Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுள் எங்கே இருக்கிறார்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sunset_amazon_2.jpg

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"

"நிச்சயமாக ஐயா.."

"கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா."

"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"

"ஆம்."

"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா.."

"சாத்தா‎ன் நல்லவரா?"

"‏இல்லை."

"எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?"

"கடவுளிடமிருந்துதா‎ன்."

"சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?"

"ஆம்."

"அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?"

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"

......

"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"

.......

"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?"

"ஆம் ஐயா.."

"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?"

"ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது."

"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?"

"நிச்சயமாக உள்ளது."

"அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?"

"நிச்சயமாக."

"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை."

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). "வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது."

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"

"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது."

"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?"

"சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?"

"ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது."

"பிழை?? விளக்கிக் கூற முடியுமா?"

"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎

"கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா."

"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"

"ஆம்."

"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"

ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.

மாணவன் கேட்ட கேள்விகளுக்கும் சரியான விடை கிடைக்கவில்லை.

ஆகவே ஆசிரியர் சொல்வதை மாணவன் எப்படி நம்ப வேண்டுமோ அப்படித்தான் கடவுள் உள்ளார் என்பதையும் நம்ப வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

விடை கிடைக்காத கேள்விகள்தான் கடவுளின் இருப்பா ?

விடை கிடைக்காத கேள்விகள்தான் கடவுளின் இருப்பா ?

ஆசிரியரின் கேள்விக்கு மாணவன் கேள்வி மூலம் பதில் அளித்து இருக்கிறார் அன்பரே...!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதியபறவை படம் என்று நினைக்கிறேன். அதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் "எங்கே நிம்மதி?" எனத்தொடங்கும் பாடலில் "பெண்ணைப் படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!" என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் எவரையும் முணுமுணுக்க வைக்கும்.

"அர்த்தமுள்ள இந்து மதம் " என்று புத்தகம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் மிகுந்த இறைநம்பிக்கை உள்ளவர் என்றே நினைக்கிறேன்.(இவரின் சிந்திக்க வைக்கும் பல கவிதைகளை மதுபோதையுடனேயே எழுதுவார் என்று குற்றம் சாட்டப் பட்டபோது,நான் எழுதிய களைப்பைப் போக்கிக் கொள்ளவே குடிப்பேன்; எழுது முன்பு குடிப்பதில்லை என்று அவர் பதில் சொன்னதைப் படித்திருக்கிறேன்!). கண்ணதாசனையோ அல்லது அவரின் கவிதைகளைப் பற்றியோ எழுதுவதல்ல இப்பதிவின் நோக்கம்;" இறைவன் கொடியவன் " என்ற அவரது பாடல் வரியைப் பற்றிய எனது கருத்தைப் பதிவு செய்யவே இப்பதிவு.

எல்லா மதங்களிலுமே கடவுள் கருணை வடிவாகச் சொல்லப்படுகிறார். அன்பே சிவம் என்று இந்துக்களும் அன்பே கடவுள் (GOD IS LOVE) என்று கிறிஸ்தவர்களும் நிகரற்ற அன்புடையோன் (அர்ரஹீம்) என்று கடவுளைப்பற்றி முஸ்லிம்களும் சொல்கிறார்கள். அன்புடையோனாய்ச் சொல்லப்படும் இறைவனை "கொடியவன்" என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள் சோகத்தின் ஆழத்தில் எழுந்தவை என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு பக்கம் , சுனாமியால் இலட்சக் கணக்கானோர் உயிரிழந்தபோது , அவர்களில் பால்குடிக் குழந்தைகளும் பாலூட்டும் தாய்மாரும் முதியோரும் அடங்குவர். இறந்தவர்களில் இந்து- முஸ்லிம்-கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாமத இறைநம்பிக்கையாளரும் இருந்தனர். "எந்தக் கடவுள் உண்மையானவர் என்ற விவாதத்திற்குச் செல்ல வேண்டாம் ; ஏதாவது ஓர் உண்மையானக் கடவுள் இவர்களைக் காப்பாற்றி இருக்கக்கூடாதா?" என்று கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கேட்டதை ப் பல கருத்துப் பரிமாற்றங்களில் அறிந்து, அக்கேள்விக்குப் பொருத்தமான பதிலாக எதை முன் வைக்கலாம் என்று சிந்தித்திருந்ததுண்டு.

பிபிசி இணையதளத்தில் சுனாமிக்குப் பிறகு மக்களுக்கு இறைவன் மீதான நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிய ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. பலரும் பலவறான கருத்துக்களைச் சொல்லி இருந்தனர். இத்தகையப் பேரழிவுகள் பணக்கார நாடுகளில் ஏற்படும்போது இழப்புகள் குறைவாகவும் ஏழை நாடுகளில் ஏற்படும்போது அதிகமாகவும் உள்ளன. " கடவுள் ஏன் ஏழைகளை மட்டுமே குறிவைத்து அழிக்கிறான்?" என்று ஒருவர் ஆதங்கப்பட்டிருந்தார் . சமீபத்தில் பங்களாதேஷில் ஏற்பட்ட சிடார் புயலின் அழிவுகளைப் பற்றி அறிந்தபோது இத்தகைய ஆதங்கக் கேள்விகள் நியாயம் போலவே தோன்றின. (BBC - An act of God?)

அவசரயுக மனிதர்கள் அல்லல்படும்போது விரக்தியிலும் ஆதங்கத்திலும் இப்படித்தான் அவசரகதியில் கடவுளைப் பற்றி முடிவுக்கு வருகிறோம் . பொதுவாகவே மனிதர்களுக்கு நஷ்டம் ஏற்படும் போது சபிப்பதற்கு யாரும் கிடைக்காத போது, இறைவனைச் சபிக்கிறோம் . உண்மையில் இறைவன் எல்லாச்சூழல்களிலும் கருணையானவன் என்பது நம்பிக்கையாளனின் நிரூபிக்க முடியாத வெறும் வாதமாகவே தோன்றும்.

கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு , உலகச் சுற்றுச்சூழல் நிபுனர்கள் கூடி , குளோபல் வார்மிங் எனும் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் அதன் விளைவால் சூரியவெப்பக்கதிர் வீச்சில் இருந்து பூமியைக் காக்கும் ஓஸோன் மண்டலம் பழுதடைந்து, பூமியின் தென் துருவப் பனிமலைகள் உருகி, உலகின் பிற பகுதிகளில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று எச்சரித்தார்கள்.

அண்டை நாடான மாலத்தீவுகள் உட்பட உலகின் பல கடலோர நகரங்கள் கடல்நீரில் மூழ்கும் என்றும் கவலைப்பட்டார்கள். கவலைப்பட்டதோடு சரி, அதிலிருந்து பாதிக்கப்படவுள்ள பூமியைக் காக்க சிறுதுரும்பையும் எடுத்துப் போடவில்லை.

அகில உலகையும் ரட்சிக்கஅவதாரம் எடுத்திருப்பதாகக் கொக்கரிக்கும் அமெரிக்காவே புவியின் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது ; தனது கழிவுகளைக் குறைத்து உலகச் சுற்றுச்சூழலைக் காக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்ற சொல்லப்பட்டதற்கு, " உலகின் காற்றைச் சுத்தப்படுத்தும் வேலையை அமெரிக்கா சுமக்க முடியாது!" என்று திமிராகச் சொன்னார் அதிபர் ஜார்ஜ் புஷ்!

இப்படித்தான் மனிதர்கள் கூடுவார்கள் , கவலைப்படுவார்கள் , கலைவார்கள் . இளிச்சவாயன் எவனவது அகப்பட்டால் ஐக்கிய நாடுகள் சபையில் வைத்து ப் பொருளாதாரத் தடைப் பூச்சாண்டி காட்டி வழிக்குக் கொண்டு வருவார்கள் ; மறுத்தால் அமெரிக்கா தலைமையில் போர் செய்து அழித்தொழிப்பார்கள் . ஆனால் , இறைவன் அப்படிப் பட்டவனல்லன்! "பூமியில் சிலகாலம் தங்கி இருங்கள்" என்று மனிதர்களை அனுப்பி வைத்து, பேரழிவுகளால் அழித்தொழிக்கும் அளவுக்கு நியாயமற்றவன் அல்லன் இறைவன் .

இந்தோனேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பூமியின் டெக்டானிக் தட்டு நகர்ந்ததால் 2004 டிசம்பர்-24 அன்று சுனாமி ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம் . அதேதினம் சுனாமி நிகழ்வால் பூமியின் சுழற்சி சில பாகைகள் மாறி இருப்பதாக புவியியலார்கள் சொன்னதை எத்தனை பேர் அறிவீர்கள் என்று தெரியவில்லை. (How earthquake jolted the planet)

சுனாமிக்குப் பிறகு உலகின் பல பாகங்களின் தட்ப வெப்பநிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நீங்கள் கவனித்திருக்கலாம் . சுனாமிக்குப் பிறகு பல தீவுகள் கடல்மட்டத்திலிருந்து உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது . அதாவது கடலில் மூழ்கவிருந்த பகுதிகள் உயர்த்தப் பட்டுள்ளன . சுனாமி தாக்குதலன்று மாலத்தீவிலிருந்த எனது உறவினரிடம் தொலைபேசியபோது , கடலலைகள் தலைநகர் மாலே தீவைக் கடந்து சென்றதாகச் சொன்னார் .

இருபது வருடங்களுக்குப் பூமியின் சில பகுதிகள் கடலினுள் மூழ்குவதில் இருந்து காப்பாற்றவே இறைவன் புவியின் மேற்பரப்பைச் சரி செய்துள்ளான் என்றும் நினைக்கத் தோன்றவில்லையா ? 60-70 வருடங்கள் ஆயுட்காலம் கொண்ட மனிதமனம் தனது ஆயுளுக்குள் அற்புதம் நடந்தால்தான் இறைவனை நம்புவேன் என்று அடம் பிடிக்கிறது. ஆனால் பாவம் இறைவன்! அவன் மிகுந்த பொறுமையாளன்! யாருக்கு, எதை, எப்போது , எப்படிச் செய்யவேண்டும் என்பதை ஏற்கனவே தீர்மானித்துள்ளபடி அவ்வப்போது சரியாகவே செய்து வருகிறான்.

ஆக, இதுவரையிலான எனது பார்வையின்படி இறைவன் கொடியவனல்லன் என்றே தோன்றுகிறது ! :blink:

எமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று எம்மை இயக்கிக் கொண்டிருப்பதை நான் முழுவதுமாக நம்புகின்றேன். காரணம் இதற்கு சாட்சியாக என் கண்ணெதிரே நடந்த சில சம்பவங்கள்.

1) ஊரில் எமது வீட்டின் முன்னால் ஒரு அப்பாவி இளைஞனை அண்ணன், தம்பி இருவர் சேர்ந்து நையம் புடைத்தார்கள். பலர் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. இது நடந்து பல மாதங்களின் பின் அண்ணன், தம்பி இருவரையும் இராணுவத்தின் பொருட்கள் சிலவற்றை திருடி வைத்திருந்ததால் கைது செய்யச் சென்ற போது ( இவர்கள் எந்த இயக்கத்திலும் இருக்கவில்லை கப்பம் அறவிடல், திருட்டு என்பவற்றையே தொழிலாகக் கொண்டவர்கள்) இருவரும் தப்பியோடத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர்கள் கலைத்து வந்து, சரியாக முன்பு அப்பாவி இளைஞனை போட்டு நையம் புடைத்த இடத்திலேயே அவர்களைப் பிடித்துத் தாக்கத் தொடங்கினார்கள். பின்பு சொல்லவா வேண்டும்.

2) ஊரில் பிரபலமான சண்டியன் ஒருவர் தன் மாமனாரைத் தகராறின் போது வெட்டி வெள்ள வாய்க்காலில் போட்டுவிட்டார். ஊர்ச்சனமும் சண்டியனுக்குப் பயத்தில் அவருக்கெதிராகச் சாட்சி சொல்லவில்லை. அதனால் தண்டனையிலிருந்து தப்பிக் கொண்டார். பல வருடங்கள் கழித்து தனிப்பட்ட தகராறு ஒன்றிற்காக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பிணமாக விழுந்து கிடந்தது அவர் மாமனாரை வெட்டிப் போட்ட அதே வெள்ள வாய்க்காலின் அதே இடத்தில்.

3) எமது வீட்டில் வளர்த்த பசுவொன்று அழகான கன்றுக்குட்டி ஒன்று போட்டிருந்தது. தாய்ப்பசுவை ஒவ்வொரு நாளும் எமது விட்டிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோமீற்றர் தூரமுள்ள இன்னொரு காணிக்கு புல் மேய்வதற்காக கொண்டு சென்று கட்டிவிட்டு வருவது வழக்கம். கன்றுக்குட்டியை தாயுடன் விடாது எமது வீட்டிலேயே வைத்திருப்போம். பிறந்து கொஞ்ச நாட்கள் என்பதாலும் கட்டிப் போடுவதில்லை. ஆனால் எமது வீட்டின் பிரதான வாசல் பிரதான வீதியுடனேயே அமைந்திருப்பதால் பிரதான வாசலை எப்போதும் பூட்டியே வைத்திருப்போம். காரணம் கன்றுக்குட்டி பிரதான வாசலைக் கடந்து ஓடினால் நேராக பிரதான வீதிக்கே போய் ஏதாவது வாகனத்தில் அடிபட்டுவிடும் என்பதனாலேயே. அன்று எமது வீட்டிற்கு வந்து சென்றவர் யாரோ பிரதான வாசலைப் பூட்டாது சென்றுவிட்டார். வாசல் திறந்திருந்ததால் கன்றுக்குட்டி தாய்ப்பசுவைத் தேடி வாசலிலிருந்து பிரதான வீதிக்கு பாய்ந்திருக்கின்றது. அது பாயவும் வேகமாக வந்த லாரி ஒன்று அதன் மேல் மோதவும் அது அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனது. சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து ஓடி வந்து பார்த்த நாம் அதிர்ந்து போனோம். அதிர்ச்சியில் நாம் உறைந்து போய் இருந்த போது ஒன்றரைக் கிலோ மீட்டருக்கப்பால் மேய்ந்து கொண்டிருந்த தாய்ப்பசு கட்டிய கயிற்றையும் அறுத்துக் கொண்டு கதறியபடி ஓடிவந்து தனது கன்றை நக்கியபடி கண்ணீர் சொரிந்ததைப் பார்த்து அவ்விடத்தில் நின்ற பலரும் அழுதனர். இப்போ எனது கேள்வி ஒன்றரைக்கிலோமீட்டருக்கு அப்பால் மேய்ந்து கொண்டிருந்த தாய்ப்பசுவிற்கு எப்படித் தனது கன்று அடிப்பட்டு இறந்தது தெரிந்தது??

தேடி விடயத்தை இணைத்தமைக்கு நன்றி குமாரசாமி அவர்களே. இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தையே இவ்வாறு விடயத்தை உவமானப்படுத்துகையில் பகுத்தறிவின் தொழிற்பாடுதான் என்ன? நம்புதல் என்ற விடயந்தான் முன்னேற்றத்தின் அறிகுறி. நம்பாமை முயற்சியற்ற தன்மை.

வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்திருளாம்

கள்ளத்திறைவர கடன். ( திருவருட்பயன்)

நல்ல தண்ணீருக்குள் நின்று கொண்டே எனக்குத் தாகமாயிருக்கிறதே என்று தண்ணீரைத் தேடுபவர்கள்தான் இறைவனை இல்லை என்பவர்கள்.

sunset_amazon_2.jpg

கடவுள் எங்கே இருக்கிறார்?

"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

http://www.nilacharal.com

நம்பிக்கை என்ற ஒன்றுதான் வாழக்கை..! அது உண்மைதான்..! அதனால்தான் கடவுள் உண்டு என்று சிலரும் கடவுள் இல்லை என்று சிலரும் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்..!

நம் வாழ்க்கையில் நடைபெறும் சில சம்பவங்கள் கடவுள் இருக்கார் என்று சொல்லவும் தோன்றும் இல்லை என்று சொல்லவும் தோன்றும்..! கடவுளை வெளியே தேடுவதை விட்டு நம்மில் தேடினால் இதில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். நம்பிக்கை உள்ளவர்களுக்கு கடவுள் இருக்கிறார். அதனால் சிலர் அதிக நம்பிக்கை வைத்து தாங்கள் செய்ய வேண்டியதை செய்யாமல் கடவுளுக்கு இலஞ்சம் கொடுத்து வெற்றி அடையலாம் என நினைப்பர். உதாரணத்துக்கு பரீட்சைக்கு படிக்காமல் கடவுளுக்கு கற்பூரம் கொழுத்தினால் சித்தியடையலாம் எனவும் நம்பிக்கை வைப்பர். அந்த நம்பக்கை காப்பாற்றபடாத போது (தோல்விகள் ) கடவுளை இகழ்வர். இப்படியாக அவர்களின் பல நம்பிக்கைகள் நிறைவேறாமல் போகும் போது அவர்களுக்கு பகுத்தறிவு(?) வரும். ஆனாலும் பெரிதாக தங்கள் தேவைகளுக்கு முயற்சி செய்யாமல் பகுத்தறிவு பேசுவர்.

உண்மையிலேயே பகுத்தறிவு உள்ளவர்கள் கடவுளை நம்புவர் அத்துடன் கடவுள் தனக்காக காரியங்களை செய்ய மாட்டார் எனுவும் நம்புவர். அதனால் தனது இலக்கை அடைய வேண்டியவற்றுக்கு அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட்டு வெற்றியீட்டுவர். அத்துடன் தமக்கு பகுத்தறிவு வந்ததாக பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் காரணம் அவர்களுக்கு கடவுளை நம்பி தோல்வி அடைந்ததனால் பகுத்தறிவு வரவில்லை.

Edited by Sabesh

3) எமது வீட்டில் வளர்த்த பசுவொன்று அழகான கன்றுக்குட்டி ஒன்று போட்டிருந்தது. தாய்ப்பசுவை ஒவ்வொரு நாளும் எமது விட்டிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோமீற்றர் தூரமுள்ள இன்னொரு காணிக்கு புல் மேய்வதற்காக கொண்டு சென்று கட்டிவிட்டு வருவது வழக்கம். கன்றுக்குட்டியை தாயுடன் விடாது எமது வீட்டிலேயே வைத்திருப்போம். பிறந்து கொஞ்ச நாட்கள் என்பதாலும் கட்டிப் போடுவதில்லை. ஆனால் எமது வீட்டின் பிரதான வாசல் பிரதான வீதியுடனேயே அமைந்திருப்பதால் பிரதான வாசலை எப்போதும் பூட்டியே வைத்திருப்போம். காரணம் கன்றுக்குட்டி பிரதான வாசலைக் கடந்து ஓடினால் நேராக பிரதான வீதிக்கே போய் ஏதாவது வாகனத்தில் அடிபட்டுவிடும் என்பதனாலேயே. அன்று எமது வீட்டிற்கு வந்து சென்றவர் யாரோ பிரதான வாசலைப் பூட்டாது சென்றுவிட்டார். வாசல் திறந்திருந்ததால் கன்றுக்குட்டி தாய்ப்பசுவைத் தேடி வாசலிலிருந்து பிரதான வீதிக்கு பாய்ந்திருக்கின்றது. அது பாயவும் வேகமாக வந்த லாரி ஒன்று அதன் மேல் மோதவும் அது அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனது. சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து ஓடி வந்து பார்த்த நாம் அதிர்ந்து போனோம். அதிர்ச்சியில் நாம் உறைந்து போய் இருந்த போது ஒன்றரைக் கிலோ மீட்டருக்கப்பால் மேய்ந்து கொண்டிருந்த தாய்ப்பசு கட்டிய கயிற்றையும் அறுத்துக் கொண்டு கதறியபடி ஓடிவந்து தனது கன்றை நக்கியபடி கண்ணீர் சொரிந்ததைப் பார்த்து அவ்விடத்தில் நின்ற பலரும் அழுதனர். இப்போ எனது கேள்வி ஒன்றரைக்கிலோமீட்டருக்கு அப்பால் மேய்ந்து கொண்டிருந்த தாய்ப்பசுவிற்கு எப்படித் தனது கன்று அடிப்பட்டு இறந்தது தெரிந்தது??

பசுவின் ஆற்றல் அத்தகையது. அது தான் கோமாதா(உலக மாதா).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.