Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடிய அரசின் நடவடிக்கையானது தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அழிக்கும் வழுக்கல் பாதையின் முதற்படி: உ.த. முன்னாள் தலைவர்

Featured Replies

உலகத் தமிழர் இயக்கத்துக்கு எதிரான கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது கனடாவில் உள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற்படி என்று நம்புவதாக உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய நீதித்துறையில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு - செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் தலைவர் சூளுரை

உலகத் தமிழர் இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் பட்டியலிடப்பட்டதை எதிர்த்து முழுப்பலத்தோடு நீதிமன்றத்தில் வழக்காடுவோம்!

எமது வாயை யாரும் மூட முடியாது! - கனேடிய நீதித்துறையில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு! - செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் தலைவர் சூளுரை

(உலகத் தமிழர் இயக்கம் கனேடிய அரசினால் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டது தொடர்பான செய்தியாளர் மாநாடு யூன் 19 (வியாழக்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு கீழ்நகர் புறம் இல. 11 பிரின்ஸ் ஆர்தர் அவெனியூவில் உள்ள வழக்கறிஞர்கள் Ruby and Marlys Edwardh அலுவலக நூலகத்தில் நடைபெற்றது. அங்கு உலகத் தமிழர் இயக்க முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பல் அவர்கள் விடுத்த செய்தி அறிக்கையின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

வணக்கம்.

இந்த முக்கிய ஊடகவியலாளர் மாநாட்டுக்கு நீங்கள் வருகை தந்திருப்பதற்கு முன்கூட்டியே எனது நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பெயர் சித்தா சிற்றம்பலம். சில நாட்களுக்கு முன்னர் வரை நான் உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவராக இருந்தேன்.

என்னுடன் Ruby & Edwarde வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த Marlys Edwarde இருக்கிறார். இவரையே உலகத்தமிழர் இயக்கத்தின் வழக்குரைஞராக உ.த.இயக்கம் அமர்த்தியுள்ளது. அவரோடு வழக்கறிஞர் Adriel Weaver அவர்களையும் அமர்த்தியுள்ளோம். மேலும் Jackman and Associates குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் Barbara Jackman இணை வழக்கறிஞராகச் செயல்படுவார். தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் இன்று இங்கு வருகை தர முடியவில்லை.

கனேடிய குற்றவியல் சட்டத்தின் (Criminal Code) கீழ் கடந்த திங்கட்கிழமை (யூன் 16, 2008) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Stockwell Day உ.த.இயக்கத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பது நீங்கள் அறிந்த சங்கதியே.

ஒரு சமூகத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் மீது குற்றவியல் குற்றம்சுமத்தி கனேடிய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு உ.த.இயக்கத்தின் இயக்குநர் அவை, அ.த.இயக்கம் வழங்கிய சேவைகளால் பயனடைந்த பல்லாயிரக்கணக்கான கனேடிய தமிழர்கள் மற்றும் கனேடிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சிக்கும் திகைப்புக்கும் உள்ளாக்கியுள்ளது.

கடந்த பல நாட்களாக உலகத் தமிழர் இயக்கத்தின் தன்மை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் தவறுதலான செய்தி;கள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே இன்று எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி உ.த. இயக்கம் என்ன செய்கிறது அது எதற்காகப் பாடுபடுகிறது என்பதை தெளிவாக்க விரும்புகிறேன்.

உலகத் தமிழர் இயக்கம் 1986 இல் ஒரு இலாப நோக்கற்ற குழுமமாக ஒன்ராறியோவில் பதிவு செய்யப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாக பல்லாயிரக கணக்கான கனேடிய தமிழர்களுக்கு குடியமர்வு, உளவளத்துறை மற்றும் பண்பாட்டு சேவைகளை வழங்கி வந்துள்ளது. ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் 200,000 கனேடிய தமிழர்கள் வாழ்கிறார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையோர் ஸ்ரீலங்கா அரசின் இன அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு அஞ்சி ஏதிலிகளாக இங்கு ஓடிவந்தவர்கள் ஆவர்.

தமிழ்க் குடிவரவாளர் கனடாவில் புதிய வாழ்வைத் தொடக்குவதற்கும் அவர்கள் பண்பாட்டு உறவுகளை சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கும் வேண்டிய எல்லாவித உதவிகளையும் உ.த.இயக்கம் அக்கறையோடு வழங்கியது.

கடந்த காலங்களில் ஆவண மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்தல், மொழி மற்றும் தொழிற் பயிற்சி, பிள்ளைகளுக்குத் தமிழ் மற்றும் பண்பாட்டு வகுப்புகள், மகளிரின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் மகளிர் அமைப்பு, 16,000 நூல்கள் கொண்ட நூலகம், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் உட்பட கனேடிய தமிழர்களுக்குப் பல்வேறு வேலைத் திட்டங்களையும் சேவைகளையும் உலகத் தமிழர் இயக்கம் வழங்கி வந்துள்ளது. உலகத் தமிழர் இயக்கம் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களது உழைப்பினாலும் மக்களது நிதிப்பங்களிப்பினாலும் இயங்கி வந்த ஒரு அமைப்பாகும்.

உலகத் தமிழர் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் பட்டியலிட்ட காரணமாக இந்தச் சேவைகளை தொடர்ந்து கனேடிய தமிழர்களுக்கு வழங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. உலகத் தமிழர்இயக்கம் இல. 39 கொன்சென்ரினோ வீதி, ஸ்காபரோவில் உள்ள கட்;டிடத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது. இயக்குநர் அவை உறுப்பினர்கள் தங்களது செயற்பாடுகளை இடைநிறுத்தி வைத்துள்ளார்கள். இன்று முதற்கொண்டு உலகத் தமிழர் இயக்கத்தின் சேவைகளும் நிறுத்தப்படும். 16,000 நூல்களைக் கொண்ட நூலகமும் பொதுமக்களுக்கு மூடப்படும்.

உலகத் தமிழர் இயக்கம ஸ்ரீலாங்காவின் வட-கிழக்கில் வாழும் தமிழ்மக்களது தன்னாட்சி உரிமையை ஆதரிக்கிறது என்பது ஒன்றும் இரகசியமல்ல. இது ஒரு அரசியல் நிலைப்பாடாகும். எல்லோரும் அதனை ஆதரிப்பார்கள் என்றில்லை. ஆனால் அரசியல் சட்டத்தின்படி அதனைச் சொல்வதற்கு எமக்கு உரிமை இருக்கிறது. எங்களில் பெரும்பாலோர் கனடாவுக்கு வந்ததே இந்த நாடு ஒவ்வொரு குடிமகனும் தனக்கு விருப்பமான கருத்தை வைத்திருக்கவும் தெரிவிக்கவும் உரிமையுடையவர்கள் என்பதைக் கட்டிக் காப்பதாலேயே.

துரதிட்டவசமாக இந்த உரிமைகள் ஸ்ரீலங்காவில் சமமாகக் கடைப் பிடிக்கப்படுவதில்லை. உலகத் தமிழர் இயக்கத்தைப் பட்டியலிட்டது ஸ்ரீலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கையை மேலும் ஊக்கப்படுத்துவதோடு வன்முறை மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் நிலை நீடிக்க வழிவகுக்கும் என்பது எமது நம்பிக்கையாகும். ஸ்ரீலங்காவின் பாரதூரமான மனிதவுரிமை மீறல்களை அய்க்கிய நாடுகள் அவை மற்றும் பொதுமன்னிப்பு அவை போன்றவை மீண்டும் மீண்டும் கண்டித்து வருவது தெரிந்ததே.

கனடாவில் உள்ள சமூக அமைப்புக்களைக் குற்றவாளிகளாக சித்திரிக்கப்படுவதற்குப் பதில் கனேடிய அரசு ஸ்ரீலங்காவில் அமைதி முயற்சியை முன்னெடுத்திருக்கலாம். தற்போதைய மோதல்காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நல்கி இருக்கலாம்.

கனேடிய அரசின் நடவடிக்கையானது எங்களது அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற் படி என நம்புகிறோம். புலம்பெயர்ந்த தமிழர்களின் குரலை அடைத்துவிடும் முற்று முழுதான ஒரு அரசியல் நகர்வாகவே இதனை நாம் பார்க்கிறோம். கனேடிய அரசின் அறிவித்தல் எம்மைக் கறைபடுத்துவதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது என முழு சமூகமும் நினைக்கிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் பட்டியல் இட்ட பின்னர் கனேடிய தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகக் குறிப்பிடத்தகுந்த எதிர்விளைவுகள் ஏற்பட்டன. பலர் பள்ளிக்கூடங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாரபட்சமாக நடாத்தப்பட்ட அனுபவத்துக்கு உள்ளானார்கள். இப்போது உ.த. இயக்கம் பட்டியல் இடப்பட்டது முன்னரைவிடப் பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலை கனேடிய தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட கனேடிய தமிழர்களிடம் இருந்து எமக்குக் கிடைத்த பேராதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்களது எதிரொலிப்பும் எங்களது எதிரொலிப்பும் சொல்லும் செய்தி என்னவென்றால் எமது வாயை யாரும் அடைத்துவிட முடியாது என்பதுதான்.

எனவே உ.த. இயக்குநர் அவை உ.த.இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து முழுப்பலத்தோடு நீதிமன்றத்தில் வழக்காடுமாறு தனது வழக்கறிஞர்களைக் பணித்துள்ளது. கனேடிய அரசின் இந்த நடவடிக்கை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றி யாப்பில் போற்றிப் பதிக்கப்பட்ட அடிப்படை கருத்துரிமை மற்றும் கூடல் உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதலாக நாங்கள் பார்க்கிறோம். கனேடிய அரசியல் சட்டத்தைத் கனேடிய நீதித்துறை உறுதியாகக் கடைப் பிடிக்கும் என்பதில் எமக்கு முழு அளவிலான நம்பிக்கை இருக்கிறது. எனவே நாங்கள் எங்களுக்கு இருக்கும் சட்டப் பரிகாரங்களை முழு அக்கறையோடு முன்னெடுப்போம்.

உங்கள் நேரத்தையும் பொருட்படுத்தாது இங்கு வருகை தந்ததிற்கு உங்கள் அiனைவருக்கும் நன்றி.

-தகசெ - ஆனி 20, 2008

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.