Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானே முதலமைச்சர், தட்டிப்பறிக்க பிள்ளையானுக்கு இடமளியேன். - மார்தட்டும் ஹிஸ்புல்லா

Featured Replies

கிழக்கு முதலமைச்சா பதவியை பிள்ளையான் தட்டிப்பறிக்க ஒருபோதுமே இடமளிக்கப்படாதென தெரிவித்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நாளை புதன் தான் முதலமைச்சாராக பதிவியேற்பது உறுதியென உறுதிபடத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று திங்கட்கிழமை மேலும் தெரிவித்தாவது :

கிழக்குத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகம் சார்பில் அதிக ஆசனங்களைப் பெறுபவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவாரென மஹிந்த கூறியிருந்தார். அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுடன் இது பற்றிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

கிழக்கில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் 8 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 8 தமிழர்களும் தெரிவாகியுள்ளனர். முஸ்லிம் சமூகம் அதிக பிரதிநிதிகளை பெற்றிருக்கும் நிலையில், நானே முதமைச்சராக வரவேண்டும். முஸ்லிம்கள் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் ஹிஸ்புல்லவே முதலமைச்சரெனவும் ஒப்புக் கொள்ளபட்டுள்ளது.

இந் நிலையில், எவ்வாறு முதலமைச்சர் பதவியை பிள்ளையான் கோர முடியும்? முதலமைச்சர் பதவியைக் கோர அவருக்கு எந்தவொரு அருகதையும், உரிமையும் கிடையாது.

அவர் முதலமைச்சர் பதவியை தட்டிப்பறிக்க முயல்கிறார். இதனை நாம் ஒருபொதுமே அனுமதிக்க மாட்டோம்.

கிழக்கு தேர்தலில் 6 தமிழ்ச் சகோதரர்களே தெரிவு செய்யபட்டுள்ளனர். இதை பிள்ளையான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நாளை நான் முதலமைச்சராக பதவியேற்பேன். இதனை அவரினால் தடுக்கமுடியாது.

பிள்ளையானுக்காக எந்த விட்டுக் கொடுப்பையும் செய்வதற்கு நான் தயாரில்லை. நானும், முஸ்லிம் அமைச்சர்களும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளளோம் என்றார்.

இதே வேளை, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாகவும், வீதிகளில் பொதுமக்கள் பட்டாசு கொளுத்தி, வாகனப் பேரணி சென்று தமது ஆதரவை ஹிஸ்புல்லாவிற்கு தெரியப்படுத்தியிருப்பதாவும

ஆளும் கட்சியிலே ஒரு எதிர் (ரி)க் கட்சி..வாழ்க..!

  • தொடங்கியவர்

முதலமைச்சர் பதவி குறித்து ஒரிரு நாட்களில் முடிவு - அரசு

கிழக்குத் தேர்தலில் பிள்ளையான் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கின்ற போதிலும் கிழக்கு முதலமைச்சராக யாரை நியமிப்பது என்பது குறித்த அரசுத் தலைமை ஓரிரு நாட்களில் கூடி முடிவெடுக்கும் என்று அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டள்ளது.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல குடுமி பிடி சண்டை பார்க்கலாம் போல இருக்குதே. அதுதான் புலிகள் கம்மென்று இருக்காங்க போல.

கிஸ்புல்லா பிபிசிக்கு அளித்த பேட்டியில் 80,000 முஸ்லீம் வாக்காளர் உள்ள இடத்தில் தனக்கு 34,000 விருப்பு வாக்குகளும் 210000 தமிழ் வாக்காளர் உள்ள இடத்தில் பிள்ளையானுக்கு வெறும் 38,000 கிடைத்ததைக் கருத்தில் எடுக்கப்படாது என்று சொன்னது மட்டுமன்றி சுழற்றி முறை முதலமைச்சர் கதிரைக்கு தான் இணங்க வேண்டி வராது என்றும் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி சார்ந்த இருவருக்குள்ளேயே இழுபறி.. இந்த நிலையில்.. இவரின் கோசமும் கிழக்கை கட்டி எழுப்பிறதுதான். பார்க்கத்தானே போறம் என்னத்தைக் கட்டி எழுப்பினம் என்று..! :rolleyes:

  • தொடங்கியவர்

ரணில் ஒரு பேட்டியில் கூறியது போல பகலில் ஹிச்புல்லாவுக்கும் இரவில் புள்ளையானுக்கும் கொடுக்கட்டும். நல்ல கூத்துப் பார்க்கலாம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இரவில் இருட்டு அடிதான் கொடுப்பார்கள். வர வர ரணிலுக்கும் குசும்பு மெத்திப்போச்சு.

நானும் முதலமைச்சருக்கு பதியபோறன்......வேலைவாய்ப்பு இருக்குபோல அங்க.....வாறவன் போறவன் எல்லாம் முதலமைச்சர் ஆறாங்க....

ரணில் ஒரு பேட்டியில் கூறியது போல பகலில் ஹிச்புல்லாவுக்கும் இரவில் புள்ளையானுக்கும் கொடுக்கட்டும். நல்ல கூத்துப் பார்க்கலாம்.

ரணில் நல்லாத்தான் பகிடி விடுறார்.. அதாவது அவருக்கு வருதே

  • கருத்துக்கள உறவுகள்

CM post: Pillayan not worried

TMVP Leader, Sivanesathurai Chandrakanthan alias Pillayan said yesterday he was not worried whether he gets the Chief Minister’s post or not, but what he wanted was to do a maximum service to the people as the leader of the TMVP.

He said he was extremely happy about getting the maximum number of preferential votes from the people in the east as a candidate contested for the first time and he was thankful to the people in the east.

He said he did not feel sorry if he was not appointed as the Chief Minister and was prepared to accept any decision by the government.

ஐயோ ஐயோ.. கிழக்கின் விடிவெள்ளிகள்.. உதிரும் விண்கற்களா எரிந்து சாம்பலாகினம். கிழக்கை கட்டி எழுப்பிற ஆக்கள்.. சீ சீ இந்தப் பழம் புளிக்குது என்று சிங்களப் பேரினவாதத்துக்கு அடிபணிஞ்சு போயிருக்கினம்.

எல்லாம் தமிழ் மக்களின் நலனில் அல்ல.

அஸ்ரப் அலகு தான் கேட்டார். கிஸ்புல்லா முழு கிழக்கும் தானே தளபதி என்றார். பிள்ளையானோ.. தனக்கு பங்கிறைச்சி தந்தா காணும் எங்கிறார்.

சர்வதேசம் செய்ய வேண்டியது.. தேர்தல் சட்ட விரோதம் என்று அறிவிப்பதுடன்.. மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய வகையில் இராணுவ மற்றும் ஆயுததாரிகளின் பிரசன்னமற்ற மற்றும் சமாதானச் சூழலில் ஒரு பேச்சு வார்தையின் அடிப்படையில் எட்டப்பட்ட முடிவின் கீழ் வடக்கும் கிழக்கும் இணைந்த தேர்தலை நடத்தக் கோருவதுதான். :rolleyes:

கிஸ்புல்லா இருந்தால்தானே இந்த பிரச்சினை.... அவருக்கான காலம் கனிந்து வரும்போது அவருக்கான பதவியை கிழக்கின் விடிவெள்ளி? பிள்ளையான் வழங்குவார்.... அதுவரை ஆடட்டும்...

பிள்ளையான் ஒரு வெறிகாரன்..

குழம்பினானெண்டா... முடிச்சுபோட்டுத்தான் அடுத்தவேலை பார்ப்பான்.. கருணாவுக்கே ஆப்பிழுத்தவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.