Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பகுத்தறிவுவாதியின் கொள்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுத்தறிவுவாதியின் கொள்கை

பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும் தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும். மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும். ஏனெனில் இந்த உலகத்தில் இருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ்டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகி விட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி. இராட்சதர் என்பதும் சுத்தப் பொய். ஏனென்றால் இராட்சதர், அசுரர் என்போர் எல்லாம் இந்த பூமியில் இருந்ததாகத்தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை.

இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளுக்கு இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால் `கடவுளுக்கு' எதிரி இருக்க முடியுமா? ஜோசியம் என்பதும் பெரும் பொய், வெறும் ஏமாற்றுதலே ஆகும்.இராகு, காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் பொய், பட்சி சாஸ்திரமும் பச்சைப் பொய்; நட்சத்திரப்பலன், கிரகப் பலன், வாரப் பலன், மாதப்பலன், வருடப்பலன் என்பவை யாவும் பொய். பல்லி விஷம் பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய், கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல், காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய். மந்திரம், மந்திரத்தால் அற்புதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டம் பொய்.

``தெரியாத புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும்'' என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான். நம்பினதன் பலனாக பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவற்றிற்குத் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளுகிறான். பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் (`விடுதலை, 9.2.1970).

``தெரியாத புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும்'' என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான். நம்பினதன் பலனாக பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவற்றிற்குத் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளுகிறான். பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.

கண்ணிருந்தும் குருடராக இருப்பவர்கள் இருக்கும் வரை பகுத்தறிவுவாதிகளுக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாஷாக்காரனே சாத்திரம் பாக்க வெளிக்கிட்டுட்டான்.இதிலை இவர் வேறை பழசு பட்டையளை வெட்டி ஒட்டிக்கொண்டு திரியுறார் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

யார் பகுத்தறிவு வாதி...

கல்லில் சிலையை செதுக்குபவன் சிற்பி.

அந்தச் சிலையை கல்லென்பவன் பகுத்தறிவுவாதி..!

***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் பகுத்தறிவு வாதி...

கல்லில் சிலையை செதுக்குபவன் சிற்பி.

அந்தச் சிலையை கல்லென்பவன் பகுத்தறிவுவாதி..!

( முட்டாள்கள் இருக்கும் வரை கல்லில் செதுக்கிய சிலையை கல்லென்று சொல்லும் அறிவாளிகள் இருக்கத்தான் வேண்டும்.. அதுவும் பகுத்தறிவு வாதிகள் என்ற பெயரில். அவ்விடத்தில் சிற்பிக்கு என்ன வேலை..!) :lol:

சிலையை நாங்கள் கல் என்று சொல்லவில்லை. ஆனால் சிலையை நீங்கள் கடவுள் என்று சொல்வதை தான் தவறு என்கிறோம். அப்ப உங்களுக்கு இருப்பது பகுத்தறிவில்லையா. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிலையை நாங்கள் கல் என்று சொல்லவில்லை. ஆனால் சிலையை நீங்கள் கடவுள் என்று சொல்வதை தான் தவறு என்கிறோம். அப்ப உங்களுக்கு இருப்பது பகுத்தறிவில்லையா. :wub:

பகுத்தறிவுவாதிகளைத் தவிர எவருமே சிலையைக் கடவுள் என்றவில்லை.

சைவனின் நிலை இது..

"பரமனுக்குச் செய்யப்படும் வழிபாடுகள் யாவும் உபசாரமேயாகும். அவன் உண்பதும் இல்லை. உறங்குவதும் இல்லை. அவன் அருவமும், உருவமும், அருவுருவமும் இல்லாதவன். அவன் பண்டும், இன்றும், என்றும் ஒரு படித்தாயே இருப்பவன்.

இவனுக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்துகிறார் சேந்தனார். இப்பதிகத்துள் பரம்பொருளின் பரத்துவம் நன்கு விளக்கப்படுகின்றது"

இப்போ புரிகிறதா.. யார் அறிவற்றவர்கள் என்பது..! :lol:

கடவுள் என்பவனுக்கு உருவம் இல்லை என்கிறீர்களா :wub:

உருவமே இல்லாதவன் உண்டால் என்ன உறங்கினால் என்ன?

உருவமே இல்லாத ஒருவனை கும்பிட எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டாங்கள். இப்படிச் செய் அப்படி செய் என கேட்டானா? அவை எதற்கு.

இல்லாத ஒருவன் பிறப்பினால் வேறுபடுத்தச் சொன்ன்னான. எப்படி வந்து சொன்னான்.

*** :)

- - -

Edited by வலைஞன்
ஓருமையில் எழுதுவதைத் தவிர்க்கவும். சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பகுத்து

கடவுளுக்கு உருவம் உண்டு என்று யார் சொன்னார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த வித்தில் கடவுளை வடிவமைத்துக் கும்பிடுகின்றான் அவ்வளவு தான். முனிவர்களோ, ஞானிகளோ தவமிருக்கையில் உருவத்தை வழிபட்டதில்லை. அவ்வாறே இறைவன் உருவமோ, அல்லது உருவமில்லாத நிலையோ கொண்டவன் என்பதைத் தான் அருவமும், உருவமாகி என்ற தேவாராம் சொல்கின்றது.

***

அவ்வாறே வர்ணாச்சிரம்ம சாதிப்பிரிவிற்குக் காரணமல்ல. இத்தனை சாதிகளுக்கும், அதற்கும் தொடக்கமில்லை என்பது தொடர்பாகப் பல தடவை கதைத்ததாகி விட்டது. சுடலையில் நிற்கின்ற சிவனும், இடையனாக வாழ்ந்த கிருஸ்ணரும் கடவுளாக இருப்பதாக நீங்கள் சுட்டுகின்ற புராணக்கதையே சொல்கின்றபோது, அக்கருத்தினை ஏன் உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

கல்லை பூஜிக்கும் நீங்கள் அறிவாளி தான் . நாங்கள் அறிவற்றவர்கள் தான்.

கல்லை வழிபடுவதில்லை. மனதை ஒரு நிலைக்கு கொண்டு வரும் ஒரு மாதிரி அமைப்பே விக்கிரகங்கள்.

பூஜை என்பது கடவுளுக்கல்ல. கடவுள் படைத்த உயிர்களுக்கு. தேனும் பாலும் பவிசும்.. உயிர்களுக்கு உணவாகும் என்பதால் படைக்கப்படுகிறது.

தேங்காய் உடைப்பது கடவுள் உன்ன அல்ல. ஏழையில் பசிக்கும் உயிர்க்கும் உணவாகும் என்று..!

இறை வழிபாட்டில் காய்க்காப் பூக்களை வழிபாட்டுக்காக எடுப்பதை ஊக்குவிப்பர். குறிப்பாக செவ்வரத்தை... நித்தியகல்யாணி போன்றவை. இவை பூத்தாலும் காய் உருவாக்க.

பூக்கள் வாடி மடிகையில் மண்ணில் உள்ள வளமிக்க நுண்ணங்கள் பெருகி மண் பதப்படும் என்பர்..! இவையெல்லாம்.. அறிவார்த்தமானவை. *** :wub:

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

கடவுளுக்கு உருவம் உண்டு என்று யார் சொன்னார்கள்.

உருவம் இல்லை என்பதால் தான் ராமர் சிலை என்று ஒன்றை காட்டி வயிறு வளர்ப்பவர்களை எதிர்க்கிறோம்.

***

கல்லை வழிபடுவதில்லை. மனதை ஒரு நிலைக்கு கொண்டு வரும் ஒரு மாதிரி அமைப்பே விக்கிரகங்கள்.

லிங்கத்தின் அமைப்பு தான் பயமுறுத்துகிறது :wub:

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூஜை என்பது கடவுளுக்கல்ல. கடவுள் படைத்த உயிர்களுக்கு. தேனும் பாலும் பவிசும்.. உயிர்களுக்கு உணவாகும் என்பதால் படைக்கப்படுகிறது.

தேங்காய் உடைப்பது கடவுள் உன்ன அல்ல. ஏழையில் பசிக்கும் உயிர்க்கும் உணவாகும் என்று..!

இவை எல்லாம் பார்ப்பானுக்கா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சாதிக்கு மதம் காரணமல்ல. அரசாட்சியில் இருக்கும் ஆட்களே காரணம்.

என்னிடம் 24 மணி நேரம் முதல்வர் பதவியை தரச் சொல்லுங்கள். 24 மணி நேரத்துள் தமிழகத்தில் சாதியை ஒழித்துக் காட்டுகிறேன்..! நிச்சயமா ஒரு திராவிடக் கட்சியும் அப்புறம் தமிழகத்தில் இருக்காது. சாதிக் கட்சியும் இருக்காது. தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் இருக்கும். அனைத்துத் தலைவர்களின் கறுப்புப் பணமும் பகிரப்படும் போது.. கன்னியாகுமரியில் இருந்து சென்னை கூவம் வரை.. மெருகேற வழி செய்யப்படும்..! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா பகுத்து

கடவுளுக்கு உருவம் உண்டு என்று யார் சொன்னார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த வித்தில் கடவுளை வடிவமைத்துக் கும்பிடுகின்றான் அவ்வளவு தான். முனிவர்களோ, ஞானிகளோ தவமிருக்கையில் உருவத்தை வழிபட்டதில்லை. அவ்வாறே இறைவன் உருவமோ, அல்லது உருவமில்லாத நிலையோ கொண்டவன் என்பதைத் தான் அருவமும், உருவமாகி என்ற தேவாராம் சொல்கின்றது.

***

அவ்வாறே வர்ணாச்சிரம்ம சாதிப்பிரிவிற்குக் காரணமல்ல. இத்தனை சாதிகளுக்கும், அதற்கும் தொடக்கமில்லை என்பது தொடர்பாகப் பல தடவை கதைத்ததாகி விட்டது. சுடலையில் நிற்கின்ற சிவனும், இடையனாக வாழ்ந்த கிருஸ்ணரும் கடவுளாக இருப்பதாக நீங்கள் சுட்டுகின்ற புராணக்கதையே சொல்கின்றபோது, அக்கருத்தினை ஏன் உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.

அய்யா தூயவரே வர்ணாசிரமம் என்பதை பற்றி கொஞ்சம் விளக்குங்களேன். அதை முடித்துவிட்டு சாதிப்பிரிவைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் பார்ப்பானுக்கா? :wub:

பார்ப்பான் என்பவன் இயற்கையின் முன் மனிதன். பகுத்தறிவு சாதியம் இல்லை எங்கின்றவர்கள்.. மனிதனை மனிதனாக இனங்காண வேண்டுமே தவிர.. பார்ப்பான் என்று உச்சரித்து சாதி காப்பதும் ஏனோ...??! இதுதான் பகுத்தறிவின் பகட்டுத்தனமோ..??! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ப்பான் என்பவன் இயற்கையின் முன் மனிதன். பகுத்தறிவு சாதியம் இல்லை எங்கின்றவர்கள்.. மனிதனை மனிதனாக இனங்காண வேண்டுமே தவிர.. பார்ப்பான் என்று உச்சரித்து சாதி காப்பதும் ஏனோ...??! இதுதான் பகுத்தறிவின் பகட்டுத்தனமோ..??! :lol:

இது கொஞ்சம் உங்களுக்கே அதிகமாக இல்லையா தோழரே :wub:***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

என்னிடம் 24 மணி நேரம் முதல்வர் பதவியை தரச் சொல்லுங்கள்.

எனக்கொன்றும் பெரிய ஆட்சேபணையில்லை. ஆனால் தமிழக அரசு சின்னமாக லிங்கத்தை மாற்றிவிடுவீர்களோ என்று எண்ணும்போது தான் அச்சமாக இருக்கிறது :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் உங்களுக்கே அதிகமாக இல்லையா தோழரே :wub:***.

இதில் ஓவரா எதுவும் இல்லை. மனிதனை மனிதனாகக் காண இயலாத தன்மை உங்களை நீங்களே பகுத்தறிவாளன் என்று சொல்ல வைக்கிறது. பார்பர்னன்.. பிராமணன் என்று உளற வைக்கிறது. சாதி என்று கூற வைக்கிறது.

எப்படி தைப்பெங்கலை புத்தாண்டா அறிவிச்சீங்களோ அதைப் போல.. சாதி என்ற பாகுபாடு இல்லை அதைக் காட்டுவது சட்டப்படி குற்றம் சாதிச் சான்றிதழ் இல்லை.. சாதி ஒதுக்கீடு இல்லை.. எல்லோருக்கும் எல்லாம் என்று சட்டம் இயற்றலாமே.

*** பார்பர்னன் என்று பாசிசம் பேசத் தேவையில்லை..! :lol:

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

பார்ப்பான் என்பவன் இயற்கையின் முன் மனிதன்.

நல்ல கருத்து. அப்புறம் ஏன் பார்ப்பான் மட்டும் பூசை செய்யவேண்டும்? மற்றவன் எல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும்? கொஞ்சம் விளக்குங்களேன்.... :wub:

எப்படி தைப்பெங்கலை புத்தாண்டா அறிவிச்சீங்களோ அதைப் போல.. சாதி என்ற பாகுபாடு இல்லை அதைக் காட்டுவது சட்டப்படி குற்றம் சாதிச் சான்றிதழ் இல்லை.. சாதி ஒதுக்கீடு இல்லை.. எல்லோருக்கும் எல்லாம் என்று சட்டம் இயற்றலாமே.

பலநூறு ஆண்டுகளாக வருணாசிரமத்தை காட்டி நீ மீனவன் மீன்பிடிக்கத்தான் லாயக்கு, நீ சக்கிலியன் செருப்புதான் தைக்கணும், நீ அருந்ததியன் மலம் தான் அள்ளணும் என்றெல்லாம் கூறி கல்வியையும், வேலைவாய்ப்பையும் பார்ப்பனர்கள் மறுத்தார்களே? அதற்கு எப்படி நஷ்ட ஈடு பெறுவது.

பல தலைமுறைகளாக இந்தியாவின் 85 கோடிமக்கள் கல்வி, வேலை மதம், கடவுள் பெயரால் மறுக்கப்பட்டு மலமள்ளிக்கொண்டும், மீன்பிடித்துக் கொண்டும் மட்டுமே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவந்தார்களே? அவர்களுக்கு எப்படி நீதி அளிப்பீர்கள்?

அதற்கெல்லாமாவது சில காலத்துக்கு சாதி சான்றிதழ் தேவை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் ஓவரா எதுவும் இல்லை. மனிதனை மனிதனாகக் காண இயலாத தன்மை உங்களை நீங்களே பகுத்தறிவாளன் என்று சொல்ல வைக்கிறது. பார்பர்னன்.. பிராமணன் என்று உளற வைக்கிறது. சாதி என்று கூற வைக்கிறது.

எப்படி தைப்பெங்கலை புத்தாண்டா அறிவிச்சீங்களோ அதைப் போல.. சாதி என்ற பாகுபாடு இல்லை அதைக் காட்டுவது சட்டப்படி குற்றம் சாதிச் சான்றிதழ் இல்லை.. சாதி ஒதுக்கீடு இல்லை.. எல்லோருக்கும் எல்லாம் என்று சட்டம் இயற்றலாமே.

பகுத்தறிவு என்று பிதட்டிட்டு திரியத் தேவையில்லை. பார்பர்னன் என்று பாசிசம் பேசத் தேவையில்லை..! :wub:

நன்றி நெடுக்காலபோவான். ஏனென்றால் பிறப்பால் பேதம் பேசி மக்களை பிரிப்பதை நாத்திகர்கள் எதிர்க்கிறார்கள். நீங்களும் அப்படி எதிர்ப்பதை கண்டு மனம் பூரிக்கிறது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து. அப்புறம் ஏன் பார்ப்பான் மட்டும் பூசை செய்யவேண்டும்? மற்றவன் எல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும்? கொஞ்சம் விளக்குங்களேன்.... :wub:

டாக்டர் மட்டும் ஏன் வைத்தியம் பார்க்க வேண்டும். மற்றவர்கள் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்.

உழவன் ஏன் வயலில் இறங்க வேண்டும். ***

சட்டமன்றம் 5 மணி நேரம் என்றால் 2 மணி நேரம் அனைத்துத் தலைவர்களும் வயலுக்குப் போய் வயலும் வாழ்வும் செய்வார்களா..???!

கோவிலில் பூசை செய்ய பாடுபடுறம்.. ஏன் வயலில் இறங்க குரல் கொடுக்கிறமில்ல...! :):lol:

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாக்டர் மட்டும் ஏன் வைத்தியம் பார்க்க வேண்டும். மற்றவர்கள் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்.

உழவன் ஏன் வயலில் இறங்க வேண்டும். நீங்கள் ஏன் கணணியின் முன்னிருந்து விதண்டாவாதம் செய்ய வேண்டும்.

சட்டமன்றம் 5 மணி நேரம் என்றால் 2 மணி நேரம் அனைத்துத் தலைவர்களும் வயலுக்குப் போய் வயலும் வாழ்வும் செய்வார்களா..???!

கோவிலில் பூசை செய்ய பாடுபடுறம்.. ஏன் வயலில் இறங்க குரல் கொடுக்கிறமில்ல...! :):wub:

என்ன எழுதுறிங்கன்னு தெரிஞ்சு தான் எழுதிறிங்களா :lol:

டாக்டர் மட்டும் ஏன் வைத்தியம் பார்க்க வேண்டும். மற்றவர்கள் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்.

உழவன் ஏன் வயலில் இறங்க வேண்டும். நீங்கள் ஏன் கணணியின் முன்னிருந்து விதண்டாவாதம் செய்ய வேண்டும்.

என்னால் ஒரு டாக்டராக ஆகியிருக்க முடியும். என் வாரிசை டாக்டருக்கு படிக்க வைக்க முடியும். என் பாட்டனார் வயலில் இறங்கி தான் வேலை பார்த்தார். ஆனால் என்னால் அர்ச்சகனாக மட்டும் ஆகமுடியாது. என்னாம்மா நீதி வழங்குறாங்கப்பா.... :lol::):wub:

  • கருத்துக்கள உறவுகள்

பலநூறு ஆண்டுகளாக வருணாசிரமத்தை காட்டி நீ மீனவன் மீன்பிடிக்கத்தான் லாயக்கு, நீ சக்கிலியன் செருப்புதான் தைக்கணும், நீ அருந்ததியன் மலம் தான் அள்ளணும் என்றெல்லாம் கூறி கல்வியையும், வேலைவாய்ப்பையும் பார்ப்பனர்கள் மறுத்தார்களே? அதற்கு எப்படி நஷ்ட ஈடு பெறுவது.

பல தலைமுறைகளாக இந்தியாவின் 85 கோடிமக்கள் கல்வி, வேலை மதம், கடவுள் பெயரால் மறுக்கப்பட்டு மலமள்ளிக்கொண்டும், மீன்பிடித்துக் கொண்டும் மட்டுமே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவந்தார்களே? அவர்களுக்கு எப்படி நீதி அளிப்பீர்கள்?

அதற்கெல்லாமாவது சில காலத்துக்கு சாதி சான்றிதழ் தேவை!

இவற்றுக்கு சாதிச் சான்றிதழ் தேவையில்லை.. கருணாநிதியாரின் கறுப்புப் பணம் போதும். ஜெயலலிதாவின் நகைக்கிடங்கு போதும். மாறங்களின் பணக்கட்டுக்கள் போதும்.

ஏழைகளை சாதிகளால் வாட்டி.. அவர்களை அதிகாரத்தின் பிடியால் சான்றிதழ்களில் சிறைவைத்து.. வாக்கு வங்கிகளின் முதலீடாக்குவதற்கு.. தேவை சாதிய உச்சரிப்பு. முதலாளிகள் மிரட்டலுக்கு பணக்காரர்களின் பயமுறுத்தலுக்கு முன் பார்பர்னனின் கோவில் பூசை ஒரு தூசி..! :)

என்னால் ஒரு டாக்டராக ஆகியிருக்க முடியும். என் வாரிசை டாக்டருக்கு படிக்க வைக்க முடியும். என் பாட்டனார் வயலில் இறங்கி தான் வேலை பார்த்தார். ஆனால் என்னால் அர்ச்சகனாக மட்டும் ஆகமுடியாது. என்னாம்மா நீதி வழங்குறாங்கப்பா.... :lol::):wub:

நீங்கள் வத்திக்கானுக்கு பாப்பாண்டவர் ஆக முடியுமா..???!

அகதியாகி மண்டபத்தில் கிடக்கும் அப்பாவி ஈழத்தமிழன் தமிழகத்தின் குடிமகன் ஆக முடியுமா...???!

மேற்குலகில் தமிழன் குடியுரிமை பெறும் போது.. தமிழகத்தில்... கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுகிறான்..???!

அவை முடியாதென்றால்... நீங்கள் பூசாரி ஆக முடியாது என்று சொல்வதில் என்ன தவறு..! :D

இவற்றுக்கு சாதிச் சான்றிதழ் தேவையில்லை.. கருணாநிதியாரின் கறுப்புப் பணம் போதும். ஜெயலலிதாவின் நகைக்கிடங்கு போதும். மாறங்களின் பணக்கட்டுக்கள் போதும்.

ஏழைகளை சாதிகளால் வாட்டி.. அவர்களை அதிகாரத்தின் பிடியால் சான்றிதழ்களில் சிறைவைத்து.. வாக்கு வங்கிகளின் முதலீடாக்குவதற்கு.. தேவை சாதிய உச்சரிப்பு. முதலாளிகள் மிரட்டலுக்கு பணக்காரர்களின் பயமுறுத்தலுக்கு முன் பார்பர்னனின் கோவில் பூசை ஒரு தூசி..! :lol:

ஒவ்வொரு பார்ப்பனன் வீடும் இங்கே மாளிகை தான். கருணாநிதியும், ஜெயலலிதாவும் நேற்று தான் வந்து கொள்ளையடித்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட பல நூறு ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக சமூகத்தை மூடநம்பிக்கைகள் வாயிலாக கொள்ளையடித்த பார்ப்பனக் கூட்டத்தை என்ன செய்வது? :wub:

இங்கிருந்த பெரும்பான்மை மக்களின் உழைப்பை மூலதனமாக்கி இன்று அமெரிக்கா, ஐரோப்பா என்று பறந்து சொகுசாக வாழும் பார்ப்பனர்களிடமிருந்து பணத்தை பிடுங்குவோமா? :)

நீங்கள் வத்திக்கானுக்கு பாப்பாண்டவர் ஆக முடியுமா..???!

அகதியாகி மண்டபத்தில் கிடக்கும் அப்பாவி ஈழத்தமிழன் தமிழகத்தின் குடிமகன் ஆக முடியுமா...???!

மேற்குலகில் தமிழன் குடியுரிமை பெறும் போது.. தமிழகத்தில்... கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுகிறான்..???!

அவை முடியாதென்றால்... நீங்கள் பூசாரி ஆக முடியாது என்று சொல்வதில் என்ன தவறு..! :)

****

இருந்தாலும் நீங்கள் சொன்ன விஷயம் அனைத்தையுமே நானும் எதிர்க்கிறேன் என்பதை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.