Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் 40,000இற்கும் மேற்பட்ட மக்களுடன் தேசிய நினைவெழுச்சி நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் உணர்வாளர்கள் , கூடி தமிழீழத்தின் வித்தாகி வீழ்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடைபெற்ற நிகழ்வுகளின் போது, இயக்குனர் சீமானின் உரை இடம் பெற்றது. சற்றுமுன் மாவீரர் நினைவு நிகழ்வு நடைபெறும் எக்செல் மண்டபத்தில் உணர்வுபூர்வமாகக் குழுமியிருந்த தமிழ உணர்வாளர்களின்

பலத்த ஆரவாரத்தின் மத்தியில் ஒலி வடிவாக நிகழ்த்தப்பட்ட இயக்குனர் சீமானின் உரையை இங்கே கேட்கலாம்.

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266

பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாள் 2008 நிகழ்ச்சிகள் அந்நாட்டின் மிகப்பெரிய உள்ளரங்கமான ExCel மண்டபத்தில் நண்பகல் 12:00 மணிக்கு அக வணக்கத்துடன் ஆரம்பமாகின.

அக்கினிக் குழந்தைளான மாவீரர்களுக்கு வணக்கம் செய்வதற்காக காலை 10:00 மணிமுதலே 40,000 இற்கு மேற்பட்ட மக்கள் மண்டபத்தை சென்றடைந்துள்ளனர்.

ஈகச்சுடரை மாவீரர் லெப்.கேணல் வைகுந்தனின் தாயாரான திருமதி யோகராணி மனோகரராசா ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து, மண்டபம் இருளில் ஆழ சுடர்வணக்கம் நடைபெற்றது.

மிகநீண்ட வரிசைகளில் மக்கள் ஒரு மணிநேரத்திற்கு மேலாகக் காத்திருந்து மலர்வணக்கம் செலுத்தினர்.

இடையிடையே கவிதைகள் மற்றும் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் தமிழீழம் மலர்வது உறுதி : பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தமது உயிர்களை துச்சமென மதித்துப் போராடிய எமது தம்பி, தங்கையரை நினைவுகூரும் மிகவும் முக்கிய நாள் இன்றைய நாள் என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்தார்.

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் (தேசிய நினைவெழுச்சி நாள்) நிகழ்வில் ஒலிவடிவில் இடம்பெற்ற பழ.நெடுமாறன் அவர்களது உரையில் அவர் இதனைத் தெரிவித்திருப்பதாக, பிரித்தானியச் செய்தியாளர் கூறினார்.

பல்வேறு நாடுகளின் உதவியுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் போரை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தகர்த்தெறிந்திருப்பதாக அவர் கூறினார்.

உலகத் தமிழர்களின் விடிவுக்கான போராட்டம் ஈழத்தில் நடைபெறுவதாகவும், இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதும் உலகத் தமிழினம் தலைநிமிர்ந்து வாழும் எனவும் அவர் கூறினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில், அவரது தலைமையில் சிங்களப் படைகள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டு, தமிழீழ விடுதலை விரைவில் மலரும் என நம்பிக்கை வெளியிட்ட பழ.நெடுமாறன் அவர்கள், தலைவருக்கு அனைத்து வகையிலும் மக்கள் துணை நிற்க வேண்டும் என மீண்டும் மீண்டும் தனது உரையில் வலியுறுத்திக் கூறினார்.

பிரித்தானிய பழமைபேண்வாதக் (Conservative) கட்சியின் இல்பேட் தெற்கு வேட்பாளர் டோபி பொன்டில் உரையாற்றினார். அவர் தனதுரையில் தமிழ் மக்களின் ஒருமைப்பாடு பற்றிப் பேசினார்.

இவரைத் தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உரையாற்றியதுடன், நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பிரித்தானிய நினைவெழுச்சி நாளில் தற்பொழுது சிறப்புரையாற்றிக்கொண்டிரு

சிங்கள அரசு அனைத்துலக நாடுகளின் உதவியுடன் போரை முன்னெடுப்பதால், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசுடன் மட்டுமன்றி, அனைத்துலகத்துடன் போரிட்டு வருவதாக, தமிழன உணர்வாளர் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் (தேசிய நினைவெழுச்சி நாள்) நிகழ்வில் ஒலிவடிவில் இடம்பெற்ற சீமானின் உரையில் அவர் இதனைக் கூறியிருப்பதாக, பிரித்தானியச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஒப்பற்ற தலைவரின் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருவதாகவும், இந்த விடுதலைப் போராட்டம் தலைவரது காலத்தில் நிச்சயம் வெற்றிபெறும் எனவும் சீமான் உறுதியாகக் கூறினார்.

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாற்றுக் கடமை காத்திருப்பதாகவும், அதுவே இன்று அனைவரும் செய்ய வேண்டியது எனவும் சீமான் தனதுரையில் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் பல்வேறு தடைகளையும் தாண்டி ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி போன்று, எந்த நூற்றாண்டிலும் கிடைக்காத ஒப்பற்ற பெருந்தலைவனின் அணியில் உலகத் தமிழினம் அணிதிரள வேண்டும் எனவும் சீமான் அழைப்பு விடுத்தார்.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

எனக்கு தெரிந்து 52000 மக்கள் கலந்துகொண்டார்கள்.... வை கோ ஐயாட உரை நன்றாக இருந்த

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்க விண்ணப்படிவங்கள் மட்டும் 50000க்கு மேல் கிடைக்கப்பெற்றதாக சொல்லப்பட்டது..

மண்டபம் நிரம்பி வழிந்தது.வைகோ பேச்சு உணர்ச்சிபூர்வமாக மட்டுமல்லாது பல நியாயப்பாடுகளையும் உலகநாடுகளுக்கான பல விளக்கங்களையும் கொண்டிருந்தது. சீமான..நெடுமாறன் அவர்களது பேச்சும் ஒலிபரப்பப்பட்டது

சிறப்பு ஒலி வடிவம்

தமிழீழம் அமைவது மட்டுமே இந்தியாவிற்கு பாதுகாப்பானதாக இருக்கும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ பிரித்தானிய மாவீரர்நாள் (நினைவெழுச்சி நாள்) நிகழ்வில் தற்பொழுது ஆற்றிக்கொண்டிருக்கும் உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத்தமிழ் மக்கள் நாதியற்றவர்கள் என எவரும் எண்ண வேண்டாம் என எச்சரித்த வைகோ, ஈழத்தமிழ் மக்களிற்காகக் குரல்கொடுக்க தமிழ்நாட்டுத் தமிழர் இருப்பதாகவும் கூறியதாக, அங்குள்ள செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்தியா உட்பட விடுதலைப் புலிகளை தடை செய்துள்ள நாடுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவர் என நம்பிக்கை வெளியிட்ட அவர், பிரித்தானிய அரச தரப்பினரைச் சந்தித்துப் பேசியபோதும் இதனை வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

சிறப்பு புகைப்படங்கள் இணைப்பு

ஆடியோ மூலம்

Edited by தராக்கி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளும் சிறப்பாக இருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இனறு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தமிழீழ தேசிய கொடியை ஏற்றியதோடு சிறப்புரையாற்றியிருந்தார்.

இவரது உரையில் எம்மக்கள் படும் துன்பங்களை எடுத்துச்சொல்லியிருந்தார்

தமிழீழம் என்னும் தனியரசு வெகுதூரம் இல்லை என்றும், நம் தலைவருக்கு தொடர்ந்து தோழ்கொடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.

நம் தலைவர்் வேறு எந்த ஒரு இனத்துக்கும் கிடைத்திடாத ஒரு உன்னதமான தலைவர் என்றும், தெய்வத்தின் ஒரு மறு அவதாரம் என்று சொன்னது யாவரையும் உற்சாக்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இங்கே நான் எடுத்த சில படங்களை இணைத்துள்ளேன், மண்டபத்தினுள் படங்கள் எடுக்கவேண்டாமென கேட்டுக்கொண்டதுக்கிணங்க நான் தொடர்ந்து எடுக்கவில்லை.

படங்கள் இங்கே : http://www.thayakam.net/forums/viewtopic.php?id=52

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தராக்கி

52000 ஆயிரம் மக்கள் அல்லது அதற்கும் அதிகம் என்று கூடச் சொல்ல முடியும். கைக்குழந்தைகள் முதற்கொன்டு இயலாத பெரியோர்வரை எல்லோரையும் காணக்கூடியாதாக இருந்தது. தலைவரின் உரை இந் நாட்டுச் சட்டதிட்டங்களுக்கமைய ஒளிபரப்பப் படமாட்டாது என்றதும் மக்களின் முகத்தில் சிறிது சோர்வு காணப்பட்டதும் அதன் பின்னர் தலைவரின் உரை ஒலிவடிவில் ஒலிபரப்பப் பட்டபோது மக்களின் முகத்தில் பெரு மகிழ்ச்சி.

சீமான், நெடுமாறன் ஐயா அவர்களின் உரை ஒலிவடிவில் வருகிறது என்று கேட்டதுமே மக்கள் பெருமகிழ்ச்சி தெருவித்து தங்கள் நன்றியையும் கரகோஷமிட்டு காட்டினார்கள்.

வைகோ அவர்களின் பேச்சைக் கேட்டு மக்கள் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்க அரங்கமே அதிர்ந்தது.

தலைவரின் வேண்டுகோளின் படி இந்த மக்கள் எழுச்சி மேலும் வளர்ந்து, அதனால் வெளி நாடுகளில் எங்களுக்கான தடை நீங்கி விரைவில் எங்கள் உரிமையை மீட்க ஒன்று சேர்வோமாக.

இளங்கவி

தேசத்தின் குரல் அன்ரண்ணாவுக்கு பிறகு பிருத்தானியா மண்ணில் எம்மினத்தை ஒன்றுகூட்டக்கூடிய சக்தியாக வைகோ அண்ணா இருப்பதாக நான் உணர்கிறேன்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டு மலர்வணக்கம் செலுத்திய தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து வாசிக்க

சிங்களத்தின் புலத்து தமிழர்களை இலக்கு வைத்த இராணுவ வெற்றி மாயை பிரச்சாரங்கள், தமிழ் பேசும் தமிழரல்லாத ஜடங்களின் இழிவுப்பிரச்சாரங்கள், பிரித்தானியாவிலுள்ள சிங்கள தூதரகத்தின் அபச்சார பிரச்சாரங்களுக்கு மானம் உள்ள பிரித்தானிய தமிழர்கள் கொடுத்த பதில், தேசிய நினைவெழுச்சி நாளில் தெரிந்தது.

வாகனத்தில் பயனிக்கும் போது சில குரல்கள் சனம் வருமோ? இன்று வேலை நாள்? ...... ஆனால் அதிர்ந்தோம்!!!! நல்ல வேலை இம்முறை விடுமுறைநாளில் வரவில்லை!!! இல்லையேல் இரு லட்சம் தாண்டி இருக்கும்!!

பல ஆச்சரியங்கள் ... எனக்கு தெரிந்த உரும்பிராயைச் சேர்ந்த முன்னாள் புளொட்டின் முக்கிய உறுப்பினர் மனைவி பிள்ளைகளுடன், ரெலோ முக்கியஸ்தகர் மக்களை ஒழுங்கு பண்ணுவதில் .... என்று .... பலர் பலர் .....எல்லோரையும் ஒன்றினைக்கும் சக்தி படைத்தவர்கள் இந்த மாவீரர்கள் !!!

பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகமே, எமது போராட்டத்தின் பிரச்சார பீரங்கியாக மாறிவிட்டதோ என்று எண்னத்தோன்றுகிறது!! இத்தூதரகம் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பாக பிரித்தானிய பத்திரிகைகைகளில் நடத்திய அவதூறு பிரச்சாரங்களே என்றும் இல்லாதவாறு பிரித்தானிய ஊடகங்களை இந்நிகழ்வு தொடர்பாக்க அதிக அக்கறை காட்டத் தூண்டியுள்ளது!!!!!பல பிரித்தானிய ஊடகவியலாளர்களை காணக்கூடியதாக இருந்தது!!! நன்றிகள் சிங்கள தூதரகத்துக்கு!!!!!

இறுதியாக எங்கள் பாலா அண்ணாவை வைகோ வடிவில் கண்டோம்!!!

தடைகளை உடைத்தெறிந்து , மிக நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்ட எம் தேசிய மாவீரர்களின் நிகழ்விற்க்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு சபாஸ்!!!

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.