Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும் கருணாநிதி

Featured Replies

பா.ம.க மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை? அடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும் கருணாநிதி

[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 05:55.26 PM GMT +05:30 ] [ பி.பி.சி ]

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.

இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக தி.மு.க நடவடிக்கைகள் எடுத்ததைப் போல பா.ம.கவும் மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார். பா.ம.க நிறுவனர் டொக்டர் ராமதாஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ஈழத்தமிழர் பிரச்சனை திசை திருப்பப்பட்டு விட்டது. அனைத்து கட்சி தீர்மானங்கள் கிடப்பிலே போடப்பட்டு விட்டன. நிதி திரட்டல் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சனைக்கான தீர்வாகாது என்று கூறியிருந்தார். முதல்வர் கருணாநிதியையும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் ராமதாசுக்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இலங்கையிலே 2 வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பதும் ஒன்று. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதே அந்த கருத்துக்கு மாறாக மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன.அந்த தீர்மானத்திற்கு இணங்க திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே என்னிடம் பதவி விலகல் கடிதத்தை தந்தார்களே தவிர, மற்ற கட்சி எம்.பி.க்கள் தரவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே எம்.பி.க்கள் பதவி விலகல் முடிவுக்கு மாறாக இருந்த நேரத்தில் நாமே தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டது என்றும், திசைதிருப்பப்பட்டு விட்டது என்றும் சொல்லிக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

நிதி திரட்டுவது குறித்தும் ராமதாஸ் குறைபட்டுக் கொண்டுள்ளார். இலங்கையிலே இருக்கின்ற தமிழர்கள் பசியாலும், பட்டினியாலும் அவதிப்படும்போது அவர்களுக்கு நம்மால்ஆன உதவியை செய்ய வேண்டும் என்று தான் இந்த முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறோம்.என்னதான் செய்வது ..ஆனால் அதற்கும் குறை கண்டால் என்னதான் செய்வது. அந்த பணியிலே ஈடுபடாவிட்டால் அதைக்கூட செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள். இந்த நிவாரண உதவிகள் செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. மன்றம் போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலமாக அனுப்பப்படும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, இலங்கை அரசு மூலமாக அனுப்புவோம் என்று கூறவில்லை.

அனைத்து கட்சி கூட்ட தீர்மானம் தோல்வி என்று கூறியுள்ள டாக்டர் ராமதாஸ், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அளித்த உறுதிமொழிகள் என்ன? மத்திய அரசை செயல்பட வைப்பதில் என்ன சிக்கல் என்றெல்லாம் கேள்விகளை கேட்டு அதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசில் எப்படி திமுக ஒரு அங்கமோ அதைப்போலவே பாமகவும் அதிலே ஒரு அங்கம். அவருடைய மகனே அதில் முக்கிய அமைச்சராகத் தான் இருக்கிறார். எனவே என்னைப் போலவே மத்திய அரசை வலியுறுத்தும் பொறுப்பு டாக்டர் ராமதாசுக்கும் உண்டு.மத்திய அரசுக்கு என்று உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் தான் அவர்களும் இயங்கவேண்டி உள்ளது.

இன்னொரு நாட்டு பிரச்சனையிலே பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிட முடியும். மத்திய அரசின் நிலைமையையும், அதிகார எல்லையையும் நாம் உணர வேண்டாமா? எனவே இலங்கையிலே உள்ள ஒவ்வொரு தமிழனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிட நாம் ஒற்றுமையை கட்டிக்காக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ள அனைத்து கட்சியினரையும் தமிழ் மக்களையும் வேண்டுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/view.php?20IWnp20e...d42oQH3b02PLI3e

நிதி திரட்டுவது குறித்தும் ராமதாஸ் குறைபட்டுக் கொண்டுள்ளார். இலங்கையிலே இருக்கின்ற தமிழர்கள் பசியாலும், பட்டினியாலும் அவதிப்படும்போது அவர்களுக்கு நம்மால்ஆன உதவியை செய்ய வேண்டும் என்று தான் இந்த முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறோம்.என்னதான் செய்வது ..ஆனால் அதற்கும் குறை கண்டால் என்னதான் செய்வது. அந்த பணியிலே ஈடுபடாவிட்டால் அதைக்கூட செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள். இந்த நிவாரண உதவிகள் செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. மன்றம் போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலமாக அனுப்பப்படும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, இலங்கை அரசு மூலமாக அனுப்புவோம் என்று கூறவில்லை

ஏன் கலைஞர் வாய்திறந்து தமிழருக்கு தந்தை செல்வா கேட்ட 50க்கு 50க்கு என்ற தீர்வை இந்திய மத்திய அரசு முன்வைத்து. ஈழத்தமிழரின் துயரை நீக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை உரிமையோடு முன் வைக்கலாம் தானே.

சும்மா ஒப்பாரி வைப்பதன் மூலம் என்ன பயன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பா.ம.க மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை? அடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும் கருணாநிதி

[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 05:55.26 PM GMT +05:30 ] [ பி.பி.சி ]

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.

http://www.tamilwin.com/view.php?20IWnp20e...d42oQH3b02PLI3e

அதைத்தானே நாங்களும் சொல்லுறம்....

உங்கட ஆக்கள் (இந்திய மத்திய அரசு) எப்படி ஆயுதம் கொடுக்கமுடியும்?????????

அது அத்துமீறிய நடவடிக்கை இல்லையா???? அது எந்தமாதிரியான அளவு?????

வர வர கருணாநிதியும் சிங்களவன் மாதிரி பேச ஆரம்பிக்கிறார்....

இதுக்குள்ள தமிழின தலைவர் எண்டு பட்டம் வேற.......

நாசமாப்போக..................

அய்யா. உங்கட ஆட்கள் இந்தியத் தூதரகத்துக்குள்ள இருந்து ஏவுகணை விட்டது என்ன மாதிரி தலையீடு???

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஐயா..

நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். இந்திய அரசை நடுநிலையோடு நடந்து கொள்ள அழுத்தம் கொடுங்கள். அப்படிச் செய்வது ஒன்றும் அயல் நாட்டு விடயத்தில் தலையிடுவது போன்றது அல்லவே..! உங்கள் அரசைத்தானே கேட்கப்போகிறீர்கள். அதற்கு அவர்கள் மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது என்பதுதானே அர்த்தம்? அதை மாற்றும் திறன் கூட உங்களுக்கு இல்லையா?

அதை விடுத்து கையுடைந்தவனுக்கு காலில் கட்டுப் போடுவதுபோலவும் இறந்து கொண்டிருப்பவனுக்கு நெற்றிக்காசு ஒரு ரூபாய் சேர்ப்பது போன்றும் அல்லவா இருக்கின்றன உங்களின் தற்போதைய நடவடிக்கைகள்? :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும்-கருணாநிதி

வீரகேசரி இணையம் 11/3/2008 9:17:37 AM - இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.

கடந்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது, நிவாரண உதவி திரட்டுவதோடு தமிழக முன்முயற்சிகள் நின்றுவிட்டன என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறைகூறி இருப்பதற்கு பதிலளிக்கும் வகையில், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில், கருணாநிதி போர் நிறுத்தம் உட்பட பல்வேறு கோரிக்களை அக்கூட்டத்தில் எழுப்பியதன் காரணமாகவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தன் சக்திக்கேற்றவாறு எடுத்துவருகிறது என்றும், இந்நிலையில் அதற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொண்டால் இந்த அளவாவது இலங்கையை தட்டிக்கேட்பது யார் எனவும் அவர் வினவியிருக்கிறார் என பி.பி.சி தமிழோசை செய்திவெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில், அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது, இடையில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் ஆதரவைக்காட்டுவதிலும் வேகம் குறைந்தது, அந்த நிலையில் தமிழ் நாட்டோர் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கைத் தமிழர் நலனுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எடுத்த முயற்சிகளுக்கும் முழுமையான பலன் கிடைக்கவில்லையென்றும் முதல்வர் வருந்தியிருக்கிறார்.

தவிரவும் அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்கள் படி தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம் பதவி விலகமுன்வந்தார்கள் என்றும், எப்படியாயினும் சரி இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் அனைத்து தமிழர்களின் விருப்பம் என்றும், ஆனால் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதில்தான் வேறுபாடுகள் என்றும் கருணாநிதி மேலும் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இதனிடையே அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கைத்தமிழர்களுக்கு என திரட்டப்படும் நிதி மற்றும் பொருட்கள் விடுதலைப்புலிகளைச் சென்றடைந்துவிடுமோ என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதாகக் கூறி இருக்கிறார்.

தவிரவும் அரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து ஒரு நாள் சம்பளம் கட்டாயமாக பிடிக்கப்பட்டு இலங்கைத்தமிழர்க்கான நிதியில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஆனால் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் நிதி திரட்டப்படக்கூடாது என்றோ அல்லது எவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு அவ்வுதவி திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது என்பது பற்றியோ எதையும் கூறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர் நோக்கர்கள்

அய்யா. உங்கட ஆட்கள் இந்தியத் தூதரகத்துக்குள்ள இருந்து ஏவுகணை விட்டது என்ன மாதிரி தலையீடு???

உது லக்பிமவின் வாராந்த புழுகுகளிலை ஒண்டாக தான் இருக்க வேணும்.. களனிதிசவிலை ( கட்டுநாயக்காவுக்கு அண்மையில்) சுத்திய புலிகள் மீது, கொள்ளுப்பிட்டியில் இருந்து ஏவுகணை வீசியதாக சொல்வது நம்புறது போல இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தானே நாங்களும் சொல்லுறம்....

உங்கட ஆக்கள் (இந்திய மத்திய அரசு) எப்படி ஆயுதம் கொடுக்கமுடியும்?????????

அது அத்துமீறிய நடவடிக்கை இல்லையா???? அது எந்தமாதிரியான அளவு?????

வர வர கருணாநிதியும் சிங்களவன் மாதிரி பேச ஆரம்பிக்கிறார்....

இதுக்குள்ள தமிழின தலைவர் எண்டு பட்டம் வேற.......

நாசமாப்போக..................

அதைத்தானே கேட்கிறோம்

உதவி செய்யும்படியா கேட்கிறோம்

இல்லையே

உபத்திரவம் வரவேண்டாம் என்றதானே கேட்கிறோம்

அடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும்

சரி

ஒரு பக்கத்துக்கு ஆயுதம் கொடுப்பதை நிறுத்துங்கோ

ஓ அவன் வேறு எங்காவது வாங்குவான் என்பீர்கள்

வாங்கட்டும்

எங்களுக்கு ஆயுதம் தரவேண்டாம்

நாங்களும் வேறு எங்காவது வாங்கி கொண்டுவருவதை நீங்கள் தடுக்காமல் இருக்கலாமே.........?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

எனவே சுற்றி மூக்கைத்தொடாமல்

உண்மையை சொல்லுங்கோ தமிழ்நாட்டு சனத்துக்கு

முடிவை அவர்கள் எடுக்கட்டும்

தயவு செய்து...............

தயவு செய்து....................

சும்மா இருக்கும் தமிழ்நாட்டை கோபமூட்டி அடிதடியில்இறங்கவைத்து கெடுத்து பழுதாக்கிப்போடாதையுங்கோ

கெஞ்சிக்கேட்கிறோம்

பின்பு நாங்கள்தான் கெடுத்தோம் என்று கண்ணீர் விடுவதில் பிரயோசனமில்லை

ஐயா கருணா நிதி அவர்களே எங்களுக்கு தேவை ஈழத்தமிழ்மக்களுக்கு ஈழமண்ணில்

உயிர் ஆபத்தில்லாமல் நிம்மதியான வாழ்வு..

அதற்கு அப்பாவி பொதுமக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல் நிறுத்தப்படவேண்டும்..இது எந்த நாட்டிற்கும் பொருந்தும் எப்போதும் இதைத்தான் மனிதவுரிமைகள் சாசனத்தில் உள்ளது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல என்று அ,ஆ படிக்கும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது போல் சொல்கிறோம்....

இதற்கு அண்டை நாடு அந்த நாடு விதி இல்லை....சூழ்ச்சி இல்லை...பதுங்கத்தேவையில்லை..

பக்கத்து வீட்டில் சாதாரண சண்டை நடந்தால் பரவாயில்லை குடும்ப சண்டை..தலையீடு தேவையில்லை... ஆனால் வெட்டுக்கொத்து,கொலை,ஆபத்து காப்பாற்றுங்கள் எனக்கூக்குரல் கேடும் அயல்வீட்டில் நாங்கள் தலையிட முடியாது என்று சொல்லி காயப்பட்டவர்களுக்கு பணமும் காசும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறிவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.