Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்து ஊர் பெயரையும் இணைத்து கொண்டு இருக்கும் பிரபலங்கள்

Featured Replies

கூகிளுக்கு எனது ஊர் உளவாரம் பதிவு பிரச்சனையில்லையாம் அதனால் அதை திறந்து இப்ப விட்டிருக்கிறார்கள் .அப்பன் மவனே சிங்கன்டா என்ற புளக்கை திறந்து விட ஆராய்ந்து கொள்ள கால அவகாசம் வேணுமாம்

எனது ஊர் உளவார அதிக பின்னூட்டம் பெற்ற எனது பதிவுகளில் ஒன்றான இந்த பதிவை ஒரு சோதனை பதிவாக போடுகிறேன் .இந்த பதிவை இதுவரை பார்க்காதவர்களுக்கும் ஒரு வசதிக்காக

தனது ஊருடன் தனது பெயரையும் இணைத்து இருந்த பிரபலங்களை பற்றிய பதிவு தான் இது.... இதை

ஞாபகமூட்டலாகவும்.... தெரியாதவற்றை பலர் மூலம் தெரிஞ்சு கொள்ளும் நோக்குடனும் இதை நான் தொடக்கி வைக்கிறேன்.

காவலூர் இராசதுரை-ஊர்வாகவற்றுதுறை- எழுத்தாளர்

குப்பிளான்.ஜ.சண்முகம-குப்பிளான் - எழுத்தாளர்

சில்லையூர் செல்வராஜன்--- சில்லாலை- நடிகர், வசனகர்த்தா, வானொலி அறிவிப்பாளர்

செம்பியன் செல்வன்-செம்பியன்பற்று- எழுத்தாளர்திருக்கோவில்

கவியுவன் - திருக்கோவில்- எழுத்தாளர்

தெளிவத்தை யோசப் - தெளிவத்தை- எழுத்தாளர், நாவலியூர் சோமசுந்தர புலவர் - நாவலி- கவிஞர்

நீர்வை பொன்னையன் - நீர்வேலி- எழுத்தாளர்

நெல்லை க.பேரன் -- நெல்லியடி- எழுத்தாளர்

மாத்தளை சோமு- மாத்தளை- எழுத்தாளர்

நெல்லை நடேசன்-நெல்லியடி- எழுத்தாளர்

புலோலியூர் சதாசிவம்-- புலோலி - எழுத்தாளர்.. இவர் புலோலியூர்

இரத்தினவோலோனின் மாமனார்

கரவைக்கிழார்- கரவெட்டி - பண்டிதர், கவிஞர்

கோப்பாய் சிவம் - கோப்பாய் - எழுத்தாளர்

வண்ணை ஆனந்தன்- வண்ணார் பண்ணை .... - அரசியல்வாதி..,பிரபல மேடை பேச்சாளர்

கைதடி பழநி- கைதடி-- தவில் வித்துவான்

உடுப்பிட்டி சிவா- உடுப்பிட்டி.. மூத்த அரசியல்வாதி

காரை சுந்தரம்பிரம்பிள்ளை- காரைநகர்- பேராசிரியர் ,படைப்பாளி

இணுவையூர் சிதம்பரநாதன்- இணுவில்- எழுத்தாளர்

முல்லை சகோதரிகள் -முல்லைத்தீவு பாடகிகள்

.

யாழ் சுதாகர்- யாழ்நகர்- எழுத்தாளர், தமிழ்நாட்டு சூரியனின் எப்எம் இரவு நேர அறிவுப்பாளர்

யாழ்வாணன்- யாழ்நகர்- எழுத்தாளர்யாழ் நங்கை- யாழ் நகர்-எழுத்தாளர்

கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம்- கோப்பாய்- மூத்த அரசியல்வாதி

ஆவரங்கால் சின்னத்துரை -ஆவரங்கால்- அரசியல்வாதி

வரணியூரான் கணேசபிள்ளை- வரணி- வானொலி நாடக ஆசிரியர்

திக்குவல்லை கமால்-திக்குவல்லை எழுத்தாளர்

-

அளவெட்டி பத்மனாதன்- அளவெட்டி- நாதஸ்வர வித்துவான்

மறவன்புலவு சச்சிதானந்தம் -மறவன் புலவு - அறிஞர்

புலோலியூர் இரத்தினவேலோன்.- புலோலி -எழுத்தாளர்- இவர் எனது வகுப்பு தோழன்

புதுவை இரத்தினதுரை- புத்தூர் -படைப்பாளி,

வேலைணையூர் சுரேஷ்

இவர் தற்சமயம் வன்னியில்(கிளிநொச்சி) இருக்கிறார். கவிதைகள் எழுதி தொகுப்பாகுவும் வந்துள்ளன. பாடல்களாகவும் இசைப்பேழைகளில் வந்துள்ளன.- வேலணை

ஏழாலை ஜெனகமகள் சிவஞானம் -- எழுத்தாளர் --- ஏழாலை

மணலாறு விஜயன் - எழுத்தாளர்- மணலாறு

வவுனியா திலீபன் -எழுத்தாளர்- - வவுனியா

முல்லை கோணேஸ் -எழுத்தாளர் -முல்லைத்தீவு

முல்லை கமல் -எழுத்தாளர் -முல்லைத்தீவு

இளவாலை விஜயேந்திரன் -இளவாலை - கவிஞர்

பூநகரி மரியதாஸ், கவிஞர் -பூநகரி

திக்கவயல் தர்மு, எழுத்தாளர், பத்திரிகையாளர் - திக்கவயல்

திக்குவல்லை கமால், கவிஞர் -திக்குவல்லை

அமிர்தகழியான், எழுத்தாளர் - அமிர்தகழி

நவாலியூர் சச்சிதானந்தன், எழுத்தாளர் - நவாலி

'இளவாலை அமுது' -.எழுத்தாளர், கவிஞர் -இளவாலை

மாதகல் மயில்வாகனப் புலவர்:- இவர் ஒல்லாந்தர் கேட்டுக் கொண்டதன் பேரில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலைத் தந்தவர்.// - மாதகல்

வேலணை வேணியன் -தற்போது மேலக மக்கள் முன்னணிப் பிரமுகர்-

வேலணை

இணுவில் வீரமணிஐயர் - பல்துறைக்கலைஞர் - இணுவில்

கோண்டாவில் பாலகிருஸ்ணன் - நாதஸ்வரக்கலைஞர்- கோண்டாவில்

யாழ் சீலன் - இசைக்கலைஞர்- யாழ்நகர்

யாழ் ரமணன் - இசைக்கலைஞர்-யாழ்நகர்

நாச்சிமார்கோவிலடி இராஜன்- வில்லிசைக்கலைஞர் -

நாச்சிமார்கோவிலடி

திருக்)கோவிலூர் செல்வராஜன் எழுத்தாளர்.- திருக்கோவில்

கல்லாறு சதீஸ் - எழுத்தாளர் - கல்லாறு

வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - நாடகக்கலைஞர்-- வரணி

தாமரைத்தீவான் இராஜேந்திரம் - கவிஞர்

நிலா(வெளி) தமிழின் தாசன் - நிலா வெளி

கவிஞர்

வவுனியன் - கவிஞர் - வவுனியா

அடடா சின்னக்குட்டி அவர்களே

சிரமப்பட்டுத்தான் இவற்றைச் சேர்த்திருக்க முடியும்

இந்தத் தலை முறையினருக்கு இது ஒரு அடிச்சுவடு

பாராட்டுக்கள்

ஆமாம் உங்கள் ஊர் எது?

அதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே!

SP.VR.சுப்பைய

19 டிசம்பர், 2006 இரவு 19:52 கொழுவி said...

புதுவையார் புத்தூரைச் சேர்ந்தவர்.

19 டிசம்பர், 2006 இரவு 19:56 சின்னக்குட்டி said...

வணக்கம....சுப்பையா அவர்கட்கு.... உங்கள் வருகைக்கும்.. பாராட்டுக்கும் கருத்துக்கும்

//ஆமாம் உங்கள் ஊர் எது?

அதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே//

நான் ஊர் பெயரோட இருக்கிற பிரபலம் இல்லைங்க.. அதோடை. இப்பொழுது ஊரற்ற வழிபோக்கன்,நாடோடி, ஒரு அகத

19 டிசம்பர், 2006 இரவு 20:07 சின்னக்குட்டி said...

வணக்கம் கொழுவி.. தவறை சுட்டி காட்டியதற்க்கு நன்ற

19 டிசம்பர், 2006 இரவு 20:09 Chandravathanaa said...

விடுபட்டவைகளில் என் நினைவில் வந்தவை

வேலைணையூர் சுரேஷ்

இவர் தற்சமயம் வன்னியில்(கிளிநொச்சி) இருக்கிறார். கவிதைகள் எழுதி தொகுப்பாகுவும் வந்துள்ளன. பாடல்களாகவும் இசைப்பேழைகளில் வந்துள்ளன.

ஏழாலை ஜெனகமகள் சிவஞானம

19 டிசம்பர், 2006 இரவு 20:43 சுந்தரி said...

காசியானந்தன் எந்த ஊருங்

19 டிசம்பர், 2006 இரவு 20:53 சின்னக்குட்டி said...

வணக்கம்...சந்திரவதனா..வருகைக்க

ும்...... மேலதிக தகவலுக்கும்...நன்றிகள

19 டிசம்பர், 2006 இரவு 21:02 சின்னக்குட்டி said...

வணக்கம் சுந்தரி... காசி ஆனந்தன்.... காத்தமுத்து சிவானந்தன் என்ற முழு பெயரை அப்படி சுருக்கி கொண்டார்....

காசி ஆனந்தன்....மட்டகளப்பைச் சேர்ந்தவர்.......பாலுமகேந்திராவ

Edited by வலைஞன்
முழுப் பதிவும் இணைக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலையும் ஊர் பெயரில் சில உறுப்பினர்கள் இருக்கிறார்கள் - வல்வை சகாரா, நூனாவிலான், கொக்குவிலான்

குப்பிளான்.ஜ.சண்முகம-குப்பிளான் - எழுத்தாளர்

குப்பிளானா? குப்பிழானா?

  • தொடங்கியவர்

யாழிலையும் ஊர் பெயரில் சில உறுப்பினர்கள் இருக்கிறார்கள் - வல்வை சகாரா, நூனாவிலான், கொக்குவிலான்

வணக்கம் கந்தப்பு ..நன்றிகள்....கந்தப்பு கூறியது மாதிரி உங்களுக்கு தெரிந்த பெயர்களை இணையுங்கள்

குப்பிளான்.ஜ.சண்முகம-குப்பிளான் - எழுத்தாளர்

குப்பிளானா? குப்பிழானா?

வணக்கம் அரவிந்தன் ..நன்றிகள்...

குப்பிளான் சண்முகம் ..இவர் கரவெட்டி ..கரணவாய் பகுதியில் திருமணம் செய்தவர் என்று நினைக்கிறன்

குப்பிளான் தான் சரி என்பது எனது ஊகம்..எதற்க்கும் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னக்குட்டி அண்ணா நல்ல முயற்சி.

நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் இவர்களின் பெயர் இல்லைப்போல் தெரிகிறது.

இவருடன் இலண்டனில் வாழும்

முல்லை அமுதன் - எழுத்தாளர்

கரவைக்கவி வீரவாகு

உரும்பிராய் எம்.ரி.செல்வராசா இவர்களையும் இணைக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு மனிதன்----------- நாகநாதன்(காலம் சென்ற நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர்)

எல்லைக் காவலன்---- நவரட்ணம் காலம் சென்ற வவுனியா பா-உ

  • தொடங்கியவர்

சின்னக்குட்டி அண்ணா நல்ல முயற்சி.

நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் இவர்களின் பெயர் இல்லைப்போல் தெரிகிறது.

இவருடன் இலண்டனில் வாழும்

முல்லை அமுதன் - எழுத்தாளர்

கரவைக்கவி வீரவாகு

உரும்பிராய் எம்.ரி.செல்வராசா இவர்களையும் இணைக்கலாமே.

வணக்கம் செல்வமுத்து அய்யா...உங்களின் மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றிகள்

இரும்பு மனிதன்----------- நாகநாதன்(காலம் சென்ற நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர்)

எல்லைக் காவலன்---- நவரட்ணம் காலம் சென்ற வவுனியா பா-உ

வணக்கம் ஈழப்பிரியன் ..உங்கள ஆர்வத்துக்கும் இந்த பதிவோடு ஒட்டிய கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள்

ஆனால் நீங்கள் கூறிய பெயர்கள் ஊரோடு இணைக்கும் பிரபலங்களின் பட்டியலில் வரமுடியாது என்று நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

குப்பிளான்.ஜ.சண்முகம-குப்பிளான் - எழுத்தாளர்

குப்பிளானா? குப்பிழானா?

குப்பிழான் தான் சரியென நான் நினைக்கிறேன், நான் எழுதுவதும் அப்படித்தான்.

அரவிந்தன், உங்களுக்கு இவரைத்தெரியுமோ?

சுவாரசியமான பதிவு சின்னக் குட்டி அண்ணா..

ஆனால்... எந்த ஊரப்போட்டாலும் எல்லாரும் அடிப்படையில அகதிதானே? நானும் ஊரப்போட்டு எழுதுவம் எண்டு பார்த்தால் எந்த ஊரப்போடுறது எண்டு பிரச்சனை. அம்மாவின்ண்ட ஊரா, அப்பாவிண்ட ஊரா, இல்லாட்டி நான் பிறந்த ஊரா, இல்லாட்டி படிச்ச ஊரா, இல்லாட்டி விளையாடின ஊரா, இல்லாட்டி அகதியா ஓடிப்போய் இருந்த ஊருகளா.. எதப்போடுறது..

புதுவை ரத்தினதுரை அவர்கள் புத்தூரைச் சேர்ந்தவர் எண்டு சொல்லி இருக்கிறீங்கள். நான் நினைச்சன் முல்லைத்தீவை சேர்ந்தவராக்க்கும் எண்டு.

இப்ப வெளிநாட்டில இருக்கிற ஆக்கள் என்ன செய்யலாம்..

இப்பிடிப் போடலாமோ?

சிட்னி கந்தப்பு

டொரண்டோ முரளி

ஒஸ்லோ? மோகன்

பிரான்ஸ்? சாத்திரி

லண்டன் நெடுக்காலபோவான்

லண்டன் மணிவாசகன்

சுவிஸ் அனிதா

லண்டன் கறுப்பி

ஹோலந்த் பிரியசகி

கனடா சினேகிதி

கனடா ரசிகை

இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்.. ஹாஹா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணையத் தளத்தை எமக்களித்தவருக்கு யாழ்.......... என்று பெயரிட்டு கௌரவிக்கவும்.

அட சும்மா ஒரு கதைக்குச் சொன்னன் புலிகேசி. யாழ் மோகன் எண்டு எல்லாருக்கும் தெரியும்தானே. உங்களையும் யாழ் புலிகேசி எண்டு கூப்பிடுறம் கவலைப்படாதிங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.