Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்கு வேண்டும் விடுதலை...............

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு வேண்டும் விடுதலை...............

சிறுகதை.....

''இதுக்கு தான் சொன்னனான் இங்கே நான் வரமாட்டேன் என்று இங்கே வந்து இவ்வளவு கஸ்ரப்பட்டும், பயந்து கொண்டும் இருக்கிறத்துக்கு நாங்கள் அங்கேயே இருந்திருக்கலாம்......! இங்க இருந்து ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து பிழைக்கிறத்துக்கு அங்க இருந்து ஒரு நாளில செத்துப்போனாலும் பரவாயில்ல.....'' என்ற படி தாய் தகப்பனைக் கோவித்தபடி உள்ளே இருந்து வெளியே கோபத்துடன் வந்தான் சுரேஸ்.

'' தம்பி கொஞ்சம் நில்லு... ஏன் கோவிக்கிறாய்..உயிருக்குப் பயந்து தானே இங்கே வந்தனாங்கள் அதுவும் உன்னை அங்க வச்சிருந்தா நீ ஏதும் தப்பா முடிவெடுத்திடுவியோ....! எண்டு பயந்துதானே அப்பா இங்க வர முடிவெடுத்தவர். உனக்குத் தெரியும் உன்ர தங்கச்சியும் போன மாசம் தானே சாமத்தியப் பட்டவள் இனி குமர்பிள்ளையையும் அங்க வச்சிருக்கிறது ஆபத்து தானே அதுதானே இங்க உங்களையென்றாலும் காப்பாத்துவம் என்று தானே வந்தனாங்கள்....'' என்று ஒரேயடியாகச் சொல்லி முடித்தாள் தாய் மங்களம்.

''அது சரி அம்மா... நீங்கள் யோசித்தது வேறு ஆனால் இங்கு நடப்பது வேறு, கேள்விப்பட்டிருப்பியள் தானே, இங்க எங்கட ஆட்களுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்று கேள்விப் படுகிறியள் தானே எல்லாம் தமிழருக்கு வந்த சாபக்கேடு....! '' என்று சொல்லிவிட்டு சுரேஸ் வெளியே கிளம்பினான்.

'' தம்பி தூரமே போறான் என்று கேள்...'' என்று தகப்பனின் குரல் கேட்ட சுரேஸ்...

''இல்லை அப்பா... நான் இவன் முரளியைப் பார்த்திட்டு வாறன், சரி நீங்கள் கவனம், வதனியையும் வெளியில விடாதேங்கோ... சரி நீங்கள் உள்ள போங்கோ...'' என்று சொல்லிவிட்டு சுரேஸ் புறப்பட்டான்.

'' நாங்கள் வந்து மூன்று மாதமும் ஆச்சு ஒரு தொழிலும் செய்யேலாம இருக்கு.., வெளியில வீடு எடுக்கேலாமலும் இருக்கு, இந்தப் பெடியனை நினைச்சாய் பயமாய் இருக்கு சேர்க்கைகள் கொஞ்சம் அப்படி இப்படிப் போல இருக்கு என்ன அடுத்து செய்யிறது என்று தெரியேல்ல...'' என்று மங்களம் சலித்துக்கொள்ள..

''சரி கொஞ்ச நாள் இருந்து பார்ப்பம் எதாலும் சரிவந்தால் இருப்பம்..இல்லாட்டி திரும்பி போகவேண்டியதுதான்......!என்றுவிட்டு சரி.....சரி... சாப்பாட்டை போடுங்கோ அவள் பிள்ளை எங்கே அவளையும் கூப்பிடுங்கோ...'' என்றபடி சாப்பிட ஆயத்தம் ஆனான் மணியம்.

அவர்கள் கடந்த மூன்று மாதமாய் இருப்பது இந்தியாவில் மண்டபம் அகதி முகாம். மன்னாரில் போரின் போது அகதியாய் இடம்பெயர்ந்து இந்தியா வந்தவர்கள் இங்கு தமிழ் மக்களுக்கு நடக்கும் இன்னல்களைப் பார்த்து கலங்கிப்போனவர்கள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டுவிட்டதாகவே எண்ணிக்கொண்டார்கள்.

இலங்கைத் தமிழர்கள் என்றால் சரியான கெடுபிடிகளும், அங்கு அதிகாரிகளாக இருக்கும் சிலர் எங்கள் பெண் பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு தூண்டுவதும் அவர்கள் மறுத்தால் அவர்களின் ஆண் சகோதரங்களையோ தகப்பன்மார்களையோ புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனைக்கு என்று கொண்டு சென்று சித்திரைவதைப் படுத்துவதும் என்று பல காலமாக இடம் பெறுவதும் இவர்களுக்கு தெரியவந்த பின்னர் அவர்களின் கவலை பலமடங்கு அதிகரித்தது.

பருவமடைந்து சில மாதங்களே ஆன சங்கவியின் உடம்பில் வெகு விரைவாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பருவ மாற்றங்களால் அவள் உடல் மெருகே அவளின் அழகு கூடிக்கொண்டிருப்பதை கண்டு பூரிப்படைய வேண்டிய பெற்றோர்கள் பூரிப்புக்குப் பதிலாக பயம் தொற்றிக்கொண்டது, காரணம் இங்கிருக்கும் நிலமை.

மறுபுறம் கொடுமை செய்யும் அதிகாரிகளுக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கவெண்டும் என்ற வெறியுடன் சுரேஸ் தனது புது நண்பர்கள் சிலருடன் சில நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக தகப்பன் மணியத்துக்கு மெதுவாகத் தெரியவந்திருந்தது. சுரேஸ் ஏதாலும் எக்குத்தப்பாக செய்யப்போய் இங்கு மாட்டினால் ஆயுள் பூராகவும் ஜெயிலில் தான் என்ற பயமும் அவர்களுக்கு ஏற்பட்டது.

'' இந்தப் பெடியன் எங்கே என்று தெரியேல்ல..., நீங்களும் வதனியும் சாப்பிடுங்கோ... அவன் வந்ததும் நான் சாப்பிடுகிறன்....'' என்றபடி அவர்களுக்கு சோறு பரிமாறினாள் மங்களம். இவர்கள் சாப்பாடு முடித்து எழும்பவும் சுரேஸும் வருவதை கண்ட அவனின் அம்மா..

'' அங்க பிள்ளையும் வாறான், அவனுக்கும் சாப்பாடு போட்டுவிட்டு நானும் சாப்பிடப் போறேன் எனக்கும் பசிக்குது....'' என்றபடி சாப்பாட்டை ஆயத்தப் படுத்தினாள் அவள். சுரேஸுக்கும் தனக்கும் சாப்பாட்டை போட்டுவிட்டு....

''தம்பி அப்படியே கையையும் கழுவிட்டு வா சாப்பிடலாம்..'' என் சுரேஸும் சாப்பிட போய் அமர்ந்தான். அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்க.....

''தம்பி... அப்பாவும் நானும் நினைக்கிறம் திரும்பி ஊருக்கே போகலாமென்று, ஏதாலும் வழியிருந்தால் ஆயத்தப் படுத்தன்.... இங்க இருந்து கொண்டு பயந்து கொண்டு இருக்கேலாது....'' என மங்களம் கூற..

'' இப்ப எண்டாலும் புத்தி வந்ததே....சரி.... நான் ஆயத்தப்படுதிறன்... நீங்களும் ஆயத்தமாய் இருங்கோ எந்த நேரமும் வெளிக்கிடக் கூடியதாய் இவங்களுக்குத் தெரியாம..'' எனச் சொல்லிவிட்டு சுரேஸ் சாப்பாட்டை முடித்துக்கொண்டு படுக்கைக்கு போனான்.

அடுத்த நாள் எல்லாரும் எழும்பி தங்கள் தங்கள் வேலையெல்லாம் பார்த்த பின்னர் இரு அதிகாரிகள் இவர்கள் இருப்பிடத்தை நோக்கி வருவதைக் கண்ட மங்களம் வதனியை உள்ளே போகச் சொல்லவும் அவர்களும் வந்து நாளைக்கு மதியம் உங்கடை மகளுக்கு முதலில் விசாரணை அதன் பின்னர் உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விசாரனையென்றும் சொல்லிவிட்டுப் போக இவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது.

காரணம் அவர்கள் போகும் போது வதனியை கூப்பிட்டு வரும் பொழுது சிறு பிள்ளையாய் இருந்தவ இப்ப வளர்ந்துவிட்டா என ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போகவும் சுரேஸும் வீட்டில் இல்லாத நேரம் இவர்களுக்கு ஒரே பதட்டமாகப் போய்விட்டது.

அடுத்த நாள் விசாரணைக்கு வதனியை அவர்கள் அழைக்க வர தகப்பன் மணியமும் தானும் வருவதாக சொல்ல நாங்களே திருப்பிக் கொண்டுவந்து விடுகிறோம் நீங்கள் பயப்பிடத் தேவையில்லை என அவர்கள் கூறவும் மகள் தனிய வரப் பயப்பிடுகிறா என மணியம் கூறவும், நீங்களும் வரலாம் ஆனால் விசாரணை செய்யும் இடத்தில் வதனி தனியாகத்தான் போக வேண்டும் என அவர்கள் கூறினார்கள். பரவாயில்லை நானும் வருகிறேன் என மணியம் மங்களத்திடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

விசாரணை முடிந்து வெளியே வந்த மகள் ஏதோ பயந்திருந்ததை உணர்ந்த மணியம் என்ன நடந்தது என விசாரிக்க ஒன்றும் இல்லை எனச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனதும் அவசரமாக உள்ளெ சென்றதும் மங்களம் ஏதோ பிரச்சனை போலேஇருக்கு என அறிந்து தொடர்ந்து உள்ளே சென்றாள். தாயை கண்ட வதனி ஓவென அழ ஆரம்பித்தாள் காரணம் கேட்க அவங்கள் தன் கையை பிடித்துச் சேட்டை விட்டதாகவும் நாளைக்குப் பின்னேரம் மறுபடியும் வரவேணும் என்றும் வந்தால் தான் சினிமாவுக்கு கூட்டிப் போவதாகவும் உடுப்புக்கள் வாங்கித்தருவதாகவும் வர மறுத்தால் உன் அண்ணனை கொண்டுபோய் ஜெயிலில் போட்டுவிடுவதாகவும் மிரட்டியதாகச் சொல்லி அழத்தொடங்கினாள்.

இதைக் கேட்ட அவர்களுக்கு முகமெல்லாம் வேர்க்கத் தொடங்கியது இதென்ன கரைச்சல் போக ஆயத்தப் படுத்த முதல் இந்த நாய்களிட்ட மாட்டி விட்டோம் போல இருக்கு இது சுரேஸுக்குத் இதை சொல்ல வேணும் அல்லாட்டி பெரிய பிரச்சனையாகப் போகுதே பிள்ளையாரே நீ தான் எங்களைக் காப்பாத்த வேணும் என கடவுளை வேண்டவும் சுரேஸ் வரும் சத்தம் கேட்டு.....

''சுரேஸ் இங்க வாப்பா..ஒரு அலுவல் ஒரு விசயம் சொல்ல வேணும்...'' எனக் கூப்பிட்டு நடந்ததையெல்லாம் கூற...

'எனக்குத்தெரியும் இப்படி ஏதாலும் நடக்குமென்று ...அதுதான் அன்றைக்கே வேளிக்கிடச் சொன்னனான் கேட்டியள....சரி நில்லுங்கோ வாறன் முரளிட்ட ஒருக்கா போய் வாறன் பயப்பிடவேண்டாம்..'' என்று சொல்லிவிட்டு அவர்களின் பதிலுக்கு கூடக் காத்திருக்காமல் அவசரமாய் வெளிக்கிட்டுப் போனான்.

போய் 1 மணித்தியாலம் கழித்து வந்தவன் அவசரமாக அவர்களைக் கூப்பிட்டு சில திட்டங்களை அவர்களுக்குச் சொன்னான். அதிகாரிகள் வதனியக் கூட்டிப் போகவர அவளை அவர்களுடன் அனுப்பும் படியும் தாய் தகப்பனை வெளியில் போய் தான் ஒழுங்கு செய்த ஆட்டோவில் ஏறிப் போகும் படியும் தான் மிச்ச அலுவல்களை செயற்படுத்துவதாகவும் சொன்னான்.

'' என்ன தம்பி அவளை அவங்களுடன் எப்படி தனியாய் அனுப்புறது என ....? '' மணியம் வினாவ சுரேஸும் கோவமாக...

'' உங்களுக்கு மகளென்றால் எனக்கு அவள் தங்கச்சி....அவளை நான் அவங்களிட்ட விடுவனே, அவங்களுக்கு சந்தேகம் வராமல் இருக்கவும் நீங்களும் இங்க இருந்து சுலபமாக வெளிக்கிடவும் தானே பக்காவா பிளான் போட்டிருக்கிறேன் நீங்கள் சொதப்பிடாதேங்கோ... நான் சொல்லுறபடி செய்யுங்கோ..போதும்..'' என கத்திவிட்டு தாயையும் தகப்பனிடம் சொல்லும் படி சொல்லிவிட்டு உள்ளே போனான்.

'' சரி பிள்ளை நீ கிட.... நாங்கள் எல்லாம் சரியாய் பார்க்கிறம்..''என் அவன் அம்மாவும் அவனிடம் கூறிவிட்டு கிடக்கப் போனாள்.

அடுத்த நாள் வதனியைக் கூப்பிட அதிகரிகள் வர நேரம் நெருங்கி வர இவர்களின் பதற்றம் அதிகரித்தது. சுரேஸும் இவர்களிடம் எல்லாம் கவனம் சொன்னபடி செய்யுங்கோ என்று சொல்லிவிட்டு தன் திட்டங்களை செயற்படுத்தும் முயற்சிக்காய் வெளியே புறப்பட்டுச் சென்றான்.

இவன் போய் சிறிது நேரத்தில் அதிகாரியின் வாகனமும் வர வதனியைப் பெற்றோர்கள் ஆயத்தமாய் இருக்கச் சொல்ல அவர்களும் வந்து மகளைக் கூப்பிடும்படியும் விசாரணைக்கு நேரமாகிவிட்டது என்றும் அழைக்க மகனின் பிளான் பிடியே வதனியை அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள். வாகனம் கண்ணைவிட்டு மறைந்ததும் இவர்களிருவரும் கையில் எடுத்து வைத்திருந்ததை எடுத்துக்கொண்டு மகன் சொன்ன இடத்துக்கு விரைவாக நடந்தார்கள்.

வதனியை ஏற்றிக்கொண்டு போன வாகனம் ஒரு சந்தியால் திரும்ப அந்த வாகனத்துக்கு நேரெதிரே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று நிலை தழும்பி வாகனதுடன் மோத வந்ததை கண்டு வாகனம் பிறேக் அடிக்கவும் ஆட்டோகாரர்களும் நிறுத்திவிட்டு இருவர் வெளியே வந்து அதிகாரியின் வாகனத்தில் இருந்தவர்களைப் பேச இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முட்ட ஆட்டோவில் வந்த இருவர் கையில் வைத்திருந்த ஒரு ஸ்பிறேயை வாகனத்தில் வந்த இருவர் முகத்திலும் ஸ்பிறே பண்ணிவிட்டு ஓர் கறுப்புத்துணியால் அவர்களின் முகத்தை மூடி ஆட்டோப் பக்கமாக இழுத்துச் சென்று ஆட்டோக்குள் ஏற்ற வானுக்குள் இருந்த வதனி வெடுவெடுத்துப் போனாள். இதைக் கண்டு அவள் கத்துவதற்கு முயற்சிக்க ஆட்டோவுக்குள் இருந்த முகமூடி அணிந்திருந்த இன்னுமோர் உருவம் இறங்கி வந்து இவளை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து ஏற்கனவே வந்து நின்ற இன்னொரு அட்டோவில் ஏற்றிக் கொண்டது. வதனி கையை தட்டிவிட்டு கத்த முயற்சிக்கவும்...

''ஏய்.... வதனி கத்தாதை.... நான் உன் அண்ணை சுரேஸ்...சரி ..சரி ..இரு முரளி தான் உன்னை அப்பா அம்மாவிடம் உன்னை கொண்டு போகப் போகிறான் ...'' என்று சொல்லிவிட்டு அதிகாரிகளை மடக்கி ஆட்டோவில் வைத்திருந்த முரளி, கணேஸ் ஆகியோரிடம்..

''முரளி நீ வதனியை கொண்டு போ நானும் கணேஸும் இவர்களைக் கொண்டேய் அங்க சேர்த்திட்டு கெதியெண்டு வாறம்....கவனமாய்.. போ...என்ன..'' .....

என்று சொல்லிவிட்டு மயக்கத்தில் வைத்திருந்த அதிகாரியின் ஆட்கள் இருவரையும் ஏற்கனவே தொடர்பு வைத்திருந்த ஓர் அரசியல் வாதியின் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தார்கள்.

சுரேஸும், கணேஸும் குறிப்பிட்ட படி அவர்களை கொண்டுவந்து சேர்த்ததை கண்ட அந்த அரசியல் தலைவர்...

'' தம்பிமார் வாங்கோ வாங்கோ....எங்கள் மொத்தத் தமிழினமே திரண்டு நின்று போராடுகிற இந்தச் சமயத்தில எங்கடை கலாச்சாரத்தையே அழித்துவிடும் விஷம் போன்ற இப்படிப் பட்ட ஆட்களை அடையாளம் காட்டினதுக்கு.. நன்றி.. இவங்களுக்கு நீங்கள் தண்டனை கொடுக்கப் போய் அதுவே எங்களுடைய தமிழ் நாட்டிலே உங்களின் போராட்டத்துக்கு மறுபடியும் ஓர் பின்னடைவு ஏற்பட்டுவிடக் கூடாது....இவங்களுக்கும், இவன்களை வைத்து தங்களது பாலியல் சேட்டைகளுக்கும் ஆட்களைச் சேர்க்கிற அதிகாரிகளுக்கும் நாங்கள் தண்டனை கொடுக்கிறோம்... மேலும் நாங்கள் உங்கள் விருப்பப்படி நீங்கள் போவதற்கு எல்லா ஒழுங்குகளையும் பண்ணிட்டம்...எல்லாம் ஆயத்தமாய் இருக்கு நீங்கள் சந்தோசமாய் போட்டு வாங்கோ.. விரைவில் தமிழ் ஈழத்தில் சந்திப்பம்....'' என அவர் கூறவும்..

''சரி அண்ணை நாங்கள் போட்டு வாறம் மிக்க நன்றி அண்னை.....'' என்று விட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

மாலையும் சிறிதாக இருளாக மாறிவிட மன்னாருக்கு புறப்படத் தயாராய் இருந்த வள்ளம் நின்ற இடத்துக்கு சுரேஸும், கணேஸும் போய் சேர்ந்ததும் இவர்கள் வந்தத கண்டு சந்தோசத்துடன் முரளி எல்லோரையும் பார்த்து...

'' போட் ரெடி ஏறுங்கோ...கவனம்..விடியிறத்துக்

குள்ள போய் சேர்ந்திடுவியள்..... நான் ஒரு கிழமையில வாறன்... நீங்கள் கவனம்....சரி... மச்சான்..... என்ன பிறகு சந்திப்பம்...'' என்று சொல்லிவிட்டு சுரேஸினதும் கணேஸினதும் குடும்பங்களை ஏற்றிவிட்ட திருப்தியுடன் முரளி திரும்ப சுரேஸும், கணேஸும் முரளியைப் பார்த்து....

'' நீ கவனம் மச்சான் மாட்டீடாதை... இலங்கைக்கு வந்தவுடன் மீண்டும் சந்திப்பம்.....'' எனவும் போட்டும் புறப்படத்தயாரானது.

நேவி போட் வருகுதா என பார்த்துப் பார்த்து முழித்திருந்த கண்களுக்கு அடிவானமும் மெதுவாக சிவக்கத் தொடங்கியதும் அந்த வெளிச்சத்தில் கடல் நீரும் மெதுவாக நச்சத்திரங்களைப் போல் மினுங்கத்தொடங்கியது. கடல் பறவைகளின் சத்தங்கள் மிகவும் அதிகமாகக் கேட்கத்தொடங்கியதும் இன்னும் ஐந்து நிமிடத்தில் கரையில் இறங்கிடுவோம் என்றதும் எல்லோரின் மனதிலும் சந்தோசம் தாய் பூமிக்கு வந்திவிட்டோமே என்று.

போட் நின்றதும் அந்த அதிகாலை வேளையில் சிறிதளவு வெளிச்சத்துடன் போட்டில் இருந்து இறங்கி தமிழீழக் கடலின் குளிர் நீரில் கால் வைத்ததும் சுரேஸின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் கடல் நீரில் கலந்தது. மீண்டும் தான் சொந்த ஈழ மண்ணிற்கு விந்துவிட்ட சந்தோசத்தில் குடுப்பதாருடன் கரை நோக்கி நடக்கவும் ஓரளவு தூரத்தில் பெருமளவு மல்ரி பரல் சத்தங்களும் சில நிமிடங்களின் பின் சரமாரியான ஏகெ எல் எம் ஜி, மோட்டார் குண்டுகள், 50 கலிபர் ஆகிய துப்பாக்கி சத்தங்களையும் தெளிவாகக் கேட்டவன் மல்ரி பரலின் சத்தங்கள் எதிரியின் ஆக்கிரமிப்புக்கான அறிகுறியென்றும் அதன் பின்னான சத்தங்கள் எங்கள் மண்னைக் காக்கவும், மீட்கவும் போராடும் வீரக் குழந்தைகளால் எங்கள் எதிரிக்கு வழங்கப் பட்டுக்கொண்டிருக்கும் அக்கினிப் பரிசானதும் பதிலானதுமான சத்தங்களே என தெளிவாகவே புரிந்து கொண்டாண்

எதிரிக்கு தானும் அங்தப் பரிசுகளை விரைவில் வழங்கவேன்டும் என சிந்தித்த வண்ணம் தனது சுதந்திர சுவாசக் காற்றை சுவாசித்த வண்ணம் தங்கள் வீடு இருக்கும்...?... இருந்த...! நிலம் நோக்கி நடந்தான்....

ஆக்கம்

இளங்கவி.

ம்ம்..எனக்கு வேண்டும் விடுதலை எண்ட கதை மூலம்..ம் பலரின் விடுதலையற்ற வாழ்வை..வை கதையாக்கி அதை நகர்த்திய விதம் அருமை அதற்கு..கு வாழ்த்துகள்..ள்.. :icon_mrgreen:

இவ் கதைகள் எல்லாம் நீங்கள் கேட்டறிந்தவையா அல்லது உங்கள் உற்றார் நண்பர்களுக்கு நடந்தவையா..யா எது எப்படி இருப்பினும்..ம் இவ் கதைகள் போல் ஏறாளம்..ம்.

சில தான் நமக்கு தெரியும்..ம் வாழ்த்துகள்..ள்.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முபேபிக்கு

மிகச் சமீபத்தில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் மண்டபம் அகதி முகாமில் எங்கள் தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுவது மற்றும் இலங்கையரென்றாலே பல கஸ்ரங்கள் கொடுப்பதும் போன்ற செய்தியொன்று ஒளிப்பதிவானது. அதனால் என் மனதில் ஏற்பட்ட தாக்கத்தை சிறிது கற்பனையுடன் கலந்து தந்துள்ளேன்.

ரசித்தமைக்கு நன்றி ஜமுனா.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி இது கற்பனை அல்ல இது தான் நடந்தேறுகின்ற உன்மை நீங்கள் இப்போதுதான் கேள்வி பட்டயல் போல காம உணர்வு கொண்ட சில காட்டி மிராண்டிகளால் இப்படியான சம்பவங்கள் நடந்தேறுகின்றன .

கதை உன்மை தொடரட்டும்

Edited by muneevar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவருக்கு

இந்தச் சம்பவங்கள் பல காலமாய் நடப்பதென்று அறிந்திருந்தும் நான் முதன் முதல் யாழிற்கு வந்து தான் சிறுகதை எழுத்தத்தொடங்கினேன். அந்த நேரத்தில் தான் தமிழ் ஊடகத்திலும் இந்தச் செய்தி வெளியாகியது அதைக் கேட்டது முதல் மனதை உறுத்திக்கொண்டிருந்த விடயத்தை சிறுகதையாக்கி உள்ளேன் சிறு கற்பனையும் கலந்து உதாரணத்துக்கு...'' ஆட்டோவில் அதிகாரியின் ஆட்களைக் கடத்திச் செல்வது போன்ற காட்சிகள்...''.

கருத்துக்கு மிக்க நன்றி முனிவர்.

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.