Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் - பிரித்தானிய பிரதமர்

Featured Replies

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் - பிரித்தானிய பிரதமர்

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கொலா சார்க்கோசியுடன் கலந்தாலோசிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தவர்.

இது தொடர்பாக தான் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்க்கோசி அவர்களுடனும், ஜேர்மனியின் சான்சலர் மேர்க்கல் அம்மையாருடனும் கலந்துரையாடப் போவதாகத் தெரிவித்தார்.

http://www.infotamil.ch/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை பிரதமர் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என இலங்கையில் அறிவிப்பார்கள். அவரும் சரியென்று விட்டு பொத்திக் கொண்டு போய் விடுவார்

பிரிட்டனுக்கே எமது பிரச்சனைகயை தீர்க்கும் கடமை உண்டு. அவர்களால்தான் இந்த அவலம். மகிந்த கூட்டணி வேறு திசையில் பயணிக்கிறது. இந்தியாவின் டில்லி அரசு எமது போராட்டத்தை நசுக்க அனைத்தையும் செய்கிறது. அங்கே மாற்றம் வந்தால் ஒழிய வழி இல்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தோசம் நீங்கள் இதைபற்றி கதைத்தது, அப்படியே ஏதாவது உருப்படியா செய்யப்பாருங்கோ வெள்ளை அண்ணா இல்லை பிரவுன் அண்ணா ^_^

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனுக்கே எமது பிரச்சனைகயை தீர்க்கும் கடமை உண்டு. அவர்களால்தான் இந்த அவலம். மகிந்த கூட்டணி வேறு திசையில் பயணிக்கிறது. இந்தியாவின் டில்லி அரசு எமது போராட்டத்தை நசுக்க அனைத்தையும் செய்கிறது. அங்கே மாற்றம் வந்தால் ஒழிய வழி இல்லை?

இதையெல்லாம் யோசிக்காம.. இறுதி யுத்தம்.. என்று சிறீலங்கா அரசாங்கத்தை உசுப்பேற்றிக் கொண்டிருந்ததும்.. யுத்தத்தை தொடருங்கள் என்று ஆர்ப்பாட்டம் பண்ணினதும்.. நாங்களே என்பதையும் மறக்கக் கூடாது. எல்லாப் பழியையும் அவர்கள் மீதே திணிக்கக் கூடாது. சில விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் மக்கள் நோக்கிய பேச்சுக்களும்.. ஒரு மாயை வலயத்தை மக்களைச் சூழப்போட்டு விட்டிருந்தன. இதை அப்போ எல்லாம் சுட்டிக்காட்டிய போது.. துரோகிகளாக இனங்காட்டி அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். மாவிலாறு.. வீழ்ந்து.. சம்பூரில் இருந்து மக்களை விரட்டி அடிக்கும் போதே.. இதைச் சொன்னார்கள். எவர் கேட்டார்..???!

இதோ இறுதியுத்தம்.. அது இதென்று.. உசுப்பி.. இறுதியில்.. உலகமே வந்து.. எங்கள் மக்களைக் காப்பாற்று.. போரை நிறுத்து என்ற கெஞ்ச வேண்டிய நிலைக்கு சிங்களவன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறான். இது.. யாருக்கு அவமானம்...??! சிங்கள இனம்.. எனி எம்மை மதிக்குமா.. அந்த மண்ணில்...??! இவையெல்லாம் எதனால்..??! யாரால்...??! முழக்கம் போட்ட எம்மால் தான்..! இருந்தும் இவற்றை இரை மீட்கும் நேரமில்லை இது.

நாம் இதில் மனிதாபிமானத்தை முன்னுறுத்தி.. சிறீலங்கா நன்கு திட்டமிட்டு தொடங்கிய போரை இன அழிப்புப் போராக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சிறீலங்கா அரசை உலகின் முன் அடையாளப்படுத்தி.. இந்த நிலையை எமது போராட்டத்துக்கு சாதகமான வகைக்கு உலகில் ஏற்படுத்தவாவது நாம் முனைய வேண்டும்.அதேவேளை எமது போராட்டத்தைப் பலப்படுத்தி.. மக்கள் மயப்படுத்தி.. அதற்கான ஆதரவையும் பெற்றுக் கொள்ள உழைக்க வேண்டும்..!

எனியாவது.. மக்களை உசுப்பேத்தி.. மாயை வலயத்துக்குள் கட்டி வைப்பதை எல்லோரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அகலக் கால் வைக்க விடுறது.. ஆபத்து ஆபத்து என்று இங்கு கருத்துரைத்த போது.. திட்டினோம். இன்று... சிங்களவனிடம் போர் நிறுத்தம் கேட்டு இரஞ்சுகிறோம்..! :wub:^_^:)

பிரதமர் பிரவுன் அவர்களே கொஞ்சம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அப்படியே வன்னிப்பக்கம் தட்டி விட்டீர்கள் என்றால் போர் நிறுத்தம் செய்ய உதவும் படி பேரினவாத வெறியன் மகிந்த உங்கள் காலடியில் வந்து விழுவான்!!!

Give us the tools, and we will finish the job!!!

- - - Sir Winston Churchill - - -

Edited by vettri-vel

A ceasefire needed in Sri Lanka - British PM

Responding to a question raised in the British parliament yesterday, British Prime Minister Gordon Brown said that he felt that a ceasefire was needed in Sri Lanka and he will be discussing this at a meeting which was scheduled with the French President Nicolas Sarkozy and the German Chancellor.

- - daily mirror - -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.