Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளஸ்ரர் குண்டுகளுக்கு 100 நாடுகள் தடை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்படும் கிளஸ்ரர் குண்டுகள் (cluster bombs ) எனப்படும் கொத்தணிக் குண்டுகள் மீதான பயன்பாட்டை தடுக்கும் ஒப்பந்தத்தில் உலகில் உள்ள 100க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட முன் வந்து கையெழுத்திட ஆரம்பித்துள்ளன.

உலகில் போராயுதங்களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் இழப்புக்களில் கிளஸ்ரர் குண்டுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து பாவிக்கப்பட்டு வரும் கிளஸ்ரர் குண்டுகளை அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகளும், ரஷ்சியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் உற்பத்தி செய்து தமது இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பது மட்டுமன்றி மலிவு விலைகளில் ஏழை நாடுகளுக்கும் விற்று பொதுமக்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

சிறீலங்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளும் இன அழிப்புப் போர்களில் இவ்வகை குண்டுகளை ரஷ்சியா போன்ற நாடுகளிடமிருந்து பெற்று பாவித்து வருகின்றன.

100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் கிளஸ்ரர் குண்டுகளை அதிகளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தும் மற்றும் விநியோகிக்கும் அமெரிக்கா, ரஷ்சியா மற்றும் சீனா போன்ற கொடிய போராயுதங்களை கொண்டுள்ள நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன் வரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

_44669105_cluster_bomb_inf466.gif

1. The cluster bomb, in this case a CBU-87, is dropped from a plane and can fly about nine miles before releasing its load of about 200 bomblets.

2. The canister starts to spin and opens at an altitude between 1,000m and 100m, spraying the bomblets across a wide area.

3. Each bomblet is the size of a soft drink can and contains hundreds of metal pieces. When it explodes, it can cause deadly injuries up to 25m away.

ஒரு பெரிய குண்டு விமானத்தில் இருந்து போடப்பட்டதும் அது வெடித்து பல நூறு சிறிய குண்டுகளை பரந்த பிரதேசமெங்கும் வீசும். இதையே கிளஸ்ரர் குண்டுகள் எங்கின்றனர். இதனால் பொதுமக்களே அதிகம் உயிரிழப்புக்களையும் உடலுறுப்பு இழப்புக்களையும் சந்தித்துள்ளனர்.

கண்ணிவெடிகளுக்கு அடுத்தபடியாக பொதுமக்களை அதிகம் பாதிக்கும் குண்டுகளாக இவை விளங்குகின்றன.

source: http://www.kuruvikal.blogspot.com/ and news.bbc.co.uk

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளும் இன அழிப்புப் போர்களில் இவ்வகை குண்டுகளை ரஷ்சியா போன்ற நாடுகளிடமிருந்து பெற்று பாவித்து வருகின்றன.

_44669105_cluster_bomb_inf466.gif

1. The cluster bomb, in this case a CBU-87, is dropped from a plane and can fly about nine miles before releasing its load of about 200 bomblets.

2. The canister starts to spin and opens at an altitude between 1,000m and 100m, spraying the bomblets across a wide area.

3. Each bomblet is the size of a soft drink can and contains hundreds of metal pieces. When it explodes, it can cause deadly injuries up to 25m away.

ஒரு பெரிய குண்டு விமானத்தில் இருந்து போடப்பட்டதும் அது வெடித்து பல நூறு சிறிய குண்டுகளை பரந்த பிரதேசமெங்கும் வீசும். இதையே கிளஸ்ரர் குண்டுகள் எங்கின்றனர். இதனால் பொதுமக்களே அதிகம் உயிரிழப்புக்களையும் உடலுறுப்பு இழப்புக்களையும் சந்தித்துள்ளனர்.

கண்ணிவெடிகளுக்கு அடுத்தபடியாக பொதுமக்களை அதிகம் பாதிக்கும் குண்டுகளாக இவை விளங்குகின்றன.

source: http://www.kuruvikal.blogspot.com/ and news.bbc.co.uk

இதனை ஐக்கிய நாடுகள் சபை கூட , ஏன் வீசுகிறாய் ? என்று தட்டி கேட்க மாட்டாதா ....... ? :wub:

இதிலை ஒன்று கொழும்பிலை வெடிக்கவேணும் அப்பதான் அதன் வலி தெரியும் . .

  • கருத்துக்கள உறவுகள்

தடை விதித்து என்ன செய்வது?

உலகநாடுகள் தட்டிக்கேட்க வேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு நாடுகளும் பாராமுகமாக ஈழத்தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டுவது ஏன்?!!

எத்தனை அவலம் அங்கு? மழை வெள்ளம் இயற்கைச் சீற்றம் சூறாவளி அதனுக்கிடையில் இதுவுமா?!!

கடவுளே!!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயிலே மயிலே இறகு போடு என்றால் மயில் இறகு போடாது.

எமது தேசத்தின் வான் காப்புப் பொறிமுறையை நன்கு விருத்தி செய்து.. எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தி எமது நிலம் கடல் போன்று வானையும் எதிரியிடமிருந்து மீட்பதுதான் இதற்குத் தீர்வாக முடியும்.

அதற்கு தமிழர்கள் எல்லோரும் தமிழரின் படைப்பலத்தைப் பெருக்க ஒத்துழைப்பு நல்குவதே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தணிக்குண்டுகளை தடை செய்ய பல நாடுகள் உடன்பட்டுள்ளன

வானிலிருந்து வீசப்படும் கொத்தணி குண்டுகள்

கொத்தணி குண்டுகளை தடைசெய்வது என்று புதன்கிழமை நார்வே நாட்டின் தலைந்கர் ஆஸ்லோவில் நடைபெற்ற கூட்டத்தில் பல நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

ஒரு இடத்தில் வீழ்ந்து சிதறி பல குண்டுகளாக வெடிக்கும் இந்த வகைக்குண்டுகள், அவை நேரடியாக அல்லது உடனடியாக வெடிக்காமல் பின்னர் வெடிக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என்று அதற்கான செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உட்பட அந்த குண்டுகளை பெருமளவில் வைத்திருக்கும் பல நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

குண்டின் உட்பகுதி

மிகவும் துல்லியமாக வெடிக்கும் மற்றும் வெடிக்கத் தவறும் வீதம் குறைந்த தரமான குண்டுகளை தயாரிப்பதன் மூலம் இந்த பிரச்சினையை தாம் தவிர்ப்போம் என்று அமெரிக்கா கூறுகிறது.

இலங்கை அரசு கொத்தணி குண்டுகள் எதையும் பயன்படுத்துவதில்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேசவல்ல அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குண்டின் உட்பகுதி

மிகவும் துல்லியமாக வெடிக்கும் மற்றும் வெடிக்கத் தவறும் வீதம் குறைந்த தரமான குண்டுகளை தயாரிப்பதன் மூலம் இந்த பிரச்சினையை தாம் தவிர்ப்போம் என்று அமெரிக்கா கூறுகிறது.

இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் அமெரிக்கா தன்ர பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தி வருகிறது. அதற்கு பிபிசி போன்ற ஊடகங்களும் பெரும் தோற்றம் காட்டி வருகின்றன.

இன்றும் கூட அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களைப் பாவித்து ஆப்கானிஸ்தானில்.. தலிபான்களை.. அல்குவைடாவை.. துல்லியமாத் தாக்கிறம் என்று.. தமது தோழமைப் படைகளை தாங்களே தாக்குவதும்.. பொதுமக்கள் இலக்குகளை தாக்குவதும் தான் அதிகமா நிகழ்ந்திருக்குது. அது அவர்களின் மேற்படி கூற்றை பொய்ப்பிக்கப் போதுமானதாக இருக்கிறது...! அப்படி இருக்கிற நிலையில்.. அமெரிக்காவின் இக்கூற்று உப்புச் சப்பற்றது..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இக்குண்டுகளை தயாரிக்கும் அமெரிக்கா, ரஸ்யா, சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

http://www.youtube.com/watch?v=5ur3wG7_Rzc

F16 Dropping CBU-87 Cluster Bombs

Cluster Bombs - Lebanon

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

&feature=related

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.