Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்கள் தனிநபர்களைக் குறித்து எழுதியிருப்பதால் நீக்கப்படுகின்றது - மோகன்

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply

இங்கு எனது மேலதிக விபரங்கள் ஒன்றியத்திற்கு தேவைபடின் யாழில் ஓடியோடி ஊழியம் செய்யும் சோழியனிடம் எனது தொலை பேசி இலக்கம் மற்றும் வpலாசம் அனுப்பி வைக்கிறேன் கேட்டு பெற்று கொள்ளலாம் அல்லது எனது மின்னஞ்சல் முலமும் தொடர்பு கொள்ளலாம் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்

அன்புடன் சாத்திரி : :P :P :wink: :wink:

ஊழியம் என்றால் என்னென்று தெரியுமா? தயவு செய்து எனக்கு உங்கடை பணியாரங்களை அனுப்பவேண்டாம்.. நீங்களே ஒருவருக்கொருவர் அனுப்பி உங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் அமுதத்தில் வந்த பருப்புக்கவி. பாத்ததை பகிர்வது மதனராசா குணம். இதை இஞ்சையும் துப்பிறன்.

இரண்டகம் இதுவோ..?

எழுதியவர்: சரண்யன்

Thursday, 11 May 2006

கூடி இருந்து கூர் களியடைந்து

நயம்படப் பேசி நனிதே சிரித்து

நெஞ்சில் நஞ்சும் நாவில் அமுதும்

ஏந்தியே வந்து நமக்குள் நுழைந்து

பந்தியில் குந்தி பாதியாய் உண்டு -அவர்

திண்டது போக மீதியை எடுத்தும்

எச்சில் கையை நாமே கழுவி !

படுக்கையும் விரித்து பஞ்சணை போட்டு

பாதி இராவில் துயிலது எடுத்து

ஜோதிடம் பேசி நாடியை இறுக்கி;

திண்டதில் போட்டு ஊழ்வினை உறவாய்

இரண்டகம் செய்யும் ஈனப் பிறவிகாள்!

வெட்கித் தலையே குனிந்தோம் !

புத்தி புகட்டுவதாய் வெருட்டல் பேசி

ஊடகம் வழியே ஒழித்து கல்வீசும்

வேடிக்கை காட்டி மனிதம் விற்கும்

உளச்சலைச் சொன்னால் ஒதுங்கி

உளமார வழிவிட்டு வளர விடுவோம் !

தமிழனைத் தமிழன் தின்னக் கொடுத்தான்

தமிழனைத் தமிழன் தறித்தும் போட்டான்

தர்க்கம் புரிந்தே தேசாந்திரம் பெயர்ந்தான்

வர்க்கம் பேசியே வாழ்க்கை முடிக்கிறான்!

மூன்றாம் பேரையே பேசி மகிழ்ந்து

முளைப்பதைக் கிள்ளவே சாத்திரம் பேசி

எழுத்தினில் புத்தி புகட்டும்

புலம்பும் புல்லுருவிகள் - என்றுமே

புறம் பேசியே பிழைத்துப் போங்கள் !

நுனிப் புல் நக்கி மனங்களைக் கொன்று

ரணங்களைத் தந்தே நாடகமாடி

பிணங்களை ருசிக்கும் நட்பின் கொடுமை

நாள்பட வெளிக்கும் - நய வஞ்சம்

இயன்றவரை எச்சம் வையாது

எச்சங்கள் வாழ ஒரு கணம் உணர்ந்து

உம்முடன்.... உம்மோடு மூடுவீரோ ?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு முன்னர் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் பற்றி நான் எழுதிய கட்டுரை சம்பந்தமாக வாதப்பிரதி வாதங்கள் நடந்து முடிந்த பின்னர் தமிழ் அமுதம் என்கிற இணைய தளத்தில் என்னை திட்டி சரண்யன் என்னபவர் ஒரு கவிதையை எழுதியிருந்தார் படித்தேன் பின்னர் அதனை மதனராசா என்னபவர் யாழ் களத்திலும் இணைத்திருக்கிறார் .

அதற்காக் நான் தமிழ் அமுதத்திற்கோஅல்லது யாழ் களத்திற்கோ அதனை நீக்கசொல்லி கேட்கவில்லை அது தேவையும் இல்லை ஏனெனில் விமர்சனங்களை ஏற்று கொள்வேன் பேச்சுகளோ மிரட்டல்களோ என்னை பாதிக்காது ஆகவே அந்த கவிதையை நீக்க வேண்:டிய அவசியம் எனக்கில்லை ஆனால் அதற்கு கீழே டம் என்பவர் அதற்கு பதில் கவிதையாக ஒரு கவிதையை இணைத்திருந்தார் அதில் பொயர் சொல்லி குறிப்பிடும்படியாக யாரையும் தாக்கவோ அல்லது யாழ் உறுப்பினர்களை தாக்கியகதாகவோ அந்த கவிதையில் தெரியவில்லை ஆனால் அந்த கவிதை யாழில் இருந்:து காணாமல் போய் விட்டது பின்னர் மீண்டும் நேற்று அந்த கவிதையை டம் என்பவரே இணைத்திருந்தார் இன்று மீண்டும் அது நீக்க பட்டுள்ளது.

எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் பெயர் சொல்லியோ யாழ் உறுப்பினரையோ தாக்காத அந்த கவிதை வேறு யாரையோ திருப்தி படுத்துவதற்காக் இங்கிருந்து நீக்க பட்டுள்ளதாகவே நான் நினைக்கிறேன். அதைவிட அந்த கவிதையை நீக்கிறதற்கான எந்த வித அறிவித்தலும் களம் பகுதியில் காணவில்லைஎனவே டம் என்பவரது கவிதையை இரண்டாதம் முறை இணைத்தபோது பதிந்து வைத்திருந்தேன் அதனை இங்கு இணைக்கிறேன்.

சுத்தமாய் சித்தம் கலங்கியே

சத்தமாய் சரண்யன்

உளறும் உண்மையிதுவோ

ஊடகம் என்றால்

இப்படி உளறுதல் என்பது

இப்பதான் புரிந்தது

என்றிங்கு பொய்கூறாமல்

மெய் சொல்வேன்.

ஊடகமோ ஒண்டும் விளங்காத

ஒரு வெங்காயம்.

தன்னைப்பெருங்கவியாக

ஊடகவியலாளர் என்று புலம்பி

உலவும் சடம்.

பெண்ணியவாதியாம் ஒரு மண்ணும்

விளங்காத பெருச்சாளி.

குழிபறிப்பதில் கெட்டிக்காரி

சொர்ண கவியென்று

பட்டம் கட்டி மார்தட்டும்

சொறிநாய்க் கவி

நட்பென்று நடித்து நட்பின்

சோதியை நாசம் செய்த

வஞ்சகச் சரணம்.

சரி சொன்ன சாத்திரம்

பொய்யென்று மெழுகி

புழுகித்தன் பட்டம் காக்க

காவடியாடும் நாட்டியம்.

இதுவேற வேலையின்றி

எழுத இதுக்கொரு இடமொதுக்கி

தமிழ் அமுதமே ஏன் உன்னை

தரம்தாழ்த்திக் கொள்கிறாய் ?

  • கருத்துக்கள உறவுகள்

மழை விட்டாலும் தூவானம் விடாது என்று இதனால் தான் சொன்னார்களோ

வெல் டன் சாத்திரி... இந்தக் கவிதையைத்தான் பதிந்து வைத்திருக்கிறீங்களா அல்லது வேறு கவிதைகளையும் பதிந்து வைத்திருக்கிறீர்களா?! நீங்க பதிந்த கவிதையில்தான் 'சரண்யன்' என்பது போன்ற ஓரிரு பெயர்கள் நேரடியாக உள்ளன. தமிழ் அமுதத்தில் வந்த கவிதையில் 'சாத்திரம்' என்ற சொல்லைத் தவிர வேறு எவருடைய பெயரையும் காணவில்லையே!

கறுப்பி சொன்னதுபோல தூவானமும் விடாது.. தும்மலும் போகாது.

வெல் டன் சாத்திரி... இந்தக் கவிதையைத்தான் பதிந்து வைத்திருக்கிறீங்களா அல்லது வேறு கவிதைகளையும் பதிந்து வைத்திருக்கிறீர்களா?! நீங்க பதிந்த கவிதையில்தான் 'சரண்யன்' என்பது போன்ற ஓரிரு பெயர்கள் நேரடியாக உள்ளன. தமிழ் அமுதத்தில் வந்த கவிதையில் 'சாத்திரம்' என்ற சொல்லைத் தவிர வேறு எவருடைய பெயரையும் காணவில்லையே!

கறுப்பி சொன்னதுபோல தூவானமும் விடாது.. தும்மலும் போகாது.

சங்கரன் என்பவர் யாழ்களத்தில், உறுப்பினராக இல்லை, இது எப்படி தனிமனித தாக்குதல் ஆகும், சாத்திரத்தை தொழிலாக கொண்ட காரணப்பெயர் கொண்ட சாத்திரியார் இங்கு உண்டு. களத்தில் இல்லாதவர் பற்றியும் இங்கு பேச முடியாது என்றால், இங்கு பேசப்படும் பல பேரை பற்றி பேசமுடியாது. வெல்டன் விளக்குமாறு. 8) 8) 8)

உண்மைக்கு முன் நடு நிலைமை என்பது கிடையாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி பிருந்தன் அது சங்கரனில்லை சரண்யன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மோகன் நீர் சரியா அராஜகம் பண்றீர் கண்டியோ. நாயமெண்டா நாயத்தைக்க கதைக்க விடோணும். உது கடவுளுக்கே அடுக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
att7057602kd1rt.th.jpg

பெரு மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய திருவாளர் விளக்கு மாறு அய்யா அவர்களே சரண்யன் என்கிறவர் சாத்திரிக்கு எழுதின கவிதைக்கு பதில் கவிதையாக தான் நான் அந்த கவிதையை எழுதினனான் மற்றபடி அது தனிப்பட்ட தாக்குதலா எழுதலை ஏணெண்டா சரண்யன் என்கிறவாக்கும(;(கோசல்யா சொர்ணலிங்கம்) எனக்கும் எவ்வித பிரச்சனையுமில்லை அதைவிட அவர் யாழ் கள உறுப்பினரும் இல்லை இதனை யாழ் நிருவாகமும் விழங்கி கொண்டால் சரி இல்லை யாருடையதாவது அழுத்தத்திற்காக வெட்டிறதெண்டா திருப்பி சாத்திரி போட்டிருக்கிறார் வெட்டிறதெண்டா வெட்டுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனங்கள் குறித்த விசமத்தனமான கேள்விகள்!

(webeelam)

அண்மையில் "சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம்" என்கின்ற ஒரு அமைப்புக் குறித்து ஒரு சர்ச்சை உருவானது. இந்த அமைப்பை விமர்சித்து ஒரு பேப்பரிலும் பின்பு யாழ் களத்திலும் வந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ஒரு வாதப் பிரதிவாதம் உருவானது. இந்த விவாதத்தில் நானும் இணைந்து கொண்டேன். ஆனால் இந்த எழுத்தாளர் ஒன்றியம் குறித்தோ, அதில் உள்ளவர்கள் குறித்தோ நான் இப்பொழுது எழுத வரவில்லை. இந்த விவாதங்களின் பொழுது ஒரு விடயம் என் மனதை உறுத்தியது. எழுத்தாளர்கள் என்று சொல்பவர்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதற்கும் சகித்துக் கொள்வதற்கும் பக்குவம் இன்றி நடந்து கொண்டது வேதனையை தந்தது.

ஆனால் விமர்சனங்களை ஏற்க முடியாத இந்த இயல்பு இவர்களிடம் மட்டும்தான் இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

படைப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் வரும்பொழுது, அதை துணிவாகவும் நியாயமாகவும் எதிர்கொள்ளாது, விமர்சனத்தில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்று ஆராய்வதில்தான் பெரும்பாலான எழுத்தாளர்களும் மற்றைய கலைஞர்களும் ஈடுபடுகிறார்கள். என்ன சொன்னார்கள் என்பதை விடுத்து, யார் சொன்னார்கள் என்றும் ஏன் சொன்னார்கள் என்றும் ஆராய்கிறார்கள். விமர்சனங்கள் பொதுவான இடத்தில் வைக்கப்படுகின்ற பொழுது இவர்கள் குறிப்பாக இரண்டு விசமத்தனமான கேள்விகளைக் கேட்பார்கள்

முதலாவது கேள்வி: உங்களுக்கும் எனக்கும் (அல்லது எங்களுக்கும்) ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையா?

இரண்டாவது கேள்வி: இந்த விமர்சனத்தை முதலில் என்னிடம் ஏன் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை?

விமர்சனம் செய்பவர்கள் அடிக்கடி சந்திக்கின்ற கேள்விகள் இவைகள். தமது படைப்புக்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை போன்று, இவர்களுடைய இந்த முதலாவது கேள்வி அமைகிறது. "எமது படைப்புக்களிலும் எமது செயற்பாடுகளிலும் எந்தத் தவறும் இருக்கவே இருக்காது, ஆகவே இவர்கள் தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக உள்நோக்கத்தோடுதான் விமர்சிக்கிறார்கள்" என்று இவர்கள் கருதுவது போன்று இந்தக் கேள்வி இருக்கும். இந்தக் கேள்வியின் மூலம், தமக்கு விமர்சனத்தை தாங்கும் பக்குவம் சிறிது கூட இல்லை என்பதை வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்கள். உள்நோக்கம் இருக்கின்றதா என்று ஆராயத் தொடங்குகின்ற போழுதே, விமர்சனங்களில் உள்ள நியாயங்களை ஆராயத் தயாராக இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார்கள்.

ஒருவாறு பெரும்பாடுபட்டு இவர்களுக்கு விமர்சனத்தில் உள்ள நியாயத்தன்மையை விளங்கப்படுத்தினால், உடனடியாக இவர்களிடம் இருந்த வருகின்ற அடுத்த வார்த்தை இதுதான். " நீங்கள் சொல்வது எல்லாம் சரி, ஆனால் இதை நீங்கள் ஏன் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை?" இவர்களிடம் தவறுகளை தனிப்பட்டரீதியாக சுட்டிக்காட்டினால், உடனடியாக அவைகளை திருத்திவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்களா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். எதற்காக பொதுவான படைப்புக்களை, செயற்பாடுகளை சம்பந்தப்பட்டவரிடம் தனிமையில் விமர்சிக்க வேண்டும்.? ஒரு எழுத்தாளர் தன்னுடை கவிதையையோ, கட்டுரையையோ என்னிடம் மட்டும் தந்தால், நானும் விமர்சனத்தை அவரிடம் மட்டும் சொல்வேன். ஆனால் அவர் தனது படைப்பை எல்லோரையும் சென்றடையும் வண்ணம் வெளியிடும் பொழுது, என்னுடைய விமர்சனமும் அதே போன்று எல்லோரையும் சென்றடையும் வண்ணம்தான் இருக்கும். இதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? தனது படைப்பை பொதுவான இடத்தில் வழங்கிவிட்டு, விமர்சனத்தை என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லுங்கள் என்று சொல்வதுதான் பெரும் தவறு. அதே போன்று பொதுவான முறையில் செயற்படும் அமைப்புக்கள் பற்றிய விமர்சனங்களும் பொதுவான இடத்தில்தான் வைக்கப்படும்.

ஆனால் இவைகளை பெரும்பாலானவர்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற எழுத்தாளர் ஒன்றியம் குறித்து "சாத்திரி" என்கின்ற புனை பெயரில் ஒருவர் விமர்சனம் எழுதிய பொழுது, சாத்திரி என்ன எழுதியிருக்கிறார் என்பதை விட, சாத்திரி என்பவர் யார் என்று அராய்வதில்தான் அவர்களின் சிந்தனை இருந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் சாத்திரியின் விமர்சனத்தை பிரதி எடுத்து தனக்கு தெரிந்தவர்களிடம் வழங்கிய பொழுது, அவரிடமும் "ஏன் இதைச் செய்கிறீர்கள், உங்களுக்கும் எங்களுக்கு என்ன பிரச்சனை" என்றுதான் கேட்டார்கள். நான் யாழ்களத்தில் இவர்கள் குறித்து விமர்சனத்தை முன்வைத்த பொழுதும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். விமர்சனங்களை நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ தம்மிடம் சொல்லுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

எழுத்தாளர் ஒன்றியத்தின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தாலும், இப்படித்தான் நடந்திருப்பார்கள். இதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. காரணம், பெரும்பாலானவர்களின் விமர்சனங்கள் பற்றிய பார்வை இப்படித்தான் இருக்கிறது. ஆகவே என்னுடை இந்தக் கருத்துக்கள் எழுத்தாளர் ஒன்றியத்தை மட்டும் நோக்கியதாக யாரும் கருத வேண்டாம். அதே வேளை அவர்களுக்கானது இல்லை என்றும் கருத வேண்டாம். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளுகின்ற பக்குவமற்ற அனைவருக்கும் இந்தக் கருத்துக்கள் பொருந்தும்.

நீண்ட காலமாக எழுத்துத்துறையில் இருந்தும், பெரும்பாலனவர்கள் இன்னமும் விமர்சனங்களைத் தாங்குகின்ற பக்குவத்தை பெறவில்லை என்பது பெரும் சோகமே. எழுத்துத்துறை, கலைத்துறை, சமூகசேவை போன்ற பொதுப்பணிகளில் ஈடுபடுகின்ற யாராக இருந்தாலும், விமர்சனங்களை தாங்கிக் கொள்ளக்கூடிய பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். விமர்சனங்களில் உள்நோக்கம் தேடுவதையும், விமர்சனங்கள் தம்மிடம் மட்டும் சொல்லப்பட வேண்டும் என்று நினைப்பதையும் விட்டுவிட வேண்டும்.

பொதுப்பணிகளில் ஈடுபடுகின்ற பொழுது விமர்சனங்களைத் தாங்குகின்ற பக்குவமானது ஒரு அடிப்படையான கட்டாயமான விடயம் என்பதை ஏற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும் தயாராக இல்லாதவர்கள், பேசாது வேறு வேலைகளைப் பார்ப்பது நலம்.

- வி.சபேசன் (18.05.06)

பெருமதிப்புக்குரிய உயர்திரு விளக்குமாறு எங்கையப்பா போயிட்டீர் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம்

எழுதியவர் சி. புஸ்பராசா

அவரது புத்தகம் மற்றும் அவரைப் பற்றிய ஒரு பார்வை

padam3aa.th.png

எங்கள் ஈழ மக்களது வரலாற்றில் மிகப்பெரும் ஒரு சாபக்கேடு எங்கள் வரலாறு பற்றி அவ்வப்பொது போதுமான பதிவுகளை யாரும் மேற்கொள்ளவில்லை. அப்படி ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட முயற்சியால் பதிந்து விட்டு போன பதிவுகளும் எதிரிகளால் அவ்வப்போது திட்டமிட்டு அழிக்கப் பட்டும் இங்கு புஸ்பராசா போன்றவர்களால் வேண்டுமென்றே திரிக்கப்பட்டும் எழுதப்படும் புனைகதைப் புளுகுகளே வரலாறாக தூக்கி பிடிக்கப்பட்டு தமிழின எதிரிகளின் தாராள விளம்பரத்தால் அவையே காலப் போக்கில் தமிழனின் வரலாறாகத் திட்டமிட்டு மாற்றப்படும் அபாயமும் இருக்கின்றது.

புஸ்பராசாவின் இந்த ஈழ பொராட்டத்தில் "எனது சாட்சியம்" என்கிற புத்தகம் வெளியான போதே அதனை வாங்கிப் படித்த நான் மற்றும் பல நண்பர்களும் இந்த புத்தகத்தில் பல வரலாற்று திரிபுகளும் அதில் ஈழ போராட்டத்தில் ஆரம்பகால மென்முறை (சாத்வீகப் போராட்டம்)போராட்டத்திலிரு

சாத்திரியார் கட்டுரை நண்றாகப்போகிறது, தொடர்ந்தும் உண்மையில் என்ன நடந்தது என்று உங்கள் வாயிலாக அறிய விருப்புகிறோம் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

நன்றாக இருக்கு சாத்திரி உங்களுக்கு ஓய்வே இல்லையா 8)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை புதைத்து பெயர் தேட முனையும் ஆசாமிகளை படம் போட்டு காட்டும் சாத்திர போன்றவர்களின் எழுத்துக்கள் தமிழீழத்திற்கு தேவை! உங்களின் பணிக்கு வாழ்த்துகின்றோம்!

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவர்..ஒரு பேப்பருக்கு ஒரு தொடர் கதையை எழுத ஆசைப்படுகின்றார்..அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எழுதி விட்டீர்கள் அல்லவா? எனி உம்மோடு தனிப்பட்டரீதியில் தொடர்பு கொள்ளப்படும் என நினைக்கின்றேன்! :wink: :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தூயவன்.... :):lol:

சி. புஸ்பராசா அவரைப்பற்றி நமக்கு தெரியாது. உங்கள் தகவல்கள் மூலமாக தான் வாசிக்கின்றோம்... தொடருங்கள்.

நன்றிகள் சாத்தரி.

பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவர்..ஒரு பேப்பருக்கு ஒரு தொடர் கதையை எழுத ஆசைப்படுகின்றார்..அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று கூற முடியுமா?

அது நீரா? :P :P :P :)

சாத்திரியாரது எழுத்துகள் முலம் தான் பல விடயங்களை அறிய கூடியதாகவுள்ளது

தொடர்ந்து எழுதுங்கள் விமர்சனங்களை சந்திக்க துணிவில்லாதவர்கள் இப்படித்தான் அங்கிள் விமர்சனம் எழுதுபவரை தாக்கி எழுதுவார்கள் அதைக்கண்டு சோர்ந்து போகாமல் தொடர்ந்து எழுதுங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புஸ்பராசாவின் பொய்களை நிரூபிப்பதற்கு பல புத்திஜீவிகள் இருக்கின்றார்கள். ஆனால் அதை யாரும் சொல்ல முன்வருகிறார்களில்லை. இத்தகைய ஒரு முயற்சியில் தோழர் சாத்திரி முனைந்திருப்பது பாராட்டுக்குரியது. தொடர்ந்து எழுதுங்கள். புஸ்பராசா பற்றிய தகவல்கள் தேவையாகின் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். நானும் அவரது ஈழப்போராட்டத்தில் செய்த பொய்களை கூறத்தயாராகவுள்ளேன்.

நன்றி

மதனராசா.

நல்ல முயற்சி சாத்திரி அண்ணா. பல உண்மைகள் உங்கள் கட்டுரையில் வெளிவரவுள்ளது மகிழ்ச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.