Jump to content

இடிச்ச சம்பல்


Recommended Posts

Idi%20Sambal%202%20copy.jpg

இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் சம்பல் தினமும் செய்வது அந்த காலங்களில் ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை. ஆனால் இந்நாளில் தலையில்லாமல் இருக்கும் தென்னை மரங்கள் தானே ஈழத்தில் அதிகம்.

இடிச்ச சம்பலின் சுவையறியாதவர்கள் (ஈழத்தவர்கள்) இருக்க முடியுமா? இடியப்பம், பிட்டு, பாண், தோசை, இட்லி, ரொட்டி என எந்த ஒரு உணவை எடுத்தாலும் இடிச்ச சம்பல் இல்லாமல் போகுமா? அதிலும் பள்ளிக்கூட நேரத்தில் திருட்டுதனமாக வெளியே போய் கடையில் சாப்பிடும் பாணுக்கும், இடிச்ச சம்பலுக்கும் தனி சுவை என மாமாக்கள்/அண்ணன்கள் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன். இதை பற்றி யாழ் சகோதரங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு. சகோதரர்கள் தங்கள் அனுபவங்களை எங்களோட பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். அதே போல ஈழத்தில் குண்டு மழை பொழியும் போது, வேறு உணவுகளை செய்ய சமையல்கட்டு பக்கமே போக முடியாதே. அந்த நேரங்களில் ஈழத்தவரின் உயிரை பசியில் இருந்து காப்பாற்றியது இந்த இடிசம்பல் தானே. நானும் பதுங்குகுழிக்கு மேல் இருந்து பாணும், இடிச்ச சம்பலும் சாப்பிட்டிருக்கேன். [உண்மைய சொன்னா, அந்த நேரத்தில இதுக்கு சுவை அதிகம்]. இதுக்கு மேல சம்பலுக்கு வரலாறு தேவையில்லை என்பதால் இனியாவது செய்முறைக்கு செல்வோம்.

தேவையானவை:

தேங்காய் - 1/2 முடி

செத்தல் - 6

பெரும் சீரகம் - 3/4 மே.க

பழப்புளி - சின்ன தேசிக்காய் அளவு

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 1 கெட்டு

உப்பு தேவையான அளவு

செய்முறை:

1. தேங்காயை துருவி எடுத்துக்குங்க.

2. செத்தலை நன்றாக வறுத்து எடுங்க. (தீயை அதிகம் வைத்தால் செத்தல் கருகிவிடும். தும்மலும் வரும்)

3. வெங்காயத்தை உரித்து, சுத்தமாக்கி, சிறிய துண்டுகளாக்கி எடுங்க.

4. முதலில் உரலில் செத்தலை போட்டு நன்றாக இடிக்கணும். (சாதரணமாக 2-3 நிமிடங்கள் போதுமானது)

5. செத்தலுடன் பெரும்சீரகத்தையும் உப்பையும் போட்டு ஒரு ஒரு நிமிடத்திற்கு இடியுங்க.

6. இப்போ வெங்காயம், கறி வேப்பிலை, புளியை சேர்த்து மெதுவாக ஒரு நிமிடத்திற்கு இடியுங்க.

7. இறுதியா துருவிய தேங்காய் பூவை போட்டு மெதுவா கொஞ்சமா இடிக்கணும். (உங்கள் பலத்தையெல்லாம் காட்ட வேண்டாம். தேங்காய் பூ அதிகம் நசியமல் இடிக்க வேண்டும்)

8. உரலில் இருந்து சம்பலை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போடுங்க. அதில் இருக்கும் பழப்புளியில் விதைகளை எடுத்த பின்னர், உப்பு சரியா என பார்த்தால் சுவையான இடிசம்பல் ஆயத்தம்!

பி.கு: இதுக்கெல்லாம் சமையல் குறிப்பா என கேட்க்கக்கூடாது ;) எம் பாரம்பரிய சமையல் தொடர வேண்டாமா

செய்முறை:

எங்க சுவையருவி

தூயாவின்ட சமையல்கட்டு

Link to comment
Share on other sites

ஹிஹி.. இதக்கூட எப்பிடி செய்யுறது எண்டு எழுதிப்போடவேண்டிய அளவுக்கு தமிழரிண்ட நிலம மோசமாப் போச்சிது.

ஓம் நானும் அந்தமாதிரி உந்த இடிச்சசம்பல் செய்வன். சிலது உலக்கையால உரலுக்க போடுற போடுல உள்ளுக்க இருக்கிறது எல்லாம் வெளியில பாய்ஞ்சிடும். தோசை இட்லி எண்டால் அம்மியில போட்டு அரைக்கிறது.

நான் சின்னனில சம்பலுக்கு சீனியும் சேத்து சாபிடுறது நல்லா இருக்கும்.

இப்பயும் இஞ்ச கடையில சம்பல் எண்டுற பெயரில பிளிஞ்ச தேங்காப்பூவுக்கு மிளகாய்த்தூளயும், உப்பயும் தூவிப்போட்டு ஏதோ தாறாங்கள் பாவிகள் இடியப்பத்தோட.

Link to comment
Share on other sites

பழைசையெல்லாம் கிளறி வாய ஊறவைச்சிற்றியள் தூயா

2 தோசையும் இடிச்ச சம்பலும் உடனடியாக பார்சலில் வந்தாகணும்

இல்லையேல் வாய் ஊற வைச்சதுக்கு தூயாவின் சமையல் கட்டுக்கு வக்கீல் நோட்டீஸ் வரும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பல் செய்முறைக்கு நன்றி தூயா.சம்பலுக்கு நல்ல புளிமாங்காயும் சேர்த்தால் அந்தமாதிரியிருக்கும் :D

ஹிஹி.. இதக்கூட எப்பிடி செய்யுறது எண்டு எழுதிப்போடவேண்டிய அளவுக்கு தமிழரிண்ட நிலம மோசமாப் போச்சிது.

இப்பயும் இஞ்ச கடையில சம்பல் எண்டுற பெயரில பிளிஞ்ச தேங்காப்பூவுக்கு மிளகாய்த்தூளயும், உப்பயும் தூவிப்போட்டு ஏதோ தாறாங்கள் பாவிகள் இடியப்பத்தோட.

உங்கடை கதையைப்பாத்தால் ஏதோ ஊரிலை மட்டும் எல்லாக்கடையிலையும் நல்லதேங்காய்ப்பூவிலை செய்த பச்சடி சாப்பிட்டமாதிரியெல்லே கதைக்கிறியள் அங்கை புல்,பூண்டு,புளுக்கள் , எறும்பு எண்டு பலதும்பத்தும் சேர்ந்திருக்குமெல்லோ :)

Link to comment
Share on other sites

ஆகா..! வாயூறுதே..! இஞ்ச உரலில் போட்டு இடிச்சா, 5 நிமிடத்தில் பொலிஸ் தான் வரும், அதால் அரைப்பானில் போட்டு சட்னியாக்கி நாக்கை சப்புக் கொட்ட வேண்டியது தான்..!

எனக்கு இடியப்பம் + சம்பல்தான், அதுவும் காலை உணவு என்றால் சொல்லவே வேண்டாம்..! கூடவே முட்டைபொரியலும் இருந்தா இன்னும் நல்லம்..!

பார்ப்போம் எனி எப்ப அந்த காலம்?

Link to comment
Share on other sites

நான் சின்னனில சம்பலுக்கு சீனியும் சேத்து சாபிடுறது நல்லா இருக்கும்.

இதுக்கு சீனியா?? :lol:

Link to comment
Share on other sites

ஆகா..! வாயூறுதே..! இஞ்ச உரலில் போட்டு இடிச்சா, 5 நிமிடத்தில் பொலிஸ் தான் வரும்,

ஏன்? சின்ன உரல் உலக்கையால் செய்யலாமே?

Link to comment
Share on other sites

ஏன்? சின்ன உரல் உலக்கையால் செய்யலாமே?

உரல் சின்னதானாலும் சத்தம் எப்படியும் பெருசாகத்தான் இருக்கப் போகுது.இஞ்ச சில இடங்களில் வீடு எடுக்கும் போது இதப் பற்றி முதலிலேயே சொல்லிடுவினம்..! அடுக்குமாடி வீடுகளில் இது கொஞ்சம் பிரச்சினைதான்..!

நான் இயந்திரத்தால் துருவின தேங்காய் பூவை சும்மா வரட்டிப் போட்டு சம்பல் செய்யிறனான்... பரவாயில்லாமல் இருக்கும்..!

Link to comment
Share on other sites

ம்ம்..நேக்கு உது நன்ன விருப்பம் அல்லோ :( ..அப்படியே இடித்த சம்பலிற்குள்ள மாசி துண்டையும் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி போட்டு அம்மா செய்து தருவா அட..அட என்ன ருசி.. :lol:

அப்படியே பிட்டையும் போட்டு ஒரு முட்டை பொரியலையும் சேர்த்து சாப்பிட்டா..(சொல்லவே நேக்கு பசிக்குது :( )..ஆனா என்ன நேக்கு "காரம்" கூடுதலா இருகனும்.. :lol:

ம்ம்..தூயிஸ் தங்கச்சி செய்முறைக்கு நன்றியப்பா :lol: ..அட உரலில எல்லாம் போட்டு இடிக்கிறியள்..(பேஷா இடியுங்கோ என்ன)..அட தங்கச்சி இப்படி எல்லாம் வேலை செய்யிறதை பார்க்க எனக்கு கவலையா இருக்குதல்லோ :( ..அதோட நம்ம "சிந்து உணவக" சம்பலும் பிழை இல்ல நன்னா தான் இருக்கு..(ஆனா காரம் தான் கம்மியாக்கும் பாருங்கோ)... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உரலில தான் இடிக்க வேணும் என்டு இல்லை food processor பாவிக்கலாம். அதோட இந்த சம்பலுக்கு கொஞ்சம் மிளகும் சேர்த்தா இன்னும் நல்லாயிருக்கும்.

நான் கடையில வாங்கிற தேங்காய் பூவுக்கு கொஞ்சம் சுடுதண்ணி சேர்த்து ஊற விட்டுட்டு பிறகு செத்தலை வறுத்து செத்தலையும் உப்பு, மிளகையும் சேர்த்து அரைக்க வேனும் அது அரைச்சு வந்த பிறகு தேங்காஉப்பூவை போட வேணும் அதுவும் சேர்ந்த பிறகு வெங்காயம், பெருஞ்சீரகம் போட்டு ஒரு 2 தடவை சுற்றின பிறகு இறக்கலாம் (வெங்காயம் நல்லா அரைபட்டா சம்பல் சுவையாக இருக்காது). பிறகு எலுமிச்சம் பழபுளி விட்டா இடிச்ச சம்பல் தயார்.

இது தான் food processor(எனக்கு இதற்கு தமிழ் தெரியாது)

Food_Processor__2_in_1_.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிஹி.. இதக்கூட எப்பிடி செய்யுறது எண்டு எழுதிப்போடவேண்டிய அளவுக்கு தமிழரிண்ட நிலம மோசமாப் போச்சிது.

ஓம் நானும் அந்தமாதிரி உந்த இடிச்சசம்பல் செய்வன். சிலது உலக்கையால உரலுக்க போடுற போடுல உள்ளுக்க இருக்கிறது எல்லாம் வெளியில பாய்ஞ்சிடும். தோசை இட்லி எண்டால் அம்மியில போட்டு அரைக்கிறது.

நான் சின்னனில சம்பலுக்கு சீனியும் சேத்து சாபிடுறது நல்லா இருக்கும்.

இப்பயும் இஞ்ச கடையில சம்பல் எண்டுற பெயரில பிளிஞ்ச தேங்காப்பூவுக்கு மிளகாய்த்தூளயும், உப்பயும் தூவிப்போட்டு ஏதோ தாறாங்கள் பாவிகள் இடியப்பத்தோட.<<<<

ஒட்டாவாவில் இருப்பதால் கடைச்சாப்பாடுகள் குறைவு அதுவும் இடியப்பம் எனக்குப் பெரிசாப்பிடிக்காது :rolleyes: இடியப்பம் என்றால் முட்டைப்பொரியலோட சாப்பிடத்தான் விருப்பம்.

இடிச்ச சம்பல் பாணுக்கும் ரொட்டிக்கும் மிக நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்சம்பலுக்கு வெங்கயம் கொஞ்சம் கடிபட வேனும்.அதால கடைசி நேரத்தில வெங்காயத்ததை போட்டால் நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

இந்தச்சம்பலுக்கு வெங்கயம் கொஞ்சம் கடிபட வேனும்.அதால கடைசி நேரத்தில வெங்காயத்ததை போட்டால் நல்லா இருக்கும்.

உண்மை <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இதை உக்ரேன் போர் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சொல்லிக்கொண்டு வருகின்றேன். அப்போது என் மீது கோபப்பட்டவர்கள் தான் அதிகம். அண்மையில் ஜேர்மனியும் மற்றும் ஒரு சில நாடுகளும் உக்ரேனுக்கான பண உதவியை நிறுத்தியிருந்தனர். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருங்கள். உக்ரேனைப்பற்றிய நல்ல செய்திகள் வரும். 😂
    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.