Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மக்களினால், தமிழீழம் மலருமா?

Featured Replies

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில், இந்திய அதிபர் மன்மோகன்சிங்கை, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் நடக்கும் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழகத்திலிருந்து சென்றோர், மன்மோகன்சிங்கிடம் தெரிவித்தனர்.

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என தமிழகத்தில் எழுந்த குரல்களினால், இலங்கை அரசும் நடு நடுங்கியது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இல்லாது, இந்திய மத்திய அரசு ஆட்சி நடத்தும் வாய்ப்பு இல்லை. அவர்களுக்கும் தமிழக கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியமானது.

அதேபோல், இந்தியாவும் இலங்கையுடன் நட்பாகவே இருக்க ஆசைப்படுகின்றது.

இப்படி இந்திய அரசியல் நிலமைகள் இருக்க…. தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு போராட்டங்கள் இந்திய அரசை மிகவும் அச்சப்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியும் ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்புவேன் என்று எழுந்து நிக்க, தமிழக முன்னால் முதல்வரும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வரும் அம்மையாருமான ஜெயலிதா, ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்து ஒரு நாடகத்தினை தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் நன்றாக நடித்துக் காட்டினார். அவர் ஒரு நடிகையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எழுந்த ஆதரவுகளுக்கும் அம்மையார் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கதைக்கும் அனைவரையும் சிறையில் போட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அம்மையாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், பல ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும், கருத்தரங்குகளும் தமிழகத்தில் பெரிதாக நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழகத்திலுள்ள பல அரசியல் கட்சிகளின் ஆதரவு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றது.இப்படியான நிலையில் தனது கடசி ஆசையாக இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைப் இனப்பிரச்சினை தொடர்பாக, இந்திய அதிபர் மன்மோகன்சிங்குடன் உரையாட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, கலைஞர் தலைமையில் அனைவரும் சென்று உரையாடி விட்டு வந்துள்ளார்கள்.

நடைபெற்ற உரையாடலில், இலங்கையில் நடக்கும் போர் உடனே நிறுத்த வேண்டும், தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், மற்றும் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என தமிழகத்திலிருந்து சென்ற அனைத்துக் கட்சியினர், இந்தியப் பிரதமரிடம் தெரிவித்தனர்.

இலங்கையில் போரினை நிறுத்த, இந்திய வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை எற்ற இந்தியப் பிரதமர் விரைவில், வெளிவிவகார அமைச்சரை அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களினால், தமிழீழம் மலருமா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல அனைத்து தமிழக மக்களும், உலக தமிழினமும் ஒரே பாதையில் சென்று, தமிழீழம் மலர்ந்திட உதவி செய்ய வேண்டும். இதுவே ஈழத் தமிழர்களின் ஆசை!

http://www.tamilseythi.com/kaddurai/tamill...2008-12-05.html

-எழுதியவர், ஆதித்தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" அப்போது தான் திலீபனின் பசியடங்கும்! ஆயிரக்கணக்கான போராளிகளினதும் மக்களினதும் ஆன்மா சாந்தியடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களினால் பதியப்பட்ட செய்தியின் தலைப்பு சற்று குழப்பமாகவுள்ளது.

தமிழகம் தமிழீழத்தின் வடிகால். திருநாவுக்கரசு ஒரு கட்டுரையில் எழுதியதாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் மலர்ந்தால் நாளை தமிழகத்தின் கதி - ஒரு விளக்கம்.

படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி என்று தனது வலைக்கு தலைப்பு வைத்து எழுதும் அன்பர் ப்ளீச்சிங் பவுடர் அவர்கள் சமீபத்தில் ஒரு பதிவெழுதியிருந்தார் ,தமிழீழம் மலர்ந்தால் - நாளை தமிழகத்தின் கதி?? என்ற அந்தப் பதிவிற்கு ஒரு விளக்கம்.

காஷ்மீரையும், தமிழ் ஈழத்தையும் ஒரு போதும் ஒப்பிடவே முடியாது. இந்தியாவில் காஷ்மீர் மக்களுக்கு நாம் அளித்துள்ள உரிமைகளும், சுதந்திரமும் மற்ற மாநிலங்களில் இருக்கும் நமக்கு இல்லை. ஆனால் ஈழத்தில் கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் தமிழர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்பட்டமையால் தான் போராட்டமே ஆரம்பித்தது. இன ஒழிப்பை ஒரு அரசாங்கமே முன்னெடுத்து செய்வதால் தான் தமிழர்கள் அறவழியில் ஆரம்பித்து பலன் ஏதுமில்லாதமையால் ஆயுத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டம் என்பது ஒரு போராட்டமே அல்ல. அஹிம்சையால் எந்த பலனும் இல்லை என்பதற்கு இந்தியாவை தவிர வேறெங்கும் சென்று நாம் உதாரணம் தேட வேண்டியதுமில்லை.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தமைக்கு காரணம் அஹிம்சை வழிப் போராட்டம் மட்டுமே என்று நினைத்தால் அது தவறு. 1947ஐ ஒட்டிய ஆண்டுகளில் இந்தியா மட்டுமா சுதந்திரம் அடைந்தது? இலங்கை, மலேசியா என ஆசியாவிலேயே பல நாடுகள் சுதந்திரம் அடைந்தனவே அந்த நாடுகளுக்கு ஏன் ஆங்கிலேயர்கள் சுதந்திரமளித்தார்கள்? அங்கெல்லாம் ஆயுதப் போராட்டத்தை எதிர்க்க முடியாமல் சுதந்திரமளித்தார்களா அல்லது அங்கும் அஹிம்சை போராட்டம் நடந்ததா?

உண்மையான காரணம் என்னவென்றால் 1945ல் நிறைவு பெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்களின் அணி வெற்றியடைந்திருந்தாலும், போரினால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மிக அதிகம். பெருமளவில் மனித வளத்தை அவர்கள் இழந்திருந்தமையால் அவர்களது காலணி நாடுகளை நிர்வகிக்க அவர்களுக்கு போதுமான மனித வளம் இல்லாமையால் அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளுக்கு விடுதலை அளித்தார்கள் என்பதே உண்மை. ஒரு வேளை ஆங்கிலேயர்கள் போரில் தோல்வியடைந்து ஜப்பான், ஜெர்மனி கூட்டணி வெற்றியடைந்திருந்தால் காந்தியடிகளுக்குப் பதிலாக சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்தான் நம் தேசத் தந்தையாகியிருப்பார்.

ஆங்கிலேயர்கள் அல்ல அஹிம்சையை உலகிற்கு அளித்த இந்தியாவும் சேர்த்து யாரும் அதற்கு மரியாதை அளித்ததுமில்லை, அளிக்கப் போவதுமில்லை. அஹிம்சைக்கு இந்தியா மரியாதை அளிப்பதாய் இருந்தால் ஈழத்தில் உண்ணா நோன்பிருந்த திலீபனும், பூபதி அண்ணையும் இறந்திருக்க மாட்டார்களே.

காஷ்மீரில் நடப்பது அயல்நாட்டு தீவிரவாதம், அங்கு நடப்பது அந்நிய சக்திகளாலும் அவர்களது உதவியால் இயங்கும் கைகூலிகளாலும் நடத்தப்படும் தீவிரவாதம் . ஆனால் தமிழ் ஈழத்தில் நடப்பது விடுதலைப் போராட்டம். தீவிரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் இருப்போர் ஈழத்தை ஆதரிக்க காரணம் சகத் தமிழன் ஈழத்தில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்னல்களும், அவலங்களும் தான். மனிதனாய் இருப்பவர்களுக்கு இயல்பாய் இருக்கும் மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எழும் உணர்வுதான் இந்த ஆதரவு. என்ன தான் இதை அரசியல்வாதிகள் காவிரி, முல்லைப் பெரியாறு போல அரசியலாக்கினாலும், மக்கள் மனதில் இருப்பது சக தமிழனின் மேல் உள்ள அன்புதான்.

எந்த தமிழனும் நாளை தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ் நாட்டைப் பிரித்து தமிழ் ஈழத்துடன் இணைய வேண்டும் என்று சொல்ல மாட்டான். உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருப்பது உங்கள் வலைப்பூவின் தலைப்பைத் தான் நினைவு படுத்துகின்றது.

ராஜிவ் கொலையையும், ஈழத் தமிழர்கள் பிரச்சனையையும் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது மிகப் பெரிய மடத்தனம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அதுகுறித்து விவாதிக்க ஆரம்பித்தால் அது ஒரு வட்டம் போல தொடக்கமும் முடிவும் இன்றி சுத்திக் கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி , தங்களுக்கு மனிதாபிமானமே இல்லை என்பதை மறைக்க வேண்டுமாணால் அந்த வாதம் உதவும்.

தமிழ் ஈழம் மலர வேண்டியது காலத்தின் கட்டாயம். இங்கும் சில அறிவு ஜீவிகள் தங்கள் திறமையை காட்ட விழைவார்கள், தமிழ் ஈழம் மலர வேண்டும் ஆனால் புலிகள் கையில் அது இருக்க கூடாது என்பார்கள். ஈழத்தின் வரலாற்றை சற்று ஆழமாகப் படித்துப் பார்தீர்களேயானால் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றின. ஆனால் புலிகளைத் தவிர மற்றக் குழுக்கள் எல்லாம் ஒன்று மறைந்துவிட்டன, அல்லது சிங்களர்களின் கைக் கூலிகள் ஆகிவிட்டன. ( உதாரணம்: டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்). புலிகளைத் தவிர வேறு எந்தக் குழுவும் இன்று வரை தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. எனவே ஈழமக்களும் புலிகளைத் தவிர வேறு யாரையும் ஆதரிப்பதில்லை. இது தான் உண்மை.

//இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே புலிகளைக்கு ஆதரவாக மக்களும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் புலிகள் என்றால் அது ராஜீவை கொலை செய்த இயக்கம் என்ற அளவிலே மட்டும் மக்கள் அவர்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்.//

மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழர்களைக் குறித்து என்ன அக்கறை இருக்கும்? அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும்? தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் முதலில் கவலைப்பட்டு, போராட்டத்தை முன்னெடுத்து இதை தேசிய அளவில் பிரச்சனையாக்கியிருந்தால் என்ன தான் இந்த பிரச்சனையென்று மற்றவர்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் இங்கு நடப்பதென்ன?

நடிகர்கள் போராட போனால் அதிலும் இரண்டு கட்சி, அங்கும் அரசியல். அரசியல் கட்சிகள் போராடினாலும் எதிர்கட்சித் தனியாக போராடும், ஆளும் கட்சி தனியாக போராடும். இவர்கள் போராட்டத்திற்கிடையே ஒருவரை ஒருவர் தாக்குவார்கள். ஆகா இந்த போராட்டங்களைக் கூட அரசியலாக்கத்தான் முயல்கிறார்களே தவிர உண்மையாண போராட்டம் எங்கு நடக்கின்றது?

ஈழத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கன்னடர்களாய் இருந்திருந்தால் இன்னேரம் தனி ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். எந்த பிரச்சனையிலும் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கின்றதோ இல்லையோ ஆனால் மொத்த மாநிலமும் ஒற்றுமையாய் போராடுவார்கள். ஆளும்கட்சி, எதிர்கட்சியெல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஓரணியாய் நின்று போராடுவார்கள். அந்த ஒற்றுமை நம்மிடையே இல்லை. இங்கு எந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலாவது எல்லா கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒரு கருத்தை பேசியிருக்கின்றார்களா?

இந்தப் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ஒரு தேசிய அளவில் ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து அவர்களை ஈழத்துக்கு அனுப்பி அங்குள்ள நிலையை நேரில் கண்டறிந்து வரச் செய்ய வேண்டும். அவர்களுடன் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் குழுவையும் அனுப்ப வேண்டும். இவர்கள் மூலம் உண்மை உலகுக்கு தெரியவரும். தமிழர்கள் படும் அவலங்கள் வெளிவரும். அவ‌ர்க‌ள் நேரில் க‌ண்டுவ‌ரும் அவ‌ல‌ங்க‌ளை பாராளும‌ன்ற‌த்தை கூட்டி விவாதிக்க‌ வேண்டும். இது தான் பிராந்திய‌ வ‌ல்ல‌ர‌சான‌ இந்தியா செய்ய‌ வேண்டியது.

இதுக்கு மேல அவதிப்பட ஒன்னுமேயில்லங்கிற நிலையில இருக்க மனுசனுங்களுக்கு உதவுங்கன்னு சொன்னா, இன்னைக்கு இவனுக்கு உதவுனா நாளைக்கு நமக்கு பிரச்சனைவரும் அது இதுன்னு போகாத ஊருக்கு வழி தேடிகிட்டு நிக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்?

இல்ல‌ இல்ல‌ என்ன‌ தான் இருந்தாலும் ராஜீவ் காந்திய‌ கொன்ன‌வ‌ங்க‌ளுக்கு உத‌வ‌ கூடாதுன்னு சொன்னா உங்க‌ளையெல்லாம் ஒன்னும் செய்ய‌ முடியாது. ஆசிப் அண்ணாச்சி பாணியில சொல்ல‌ணும்னா, நீங்க‌ ம‌ட்டும் ந‌ல்லா இருங்க‌டே...

http://www.maraneri.com/search/label/%E0%A...%AE%AE%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.