Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனி கலைஞரை திட்டினால்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த பதின்மூன்றாம் தேதி தே.மு.தி.க. சார்பில் ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் `ஆளும் தி.மு.க.வினரை சுட்டுக் கொல்லணும்' என்று விஜயகாந்த் பேசிய பேச்சு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயகாந்துக்கு சரியான பதிலடி கொடுக்க தி.மு.க.வினர் காத்துக் கொண்டிருக்க, அதற்குத் தோதாக வந்து வாய்த்தது, தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுடப்படுவதைக் கண்டித்து கலைஞர் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கடந்த பத்தொன்பதாம் தேதி நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அன்பழகன், ஆற்காட்டார் உள்பட பல தி.மு.க. தலைவர்களும் விஜயகாந்தை ஒரு பிடிபிடித்து விட்டுத்தான் சிங்கள கடற்படை விவகாரத்தையே பேசினார்கள்.

தமிழகம் முழுக்கவே இப்படி என்றால், விஜயகாந்த் வில்லங்கத்தை விதைத்துச் சென்ற ராமேஸ்வரம் நிலவரத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? விஜயகாந்த்துக்கு எதிராக அனலே பறந்தது.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல் நடிகர் விஜயகாந்தின் பேச்சுக்கு ஒரு நடிகரைக் கொண்டே பதிலடி கொடுத்து புளகாங்கிதப்பட்டுக் கொண்டது ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.

அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவருமான முகவை குமார் என்கிற நடிகர் ரித்தீஸை விஜயகாந்துக்கு எதிராகக் கொம்பு சீவி விட, உண்ணாவிரதப் பந்தலில் விஜயகாந்தை விளாசித் தள்ளிவிட்டார் அவர்.

`வாடா, போடா, அடேய்' என்று விஜயகாந்தை குறிப்பிட்டு ரித்தீஸ் பேசிய பத்து நிமிடப் பேச்சுக்கு கூட்டத்தில் விசில் பறந்தது. ஒருகட்டத்தில் தன் பேரனின் பேச்சைக் கேட்டு சுப. தங்கவேலனே கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினார்.

அப்படி என்னதான் பேசினார் ரித்தீஸ்?

``டேய், யாரு மாவட்டத்துல வந்து யாரைத் திட்டுறே... என் தலைவரையா திட்டுறே... என் தாத்தாவையா திட்டுறே... வயசுக்கு ஒரு மரியாதை தர வேணாம்? கலைஞர் எவ்வளவு பெரிய தலைவர். அவர் வயது என்ன? அவர் அரசியல் அனுபவம் என்ன? அவரோட கால் தூசுக்குப் பெறுவியா நீ? வயசுக்கு மரியாதை தரணும்னு முட்டாளுக்குக் கூட தெரியுமேடா. இவ்வளவு வயசாகி உனக்கு ஏன் அது தெரியாமல் போச்சு?'' என்று ஆரம்பித்து, ``இனிமே நீ ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்ளே நுழைஞ்சுடுவே? நுழைஞ்சு பாருடா. நாங்க யாருன்னு உனக்குக் காட்டறோம். இனிமேல் கலைஞரைத் திட்டினால் உனக்குக் கருமாதிதாண்டா. இனிமே இந்த மாவட்டத்துக்குள்ளே எங்கேயும் நீ நுழையக்கூடாது. அப்படி மீறி நுழைஞ்சா நடக்குறதே வேற'' என்று அனல் கக்க ரித்தீஸ் பேசி முடித்ததும் ஏக விசில்.

ஒன்றியத் தலைவர் ஒருவர் பேசும் போது, ``டேய், விஜயகாந்த். முதலமைச்சர் கனவா கண்டுக்கிட்டு இருக்கே நீ. இதோ பாரு. இந்த தமிழ்நாட்டுக்கு அடுத்த முதலமைச்சரா நமீதா வந்தாலும் வருமே தவிர. நீ எந்தக் காலத்திலும் வர முடியாது!'' என்று கூற, அதற்கும் ஏகப்பட்ட வரவேற்பு.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்க வந்த மு.க. ஸ்டாலின், விஜயகாந்தை விளாசுவார் என்று ஒட்டுமொத்த கூட்டமும் ஏகப்பட்ட ஆர்வத்தோடு காத்திருக்க. அவரோ தனக்கு உடல்நலமில்லாத காரணத்தைச் சொல்லிவிட்டு, `கச்சத்தீவை மீட்பது ஒன்றே பிரச்னைக்குத் தீர்வு' என்று பேசி ஐந்து நிமிடத்திலேயே தன் உரையை முடித்துக் கொண்டார்.

அன்றைய ராமேஸ்வரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்துக்கு ஆவேசமாகப் பதிலடி கொடுத்ததன் மூலம் ரித்தீஸ்தான் அன்றைக்கு ரியல் ஹீரோவாகி விட்டார்.

நாம் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``விஜயகாந்துக்கு என்னங்க அரசியல் பின்பலம் இருக்கு? மக்களுக்காகப் போராட்டம் நடத்தி ஒரு தடவையாவது ஜெயிலுக்குப் போயிருக்காரா? அவருக்கு என்ன தகுதி இருக்கு, என் தலைவனையும் (கலைஞர்) என் தாத்தாவையும் (சுப. தங்கவேலன்) விமர்சனம் பண்ண? அரசியல் விமர்சனம் என்பது நாகரிகமா, ஆரோக்கியமா இருக்கணும். உடனே நீங்க, ராமேஸ்வரம் உண்ணாவிரதப் பந்தல்ல நான் விஜயகாந்தைப் பத்தி பேசினது மட்டும் நாகரிகமானதான்னு கேட்கலாம். விஜயகாந்த் மாதிரி ஆட்களுக்கு அப்படிப் பேசினாதான் புத்தியில் ஏறும். தவிர, பொதுக்கூட்டத்துல ஒன்றைப் பேசிட்டு அதை மறுநாளே மறுத்துப் பேசுற கோழை நான் கிடையாது. நான் ராமநாதபுரத்து மறவன். ஒரு நாக்கு... ஒரு சொல்தான் எனக்கு. அவரு பேசின பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டே ஆகணும். இல்லாட்டி இந்த மாவட்டத்துக்குள்ளே அவரு நுழையவே முடியாது!'' என்று வெடித்தவரிடம் நாம்,

`` `கலைஞரை இனி திட்டினா, விஜயகாந்துக்கு கருமாதிதான்' என்று நீங்கள் பேசியது மிகமிக அநாகரிகமில்லையா?'' என்று கேட்டோம். ``அவரு மட்டும் `தி.மு.க. காரர்களை சுட்டுத் தள்ளணும். கொல்லணும்னு பேசலாம், நான் அப்படி பேசக் கூடாதா? இதோ பாருங்க சார், கலைஞரோட அரசியல் அனுபவமும், வயதும் எவ்வளவு பெரிய விஷயம்? அவரோட நிழல் தன் மேலே படாதான்னு தொண்டர்கள் மட்டும் இல்ல, படிச்சவங்களே ஏங்கிக்கிட்டு இருக்காங்க. அவரைப் போய் `நீ...' `வா...' `போ'...ன்னு மரியாதை இல்லாம பேசுனா பொறுத்துக்கிட்டு இருக்க முடியுமா? ஒரு தி.மு.க காரனா மட்டுமில்லே, என்னோட தாத்தா (சுப. தங்கவேலன்) என் ரத்தத்துல சின்ன வயசுலேயே ஊட்டி வளர்த்த திராவிடக் கழக உணர்வோடயும் சொல்றேன். கலைஞரைத் திட்டுறதை விஜயகாந்த் இனிமே அடியோட நிறுத்திக்கணும். இல்லேன்னா, அவருக்கு கருமாதிதான். உங்ககிட்டே சொன்ன இதே கருத்தை எத்தனை ஆயிரம் பேர் முன்னிலையிலும் நான் மறுபடி மறுபடி சொல்லுவேன். சொன்னதைச் சொல்லலேன்னு அந்தர்பல்டி அடிக்க நான் ஒண்ணும் கோழை இல்லே!'' என்றார் முகவை குமார் என்ற ரித்தீஸ்.

ஆக மொத்தத்தில்,அரசியலில் நாகரிகம் என்பது கவலைக்குரியதாகத்தான் இருக்கும் போலிருக்கிறது!

படங்கள் : க. லோகேஷ்

வல்லம் மகேசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவருமான முகவை குமார் என்கிற நடிகர் ரித்தீஸை விஜயகாந்துக்கு எதிராகக் கொம்பு சீவி விட, உண்ணாவிரதப் பந்தலில் விஜயகாந்தை விளாசித் தள்ளிவிட்டார் அவர்.

``டேய், யாரு மாவட்டத்துல வந்து யாரைத் திட்டுறே... என் தலைவரையா திட்டுறே... என் தாத்தாவையா திட்டுறே... வயசுக்கு ஒரு மரியாதை தர வேணாம்? கலைஞர் எவ்வளவு பெரிய தலைவர். அவர் வயது என்ன? அவர் அரசியல் அனுபவம் என்ன? அவரோட கால் தூசுக்குப் பெறுவியா நீ? வயசுக்கு மரியாதை தரணும்னு முட்டாளுக்குக் கூட தெரியுமேடா. இவ்வளவு வயசாகி உனக்கு ஏன் அது தெரியாமல் போச்சு?'' என்று ஆரம்பித்து, ``இனிமே நீ ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்ளே நுழைஞ்சுடுவே? நுழைஞ்சு பாருடா. நாங்க யாருன்னு உனக்குக் காட்டறோம். இனிமேல் கலைஞரைத் திட்டினால் உனக்குக் கருமாதிதாண்டா. இனிமே இந்த மாவட்டத்துக்குள்ளே எங்கேயும் நீ நுழையக்கூடாது. அப்படி மீறி நுழைஞ்சா நடக்குறதே வேற'' என்று அனல் கக்க ரித்தீஸ் பேசி முடித்ததும் ஏக விசில்.

இந்த எருமை மட்டும் வயசுக்கு மரியாதை குடுக்குதா? பிறகு இது அதை திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலையும் கலைஞரை திட்டும் பொழுது வயதை பார்த்து திட்டவும்.உங்களது பிறப்பு சன்றிதழை இனைத்தால் ந்ல்லம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழிலையும் கலைஞரை திட்டும் பொழுது வயதை பார்த்து திட்டவும்.உங்களது பிறப்பு சன்றிதழை இனைத்தால் ந்ல்லம்.....

அந்த நடிகன் மாதிரி அவ்வளவுக்கு நல்லவன் நானில்லை.

டேய், விஜயகாந்த். முதலமைச்சர் கனவா கண்டுக்கிட்டு இருக்கே நீ. இதோ பாரு. இந்த தமிழ்நாட்டுக்கு அடுத்த முதலமைச்சரா நமீதா வந்தாலும் வருமே தவிர. நீ எந்தக் காலத்திலும் வர முடியாது!'' என்று கூற, அதற்கும் ஏகப்பட்ட வரவேற்பு.

ஓ..உது என்னும் நன்னா இருக்கே :lol: ..நமீதா அக்கா முதலமைச்சர் ஆனா எப்படி இருக்கும் யோசித்து பார்த்தன் நினைக்கவே முடியல..அவா முதலமைச்சரா வந்தா எல்லாத்தையும் திறந்து விடுவா எண்டு நினைக்கிறன்..(சரி ஒருத்தரும் என்னை ஏசி போடாதையுங்கோ)..!! :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா திட்டுறவனும் உருபடமாட்டான் திட்டுறதை கேட்கிறவனும் உருபடமாட்டான்" :lol:

அப்ப நான் வரட்டா!!

``டேய், விஜயகாந்த். முதலமைச்சர் கனவா கண்டுக்கிட்டு இருக்கே நீ. இதோ பாரு. இந்த தமிழ்நாட்டுக்கு அடுத்த முதலமைச்சரா நமீதா வந்தாலும் வருமே தவிர. நீ எந்தக் காலத்திலும் வர முடியாது!''

நீங்கள் நமீதாவை முதலமைச்சர் ஆக்கி (அழகு)பார்த்தாலும் பார்ப்பியள்....................

தாங்கமுடியல............................

Edited by பல்லவன்

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: முந்தி ஜெயலலிதா, இப்ப நமீதாவா? நல்லாயிருக்குத் தமிழ்நாட்டு அரசியல். சினிமாவில தனது சதையைக் காட்டி கவர்ச்சி நடனமாடிய ரெண்டாந்தர நடிகையைத்தானே "அம்மா", " தெய்வம்" என்று வழிபடுகிறீர்கள். நமீதா என்ன சக்கீலாவைக் கூட முதலமைச்சராக்குவீர்கள்.

வாழ்க தமிழ்நாட்டு அரசியல் ஞானம் ! புல்லரிக்குது போங்கோ !!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேணும் நாலும் தெரிஞ்சவர்களே,

எனக்கொரு சந்தேகம், நீங்கள் இவ்வளவு பேரும், மூண்டு பயன் படாத அரசியல் வாதிகளுக்கும் ஆக குறைந்தது ரெண்டு நடிகர்களுக்கும் விளம்பரம் தேடி குடுத்திருக்கிரியள், அவர்களும் அதயே எதிர்பாத்திருப்பினம். உது உங்களுக்கு தெரியாதோ?

சாக்கடை அரசியலுக்கு சேறு வார்க்கும் பணி செப்பனே செய்யப்பட்டது.....

அடுத்து சாக்கடை நாறுது எண்டு குளறும் பணி தொடரும்.

எனகென்ன வெண்டால் உதே விளம்பரத்த ரெண்டு நல்ல பயன் உள்ள சனத்துக்குசெய் திருந்தால் இங்க நாலு சனம் பயன்படுத்தியிருக்கும் அவ்வளவும் தான்,

இவை எல்லம் முக்கிய!!! செய்திகள் தான், என்ன என்னைபோன்ர பட்டினத்து பட்டிக்காடுகளுக்கு விளக்கம் குறைவு பாருங்கோ...

நாலும் தெரிஞ்சவா நன்னா நடத்துங்கோ.... வாழ்க வாழ்க....

ஓ..உது என்னும் நன்னா இருக்கே :icon_idea: ..நமீதா அக்கா முதலமைச்சர் ஆனா எப்படி இருக்கும் யோசித்து பார்த்தன் நினைக்கவே முடியல..அவா முதலமைச்சரா வந்தா எல்லாத்தையும் திறந்து விடுவா எண்டு நினைக்கிறன்..(சரி ஒருத்தரும் என்னை ஏசி போடாதையுங்கோ)..!! :icon_idea:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா திட்டுறவனும் உருபடமாட்டான் திட்டுறதை கேட்கிறவனும் உருபடமாட்டான்" :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா

நீங்க காவிரிதண்ணீரைதானே சொல்றீங்க? :lol:

எப்படி கண்டுபிடிச்சன் பாத்தீங்களே :huh:

ஜமுனா

நீங்க காவிரிதண்ணீரைதானே சொல்றீங்க? :unsure:

எப்படி கண்டுபிடிச்சன் பாத்தீங்களே :rolleyes:

அட..சரியா கண்டுபிடித்திட்டியள் பாருங்கோ.. :lol: (நான் அதை தான் சொன்னான்)..வேற நேக்கு என்ன தெரியும் நான் சின்ன பிள்ள அல்லோ..நீங்க என்ன நினைக்கிறியள் இந்த அக்கா வந்தா காவேரி பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் தானே..?? :o

அப்ப நான் வரட்டா!!

அட..சரியா கண்டுபிடித்திட்டியள் பாருங்கோ.. :o (நான் அதை தான் சொன்னான்)..வேற நேக்கு என்ன தெரியும் நான் சின்ன பிள்ள அல்லோ..நீங்க என்ன நினைக்கிறியள் இந்த அக்கா வந்தா காவேரி பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் தானே..?? :mellow:

அப்ப நான் வரட்டா!!

வாந்தா சரிவரும்தான்.

ஆனா நாமதான் ஒரு குலுக்கலை இளக்கிறோம் :huh:

[அட நான் சொன்னது அதிஸ்ரத்தை]

பேபிக்கு புரியாதல்லோ அதுதான் விளக்கிசொன்னேன் :(

  • கருத்துக்கள உறவுகள்

:o முந்தி ஜெயலலிதா, இப்ப நமீதாவா? நல்லாயிருக்குத் தமிழ்நாட்டு அரசியல். சினிமாவில தனது சதையைக் காட்டி கவர்ச்சி நடனமாடிய ரெண்டாந்தர நடிகையைத்தானே "அம்மா", " தெய்வம்" என்று வழிபடுகிறீர்கள். நமீதா என்ன சக்கீலாவைக் கூட முதலமைச்சராக்குவீர்கள்.

வாழ்க தமிழ்நாட்டு அரசியல் ஞானம் ! புல்லரிக்குது போங்கோ !!!!!

:mellow::huh: ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

கேட்கவே கேவலமா இருக்கு

வாந்தா சரிவரும்தான்.

ஆனா நாமதான் ஒரு குலுக்கலை இளக்கிறோம் :rolleyes:

[அட நான் சொன்னது அதிஸ்ரத்தை]

பேபிக்கு புரியாதல்லோ அதுதான் விளக்கிசொன்னேன் :lol:

ஓமோம் எனக்கு விளங்கவே இல்லை என்ன குலுக்கல் எண்டு நீங்க சொன்னா பிறகு தான் விளங்கிச்சு ராஜா அண்ணா எண்டா பாருங்கோவன் :unsure: ..மற்றதண்ணா குமுதத்தில ஒரு பகிடி வாசித்தனான் அதையும் உங்களோட பகிர்ந்து கொள்ளுறன் சரியா.. :lol:

"சேது கால்வாய் திட்டதிற்கு

நமீதா கால்வாய் திட்டம்"

என்று வைத்தால் எங்கள்

கட்சி முழு ஆதரவும் தரும்

என்பதனை தெரிவித்து

கொள்கிறேன்" :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஓமோம் எனக்கு விளங்கவே இல்லை என்ன குலுக்கல் எண்டு நீங்க சொன்னா பிறகு தான் விளங்கிச்சு ராஜா அண்ணா எண்டா பாருங்கோவன் :unsure: ..மற்றதண்ணா குமுதத்தில ஒரு பகிடி வாசித்தனான் அதையும் உங்களோட பகிர்ந்து கொள்ளுறன் சரியா.. :lol:

"சேது கால்வாய் திட்டதிற்கு

நமீதா கால்வாய் திட்டம்"

என்று வைத்தால் எங்கள்

கட்சி முழு ஆதரவும் தரும்

என்பதனை தெரிவித்து

கொள்கிறேன்" :unsure:

அப்ப நான் வரட்டா!!

பாத்தீங்களே நான் விளக்கம்தரவில்லை என்டால் கஸ்ரப்பட்டு இருப்பியள் என்ன?

ம் உங்கள் குமுதம் பகிடி நல்லாய் இருக்கு:rolleyes:

மற்றது

நான் நெடுக்காலைபோவானுக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்துள்ளேன்

[இதுவரை 10 அரைபேர் பதிஞ்சு இருக்கினம்]

நீங்கள் கொள்கைபரப்பு செயலாளராக செயல்படமுடியுமா?

என்னடா சின்னபேபியை பாத்து இப்படி கேக்கிறானே என்டுகோவிக்கிறேல்லை!

ஜம்மு சின்னதிலேயே பழுத்தபேபிதானே அதுதான் கேட்டேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் எனக்கு விளங்கவே இல்லை என்ன குலுக்கல் எண்டு நீங்க சொன்னா பிறகு தான் விளங்கிச்சு ராஜா அண்ணா எண்டா பாருங்கோவன் :D ..மற்றதண்ணா குமுதத்தில ஒரு பகிடி வாசித்தனான் அதையும் உங்களோட பகிர்ந்து கொள்ளுறன் சரியா.. :lol:

"சேது கால்வாய் திட்டதிற்கு

நமீதா கால்வாய் திட்டம்"

என்று வைத்தால் எங்கள்

கட்சி முழு ஆதரவும் தரும்

என்பதனை தெரிவித்து

கொள்கிறேன்" :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி......

நீங்கள் ஆழம் தெரியாமல் காலை விடப்போறீங்கள்

............ ஆதாவது சேது கால்வாய் திட்டமென்பது நடுக்கடலில் செய்வது. உங்களுக்கு அவ்வளவு நீச்சல் தெரியுமோ?

திட்டத்தை தொடக்க உங்களைம் ஆதரவு தந்தவர்கள் எனும் பேரில் அழைத்தால்....... நீங்களும் போகவேண்டாமா தடுமாறி ஏதும் ஆகி நீங்கள் கடலின் உள்ளே நீங்களே முழுதாய் மூள்கினால் என்ன நிலை??? யோசிக்க வேண்டாமா ஜம்மு.

நமீதா என்றவுடன்.... சும்மா எழுந்தமாத்திரத்தில் ஆதரவு கொடுப்பதா?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரை திட்டுவதா??? அவர் எவ்வளவு பெரிய கட்சி வைத்திருக்கிறார்.......

பாத்தீங்களே நான் விளக்கம்தரவில்லை என்டால் கஸ்ரப்பட்டு இருப்பியள் என்ன?

ம் உங்கள் குமுதம் பகிடி நல்லாய் இருக்கு

மற்றது

நான் நெடுக்காலைபோவானுக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்துள்ளேன்

[இதுவரை 10 அரைபேர் பதிஞ்சு இருக்கினம்]

நீங்கள் கொள்கைபரப்பு செயலாளராக செயல்படமுடியுமா?

என்னடா சின்னபேபியை பாத்து இப்படி கேக்கிறானே என்டுகோவிக்கிறேல்லை!

ஜம்மு சின்னதிலேயே பழுத்தபேபிதானே அதுதான் கேட்டேன்

ஒம்..அண்ணா நீங்க விளக்கம் தராட்டி நான் என்னவெல்லாம் நினைத்திருப்பன்..நன்ன காலம் அப்படி எல்லாம் நடக்கல என்ன :D ..ஓ பேஷா கொள்கையை பரப்பு செயலாளர் ஆகலாமே ஆனா ஒன்னு நான் அறிக்கை விடுவன் சொல்லிட்டன்.. :lol: (எண்ட நீண்ட நாள் ஆசையில இதுவும் ஒண்டு)...அதுக்கு உங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை தானே ராஜா அண்ணா..

சா..சா உதுக்கு எல்லாம் நான் கோவிப்பனோ...என்னை நியமித்திட்டியள் தானே எனி பாருங்கோவன் வலு கெதியில....இப்போதைக்கு அங்கால நான் சொல்ல மாட்டன்..(காலம் அதை சொல்லும்)... :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி......

நீங்கள் ஆழம் தெரியாமல் காலை விடப்போறீங்கள்

............ ஆதாவது சேது கால்வாய் திட்டமென்பது நடுக்கடலில் செய்வது. உங்களுக்கு அவ்வளவு நீச்சல் தெரியுமோ?

திட்டத்தை தொடக்க உங்களைம் ஆதரவு தந்தவர்கள் எனும் பேரில் அழைத்தால்....... நீங்களும் போகவேண்டாமா தடுமாறி ஏதும் ஆகி நீங்கள் கடலின் உள்ளே நீங்களே முழுதாய் மூள்கினால் என்ன நிலை??? யோசிக்க வேண்டாமா ஜம்மு.

நமீதா என்றவுடன்.... சும்மா எழுந்தமாத்திரத்தில் ஆதரவு கொடுப்பதா?

இல்ல..இல்ல நான் கால விடமாட்டன் அல்லோ மற்றவையின்ட காலை விட்டு பார்த்து போட்டு தான் எண்ட காலை விடுவன் உதில எல்லாம் நான் வலு கவனம் அல்லோ :lol: ..சப்பா இப்படி எல்லாம் பிரச்சினை இருக்கோ உது எனக்கு தெரியாம போச்சே..(எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா).. :lol:

அப்படி நான் கடலுகுள்ள விழ போறன் எண்டா நமீதா அக்காவையும் இழுத்து கொண்டு அல்லோ விழுவன் உங்க தான் ஜம்மு பேபி நிற்குது..(அப்ப நான் தப்பிடமாட்டன்).. :lol:

அப்ப நான் வரட்டா!!

யம்மு அறிக்கை மட்டும்தான் விடவேணும். அறிக்கையிலை சொல்லுற ஒண்டும் செய்யிறேல்லைச் சொல்லிப் போட்டன். :lol::D:lol: இது எப்படியிருக்கு??? (யம்முவின் கருத்துகளை வாசித்து, வாசித்து எனக்கும் அப்படியே எழுத வருகிறது :icon_mrgreen::lol: )

நமீதா அக்காவையும் இழுத்துக் கொண்டு விழுந்தால், நீங்கள் இன்னும் ஆழமாக அல்லோ விழுவீங்கள். அவன்ர எடைக்கு நல்லாக் கீழேதான் போவீங்கள். பிறகெங்கே தப்பிறது??? :lol::):)

  • கருத்துக்கள உறவுகள்
:lol: பேசாமல் நமீதாவையோ அல்லது சக்கீலா அக்காவையோ கலைஞருக்கு திருமணம் முடித்து வைத்து விடுங்கள். அவரும் சந்தோசப்பட்டமாதிரியும் இருக்கும், தொண்டர்களுக்கும் இன்னொரு புரட்சித் தலைவி கிடைத்த மாதிரி இருக்கும். என்ன நான் சொல்லுறது ?!
  • கருத்துக்கள உறவுகள்

:lol: பேசாமல் நமீதாவையோ அல்லது சக்கீலா அக்காவையோ கலைஞருக்கு திருமணம் முடித்து வைத்து விடுங்கள். அவரும் சந்தோசப்பட்டமாதிரியும் இருக்கும், தொண்டர்களுக்கும் இன்னொரு புரட்சித் தலைவி கிடைத்த மாதிரி இருக்கும். என்ன நான் சொல்லுறது ?!

எந்த புரட்சி ரகு :lol::lol::)

  • கருத்துக்கள உறவுகள்
:lol: அதுதானப்பா,கலியாணம் முடிக்காமலயே பிள்ளை பெறுவது. அம்மா ஜெயலலிதாவைக் கேட்டாச் சொல்லித் தருவா!!!!!

யம்மு அறிக்கை மட்டும்தான் விடவேணும். அறிக்கையிலை சொல்லுற ஒண்டும் செய்யிறேல்லைச் சொல்லிப் போட்டன். இது எப்படியிருக்கு??? (யம்முவின் கருத்துகளை வாசித்து, வாசித்து எனக்கும் அப்படியே எழுத வருகிறது :lol::lol: )

நமீதா அக்காவையும் இழுத்துக் கொண்டு விழுந்தால், நீங்கள் இன்னும் ஆழமாக அல்லோ விழுவீங்கள். அவன்ர எடைக்கு நல்லாக் கீழேதான் போவீங்கள். பிறகெங்கே தப்பிறது???

அட...நான் அறிக்கை மட்டும் தான் விடுவன் அல்லோ.. :o (அதை நிறைவேற்றுவது எல்லாம்)..என் கையில் இல்லை எல்லாம் அவன் செயல் எண்டு சொல்லிடமாட்டன்..(இது எப்படி இருக்கு??) :o ...அச்சோ உங்களுக்கும் என்ன மாதிரி எழுத வருதோ நன்னா இருக்கே..(போற போக்கை பார்த்தா நானும் சூப்பர் ஸ்டார் ஆகிடலாம் போல இருக்கு)... :o

நான் பகிடிக்கு...தமிழ் அச்சு அக்கா..எண்ட கருத்தை வாசிக்கிறவை எல்லாரும் பாவங்கள் தான்..நான் என்ன செய்ய நான் தானே கொழந்தை.. :D

ஓ..நீங்க அப்படி யோசிக்கிறியளோ..நான் ஏன் நமீதா அக்காவை இழுத்து கொண்டு பாயிறன் எண்டு சொன்னனான் எண்டா..அவாவை காப்பாத்தை பலபேர் குதிப்பீனம் அல்லோ :o ..அப்ப நான் அவாவை பிடித்து கொண்டு தப்பிடமாட்டன் இதை தான் சொல்லுறது "ஒரு கல்லில இரண்டு அப்பிள்" எண்டு..(எப்படி நம்ம அறிவு)..இதையும் பகுத்தறிவு எண்டு சொல்லலாம்..ஆனா என்ன ஒருத்தரும் சொல்ல மாட்டீனம்.. :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.