Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலமும் - மாநாடு

Featured Replies

கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனித்தில் எடுக்க வேண்டுமா? ஆட்டிசம் போன்ற உளநலக்குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , புலம்பெயர்ந்து கனடா போன்ற நாடுகளில் வாழும் லற்றின் அமெரிக்க ,சோமாலிய ,சூாடானிய மற்றும் தமிழ் மக்கள் உளநலக்குறைகளை எவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறார்கள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்தது இம்மாநாடு.

Centre for Addiction and Mental Health ஐச் சேர்ந்த Dr.Laura Simich பேசும்போது ஆண்டுக்கு 220 000 வரையான மக்கள் கனடாவில் குடியேறுகிறார்கள். இவர்களில் 50% மக்கள் ஒன்ராரியோ மாகாணத்தில் குடியேறுகிறார்கள். ரொரன்டோ போன்ற மக்கள் செறிந்து வாழும் நகரங்களில் வாழும் மக்களில் தாய் நாட்டில் நடைபெறும் போர் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றைய மக்களோடு ஒப்பிடும்போது அதிகளவான மனவழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் ஆனால் ஏனையவர்களோடு ஒப்பிடுகையில் உளநலம் தொடர்பான பிரச்சனைகளுக்காக ஆலோசனை பெறுவதிலும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் இவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே உள்நாட்டு போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலோடு சொந்த நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் புலம்பெயர்ந்து தாம் குடியேறும் நாடுகளில் தொடர்ந்தும் மனவுளைச்சலுக்குள்ளாக வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறார்

சிநேகிதி உங்களுடன் தொலைபேசியவருக்குத்தான் முதலில் உள நல உதவி தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

20 வருடமாக சூடான் நாட்டில் நடந்துவரும் போர் காரணமாக ரொரன்ரோ போன்ற நகரங்களில் வாழும் மக்களில் அரசாங்க சமூக நல உதவிப்பணம் பெற்று வாழும் மக்களில் 77% ஆனோர் அந்தப் பணம் தங்களுக்குப் போதவில்லை என்று கூறியிருக்கிறார்கள் ஏனெனில் அந்தப் பணத்தில் தங்கள் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்து சூடான் நாட்டில் இன்னலுறும் தங்கங் மக்களுக்குத் தேவைாயான பண உதவிகளைத் தங்களால் செய்ய முடியாதுள்ளதென்று தெரிவித்துள்ளார்கள்.

90களில்கிட்டத்தட்ட 1000-1500 டொலர் வரையிலான அரசாங்கப்பணம் கொடுக்கப்பட்டிருந்தாகச் சொல்கின்றார்கள். பின்னர் தான் அவை குறைக்கப்பட்டனவாம். முதலில் வழங்கப்பட்ட பணத்தினைத் துஸ்பிரயோகம் செய்ததாலும், ரொரன்ரோ மாநகரசபைக்கு ஏற்பட்டசெலவீனங்களைக் குறைக்கவும் தான் இவ்வவை நடவடிக்கை எடுக்கப்பட்டது

ஒரு வகையில் சூடான் மக்கள் போல, நாங்களும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், கனடா அரசின் செயற்பாடு சரியானது என்பேன். ஒரு புலம்பெயர்ந்த ஒரு தனிமனிதனைத் தான், அவனின் நிலை கருதி, காப்பாற்றுமே தவிர, அவர்களின் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், பக்கத்துவீட்டுக்காரரை எல்லாம் காப்பாற்ற வேண்டிய அவசியம் அதற்கில்லையே!

சிநேகிதி உங்களுடன் தொலைபேசியவருக்குத்தான் முதலில் உள நல உதவி தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.

அது என்றால் உண்மை. சினேகிதியோடு பேசிய பின்னர் அவ்வாறன உதவி எல்லோருக்கும் தேவைப்படுகின்றதாம்.. :unsure::o .(சும்மா பகிடிக்கு.. கோவிக்கின்றதில்லை)...

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல இணைப்பு..

இந்த மாநாட்டைப்பற்றிய ஏனைய தகவல்களை தொடர்ந்தும் எழுதுவேன்.ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்லி இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.இன்று Canadian Multicultural Radio (CMR) ல் சமூக நிகழ்வுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஒரு உடல் உள நல ஆய்வு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார் :

ஒருவர் : நீங்களா இப்ப CMR ல் உளநல ஆய்வு பற்றி கதைச்சனீங்கள்

நான் : ஓம் சொல்லுங்கோ.

ஒருவர் : கனடாக்கு பிள்ளையளைக் கூப்பிடத் தெரிஞ்ச எங்களுக்கு எங்கட பிள்ளையயளை எப்பிடி வளர்க்கிறதென்டும் தெரியும். எங்கட பிள்ளையை எப்பிடி வளர்க்கிறதென்டு நீங்கள் எங்களுக்குச் சொல்லித்தரவேண்டாம் சரியோ. உங்கட உளநலத்தை எப்பிடிப் பாதுகாக்கிறதென்டதைப் பற்றி மட்டும் நீங்கள் கவலைப்படுங்கோ.

என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டார். அவர் சொன்னதற்குப் பதில் சொல்லும் வாய்ப்பும் இல்லையெனக்கு.நான் சொன்ன உடல் உள நல ஆய்வுக்கும் பிள்ளை வளர்ப்புக்கு துளியளவும் தொடர்பில்லை அப்பிடியிருந்தும் அவர் என்ன விளங்கி அவர் அப்படிச் சொன்னாரோ அது அவருக்கு மட்டும்தான் வெளிச்சம்.

அதுசரி சினேகிதி... உங்கட தொலைபேசி இலக்கம் இவருக்கு எப்படி தெரிஞ்சது? உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌வ‌ரோ? :unsure:

இதே தொலைபேசியவர் உங்களிடம் கேட்டதை டொக்ரர் லோறாவிடம் கேட்கச்சொன்னால் தலை தெறிக்க ஓடியிருப்பார். எங்கட ஆக்களின்ர வீரமெல்லாம் எங்கட வட்டத்துக்குள்ளதான். :o

  • கருத்துக்கள உறவுகள்
32% மக்கள் மிகவும் குறைந்தளவு ஆங்கிலம் பேசுபவர்கள்.33% மக்கள் மனவுளைச்சலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களைச் சந்தித்திருக்கிறார்கள். 36%மக்கள் PTSD ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள
  • தொடங்கியவர்

மிக நல்ல இணைப்பு..

அதுசரி சினேகிதி... உங்கட தொலைபேசி இலக்கம் இவருக்கு எப்படி தெரிஞ்சது? உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌வ‌ரோ? :unsure:

இதே தொலைபேசியவர் உங்களிடம் கேட்டதை டொக்ரர் லோறாவிடம் கேட்கச்சொன்னால் தலை தெறிக்க ஓடியிருப்பார். எங்கட ஆக்களின்ர வீரமெல்லாம் எங்கட வட்டத்துக்குள்ளதான். :o

\\ஒரு உடல் உள நல ஆய்வு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார் :\\

ஆய்வுக்கு ஆக்கள் தேவை என்று சொல்லி தொடர்புகளுக்கு ஒரு தொலைபேசி இலக்கம் குடுத்திருந்தேன்.

  • தொடங்கியவர்

90களில்கிட்டத்தட்ட 1000-1500 டொலர் வரையிலான அரசாங்கப்பணம் கொடுக்கப்பட்டிருந்தாகச் சொல்கின்றார்கள். பின்னர் தான் அவை குறைக்கப்பட்டனவாம். முதலில் வழங்கப்பட்ட பணத்தினைத் துஸ்பிரயோகம் செய்ததாலும், ரொரன்ரோ மாநகரசபைக்கு ஏற்பட்டசெலவீனங்களைக் குறைக்கவும் தான் இவ்வவை நடவடிக்கை எடுக்கப்பட்டது

ஒரு வகையில் சூடான் மக்கள் போல, நாங்களும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், கனடா அரசின் செயற்பாடு சரியானது என்பேன். ஒரு புலம்பெயர்ந்த ஒரு தனிமனிதனைத் தான், அவனின் நிலை கருதி, காப்பாற்றுமே தவிர, அவர்களின் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், பக்கத்துவீட்டுக்காரரை எல்லாம் காப்பாற்ற வேண்டிய அவசியம் அதற்கில்லையே!

அது என்றால் உண்மை. சினேகிதியோடு பேசிய பின்னர் அவ்வாறன உதவி எல்லோருக்கும் தேவைப்படுகின்றதாம்.. :unsure::o .(சும்மா பகிடிக்கு.. கோவிக்கின்றதில்லை)...

இங்குள்ள ஒரு உளவியல் நிபுணரிடம் போய் என்னால தாய்நாட்டில் உள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது. அவர்களைப் பற்றி கவலையே எனக்குப மனவழுத்தத்தை தருகிறது என்று சொன்னாராம் அதறக்கு அந்த உளவியல் ஆலோசகர் என்னால் உங்களை மட்டும்தான் குணப்படுத்த முடியுமென்று சொன்னாராம். அதைப்போலத்தான் கனடா அரசாங்கம் ஊhரிலுள்ளவைக்கெல்லாம் சேர்த்து சமூகநல உதவித்தொகையை வழங்க முடியாதென்பது. டொக்டர் லோரா இதைச் சொன்னதற்கான காரணம் ஒரு நாட்டில் அகதிகளாக வந்திருக்கும் மக்களுக்கு உளநல ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள் மேம்போக்காக விட்டேற்றித்தனமாக உங்களை மட்டும்தான் குணப்படுத்த முடியும் என்று சொல்லாமல் நோயாளிகளின் சிந்தனையோட்டத்தை புரிந்துகொண்டு அவர்கள் என்ன மாதிரியான சூழலில் நாட்டை விட்டு வந்திருக்கிறார்கள் ஏன் அவர்கள் அங்குள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் அவர்களுடைய பின்புலம் போன்றவற்றை அறிந்துகொண்டு ஆலோசனை வளங்கவேண்டும் என்று அறிவுறுத்தவே அப்படிச்சொன்னார்.

சிநேகிதி உங்களுடன் தொலைபேசியவருக்குத்தான் முதலில் உள நல உதவி தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.

வசியண்ணா தூயவனண்ணா சொல்லியிருக்கிறதையும் ஒருக்கா வாசியுங்கோ.

நல்ல இணைப்பு சினேகிதி. மக்கள் உதவி பெறாமைக்கு காரணம் நோய் பற்றிய அறிவின்மை. அத்தோடு மொழியும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

நுணாவிலான் மொழி ஒரு தடையாக இருக்காதென்று நம்புகிறேன் ஏனெனில் அநேகமான உளவியல் ஆலோசனை மற்றும் தன்னார்வுத்தொண்டர் அமைப்புகளில் தமிழ் மொழியில் சேவையாற்றுவோர் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் மக்களிடையே ஆலோசனைக்குச் செல்பவர்கள் எல்லாரும் பைத்தியம் என்ற ஒரு எண்ணம்(taboo) இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எங்கள் மக்களிடையே ஆலோசனைக்குச் செல்பவர்கள் எல்லாரும் பைத்தியம் என்ற ஒரு எண்ணம்(taboo) இருக்கிறது.

இப்பிடிச் சொல்லியே ஆக்களைப் போகவிடாமல் பண்ணி, கடைசியில பெத்த பிள்ளையளையே கொல்லுற அளவுக்கு எல்லாம் முத்திப் போகுது..! :unsure:

  • தொடங்கியவர்

இது ஒரு உதாரணம் டங்குவார்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=47129

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.