Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலத்தீரே உறைக்கிறதா உமக்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பத்து லட்சத்திற்கும் மேல் உலகமெல்லாம் பரவிக் கிடக்கிற தமிழினமே..

எங்கள் பணத்தில் நடிகர்கள் வாழ்கிறார்கள் எங்கள் பணத்தில் நடிகைகள் சாப்பிடுகிறார்கள் என ஓயாது புலம்புகிற புலம்பெயர் தமிழனே.. உன் பணத்தை நம்பி அங்கே இரண்டு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர மாட்டாயா..?

அஜித்தையும் அர்சுனையும் உண்ணாவிரதத்திற்கு வரவைப்பதுதான் உன் உயர்ந்த பட்ச சேவையா..? அவர்கள் வருவது தான் உயர்ந்த பட்ச தேவையா..?

புலமெல்லாம் பரவியிருக்கும் தமிழனின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தினமும் ஒரு டொலர் கொடுத்தாலே 2 லட்சம் மக்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு நேர முழு உணவு கிடைக்குமே..

மாதம் முப்பது டொலர்கள் முடியாதா உன்னால்..?

இந்த வரலாற்றின் தேவையை மறந்து அஜித்தோடும் அர்ச்சுனோடும் ஏன் மல்லுக் கட்டுகிறாய்?

ஐநா வோடு மல்லுக் கட்டேன். முடியுமா உன்னால் ?

அழிப்பதற்கு ஆயுதமும் கொடுத்து - சாப்பிடுவதற்கு பிச்சையும் போடுகிறான் அவன்.

அந்த 800 டன் உணவும் வேண்டாம். நாங்கள் தருகிறோம் பணம். நீங்கள் அவர்களுக்கு கொண்டு போய்ச் சேருங்கள் என ஐநாவிடம் பேச முடியுமா உன்னால் ?

அஜித் வரவில்லையென்ற அடுத்த நிமிடம் ஏதேதோ அமைப்புகளின் ஊடாக அறிக்கை விடுகிறாயே.. ஐநா நோக்கி ஒரு அறிக்கையை விடேன்..

அந்த 2 லட்சம் மக்களின் தின உணவுக்கு தேவைக்கு நாங்கள் பொறுப்பு - அதை கொண்டு போய் சேர்ப்பதை உங்கள் பொறுப்பாக்க முடியுமா என ஐநாவைக் கேளேன்.

அதை விடுத்து அஜித்தோடு மெனக்கெட வெட்கமாயில்லையா எனக்கு?

மானமிருந்தால் ஒன்று கூடி அறிவித்துவிடு - நமது நமக்களுக்கு நாம் தருவோம் உணவு. அதை ஐநாவும் செஞ்சிலுவையும் அனுப்பட்டும்.

தினமும் ஒரு டொலர் - நீ விமானநிலையத்தில் - புகையிர நிலையத்தில் மூத்திரம் பெய்ய கொடுக்கும் காசு!

கொடுக்கமாட்டாயா?

ஐநாவோடு பேசு ! உன் என் மக்களுக்கு நீயும் நானும் உணவளிப்போம்.

அதை விடுத்து அஜித்தை வரச்செய்வது தான் உன் இலக்கு என்றால் அவர் வருவதாக அறிவித்து விட்டார்தானே உன்போராட்டம் வெற்றியடைந்தது உலகத் தமிழரின் எழுச்சிக்கு அடிபணிந்தார் என கோசம் போட்டுகொண்டு போய் அவரின் படத்தை பார்..

-- பிரம்மபுத்திரன்..

http://blog.sajeek.com/?p=431

  • Replies 66
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடிக்கு

எல்லாருக்கும் உறைக்கிற மாதிரிச் சொன்னீங்கள் காவடி, எங்கடை காசில் சாப்பிட்டு வளர்ந்த அஜித், அர்ஜுன் போன்றவர் எல்லாம் ஏன் தமிழனுக்காக நடத்தும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேணும் என்ற கேள்வி கேட்டாங்களோ அன்றே அவர்கள் தமிழ் மனங்களில் இருந்து இறந்து விட்டார்கள் / இறந்து விட்டிருக்க வேண்டும்.

இவங்கடை படங்களை திரையிடாமல் தடை செய்த தமிழ் உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள் இந்தத் தீ எல்லா நாடுகளுக்கும் பரவி இவங்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.

எங்கடை போராட்ட வரலாறுகளுடன் ஒப்பிடும் போது இவங்களெல்லாம் புழுவிலும் பார்க்க கேவலமானவர்கள். நாங்கள் திரும்மத் திரும்ப கதைத்து அவங்களை பெரியவங்களாக்கிற நேரத்துக்கு நீங்கள் குறிப்பிட்டதை போல உலக நாடுகள் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு எங்கள் இனத்தை காக்க வழி செய்வோமே....!

இளங்கவி

இளங்கவி நீங்கள் எந்த உலகத்தில இருக்கிறீங்கள் எண்டு தெரிய இல்ல. சினிமா எண்டுறது எங்கட ஆக்களிண்ட வாழ்கையிண்ட ஒரு பகுதி. புலிகள் சார்பான ஊடகங்களில (ரீவி, ரேடியோ) கூட சினிமா பற்றிய விடயங்களை தவிர்க்க முடியாமல் இருக்கிது. இயக்கபாட்டு போகிது பிறகு பின்னால என் மேல் விழுந்த மழைத்துளியே எண்டு சினிமா பாட்டு போகிது. சீரியலுக்கு பிறகுதான் தாயகவலம் போகிது.

முந்தி விசுவுக்கு துரோகி பட்டம் கட்டிச்சீனம். விசுவிண்ட குரட்டை அரங்கம் கனடாவில நடக்ககூடாது எண்டு புறக்கணிப்பு செய்திச்சீனம். ஆனால் அதே விசுவிண்ட குரட்டை அரங்கத்த சனங்கள் கடைகளில எடுத்து பார்க்கிதுகள்.

அவன், இவன் எண்டு சினிமாக்காரரை பேசுறதை நிப்பாட்டிப்போட்டு முதலில உங்களால சினிமா பாட்டு, படம் பார்க்காமல் ஆகக்குறைஞ்சது நாலு நாளைக்கு இருக்க முடியுமா எண்டு முயற்சி செய்து பாருங்கோ. எங்கட ஆக்களால ஏலாது.

இப்ப தமிழ்நாட்டில இருந்துதான் பெரும்பாலான கணனி மென்பொருட்கள் எல்லாம் வருகிது. அவங்கள் தாயகபோராட்டத்துக்கு ஆதரவு தர இல்லை எண்டு சொல்லிப்போட்டு மென்பொருட்களை பாவிக்காமல் இருக்க முடியுமா? தமிழ்நாடு Software Engineersக்கு எதிராக புறக்கணிப்பு செய்ய ஏலுமா?

சும்மா புதுசு புதுசாக முட்டாள்கள் மாதிரி எதிரிகளை உருவாக்காமல் இருக்கிறது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில நடிகர்கள் தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுக்காது இருந்தால் அவர்களுக்கு எதிராகக் கிளம்பிவது இருக்கும் எதிரிகளை அதிகரிக்கும் செயல். அவர்களின் அச்செயலை அம்பலப்படுத்திவிட்டு மௌனமாக அவர்களைப் புறக்கணிப்பதே அறிவார்ந்த செயல். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடிக்கு

எல்லாருக்கும் உறைக்கிற மாதிரிச் சொன்னீங்கள் காவடி, எங்கடை காசில் சாப்பிட்டு வளர்ந்த அஜித், அர்ஜுன் போன்றவர் எல்லாம் ஏன் தமிழனுக்காக நடத்தும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேணும் என்ற கேள்வி கேட்டாங்களோ அன்றே அவர்கள் தமிழ் மனங்களில் இருந்து இறந்து விட்டார்கள் / இறந்து விட்டிருக்க வேண்டும்.

இவங்கடை படங்களை திரையிடாமல் தடை செய்த தமிழ் உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள் இந்தத் தீ எல்லா நாடுகளுக்கும் பரவி இவங்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.

எங்கடை போராட்ட வரலாறுகளுடன் ஒப்பிடும் போது இவங்களெல்லாம் புழுவிலும் பார்க்க கேவலமானவர்கள். நாங்கள் திரும்மத் திரும்ப கதைத்து அவங்களை பெரியவங்களாக்கிற நேரத்துக்கு நீங்கள் குறிப்பிட்டதை போல உலக நாடுகள் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு எங்கள் இனத்தை காக்க வழி செய்வோமே....!

இளங்கவி

உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன், இவன் எண்டு சினிமாக்காரரை பேசுறதை நிப்பாட்டிப்போட்டு முதலில உங்களால சினிமா பாட்டு, படம் பார்க்காமல் ஆகக்குறைஞ்சது நாலு நாளைக்கு இருக்க முடியுமா எண்டு முயற்சி செய்து பாருங்கோ. எங்கட ஆக்களால ஏலாது.

சும்மா புதுசு புதுசாக முட்டாள்கள் மாதிரி எதிரிகளை உருவாக்காமல் இருக்கிறது நல்லது.

நீங்கள் குறிப்பிட்டது போல சினிமா எங்கடை வாழ்க்கையில் பின்னிப் பிணைஞ்சிட்ட ஓர் பொழுது போக்கு அம்சமா இருக்கு, அத்துடன் சில சினிமாவில் இருந்து கற்றுக்கொள்ள நல்ல விடயங்களும் இருக்கு அது மறுப்பதற்கு இல்லை, பார்க்கும் படங்களில் இருந்து அவரவர் எடுத்துக்கொள்ளும் விடயங்களில் அடங்கியுள்ளது. நானொருவனோ அல்லது எம் மொத்தத் தமிழினமோ சினிமா பார்ப்பதை நிறுத்தினால் ஒன்றும் நடந்து விடப்போவதில்லை. வெளி நாடுகளில் நாம் செய்யும் இவர்களுக்கெதிரான போராட்டம் அவர்களை, அவர்களை வளர்த்த சினிமாத்துறைக்கே அடையாளம் காட்ட உதவுமல்லவா....!

தமிழக எழுச்சிக்காகவும், எங்களுக்காக கதைத்து சிறையிலிருப்பது சினிமாக்காறர்கள் சிலர் அதே நேரம் கொல்லப் பட்டுக்கொண்டிருக்கும் ஓர் இனத்துக்காக நாங்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று சொன்னதும் சினிமாக்காறன் தான். எனவே முழுதாக எல்லாரும் சினிமாவை புறக்கணிப்பதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை, தமிழகத்தில் தொடங்கியிருக்கும் எழுச்சி துரோகிகளை இனங்கண்டு தூக்கியெறியும் நாள் விரைவில் வரும்.

எங்களின் இன்றைய கடமை வெளி நாடுகளில் எங்கள் எழுச்சியின் மூலம் நம் போரட்டத்துக்கு பலம் சேர்க்க வேண்டும்.

இளங்கவி

Edited by ilankavi

இதுமாதிரியே மற்றப்பக்கத்தாலையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ. ஏற்கனவே விடுதலைப்புலிகள் தமிழக மண்ணில தமது நாட்டு தலைவரை கொலை செய்து உள்ளார்கள் என்று குற்றச்சாட்டு இருக்கிது. இந்த ஈழத்தமிழரால எங்களுக்கு தொல்லை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அங்க இருக்கிற தமிழ்நாட்டு தமிழனும் வெளியில சொல்லாட்டியும் மனத்தளவில புறக்கணிப்பு செய்தால் அது எப்பிடி இருக்கும்?

தமிழ்நாடு என்பது சினிமா மோகத்தில இருக்கிற பகுதி. எல்லாமே சினிமா சம்மந்தமாத்தான் நடக்கிது. நடிகர் நடிகை சம்மந்தமா ஆயிரத்து எட்டு தொலைக்காட்சிகள் இருக்கிது. நீங்கள் சொல்லக்கூடிய ஆக்களுக்கு ரசிகர்கள் என்று வேற எல்லாம் இருக்கிது. உங்கட புறக்கணிப்புக்கள் கொண்டுவரக்கூடிய எதிர்மறையான பின்விளைவுகள் பற்றி ஆராவது யோசிச்சு இருக்கிறீங்களா?

தமிழ் சினிமாவைச் சேர்ந்த சிலர் தாயகபோராட்டத்துக்கு ஆதரவு தந்து இருக்கின்றார்கள். ஆனால் ஒட்டுமொத்த சினிமா தொகையில இது எத்தனை சதவீதம் எண்டு உங்களுக்கு தெரியுமா? நாளைக்கு அய்யா போய் அம்மா ஆட்சியில வந்தால் என்ன உங்களால செய்ய முடியும்? சரி நாளைக்கு நீங்கள் புறக்கணிக்கிற ஆக்களே தமிழக அரசியலில குதிச்சு முக்கிய புள்ளிகளாக வந்தால் என்ன செய்வீங்கள்?

ஒரு திட்டம் - வேலையை துவங்கிறது எண்டால் அது பற்றிய லாப, நட்டங்கள், எதிர்காலத்தில வரக்கூடிய இடர்ப்பாடுகள் பற்றி எல்லாம் அதை ஆரம்பிக்க முன்னரே நன்குஅலசி ஆராயவேண்டும். அறிவை பாவிக்காது உணர்வை முன்னிலைப்படுத்தி செய்யப்படுகின்ற போராட்டங்கள் ஆபத்தானவை.

இந்தக்காலத்தில ஒரு தேர்தல் எண்டால் - ஒரு அரசியல் நிகழ்வு எண்டால் எத்தின விதமான ஆராய்ச்சிகள் மற்றும் Feasibility Studies செய்யுறாங்கள் எண்டு உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு அரசியல் கட்சியும் எத்தனை உளவியலாளர்கள், சமூக விஞ்ஞானிகளை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஆனால் அப்பிடி ஒண்டும் இல்லாமல் நீங்கள் ஆளுக்கு ஆள் உங்கடபாட்டில புறக்கணிப்புக்கள் எண்டு இறங்கினால் அதால வரக்கூடிய எதிர்மறையான பின்விளைவுகளுக்கு யார் பொறுப்பு?

முதலில் அஜீத், அர்ஜீன் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்திற்கு நாம் ஏன் குரல் கொடுக்க வேண்டுமென்று உண்மையில் சொன்னார்களா?? தாங்கள் அப்படிச் சொல்லவில்லையென்று அஜீத்தும், அர்ஜீனும் மறுத்து இருக்கின்றார்கள். அஜீத்தின் ஏகன் திரைப்படம் வெளிவரும் நேரத்தில் அதன் நாயகன் இப்படியொரு கேள்வியை தற்போதய சூழ்நிலையில் கேட்க முனைவாரா?? இது வேண்டுமென்றே சில விசமிகளால் கிளப்பி விடப்பட்ட புரளியாகவும் இருக்கலாமல்லவா?? இந்தச் செய்தி உண்மையாக இருந்திருந்தால் நடிகர் சங்கத்திற்கோ, தயாரிப்பாளர் சங்கத்திற்கோ நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியிருந்தால் நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ ஏன் இது பற்றி ஒன்றும் கூறவில்லை. இனமானத் தமிழர்கள் பற்றி பேசும் பாரதிராஜா கூட இதுபற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லையே?? அப்படியாயின் எம்மை யாரோ முட்டாள்கள் ஆக்குகின்றார்களா?? உண்மைகளை உணராது நாமும் அதற்கு துணை போகின்றோமா??

அவசரப்பட்டு கருத்துக்களை கொட்டுவதற்கு முன் கொஞ்சமாவது சிந்திப்போமா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர் மறையான விளைவுகளையும் பார்க்க வேண்டும் ஆனால் எதிர்மறையான விளைவுகளை மட்டுமே பார்க்கக் கூடாது, உதாரணத்துக்க் இந்த விவாதத்தில் சம்மந்தப்பட்ட நடிகர்கள் அரசியலில் பெரும் புள்ளிகளாய் வந்தால் எதிராக மாறிவிடுவார்கள் என்று நினைத்து நடவடிக்கை எடுக்க பயந்தால் இப்போதே இந்த விரோதப் போக்கை காட்டுபவர்கள் பெரியளவில் வந்தால் எந்தளவுக்கு காட்டுவார்கள் என்று சிந்திக்கவும் இடமிருகல்லவா...!

அன்று ராஜீவ்காந்தி இலங்கையில் செய்த படுகொலைகளுக்கும் எங்கள் போராட்டத்தை முற்றாக நசுக்கும் நோக்கத்தில் செயற்பட்டதனாலும் தான் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்று எடுத்துக்கொண்டால், எதிர் விளைவுகளை பார்த்து அப்படி ஒரு முடிவு எடுக்கப் படாமல் இருந்திருந்தால் எங்கள் போராட்டம் முழுவதுமாக நசுக்கப் பட்டிருக்கும் என்ற விவாதத்திற்கும் இடமிருக்கல்லவா...!

மேலும் நீங்கள் சொன்ன மாதிரி உளவியலாளர்கள் சமூக விஞ்ஞானிகள் பல அரசியல் கட்சிகளிலும் இருந்தாலும் சில கட்சிகள் தான் முன்னணி வகிப்பதற்கு காரணம் கட்சித் தலமையினதும் இப்படியான உத்தியோகத்தர்களது ஆராய்ச்சிகள், ஆலோசனைகள் என்பவற்றின் அடிப்படையிலேயே. எனவே முறையான தலைமை, அதற்கு பக்க பலமாக இருப்பவர்களாலும் எடுக்கப் படும் முடிவு நல்ல வழியிலேயே நம்மை இட்டுச் செல்லும்.

எனவே நிகழ்கால சம்பவங்களுக்கு எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாண்மையான மக்கள் என்ன நினைக்கிறார்களோஅவர்களின் கைகளிலே விட்டுவிடுவோம்.

இளங்கவி

இளங்கவி,

உங்கள் வாதங்களின் தாற்பரியங்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்கின்றேன். பலவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த புறக்கணிப்புக்கள் பற்றி ஏற்கனவே நாங்கள் கருத்தாடல்கள் செய்து, புறக்கணிப்பு அது இது எண்டு வெளிக்கிட்டு கடைசியில மூக்குடைபட்ட அனுபவத்தில இருந்துதான் நான் கதைக்கின்றேன். சிவாஜி படத்தை புறக்கணித்த, சிறீ லங்கா பொருட்களை புறக்கணித்தல் ஆகிய பகுதிகளுக்க போனால் எங்கட பழைய கருத்தாடல்களை நீங்கள் பார்க்கலாம். அப்போது இருந்த எனது நிலைப்பாட்டுக்கும் இப்போதுள்ள நிலைப்பாட்டுக்கும் இடையில வேறுபாடு இருக்கிது எண்டால் அது முன்பு பெற்ற அனுபவங்களே...

நீங்கள் பெரும்பாமை மக்கள் எண்டு சொன்ன விடயம் பற்றி ஒரு சின்ன விசயம் சொல்லாம் எண்டு நினைக்கிறன். அதாவது ஒரு நேர்த்தியான திட்டம் எண்டால் பொங்குதமிழ், மாவீரர் நினைவு தினம் இவை போன்று சகல தரப்பினருமே ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரு விடயத்தை முன்னெடுப்பது போன்று இருக்கவேண்டும். இதுதான் பெருபான்மை ஆதரவு என்பது.

பொங்குதமிழ் என்பது எங்கட தமிழர் தாயகம், எங்கட அடையாளங்களிண்ட எழுச்சியாகவும், மாவீரர் நினைவு என்பது தாயகத்துக்காக இன்னுயிர்களை நீத்த எமது நண்பர்கள், கூடப்படித்தவர்கள், உறவினர்கள், அயலவர்கள், மற்றும் முகமறியாத தமிழ் உறவுகள், மக்கள் இவர்களுக்காக ஒரு நிகழ்வை மேற்கொள்வது. நாம் ஒரு வேலைத்திட்டம் மேற்கொண்டால் அது இப்படி அமையவேண்டும். இங்கு ஒருவருக்கும் மாற்று கருத்து இல்லை..

ஆனால்... இஞ்ச பெருன்பாமை தமிழர் எண்டு சொல்லிப்போட்டு யார் என்ன செய்கின்றார்கள்? தாங்களே யாராச்சும் எழுந்தமானமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காது ஒன்றை துவங்கிவிட்டு பின்னர் தங்கட இணையங்களில செய்திய பரப்பிவிட்டு பின்னர் அதுகள யாழிலையும் கொண்டுவந்து ஒட்டிப்போட்டு பிறகு தாங்கள் எதேச்சையாக செய்யும் ஒரு விசயத்தை உலகத்தமிழினம் அனைவரும் செய்வதாக காட்டி இப்படி கூத்து ஆடுகின்றார்கள். இது பிழையானது. இதுவே எனது தனிப்பட்ட கருத்தின் சாரம்சம்...

தவிர... வசம்பு நீங்கள் சொன்னமாதிரி... சிலர் தங்கட சில சுயலாபங்களுக்காக கட்டவிழ்த்துவிட்ட புறக்கணிப்பு போராட்டமாக கூட இது இருக்கலாம். யாரோ சொன்ன ஒரு செய்தியை அதன் உண்மை நிலையை அறியாது அப்பிடி சொல்லிப்போட்டாராம் எண்டு கொதித்து விழுகின்றார்கள். உண்மையில அவர் அப்படி சொல்லவில்லை என்பது பல்வேறு ஊடக செய்திகளை பார்க்கும் போது விளங்குகின்றது.

ஆக தமிழ்வின் இணையம் மாத்திரமே ஏதோ உலகத்தமிழர் எண்டு போட்டு முழக்கம் இட்டு இருக்கிது. அதை இங்குள்ள வெட்டி ஒட்டல் மன்னர் ஒருவர் கொண்டு வந்து சொருகி இருக்கிறார். முதலில தமிழ்வின் இணையம் என்பது லங்காசிறி இணையத்தினுடைய ஒரு பகுதி எண்டும், லங்கா சிறி இணையம் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணம் சம்பாதிக்கும் ஒரு இணைய தளம் எண்டும் நான் யாழில யாரோ எழுதி வாசிச்ச நினைவு இருக்கிது.

இப்படி... சில ஊடகங்கள் தாம் பிரபலமாக வருவதற்கு அல்லது சிலர் தமது சுயநலத்துக்காக பிழையான தகவலை ஊடகங்களில பரப்பி இருக்கலாம். இதற்கு - இந்த வேலையை செய்து முடிப்பதற்கு சுயமாக சிந்திக்காத தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகள் நெம்புகோலாக பாவிக்கப்பட்டு இருக்கலாம்.

எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்ன என்றால் இப்படி பொங்குதமிழ் மற்றும் மாவீரர் நிகழ்வு போன்று அனைத்து தமிழரும் மறுகேள்வி இன்றி ஒரே குடையின் கீழ் அணிதிரளும் நிகழ்வுகளுக்கு மட்டுமே எமது ஆதரவை கொடுக்க முடியும். தாயகபோராட்டம் சம்மந்தமான கொள்கை வகுப்பாளர்கள் - அறிஞர்கள் இவ்வாறு எழுந்தமானமாக எதேச்சையாக போராட்டங்களை தூண்டுபவர்கள் பற்றிய எச்சரிக்கையை தமிழ் மக்களிடையில வளர்க்கவேண்டும்.

ஒருவர் ஒன்றை இந்தா புறக்கணி எண்டு சொல்லிறார் என்பதற்காக அவர் சொல்லிறதை கேட்டு தலையாட்டிற நிலையில நாம் இல்லை. அம்பை கண்டுள்ளோம். அந்த அம்பு எங்கிருந்து எய்யப்பட்டது என்பது ஒருவருக்கும் தெரியாத மர்மமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது தலைப்புக்குள்ள வந்து கதைப்பினம் என்று பார்த்த எங்கோ நின்கின்றார்கள்.!

அந்த பந்தியில் எழுதப்பட்ட சில விசயங்கள் பற்றி நாம் சிந்திக்கலாம் என்று நினைக்கிறன். 2 லட்சம் மக்களுக்கு உணவளிக்க முடியா 10 லட்சம் தமிழர்கள் என் அவப்பெயரை நாம் சுமக்க வேண்டுமா?

நாம் யார் காலல் அவர்களின் தேவைகளுக்காய் கிடக்க வேண்டும். நாம் தருகின்றோம் நீங்கள் கொண்டு சென்று கொடுங்கள் என்று சொல்லல் வேண்டும்.

கருத்தாளரின் புதிய சிந்தனை இனியாவது எம்மவர்களை சிந்திக்க தூண்டட்டும்!

ஒண்டும் செய்யாமல் இருக்கிறதால வாற பாதிப்பை விட ஏதாவது விபரீதமாக செய்யுறதால வாற பாதிப்பு அதிகம். அதான் விபரீதமான பகுதி பற்றி அலசி ஆராய்ஞ்சு இருக்கிறம்.

ஒவ்வொருத்தரும் தனிப்பட தாயக மக்களுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாழில நேசக்கரம் எண்டு ஒன்று இருக்கிறது. யாராவது விரும்பினால் தாயக மக்களுக்கு நேசக்கரம் ஊடாக உதவி செய்யலாம்.

தவிர... வசம்பு நீங்கள் சொன்னமாதிரி... சிலர் தங்கட சில சுயலாபங்களுக்காக கட்டவிழ்த்துவிட்ட புறக்கணிப்பு போராட்டமாக கூட இது இருக்கலாம். யாரோ சொன்ன ஒரு செய்தியை அதன் உண்மை நிலையை அறியாது அப்பிடி சொல்லிப்போட்டாராம் எண்டு கொதித்து விழுகின்றார்கள். உண்மையில அவர் அப்படி சொல்லவில்லை என்பது பல்வேறு ஊடக செய்திகளை பார்க்கும் போது விளங்குகின்றது.

ஆக தமிழ்வின் இணையம் மாத்திரமே ஏதோ உலகத்தமிழர் எண்டு போட்டு முழக்கம் இட்டு இருக்கிது. அதை இங்குள்ள வெட்டி ஒட்டல் மன்னர் ஒருவர் கொண்டு வந்து சொருகி இருக்கிறார். முதலில தமிழ்வின் இணையம் என்பது லங்காசிறி இணையத்தினுடைய ஒரு பகுதி எண்டும், லங்கா சிறி இணையம் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணம் சம்பாதிக்கும் ஒரு இணைய தளம் எண்டும் நான் யாழில யாரோ எழுதி வாசிச்ச நினைவு இருக்கிது.

இப்படி... சில ஊடகங்கள் தாம் பிரபலமாக வருவதற்கு அல்லது சிலர் தமது சுயநலத்துக்காக பிழையான தகவலை ஊடகங்களில பரப்பி இருக்கலாம். இதற்கு - இந்த வேலையை செய்து முடிப்பதற்கு சுயமாக சிந்திக்காத தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகள் நெம்புகோலாக பாவிக்கப்பட்டு இருக்கலாம்.

எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்ன என்றால் இப்படி பொங்குதமிழ் மற்றும் மாவீரர் நிகழ்வு போன்று அனைத்து தமிழரும் மறுகேள்வி இன்றி ஒரே குடையின் கீழ் அணிதிரளும் நிகழ்வுகளுக்கு மட்டுமே எமது ஆதரவை கொடுக்க முடியும். தாயகபோராட்டம் சம்மந்தமான கொள்கை வகுப்பாளர்கள் - அறிஞர்கள் இவ்வாறு எழுந்தமானமாக எதேச்சையாக போராட்டங்களை தூண்டுபவர்கள் பற்றிய எச்சரிக்கையை தமிழ் மக்களிடையில வளர்க்கவேண்டும்.

ஒருவர் ஒன்றை இந்தா புறக்கணி எண்டு சொல்லிறார் என்பதற்காக அவர் சொல்லிறதை கேட்டு தலையாட்டிற நிலையில நாம் இல்லை. அம்பை கண்டுள்ளோம். அந்த அம்பு எங்கிருந்து எய்யப்பட்டது என்பது ஒருவருக்கும் தெரியாத மர்மமாக இருக்கின்றது.

இப்படி பல தடவை யாழ்க் களத்திலேயே நடந்துள்ளது. ஆனால் ஒரு முறை தவறு செய்து விட்டோம் இனியாவது முட்டாள்கள் ஆகாமல் இருக்க வேண்டுமென்று இவர்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. இப்படியான விடயங்கள் வரும்போது நானே பலதடவை சுட்டிக்காட்டியும் உள்ளேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் பலர் செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் பந்தயம் கட்டி முட்டாள்கள் ஆகின்றார்கள். [

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கனும் வசம்பு மற்றும் முரளி! அஜித், அர்ஜீன் அப்படி சொல்லவில்லை என்று நீங்கள் வாதிடுவதில் அர்த்தமில்லை. அவர்கள் அப்படி சnhல்லவில்லை எனில் அதைபற்றி அவர்கள் பெரிதாய் அலட்டிக்கொள்ளதேவயில்லை. அவசரப்பட்டு அறிக்கை விட வேண்டிய தேவையும் இல்லை. தமிழ் நாட்டுத் தொலைக்காட்சிகள் அதை எடுத்து பெரிதாய் போட வேண்டியும் இல்லை.

தமிழ்வின்னில் செய்தி வெளிவந்த பின்னே எமக்குள் செய்தி வந்ததே அன்றி அதன் முதலே நக்கீரனின் செய்தி வெளிவந்தது.

யாருக்கும் யாரும் எதிரி இல்லை. நாம் எமக்கு ஆதரவு தருபவர்களை ஆதரிப்போம் என்று சொல்கின்றோம் அதில் உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சினையோ யாம் அறியோம்! தர்க்க ரீதியாக உங்கள் வாதங்கள் குதர்க்கமாக இருக்கின்றது. இந்தியத் தமிழர்கள்hல், ஆட்சியாளர்களால், அரசியல் தலைவர்களால் எமக்கு ஆதரவு தர முடியுமேயோழிய அவர்களால் எமக்கான இறுதி முடிவை பெற்றுத்தர முடியாது. அதற்காக அவர்களை நம்பி இழத்தமிழினம் நிற்காது. எங்கள் மக்கள் பிச்சை கேட்கவில்லை. இந்த உணவு தருகின்றொம் தண்ணி தருகின்றோம் என்று சொல்லி விட்டு போக!

நாம் கேட்பது எம் உரிமை எமது மக்களுக்கு உணவளிக்க போதுமான வளத்தை நாம் கொண்டுள்ளொம் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வதும் விடுவதும் உங்கள் விருப்பம். கனடாவில் கடந்த இரு மாதங்களில் சேகரிக்கப்பட்டவையும், தாயக மக்களுக்காய் பேதங்களை மறந்த உணர்வாளர்களையும் கண்ணுற்ற போது ஈழத்தமிழினம் தன்னைத்தானே நிச்சயம் காப்பாற்றி கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்காது.

அதே நேரம் நீங்கள் சொல்வதுபோல போராட்டத்திடடங்களை எதிர்கால நலன்களை அடிப்படையாக கொண்டு செயலப்படுத்த வேண்டும் என்றாலும் அடிப்படையில் இப்போராட்டங்கள் புலத்தமிழர்களை தவிர வேறுயாரால் நடாத்தப்பட்டாலும் பிரயோசனமற்றவை!

இந்நதிய தமிழீழத்தை அங்கீகரிக்கும் என்று கனவு காணுவதை ஈழத்தமிழர்கள் நிறுத்த வேண்டும்! அமெரிக்காவுக்கு ஒரு கியூபா போல இந்தியாவுக்கு இரு ஈழமிருக்கும் என்பதே திண்ணம்!

நீங்கள் நக்கீரனில் வந்த செய்தியை ஒருமுறை இங்கே இணைத்து விடுவீர்களா?? நக்கீரன் எந்த ஆதாரத்தடன் அந்தச் செய்தியை இணைத்தென்பதாவது உங்களுக்குத் தெரியுமா?? அப்படி நக்கீரனில் வந்த செய்தி ஏன் தமிழ் நாட்டின் ஏனைய ஊடகங்களில் வரிவல்லை?? இவர்களின் மறுப்பறிக்கையை மட்டும் தானே ஏனைய ஊடகங்கள் வெளியிட்டன. தனது படத் தயாரிப்பாளர் நட்டமடைவதை எந்தவொரு நடிகரும் விரும்ப மாட்டார். அதன் அடிப்படையில் செய்தி பொய்யானது என்பதை தெரிவிக்க வேண்டியது சம்பந்தப் பட்ட நடிகரின் கடைமையாகும். அதைத்தான் இரு நடிகர்களும் செய்துள்ளார்கள். அதுபோல் தற்போதய இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் எழுச்சியுற்றிருக்கும் நேரத்தில் எந்தவொரு முட்டாள் நடிகரும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க மாட்டானென்பதும் உங்களுக்குப் புரியவில்லையா??

நாங்கள் இது புரளியென்று வாதிடுவதில் அர்த்தமில்லையென்று நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகின்றீர்கள். இப்போ மீண்டும் ஏகன் ஐரோப்பிய திரையரங்குகளில் வலம் வருகின்றதே எப்படி??

புலம் பெயர்ந்து தேசியத்தை குத்தகைக்கு எடுத்த "........." (விரும்பின சொல்ல போட்டு நிரப்பலாம்) தமிழர்கள், அர்ஜுனும், அஜித்தும் உண்ணாவிரதத்துக்கு போகேலை எண்டு படம் பகிஸ்கரிப்பு எண்டு "அதி புத்திசாலிதனமான" தீர்மானம் எடுத்து தேசியத்தை காத்தவை. அந்த செய்தியின் உண்மை பொய், அஜித் கட்டாயம் போக வேணுமா இல்லையா எண்டு அஜித்தா, இல்லை புலம்பெயர் "தேசிய குத்தகை தரகு வேலை செய்யும் தமிழரா" தீர்மானிக்க வேண்ணும் எண்டத கூட யோசிக்கேல்லை.

எங்கட 10 லச்சம் புலம் பெயர்ந்தவையும், அவையோட பிள்ளை குட்டியளும் அமோகமா தேசிய ஆதரவு கொடுத்து கொண்டு தானே இருக்கினம், இந்த சித்திரத்தில் அஜித்தை துரோகி எண்டவும், உண்ணாவிரததுக்கு போகேல்லை எண்டா படம் ஓட விட மாட்டம் எண்டு பிள்க் மெயில் பண்ணவும்.

நாங்கள் மற்றவர்களை நொட்டை, நொள்ளை சொல்ல முதல் நாங்கள் ஒழுங்க இருக்கிறமோ, எங்கட புள்ளை குட்டியள் ஈழபிரச்சனை பற்றி அறிஞ்சிருக்குதுகளோ, ஒரு 10- 15 வருசத்துக்கு முதல் புலம் பெயர்ந்த போரை நேர சந்திச்ச உங்களாலயே புள்ள குட்டியளுக்கு எங்கட பிரச்சனை பற்றி ஒழுங்க சொல்லி குடுக்க முடியுதில்லை, ஆரும் சிறி லங்காவிலை பிரச்சனையாம், எண்டு கேட்ட எப்பிடியான பதிலை உங்கட புள்ளை குட்டியள் சொல்லும் எண்டதுக்கு ஒரு உதாரணம் கீழ இருக்கு ஒருக்கா வடிவா வாசிச்சு விளங்கி கொள்ளுங்கோ.

மற்றவனை குற்றம் குறை சொல்லேக்க உங்களையும் அடுத்தவன் கவனிச்சு கொண்டிருக்கிறான் எண்டு நினைவிலை வச்சு கொள்ளுங்கோ.

இந்த சித்திரத்திலை புறக்கணிப்பும், கத்தரிக்காயும்...... ஒழுங்கா எங்கட பிரச்சனைக்கு ஆதரவு தான் குடுக்காட்டிலும் பறவயில்லை, அரை வேக்கட்டு தனமா தீர்மானம் எடுத்து உள்ளதையும் கெடுக்காம இருந்தா அதுவே பெரிய காரியம்.

Edisonல தீவாவளிக்கு துணி எடுக்க கடை கடையா ஏறி இறங்கிட்டு இருந்தோம். ஒவ்வொரு கடையிலும் சும்மா உக்காந்துட்டு இருக்கும்போதெல்லாம், சீமான், அமீர்,ஊடகங்கள் வழியா பார்த்த படங்கள் எல்லாம் பார்த்து அதையே அசைப்போட்டுட்டு இருந்தேன். என்னோட 3 சிரிலங்கா தமிழ் ஜோடிங்க எல்லாக் கடைங்களுக்கும் கூடவே வந்துட்டு இருந்தாங்க.25-30 வயசுக்குளே இருக்கலாம். ஒவ்வொரு கடையிலும் நானும் அவுங்களைப் பார்த்து புன்னகைக்கவும், அவுங்களும் சும்மானாச்சும் சிரிச்சு வெக்கிறதுமாவே இருந்துச்சுங்க. அவுங்களுக்குள்ளே குசு குசுன்னு பேசிக்கிறது சிரிச்சிக்கிறதும் ஒரு தனி உலகத்துல வாழ்த்துட்டு இருந்தாங்க.

ஈழத்துல நடக்கிறதப்பத்தி நாம இவ்ளோ சோகப்படறோமே அவுங்களுக்கு ஒன்னுமே இல்லியான்னு மனசுக்குள்ள ஒரு உந்துதல்.

நேராவே போய் "இப்போ சிரிலங்காவுல நடக்கிறதுல உங்களுக்கும் என்னைப்போல வருத்தம் இல்லியா?"ன்னு கேட்டேன்.

"நாங்க எங்கட நாட்டை விட்டு குடும்பத்தோடு வந்து பல வருசமாயிட்டுது"ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு கடைய விட்டு போயிட்டாங்க.

http://vivasaayi.blogspot.com/2008/10/blog-post_28.html

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KULAKADDAN

அஜித், அர்ஜுன் உண்ணாவிரதத்துக்கு போகாதது இப்ப பிரச்சனையல்ல, இலங்கையில் அழிகப் பட்டுக்கொண்டிருக்கும் எங்கள் தமிழினத்துக்காக மொத்தத் திரையுலகமே ஒன்று பட்டு நிற்கும் பொழுது ஏன் நாங்கள் போக வேண்டும் என கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் கேள்வி எழுப்பியதுக்காகத் தான் அவர்களைப் பர்றி இந்தத் சர்ச்சையெழுந்தது எமது மக்களும் உணர்ச்சிவசப்பட்டு கொந்தழித்துப் போனார்கள் காரணம் எங்கட காசால் வளர்ந்தவர்கள் எங்களுக்கு சார்பாக நடத்தப்படும் உண்ணாவிரதத்துக்கு ஏன் போகவேண்டும் என்று கேட்டதற்காக...! ( முரளி குறிப்பிட்டதை போல அறிவு பூர்வமாகச் சிந்திக்கப் படாமல் ஊணர்ச்சிவசமாக எடுக்கப் பட்ட முடிவாக கூட இருக்கலாம்..).

விவாதத்தில் எடுக்கப் படும் விடயங்கள் ஒவ்வொருவரின் கருத்து, சிந்தனை பரிமாற்றங்களாக இருக்க வேண்டுமே தவிர புலம் பெயர்ந்த ஒட்டுமொத்தத் தமிழினத்தில் போடப் படும் பழியாக இருக்கக் கூடாது.

இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்களால் தான் எங்கள் போராட்டம் இவ்வளவு வளர்ந்துள்ளது என்பதையும் மறக்க வேண்டாம்..!

நீங்கள் சந்தித்த மூன்று ஜோடிகளையும் வைத்துக் கொண்டு எல்லாத் தமிழர்களின் மனங்களையும் எப்படி நீங்கள் அறிய முடியும்...?

கடை கடையாய் ஏறி இறங்கி தீபாவளிக்கு உடுப்புக் கடையில் இருந்தபோது சீமான், அமிர் படங்களை பார்த்த போது உங்களுக்கு வந்த சிந்தனை...! ( வசதியான நாட்டில் இருந்தும் கூட எங்கள் நாட்டு மக்களை நினைத்து தீபாவளி கொண்டாட மனமில்லாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள் )

இங்கே பிறந்த பிள்ளைகள் எமது கலாச்சாரத்தை மறக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு உடுப்பு எடுத்துக் கொடுத்துவிட்டு இன்று தீபாவளி என்று கோவிலுக்குக் கூட்டிச் சென்று இறை வழிபாட்டில் அவர்களை ஈடுபடச் செய்வதும், அதே நேரம் தாங்கள் எங்கடை சனங்கல் இப்படிக் கஸ்ரப் படும் போது எங்களுக்கு என்ன தீபாவளி வேண்டிக்கிடக்கு என்று இருக்கும் எங்கள் மக்களையும் உங்களுக்குத் தெரியுமா...?

அஜித்துக்காக எடுக்கப் பட்ட முடிவுதான் தமிழ் தேசியத்தை கெடுக்கும் என்று நீங்கள் சொல்லும் கருத்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மனங்களைக் கெடுத்து தேசிய ஒற்றுமையை கெடுக்க வழிவகுக்கும் என்பதை மறக்க வேண்டாம்..

இளங்கவி

காரணம் எங்கட காசால் வளர்ந்தவர்கள் எங்களுக்கு சார்பாக நடத்தப்படும் உண்ணாவிரதத்துக்கு ஏன் போகவேண்டும் என்று கேட்டதற்காக...! ( முரளி குறிப்பிட்டதை போல அறிவு பூர்வமாகச் சிந்திக்கப் படாமல் ஊணர்ச்சிவசமாக எடுக்கப் பட்ட முடிவாக கூட இருக்கலாம்..).

உங்கட காசலை வளர்ந்த எண்டு வேற யாருக்கும் விசயம் தெரிஞ்ச ஆக்களுக்கு சொல்லி போடதங்கோ சனம் கை கொட்டி சிரிக்கும். நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது.இன்னும் கொஞ்ச நாள் பொனால் புலம்பெயர்ந்த நீங்கள் தான் போராட காசு குடுக்கிறியள், அப்ப நீங்கள் சொல்லுற படி தான் ஈழத்திலை போராட வேணும் எண்டு சொன்னாலும் சொல்லுவியள் போல. இந்த எங்கட காசிலை தான் தமிழ் சினிமாகாரர் வளர்ந்தவை எண்டு குழந்தை தனமா கதைக்கிறதை முதல் நிப்பாடுங்கோ. நீங்களும் பத்தோட பதினைஞ்சா படம் பத்து, வெளி நாடுகளீலை திரையிட்டு உதவி செய்திருக்கிறியள் அந்தளவும் தான். சயந்தனின் இந்த வலைப்பதிவில் உந்த எங்கட காசிலை தான் தமிழ் சினிமாகாரர் வளந்தவை எண்டதை பற்றி ஒரு உரையாடல் இருக்கு ஆர்வம் இருந்தா அதை தேடி கேட்டு போட்டு உந்த பாட்டை இனி பாடுங்கோ.

http://sayanthan.blogspot.com/

நான் அஜித் பிரச்சனையை மட்டும் சுட்டி சொல்ல வில்லை. இது எங்கட அரை வேக்காடு தனமான முடிவுகளுக்கு அண்மைய உதாரணம் எண்டதால அத சொன்னன். எங்கட கடந்த காலத்தை திரும்பி பாத்தா இத போல நிறைய கிடக்கு. நாங்கள் எப்பவும் உணர்வு பூர்வமா சிந்திச்சு பதறி போடு உடைக்கிறதிலை தான் கெட்டிகாறர். பழசிலை இருந்து பாடம் படிச்சத காணேல்லை.

ஒரு விசயம் சொல்ல வேணும் நான் அஜித், அர்ஜுன், விஜய்..... என்டு எந்த ஒரு நடிகரின் ரசிகரும் இல்லை. நான் இருக்கிற ஊரிலை ஒரு தமிழ் திரையரங்கும் இல்லை படம் பாக்க. எப்பாலும் பொழுது போகாட்டி சிடிலை இல்லை இணையத்திலை படம் பாக்கிறது உண்டு.

அடுத்த பகிடி நான் எழுதின கருத்து தான் புலம் பெயர் தமிழ் புத்தி சீவிகளை குழப்ப போகுது? இத போல ஒரு பெரும் நகைச்சுவை உலகத்திலை இருக்கேலாது. ஏதோ நான் சொல்லி தான் எல்லாரும் படப் பகிஸ்கரிப்பை விட்டு படம் பாக்க போன எண்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் சொல்லுவியள் போல.

மற்றது மேற்கோளில் இட்டது, ஒரு வலைப்பதிவில் எடுத்து. என்னுடைய சொந்த கருத்து இல்லை. ஆனால் புலம் பெயர் தமிழர்களின் வாரிசுகள் சிலர் ஈழம் என்றால் என்ன எனும் கேட்கும் அறிவுடன் தான் இருக்கிறார்கள் (உண்மை கசப்பாக இருந்தான் நான் ஒண்டும் சொல்ல எல்லது)

Edited by KULAKADDAN

உங்கட காசலை வளர்ந்த எண்டு வேற யாருக்கும் விசயம் தெரிஞ்ச ஆக்களுக்கு சொல்லி போடதங்கோ சனம் கை கொட்டி சிரிக்கும். நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது.இன்னும் கொஞ்ச நாள் பொனால் புலம்பெயர்ந்த நீங்கள் தான் போராட காசு குடுக்கிறியள், அப்ப நீங்கள் சொல்லுற படி தான் ஈழத்திலை போராட வேணும் எண்டு சொன்னாலும் சொல்லுவியள் போல. இந்த எங்கட காசிலை தான் தமிழ் சினிமாகாரர் வளர்ந்தவை எண்டு குழந்தை தனமா கதைக்கிறதை முதல் நிப்பாடுங்கோ. நீங்களும் பத்தோட பதினைஞ்சா படம் பத்து, வெளி நாடுகளீலை திரையிட்டு உதவி செய்திருக்கிறியள் அந்தளவும் தான். சயந்தனின் இந்த வலைப்பதிவில் உந்த எங்கட காசிலை தான் தமிழ் சினிமாகாரர் வளந்தவை எண்டதை பற்றி ஒரு உரையாடல் இருக்கு ஆர்வம் இருந்தா அதை தேடி கேட்டு போட்டு உந்த பாட்டை இனி பாடுங்கோ.

உண்மை. இந்திய தமிழ்ச் சினிமா எம்மால் பிழைப்பு நடாத்தவில்லை, எம்மவர்கள் தான் இந்திய சினிமாவை வைத்து தொலைக்காட்சியிலும் வானொலியிலும் பிழைப்பு நடாத்துகின்றார்கள்.

ஆனால்... இஞ்ச பெருன்பாமை தமிழர் எண்டு சொல்லிப்போட்டு யார் என்ன செய்கின்றார்கள்? தாங்களே யாராச்சும் எழுந்தமானமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காது ஒன்றை துவங்கிவிட்டு பின்னர் தங்கட இணையங்களில செய்திய பரப்பிவிட்டு பின்னர் அதுகள யாழிலையும் கொண்டுவந்து ஒட்டிப்போட்டு பிறகு தாங்கள் எதேச்சையாக செய்யும் ஒரு விசயத்தை உலகத்தமிழினம் அனைவரும் செய்வதாக காட்டி இப்படி கூத்து ஆடுகின்றார்கள். இது பிழையானது. இதுவே எனது தனிப்பட்ட கருத்தின் சாரம்சம்...

தவிர... வசம்பு நீங்கள் சொன்னமாதிரி... சிலர் தங்கட சில சுயலாபங்களுக்காக கட்டவிழ்த்துவிட்ட புறக்கணிப்பு போராட்டமாக கூட இது இருக்கலாம். யாரோ சொன்ன ஒரு செய்தியை அதன் உண்மை நிலையை அறியாது அப்பிடி சொல்லிப்போட்டாராம் எண்டு கொதித்து விழுகின்றார்கள். உண்மையில அவர் அப்படி சொல்லவில்லை என்பது பல்வேறு ஊடக செய்திகளை பார்க்கும் போது விளங்குகின்றது.

ஆக தமிழ்வின் இணையம் மாத்திரமே ஏதோ உலகத்தமிழர் எண்டு போட்டு முழக்கம் இட்டு இருக்கிது. அதை இங்குள்ள வெட்டி ஒட்டல் மன்னர் ஒருவர் கொண்டு வந்து சொருகி இருக்கிறார். முதலில தமிழ்வின் இணையம் என்பது லங்காசிறி இணையத்தினுடைய ஒரு பகுதி எண்டும், லங்கா சிறி இணையம் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணம் சம்பாதிக்கும் ஒரு இணைய தளம் எண்டும் நான் யாழில யாரோ எழுதி வாசிச்ச நினைவு இருக்கிது.

இப்படி... சில ஊடகங்கள் தாம் பிரபலமாக வருவதற்கு அல்லது சிலர் தமது சுயநலத்துக்காக பிழையான தகவலை ஊடகங்களில பரப்பி இருக்கலாம். இதற்கு - இந்த வேலையை செய்து முடிப்பதற்கு சுயமாக சிந்திக்காத தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகள் நெம்புகோலாக பாவிக்கப்பட்டு இருக்கலாம்.

எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்ன என்றால் இப்படி பொங்குதமிழ் மற்றும் மாவீரர் நிகழ்வு போன்று அனைத்து தமிழரும் மறுகேள்வி இன்றி ஒரே குடையின் கீழ் அணிதிரளும் நிகழ்வுகளுக்கு மட்டுமே எமது ஆதரவை கொடுக்க முடியும். தாயகபோராட்டம் சம்மந்தமான கொள்கை வகுப்பாளர்கள் - அறிஞர்கள் இவ்வாறு எழுந்தமானமாக எதேச்சையாக போராட்டங்களை தூண்டுபவர்கள் பற்றிய எச்சரிக்கையை தமிழ் மக்களிடையில வளர்க்கவேண்டும்.

ஒருவர் ஒன்றை இந்தா புறக்கணி எண்டு சொல்லிறார் என்பதற்காக அவர் சொல்லிறதை கேட்டு தலையாட்டிற நிலையில நாம் இல்லை. அம்பை கண்டுள்ளோம். அந்த அம்பு எங்கிருந்து எய்யப்பட்டது என்பது ஒருவருக்கும் தெரியாத மர்மமாக இருக்கின்றது.

முரளி அங்கிள், :D

உறைக்கிற மாதிரி கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள்..ள் பின்ன எண்ட குரு எண்டா சும்மாவோ..வோ குருவிண்ட வாயிற்கு ஒரு விசுகோத்து கொடுக்கனும்..ம்..(சரி..சரி கோவித்திடாதையுங்கோ).. :D

எனி நான் விசயதிற்குள்ள வாரன்..ன்..

தாங்கள் தமிழ்வின் இணையதளத்தை குறை கூறி இருந்தீர்கள்..ள் அது உங்கள் உரிமை..மை..அது போல் தமிழ்வின் இணையதளதிற்கும் அந்த உரிமை இருக்கின்றது தானே..னே..??..இல்லை எண்டு கூற போறீர்களா..??..

நீங்கள் கூறலாம் ஒரு ஊடகம் சரியான முறையில் தகவலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எண்டு அதனை நான் ஏற்று கொள்கிறன் தமிழ்வின் இணையதளம் இவ் செய்தியை பிரசுரிக்க முன்னதாக நக்கீரனின் இவ் செய்தி வந்து விட்டது என்பதினை அறிந்தேன்..தற்பொழுது "பறவைகள் அண்ணாவும்" அதை பத்தி மேலே குறிபிட்டிருந்தார்கள் அவ்வகையில் பார்க்க போனால்..ல். :)

தாங்கள் ஒரு எழுந்தமான ரீதியில் ஒரு கருத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கீறீர்கள் எண்டு நான் சொல்ல மாட்டன் தமிழ்வின் இணையதளம் கூறினால்..தங்களின் பதில் என்ன..??.. :D

ம்ம்..நீங்கள் குறிபிட்டிருந்தீர்கள் சில ஊடகங்கள் தாங்கள் பிரபலமாவதிற்காக..க பிழையான தகவலை பரப்பி வருவதாக எண்டு..டு ஏற்று கொள்ள கூடிய கருத்து தான்..ன் அப்ப முரளி அங்கிள் சிறிலங்காவின் இனவாத இணையதளங்கள் இல்லாததை சித்தரித்து..து கட்டவிழ்த்து விடும் புளுகளை விடவா எங்களிண்ட ஊடகங்கள் நடந்து கொள்கின்றன எண்டு கேட்டால் தங்களின் பதில் என்ன..??. :(

இப்படி ஏனைய இனவாத ஊடகங்கள் உண்மைக்கு புரம்பாக செய்திகளை கட்டவிழ்கும் போது மெளனித்து விட்டு எங்களிண்ட ஊடகங்கள் எண்டவுடன நொட்டை பிடிப்பது பலருக்கும் வாடிக்கையாக போய் விட்டது..சரி உங்களிண்ட தனிபட்ட சுகந்திரம் அதில் தலையிட நான் விரும்பவில்லை..

சரி அதை விடுவோம்..ம் எங்களிண்ட ஊடகங்கள் ஒவ்வொன்றையும் விமர்சிக்கிறோம்..ம் சரி அவர்கள் ஏதோ தங்களாள் முடிந்ததை திரட்டி தாறீனம் தானே..னே..??..எப்போதாவது நாங்கள் அவையளை உற்சாகபடுத்தி இருக்கிறமோ..?? இல்லை மாறாக..க..

அவர்களை விமர்சிப்பதே எமக்கு வேலையாக போய்விட்டது..து ஆனா கொழும்பில விமானம் வந்து குண்ட போட்டா அங்க போய் தான் பார்க்கிறது என்ன நடந்தது எண்டு.. :D

சரி எங்கையோ வந்து எங்கையோ போயிட்டன்..ன்..மறுபடி விசயதிற்குள் வருகிறேன்..!!

அதை எல்லாம் விடுத்து..து தமிழ்வின் தாங்கள் கூறிய மேற்படி செய்தியை இணைத்தன் பின்..ன் உண்மையான ஒரு அக்கறையாளனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்..(செய்தீர்களோ தெரியவில்லை)..அவர்களிடம் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி இருக்க வேண்டும்..ஆனா தாங்கள் என்ன செய்தனியள் மாறாக..

அதனுடன் தொடர்பு பட்டதாக பல புது திரிகளை ஆரம்பித்து அதனை பத்தி ஆராய தொடங்கினீங்கள்..ள் அப்ப இதை வைத்து நீங்களும் பிரபலமாகலாம் எண்டு நான் நெனைக்கமாட்டன்..அவையள் நெனைத்தா உங்களிண்ட நெலை என்ன சிந்தித்தீர்களோ..ளோ..??. :lol:

மற்றது..து..!!

அவரிண்ட படதிற்கு போகவேண்டாம் எண்டா போகாம விடுறதும்,போறதும் எங்களிண்ட விருப்பம் அது போல் அவர்கள் சொன்னதால நாங்கள் செய்ய கூடாது நாங்கள் இதனை சொல்லி இருந்தால் செய்வோம் எண்ட சிலரின் குறுகிய மனநிலைகளையும் அறிய கூடியதாக இருந்தது..து..

ஆகவே ஒட்டுமொத்தமாக பார்கையில்..ல் இங்கே அஜித் படதிற்கு போறதும் போகாம விடுறதும் பெரச்சினை கெடையாது யார் போட்டான் யார் கொண்டு வந்து ஒட்டினான் என்பதில் தான் எங்களின்ட புலவாழ் டமிழ்ஸ் கரிசணை காட்டீனம் என்பது..து

எங்கிருந்து சிங்களவன் மீது அம்பெய்தாலும்..ம் உடனே பாய்ந்து அவர்களை காக்கும் கோஷ்டியினர் நாங்கள் இருக்கும் போது அம்பிற்கு ஏது வேலை..லை. :D

என்ன குருவே..வே..??

மற்றது அந்த ஊடகம் பணம் சம்பாதிக்கிறது என்பது எல்லாம் எங்களுக்கு தேவை அற்ற விடயம் ஒரு ஊடகம் பிழையான வழி நடத்தலின் கீழ் செல்கிறது என்றால் அதனை மக்கள் உடனே அறிவார்கள்..ள் ஆகவே அவர்கள் பணம் சம்பாதிப்பதும் விடுவதும் வேறு விடயம்..ம் அது பத்தி எங்களுக்கு தேவை இல்லை..லை...

நாளைக்கே நீங்களும் ஒரு இணையதளம் நடாத்தி அதுவும் பிரபலம் ஆகி நாளைக்கு உங்களுக்கும் பணம் வந்தா அதை வேண்டாம் எண்டோ சொல்லுவியள்..??..(இல்லையே)..பிறகென்ன..ன மற்றும் இங்கே அதாவது யாழில் ஒரு கலைஞர் ஏதோ செய்திகளை ஒட்டு போது..து மெளனம் சாதித்து ஏன் அவர்களின் தனிபட்ட விடயங்களிள் தலை இடுகிறீர்கள் எண்ட தொனியில் பேசிய தாங்கள்.. :D

இன்று செய்வது என்ன..ன..??..(முற்று முழுதாக உங்கள் கருத்தியல் நிலையில் இருந்து விலகிறீர்கள்)..

ஆகவே நாங்க எங்களிண்ட வாயிற்குள்ள விசுகோத்தை தின்ன விழுங்க முடியாம வைத்து கொண்டு அடுத்தவையளிண்ட வாயை பார்ப்பது நியாயமா எண்டு..டு

எனக்கு கற்பித்ததே நீங்க தானே குருவே..வே..!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு

மலிபன் விசுக்கோத்து மாதிரி நல்லாத் தானிருக்கு உங்கள் கேள்விகள். ஆனால் பாருங்கோ நக்கீரனில் இந்த விடயம் வந்ததென்பது, அஜீத்தின் மறுப்பறிக்கை நக்கீரனில் வந்ததென்ற செய்தியின் பின் தான் இங்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்திய ஊடகங்களில் ஒரு செய்தியை தவறாகப் பிரசுரித்திருந்தால் அதற்கு பின்பு வருத்தம் தெரிவிப்பார்கள். இப்படி பலதடவை இடம்பெற்றும் இருக்கின்றது. அதுபோல் நக்கீரனும் ஏதாவது வருத்தம் தெரிவித்ததோ தெரியாது. (ஆனால் எம்மவர் ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டதற்காக என்றாவது வருத்தம் தெரிவித்துள்ளார்களா??)இங்கு எவரும் நக்கீரன் வெளியிட்ட செய்தியையோ அல்லது பின்பு நக்கீரன் வெளியிட்ட அஜீத்தின் மறுப்பறிக்கையையோ இணைக்கவில்லை. சிலவேளைகளில் நக்கீரன் அஜீத்தின் மறுப்பறிக்கையுடன் தமது வருத்தத்தையும் தெரிவித்திருக்கலாமல்லவா?? அதுபோல் இவ்விடயம் ஏன் தமிழ் நாட்டின் ஏனைய பத்திரிகைகளில்் வரவில்லை என்பதற்கு எவரும் சரியான பதிலை இதுவரை தரவுமில்லை.

மற்றது நம்மவர் இணையத்தளங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். பொதுவாகவே தற்ஸ்தமிழ் உட்பட பல இந்திய இணையத்தளங்கள் தமக்கென்று செய்தியாளர்களை வைத்துத் தான் பல சிரமங்களின் மத்தியில் செய்திகளை சேகரித்து வெளியிடுகின்றார்கள். ஆனால் எம்மவர் இணையத்தளங்கள் நோகாமல் நொங்க குடிப்பது போல் அவற்றைச் சுட்டு தமது இணையத்தளங்களில் போட்டுவிட்டு கீழே தமது செய்தியாளர் என்று குசும்பு பண்ணுகின்றார்கள். உங்களுக்குத் தெரிந்து புலத்தில் செய்தியாளர்களை வைத்து செய்திகளைச் சேகரிக்கும் எம்மவர் இணையத்தளம் ஒன்றை அறியத் தருவீர்களா?? அப்படி நீங்கள் அறியத் தந்தால் உண்மையிலேயே நானும் பாராட்டக் காத்திருக்கின்றேன்.

ஏனைய இனவாத ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக செய்திகளை கட்டவிழ்கும் போது எம்மவர் இணையத்தளங்களும் அப்படிச் செய்தால் என்ன என்பது போன்ற உங்கள் வாதம் உங்களுக்கே சரியாகப் படுகின்றதா?? அடுத்தவன் தப்பு செய்கின்றான், அதனால் நானும் தப்புச் செய்கின்றேன் என்ற வாதம் யாருக்குப் பலம் சேர்க்கும். எம்மவர் ஊடகங்கள் சந்தேகத்திற்கிடமான செய்திகளை தொடர்ந்து தந்து கொண்டிருந்தால் அவற்றின் நம்பகத் தன்மையே நாளை கேள்விக் குறியாகிவிடும் என்பதை நீங்களுமா உணரவில்லை. எம்மவர் ஊடகங்கள் சரியாகச் செயற்பட்டால் நாம் ஏன் அவற்றைக் குறை சொல்லப் போகின்றோம்.

தாங்கள் தமிழ்வின் இணையதளத்தை குறை கூறி இருந்தீர்கள்..ள் அது உங்கள் உரிமை..மை..அது போல் தமிழ்வின் இணையதளதிற்கும் அந்த உரிமை இருக்கின்றது தானே..னே..??..இல்லை எண்டு கூற போறீர்களா..??..

தமிழ்வின் யாழில எழுதப்படுறது பற்றி தங்கட கருத்தை கூறலாம். அது அவர்கள் விருப்பம். யார் உரிமை இல்லை என்று கூறினார்கள்? ஏற்கனவே யாழ் இணையம் பற்றிய கடுமையான கருத்துக்களை - விமர்சனங்களை சுத்துமாத்து எனும் இணையதளம் சொல்லிவருகின்றது.

தாங்கள் ஒரு எழுந்தமான ரீதியில் ஒரு கருத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கீறீர்கள் எண்டு நான் சொல்ல மாட்டன் தமிழ்வின் இணையதளம் கூறினால்..தங்களின் பதில் என்ன..??..

அவர்களும் அப்படி கூறலாம். இங்கு கருத்து எழுதுவது அனைவருக்கும் பொழுதுபோக்கு என்று நான் ஏற்கனவே கூறி இருக்கின்றேன். இங்கு ஒருவரும் சரியான தகவலின் அடிப்படையில் விஞ்ஞான ஆராய்ச்சி செய்யவில்லை. தத்தம் அபிப்பிராயங்களை கூறிவருகின்றார்கள். தமிழ்வின் இணையதளம் இதுபற்றி வாய்திறக்கவேண்டாம் என்று யார் கூறினார்கள்? அவர்கள் முடியுமானால் தமது விமர்சனத்தை விட்டுப்பார்க்கட்டும்.

ம்..நீங்கள் குறிபிட்டிருந்தீர்கள் சில ஊடகங்கள் தாங்கள் பிரபலமாவதிற்காக..க பிழையான தகவலை பரப்பி வருவதாக எண்டு..டு ஏற்று கொள்ள கூடிய கருத்து தான்..ன் அப்ப முரளி அங்கிள் சிறிலங்காவின் இனவாத இணையதளங்கள் இல்லாததை சித்தரித்து..து கட்டவிழ்த்து விடும் புளுகளை விடவா எங்களிண்ட ஊடகங்கள் நடந்து கொள்கின்றன எண்டு கேட்டால் தங்களின் பதில் என்ன..??.

இந்தக்கேள்விக்கு விடை ஆம் மற்றும் இல்லை. இணையத்தில ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிநிறுவனங்களும், வலைப்பூக்களும் இருக்கின்றன. இதில யார் யார் என்ன என்ன சொல்கின்றார்கள் என்று சரி பிழை பார்ப்பது முடியாத காரியம். ஆனால் இவற்றை யாழில கொண்டு வந்து ஒட்டும்போது கருத்தாடல் தளம் என்றவகையில எமது கருத்துக்களை நாங்கள் கூறுகின்றோம். சிறீ லங்கா சார்பான ஊடகங்கள் விடும் புளுடாக்கள் - உதாரணம் - தினவின - செய்திகள் யாழ் ஊர்ப்புதினத்தில் ஒட்டப்பட்டே வருகின்றன. ஆனந்தசங்கரி ஐயா விடுகின்ற அறிக்கைகள் கூட யாழ் இணையத்தில் ஒட்டப்பட்டே வருகின்றன. இதற்கு இங்கு இருப்பவர்கள் தமது கருத்துக்களை கூறியே வருகின்றார்கள். இங்கு எல்லாரும்தான் புளுடா விடுகின்றார்கள்.

நமது ஊடகங்கள் விடும் புளுடாக்கள் தமிழ் ஊடகங்கள் என்றவகையில நம்பிக்கையீனத்தை உருவாக்கும். சிங்கள ஊடகங்கள் விடும் புளுடாக்கள் மூலம் பெரிய பிரச்சனை ஏற்படப்போவதில்லை. இவை புளுடாவையே பெரும்பாலான சமயங்களில் விடுகின்றன என்பது பலருக்கு தெரியும்.

சரி அதை விடுவோம்..ம் எங்களிண்ட ஊடகங்கள் ஒவ்வொன்றையும் விமர்சிக்கிறோம்..ம் சரி அவர்கள் ஏதோ தங்களாள் முடிந்ததை திரட்டி தாறீனம் தானே..னே..??..எப்போதாவது நாங்கள் அவையளை உற்சாகபடுத்தி இருக்கிறமோ..??

யார் திரட்டி தரச்சொன்னார்கள்? கூகிளுக்கு போனால் தமிழ், ஆங்கிலத்தில் ஓராயிரம் திரட்டப்பட்ட செய்திகளை பெறமுடியும். வெட்டி ஒட்டுபவர்களை உற்சாகப்படுத்த இல்லை என்று கூறுகின்றீர்களா? ஊடகங்கள் என்று கூறுகின்றீர்கள். இங்கு எத்தனைபேர் உண்மையில் செய்தியாளர்களை வைத்து இருக்கின்றார்கள்?

அதனுடன் தொடர்பு பட்டதாக பல புது திரிகளை ஆரம்பித்து அதனை பத்தி ஆராய தொடங்கினீங்கள்..ள் அப்ப இதை வைத்து நீங்களும் பிரபலமாகலாம் எண்டு நான் நெனைக்கமாட்டன்..அவையள் நெனைத்தா உங்களிண்ட நெலை என்ன சிந்தித்தீர்களோ..ளோ..??.

ஆம் நான் பிரபலமாக வருவதற்கு இப்படிச் செய்கின்றேன் என்று யாராவது நினைக்கலாம். அவர்கள் அப்படி நினைத்தால் எனக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. இங்கு யாழில் எட்டாயிரம் கருத்துகளுக்கு மேல் எழுதி இருக்கின்றேன். பல்லாயிரம் மணித்தியாலங்களை இதற்காக செலவளித்து இருக்கின்றேன். இதன் மூலம் எனக்கு ஒரு சதம் பலன் கிடைக்கவில்லை. நான் எனது நேரத்தை இங்கு விரயம் செய்வது தவிர வேறு ஒரு பலனும் இங்கு கிடைக்கவில்லை. கருத்தை கருத்து மூலம் வெல்ல முடியாமல் கருத்து கூறுபவர்கள் குரல்வளையை நெரிப்பவர்கள் இங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள். நான் தொடங்கிய கருத்தாடல் அனைத்திலும் என்னை விமர்சித்தவர்களின் கருத்துக்களை வாசித்துபார்த்தால் இது விளங்கும்.

எங்கிருந்து சிங்களவன் மீது அம்பெய்தாலும்..ம் உடனே பாய்ந்து அவர்களை காக்கும் கோஷ்டியினர் நாங்கள் இருக்கும் போது அம்பிற்கு ஏது வேலை..லை. என்ன குருவே..வே..??

அதாவது டேய்** வே** நா** என்று என்று தும்புபறக்க சிங்களவனை இங்கு பேச இல்லை என்றால் அதற்கு அர்த்தம் அவர்களை பாதுகாப்பது? அதாவது கும்பலில் கோவிந்த போடவில்லை என்று சொல்கின்றீர்களா?

நாளைக்கே நீங்களும் ஒரு இணையதளம் நடாத்தி அதுவும் பிரபலம் ஆகி நாளைக்கு உங்களுக்கும் பணம் வந்தா அதை வேண்டாம் எண்டோ சொல்லுவியள்..??

இல்லை சொல்லமாட்டேன். நான் இப்படி தாயக பிரச்சனை மூலம் பணம் சம்பாதிக்கும் மனநிலையில் இல்லை. அப்படி மனநிலை இருந்தால் பணம் சம்பாதிப்பேன். செத்த பிணங்களுக்கு மேல் ஏறி இருந்து பணம் சம்பாதிக்கும் மனநிலை எனக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை. அப்படியான மனநிலை வந்ததும் நீங்களும் என்னுடன் பங்காளராக சேர்ந்துகொள்ளலாம்.

இன்று செய்வது என்ன..ன..??..(முற்று முழுதாக உங்கள் கருத்தியல் நிலையில் இருந்து விலகிறீர்கள்)..

முன்பு சரி என நினைத்தது தற்போது பிழையாக தெரியலாம். தற்போது சரி என நினைப்பது பின்னர் பிழையாக தெரியலாம். எமது அறிவுக்கு தற்போது சரியெனபடுவதை மாத்திரமே நாம் சொல்லமுடியும். இதற்கு நான், நீங்கள், அசித், அர்சுன் உட்பட அனைவரும் விதிவிலக்கு அல்ல.

ஆகவே நாங்க எங்களிண்ட வாயிற்குள்ள விசுகோத்தை தின்ன விழுங்க முடியாம வைத்து கொண்டு அடுத்தவையளிண்ட வாயை பார்ப்பது நியாயமா எண்டு..டு

நானும் ஒரு விசுக்கோத்து என்பதை ஆரம்பத்திலேயே கூறி இருக்கின்றேன். இங்கு கருத்து எழுதும் அனைவரும் விசுக்கோத்துக்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட காசலை வளர்ந்த எண்டு வேற யாருக்கும் விசயம் தெரிஞ்ச ஆக்களுக்கு சொல்லி போடதங்கோ சனம் கை கொட்டி சிரிக்கும். நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது.இன்னும் கொஞ்ச நாள் பொனால் புலம்பெயர்ந்த நீங்கள் தான் போராட காசு குடுக்கிறியள், அப்ப நீங்கள் சொல்லுற படி தான் ஈழத்திலை போராட வேணும் எண்டு சொன்னாலும் சொல்லுவியள் போல. இந்த எங்கட காசிலை தான் தமிழ் சினிமாகாரர் வளர்ந்தவை எண்டு குழந்தை தனமா கதைக்கிறதை முதல் நிப்பாடுங்கோ. நீங்களும் பத்தோட பதினைஞ்சா படம் பத்து, வெளி நாடுகளீலை திரையிட்டு உதவி செய்திருக்கிறியள் அந்தளவும் தான்.

வெளி நாட்டில் படங்களைத் திரையிடும் உரிமையை எத்தனை ஆயிரம் பவுணோ அல்லது ஈயுறோ கொடுத்து வாங்குகிறார்கள் என்று தெரிந்திருந்தும் எங்களின் காசால் வளர்ந்தவர்கள் என்று சொன்னால் மக்கள் சிரிப்பார்கள் என்று நீங்கள் சொன்ன கருத்துத் தான் சிரிப்புக்கிடமாக உள்ளது (மக்கள் இப்ப மிகவும் விழிப்படைந்து விட்டார்கள்....! )

பத்தோட பதினைஞ்சா £15.00 கொடுத்து படம் பார்த்த முட்டாள்களில் நானும் ஒருவன் தான், ஏதோ வெளி நாடுகளில் அவர்களின் படங்களை திரையிட உதவியவர்களில் நானும் ஒருவன். அது எப்படி தயாரிப்பளர்கள் படங்களை திரையிட சும்மா கொடுக்க வில்லையே..? முழுவதும் என்னை போன்றோரினதும் , உங்களைப் போன்றோரினதும் பணம்...! இந்த அடிப்படை விசயமும் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் தெரியாதது போல் சொல்லுகிறீர்களா...?

மற்றும் அஜித் போன்றவர்களுக்காக தமிழர்களாகிய நாம் விவாதங்களில் ஈடுபட்டு இணையத்தளங்களில் அவர்களின் விளம்பரத்துக்கு உதவாமல் எங்கள் விடயங்களைப் பார்ப்போம்.

இளங்கவி

Edited by ilankavi

வெளி நாட்டில் படங்களைத் திரையிடும் உரிமையை எத்தனை ஆயிரம் பவுணோ அல்லது ஈயுறோ கொடுத்து வாங்குகிறார்கள் என்று தெரிந்திருந்தும் எங்களின் காசால் வளர்ந்தவர்கள் என்று சொன்னால் மக்கள் சிரிப்பார்கள் என்று நீங்கள் சொன்ன கருத்துத் தான் சிரிப்புக்கிடமாக உள்ளது (மக்கள் இப்ப மிகவும் விழிப்படைந்து விட்டார்கள்....! )

பத்தோட பதினைஞ்சா £15.00 கொடுத்து படம் பார்த்த முட்டாள்களில் நானும் ஒருவன் தான், ஏதோ வெளி நாடுகளில் அவர்களின் படங்களை திரையிட உதவியவர்களில் நானும் ஒருவன். அது எப்படி தயாரிப்பளர்கள் படங்களை திரையிட சும்மா கொடுக்க வில்லையே..? முழுவதும் என்னை போன்றோரினதும் , உங்களைப் போன்றோரினதும் பணம்...! இந்த அடிப்படை விசயமும் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் தெரியாதது போல் சொல்லுகிறீர்களா...?

'' தேசியக் கடமை நிதி'' க்காக கிறெடிற் காட்டில் பணம் எடுத்துக் கொடுத்தவர்களும் / கொடுத்துக்கொண்டிருப்பவர்கள

இங்கே பிறந்த பிள்ளைகள் எமது கலாச்சாரத்தை மறக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு உடுப்பு எடுத்துக் கொடுத்துவிட்டு இன்று தீபாவளி என்று கோவிலுக்குக் கூட்டிச் சென்று இறை வழிபாட்டில் அவர்களை ஈடுபடச் செய்வதும், அதே நேரம் தாங்கள் எங்கடை சனங்கல் இப்படிக் கஸ்ரப் படும் போது எங்களுக்கு என்ன தீபாவளி வேண்டிக்கிடக்கு என்று இருக்கும் எங்கள் மக்களையும் உங்களுக்குத் தெரியுமா...?

தீபாவளிக்கு பிள்ளையளுக்கு உடுப்பு எடுத்து குடுத்தா பிள்ளையளுக்கு ஈழம் சம்பந்தாமா அறிவு வருமோ? எனக்கு தெரியாம போச்சு?

'' தேசியக் கடமை நிதி'' க்காக கிறெடிற் காட்டில் பணம் எடுத்துக் கொடுத்தவர்களும் / கொடுத்துக்கொண்டிருப்பவர்கள

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.