்போ இந்திய நடுவெண் அரசினால் இந்த கால்வாய் வெட்டப்படுவதால் மும்பைக்கும், விசாகபட்டினத்துக்கும் கிடைக்கும் முக்கியத்துவம் சென்னை, நாகபட்டினம், தூத்துகுடி, கோழிக்கோடு துறைமுகங்களுக்கு கிட்டும்...

அதனால் தமிழர்கள், மலையாழிகள் வேலை வாய்ப்பை பெருவர்... இந்த வேலைவாய்ப்பை பெறும் மக்கள் யார் எண்றால். அவர்கள் ஏலவே மீன் பிடித்தொழிலை வளமாக செய்து வரும் மீனவர்கள்... கடல் போக்குவரத்து காரணமாக மீன் வளம் அழிக்கப்பட்டு விடப்பட போவதால் கூலி வேலைக்கு அவர்களுக்கு பஞ்சம் இருக்காது...

அதோடு தொழில் நுட்பம் நிர்வாகத்துக்கு எண்று படித்த பல இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவர்... இது மத்திய அரசின் வேலையாதலால் கட்டாயம் தமிழர்கள்தான் அந்த வேலைகளில் அமர்வர் என்பதுக்கு உத்திரவாதம் இல்லை.... ( தொடர்ந்தும் போக்குவரத்து அமைச்சராக T R பாலு அவர்கள் இருந்தால் ஒருவேளை தமிழர்கள் அந்த நிலைகளுக்கு வரலாம்)

கடலால் 48 மணிநேரம் இலங்கையை சுற்றி போகவேண்டியதை 8- 10 மணித்தியாலங்களில் கடக்க உதவுவதால் இந்த கால்வாயை உபயோகிக்கும் கப்பல்கள் இந்திய போக்குவரத்து கடவை கட்டணம்(congestion charge) செலுத்துவதால் இந்தியா நடுவெண் அரசுக்கு வருமானம் வரும்...! அதோடு துறைமுகங்களின் பாவனை அதிகரிப்பாலும் கப்பல் திருத்தும் Yard க்களுக்கும் வருனம் அதிகரிக்கும்.. இப்படியும் இந்திய நடுவெண் அரசு வரவை பெற்றுக்கொள்ளும்...

இப்படி வருமானத்தை இந்திய அரசு பெற்றுக்கொள்ளும் எண்டாலும் அதில் தமிழ் நாட்டுக்கு என்ன வளங்கப்படும்...?? யாராவது இருவருக்கு அமைச்சர் பதவி ஒருவேளை அதிகரிக்கப்படலாம்... வேறு மானிலங்களில் இருந்து தருவிக்கப்படும் மீன் களின் விலை அதிகரிக்கப்படலாம்.... Dockyard களில் இருந்து வெளியேறும் களிவுகளால் கடற்கரை அதிகமாக அசுத்தப்படலாம்... துறைமுக விஸ்தரிப்புக்காக சூழலில் உள்ள மக்கள் வெளியேற்றபடலாம்... கடந்து செல்லும் கப்பல்களின் எச்சங்களால் கடற்கிளிஞ்சல்கள் அளிந்து போகலாம் அதனால் மீன் வளம் குறைக்கப்படலாம்....

ஈழத்தமிழருக்கு என்ன கிடைக்கும்...?? இந்த கால்வாயால் அதிர்ப்தியான இலங்கை பாக்கிஸ்தான் பக்கம் சாயாமல் இருக்க உதவிகள் அதிகரிக்கபடலாம்... இந்திய கடற்படையில் கால்வாய் பாதுகாப்புக்காயும் சுங்கத்துக்காகவுமான நடமாட்டங்களால் ஈழத்து மீனவர்கள் துன்புறுத்த படலாம்.. ஈழத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதிகாக வருபதும் முடக்கப்படலாம்.. இப்படி ஈழத்தவனுக்கும் இது நன்மை கொடுக்காவிட்டாலும் கெடுது செய்யும் கால்வாய்...

சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உண்மையில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை துறைமுகங்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும். இதனாலேயே சிங்கள அரசு கூட இத்திட்டத்தை எதிர்க்கின்றது.

சேதுகால்வாய் அகளப்படும் வரைபடத்தை பார்த்து இருப்பீர்கள் எண்டால் உங்களுக்கு இந்த எண்ணமே வந்து இருக்காது...

கிட்டத்தட்ட இராமர் பாலம் எனப்படும் மன்னாருக்கு மேலே இருக்கும் திட்டான பகுதியும், நாக பட்டினத்துக்கு அருகில் இருக்கும் ஒரு திட்டான பகுதியும் மட்டும்தான் வெட்டப்படுகிறது... மன்னாருக்கு வரும் கப்பல் சேது காய்வ்வாய்க்கு போவதற்கு அந்த திடலை மீண்டும் சுற்று இந்திய கரைக்கும் போய் போக வேண்டும்... அதேபோல நாகபட்டினத்துக்கு அருகில் வெட்டப்படும் இடத்தில் இருந்து 5 மைகளில் நாகபட்டினம்துறைமுகம்.. ஆனால் காங்கேசன் துறை 40 கடல் மைல்கள்...

இலங்கை எதிர்க்கிறது எண்றால் அது காலி , கொழும்பு துறை முகங்களின் முக்கியத்துவம் படுத்து விடும், வருமானம் போய்விடும் என்பதால்...

ஈழத்தவனுக்கு இந்த சேதுகால்வாய் பயன் கொடுக்க வேண்டும் எண்றால் இந்த கால்வாயை ஈழத்தவன் வெட்ட வேண்டும்.. அப்போதுதான் விரையங்களையும் வருமானங்களையும் சம்ன் செய்து பலன் கிட்டும்..

இதில் நாங்கள் மகிழ ஒண்றும் இல்லை..

ஈழத்தமிழருக்கு என்ன கிடைக்கும்...??

பனாமா கால்வாய் தோண்டியதால் இந்தியத்தமிழருக்கு என்ன கிடைத்தது? :wub::):)

என்னாம்மா கேள்வி கேட்குறாங்கப்பா.

சேதுகால்வாய் திட்டத்துக்காக உயிரை கொடுப்பேன் என்று சொன்ன வைகோ முட்டாளா என்று தயா விளக்கவேண்டும் :lol:

சேதுகால்வாய் திட்டத்துக்காக உயிரை கொடுப்பேன் என்று சொன்ன வைகோ முட்டாளா என்று தயா விளக்கவேண்டும் :wub:

மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்...

வைகோ தான் பிறந்த ஊரில் ( பிரதேசத்தில்) இருக்கும் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு பற்றியது.. அங்கே பணம் உள்ளவர்களிடம் கொடுக்கும் கூலிக்கு வேலை செய்யும் கூலியை விட அந்த கூலித்தொழிலை அரசாங்க வேலையாக்க வேண்டும் என்பது வைகோவின் குறிக்கோள்.. அதை பல தடவைகள் சொல்லியும் விட்டார்...!!

அவர் பேசுவது சமதர்மம்... அதனால் ஈழத்தவர் பயன் ஏதும் பெறமாட்டார்...

இதையே தமிழக அரசு ( தமிழர்கள்) பொறுப்பெடுத்து வெட்டுவார்கள் எண்றால் தமிழன் எண்ற அடிப்படையில் மகிழ்ச்சி அடைய முடியும்.. வாய்க்கால் வளியோடுகிற நீர் புல்லுக்கும் பொசிவதை தமிழக தமிழர் தடுக்க மாட்டார் என்று நம்பலாம்...

ஆனால் இண்று வாய்க்காலை வெட்டுவது ஹிந்தி பேசும் மக்களை பெருண்பாண்மையாகவும் தமிழர்களை சிறுபான்மையாக கொண்ட இந்தியா....!! இந்திய தமிழர்களுக்கு தண்ணியே கொடுக்க விரும்பாத நாடு அது... ஈழத்தமிழருக்கு நன்மை செய்வார்கள் எண்டு நமபலாமா..???

மொட்டைக்கும் முழங்காலுக்கு முடிச்சுபோட நினைப்பது நீங்கள் தான் தயா...

இந்தியா சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதால் ஈழத்தமிழருக்கு என்ன பயன் என்று கேட்கிறீர்கள்? இந்தியாவின் ஒரு துறைமுகத்தை மேம்படுத்தி ஈழத்தமிழருக்கு என்ன பயன் செய்துவிட முடியும்? இந்திய அரசு இலங்கைக்கு தன் கப்பல்கள் செல்ல வருடா வருடம் ஆயிரம் ஆயிரம் கோடிகளை கொட்டுகிறது. அந்த கோடிகளை இலங்கைக்கு தரவிடாமல் சேதுசமுத்திரத் திட்டம் செய்யும். இதுதான் ஈழத்தமிழருக்கு கிடைக்கும் ஒரே பயனாக இருக்கமுடியும்.

சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் சரக்கு போக்குவரத்துத் துறையில் பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். தென்மாவட்டத் தமிழருக்கு நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒரு திட்டம் வந்தால் அதனால் ஏற்படும் நேரடிப் பலன்களை மட்டும் உற்றுநோக்காமல், மறைமுகமாக என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சிந்தித்தலே புத்திசாலித்தனம்.

இராமயணத்தில் வரும் லங்காபுரி தற்போதைய இலங்கையாக இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆகவே சுப்பிரமணிய சுவாமி குறிப்பிடும் இராமர் பாலமும் கற்பனை பொருளாக இருக்கும் என்றே கருதுகிறேன்!

சேது அணைத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய நல்ல திட்டம். ஆனால் தமிழீழ சுதந்திரத்தின் முன் அது

நிறைவேற்றப்படுவது் சில பாதகங்களை ஏற்படுத்தி விடுமா என்ற கேள்வியும் உள்ளது.

ஈழத்தின் வடக்கு கடல் பிரேதேசத்தில் இந்திய மற்றும் வேறு சில நாடுகளின் வேவு கப்பல்களின்

நடமாட்டத்தை இது மேலும் அதிகரித்து விடுமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை

Edited by vettri-vel

இராமயணத்தில் வரும் லங்காபுரி தற்போதைய இலங்கையாக இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆகவே சுப்பிரமணிய சுவாமி குறிப்பிடும் இராமர் பாலமும் கற்பனை பொருளாக இருக்கும் என்றே கருதுகிறேன்!

சேது அணைத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய நல்ல திட்டம். ஆனால் தமிழீழ சுதந்திரத்தின் முன் அது நிறைவேற்றப்டுவதில் சில பாதகங்களை ஏற்படுத்தி விடுமா என்றா கேள்வியும் உள்ளது.

ஈழத்தின் வடக்கு கடல் பிரேதேசத்தில் இந்திய மற்றும் வேறு சில நாடுகளின் வேவு கப்பல்களின்

நடமாட்டத்தை இது மேலும் அதிகரித்து விடுமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை

அட என்னண்ணா நீரு இப்படி சொல்றேள்! :wub:

சேது திட்டம் நிறைவேறுனா புலிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிடுவா. பாதுகாப்புக்கு பங்கம் வந்துடும்னு இல்லியோ சுப்பிரமணியசாமி சொல்றார்.

மொட்டைக்கும் முழங்காலுக்கு முடிச்சுபோட நினைப்பது நீங்கள் தான் தயா...

இந்தியா சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதால் ஈழத்தமிழருக்கு என்ன பயன் என்று கேட்கிறீர்கள்? இந்தியாவின் ஒரு துறைமுகத்தை மேம்படுத்தி ஈழத்தமிழருக்கு என்ன பயன் செய்துவிட முடியும்? இந்திய அரசு இலங்கைக்கு தன் கப்பல்கள் செல்ல வருடா வருடம் ஆயிரம் ஆயிரம் கோடிகளை கொட்டுகிறது. அந்த கோடிகளை இலங்கைக்கு தரவிடாமல் சேதுசமுத்திரத் திட்டம் செய்யும். இதுதான் ஈழத்தமிழருக்கு கிடைக்கும் ஒரே பயனாக இருக்கமுடியும்.

அதலால் இலங்கை இந்தியாமீது கோபம் கொண்டு பாக்கிஸ்தான், சீனா பக்கம் சாய்ந்து விடும் எண்ற பயம் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு வராமல் விடாது... ( அதுதான் சேதுவுக்கு இப்போது இருக்கும் இளுபாடுகளுக்கு எல்லாம் காரணம்) அப்படி வந்துவிட்டால் துறை முகங்களில் வேலை செய்யாமல் செலவு இல்லாமை இலங்கைக்கு இந்தியாவில் இருந்து உதவி வந்து சேரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை...

சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் சரக்கு போக்குவரத்துத் துறையில் பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். தென்மாவட்டத் தமிழருக்கு நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒரு திட்டம் வந்தால் அதனால் ஏற்படும் நேரடிப் பலன்களை மட்டும் உற்றுநோக்காமல், மறைமுகமாக என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சிந்தித்தலே புத்திசாலித்தனம்.

அதனால், அது மட்டும்தான் உள்ள நன்மை... அதானால் தமிழகத்தால் சுதந்திரமாக ஈழத்தவனுக்கு உதவி செய்து விட முடியாது...! அப்போதும் ஈழத்தவன் அன்னியன் தான் கேட்டால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனம் தமிழ்நாடு நோக்கி திரும்பி ஈழத்தவன் இன்னும் அன்னியனாக்கப்படுவான் என்பதுதான் உண்மையும் கூட...!!!

அட என்னண்ணா நீரு இப்படி சொல்றேள்! :wub:

சேது திட்டம் நிறைவேறுனா புலிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிடுவா. பாதுகாப்புக்கு பங்கம் வந்துடும்னு இல்லியோ சுப்பிரமணியசாமி சொல்றார்.

பொழுது போகாத போது மட்டும் யாழ் களத்தின் பக்கம் தலை காட்டுவதால் வந்த நிலை இதுவோ!!!

:lol::) :)

இதைவிட காரசாரமாக சில திருடர்களை பற்றியும் சங்கரமடத்து வியாபாரிகளை பற்றியும் நான் எழுதிய பல கருத்துக்கள் களத்தில் காணக்கிடைக்கும் நண்பரே.

தவறை தவறென்று சொல்லும் தயக்கம் எப்போதும் இருந்தது இல்லை லுக்கு! ஆதனால் தான் சுப்பிரமணிய சுவாமி போன்ற திருடர்களை கண்டிப்பது போலவே , சிலர் பகுத்தறிவு என்ற பெயரால் செய்யும் பகல் கொள்ளைகளையும் கண்டிக்க வேண்டி உள்ளது.

நீங்கள் பகுத்தறிவு தலைவர்கள் என்று சொல்லி கொண்டிருக்கும் சில பேரை எனக்கு தனிப்பட்ட ரீதியிலேயே தெரியும்! அவர்களில் ஒரு சிலரின் உண்மை முகங்கள் நீங்கள் நினைப்பதை விட கோரமானது !!!

தலைவா! தலைவா என்று எவன் எவனையோ கூப்பிடுவதை நிறுத்தி விட்டு சுயமாக சிந்தியுங்கள். தெளிவு பிறக்கும்.

காடென்றால் சிங்கமும் இருக்கும், புலியும் இருக்கும்.. குள்ளநரிகளும் இருக்கும்...

நரிகள் இருக்கிறது என்பதற்காக காட்டையே எரித்தா விடமுடியும்? :wub:

அதலால் இலங்கை இந்தியாமீது கோபம் கொண்டு பாக்கிஸ்தான், சீனா பக்கம் சாய்ந்து விடும் எண்ற பயம் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு வராமல் விடாது... ( அதுதான் சேதுவுக்கு இப்போது இருக்கும் இளுபாடுகளுக்கு எல்லாம் காரணம்) அப்படி வந்துவிட்டால் துறை முகங்களில் வேலை செய்யாமல் செலவு இல்லாமை இலங்கைக்கு இந்தியாவில் இருந்து உதவி வந்து சேரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை...

சுத்தமா புரியலை :lol:

அதனால், அது மட்டும்தான் உள்ள நன்மை... அதானால் தமிழகத்தால் சுதந்திரமாக ஈழத்தவனுக்கு உதவி செய்து விட முடியாது...! அப்போதும் ஈழத்தவன் அன்னியன் தான் கேட்டால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனம் தமிழ்நாடு நோக்கி திரும்பி ஈழத்தவன் இன்னும் அன்னியனாக்கப்படுவான் என்பதுதான் உண்மையும் கூட...!!!

சேது சமுத்திரத் திட்டம் ஈழத்தமிழருக்கானது என்று யாரோ உங்களிடம் தப்பாக சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது :)

  • கருத்துக்கள உறவுகள்

சேது சமுத்திரத் திட்டம் ஈழத்தமிழருக்கானது என்று யாரோ உங்களிடம் தப்பாக சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது

நான் சொன்னதற்குப் பதிலைத் தான் அவர் எழுதியிருந்தார். எனவே முதலில் அவர் எழுதிய பதில் எனக்கானது. சேது சமுத்திரம் ஈழத்தமிழனுக்கு மட்டுமில்லாமல், இந்தியத் தமிழனுக்கும் எதிரானது.

சேது திட்டம் நிறைவேறுனா புலிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிடுவா. பாதுகாப்புக்கு பங்கம் வந்துடும்னு இல்லியோ சுப்பிரமணியசாமி சொல்றார்

சுப்பிரமணியஞ்சுவாமி என்ன பொருளியல் ஆசிரியரா? அல்லது தமிழ் நாட்டில் மீது மதிப்பு வைத்திருக்கின்ற ஒருவரா? அவருக்குப் பெயர் தேவை என்பதற்காக என்னவும் செய்வார். அவர் போன்றவர்களுக்கு எதிர்வாதம் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் ஆதரிப்பீர்களா? சுயமாகச் சிந்திக்கமாட்டீர்களா?

தயா கேட்டது போல தமிழனுக்கு என்ன அதில் கிடைக்கும்? பாதிக்கப்படும் மீனவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்குமா?

தயா கேட்டது போல தமிழனுக்கு என்ன அதில் கிடைக்கும்? பாதிக்கப்படும் மீனவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்குமா?

மீனவர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அப்பகுதியில் மீன்வளம் பாதிக்கப்பட வாய்ப்பேயில்லை என்று உலக சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் சான்றளித்திருக்கிறது. முப்பது கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டிக்கும் மண்முகட்டின் 300 மீட்டர் மட்டுமே தகர்க்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

மீனவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே வேலை கிடைக்கும்!

அது இராமர் கட்டிய பாலமாகவே இருக்கட்டும். ஆனால் இப்போது அது கடலுக்கு அடியில் இருக்கும் மண் திட்டு என்றே சொல்லப்படுகிறது. அதை அகற்றி விட்டு கால்வாயை அமைத்து அதற்க்கு இராமர் கால்வாய் என்று பெயர் வைத்துவிடலாமே.

மீனவர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அப்பகுதியில் மீன்வளம் பாதிக்கப்பட வாய்ப்பேயில்லை என்று உலக சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் சான்றளித்திருக்கிறது. முப்பது கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டிக்கும் மண்முகட்டின் 300 மீட்டர் மட்டுமே தகர்க்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

மீனவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே வேலை கிடைக்கும்!

நங்கநல்லூரில் கடல் இல்லை என்பது எனக்கு தெரியும்... :rolleyes:

மனிதர்கள் சாப்பிடும் மீன்கள், கணவாய், இறால் போண்ற விலை உயர்ந்த மீனகள் ஆளம் குறைந்த கடலில் தான் வாழும் என்பது உங்களுக்கு தெரியுமா... அதிலும் ஆளம் குறைந்த சதுப்பான கடல் பிரதேசங்களில் தான் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும்...

நந்திகடலில் சிறப்பு என்ன எண்றால் அங்கு இருக்கும் முருகை கற்கள்... அதன் இடுக்கைகளில் படிந்து இருக்கும் பாசிகள், அதனோடு ஒட்டி வளரும் கிளிசல்கள் ( கடல்தாவரம்) என்பன மீன்களின் உணவும் அதன் வாழ்விடமாகும்...!!

சேதுகால்வாயில் இருக்கும் சுண்ணப்பாறைகளை இடித்து அகற்றும் பொழுது அங்கு கால்வாயில் ஏற்படும் நீர் ஓட்டம் அந்த சுண்ணபாறைகளில் அரிப்பை ஏற்படுத்தி அழித்துவிடும்... அதோடு கப்பல்களின் போக்குவரத்தும் அதலால் ஏற்படும் மாசும் முருகை கற்களையும் , பாசிகளையும் , கிளிசல்களையும் உருவாகாமல் தடுத்து மீன் இனங்களை இடம்பெயர செய்யும்...

அதனால் மீன் பிடித்தல் அந்த கடலில் ( இந்திய கட்டுக்குள் ) தொடர்ந்து செய்ய வாய்ப்பே இல்லை.... ஈழக்கடலுக்கு வந்தால்தான் உண்டு...

சுத்தமா புரியலை :rolleyes:

அதாவது இந்த திட்டம் நிறைவேறிய உடனே இலங்கை அரசை சமாதானம் செய்ய தட்டு நிறைய வெத்திலை வைத்து காலிலை விழுந்து இந்தியா வணங்கும் எண்டு சொல்லுறன்... அதுக்கு யாராவது விஜயகாந்து போண்ற குடிகாறன் சொல்லுவார் இலங்கை கால்வாய் வெட்டின கடுப்பிலை பாக்கிஸ்தானோடை இலங்கை உரசுது , நாங்கள் இருக்க ஏன் பாக்கிஸ்தான் காறனோடை உரச விடுவமோ எண்டு கேப்பார் எண்டேன்...!!

சேது சமுத்திரத் திட்டம் ஈழத்தமிழருக்கானது என்று யாரோ உங்களிடம் தப்பாக சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது :wub:

இதை தான் ஈழத்து தமிழ் செம்மல்களிடம் சொன்னான் எதுக்காக சேது கால்வாயுக்காக கடுமையாக பாடு படுகிறீர்கள் அதனால் உங்களிற்க்கு பைசாவுக்கு பிரயோசனம் இல்லை எண்டு.....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.