Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் எம்.பிக்கள் மாநாடு-லண்டன் செல்லும் வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எம்.பிக்கள் மாநாடு-லண்டன் செல்லும் வைகோ

சனிக்கிழமை, நவம்பர் 22, 2008

சென்னை: லண்டனில் தமிழ் பேசும் நாடாளுமன்ற எம்.பிக்களின் கூட்டமைப்பின் மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 24ம் தேதி லண்டன் செல்கிறார்.

லண்டனில், தமிழ் பேசும் நாடாறுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் எம்.பிக்கள் பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த அமைப்பின் சார்பில் வருகிற 26ம் தேதி லண்டனில் மாநாடு நடைபெறுகிறது. இதில் வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார். இதற்காக அவர் பொடா நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார். பொடா கோர்ட்டும் வைகோ லண்டன் செல்ல அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து 24ம் தேதி காலை அவர் சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டை முடித்துக் கொண்டு 30ம் தேதி சென்னை திரும்புகிறார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தமிழ் பேசும் எம்.பிக்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் மாநாட்டுக்குப் போறதுக்கும் பொடா அனுமதி வேணுமோ.

அப்ப தமிழ் பிரதிநிதிகள் எல்லாருமே இந்தியாவைப் பொறுத்த அளவில பயங்கரவாதியள்தான் போலடக்குது.

ஒவ்வொருவரையும் பார்த்து பொடா "சரி போடா" எண்டு சொல்லவேணுப் போல

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.???????????????????

தமிழ் எம்.பிக்கள் மாநாடு-லண்டன் செல்லும் வைகோ

இந்த கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார். இதற்காக அவர் பொடா நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார். பொடா கோர்ட்டும் வைகோ லண்டன் செல்ல அனுமதி வழங்கியது.

சிரிப்பதா அழுவதா எண்டு தெரியவில்லை.! :unsure:

Pro-LTTE stand: Denied visa, Vaiko cancels trip to London

CHENNAI: MDMK leader Vaiko was on Sunday denied visa to travel to London apparently for his pro-LTTE stand, forcing him to cancel his air ticket for Monday.

While British Deputy High Commission officials here remained tight-lipped on the issue, police sources said that Vaiko cancelled his ticket following "denial of visa".

They said the MDMK leader was denied visa for his pro-LTTE stand as the militant organisation was also banned in Britain. The vociferous supporter of the LTTE was to leave for London on November 24 to take part in a meeting of Tamils.

Vaiko, along with party presidium chairman M Kannappan, was arrested recently in Chennai for making pro-LTTE speeches during a meeting and released on bail after the government did not press for extension of their remand.

http://timesofindia.indiatimes.com/Pro-LTT...how/3747474.cms

Pro-LTTE stand: Denied visa, Vaiko cancels trip to London

CHENNAI: MDMK leader Vaiko was on Sunday denied visa to travel to London apparently for his pro-LTTE stand, forcing him to cancel his air ticket for Monday.

While British Deputy High Commission officials here remained tight-lipped on the issue, police sources said that Vaiko cancelled his ticket following "denial of visa".

They said the MDMK leader was denied visa for his pro-LTTE stand as the militant organisation was also banned in Britain. The vociferous supporter of the LTTE was to leave for London on November 24 to take part in a meeting of Tamils.

Vaiko, along with party presidium chairman M Kannappan, was arrested recently in Chennai for making pro-LTTE speeches during a meeting and released on bail after the government did not press for extension of their remand.

http://timesofindia.indiatimes.com/Pro-LTT...how/3747474.cms

தலைப்பை மாற்றவேண்டியதுதானே............

தலைப்பை மாற்றவேண்டியதுதானே............

விசா மறுப்பு: லண்டன் பயணத்தை ரத்து செய்தார் வைகோ

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு லண்டன் செல்லவிருந்த மதிமுக பொதுச்செயலர் வைகோ விசா மறுக்கப்பட்டதால் தனது லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

வைகோவுக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதால் வைகோவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவிருந்த குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள வைகோ நவம்பர் 24ல் லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

http://www.tamilwin.com/

லண்டனில், தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் எம்.பி.க்கள் பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் வரும் 26ஆம் தேதி லண்டனில் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும்படி வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பொடா நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார் வைகோ. பொடா கோர்ட்டும் வைகோ லண்டன் செல்ல அனுமதி வழங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் வைகோவுக்கு விசா கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வைகோவுக்கு விசா மறுக்கப்பட்டதாக செய்தி பரவியது. இதுகுறித்து பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

எனினும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் பேசிவருவதால், வைகோவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று வைகோவுக்கு லண்டன் மாநாட்டில் கலந்துகொள்ள பிரிட்டிஷ் தூதரகம் விசா வழங்கியது. அதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி 24ம் தேதி இரவு 8.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார் வைகோ. ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அவரை விமானநிலையம் சென்று வழி அனுப்பி வைத்தனர்.

வைகோவின் குரல் உலகத் தமிழரங்கில் மட்டுமல்ல, ஏனையவர்கள் விளங்கிக் கொள்வதற்காகவும் எமக்காக ஒலிக்கட்டும். வாழ்த்துக்கள்.

விசா கிடைத்தது-லண்டன் கிளம்பினார் வைகோ

சென்னை: தமிழ் பேசும் எம்.பிக்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று மாலை லண்டன் கிளம்பினார்.

லண்டனில் உள்ள தமிழ் பேசும் எம்.பிக்கள் கூட்டமைப்பின் சார்பில், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள வருமாறு வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து திங்கள்கிழமை லண்டன் செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தார் வைகோ. ஆனால் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்று கூறி வைகோவுக்கு விசா மறுக்கப்பட்டது. இதையடுத்து தனது விமான டிக்கெட்டை வைகோ ரத்து செய்தார்.

இதைத் தொடர்ந்து லண்டன் கூட்டம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடப்பதல்ல, வைகோ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல என்று இங்கிலாந்து தூதரகத்திடம், கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் விளக்கினர்.

இதைப் பரிசீலித்த இங்கிலாந்து தூதரகம் அதில் திருப்தி அடைந்து வைகோவுக்கு விசா வழங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை லண்டன் கிளம்பினார் வைகோ.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை துணைத் தூதரகம் உள்ளிட்ட சில சக்திகள், எனது லண்டன் பயணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சித்தன. நான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை அந்த சக்திகள் விரும்பவில்லை.

இங்கிலாந்து எம்.பிக்கள் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ளத்தான் நான் அங்கு போகிறேன். அவர்களது அழைப்பின் பேரில்தான் போகிறேன்.

அதைத் தடுக்க சிலர் முயன்றனர். ஆனால் எனது நலம் விரும்பிகள் சிலர் விசா கிடைக்க வழி செய்தனர்.

இதேபோல, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நார்வே அரசு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள நான் சென்றபோது அப்போதும் சில சக்திகள்

என்னைத் தடுக்க முயன்றன.

ஆனால் நார்வே தூதரின் தலையீட்டால் எனக்கு விசா கிடைத்தது. நானும் கூட்டத்தில் பங்கேற்றேன்.

நான் மதுரையிலிருந்து இன்று காலை (நேற்று) திரும்பினேன். அதற்கு முன்பே நான் இதைக் கூறியிருந்தால், எனது பயணத்தை தடுக்க மீண்டும் அந்த சக்திகள் முயன்றிருக்கும் என்றார் வைகோ.

நவம்பர் 30ம் தேதி வைகோ சென்னை திரும்புகிறார்.

http://thatstamil.oneindia.in/news/2008/11...mils-issue.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்.

லண்டன் இன்னும் தமிழ் உணர்வாகளுக்கு இரும்பு கதவு போடவில்லை.

எனக்குத் தெரிய கனடா தான் இந்த விடயத்தில் மிலேச்சத்தனமான கொள்கையை கடைப்பிடிக்கும் நாடாக உள்ளது.

1. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வரத் தடை (இந்தியாவில் கூடத் தடையில்லை என்பது குறிப்பிடப் படவேண்டியது)

2. கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின வரத் தடை

3. ஏன் பக்கத்து நாடான அமெரிக்காவில் இருக்கும் வழகறிஞர் உருத்திரகுமாரன் கூட வரத் தடை.

  • கருத்துக்கள உறவுகள்

வானம்பாடியரைத் இத்தலைப்பில் காணவில்லையே ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.