Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முண்டச்சி நடிக்கலாமா?

Featured Replies

அவ்வையார் படம் அரை நூற்றாண்டுக்கு முன்பு மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைக்காவியம். அவ்வையாராக நடித்த கே.பி. சுந்தராம்பாள் அக்காலக்கட்டத்திலேயே ஒரு லட்சரூபாயை அப்படத்தில் நடித்ததற்காக சம்பளமாக பெற்று தமிழ் திரை சரித்திரத்தில் இடம் பிடித்தார். ஜெமினி பிக்சர்ஸின் எஸ்.எஸ். வாசன் இப்படத்தை தயாரித்து பெரும் லாபம் சம்பாதித்தார். இவையெல்லாம் நமக்கு தெரிந்த செய்திகள். இத்திரைப்படத்தின் பின்னணியில் நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்று பலரும் அறியாதது.

அவ்வையார் கதையை திரையில் கொண்டுவர முடிவு செய்த ஜெமினியின் கதை இலாகா கதை விவாதத்துக்காக அமர்ந்திருக்கிறது. இது ஏற்கனவே நாடகமாக பெரும் வெற்றி பெற்ற கதை என்றாலும் திரைக்காக சில புதிய விஷயங்களை மெருகேற்றுகிறார்கள். கதையின் பாத்திரங்களுக்கு யார் யார் என்ற விவாதத்தின் போது அமரர் எஸ்.எஸ். வாசன் அவ்வையாராக கே.பி.எஸ். அவர்கள் நடித்தால் சிறப்பாக அமையும் என்று கருத்து தெரிவிக்கிறார்.

ஆனால் விவாதத்தில் அமர்ந்திருத்த கதை இலாகாவைச் சேர்ந்த சிலர் உடனடியாக மறுப்பு தெரிவிக்கிறார்கள். அவ்வையார் பாத்திரம் இந்து மதமக்களின் மனதில் பதிந்த தெய்வீக பாத்திரம். சுந்தராம்பாள் ஒரு விதவை. "முண்டச்சியை வைத்து படமெடுத்தால் யார் பார்ப்பார்கள்? அவரை வைத்து படமெடுத்தால் படம் படுதோல்வி அடையும்" என்றும் எச்சரிக்கிறார்கள். சினிமாவுலகில் மூடநம்பிக்கைகள் கொடிகட்டிப் பறந்த காலம் அது. வேறு வழியில்லாமல் அரை மனதுடன் எஸ்.எஸ். வாசனும் சுந்தராம்பாளை நடிக்க வைக்க வேண்டாமென்று ஒப்புக் கொள்கிறார்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட வி.ஐ.பி. ஒருவர் கடும் கோபமடைகிறார். உடனடியாக வாசனின் இல்லத்துக்கு தானே நேரில் செல்லுகிறார். வாசன் வீட்டின் பெரிய கதவு அவரை கண்டதும் தானாக திறக்கிறது. ஊஞ்சலில் ஏதோ யோசனையில் இருந்த வாசன் இவரை கண்டதும் ஓடிவருகிறார்.

"என்னிடம் சொல்லியிருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே" என்கிறார் வாசன் மிகவும் பணிவுடன். அந்த வி.ஐ.பி. மீது அபரிதமான அன்பும், மரியாதையும் கொண்டவர் பண்பாளர் எஸ்.எஸ். வாசன்.

அதற்கு நம் வி.ஐ.பி., "எனக்கு உங்களிடம் ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நான்தான் உங்களை நாடி வரவேண்டும். அதுதான் முறை." என்கிறார்.

வாசன் அவர் என்ன உதவி கேட்கப்போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறார்.அப்போது அவர், "சுந்தராம்பாளை முண்டச்சி என்ற காரணத்தினால் அவ்வையாரில் நடிக்க வைக்காமல் தடை செய்தது தன்னை மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதை தாங்க முடியாது" என்று தன் மன வேதனையை சொல்லி கவலைப் பட்டார்.

அதுமட்டுமல்லாமல் அவ்வையார் படத்தை சுந்தராம்பாளை வைத்தே எடுக்க வேண்டும் எனவும், அப்படி அந்தப் படம் இந்தக் காரணத்திலால் தோல்வியடையுமாயின், அந்தத் தோல்விக்குரிய விலை எத்தனை லட்சமாக இருந்தாலும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தார்.

உடனே வாசன், "உங்கள் சொல்லை நான் என்றாவது மீறியிருக்கிறேனா" என்று சொல்லி உடனடியாக அவ்வையார் படவேலைகளை கவனிக்க ஆரம்பித்தார். அவ்வையாராக கே.பி.எஸ். அபாரமாக நடித்துக் கொடுத்தார்.

படம் வரலாறு காணாத பெரும் வெற்றி. பேரறிஞர் அண்ணா இப்படத்தை பலமுறை விரும்பிப் பார்த்ததாகச் சொல்லுவார்கள். இப்படத்தில் நடித்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை ஏற்கனவே கே.பி.எஸ்.சுக்கு வாசன் வழங்கியிருந்தார். படத்தின் பெரும் வெற்றியைக் கண்ட அவர் இன்னொரு ஒரு லட்ச ரூபாயை கே.பி.எஸ்.சுக்கு வழங்கினார். அந்தக் காலத்து ஒரு லட்சரூபாய் என்பது இக்காலத்தில் ரஜினிகாந்த் வாங்கும் சம்பள மதிப்பை விட அதிகம் என்கிறார்கள்.

சுந்தராம்பாள் தன்னை வைத்து வாசனிடம் படம் எடுக்க சொன்ன வி.ஐ.பி.யின் வீட்டுக்கு நேரே செல்லுகிறார். தான் வாங்கிய கூடுதல் ஒரு லட்சரூபாயை அவர் பாதத்தில் சமர்ப்பித்து கண்ணீருடன் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்.

உடனே வி.ஐ.பி. பதறியபடி, "எனக்கு காலில் விழுவதே பிடிக்காது. இந்தப் பணம் உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு. நான் உங்கள் திறமையின் மீது மதிப்பு வைத்தே வாசனிடம் சிபாரிசு செய்தேன். அதுமட்டுமல்லாமல் எந்தப் பெண்ணையும் பெண் என்ற ஒரே காரணத்துக்காக தாழ்த்துவதை என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது" என்றார்.

இத்தனைக்கும் கே.பி.எஸ். அந்த வி.ஐ.பி.க்கு எதிரான கொள்கையுடையவர். அவருக்கு எதிராக காங்கிரஸாருடன் இணைந்து டெல்லியில் பல பாடல்களை பாடியவர்.

சரித்திர நாயகர்கள் வரலாற்றில் அத்திபூத்தாற்போல எப்போதாவது தான் தோன்றுவார்கள். தமிழ் சமூகம் செய்த பாக்கியம் அந்த சரித்திர நாயகர் தமிழ்நாட்டிலே 125 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றினார். யார் அந்த சரித்திரநாயகன் என்பதை ஊகித்திருப்பீர்கள். பெண்விடுதலையையும், சுயமரியாதையையும் தன் இருகண்களாக போற்றிய மாவீரர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தான் அவர்.

வருங்காலத்தில் இதுபோன்ற வரலாற்றுநாயகர் தோன்றுவார் என்று உணர்ந்துதானோ என்னவோ அவ்வைக் கிழவி இப்படி பாடி வைத்திருக்கிறார்.

"இட்டார் பெரியோர் இடாதோர் இழி குலத்தோர்பட்டாங்கில் உள்ளபடி"

- ஈழத்துப் பாடகர் தேனிசை செல்லப்பா சொல்ல நேரில் கேட்டவர் தோழர் லீனாராய், ஜெர்மனி

லக்கிலுக்

முதலில் தேனிசை செல்லப்பா ஈழத்துப் பாடகர் அல்ல. ஈழத்து விடுதலை கீதங்களைப் பாடும் இந்தியப்பாடகர். அவர் இந்தக் கதையை இட்டுக் கட்டிச் சொல்லியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. காரணம் ஜெமினி அதிபர் வாசன் அவர்கள் ஒளவையார் திரைப்படம் பற்றி எழுதிய பல செய்திகளை நான் வாசித்திருக்கின்றேன். அதில் ஒளவையாராக கே.பி.சுந்தராம்பாளை நடிக்க வைக்க, அவரது சம்மதத்தைப் பெற தான் பட்ட கஷ்டங்கள் பற்றி நிறையவே எழுதியுள்ளார். அவர் எந்த இடத்திலும் கே.பி.சுந:தராம்பாளுக்கு இரண்டாவது தடைவையாக ஒரு இலட்சம் கொடுத்தாகக் குறிப்பிடவுமில்லை. கணவனின் மறைவிற்குப் பின் நடிப்பதில்லையென முடிவெடுத்து ஒதுங்கியிருந்தவர் கே.பி.சுந்தராம்பாள். அதுபோல் கே.பி.சுந்தராம்பாள் இன்னொருவரின் காலில் விழுந்தாரென்பதை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் திராவிடக் கட்சிகள் இதை வைத்தே அரசியல் பண்ணியிருப்பார்களே!! கே.பி.சுந்தராம்பாளும், ஜெமினி அதிபர் வாசனும் தற்போது உயிரோடில்லையென்பதால் எவரும் எதைவேண்டுமென்றாலும் தம் வசதிக்கேற்றவாறு பூச் சுற்றலாம்.

லக்கிலுக்

முதலில் தேனிசை செல்லப்பா ஈழத்துப் பாடகர் அல்ல. ஈழத்து விடுதலை கீதங்களைப் பாடும் இந்தியப்பாடகர். அவர் இந்தக் கதையை இட்டுக் கட்டிச் சொல்லியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. காரணம் ஜெமினி அதிபர் வாசன் அவர்கள் ஒளவையார் திரைப்படம் பற்றி எழுதிய பல செய்திகளை நான் வாசித்திருக்கின்றேன். அதில் ஒளவையாராக கே.பி.சுந்தராம்பாளை நடிக்க வைக்க, அவரது சம்மதத்தைப் பெற தான் பட்ட கஷ்டங்கள் பற்றி நிறையவே எழுதியுள்ளார். அவர் எந்த இடத்திலும் கே.பி.சுந:தராம்பாளுக்கு இரண்டாவது தடைவையாக ஒரு இலட்சம் கொடுத்தாகக் குறிப்பிடவுமில்லை. கணவனின் மறைவிற்குப் பின் நடிப்பதில்லையென முடிவெடுத்து ஒதுங்கியிருந்தவர் கே.பி.சுந்தராம்பாள். அதுபோல் கே.பி.சுந்தராம்பாள் இன்னொருவரின் காலில் விழுந்தாரென்பதை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் திராவிடக் கட்சிகள் இதை வைத்தே அரசியல் பண்ணியிருப்பார்களே!! கே.பி.சுந்தராம்பாளும், ஜெமினி அதிபர் வாசனும் தற்போது உயிரோடில்லையென்பதால் எவரும் எதைவேண்டுமென்றாலும் தம் வசதிக்கேற்றவாறு பூச் சுற்றலாம்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா!

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!!

இது திரிப்பு வேலையில் வல்லமை காட்டி பிழைக்கும் பழக்கமடா!

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!! :D

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

தோழர் வெற்றிவேல் அவர்களே!

பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களை பொய்யர் என்கிறீர்களா? ஆம் அல்லது இல்லை என்று ஒரே வார்த்தையில் பதிலளிக்கவும்!!!

தோழர் வெற்றிவேல் அவர்களே!

பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களை பொய்யர் என்கிறீர்களா? ஆம் அல்லது இல்லை என்று ஒரே வார்த்தையில் பதிலளிக்கவும்!!!

தோழர் இலக்கி இலுக்கு அவர்களே!

பாடகர் தேனிசை செல்லப்பாவின் பாடல்கள் தேனாக இனித்திருக்கிறது! மற்றும்படி அவரை நேரில் சந்தித்தது இல்லை. அவரை பொய்யர் என்று நான் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை.

நீங்கள் இணைத்துள்ள புனைகதையை திரு.தேனிசை செல்லப்பா தான் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்? ஆதாரம் எதுவும் இன்றி உங்கள் இஷ்டத்திற்கு எதையாவது கொண்டு வந்து இணைத்து விடுகிறீர்கள். நீங்கள் இணைத்த விடயங்கள், நாம் இதுவரை கேள்விப்பட்ட சம்பவங்களுக்கு முரணாக இருந்தால் அதை தவறென்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

அது தவிர, இது தேனிசை செல்லப்பா அவர்களே சொன்னதாக வைத்துக் கொண்டாலும், அவருக்கு யாரோ ஒருவர் தந்த ஒரு தவறான தகவலின் அடிப்படையில் அவர் ஏன் பேசி இருக்கக் கூடாது?

தேனிசை செல்லப்பா இனிமையான ஈழவிடுதலை பாடல்களை இசைப்பவர். அதனால் அவர் மேல் மரியாதை உண்டு. அதற்காக அவர் சொல்லும் தகவல்களை எல்லாம் ஆராய்ச்சிகள் எதுவும் இன்றி அப்படியே நம்பி விடும் HERO WORSHIP ஐ ஈழத்தமிழர்களிடம் நீங்கள் காணமுடியாது நண்பரே!

Edited by vettri-vel

இந்தச் சம்பவத்தை நான் பல மாதங்களுக்கு முன்பே வேறு யாரோ எழுதி படித்திருக்கிறேன். யாழ் களத்தில் இதை எழுதியதாகவும் எனக்கு ஞாபகம். தேடிப் பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

தேனிசை செல்லப்பா இனிமையான ஈழவிடுதலை பாடல்களை இசைப்பவர். அதனால் அவர் மேல் மரியாதை உண்டு. அதற்காக அவர் சொல்லும் தகவல்களை எல்லாம் ஆராய்ச்சிகள் எதுவும் இன்றி அப்படியே நம்பி விடும் HERO WORSHIP ஐ ஈழத்தமிழர்களிடம் நீங்கள் காணமுடியாது நண்பரே!

தோழர் வெற்றிவேல் அவர்களே!

மெத்த மகிழ்ச்சி!!

இன்று நம் கண் முன்னே ரத்தமும், சதையுமாக வாழும் தேனிசை செல்லப்பா அவர்கள் சொன்னதை நம்பமாட்டீர்கள்.

***

Edited by வலைஞன்

வாசன் வீட்டின் பெரிய கதவு அவரை கண்டதும் தானாக திறக்கிறது.

எப்படி முடியும்??

இன்று நம் கண் முன்னே ரத்தமும், சதையுமாக வாழும் தேனிசை செல்லப்பா அவர்கள் சொன்னதை நம்பமாட்டீர்கள்.

அவர் சொன்னதற்குண்டான ஆதாரம் எங்கே என்பது தான் கேள்வி.

  • தொடங்கியவர்

எப்படி முடியும்??

கடவுள் கதவை திறந்துவிட்டார் :unsure:

அவர் சொன்னதற்குண்டான ஆதாரம் எங்கே என்பது தான் கேள்வி.

ஆதாரம் தேனிசை செல்லப்பா என்பது தான் பதில்! :rolleyes:

நண்பர் வலைஞன் அவர்களுக்கு!

ராமனையும், கிருஷ்ணனையும் HERO WORSHIP செய்வது குறித்த என்னுடைய பதில் வெட்டப்பட்டிருக்கிறது. நண்பர் வெற்றிவேல் அவர்களின் கருத்துக்கு எதிர்வினையாக நாகரிகமான முறையிலேயே அதை பதிந்திருந்தேன். அப்படியாயின் வெற்றிவேல் அவர்களின் அந்த கருத்தையும் நீங்கள் நியாயமாக நீக்கியிருக்க வேண்டும். நன்றி!

கடவுள் கதவை திறந்துவிட்டார் :lol:

இதனால் தான் நம்பமுடியவில்லை.

இப்படியான கூற்றுக்கள் வருமாயின், மீதி செய்திகளின் நிலமை பற்றிய கேள்வி நியாயமானதுதான்.

லக்கிலுக்

தேனிசை செல்லப்பா அருமையான உணர்வுபூர்வமான ஒரு பாடகர் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் மேலே நீங்கள் இணைத்த விடயம், இன்னொருவர் தேனிசை செல்லப்பா சொன்னதாகச் சொன்னதை நம்பி இணைத்துள்ளீர்கள். இதில் எவ்வளவு தூரம் நம்பகத்தன்மையுள்ளது என்பதை நீங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாது. காரணம் தேனிசை செல்லப்பா இதைச் சொல்லியிருந்தாலும் அவரும் இன்னொருவர் சொன்னதைக் கேட்டுத் தான் சொல்லியிருப்பார். அவர் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியில்லை.

இப்படிப் பல கட்டுக்கதைகள் உலாவருவதற்கு தகுந்த உதாரணமாக சமீபத்தில் திரையுலகினர் நடாத்திய உண்ணாவிரத்தில் நடிகர் சத்தியராஜ் சுற்றிய காதிலை பூ . முன்னாள் கர்நாடக முதல்வர், முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜி ஆருக்கு விருந்து வைத்ததாகவும். அதில் கோழி, நண்டு எனப் பலவகை உணவுகள் பரிமாறப்பட்டதாகவும் அவர் எல்லாவற்றையும் உண்டதாகவும் ஆனால் தண்ணீர் மட்டும் குடிக்கவில்லை என்று நடிகர் சத்தியராஜ் கதையளந்தார். ஆனால் மேலே சொன்ன அத்தனை உணவு வகைகளும் தண்ணீர் இல்லாமலா சமைத்தார்கள். அதைவிட முக்கியமானது. எம்ஜி ஆர் கோழி சாப்பிடுவதில்லை. இதைப்பற்றி முன்பு ஒரு படப்பிடிப்பில் நடந்த சம்பவமாக ஏவிஎம் சரவணன் குறிப்பிட்டதைப் படித்துள்ளேன். காட்சிப்படி எம்ஜிஆர் கோழிக்கால் சாப்பிட வேண்டும். அவர் கோழி சாப்பிட மாட்டாரென்பதால் கோதுமை மாவில் கோழிக்கால் மாதிரிச் செய்து அதை அவித்து பின் நிஜக் கோழிக்கால் போலவே வண்ணமும் சேர்த்து அதை அவர் சாப்பிட வைத்து படமாக்கியதாக சரவணன் குறிப்பிட்டுள்ளார். அப்போ சத்தியராஜ் சொன்னது உண்மையென்று எடுக்கலாமா??

எதையும் சிலருக்கு மிகைப்படுத்திச் சொன்னால்த்தான் திருப்தி. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்???

Edited by Vasampu

உண்மை தான் வசம்பு.

வசம்பு: குமுதம் இணையத்தில் வாணி ஜெயராமின் பேட்டி உள்ளது. பார்த்தீர்களா? (வீடியோ வடிவம்)

Eas

மிக்க நன்றிகள் உங்கள் கருத்திற்கும், நான் வாணிஜெயராமின் இரசிகன் என முன்பு சொன்னதை ஞாபகம் வைத்து அவரின்பேட்டி பற்றி அறியத் தந்தமைக்கும்.

  • 2 weeks later...

Eas

இன்றுதான் இசையரசி வாணிஜெயராமின் செவ்வியைப் பார்த்தேன். அற்புதம. அந்தக் கணீர் குரல் இன்று கூட மாறாமல் அப்படியே இருப்பது ஆச்சரியம். தமிழில் அவரின் முதல்ப்பாடல் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" எனவே நினைத்திருந்தேன். அது தவறு என்பது அவரின் செவ்வியிலிருந்து தெரிந்து கொண்டேன். இன்று கூட அவரின் "ஏழு ஸ்வரங்களுக்குள்" பாடலை எனை மறந்து இரசிப்பவன் நான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கிலுக்!

நல்லதொரு தகவலை இணைத்திருக்கிறீர்கள். பெரியார் கே.பி. சுந்தரம்பாளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார் என்று நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். ஒரு வேளை இதுவாக இருக்கலாம்.

ஆனால் நீங்கள் ராமனையும் கண்ணனையும் கூறியது ஏன் வெட்டப் பட்டது என்று எனக்கும் தெரியவில்லை.

ராமனால் சொந்த மனிசிக்கே ஆபத்து, கண்ணனால் ஊரிலுள்ளவன் மனிசிமாருக்கெல்லாம் ஆபத்து. புராணங்கள் இப்படித்தானே புனையப் பட்டுள்ளன! இது Hero Worship கூட அல்ல Villain worship.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பி. சுந்தரம்பாள் பாடி நடித்த ஞானப் பழத்தை பிழிந்து பாடல் என்று நினைக்கின்றேன்

http://eelamtube.com/view_video.php?viewke...b059bfccbd02be6

Edited by tamillinux

Eas

இன்றுதான் இசையரசி வாணிஜெயராமின் செவ்வியைப் பார்த்தேன். அற்புதம. அந்தக் கணீர் குரல் இன்று கூட மாறாமல் அப்படியே இருப்பது ஆச்சரியம்.

உண்மை தான், அவரது குரலின் இனிமை கொஞ்சம் கூட மாறவில்லை. ஜெயா தொலைக்காட்சியில் ராகமாலிகா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக 3/4 பாகங்களுக்கு வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரைப்பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது.

- ஈழத்துப் பாடகர் தேனிசை செல்லப்பா சொல்ல நேரில் கேட்டவர் தோழர் லீனாராய், ஜெர்மனி

உங்கள் தாய் நாட்டில்

அதுவும் பக்கத்தில் உயிரோடு வாழும் ஒருவரைப் பற்றி தெரியல்லையா?

செத்துப் போனவங்கள் பாவம்.................. :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.