Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாக் கிழவனின் கொஞ்சநேரம் ...!

Featured Replies

தம்பி, தங்கச்சி எண்ட பிள்ளைகள், ராசாக்கள், செல்லக் குஞ்சுகள் எல்லாருக்கும் கனடாக் கிழவனிண்ட இனிய வணக்கங்கள் பாருங்கோ.

ஈழக்கிழவன் பலதையும் பத்தையும் பற்றி யோசிச்சு கதைப்பார் பாருங்கோ. நான் பலதையும் பத்தையும் பற்றி கதைச்சுப்போட்டுத்தான் யோசிக்கிறது பாருங்கோ. கனடாக் கிழவன் எண்டால் கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறது நல்லதுதானே? சரி இனி நாங்கள் விசயத்துக்கு வருவம் பாருங்கோ. இண்டைக்கு நான் உங்களோட கதைக்கப்போற விசயம் மொழிமீட்பு பற்றியது.

எல்லாரும் மாதிரி இந்தக்கிழவனும் யாழ் இணையத்துக்குவந்து விடுப்பு வாசிக்கிறது, விடுப்பு அளக்கிறது வழமையுங்கோ. அதில இண்டைக்கு ஒரு செய்திபோட்டு இருக்கிது என்ன எண்டால் தம்பி இளங்குமரன் தாயக மீட்போட மொழிமீட்பும் பெறப்படவேண்டும் எண்டு இளம் சமுதாயத்தை நோக்கி குரல்கொடுத்து இருக்கிறாராம் பாருங்கோ. இளம் சமுதாயத்துக்கு விடப்பட்ட இந்த வேண்டுகோளுக்கும் இந்தக் கனடாக்கிழவனுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிது எண்டு நீங்கள் யோசிக்கலாம். சொல்லிறன் கேளுங்கோ.

தாயகத்தில எல்லாம் சொல்லிவச்ச மாதிரி சரியாத்தான் நடக்கிறமாதிரி இந்தக் கிழவனுக்கு தெரியுது பாருங்கோ. ஆனால்.. தாயகத்தச் சொல்லி பிழைப்பு நடத்துற ஒரு கூட்டம் வெளிநாடுகளில விசயங்கள திரிவுபடக்கூறி இஞ்ச இருக்கிற சனங்களிண்ட மண்டையில வேறமாதிரி ஆப்பு அடிக்கிதுகள் பாருங்கோ. அதான் நானும் உங்களோட கதைக்கவேண்டி வந்திட்டிது இந்த மொழி மீட்பு பற்றி...

மொழி எண்டுறது பாருங்கோ ஒரு கடல்மாதிரி இந்தக்கிழவனிண்ட கண்களுக்கு தெரியுது. கடலில குதிச்சு நாங்கள் குளிக்கலாம், படகு ஓடலாம்.. ஆனால் கடலை நாங்கள் அழிக்க அல்லது சிதைக்க ஏலுமோ? ஒருபோதும் முடியாது பாருங்கோ. காலத்துக்கு காலம் பூமியில மாற்றங்கள் ஏற்படேக்க கடலிண்ட உவர்ப்புத்தன்மை மாறிக்கொண்டுபோகும். இப்ப பாருங்கோ கனடாவிண்ட வட எல்லையில இருக்கிற துருவப் பனிக்கட்டிகள் எல்லாம் பூமியிண்ட வெப்பநிலை அதிகரிக்கிறதால உருகி கடலுடன் கலக்கிது எண்டு சொல்லி விஞ்ஞானிகள் கவலைப்படிறீனம். ஏன் எண்டால் கடலுடன் கலக்குற இந்த தண்ணி fresh water - தூய?நீராம். அப்ப அங்க என்ன நடக்கும் எண்டால் பாருங்கோ கடலிண்ட உவர்ப்புத்தன்மையில மாற்றங்கள் வரும். இதனால பூமியிலையும் மாற்றங்கள் வரும். நல்லதோ கெட்டதோ காலத்துக்கு காலம் இப்பிடித்தான் பாருங்கோ ஒரு மொழியிலயும் மாற்றங்கள் வருகிது.

கூர்ப்பியல் எண்டு இருக்கிது பாருங்கோ. குரங்கில இருந்து மனுசன் வந்தான் எண்டு சொல்லிறீனம். அதாவது கால ஓட்டத்தில பல்வேறு படிமுறை மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கிது. இதுமாதிரித்தான் ஒரு மொழியுக்கும் நடக்கிது. வெளிநாடுகளில இருந்து தங்களை தேசியவாதிகள், மொழிப்பற்றாளர்கள் எண்டு காட்டிக்கொள்ளுற ஆட்கள் மொழியமீட்கிறம் எண்டு தம்பி இளங்குமரன் சொன்னத பிழையா விளங்கிப்போட்டு பழையபடி மனிதநிலையில இருந்து குரங்குநிலைக்கு போயிடுவீனமோ எண்டு இந்தக்கிழவனுக்கு பயமா இருக்கிது. வளர்ச்சி என்றால் மாற்றங்கள் வரத்தான் பார்க்குமுங்கோ. மாற்றங்கள் இல்லாத ஒன்றுக்கு பெயர் வளர்ச்சி அல்ல, வீழ்ச்சி! ஒரு மொழிய நாலுபேர் நாலுவிதமா எழுதுறது கதைக்கிறது எல்லாம் நல்ல விசயம்தான் பாருங்கோ. ஒருவன் கதைக்கேக்க அல்லது எழுதேக்க ஒரு மொழி சிதைக்கப்படுகிது எண்டு நீங்கள் சொன்னால் உங்களமாதிரி ஒரு புத்திசாலி இந்த உலகத்தில வேறயாரும் இருக்கமாட்டீனம் பாருங்கோ.

ஊருக்கு ஊர், குறிச்சிக்கு குறிச்சி... தமிழ் மொழி பலவிதமாக கதைக்கப்படுற விசயங்கள் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்.... ஆங்கில மொழிய எடுத்துப்பாருங்கோ. இந்தியாக்காரன் ஒருமாதிரி உச்சரிச்சுக் கதைக்கிறான், எழுதுறான், அமெரிக்காக்காரன் இன்னொருமாதிரி.. கனடாக்காரன் இன்னொருமாதிரி... பிரிட்டிஷ்காரன் வேறொருமாதிரி... தவிர.. ஆங்கில இலக்கியங்கள், புத்தகங்கள் எண்டு எடுத்தால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி எழுதுவீனம். இளம் சமுதாயம் ஹிப் ஹொப் அது இது எண்டு சொல்லி வேறொருமாதிரி ஆங்கில மொழியக் கையாளுதுகள். இதுல உங்களுக்கு விளங்கவேண்டும் என்ன எண்டால் ஆங்கில மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒருவனாலேயே ஆங்கிலத்தில ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி எழுதுறவிசயங்கள புரிஞ்சு கொள்ளுறது கஸ்டம் பாருங்கோ. தவிர, Slang எண்டெல்லாம் வேற இருக்கிது. நானும்தான் பாருங்கோ அரைகுறை ஆங்கிலத்தில எழுதிக்கொண்டு இருக்கிறன் இன்னும் ஒருத்தனும் வந்து நீ ஆங்கில மொழிய சிதைக்கிறாய் எண்டு சொல்ல இல்ல பாருங்கோ.

மற்ற ஆக்கள நையாண்டி செய்து பார்க்கிறதில, மற்ற ஆக்கள நடுத்தெருவில நிர்வாணமாக்கிக் பார்க்கிறதில எங்கட ஆக்களுக்கு ஒரு கொள்ளை இன்பம் பாருங்கோ. இந்தக்கூடாத பழக்கம் இந்தக் கிழவனுக்கும் இருக்கிது மன்னிச்சுக்கொள்ளுங்கோ. அப்ப என்ன எண்டால் இப்ப ஒரு புது Style வந்து இருக்கிது அது என்ன எண்டால் பாருங்கோ.. திமிங்கிலம் திமிங்கிலம் எண்டு சொல்லி கூக்குரல் இடுறது. ஆங்கிலத்தை அரையுங்குறையுமா தமிழோட எழுதிக்கதைச்சால் அதுக்கு பெயர் திமிங்கிலமாம். வெளிநாடு எண்டால் ஊருக்கு ஊர் தாங்கள் நாளாந்தம் காணுற, கையாளுற சொற்கள தமிழில எழுதேக்க கதைக்கேக்க ஒவ்வொருத்தரும் தங்கட பாணியில சொல்லிறதில என்னவுங்கோ பிழை இருக்கிது? ஒருத்தன் நாலு வார்த்தைகள் தமிழில எழுதி இருக்கிறான்.. நாலு வார்த்தைகள் தமிழில எழுதி எதையோ சொல்லவாறன் எண்டு அவன் சொல்லிறவிசயத்தக் கேட்காமல்.. அவன் எத்தின எழுத்துப்பிழைகள் விட்டு இருக்கிறான், அவன் எத்தின ஆங்கில வார்த்தைகளை தமிழோட அரையுங் குறையுமா கலந்து எழுதி இருக்கிறான் எண்டு அந்த ஒரு விசயத்தையே கண்ணும் கருத்துமா கணக்கு எடுக்கிற ஒரு கூட்டம் எங்கள் மத்தியில இருக்கத்தான் செய்யுது பாருங்கோ. மற்றவன் எழுதுறதில, கதைக்கிறதில குற்றங்குறைகள் பிடிக்கிறது மொழிமீட்பா இருக்கும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்களோ? மொழிமீட்பு எண்டுறது அது இல்லை பாருங்கோ.

மொழிமீட்பு எண்டுறத நீங்கள் மற்றவனிண்ட தொண்டையத் திருகிறது மூலம் பெறலாம் எண்டு எதிர்பார்க்காமல் உங்கட உள்ளங்களில இருந்து தமிழ்மொழிய ஊற்றாக பெருக்கெடுத்து ஓடச்செய்யுங்கோ. தமிழில நாலு விசயங்கள எழுதிப்பாருங்கோ. நாலு கவிதைகளை தமிழில படைச்சுப்பாருங்கோ. நாலு கதைகள தமிழில ஆக்கிப் பாருங்கோ.. தமிழில நாலு பாடல்களைப் பாடிப்பாருங்கோ. தமிழில எத்தினயோ அழகிய, இனிய வார்த்தைகள் எல்லாம் இருக்கிது. அந்த வார்த்தைகளை உங்கட நாளந்த வாழ்வில பயன்படுத்துங்கோ. மற்ற ஆக்களோட அன்போட கதைக்கப் பழகுங்கோ. நீங்கள் அழகிய, இனிய தமிழில கதைச்சால், எழுதினால் மற்றவனும் அப்பிடி செய்யப் பார்ப்பான். அதவிட்டுப்போட்டு இந்தாபார் மொழிய மீட்கிறம் அது இது ஆ ஊ அடியடா பிடியடா எண்டு ஏதாவது பிதற்றலுகள் செய்தீங்கள் எண்டால் கடைசியில நீங்கள் காணப்போவது ஒண்டும் இல்ல. மற்றவனிண்ட வாயுக்கு பூட்டுபோடுறதோ இல்லாட்டிக்கு மற்றவனுக்கு துரோகி எண்டு பட்டங்கள் கொடுத்து மகிழிறதோ மொழிமீட்பு இல்லையுங்கோ.

வெற்றுக் கோசங்கள் மூலம் மொழிமீட்பு அடையலாம் எண்டு எதிர்பார்க்காதிங்கோ. மொழிமீட்பு எண்டுறது அரசாங்கம் அறிவிக்கிற ஐந்து ஆண்டு திட்டம் இல்ல பாருங்கோ. எதிர்வரும் 2020ம் ஆண்டு, தை மாதம் ஒன்னாம் திகதியில் இருந்து இந்தப்பூமிப்பந்தில் உள்ள எல்லாத் தமிழ் மக்களும் சங்ககாலத்தமிழில் கதைப்பார்கள் எண்டு எதிர்பார்க்கிறதோ... அல்லது இந்தத்தினதில் திமிங்கிலம், சுறா, றால், கணவாய், கருவாடு.. இந்தமொழிகளைக் கையாளுபவர்களின் சதவீதம் 0% எண்டு எதிர்பார்க்கிறதோ மொழிமீட்பு இல்லப்பாருங்கோ.

பகுத்தறிவு எண்டுற பெயரில மற்ற ஆக்களை துகிலுரியுற கூட்டம் ஒண்டு எங்கள் மத்தியில இருக்கிறமாதிரி இந்தாபார் மொழியமீட்கிறம் எண்டு சொல்லிக்கொண்டு மற்ற ஆக்களிண்ட தொண்டையத் திருகிறதுக்கு இன்னொரு புதிய கூட்டம் ஒன்று புறப்பட்டுவிடக்கூடாது எண்டுற ஆதங்கத்திலதான் பாருங்கோ இந்தக் கனடாக்கிழவன் இவ்வளவும் கதைக்கவேண்டி வந்திட்டிது.

ஈழக்கிழவன சுகம் கேட்டதா சொல்லுங்கோ. அப்ப நான் வாறன் பாருங்கோ..

அப்பு.. ஏலுமான வரை தமிழ் சொற்களை அதுவும் நம் மொழியில் பாவனையில் உள்ள சொற்களை பாவிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை..

தொழில்நுட்பம் சம்மந்தமான சொற்களை ஆங்கிலத்திலோ, அல்லது தமிழிலோ வசதியை பொறுத்து பாவிக்கலாம்...!

அதுக்காக மற்றவர்கள் கண்டுபிடித்த சாமான்களுக்கு நாம் தமிழ் பெயர் சூட்டி மொழிமீட்சியை நடத்த முடியாது... ஒரு காலத்திலே இதைப் பண்ணிய அப்துல் கமீட் அவர்களே இதை ஒப்புக்கொண்டவர்..

என்னைப் பொறுத்தவரை எந்தப் பெயர் சொல்ல இலகுவாக இருக்கோ அதைதான் பாவிப்பன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு ஊர், குறிச்சிக்கு குறிச்சி... தமிழ் மொழி பலவிதமாக கதைக்கப்படுற விசயங்கள் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்.... ஆங்கில மொழிய எடுத்துப்பாருங்கோ. இந்தியாக்காரன் ஒருமாதிரி உச்சரிச்சுக் கதைக்கிறான், எழுதுறான், அமெரிக்காக்காரன் இன்னொருமாதிரி.. கனடாக்காரன் இன்னொருமாதிரி... பிரிட்டிஷ்காரன் வேறொருமாதிரி... தவிர.. ஆங்கில இலக்கியங்கள், புத்தகங்கள் எண்டு எடுத்தால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி எழுதுவீனம். இளம் சமுதாயம் ஹிப் ஹொப் அது இது எண்டு சொல்லி வேறொருமாதிரி ஆங்கில மொழியக் கையாளுதுகள். இதுல உங்களுக்கு விளங்கவேண்டும் என்ன எண்டால் ஆங்கில மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒருவனாலேயே ஆங்கிலத்தில ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி எழுதுறவிசயங்கள புரிஞ்சு கொள்ளுறது கஸ்டம் பாருங்கோ. தவிர, ஸ்லங் எண்டெல்லாம் வேற இருக்கிது. நானும்தான் பாருங்கோ அரைகுறை ஆங்கிலத்தில எழுதிக்கொண்டு இருக்கிறன் இன்னும் ஒருத்தனும் வந்து நீ ஆங்கில மொழிய சிதைக்கிறாய் எண்டு சொல்ல இல்ல பாருங்கோ.

உண்மை பாருங்கோ.ஆனால் ஒண்டு பாருங்கோ கனடாக்காரனோ நியுசிலாந்து காரனோ தான் ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு போதும் ஆங்கிலத்துடன் பிரான்சு மொழியையோ அல்லது இன்னொரு மொழியை கலக்கவில்லை. மாறாக ஆங்கில மொழியை வெவ்வேறு மாதிரியாக ஆங்கிலத்திலேயே எழுதி தமது மொழியை வளர்க்கிறார்கள்.

நாங்கள் என்ன செய்கிறோம் என்று பார்த்தால் ஏதோ வகையில் ஆங்கிலத்தை தமிழுடன் கலந்து எழுதுகிறோம்.இதன் மூலம் எப்படி மொழியை நாங்கள் எப்படி வளர்க்கிறோம்?.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழக் கிழவனின் குரலில் தமிழ் அச்சொட்டாக அறுத்துருத்து வெளிப்படுகின்றது.

ஆனால் சில கனடா கிழவன்மாரின் குரலால் தமிழ் கொலை செய்யப்படுகின்றது :lol: . முதலில் தமிழை ஒழுங்காக அறுத்துருத்து பேச பழகுங்கள் :(

உதாரணமாக நடிகர் திலகம் மற்றும் T.M.செளந்தர்ராஜன் போல :(

Edited by tamillinux

தமிழை தழிழாக எழுதுங்கோ என்றால் எத்தனை பேருக்கு கடிக்குது சொறியுது.

கனடாக் கிழவனின் வரட்டுப்பிடிவாதங்கள் என்பதே இதற்கு சரியான தலையங்கம் என்பதே என் பணிவான கருத்து.

இது நிற்க,

மொழி என்பது மனிதன் தன் உணர்வுகளை சரியாக மற்றவர்களுக்கு வெளிப்படுத்த சிறந்த சாதனமாக அமைந்ததினால் அது வளம் பெற்று உயர்ந்தது. சைகைகளினூடான உணர்வுப்பரிமாற்றம் மறைந்தது. ஆனால் தற்போது மொழி உணர்வுகளை மிகச்சரியாகப் பரிமாறாவிடின்......அது அழிவின் பாதையில் செல்ல ஆரம்பிக்கும்.

சில உதாரணங்கள்....

நடுச்சென்டர் கட்ச்பிடி என்ற சொற்கள் அர்த்தம் புரியாது பாவிக்கும் சில வார்த்தைகள்

மோர்னிங், ஸேம் ரூ யூ போன்றவை விளக்கமற்றுப் விளம்பும் வாழ்த்துக்கள்......உணர்வுபூர்வ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் எழுதப்படும் ஆங்கிலத்திற்கும் அமெரிக்காவில் எழுதப்படும் ஆங்கிலத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் காரணமாக ஆங்கில மொழிக் கல்வியின் போது அமெரிக்க ஆங்கிலப்புத்தகங்களை மாணவர்கள் வாக்க அனுமதி மறுக்கப்படுவதன் காரணம் என்ன ஐயா? அத்துடன் ஆங்கில அகராதிகளிலேயே கனேடிய ஆங்கிலத்திற்கு என வேறாக ஆங்கில அகராதி அச்சிடுகிறார்களே!.

அதேபோல் கனடாவில் பேசப்படும் பிரஞ்மொழியினால் உன்மையான பிரஞ்மொழி சிதைக்கப்படுவதாக பிரான்ஸ் பிரஞ் மக்கள் கவலை கொள்கிறரர்களே, அதனை கியுபெக் மாநில பிரஞ் மக்களும் உண்மை என ஒத்துக்கொண்டு பிரஞ்மொழியை அழிக்காது இருக்க நடவடிக்கை எடுக்கின்றார்களே!.....

நம் தமிழ் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருப்போம்!.....

சரி மொழியப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கை தவறென்று சொன்னால் அதற்கான மாற்று என்னவென்றும் தரலாமே.. அவ்வாறு தருவீர்களேயானால் நாமும் அதைக் கைக்கொள்ள முயற்சிக்கலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும்தான் பாருங்கோ அரைகுறை ஆங்கிலத்தில எழுதிக்கொண்டு இருக்கிறன் இன்னும் ஒருத்தனும் வந்து நீ ஆங்கில மொழிய சிதைக்கிறாய் எண்டு சொல்ல இல்ல பாருங்கோ.

அதுக்கு நீங்கள் எழுதுற அரைகுறையளை அவங்கள் படிக்கவும் வேணுமெல்லே :lol:

படிக்காட்டி சொல்ல மாட்டான்தானே ?

ஆனா உங்கடை தமிழ் அரைகுறையளை நாங்கள் படிக்கிறமெல்லே

அதனால சிதைக்கிறீர்கள் எனச் சொல்லுவம் தானே

இத மனதில வைச்சுத்தானோ என்னமோ - நான் எழுதுறதை படிக்க வேண்டாம் எண்டு சொல்லுறீங்களோ என்னமோ தெரியாது.

Edited by காவடி

  • கருத்துக்கள உறவுகள்

முரளி, இந்த சிறய விடயத்திற்கு ஏன்தான் இப்படி அடம் பிடிக்கிறிங்ளோ தெரியவில்லை. :D:D:D

ஆங்கில மொழிக்கு நீண்ட வரலாறு கிடையாது. பல மொழிகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொழிதான் ஆங்கில மொழி. ஆனால் தொன்மை வாய்ந்த மொழிகளில் தமிழும் ஒன்று. ஆங்கிலத்தையும் தமிழையும் ஒப்பிட்டுக் கதைப்பதே தவறு. இதில், தமிங்கிலத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். என்ன மொழி, எப்படிப் பேசுவது என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால், தேசியம் என்று வரும்போது, எமது மொழி எமக்கு மிகவும் முக்கியம். அதனைக் கட்டிக் காப்பது எமது தலையாய கடமை.

  • தொடங்கியவர்

கனடாக்கிழவனின் கொஞ்சநேரத்தை கண்டுகளித்த, மற்றும் கருத்துக்களை பகிர்ந்த தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு கனடாக்கிழவன் தனது நன்றிகளை தெரிவித்ததாய் சொல்லச் சொன்னார்.

அப்ப நான் வாறன் பாருங்கோ..

ஆக மொத்தம் சுயமாக ஒன்றும் கண்டுபிடிக்கபடவில்லை ஒருசிலரை சீண்டுவதுக்காக ஈழக்கிழவனை வேற கேவலப்படுத்தி அதையும் வெற்றிகரமாக கொண்டு செல்ல போகிறார்கள் .............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.