Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களையே நாங்கள் கிண்டல் பண்ணுறது பிழையான ஒரு விசயமோ?

கீழ்வரும் பதில்களில் எது சரியானது? 8 members have voted

  1. 1. கீழ்வரும் பதில்களில் எது சரியானது?

    • எனக்கு ஒரு தலையும், இரண்டு கண்களும், ஒரு வாயும் இருக்கின்றது...
      4
    • எனக்கு ஒரு தலையும், இரண்டு கண்களும் இருக்கின்றது, ஆனால் வாய் இல்லை..
      0
    • எனக்கு தலை இல்லை, ஆனால் இரண்டு கண்களும் ஒரு வாயும் இருக்கின்றது..
      0
    • எனக்கு தலை இல்லை, கண்களும் இல்லை, ஆனால் ஒரு வாய் மாத்திரம் இருக்கின்றது..
      1
    • எனக்கு தலை, கண்கள், வாய் எதுமே இல்லை..
      1
    • மேலுள்ள எல்லாப் பதில்களுமே பிழையானது..
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

நான் அண்மையில எனது புதிய புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்த விசயம் அனைவரும் அறிந்ததே. வாசகர்களிடம் இருந்து கல்லெறி ஒண்டும் இதுவரை விழவில்லை என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கும் அதேநேரம் முதலாவது கடுமையான விமர்சனம் எங்கட வீட்டில இருந்து வந்து இருக்கிது.

அது என்னவெண்டால் நானே என்னை நக்கலடிச்சு, குறைச்சு, தாழ்த்தி இணையத்தில எழுதப்படாதாம். அதான் எங்களையே நாங்கள் கிண்டல் பண்ணுறது பிழையான ஒரு விசயமோ எண்டு ஒரு ஆராய்ச்சியில இறங்கி இருக்கிறன்.

முதாலாவது ஒரு கதை சொல்லிறன் கேளுங்கோ. இது புத்தகம் ஒண்டுல படிச்சனான். உண்மை பொய் தெரியாது. அது என்ன எண்டால் ஒருக்கால் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு போய் இருந்தாராம். அப்ப பிரித்தானியா பிரதமரா இருந்தவர் (சேர்ச்சிலோ தெரியாது) அமெரிக்க ஜனாதிபதி அவரிண்ட வீட்டுக்கு சந்திக்கப்போன இடத்தில திடீரெண்டு உறிஞ்சுபோட்டு (உடுப்பு இல்லாமல் அம்மணமா - நிர்வாணமாக) அமெரிக்க ஜனாதிபதிக்கு முன்னால வந்து நிண்டுகொண்டு சொன்னாராம். "அமெரிக்கர்களிடம் ஒளிச்சு மறைக்கிறதுக்கு பிரித்தானியர்களிடம் ஒண்டும் இல்லை என்பதை இனியாவது நம்புங்கள்" எண்டு.

அதாவது இதிண்ட சாரம்சம் என்ன எண்டால் நாங்கள் ஒரு விசயத்தை எப்ப ஒளிச்சு மறைக்க வெளிக்கிடுறமோ அப்பத்தான் அந்தவிசயம் இன்னும் இன்னும் வெளியால பரபரப்பா வரும். ஐயோ அவர் அப்பிடியாம்... ஐயோ இவ இப்பிடியாம். ஐயோ அவர் அவவுக்கு அப்பிடி சொல்லிப்போட்டாராம். இப்படி எல்லாம் பல வதந்திகள். ஒரு சின்னக்கதைக்கு கண் மூக்கு வாய் எல்லாம் வச்சு கற்பனையில ஒரு பெரிய கதை... இப்பிடி..

ஆனால்.. உள்ளத உள்ளபடி சொல்லிப்பழகினால் சிலவேளைகளில சில பிரச்சனைகளில மாட்டுப்பட வேண்டிவந்தாலும் பல தடவைகள் பல பிரச்சனைகளில இருந்து நாங்கள் விலகிக்கொள்ள முடிகின்றது.

இப்ப இணையத்தில நான் எழுதுறதுகள வாசிக்கிற உங்களுக்கு என்னை விட அறிவு இருக்கலாம், என்னை விட அனுபவம் இருக்கலாம், என்னை விட உங்களால சிறப்பான முறையில எழுதக்கூடியதாக இருக்கலாம். என்னைவிட உங்களுக்கு பண்பாடு, நல்ல பழக்கவழக்கங்கள் இருக்கலாம். ஆனால்.. அதுக்காக நான் எழுதக்கூடாது எண்டு இல்லத்தானே? இப்ப நான் ஒரு மொக்கன் எண்டு வச்சுக்கொண்டாலும் (அப்பிடி நான் இருக்கிறதுதான் சிலருக்கு ஆசையா இருக்கிது.. ஹாஹா..) ஒரு மொக்கன் ஒரு புத்திசாலிக்கு முன்னால கதைக்காமல் வாயப்பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் எண்டு விதிகள் எண்டு ஒண்டும் இல்லத்தானே?

நான் எழுதுறதுகளில பல தவறுகள் இருக்கலாம். நான் பல விசயங்களை பிழையாக விளங்கி வச்சு இருக்கலாம். அதுக்காக நான் இந்த உலகத்தில ஒரு தொடர்பும் இல்லாமல் ஒரு மூளையுக்க ஒளிஞ்சு இருக்கவேண்டும் எண்டு தலைவிதி இல்லத்தானே?

இணையம் எண்டு வந்தால் அதுல முதலாவது விசயம் - நம்பிக்கை - TRUST. நீங்கள் மற்ற ஆக்களில நம்பிக்கை வளர்க்க வேணும். எல்லாரையும் சந்தேகக் கண்ணோட பார்த்தால் எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோட பார்த்தால் கடைசியில நீங்கள் ஒரு வேலையுமே செய்துகொள்ள மாட்டீங்கள். உங்களமாதிரித்தான் எனக்கும் ரெண்டு கண்கள், ரெண்டு காதுகள், ஒரு மூக்கு, ஒரு வாய், ரெண்டு கால்கள், ரெண்டு கைகள், ஒரு தலை... இப்படி அடிப்படை விசயங்கள் ஒரேமாதிரி இருக்கிது என்பதை உணர்ந்துகொள்ள வேணும்.

வீட்டில சொல்லிச்சீனம். நீ ஏன் உண்மையான பெயரில எழுதுறாய் புனைபெயரில எழுதலாம் தானே எண்டு. நான் யாழ் இணையத்திலதான் இணையம் எண்ட அளவில தமிழில முதலாவதா எழுதத் துவங்கினது. ஆரம்பத்தில மாப்பிளை, பிறகு கலைஞன் எண்டுற பெயரிகளுல எழுதிக்கொண்டு இருந்தன். ஆனால் பகிடி என்ன எண்டால்..

என்னுடன் சிறுவயதில இருந்து நண்பர்களாக இருப்பவர்கள் எல்லாம் கூட நான் எழுதுறதுகள கனகாலமா வாசிச்சுக்கொண்டு வந்து இருக்கிறீனம். ஆனால அவேக்கு அது நான் எண்டு தெரியாது. பிறகு அது நான் தான் எண்டு சொல்ல அவேக்கு சரியான ஆச்சரியம். ஒரு நண்பர் சொன்னார் கலைஞன் எண்டுற பெயரில ஒருவர் எழுதினதுகள வாசிச்சபோது உண்ட நினைவு எனக்கு வந்திச்சிது. ஆனால் அது நீயா இருக்கும் எண்டு நான் நினைக்க இல்ல. ஏன் எண்டால் உனக்கு இணையத்தில தமிழில எழுதுறதில இவ்வளவு ஆர்வம் இருக்கும் எண்டு நான் நினைக்க இல்ல எண்டு.

இப்பிடி என்னை ஏற்கனவே தெரிஞ்ச பலர் அது நான் எண்டு தெரியாமல் நான் எழுதுபவற்றை வாசிச்சு வரலாம். அப்ப நான் என்ன யோசிச்சன் எண்டால் இப்பிடி முரளி எண்ட உண்மையான பெயரில நான் எழுதினால் சிறுவயதில இருந்து நான் வளர்ந்து வரேக்க என்னுடன் பழகிய, மற்றும் காணாமல் போன பழைய நண்பர்களை எல்லாம் மீண்டும் இணையம் மூலமாக கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கும் எண்டு. அதான் நான் எண்ட மின்னஞ்சல் முகவரியயும் போட்டு இருக்கிறன் யாராவது பழைய நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள், யாராச்சும் என்னை தொடர்பு கொள்வதற்கு...

ஏன் எண்டால் எங்கட இளமைப் பருவம் என்பது சிறீ லங்காவில போரினால் சூரையாடப்பட்டு விட்டது. சிறீ லங்காவில இருந்த காலத்தில ஆமிப் பிரச்சனைகள் துவங்கினாப்பிறகு ஒருநாளும் நாங்கள் நிம்மதியா நித்திரை கொண்டு இருக்கமாட்டம். எப்ப என்ன நடக்கும் எண்டு தெரியாது. எத்தனையோ பல இனிய உறவுகளை நாங்கள் எல்லாருமே இந்தப் போரினால் இழந்து இருக்கிறம். என்னை மாதிரித்தான் உங்களுக்கும் பல பிரிவுகள் ஏற்பட்டு இருக்கும் எண்டு நினைக்கிறன்.

இதனால நான் எண்ட உண்மையான பெயரோட எனது வாழ்க்கை அனுபவங்களை இணையத்தில ஒளிவு மறைவு இல்லாமல் எழுதேக்க (இடைக்கிடை நான் கொஞ்சம் சுவாரசியமா இருக்கவேண்டும் எண்டுறதுக்காக சில சம்பவங்கள கொஞ்சம் கூட்டிக் குறைச்சு எழுதுறது, நல்லாப் புளுகிறது... இதுகள நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது...) நான் எழுதுறதுகள வாசிக்கேக்க சிலது காணாமல் போன பழைய நண்பர்கள் என்னை மீண்டும் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பா இது இருக்கும்.

மற்றது, இஞ்ச வெளிநாடுகளில இருக்கிற நிறைய ஆக்களுக்கு முக்கியமா சிறுவயதிலையே வெளிநாட்டுக்கு வந்த ஆக்கள், மற்றது வெளிநாட்டில பிறந்த பிள்ளைகளுக்கு நாங்கள் ஊரில எப்பிடி எப்பிடி எல்லாம் ஜாலியா வாழ்ந்தனாங்கள், எத்தனை விதமான இனிமைகளை அனுபவிச்சனாங்கள், எத்தனைவிதமான பன்பலுகள் ஊரில இருக்கிது எண்டுற விசயம் எல்லாம் தெரியாது. எண்டபடியால் எனது அனுபவங்களை வாசிக்கும்போது அவர்களுக்கும் தாயகம் பற்றிய சில தகவல்களை என்னால வழங்கக்கூடியதாக இருக்கும் எண்டு நினைக்கிறன்.

அடுத்ததாக, நான் எழுதுறது பேச்சுத்தமிழ். இடைக்கிடை ஆங்கிலமும் கலந்து எழுதுறது. இதால நிறையப்பேர் என்னோட கோவம்போட்டுட்டீனம். நான் நானாகத்தானே இருக்கமுடியும்? மற்ற ஆக்கள் நீ அப்பிடி எழுது நீ இப்பிடி எழுது எண்டு சொன்னால் அவேள் சொல்லிறமாதிரி நாங்கள் செய்ய ஏலுமா? அப்பிடி எண்டால் உத்தரவு போடுற ஆக்கள் தாங்கள் எழுதலாம் தானே? இதால இணையத்துக்கால நிறைய மனக்கசப்புக்கள் ஏற்பட்டுப் போச்சிது. நான் எழுதாமல் இருக்கிறதவிட இப்படி அரைகுறைத் தமிழிலையாவது எழுதுறது மற்ற ஆக்களுக்கு எரிச்சலா இருக்கிதோ தெரியாது ஆனால் எனக்கு சந்தோசமா இருக்கிது. ஏன் எண்டால் நாங்கள் ஏற்கனவே தாயகத்தில இருந்து பெட்டி படுக்கைகளத் தூக்கிக்கொண்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கத்தால வெளிக்கிட்டு பிரிஞ்சிட்டம். வெவ்வேறு நாடுகளில வெவ்வேறு இடங்களில வாழுற நாங்கள் எல்லாரும் ஆகக்குறைஞ்சது இணையம் மூலமாவது தொடர்புகொண்டு இருக்கிறதுக்கு இதுதான் கடைசிச் சந்தர்ப்பம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு வாழ்க்கை தானே இருக்கிது?

ஒரு முறை பிறப்பு, ஒரு முறை இறப்பு.. இடையுக்க எல்லாவிதமான கூத்துகளும் நடக்கிது. இதனால நாங்கள் வாழுற காலத்தில கலகலப்பாக, மகிழ்ச்சியாக வாழவேண்டும் என நினைப்பதில, வாழ்வதில தவறு இல்லைதானே? உலகத்தில Perfect எண்டு ஒருத்தரும் இல்ல. எல்லாரிண்ட வாழ்க்கையிலையும் பிரச்சனைகள் இருக்கிது. துன்பங்கள் இருக்கிது. முட்டாள்தனமான சம்பவங்கள் எல்லாரிண்ட வாழ்க்கையிலையும் நடந்து இருக்கிது. ஆனால் பெரும்பாலும் எல்லாரும் தங்கட திறமைகள, தாங்கள் செய்த சாதனைகளச் சொல்லுவீனமொழிய தங்கட வாழ்க்கையில நடந்த தோல்விகள், முட்டாள்தனமான சம்பவங்களை சொல்லிறது குறைவு. ஏன் எண்டால் எல்லாருக்கும் பயம் தங்கள மற்றவன் தரக்குறைவா நினைச்சுப்போடுவான் எண்டு.

அடிப்படையில உயர்வு, தாழ்வு பார்க்காமல் அன்பினை பார்த்து மற்றவர்களுடன் பழகினால் இப்படி பிரச்சனை வராது எண்டு நினைக்கிறன். மற்றது...

நான் கேட்கிற கேள்வி என்ன எண்டால் உங்கள ஒருத்தன் பார்த்து நீ ஒரு சோம்பேறி, உதவாக்கரை, எருமை மாடு... எண்டு கண்டபடி பேசினால் அவன் சொல்லிறது எல்லாம் உண்மையா? அவன் சொல்லிறதக் கேட்டுப்போட்டு நாங்கள் எருமைமாடு மாதிரி வாழ வேணுமா? இல்லத்தானே? சிலருக்கு சிலது வெட்கமாக இருக்கலாம் மற்ற ஆக்களோட வெளிப்படையா கதைக்கிறது. ஆனால் எனக்கு இந்த கூச்சம் போய் விட்டது. எப்ப இருந்து எண்டால்..

சிறீ லங்காவில நான் இருக்கேக்க... அப்பாவியான என்னை போலீசுக்காரங்கள் பிடிச்சு கையுக்கு விலங்குகள் போட்டு நீதிமன்றத்துக்கு கொண்டுபோய் ஆக்களுக்கு புதினம் காட்டி அதுக்கு பிறகு சிறையுக்குபோய்.. இப்பிடி ஆக்களுக்கு முன்னால ஒரு முறை அவமானப்பட்டாப் பிறகு... இப்ப அந்த அனுபவம் எப்படி எண்டு தெரிஞ்சு இருக்கிறதால.. வெளிப்படையாக எதையும் கதைப்பதற்கு அல்லது எழுதுவதற்கு எனக்கு பயமோ வெட்கமோ கூச்சமோ இல்லை.

ஒரு முறை ஒருத்தனை பலாத்காரமாக ஆக்களுக்கு முன்னால நிர்வாணமாக்கிவிட்டால் அதுக்கு பிறகு அவனை இரண்டாம் மூன்றாம் நாலாம் தடவைகள் நிர்வாணம் செய்யும்போது அவன் கவலைப்படுவானா? முதல்முறை அவனை துகிலுரியும்போது மிகவும் துயரமாக இருக்கும். ஆனால் அதன்பிறகு உடுப்புடன் சுத்திக்கட்டிக்கொண்டு மற்றவர்கள் நிர்வாணமாக நிற்கும் அவனை வேடிக்கை பார்க்கும்போது அவனுக்கு மற்றவர்களைப் பார்க்கும்போது் சிரிப்புத்தான் வரும். தான் மற்றவர்களுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கின்றேன் என்பதை நினைக்க கவலையாக இருக்காது.

இந்தவகையில எனது தனிப்பட்ட அனுபவங்கள்... நான் நடந்துவந்த வாழ்க்கைப் பாதையை திரும்பிப் பார்க்கும்போது - எனக்கு எனது வாழ்க்கையைப் பார்த்து சிரிக்கும்போது - என்னை நானே கிண்டல் அடிக்கும்போது கூச்சமாகவோ அல்லது வெட்கமாகவோ இல்லை. ஆனால்.. எனது சிந்தனைகள், செயற்பாடுகள் இன்னும் கூர்மை அடைவதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

எங்களையே நாங்கள் கிண்டல் பண்ணிக் கதைக்கிறது பற்றி நீங்கள் எல்லாரும் என்ன நினைக்கிறீங்கள்? உன்னையே நீ அறிவாய் எண்டு வேத வாக்குகள் சொல்லிது. மற்ற ஆக்களக் கிண்டல் பண்ணும்போது எங்களை நாங்கள் அறிந்துகொள்ள முடியுமா? இல்லாட்டிக்கு எங்களையே - நாங்கள் செய்கின்ற கோமாளித்தனமான வேலைகளைப் பார்த்து கிண்டல் செய்யும்போது எங்களை நாங்கள் அறிந்துகொள்ள முடியுமா?

கடைசியா திரும்பவும் ஆரம்பத்தில சொன்ன கதைய நான் திருப்பிச் சொல்லிறன் கேளுங்கோ..

ஒருக்கால் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு போய் இருந்தாராம். அப்ப பிரித்தானியா பிரதமரா இருந்தவர் (சேர்ச்சிலோ தெரியாது) அமெரிக்க ஜனாதிபதி அவரிண்ட வீட்டுக்கு சந்திக்கப்போன இடத்தில திடீரெண்டு உறிஞ்சுபோட்டு (உடுப்பு இல்லாமல் அம்மணமா - நிர்வாணமாக) அமெரிக்க ஜனாதிபதிக்கு முன்னால வந்து நிண்டுகொண்டு சொன்னாராம். "அமெரிக்கர்களிடம் ஒளிச்சு மறைக்கிறதுக்கு பிரித்தானியர்களிடம் ஒண்டும் இல்லை என்பதை இனியாவது நம்புங்கள்" எண்டு.

சரி மிச்சம் பிறகு கதைக்கிறன். கனக்க எழுதினால் எழுதி நானும் களைச்சுப்போவன், வாசிச்சு நீங்களும் களைச்சுப் போவீங்கள். உங்கட பின்னூட்டல்களை யாழில இல்லாட்டிக்கு msivagur@gmail.com எண்டுற மின்னஞ்சலில சொல்லுங்கோ.

அனைவருக்கும் நல்லிரவு! நன்றி! வணக்கம்!

பி/கு: தயவு செய்து வாக்கெடுப்பிலும் கலந்து இந்த ஆராய்ச்சி வெற்றி பெற உதவுங்கள். வாக்கு அளிக்காதவர்கள் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரியாதவர்களாக கணிக்கப்படுவார்கள்.

Edited by வலைஞன்
மிகுதிப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

நான் சீரியசா (தீவிரமா) ஒரு ஆராய்ச்சியில இறங்கி இருக்கிறன். ஒருவரும் இன்னும் ஒண்டும் சொல்ல இல்ல. நான் மேல கேட்ட கேள்வி பதில் சொல்லிறதுக்கு கஸ்டமா இருக்கிதோ?

உங்கட கேள்வியை சனம் பெரிய விசயமாக நினைக்கல போல்..! எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருங்கோ.!

  • தொடங்கியவர்

ஓ அப்படியோ லீ. ஓம் அப்படியும் இருக்கலாம். வாக்கெடுப்பில் ஓட்டு போட்ட பொதுஜனங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

ஒரு விசயம்...

நீங்கள் வாக்குப் போடேக்க நான் எழுதின பதில்களை கவனமாகப் பாருங்கோ...

அதில எனக்கு எண்டு கூறப்படுகின்றது. இது இரண்டு அர்த்தங்களில வரும்.

1. நான் - முரளிக்கு..

2. மற்றது நீங்கள்..

மேலே சொல்லப்பட்ட பதில்கள் சிலருக்கு சிரிப்பா இருக்கலாம். ஆனால் அப்படி சொல்லப்பட்டதன் உள்ளார்ந்தம் என்ன எண்டால் நாங்கள் ஒருவரைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் கற்பனை செய்து வைத்து இருக்கிறம். பல தடவைகளில மற்றையவர்களும் அடிப்படையில் எம்மை மாதிரியானவர்கள் என்பதை மறந்துவிடுகிறம்.

Edited by முரளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களையே நாங்கள் கிண்டல் பண்ணுறது பிழையான ஒரு விசயமோ?, உன்னையே நீ அறிவாய் ... !

கீழ்வரும் பதில்களில் எது சரியானது?

எனக்கு ஒரு தலையும், இரண்டு கண்களும், ஒரு வாயும் இருக்கின்றது... [ 4 ] [57.14%]

எனக்கு ஒரு தலையும், இரண்டு கண்களும் இருக்கின்றது, ஆனால் வாய் இல்லை.. [ 0 ] [0.00%]

எனக்கு தலை இல்லை, ஆனால் இரண்டு கண்களும் ஒரு வாயும் இருக்கின்றது.. [ 0 ] [0.00%]

எனக்கு தலை இல்லை, கண்களும் இல்லை, ஆனால் ஒரு வாய் மாத்திரம் இருக்கின்றது.. [ 0 ] [0.00%]

எனக்கு தலை, கண்கள், வாய் எதுமே இல்லை.. [ 1 ] [14.29%]

மேலுள்ள எல்லாப் பதில்களுமே பிழையானது

ஒண்ணுமே புரியல...

இருந்தாலும் என் வாக்கை பதிவு பண்ணியிருக்கிறேன்..

யாரவது கள்ள ஓட்டு போட்டுவிட போகிறார்கள்.....

  • தொடங்கியவர்

வாக்கு போட்டதற்கு நன்றி கறுப்பன்...

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்து வாழ வேண்டும்.

பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!

  • தொடங்கியவர்

ஒம்..நன்ன தலைப்பு குருவே நான் ஆறுதலா உதுக்கு விடை சொல்லுறன் என்ன.. :D (ஏனேன்டா உதுக்கு யோசித்து விடை சொல்லனும் பாருங்கோ :lol: )..அதோட குரு தொடர்ந்து ஆக்கத்தை தந்து கொண்டிருக்கிற படியா எனக்கு எதுக்கு விடை அளிக்கிறது என்று தெரியாம இருக்கு..ஆனபடியா குருவே கொஞ்சம் மெதுவா தாங்கோ என்ன.. :lol:

சரி அது இருகட்டும் மேல நன்ன பாட்டு போட்டிருக்கிறியள் :unsure: ...அப்ப இப்ப குரு வந்து எம்.ஜி.ஆர் நான் வந்து அந்த சின்ன பிள்ள என்று சொல்லுறியள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

மாப்பூ

இது ஆதிதிதிதிதிதி......

உண்மையைச் சொல்லட்டா... எனக்கு சிந்திக்க ஒரு தலையும், பார்க்க இரு கண்களும், பேச ஒரு வாயும் தந்த கடவுள் போனாப் போகுது என்று ஒரு வாலையும் தந்துவிட்டார். என்ன சிந்திக்கவும், பார்க்கவும், பேசவும் பிரயோசனம் அற்ற எனக்கு ஒன்றே ஒன்றுமட்டும் பிடித்தமானதாக இருக்கிறது. அதை என்னுடைய படத்தில் பார்க்கவும். ஹிஹிஹிஹி...

  • தொடங்கியவர்
:rolleyes: கனநாளைக்கு பிறகு நல்ல ஒரு பகிடி ஆதி.

முரளி,

எங்களை நாங்கள் கிண்டல் பண்ணுவதில்

தவறில்லை தான்,

அது எப்பொழுது என்றால்

நம்மில் பல குறைகள் இருந்து

அதை திருத்திக் கொள்வதிற்காக

நம்மை நாமே கிண்டல் செய்து

அக் குறைகளை நிவர்த்தி

செய்யலாம். :rolleyes:

  • தொடங்கியவர்

நன்றி கனிஷ்டா.. நீங்கள் ஒருவராவது என்னைக் கிண்டல் பண்ணாமல் உருப்படியான ஒரு கருத்தை கூறியது மகிழ்ச்சி அளிக்கின்றது.. :lol:

முரளி உங்களுக்கு தனிமடல் ஒன்று அனுப்ப முயற்சித்தேன் முடியவில்லை

  • தொடங்கியவர்

சிவா அண்ணை, எண்ட புரபைலுக்கு போய் பாருங்கோ. அதில ஒரு கொமண்ட் எழுதி, மின்னஞ்சல் முகவரியும் போட்டு இருக்கிறன். நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.