Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நெறித் திருமணம்

Featured Replies

குறள்நெறித் திருமணத்தில் "இல்லத்தரசி ஒருவர் குத்துவிளக்கு ஏற்றல்" என்று இருந்தது.

முதலில் அதை அப்படியே நான் "ரைப்" செய்து விட்டு, பின்பு எனக்கு ஒவ்வாத பலவற்றை நீக்கினேன். ஆணாதிக்கத்தை அப்பட்டமாக வலியுறுத்தும் சில குறள்களையும் நீக்கினேன்.

இல்லத்தரசி குத்துவிளக்கு ஏற்றுகின்ற முறை வருகின்ற பொழுது, நான் முன்பே சொல்லி வைத்ததன்படி என்னுடைய தாயாரும் என் மனைவியின் தாயாரும் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

எம்மீது அதிகமான அன்பு கொண்டவர்கள் திருமண நிகழ்வை ஆரம்பித்து வைக்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.

"இல்லத்தரசி ஒருவர்" என்பதை "இல்லத்தரசிகள் இருவர்" என்று மாற்றிய நான் "மணமகனின் தாயாரும், மணமகளின் தாயாரும்" என்று மாற்றவில்லை. இதற்கு சோம்பேறித்தனத்தை தவிர வேறு காரணம் இல்லை. இரு பெண்கள் குத்துவிளக்கு ஏற்றுவார்கள் என்றால் அது மணமக்களின் தாய்மார்களாகத்தானே இருக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்து விட்டேன். உங்களுக்கு புரியாத மாதிரி எழுதியதற்கு வருந்துகிறேன்.

முக்கியமான ஒரு விடயம்.

நெடுக்காலபோவான்!

ஒரு பெண் விதவையானாலும் அவள் இல்லத்தரசிதான். கணவன் இழந்து பின்பும் வீட்டையும்குழந்தைகளையும் காத்து வளர்ப்பவள் இல்லத்தரசி இல்லையா?

விதவையானவள் இல்லத்தரசியாக இருக்க முடியாது என்ற உங்களுடைய அருவருப்பான மனுதர்ம காலச் சிந்தனை மிகவும் கண்டிக்கத்தக்கது.

Edited by சபேசன்

  • Replies 180
  • Views 42.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் சமஸ்கிரத மந்திரங்களை ஓத வேண்டும் என்பது ஈழத்தில் சில தசாப்த கால பழமை மிக்க எண்ணக் கரு. அது இப்போ பல இடங்களில் நடைமுறையில் இருக்கிறது.

சபேசன் பல சந்தர்ப்பங்களில் தனது நிலைப்பாட்டை விட்டு தெரிந்து விலகி இருக்கிறார்.. இப்போ அவற்றை சமாளிக்க அவர் முன் வைக்கும் பலவீனமான வாதங்களே அவற்றை இனங்காட்டுகின்றன.

* தானே தமிழரின் கைலாயாகத்தனம் என்று விபரித்த தாலியை ஏற்றுக் கொண்டமை.

(அதை அன்புப் பரிசென்று சொல்லி இங்கு சமாளித்துக் கொண்டமை. அன்புப் பரிசாக ஒரு மஞ்சள் கொடியும் மஞ்சளும் கட்டி இருக்கலாம் ஆளுக்கு ஆள். அதிலும் ஆண் தாலியை வாங்காமல் பெண்ணிடம் சங்கிலி வாங்கி இருக்கிறார். இது வழமையா எல்லாத் திருமணங்களிலும் பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு தங்கச் சங்கிலி பரிசளிக்கின்ற ஆணாதிக்க தொடர்ச்சியின் வழி வந்திருக்கிறது..! ஏன் சபேசன் தங்கச் சங்கிலி கேட்டார். தன் மனைவிக்கு மஞ்சள் நூலும் மஞ்சளில் அன்புப் பரிசும் அடையாளத்துக்கு கொடுத்திருக்கலாமே. அதேபோல் அவரிடமும் வாங்கி இருக்கலாமே. அல்லது தாலிக்குப் பதில் இருவரும் அழகான இதயவடிவ பென்ரன் வைச்ச சங்கிலி செய்து மாட்டி இருக்கலாமே..??! ஏன் செய்யல்ல...??!)

* பக்திப் பாசுரங்கள். (பக்தியை நிராகரிப்பவர் எதற்குப் பக்தியை மனைவியின் விருப்புக்காக அனுமதிப்பதாகச் சொல்ல வேண்டும். பக்தி மூடநம்பிக்கை என்று விளக்க அவரின் மனைவியால் அதை ஏற்க முடியாத காரணத்தால் தானே. ஏன் அவரின் மனைவியால் அதை ஏற்க முடியல்ல. அப்படி என்றால் எப்படி சமூகம் அதை ஏற்கும்..??!)

பக்திப் பாசுரங்களைத் தவிர்த்து.. திருக்குறளோடு முடித்திருக்கலாம்.. அல்லது திருமணக் கவி என்று தாமோ தம்பதியர் சில கவிதைகளை தூய தமிழில் மரபுக்கவி வடிவில் வடித்துப் பாடி இருக்கலாமே..??!)

* பக்திப் பாசுரங்களைப் பாட தெரிவு செய்யப்பட்டவர்கள் இன்னோரென விளம்பரப்படுத்தப்படுகிறது. அது ஏன்...??! அவற்றுக்கும் மற்றும் குறிப்பாக அவரின் மாமனார் ( இளைப்பாறிய அதிபர்) என்ற தகவலும் இவரின் தமிழ் நெறி திருமணத்துக்கும் என்ன தொடர்பு..???!

* கூறைச் சேலை. ( ஏன் கூறைச் சேலை கட்ட வேண்டும். தமிழர்களின் பாரம்பரியத்தில் சேலை உள்ளடங்கவில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர் சபேசன். சேலை பற்றிய பல தலைப்புக்களில் அதை அவர் தொனித்தவர். அப்படி இருக்க ஏன் சேலையை அதுவும் பட்டுச் சேலையை அவர் தெரிவு செய்ய வேண்டும்.

மனைவியின் விருப்புக்காகச் செய்தேன் என்றால்.. பெருமளவில் தமிழர் முறைக் கலியாணம் என்று விளம்பரம் செய்ய முன் அவர் இவைகுறித்து அவரின் மனைவியிடம் கலந்தாலோசிக்கவில்லையா..??! அப்படி ஆலோசித்திருப்பின்.. இவ்வாறான முரண்பாடுகள் எழுவதை தவிர்த்திருக்கலாம் அல்லவா..??! அல்லது கலந்தாலோசித்தும் அவரின் மனைவியின் நிலைப்பாட்டை அவரால் மாற்ற முடியவில்லையா..??! அப்படி மாற்ற முடியவில்லையாயின் சமூகத்தில் எப்படி மாற்றங்களை இவர் எதிர்பார்க்க முடியும்..?! அப்போ சமூகத்தை நோக்கி வைப்பது வெறும் விளம்பர ஏட்டுச் சுரக்காயா..??!)

* சபேசன் திருமணத்தின் போது என்ன ஆடை அணிந்திருந்தார் என்பது இன்னும் தெளிவில்லை. அவர்கள் தமிழர் முறைப்படி.. மேற்சட்டை இல்லாமல் வேட்டி மட்டுமா கட்டி இருந்தார்..???! சரி வேண்டிதான் கட்டினார் என்றால்.. வேட்டி தமிழரின் பாரம்பரிய உடை என்பதற்கு என்ன சான்று..???!

* வெறுமனவே தமிழில் திருக்குறள் படிப்பது சபையில் இருந்த தமிழ் தெரிந்தவர்களுக்கு அது புரிய உதவி இருக்கும். ஆனால் சபையில் இருந்த வேற்றுமொழி பேசுபவர்களுக்கு இவரின் தமிழ் சமஸ்கிரதமாகத்தானே ஒலித்திருக்கும். அதற்கு என்ன மாற்று ஏற்பாடுகளைச் செய்திருந்தார்..??! அப்படிச் செய்யவில்லையெனில்.. சமஸ்கிரத மந்திரம் மட்டும் ஓதப்படக் கூடாது என்பதற்கு மொழி விளக்கமின்மை என்பது காரணமாக இருக்க முடியாது. அது தீண்டத்தகாத பிராமணர்களின் (இன்னொருவரின்) மொழி என்பதால் உச்சரிக்கக் கூடாது என்ற பாசிச நிலைப்பாடுதானே காரணமாகும். இது கிட்லரின் பாணியல்லவா. இதுவா பகுத்தறிவு.. தமிழர் பாரம்பரியம்..??! இது சாதி வெறியில்லையா..??!

மிகுதி.. தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

ஒரு பெண் விதவையானாலும் அவள் இல்லத்தரசிதான். கணவன் இழந்து பின்பும் வீட்டையும்குழந்தைகளையும் காத்து வளர்ப்பவள் இல்லத்தரசி இல்லையா?

விதவையானவள் இல்லத்தரசியாக இருக்க முடியாது என்ற உங்களுடைய அருவருப்பான மனுதர்ம காலச் சிந்தனை மிகவும் கண்டிக்கத்தக்கது.

நான் பெண்களை இல்லத்தரசிகள் என்ற வரையறைக்குள் இட விரும்பாதவன். அவர்களுக்கும் இந்த உலகும் பிரபஞ்சமும் ஆண்களுக்குப் போல சொந்தமானது. அதேபோல் ஆண்களை இல்லத்துக்கு அரசர்கள் இல்லை என்று சொல்வது பாரபட்சமானது. இல்லத்தைப் பொறுத்தவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்களிப்பு இருக்கிறது. அந்த வகையில் பெண்களை மட்டும் இல்லத்துக்கு அரசி ஆக்கி ஆணாதிக்க வெறித்தனத்தை காட்டுவதை நான் ஏற்கவில்லை. என்னைப் பொறுத்தவரை எனது அன்னை எனது அன்புக்கு அரசி. அவளுக்கு இந்த உலகே சொந்தம். அவளை நான் இல்லத்தரசியாக இல்லத்துக்கள் அடைக்க மாட்டேன்.

உங்கள் உச்சரிப்பின் படி நான் இனங்கண்டு கொண்டேன்.. இல்லத்தரசிகள் என்பதன் பால் நீங்கள் திருமணமான குடும்பப் பெண்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்று. அதுவே உண்மையும் கூட.

அம்மாவை அம்மா என்று குறிப்பிட பஞ்சி காரணமல்ல. அம்மாவை இல்லத்தரசி என்று குறிப்பிடுவதை விட அம்மா என்று குறிப்பிடுவது தமிழருக்கும் தமிழுக்கும் அழகு. ஆனால் நீங்கள் மட்டுமன்றி.. உங்களின் திருமணத்தை அவதானித்துவிட்டு கருத்தெழுதிய இரவி அருணாசலம் அவர்களும் அதே தொனியில் எழுதி இருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

நீங்கள் உங்கள் அம்மாவை இல்லத்தரசி ஆக்கி காட்ட நினைத்திருக்கிறீர்களே தவிர அவரின் அன்புக்கு அடையாளமிடவில்லை என்பது புலனாகிறது. அதற்கு பஞ்சி என்று ஒரு சமாளிப்பைப் பதிலளிக்கிறீர்கள்.

விதவைகள்.. தபுதாரங்கள் எல்லோரும் மனிதர்கள். தாயும் மனிதன் தான் தந்தையும் மனிதன் தான். என்னைப் பொறுத்தவரை அங்கு எந்த ஏற்றத்தாழ்வுக்கும் இடமில்லை. நான் எந்த தாயையும் இல்லத்தரசி என்ற மாட்டேன்.. தந்தையையும் இல்லத்து அரசன் என்ற மாட்டேன். அவர்கள் துணையை இழந்திருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன..!

ஒட்டு மொத்தமாக இரண்டு சமங்கலிப் பெண்களை நீங்கள் குத்துவிளக்கு ஏற்ற அழைத்திருப்பதையே இல்லத்தரசிகள் என்ற பாணியில் குறிப்பிட்டதுமின்றி.. பெண்களை இல்லத்துக்கு அரசி ஆக்கி உங்களின் ஆணாதிக்க வெறித்தனத்தை வெளிக்காட்டி இருக்கிறீர்கள் அதை ஒப்புக் கொள்கிறீர்களா..!

அதுமட்டுமன்றி உங்களின் அன்னையரைக் கொண்டுதான் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும் என்பது.. சாதாரண சினிமாவில் சொல்லப்படுவது போல பெண்கள் தான் வீட்டுக்கு விளக்கேத்திறவங்க என்ற மூடநம்பிக்கையை பிரதிதானே பலித்திருக்கிறீர்கள். உங்கள் அம்மா உங்களுக்கு அந்த மேடையில் செய்ய எத்தனையோ காரியங்கள் இருக்கிறது. உங்கள் தாய் உங்களை உச்சிமோந்து பெண்ணின் கையில் உங்களை ஒப்படைக்க அனுமதித்திருக்கலாம். அதேபோல் பெண்ணின் தாய் பெண்ணை உச்சி மோந்து உங்களிடம் ஒப்படைப்பதை அனுமதித்திருக்கலாம். ஒரு தாய்க்கு தன் பிள்ளையை தன் கரத்தால் இன்னொரு பெண்ணிடம் அல்லது ஆணிடம் கொடுப்பதை அதுவும் சபையோர் மத்தியில் கொடுப்பதையும் அவர்களை வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதையும் செய்யச் சொல்வது கூடாதா.

தாய் அன்பை.. வெறும் மங்கள விளக்கேற்றலுக்குள் மடக்கி வைத்தது ஏன்..??! ஏன் அப்பாக்களைக் கொண்டு அதை ஏற்று வித்திருக்கலாமே...???! :unsure::D

நெடுக்காலபோவான்,

தாலி பற்றியும், பக்திப் பாசுரங்கள் பற்றியும் விளக்கம் சொல்லியாகி விட்டது. ஒரே கேள்வியை நீங்களும் எத்தனை முறை கேட்பது, நானும் ஒரே விளக்கத்தை எத்தனை முறை எழுதுவது?

தமிழர்களின் பாரம்பரிய உடை என்று ஒன்று இல்லை. அவரவர் விருப்பப்படி அவரவர் வசதிப்படி கட்ட வேண்டியதுதான்.

விளக்கம் குறைந்த உங்களிற்கு ஒரு உதாரணத்துடன் ஒரு விளக்கம்.

உதாரணமாக நீங்கள் கொக்கக்கோலதான் தமிழர்களின் பாராம்பரிய பானம் என்று வாதாடுகிறீர்கள். நான் இல்லை என்று மறுத்து வாதாடுகிறேன். அதற்கு அர்த்தம் கொக்கக்கோலாவை நான் குடிக்க மாட்டேன் என்பது அல்ல.

தாலி, சேலை போன்றவை பற்றி நீங்கள் வைத்திருக்கும் தவறான கற்பிதங்களை நான் மறுக்கிறேன். தாலியை நீங்கள் கடவுள் போன்று கருதுவதை நான் கண்டிக்கிறேன். அதற்காக தாலியை ஒரு ஆபரணமாக நான் கருத மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. தாலி திருமணத்தின் போது அணியத்தக்க ஒரு ஆபரணம். அன்பச் சின்னமாய் அதை அணியலாம். இதற்கு மேல் வேறு பொருள் தாலிக்கு இல்லை. தாலிதான் எல்லாம் என்பது முட்டாள்தனம். அப்படியான கருத்து உருவானதன் காரணம் தமிழனின் கையாலாகத்தனம்.

(இதை அரைகுறையாக புரிந்து கொண்டு எத்தனை பேர் பதில் எழுதுகிறார்கள் என்று பார்ப்போம்)

ஒரு தகவல்! சபையில் தமிழர்கள் மட்டும்தான் இருந்தார்கள்.

அப்படிச் செய்திருக்கலாமே, இப்படிச் செய்திருக்கலாமே என்று ஆயிரம் கேள்விகள் கேட்க முடியும்? இந்த "லாமே"க்களை உங்கள் திருமணத்தில் செய்யுங்கள்.

திருமணம் பற்றி தமிழர்களிடம் ஒரு பார்வை இருக்கிறது. அந்தப் பார்வையை முற்று முழுதாக தகர்த்து ஒரு திருமணம் செய்வது என்னுடைய நோக்கமாக இருக்கவில்லை. இதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருக்கிறேன். உங்களுடைய "லாமே"க்களை கடைப்பிடித்திருந்தால் என்னுடைய நோக்கம் பாழ்பட்டிருக்கும். உங்களுடைய விருப்பம் அதுதான் என்று எனக்குத் தெரியும்.

நிகழ்ச்சி நிரலை நான்தான்ரைப் பண்ணினேன். இரவி அருணாச்சலம் அதை போகும் போது எடுத்துச் சென்று விட்டார். நிகழ்ச்சி நிரலில் இருந்ததன்படியே அவரும் எழுதி விட்டார் என்று நினைக்கிறேன்.

"இல்லத்தரசி ஒருவர்" இருந்த இடத்தில் "கள்" என்றும் "ஒ" என்பதை "இ" என்றும் கையால்தான் மாற்றம் செய்தேன். திருமண தினமன்று காலையில்தான் இதை மாற்றினேன்.

உங்களுக்கு பொழுது போகாது விட்டால் இதற்கு நீங்கள் என்ன வியாக்கியானமும் செய்யலாம்.

என்னுடைய பார்வையில் எமது திருமணத்தை குத்துவிளக்கேற்றி எம்மீது அதிக அன்பு வைத்திருக்கும் இருவர் ஆரம்பித்து வைத்தார்கள். எமது தந்தைமார் திருமணத்தின் போது இல்லை. ஒருவர் நாட்டில். மற்றவர் உயிரோடு இல்லை.

உங்களுடைய திருமணத்தில் நீங்கள் தந்தைமார்களைக் கொண்டோ அல்லது சிறுவர்களைக் கொண்டோ அல்லது துணை இழந்தவர்களைக் கொண்டோ செய்யுங்கள்.

உங்களுக்கு நிறைய சிந்தனைகள் வருகின்றன. அந்தச் சிந்தனைகளை எழுத்தில் மட்டும் வைத்திருக்காது உங்கள் திருமணத்தில் செய்யுங்கள்.

தமிழர்களின் திருமண முறை இப்படித்தான் என்று யாராலும் வரையறுக்கப்பட்டது அல்ல. உங்களுடைய சிந்தனைகளையும் திருமணங்களின் நடைமுறைப்படுத்தலாம். சில சிந்தனைகள் நன்றாகத்தான் இருக்கின்றன.

தமிழர்களின் நிகழ்வுகள் தமிழில் நடைபெற வேண்டும் என்பதே இங்கே அடிப்படைச் சிந்தனை.

  • கருத்துக்கள உறவுகள்

* கூறைச் சேலை. ( ஏன் கூறைச் சேலை கட்ட வேண்டும். தமிழர்களின் பாரம்பரியத்தில் சேலை உள்ளடங்கவில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர் சபேசன். சேலை பற்றிய பல தலைப்புக்களில் அதை அவர் தொனித்தவர். அப்படி இருக்க ஏன் சேலையை அதுவும் பட்டுச் சேலையை அவர் தெரிவு செய்ய வேண்டும்.

பட்டு என்பது சீனர்கள் உலகிற்கு அறிமுகப்படுத்திய ஒன்று. தமிழர்கள் பருத்தியில் தான் ஆடை அணிய வேண்டும். பட்டுச் சேலை, பட்டு வேட்டி கட்டியதைப் பார்க்கின்றபோது பகுத்தறிவு சீனாவின் காலில் விழுந்துவிட்டதோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. இல்லை. நாங்கள் புதுமை வாதிகள் என்றால் இருவரும் நீள்க்காட்சட்டையோடு செய்திருக்கலாம். மாமிசத்தோடு, பியர், பிரண்டியை ஆண், பெண் இருவருக்கும் வழங்கிச் சமத்துவத்தைப் பேணியிருக்கலாம்.

தமிழர்களின் பாரம்பரிய உடை என்று ஒன்று இல்லை. அவரவர் விருப்பப்படி அவரவர் வசதிப்படி கட்ட வேண்டியதுதான்.

குளிர்காலம் என்னும் நிறைவு பெறாத சூழ்நிலையில் சேலை கட்ட வைத்து குளிரில் கொடுமைப்படுத்தியிருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்,

தாலி பற்றியும், பக்திப் பாசுரங்கள் பற்றியும் விளக்கம் சொல்லியாகி விட்டது. ஒரே கேள்வியை நீங்களும் எத்தனை முறை கேட்பது, நானும் ஒரே விளக்கத்தை எத்தனை முறை எழுதுவது?

தமிழர்களின் பாரம்பரிய உடை என்று ஒன்று இல்லை. அவரவர் விருப்பப்படி அவரவர் வசதிப்படி கட்ட வேண்டியதுதான்.

விளக்கம் குறைந்த உங்களிற்கு ஒரு உதாரணத்துடன் ஒரு விளக்கம்.

உதாரணமாக நீங்கள் கொக்கக்கோலதான் தமிழர்களின் பாராம்பரிய பானம் என்று வாதாடுகிறீர்கள். நான் இல்லை என்று மறுத்து வாதாடுகிறேன். அதற்கு அர்த்தம் கொக்கக்கோலாவை நான் குடிக்க மாட்டேன் என்பது அல்ல.

தாலி, சேலை போன்றவை பற்றி நீங்கள் வைத்திருக்கும் தவறான கற்பிதங்களை நான் மறுக்கிறேன். தாலியை நீங்கள் கடவுள் போன்று கருதுவதை நான் கண்டிக்கிறேன். அதற்காக தாலியை ஒரு ஆபரணமாக நான் கருத மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. தாலி திருமணத்தின் போது அணியத்தக்க ஒரு ஆபரணம். அன்பச் சின்னமாய் அதை அணியலாம். இதற்கு மேல் வேறு பொருள் தாலிக்கு இல்லை. தாலிதான் எல்லாம் என்பது முட்டாள்தனம். அப்படியான கருத்து உருவானதன் காரணம் தமிழனின் கையாலாகத்தனம்.

(இதை அரைகுறையாக புரிந்து கொண்டு எத்தனை பேர் பதில் எழுதுகிறார்கள் என்று பார்ப்போம்)

ஒரு தகவல்! சபையில் தமிழர்கள் மட்டும்தான் இருந்தார்கள்.

அப்படிச் செய்திருக்கலாமே, இப்படிச் செய்திருக்கலாமே என்று ஆயிரம் கேள்விகள் கேட்க முடியும்? இந்த "லாமே"க்களை உங்கள் திருமணத்தில் செய்யுங்கள்.

திருமணம் பற்றி தமிழர்களிடம் ஒரு பார்வை இருக்கிறது. அந்தப் பார்வையை முற்று முழுதாக தகர்த்து ஒரு திருமணம் செய்வது என்னுடைய நோக்கமாக இருக்கவில்லை. இதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருக்கிறேன். உங்களுடைய "லாமே"க்களை கடைப்பிடித்திருந்தால் என்னுடைய நோக்கம் பாழ்பட்டிருக்கும். உங்களுடைய விருப்பம் அதுதான் என்று எனக்குத் தெரியும்.

சபேசன் இப்போ நாம் அரைகுறைகளா இல்லையா என்பதல்ல இங்கு விவாதம்.

தாலி என்பது உங்கள் பார்வையில் தமிழரின் கையாலாகத்தனம்.

ஆனால் இப்போ நீங்கள் சொல்கிறீர்கள்.. தமிழர்கள் தாலியைக் கடவுளாகக் காண்பதால்... நான் அதைக் கல்லாக்கி காட்டக் கட்டினேன் என்று.. கதையளக்கிறீர்கள்.

முன்னர் சொன்னீர்கள்.. சமூகம் கர்ப்பிணிக்கு தாலி கட்டக் கூடாது என்று சொன்னதை எதிர்த்துக் காட்டக் கட்டினேன் என்று..!

தாலியைக் கட்டித்தான் கடவுள் இல்லை அது என்று மறுக்கனும் என்றில்லை. ஒரு தீப்பந்தத்தில் தாலியை போன்று ஒன்றைச் செய்து எரித்துக் காட்டி இருக்கலாம். நான் தாலியை மறுக்கிறேன் அது கடவுளும் அல்ல எதுவும் அல்ல என்று.

ஆனால் அதைக் கட்டிவிட்டு.. நான் கல்லாக்கிக் காட்டினேன் என்று கதையளப்பதுமட்டுமின்றி.. அடுத்தவர்களை விளக்கக் குறைவுகள் என்று சொல்ல உங்களுக்கு உள்ள அருகதையையும் எண்ணிப் பார்க்க வேண்டும்..!

நான் கடவுளைக் கல்லென்று விட்டு.. கல்லுக்கு செருப்பால் அடிக்கும் மூடர்களை பழிப்பவன். அந்த வகையில் இது பெரும் பழிப்புக்கு மட்டுமன்றி நகைப்புக்கு இடமாகவும் இருக்கிறது.

நான் கேட்டுக் கொண்டதற்கு இன்னும் பதில் இல்லை. ஏன் தாலியை.. அன்புப்பரிசாக கட்டிய நீங்கள்.. மஞ்சள் கயிறு மற்றும் மஞ்சளை தேர்ந்தெடுக்கவில்லை என்பதுதான் அது. அதையும் கடவுளாகக் காண்கின்றனரா மக்கள். அல்லது நீங்கள் செய்து கொண்ட காரியத்துக்காக மக்கள் அப்படி நினைக்கிறார்கள் என்று உங்கள் சிந்தனையை மக்களிடம் புகுத்திக் காட்டிவிட்டு.. உங்களைப் பகுத்தறிவுவாதியாக இன்னும் இனங்காட்ட விளைகிறீர்களா..!

மக்கள் ஏமாளிகள் இல்லை சபேசன். ஒரு கட்டத்துக்கு மேல் மக்கள் உங்களை செருப்பால் அடிக்கக் கூடப் பின் நிற்கார்கள் இப்படிப் பேசினீர்கள் என்றால்..! மக்கள் தாலியைக் கடவுளா நினைக்கினம் என்று நீங்கள் நினைப்பதை மக்கள் கேட்டால்.. நிச்சயம் உங்களுக்கு செருப்படி தான் விழும். நல்லா மக்களின் தலையில் குதிரை ஓட்டுவதை பகுத்தறிவு என்று சொல்லிக் கொள்கிறீர்கள். இன்னும் எவ்வளவு காலம் தான் பார்ப்போமே..! :unsure::D

இந்துக் கடவுள்களே பட்டாடை அணிந்து சீனாவின் காலில் விழும் போது, பொதுவுடமைத் தத்துவத்தில் பலவற்றை ஏற்கும் நாம் சீனாவின் காலில் விழுந்தால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் திருமண முறை இப்படித்தான் என்று யாராலும் வரையறுக்கப்பட்டது அல்ல. உங்களுடைய சிந்தனைகளையும் திருமணங்களின் நடைமுறைப்படுத்தலாம். சில சிந்தனைகள் நன்றாகத்தான் இருக்கின்றன.

ஆக, தமிழருக்குப் பாண்பாடு, கலாச்சாரம் என்று ஒன்றுமே இல்லை என்கின்றீர்கள்? அப்படித் தானே?

அப்படியென்றால் உங்களின் இத்தனை கால யாழ்வாதமும், ஆரியக் கடவுள்கள் பற்றிய வாதமும் தோற்றுப் போகின்றனவே! ஒருவன் எதையும் செய்யலாம். கட்டுப்படுத்த முடியாது என்றால், ஆரியக் கடவுளோ, தமிழ்க் கடவுளோ வழிபடுவது அவரவர் உரிமை. அதற்குள் ஏன் நீங்கள் மூக்கை நுழைத்தீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களில் ஏன் தலையிட்டீர்கள்??

இந்துக் கடவுள்களே பட்டாடை அணிந்து சீனாவின் காலில் விழும் போது, பொதுவுடமைத் தத்துவத்தில் பலவற்றை ஏற்கும் நாம் சீனாவின் காலில் விழுந்தால் என்ன?

பாட்டடை அணிவது தவறல்லவே. நாங்கள் முற்போக்குவாதிகளாக்கும். நாளைக்கு விரும்பினால் கடவுளுக்கு ஜீன்ஸ் கூட அணிவிப்போம். அது எம் விருப்பம். அவ்வாறே, நாங்கள் கடவுளின் காலில் விழுவது அவர் மீது கொண்ட மரியாதை. ஏன் பெற்றோர்கள், மரியாதைக்குரியவர்களை மதிப்பதற்காக அவர்களின் காலில் ஆசீர்வாதம் வாங்குவோம். ஆனால் சுயமரியாதைக்காரர் இவ்வாறு சீனாரின் காலில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு இல்லையா? :D

Edited by தூயவன்

இந்துக் கடவுள்களே பட்டாடை அணிந்து சீனாவின் காலில் விழும் போது, பொதுவுடமைத் தத்துவத்தில் பலவற்றை ஏற்கும் நாம் சீனாவின் காலில் விழுந்தால் என்ன?

ஐரோப்பியர் வரும் முன்பு இந்தியாவில் பட்டு நெய்யும் தொழில் நுட்பம் மிக உயர்வாக இருந்ததாகவும், தங்கள் துணிகளை விற்கும் வர்த்தக நோக்கங்களுக்காக அந்த தொழிலை ஐரோப்பியர்கள் அப்படியே அழித்ததாகவும் நான் சில நூல்களில் முன்பு படித்திருக்கிறேன். சரியான விபரம் தெரியவில்லை

நெடுக்காலபோவான்,

தாலியை கயிற்றில் கட்டுவதா, தங்கத்தில் கட்டுவதா என்பது அணிவிப்பவரும் அணிபவரும் எடுக்க வேண்டிய முடிவு. தாலி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. எம்முடைய விருப்பத்திற்கு வசதிக்கு ஏற்றபடி நாம் கட்டினோம்.

நாம் கட்டியுள்ள தாலி பற்றி கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று நாம் பிரகடனப்படுத்தியுள்ளது அனைவருக்கும் பொருந்தும். அது எங்களுடையது. எமது விருப்பத்தின்படிதான் நாம் கட்டுவோம்.

உங்களுடைய விருப்பப்படி நீங்கள் கட்டுங்கள்!

தாலியை எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் நினைப்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.

என்னுடைய திருமணத்திற்கு எம்முடன் மிக நெருங்கிய நட்புக் கொண்ட வயோதிபத் தாய் ஒருவர் வரவில்லை. காரணம் அவருடைய தாலி காணாமல் போய்விட்டது. தாலி இல்லாமல் தன்னால் வரமுடியாது என்று முன்பே தகவல் தந்து விட்டார். நாம் என்ன சொல்லியும் அவர் கேட்கவில்லை.

எனக்கு தெரிந்து இரண்டு பெண்கள்இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் கணவர் 30 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். அவருடன் எந்தத் தொடர்பும் அந்தப் பெண்ணுக்கு இல்லை. கணவர் மீது சிறு அன்பும் இல்லை. ஆனால் இப்பொழுது தாலியை சுமந்து கொண்டுதான் திரிகிறார். அன்பு இல்லாவிட்டாலும் தாலி அவருக்கு தேவையாக இருக்கிறது. மற்றப் பெண்ணும் அப்படித்தான். கணவர் விட்டுப் பிரிந்த பின்பு தற்பொழுது நிம்மதியாக இருப்பதாக சொல்வார். உண்மையும் அதுதான். ஆனால் தாலியை தொடர்ந்தும் அணிந்திருக்கிறார்.

கணவன் இருந்தாலும் தாலி இல்லாமல் ஒரு பெண்ணால் வரமுடியவில்லை. கணவன் மீது அன்பு இல்லாவிட்டாலும் தாலியை ஒரு பெண்ணால் விட முடியவில்லை. கணவன் பிரிந்து போனது பற்றி மகிழ்ச்சி அடையும் பெண்ணாலும் தாலியை விட முடியவில்லை.

தாலி கடவுள் போன்றது அல்ல. அதற்கு மேலாக தமிழ் பெண்கள் கருதுகிறார்கள். இப்படியான முட்டாள்தனமான கற்பிதங்களை எமது சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இவர்களுக்கு தாலி அன்புச் சின்னம் அல்ல. அடிமைச் சின்னம்.

தாலி ஒரு ஆபரணம், அதன் மீது சமூகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்பதே எனது கொள்கை. அதுவே எமது பிரகடனமாக வெளிப்பட்டது.

தூயவன்,

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தமிழர்களின் திருமண முறை காலத்திற்கு காலம் மாறி வந்திருக்கிறது. எதில் எதை தமிழர்களின் திருமண முறை என்று கொள்வது?

அன்றைக்கு இருந்து அனைத்து முறையையும் இன்றைக்கு அப்படியே பின்பற்ற வேண்டும் என்று சொல்வது பகுத்தறிவு அல்ல. மதம்தான் அப்படிச் சொல்லும்.

இன்றைய நிலையையும் கருத்தில் கொண்டுதான் நாம் எமது திருமணங்களை நடத்த வேண்டும்.

நெடுக்காலபோவான் சொல்கின்ற சில நல்ல சிந்தனைகளுக்கும் அவற்றில் இடம் உண்டு. தமிழர்களையும் தமிழையும் இழிவுபடுத்தாதவற்றை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறு இல்லை.

தமிழர்கள் செய்யக் கூடியவாறு பல முறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. உங்களுக்கு வசதியானதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இல்லை புதிதாக ஒரு முறையை உருவாக்கலாம். அது நல்லது என்றால் மக்கள் அவற்றை பின்பற்றுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாலி பற்றிய ஒரு கருத்தோட்டத்தை மக்களின் மனங்களில் மூடநம்பிக்கையாக விதைத்தது தமிழ் திரைப்படங்கள். அதை வைத்துத் தான் சபேசனும் அது பற்றிக் கருத்தெழுதுகின்றார் என்றே தோன்றுகின்றது.

நாம் கட்டியுள்ள தாலி பற்றி கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று நாம் பிரகடனப்படுத்தியுள்ளது அனைவருக்கும் பொருந்தும். அது எங்களுடையது. எமது விருப்பத்தின்படிதான் நாம் கட்டுவோம்.

உங்களுடைய விருப்பப்படி நீங்கள் கட்டுங்கள்

இது நல்ல பதில். எனி வரும் காலங்களில் எம்முடைய தனிப்பட்ட விடயங்களில் தலையிடமாட்டீர்கள் என எடுத்துக் கொள்ளலாமா?

ஜேர்மனியில் ஒரு நகரத்தில் தாலி அறுக்கப்பட்ட சம்பவம் திரைப்படத்தில் வந்தது அல்ல. நான் எழுதியுள்ள மற்றைய விடயங்களும் திரைப்படத்தில் வந்தவை அல்ல.

அத்துடன் உங்களுடைய தனிப்பட்ட விடயத்தில் நான் என்றைக்கும் தலையிட்டது இல்லை.

சமூகம் பற்றியே நான் எப்பொழுதும் பேசியிருக்கிறேன்.

தாலியை கயிற்றில் கட்டுவதா, தங்கத்தில் கட்டுவதா என்பது அணிவிப்பவரும் அணிபவரும் எடுக்க வேண்டிய முடிவு. தாலி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. எம்முடைய விருப்பத்திற்கு வசதிக்கு ஏற்றபடி நாம் கட்டினோம்.

நாம் கட்டியுள்ள தாலி பற்றி கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று நாம் பிரகடனப்படுத்தியுள்ளது அனைவருக்கும் பொருந்தும். அது எங்களுடையது. எமது விருப்பத்தின்படிதான் நாம் கட்டுவோம்.

இப்படி ஒரு தலைப்பில் சொன்னால் 100 தலைப்பில் சொன்ன மாதிரி. :D

இதை அப்படியே கடைப்பிடிக்க வாழ்த்துக்கள் சபேசன்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தமிழர்களின் திருமண முறை காலத்திற்கு காலம் மாறி வந்திருக்கிறது. எதில் எதை தமிழர்களின் திருமண முறை என்று கொள்வது?

அன்றைக்கு இருந்து அனைத்து முறையையும் இன்றைக்கு அப்படியே பின்பற்ற வேண்டும் என்று சொல்வது பகுத்தறிவு அல்ல. மதம்தான் அப்படிச் சொல்லும்.

இன்றைய நிலையையும் கருத்தில் கொண்டுதான் நாம் எமது திருமணங்களை நடத்த வேண்டும்.

நெடுக்காலபோவான் சொல்கின்ற சில நல்ல சிந்தனைகளுக்கும் அவற்றில் இடம் உண்டு. தமிழர்களையும் தமிழையும் இழிவுபடுத்தாதவற்றை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறு இல்லை.

தமிழர்கள் செய்யக் கூடியவாறு பல முறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. உங்களுக்கு வசதியானதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இல்லை புதிதாக ஒரு முறையை உருவாக்கலாம். அது நல்லது என்றால் மக்கள் அவற்றை பின்பற்றுவார்கள்.

நாங்கள் அவ்வாறு அல்ல சபேசன். மாற்றங்களை உள்வாங்கினாலும் எம்மால் முடிந்தவரை சமுதாயம் கொண்டிருக்கின்ற வரையறைக்குள் தான் வாழ விரும்புகின்றோம். இல்லாவிட்டால் தமிழர் என நாங்கள் கொண்டிருக்கின்ற அடையாளங்கள் அழிந்து விடும். எல்லோராலும் 100 வீதம் கடைப்பிடிக்க முடியாது. ஆனால், 70 வீதமாவது கடைப்பிடித்தால் அது சிறப்பு. ஊரில் திருமண வீடு எனும்போது வாழை மரட்பட்டுவார்கள். அது மங்கள அடையாளம் மட்டுமல்லாமல், புதிதாக திருமணத்திற்கு வருபவர்களுக்கு அடையாளம் காட்ட உதவியது. ஆனால் புலத்தில் முகவரி கொடுத்தால் கண்டு பிடிக்க இலகு. எனவே அது தேவைப்படவில்லை. இருப்பினும், அது ஒரு அடையாளம். அப்படி தேவையான அடையாளங்களைப் பேணுவதன் மூலம் தான் நாம் தமிழர்கள், தனித்துவமான இனம் என்பதைப் பேண முடியும்.

குத்துவிளக்கு ஏற்றுவது என்பது, கூட உங்களின் பகுத்தறிவின் படி பார்த்தால் மூடநம்பிக்கை தான். இத்தனை விளக்குகள் வெளிச்சத்தைத் தரும்போது, ஏன் குத்துவிளக்கு ஏற்றி, புகையை உருவாக்க வேண்டும்?

ஒரு காலத்தில் விளக்குகள் தான் வெளிச்சம் தந்தன. எனவே குத்துவிளக்கு போன்றவை தேவைப்பட்டன. இப்போது ஏன் தேவைப்படுகின்றது? ஏனென்றால் அது ஒரு பண்பாடாக, குத்துவிளக்கு ஏற்றுவது என்பது வெளிச்சத்தைப் பரப்புகின்ற அடையாளமாகவே காட்டப்படுகின்றது. அப்படிக் குத்துவிளக்கு ஏற்றுவது என்பது கூடப் பகுத்தறிவின் படி மூடநம்பிக்கையே!

  • கருத்துக்கள உறவுகள்

தாலி கடவுள் போன்றது அல்ல. அதற்கு மேலாக தமிழ் பெண்கள் கருதுகிறார்கள். இப்படியான முட்டாள்தனமான கற்பிதங்களை எமது சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இவர்களுக்கு தாலி அன்புச் சின்னம் அல்ல. அடிமைச் சின்னம்.

எப்படி என்ன தாலியைக் கட்டிறதையும் விடுறதையும் நீங்கள் தீர்மானிக்கிறீங்களோ.. அதைப் மற்றவங்களாக கேட்க முடியாதோ.. அதே போல.. அது அன்புப் பரிசா அல்லது அடிமைத்தனமா என்பதை தீர்மானிக்க வேண்டியவங்க அவங்க அவங்க. உங்களுக்கு அதற்கும் எந்த அருகதையும் கிடையாது. நீங்க கட்டினீங்களா.. போயிட்டிருங்க. அதைவிட்டிட்டு.. என் வழில வா என்று சமூகத்தைப் பார்த்துக் கேட்க நீங்கள் யார்..??! :lol::D

பெண்கள் தாலியை அன்புப் பரிசா கணவனின் அடையாளமா காணுறாங்க. போற்றிறாங்க. அது அவங்க அவங்க தனியுரிமை. அதைப் பழிக்கவும் பரிகசிக்கவும்.. உங்களுக்கும் உரிமை கிடையாது. நீங்க உங்க தாலி.. உங்க பொண்டாட்டின்னு இருக்க வேண்டியதுதானே..! அப்புறம் எதுக்கு ஊருக்கு உபதேசம்..! :unsure:

என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான்

எமது இனத்திற்கு, மொழிக்கு விரோதமான ஒன்றைச் செய்யாதீர்கள் என்பதுதான்.

அப்படி விரோதமாக நடப்பது தனிப்பட்ட விடயம் அல்ல.

மற்றையபடி நீங்கள் கறுப்புக் கலரில் ஆடை அணிவது, வெள்ளைக் கலரில் அணிவது, கயிற்றில் தாலி கட்டுவது, தங்கத்தில் தாலி கட்டுவது, பத்து பவுணில் கட்டுவது, நூறு பவுணில் கட்டுவது, கட்டாமல் விடுவது.... இவைகள் எல்லாம் உங்கள் தனிப்பட்ட விடயங்கள்.

தாலியை பெண்கள் அன்புச் சின்னமாக அணிந்திருப்பதை நான் பரிகாசம் செய்வது இல்லை. அது அவரது தனிப்பட்ட விடயம்.

சமூகம் அந்தப் பெண்ணின் மீது தாலியின் பெயரால் செய்யும் அடக்குமுறையையே நான் கண்டிக்கிறேன். இதையும் பல முறை சொல்லிவிட்டேன். எப்பொழுது உங்களுக்கு புரியப் போகிறதோ?

சமூகம் நிகழ்த்துகின்ற அடக்குமறை தனிப்பட்ட விடயம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான்

எமது இனத்திற்கு, மொழிக்கு விரோதமான ஒன்றைச் செய்யாதீர்கள் என்பதுதான்.

அப்படி விரோதமாக நடப்பது தனிப்பட்ட விடயம் அல்ல.

மற்றையபடி நீங்கள் கறுப்புக் கலரில் ஆடை அணிவது, வெள்ளைக் கலரில் அணிவது, கயிற்றில் தாலி கட்டுவது, தங்கத்தில் தாலி கட்டுவது, பத்து பவுணில் கட்டுவது, நூறு பவுணில் கட்டுவது, கட்டாமல் விடுவது.... இவைகள் எல்லாம் உங்கள் தனிப்பட்ட விடயங்கள்.

எமது மொழிக்கு எது விரோதம்.. எது இனத்துக்கு விரோதம் என்பதை மக்கள் தீர்மானிப்பாங்க. அதை நீங்க தீர்மானிக்க முடியாது. சாதாரண ஒரு தாலி விடயத்திலேயே உங்களுக்கு சமூகம் கேட்க முடியாத தனி உரிமை இருக்கேக்க.. மக்களின் தனி உரிமையை நீங்க மதிக்கக் கற்றுக்கோங்க..! ***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

முதலில் தமிழர்களுக்கு தேவை நிலம்!

நாடு!! ஆட்சி அதிகாரம்!!! இவை தான்.

இது கிடைத்தால் தமிழர்களின் எல்லா அடையாளங்களும் காப்பற்றப்படும் இல்லாவிட்டால், தமிழ் திருமணம் என்ன, தமிழே கூட இன்னும் 50 வருடங்களுக்கு ஐரோப்பாவில் தாக்கு பிடிக்குமா என்பது சந்தேகம் தான்.

ஆகவே திருமணம், பகுத்தறிவு, வாழைக்காய், கத்தரிக்காய் என்று கூவி விற்றுக்கொண்டிருக்காமல், ஈழ விடுதலைக்கு ஏதாவது பணி செய்ய முடிந்தால் செய்யுங்கள். அதைவிட எதிர்கால சந்ததிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் நீங்கள் செய்யக்கூடிய பெரிய சேவை எதுவும் இருக்க முடியாது!!! :D

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம் நிகழ்த்துகின்ற அடக்குமறை தனிப்பட்ட விடயம் அல்ல.

எப்படி உங்கட விடயத்தை நீங்க அடக்குமுறை இல்லைன்னு.. தீர்மானிக்கிறீங்களோ.. அப்படி அடுத்தவங்களும் தங்கட விடயங்களை அடக்குமுறையில்லைன்னு சொல்ல ஆயிரம் காரணம் வைச்சிருப்பாங்க. அதனால நீங்க தீர்மானிக்க முடியாது உங்க இஸ்டத்துக்கு அடுத்தவற்ற தனியுரிமையை மீறி இதுதான் அடக்குமுறையுன்னு.

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதே சிறப்புண்ணு.. நீங்கள் சத்தியப்பிரமானம் செய்யுறீங்க.. ஆனால் இதே களத்தில பெண்கள் ஆண்கள் அவரவரின் உணர்ச்சிப் போக்குக்குப் போய் எவருடனும் எத்தனை பேருடனும் வாழலாம்.. அதுதான் பகுத்தறிவு என்று சமூகத்துக்கு அளந்தது மட்டுமன்றி விபச்சாரம் உட்பட சமூக அநீதிகளுக்காகவும் குரல் கொடுத்தவர் நீங்கள்..!

உங்களை யார் கேட்டார்.. அப்படிச் சொல்லன்னு..???! உங்களுக்கு ஒருவனுக்கு ஒருத்தின்னு சட்டம். அடுத்தவனுக்கு மந்தை போல வாழ வழிகாட்டல்..! :D:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் பின்பற்றுகின்ற முறை தான் தமிழினத்தின் அடையாளம் என தமிழரின் வழி மாறிப்போனது ஒரு துர்ப்பாக்கிய நிலமை. எமது இனம், எமது மொழி என்பதில் எங்களுக்கும் சிந்திக்கின்ற உரிமை மட்டுமல்லாமல், அதைப் பேணவும் தெரியும். வடமொழி எதிர்ப்பு என்று ஆங்கிலத்திற்குப் படலை திறந்து வைத்திருக்கின்ற பகுத்தறிவார்கள் தமிழைப் பற்றிக் கதைக்கின்ற உரிமையை விடத் தமிழிற்கு பல ஆக்கங்களையும், அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றிய மதப்பற்றாளர்களுக்குத் தான் தமிழனத்தைப் பற்றிக் கதைக்கின்ற உரிமை அதிகம் உண்டு.

எப்படியும் வாழ்ந்து தமிழருக்கு உள்ள அடையாளங்களைத் தொலைக்கலாம் என நினைக்கின்ற பகுத்தறிவாளர்களை விட, இப்படி வாழ்வதன் மூலம் தான் தமிழன் என்ற அடையாளத்தைப் பேண முடியும் எனச் சொன்னது பக்தி. இன்றைக்கு இவர்கள் போற்றுகின்ற கலைகளை எல்லாம் காப்பாற்றி வந்தது, காப்பாற்றிக் கொண்டிருப்பது பக்தி தான்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழர்களுக்கு தேவை நிலம்!

நாடு!! ஆட்சி அதிகாரம்!!! இவை தான்.

இது கிடைத்தால் தமிழர்களின் எல்லா அடையாளங்களும் காப்பற்றப்படும் இல்லாவிட்டால், தமிழ் திருமணம் என்ன, தமிழே கூட இன்னும் 50 வருடங்களுக்கு ஐரோப்பாவில் தாக்கு பிடிக்குமா என்பது சந்தேகம் தான்.

ஆகவே திருமணம், பகுத்தறிவு, வாழைக்காய், கத்தரிக்காய் என்று கூவி விற்றுக்கொண்டிருக்காமல், ஈழ விடுதலைக்கு ஏதாவது பணி செய்ய முடிந்தால் செய்யுங்கள். அதைவிட எதிர்கால சந்ததிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் நீங்கள் செய்யக்கூடிய பெரிய சேவை எதுவும் இருக்க முடியாது!!!

இதே கருத்தோடு நான் இத்தலைப்பில் இருந்து விடைபெறுகிறேன். சபேசனின் திருமணம் அவரின் தனி விடயம். அதை சமூகம் பின்பற்ற வேணும் என்றதோ.. அது தமிழ் நெறி என்பதோ ஏற்புடையவையல்ல. அவை சமூகத்துக்குரியவையும் அல்ல. அது சமூகவியல் வல்லுனர்களால் தீர்மானிக்கப்பட்ட விடயமும் அல்ல..! :D

ஈழ விடுதலைக்கு செய்யக் கூடியவற்றை நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

எல்லாம் மக்கள் தீர்மானிப்பார்கள் என்று இருக்க முடியாது. மக்களுக்கு சொல்வதற்கும் யாராவது வேண்டும். எமக்கு சரி என்று பட்டதை சொல்கிறோம். சொல்லிக் கொண்டிருப்போம்.

சொல்வதோடு செயலாற்றுகிறோம்.

செயலாற்றுவதைக் கண்டு நீங்கள் படுகின்ற பாடுதான் பரிதாபமாக இருக்கிறது. கவலை விடுக. உங்களுக்காகவும்தான் நாம் செயலாற்றுகிறோம். சில ஆலயங்களில் தமிழில் வழிபாடு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். சரி வந்த பின்பு அதைப் பற்றி எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சபேசன்

எனது திருமணம் (இரண்டும் ?)பெரும்பாலான வழக்கப்படிதான் நடந்தது. முதல்நாள் என் பெற்றோரின் விருப்பிற்கிணங்க இந்து முறைப்படியும் இரண்டாவது நாள் வேஜினியின் பெற்றோரின் விருப்பிற்கிணங்க முழுமையான கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது. என்னவோ - இணைந்து வாழ விட்டால் போதுமென்றிருந்த நிலையில் எல்லாத்துக்கும் பூம் பூம் தலையாட்டம் தான் -

ஆனால் உங்கள் விளக்கங்களைப் பார்த்த பிறகு -

இரண்டாவது நாள் கிறிஸ்தவ திருமணத்தின்போது - திருமணம் முழுவதும் தமிழில் நடந்தது - பாசுரங்களைக்கூட தமிழில்தான் பாடினார்கள். எங்களது உறுதி மொழி கூட தமிழில்த்தான் நடந்தது.

நானும் ஒரு தமிழி்நெறி திருமணம் செய்தேன் என்பதில் மகிழ்வுறுகிறேன். விளம்பரப்படுத்தத்தான் தவறி விட்டேன் :D

உங்களைப் போலவே தான் கண்டிப்பாக தாலி கட்ட வேண்டும் என்று கூறியவர்கள் அடுத்த நாள் கிறிஸ்தவ முறைப்படியான திருமணம் நிகழ இருந்ததால் கிறிஸ்தவ முறைப்படியான திருமணத்தின் போது இந்துக் கடவுள் படம் பொறித்த தாலி மணமகளின் கழுத்தில் இருக்கக் கூடாதென்றார்கள். அந்த மூடநம்பிக்கைக்கு எதிராக நான் தாலி கட்டினேன்.

என்னவோ - நானும் தமிழ்நெறித்திருமணம் தான் செய்தேன் என்பதை புரிய வைத்த உங்களுக்கு நன்றி -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.