Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டில இப்படியும் ஒரு அனுபவம் பெற்ற முதலாவது ஈழத்தமிழன் நானாத்தான் இருக்கும்..!

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்,

தலைப்பை பார்த்த உடன நான் ஏதோ அப்துல் கலாம் இல்லாட்டிக்கு, வேற யாரும் மேதைகள் மாதிரி எதையாவது செய்துபோட்டதாய் நினைக்காதிங்கோ. இது ஒரு கொஞ்சம் வித்தியாசமான அனுபவம். என்னை மாதிரி இந்த அனுபவத்த நீங்கள் யாரும் பெற்று இருப்பீங்கள் எண்டு நான் நினைக்க இல்ல. இத எனது அறீவினம் எண்டும் சொல்ல ஏலாது. ஏதோ தற்செயலா அப்பிடி நடந்திட்டிது. அது என்ன சம்பவம் எண்டால்..

நான் ரெண்டு மாதத்துக்கு முன்னம் வழமையா போறமாதிரி காலம்பற வோக்கிங் (நடைபயணம்) போனன். இப்பதான் எக்ஸ்ர்ஸைஸ் (உடற்பயிற்சி) எண்டு அரைக்காற்சட்டையோட டொரண்டோ டவுன் டவுனுக்க ஓடுறது. ஆனால் அப்ப குளிருக்க ஓட ஏலாது தானே? எண்டபடியால் ஒவ்வொருநாளும் நீண்டதூரம் நடக்கிறது. நடக்கேக்க, ஓடேக்கதான் நான் பெரிய பெரிய விசயங்களப் பற்றி எல்லாம் சிந்திக்கிறது. அந்த நேரத்தில நல்ல நல்ல ஐடியாக்கள் (சிந்தனைகள்) எல்லாம் எனக்கு வரும். நான் நடக்கேக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாதையுக்கால நடப்பன். ஓடேக்கையும் இப்பிடித்தான் எழுந்தமானமான பாதைகளுக்கால ஓடுறது. எண்ட அண்ணா சொன்னார் ஓடேக்க பாத்து ஓடு. தெருவில போற வாகனங்களோடபோய் மோதுப்பட்டு போகாதை எண்டு. நான் நடக்கேக்க இல்லாட்டி ஓடேக்க எதால போய் எதால வருவன் எண்டு வீட்ட வந்தாப்பிறகுதான் எனக்கே தெரியும்.

அப்ப அண்டைக்கு நடபயணம் போன இடத்தில சேர்ச் (கிறிஸ்தவ தேவாலயம்) ஒண்டுக்கு போக ஆசையா இருந்திச்சிது. சில ஆக்கள் பகுத்தறிவு எண்டு சொல்லி மதங்கள நக்கல் அடிக்கிறது. நான் மற்றமாதிரி, அதாவது பகுத்தறிவும் செய்வன், இதுதவிர எல்லா மதங்களிலையும் உறுப் பினராகவும் இருக்கிறன். எங்கட கோயில் மாதிரியே சேர்ச்சுக்கு போனாலும் எனக்கு மனம் ஆறுதலா இருக்கும். சரி எண்டு நடைபயணம் போகேக்க எங்க முதலாவது சேர்ச் வருதோ அதுக்கு போவம் எண்டு மனதுக்க தீர்மானம் செய்துபோட்டு நடந்துகொண்டு இருந்தன். கடைசியில, வழியில, நான் நினைச்ச மாதிரியே சேர்ச் ஒண்டக் கண்ட உடன உள்ளுக்க போனன்.

சேர்ச் கதவு பூட்டி இருந்திச்சிது. கிழமை நாட்களில ஒரு பக்கத்தாலையும், வார இறுதி நாட்களில இன்னொரு பக்கத்தாலையும் வரச்சொல்லி அறிவித்தல் வாசலில எழுதப்பட்டு இருந்திச்சிது. அப்ப நானும் கோயில ஒரு சுத்து சுத்தி வாறமாதிரி சுத்துப்பாதையால சுத்தி அதுக்க போனன்.

சேர்ச் கதவத் திறந்தன். எனக்கு ஒரு ஆச்சரியம் காத்து இருந்திச்சிது...

வழமை மாதிரி இல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமான சேர்ச் ஆக இருந்திச்சிது. வாசலில செக்கியூரிட்டி எயார்போர்டில பரிசோதனை செய்யுறமாதிரி செய்ய நானும் பேர்ஸ், பொக்கற்றுக்க இருந்த சில்லறைக் காசுகள் எல்லாத்தையும் ஒரு தட்டுல போட்டுக் குடுத்துப் போட்டு அந்த மிசினுக்கால நான் நடந்து போனன். உடற்பரிசோதனை செய்தாப்பிறகு சரி எண்டு என்னை உள்ளுக்க போகவிட்டீனம்.

என்னடா இது எண்டு நினைச்சுப்போட்டு, சரி பெரிய சேர்ச் தானே, அதுவும் டொரண்டோ டவுண்டவுனுக்க இருக்கிது பாதுகாப்பு அதிகமா இருக்கிறதில ஆச்சரியம் ஒண்டும் இல்லை எண்டு மனம் சமாதானம் சொல்லிச்சிது. ஏனெண்டால் எங்கட பக்கம் கள்ளர் அதிகம் (அதுக்காக நானும் ஒரு கள்ளன் எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. ஸ்கூலுக்காக இதுக்க இருக்கிறன்) அப்ப கதைக்கு வருவம்... செக்கியூரியிட்ட நான் சொன்னன் "I just want to watch" எண்டு. ஏன் எண்டால்..

நான் கிறிஸ்தவனா ஞானஸ்தானம் ஒண்டும் எடுக்க இல்லத்தானே? அப்ப அங்க சேர்ச்சில பூசைகள் நடக்கேக்க சும்மா அமைதியா இருந்து பார்க்கிறது தவிர வேற ஒண்டும் நான் செய்ய ஏலாது. சேர்ச் உள்ளுக்க பார்க்க எனக்கு கொஞ்சம் வித்தியாசமா இருந்தபடியால் செக்கியூரியிட்ட திரும்பவும் எப்பிடி உள்ளுக்க போறது எண்டு கேட்டன். அவன் சொன்னான் அதில வெளியில வாங்குகள் இருக்கிது. அதில குந்தி இருந்துபோட்டு சரியா பத்துமணிக்கு உள்ளுக்க போகலாம் எண்டு. குழப்பமா இருந்திச்சிது எனக்கு. ஏன் எண்டால் கதவு திறந்து இருந்தால் வழமையா சேர்ச்சுகளுக்க எந்தநேரமும் நுழையலாம். இது புது இடம் தானே?

ஏதோ அவன் சொல்லிறமாதிரியே செய்வம் எண்டு யோசிச்சுபோட்டு பேசாமல் போய் நானும் அவன் சொன்னமாதிரி வாங்கில குந்தி இருந்தன். எனக்கு பக்கத்தில ரெண்டு மூண்டு கறுவலுகள் உட்கார்ந்து இருந்து செல்லில (கைத்தொலைபேசி) கதைச்சுக்கொண்டு இருந்திச்சிதுகள். பக்கத்தில payphone எல்லாம் இருந்திச்சிது. நானும் குந்தி இருக்கிறன்... இருக்கிறன்.. இருக்கிறன்... எனக்கு நேரம் போகப் போக யோசனைகள் கூடத் துவங்கீட்டிது. சேர்ச்சுக்க போய் பிரார்த்தனையில கலந்துகொள்ளுறதுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடிகள் எண்டு சரியான எரிச்சலா இருந்திச்சிது.

பிறகு கொஞ்சநேரத்தில ஆச்சரியப்படும் வகையில ரெண்டு தமிழ் ஆக்கள் வந்து ரகசியமா தங்களுக்க கதைச்சுக்கொண்டு இருந்திச்சீனம். நானும் அமைதியா இருந்து அவேள் என்ன கதைக்கிறீனம் எண்டு காதுகள நல்லா கூர்மையாக்கி கேட்டுக்கொண்டு இருந்தன். (நீங்கள் இருக்கிறது ஆப்கானிஸ்தானோ, ரசியாவோ, சோமாலியாவோ.. எங்க இருந்தாலும் எல்லாரும் கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கோ. உங்கட பக்கத்து வீட்டு சுவர் கூட ஒரு தமிழனிண்ட சுவரா இருக்கலாம். எண்டபடியால் பொதுஇடங்களில இரகசியம் கதைக்கிறது கவனம். இல்லாட்டிக்கு என்னை மாதிரி ஆக்களிண்ட காதுகளில அது விழுந்திடும்.) பிறகு....

உள்ளுக்க இருந்து ரெண்டு மூண்டு போலிஸூகாரங்கள் வந்தாங்கள். என்னடா இஞ்ச நடக்கிது எண்டு ஒரு கருமமும் எனக்கு விளங்க இல்ல. பிறகு கொஞ்ச நேரத்தில சனங்கள் கூடுறதும் சீரியசா முகத்த வச்சுக்கொண்டு இருந்ததும் எனக்கு என்னமோ மாதிரி இருந்திச்சிது. பிறகு...

காலம்பற பத்து மணி ஆனதும் ஒவ்வொருத்தரா ஒவ்வொரு பக்கத்தால போச்சீனம். எனக்கு எந்தப் பக்கத்தால பிரார்த்தனைக்கு போறது எண்டு தெரிய இல்ல. அப்ப பக்கத்து அறை ஒண்டுல இருந்த ஒருத்தர போய் கேட்டன். இப்பிடி திரும்பவும் செக்கியூரியிட்ட சொன்னமாதிரி சொன்னன். "I just came to watch it" எண்டு. அவனும் கொஞ்சம் யோசிச்சுப்போட்டு சொன்னான். "So I think you should go to room number 254" எண்டு ஏதோ..

சரி.. பெரிய சேர்ச் தானே பெரிய பிரமுகர்கள் ஆக்கள் எல்லாரும் வாறீனமாக்கும் எண்டு நினைச்சுக்கொண்டு, மற்றது சிலவேளைகளில நாங்கள் சேர்ச்சில பெல்கனியில இருந்தும் பிரார்த்தனைகள பார்வையிடுறதுதானே? எண்டபடியால் அவன் சொன்ன வழியில மேல போனன்.

அந்த அவன் சொன்ன அறையுக்க கதவத் திறந்து போன உடன எனக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்திச்சிது.

நான் போன இடம் சேர்ச் இல்ல... அது கோர்ட் - நீதி மன்றம் எண்டு அந்தக் கதவ திறந்த உடன தெரிஞ்சிச்சிது. கதவத் திறந்தா உள்ளுக்க போலிஸ், வழக்கறிஞர்கள், வழக்கு பார்க்க வந்த ஆக்கள் எண்டு நிறையச் சனம் இருந்திச்சிது. எனக்கு சரியான அதிர்ச்சியா இருந்திச்சிது. அட சேர்ச் எண்டு நினைச்சுக்கொண்டு கோர்டுக்க வந்திட்டனே எண்டு பெரிய சங்கடமாப் போச்சிது. எண்ட மண்டயக் கொண்டுபோய் எங்க முட்டிக்கொள்ளுறது எண்டு தெரிய இல்ல.

சரி இனி என்ன செய்யுறது? நான் கடைசியா சிறீ லங்காவில போலிசுக்காரங்கள் பலாத்காரமா என்னப் பிடிச்சுக்கொண்டுபோய் சிறையில அடைக்கேக்க கடைசியா நீதிமன்றத்துக்கு போய் இருந்தன். அதுக்கு பிறகு இதுதான் முதல்தடவை. அதுவும் கனடா நீதிமன்றத்துக்க இருந்தன். சரி.. வழக்குகள் கனடாவில எப்பிடி நடக்கிது.. அதுகளப் பார்க்கிறதும் அறிவு, அனுபவம் தானே எண்டு என்னை நான் சமாதானம் செய்துகொண்டு அங்க ஒரு ஒண்டுஅரை மணித்தியாலம் குந்தி இருந்து நடந்த வழக்குகள வேடிக்கை பார்த்துப்போட்டு பிறகு வீட்ட வந்து சேர்ந்தன்.

உண்மையில அந்த மிகப்பெரிய கட்டடத்தின் அமைப்பு அச்சொட்டாக சேர்ச் மாதிரியே இருந்திச்சிது. கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும் எண்டு சொல்லுவீனம். இது அண்டைக்கு எனக்கு உண்மையாப் போச்சிது.

வீட்ட வந்து அம்மா, அப்பாவுக்கு நடந்த விசயத்த சொன்னன். எல்லாரும் ஒரே சிரிப்பு. அம்மா சொன்னா இஞ்ச பக்கத்தில எத்தின சேர்ச்சுகள் இருக்கிது நீ அங்க போகாமல் மினக்கெட்டு விடியக் காலம்பற எக்ஸ்சர்சைஸ் செய்யுறன் எண்டு சொல்லிக்கொண்டு கோர்டுக்கு போனியே எண்டு சொல்லி பேச்சு விழுந்திச்சிது. எனக்கு வெட்கமாவும் இருந்திச்சிது அட இப்பிடி நடந்து போச்சிதே எண்டு.

நான் தீவிரமான ஒரு சிந்தனையாளன் எண்டு என்னச் சொல்லிக்கொள்ளுவன். சிலது அதிகமா சிந்திக்கிறதாலதான் இப்படியான சிக்கலுகளில மாட்டுப்படவேண்டி வருகிதோ தெரியாது. அதுக்கு பிறகு இப்ப நான் சரியான கவனம். ரெண்டுதரம் மேல, அக்கம், பக்கம் எல்லாம் பாத்துத்தான் கடையோ, ஆஸ்பத்திரியோ எதுவாகிலும் புது இடங்களுக்க உள்ளுக்க போகேக்க அவதானமா போறது.

இப்ப உங்களுக்கு விளங்கிது தானே "வெளிநாட்டில இப்படியும் ஒரு அனுபவம் பெற்ற முதலாவது ஈழத்தமிழன் நானாத்தான் இருக்கும்..!" எண்டு ஏன் நான் தலைப்பு போட்டனான் எண்டு.

உங்களுக்கும் இப்பிடி ஏதாவது அனுபவங்கள் இருந்தால் அதையும் பகிர்ந்துகொள்ளுங்கோ. உங்கள் கருத்துக்கள யாழில இல்லாட்டிக்கு msivagur@gmail.com எண்டுற மின்னஞ்சலில சொல்லுங்கோ.

அனைவருக்கும் நல்லிரவு! நன்றி! வணக்கம்!

பி/கு: நான் ஒரு முட்டாளாக என்னை நினைக்கவில்லை. அதேசமயம் அறிவாளியாகவும் நினைக்கவில்லை. ஆனால் அறிவாளியாக வர ஆசைப்படுகின்றேன்.. :rolleyes:

Edited by முரளி

:D நல்ல பகிடிதான் போங்கோ.. நல்ல வேளை இசகு பிசகான இடத்துக்குப் போகலையே.

:lol::lol::lol::lol: பாவம் குரு. ஏன் உங்களுக்கு மட்டும் இபப்டியெல்லாம் நடக்கிறது? :lol::lol:

இனிமேலாவது பார்த்து போங்கோ குருவே :D

  • தொடங்கியவர்

இரவில நான் ஓடுறது, நடக்கிறது இல்ல. இதால இதுவரையில இசகுபிசகான இடத்துக்க கால் வைக்காமல் தப்ப முடிஞ்சிது.

கடவுள் நல்ல ஆக்களத்தான் சோதிக்கிறார்.

நான் அவரத் தேடிபோகேக்க அவர் டிரக்ஷன (பாதை) மாத்தி வேற எங்கையோ திருப்பி வச்சு இருக்கிறார். நீதிமன்றமும் ஒரு விதத்தில கோயில் மாதிரித்தானே?

அட...குருவே தலைப்பை பார்த்தவுடனே.."அப்துல் கலாம் மற்றது என்ன சொன்னியள் யாரும் மேதைகள் செய்தது போல" ஏதாச்சும் செய்து போட்டன் என்று நினைக்க வேண்டாம் என்று சொன்னியள் :lol: ..நான் அப்படி ஒன்னும் நினைகல நம்மளிற்கு தெரியும் தானே நம்ம குருவை பற்றி..(சரி அத விடுவோம் என்ன).. :lol:

பிறகு என்ன சொன்னியள் "சோட்ஸ்" போட்டு கொண்டு ஓடுறனியளோ நன்னா இருக்கே..(குருவே கேட்கிறன் என்று தப்பா நினைக்க கூடாது நீங்க இப்படி ஓடக்க நாய் ஏதாச்சும் துரத்தின அநுபவம் இருக்கே) :lol: ..இல்ல சும்மா கேட்டனான் பிறகு என்ன ஏசுறதில்ல சொல்லிட்டன்.. :lol:

நான் கூட எப்பாச்சும் இருந்து போட்டு ஓடுறனான் அல்லோ..(ஏன் என்று பார்க்கிறது விளங்குது)..வேறோன்றிற்குமில்

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில குட்டியை கூட்டி கொண்டு ஓடி இருக்கிறீங்க போல பதிவு திருமணம் செய்து கொள்ளளாம் என்று இங்க வந்து இன்னொரு கதையை சொல்லுங்கோ.. :lol::lol:

  • தொடங்கியவர்

ஓ நீங்களும் எல்லாரும் காற்சட்டை போட்டுக்கொண்டு சிட்னியுக்க ஓடுறனீங்களோ? நீங்களும் கடைசிமட்டும் விழாமல் பாத்து ஓடுங்கோ என.. ! :lol:

ஓ நீங்களும் எல்லாரும் காற்சட்டை போட்டுக்கொண்டு சிட்னியுக்க ஓடுறனீங்களோ? நீங்களும் கடைசிமட்டும் விழாமல் பாத்து ஓடுங்கோ என.. ! :lol:

ஒம்..குருவே "சோர்ட்ஸ்" போட்டு கொண்டு தான் ஓடுறனாங்க பாருங்கோ :unsure: ..(அப்ப தான் நாய் துரத்தினாலும் நல்லா ஓடலாம் என்று :lol: )...அது சரி "சோர்ட்ஸ்" விழாமல் ஓட சொல்லுறியளோ இல்லாட்டி நாங்கள் விழாமல் ஓட சொல்லுறீங்களோ?? :D

ஆனா இப்ப எல்லாம் விழுற மாதிரி காற்சட்டை போட்டு கொண்டு போனா தானா "ஸ்டைல்" பாருங்கோ குருவே,நீங்க எப்படி குருவே.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஓமோம் ஓடேக்க நாங்களும் விழாமல் ஓடவேணும், போட்டு இருக்கிற அரைக்காற்சட்டையும் கழண்டு விழாமல் பாத்துக்கொள்ள வேணும், மேலும் ஓடேக்க நாயும் எங்கள துரத்தக்கூடாது... :rolleyes: நான் எல்லாத்தையும்தான் சொன்னனான். ஓடுறது எண்டால் என்ன சும்மா விளையாட்டே? ஓடிப்பாத்தவனுக்குத்தான் ஓடுறதில இருக்கிற பிரச்சனைகளப் பற்றித் தெரியும்.. ஹாஹா.. ஆனா இஞ்ச ஒரு நிம்மதி நாய் ஒண்டும் இல்ல. பயப்படாமல் காற்சட்டைய மட்டும் கழண்டுவிழாமல் இறுக்கிப்பிடிச்சுக்கொண்டு ஓடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.