Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியிலே உனக்கு இரத்ததானம்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியிலே உனக்கு இரத்ததானம்

கவிதை

இரத்ததானம் கொடு..!

தயவுடன் இரத்ததானம் கொடு..!

மேற்குலகின் தெருக்களிலே

வாகனங்களில் தொங்கும்

வாசகங்கள் இவை...!

மேற்குலகே வன்னிக்கு செல்லுங்கள்

வேண்டியளவை அள்ளுங்கள்

உங்கள் உயிர்காக்கும் அதிசயத்திரவம்

எங்கள் உயிர் நீங்க முதல்

நாங்கள் தெருக்களிலே

ஊற்றிடும் திரவம்......!

அதில் உங்களுக்கும் உரிமையுண்டு

உங்களின் ஆயுதங்களால் தானே

உடலிலே ஓடாமல்; அது

தெருக்களிலே பாய்கிறது....

ஏன் இன்னும் தயக்கம்....!

கலந்துவிட்ட குருதிக்கூட்டங்களை

பிரிக்கும் விஞ்ஞானம்

புரியல்லையா உனக்கு...?

இறைவனே...! அதுவும் புரிந்துவிட்டால்

அலை மோதிடுமே உன் கூட்டம்

வன்னித்தெருக்களிலே இன்று....!

இளங்கவி

Edited by ilankavi

உறவுகள் உண்ண உண்வின்றி, போட மருந்தின்றி வாடும்நேரமும் கண்மூடி மௌனியாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை இன்னும் ஏன் அமைதிகாக்கின்றது தெரியவில்லை??? ஓ முற்றாக அழிக்கப்படட்டும் எண்டோ இந்த மௌனம்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நிலவனுக்கு

வன்னி மண்ணில் இரத்த ஆறு ஓடும்பொழுதும் கண்டுகொள்ளாத மேற்குலகம் இனி எப்பொழுதுதான் கண்டுகொள்ளப் போகிறதோ தெரியவில்லை....

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

இளங்கவி

இளங்கவி,

உண்மைதான், நம் உறவுகள் தினம் தினம் கொல்லப்படும் போது ஏன் எம்மக்கள் உணர்ச்சி கொண்டு ஒருவேளை எழுகின்றார்கள் மறுநிமிடமே அடங்கிப்போகின்றனர். 50 பேர் கொல்லப்பட்டனர் எண்டதும் ஒருமுறை கொதித்தெழுந்தனர், பின்னர் 100 என்று வந்ததும் அதற்கு கொதித்தெழுந்தனர், பின்னர் 100இற்கு கீழ் மதிப்பற்று போனதும் பின்னர் 300 எண்டதும் எல்லாரும் பதைத்தனர், துடித்தனர், ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர், பின்னர் தாமாக அடங்கிக் கொண்டனர், அதன் பின்னர் 300இற்கு கீழ் மதிப்பிழந்துபோனது, அப்படியானால் இனி மீண்டும் எம்மவர்கல் கொதித்தெழ வேண்டுமாயின் இழப்பு 300இலும் கூடவாக இருகவேன்டுமா??? அப்போ எங்கள் மக்களின் இறப்பிலேயே போராட்டம் கொண்டுசெல்லப்பட வேண்டுமானால் போராட்டம் முற்றுப்பெறும் சந்தர்ப்பத்தில் எம்மவர்கள் யாரும் இருக்கமாட்டார்கல் போலும்.... எப்படி காசாவில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தனர்? சிறிது காலத்துக்குள் அவர்களால் ஈர்க்க முடிகின்றது? அப்படியானால் நாம் போராடும் வழிமுறைத்தவறா இல்லை நாம் இன்னமும் பலமாக போராடவேண்டுமா? இனியும் காலம் தாழ்த்தாது நாம் எல்லாரும் விரைவாக செயற்படவேண்டியகாலமிது.... சரியான வழிகாட்டிகள் இல்லாமையே இப்போராட்டங்கள் மழுங்கடிக்கப்படக்காரணமோ அல்லது நம்மவர்கள் தாம் ஒவ்வொருவரும் தாம், தம் பெயர் நிலைக்க வேண்டுமென போராடுகின்றதனாலோ இச்சரிவு நிலை. உறுதியாக ஒரு சொல்லில் போராடுவோம். வேற்றுமை மறப்போம். ஓரனியிற் திரள்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நிலவனுக்கு

நீங்கள் சொல்வது சரிதான்..... அத்தோடு புலம்பெயர் நாடுகளில் உள்ள நம்மவர்கள் போராட்டங்கள் செய்தால் அதற்குரிய பலனையும் உடனே எதிர்பார்க்கும் மனோபாவம் இருக்கிறது. உதாரணம் லண்டனில் நடந்த போராட்டத்தில் 125,000 மேல் மக்கள் கலந்து கொண்டும் பிரித்தானியாவோ, உலக நாடுகளோ திரும்பிப் பார்க்கிரார்கள் இல்லை என்று கவலையடையும் மக்களும் உலக நாடுகள் எம்மை பார்க்கும் வரைக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்க எங்கள் மக்களை அழித்துவிடுவார்கள் போல இருக்கிறதே என்று அழுபவர்களும் உண்டு. இன அழிப்பில் ஈடுபடும் மகிந்த அரசு ஒரு நாள் இப்படி முழு இன அழிப்பில் ஈடுபடும் என்று எதிர்பாராமல் தூங்கிவிட்டிருந்த தமிழினம் இன்று மகிந்த ஆட்சி எம்மினத்தை பெரியளவில் விரைவாக அழிக்கத்தொடங்க எம்மவர்கள் விழித்துக்கொள்ள ஏற்கனவே காலம் கடந்து விட்டிருந்தது. எது எப்படியோ உலக நாடுகள் எம்மை சற்றுத்திரும்பிப் பார்க்க தொடங்கியிருக்கிறது என்பது உண்மை... எனவே எமது போராட்டங்களை முழுமூச்சுடன் நாம் நடத்த வேண்டிய கடப்பாட்டில் நாம் இன்று நிற்கிறோம்.....

இளங்கவி

திரும்பிப் பார்ப்பது சரிதான் இளங்கவி, அவ்வாறு திரும்பிப் பார்ப்பதற்காக எம்மவர்கள் இறப்புதான் ஆயுதமாகத் தேவைப்படுகின்றதா??? காலம் கடந்து ஞானம் வந்தாலும் நான் இப்போ சொல்வது ஒன்றுதான்.... சர்வதேசத்துக்கு, அவர்களின் பாஷையில் பேச வேண்டும் என்பதுதான்... அதாவது உந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் எங்கட பாணி... ஓர் உதாரணம்.. ஜப்பானில போய் நீங்கள் இப்பிடி ஆர்ப்பாட்டம் செய்யுறது எண்டது பொய்வேலை, அங்கை கையில கறுப்புத்துணி கட்டினாலே கூட இருக்குறதுகாளா வந்து கேக்கும் என்ன பிரச்சனை எண்டு? அப்ப விளக்கமா சொல்லலாம்... அதே மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறை இருக்கலாம்... அவ்வழியில் சென்றால் அவர்களை மிகவும் இலகுவாக ஈர்க்கமுடியும் என்பதே என் கருத்து... ஏதோ எனக்கு தெரிஞ்சத சொன்னன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்நிலவன்

உங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்...

எங்கள் பரப்புரைகள் எந்த வடிவத்தில் என்றாலும் இருக்கலாம் ஆனால் அது நிச்சயமாகப் போய் சேரவேண்டும்...

உதாரணத்துக்கு நீங்கள் சொன்ன ''யப்பானில் கறுப்புத்துண்டு கட்டிப்போனால்'' விசயம் எனக்குத் தெரியாது. இதே போல் எல்லாருக்கும் எல்லாம் தெரியாது.. எனவே ஓவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் புலம்பெயர் நாடுகளில் எந்த வழியில் மக்களுக்கு எங்கள் செய்தியைச் சொல்ல முடியும் என்ற வழிகள் தெரியும் பட்சத்தில் அதை எங்களுக்காக புலம்பெயர் நாடுகளிள் இயங்கிக் கொண்டிருக்கும் வானொலிகள் மூலமாகவோ ஏனைய ஊடகங்கள் மூலமாகவோ ஏனைய மக்களுக்கும் இப்படியான போராட்டங்களை ஒழுங்செய்யும் அமைப்புக்களுக்கும் தெரியப்படுத்தி அந்த வழியில் எமது போராட்டங்கலை முன்னெடுப்போமானால் அதில் எங்களுக்கு வெற்றியும் கிட்டி எங்கள் மக்களையும். அழிவிலிருந்து விரைவில் காத்திட முடியும்.

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விடையம் மட்டும் உண்மை யாருக்கும் எதையும் தெளிபடுத்தி தான் எம் மக்களின் துயரம் n தரிய வேண்டியதில்லை. அவர்களுக்கு எல்லாமே தெரியும். அவர்களை செயற்ப்பட வைப்பதே எமது வேலை அதை செய்ய முன் வருவோமாக...

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இரத்தம் மட்டுமல்ல உடல் உறுப்புகளும்கூட தாராளமாய்ப் பொறுக்கலாம்!!! யதார்த்தமான கவிதை இளங்கவி!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

paravaikal

நீங்கள் சொல்வது மிகவும் சரிதான்..... இவ்வளவு நாளும் எனோ தானோ என்று இருந்துவிட்ட நம் மக்கள் இன்று வீறு கொண்டு எழுந்து இருக்கிறார்கள் ஆனாலும் இன்னமும் சில பேர் ஒன்றும் தெரியாதது போல் இருக்கிறார்கள் அவர்களையும்ம் நாம் மாற்ற வேண்டும் அதுவும் நம் கடமையே....

இளங்கவி

suvy

வன்னியின் வலியில் பங்கெடுத்ததற்கு மிக்க நன்றி....

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவிதை காலத்திற்கேற்றது நன்றி

யாழ் நிலவனுக்கு

நீங்கள் சொல்வது சரிதான்..... அத்தோடு புலம்பெயர் நாடுகளில் உள்ள நம்மவர்கள் போராட்டங்கள் செய்தால் அதற்குரிய பலனையும் உடனே எதிர்பார்க்கும் மனோபாவம் இருக்கிறது. உதாரணம் லண்டனில் நடந்த போராட்டத்தில் 125,000 மேல் மக்கள் கலந்து கொண்டும் பிரித்தானியாவோ, உலக நாடுகளோ திரும்பிப் பார்க்கிரார்கள் இல்லை என்று கவலையடையும் மக்களும் உலக நாடுகள் எம்மை பார்க்கும் வரைக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்க எங்கள் மக்களை அழித்துவிடுவார்கள் போல இருக்கிறதே என்று அழுபவர்களும் உண்டு. இன அழிப்பில் ஈடுபடும் மகிந்த அரசு ஒரு நாள் இப்படி முழு இன அழிப்பில் ஈடுபடும் என்று எதிர்பாராமல் தூங்கிவிட்டிருந்த தமிழினம் இன்று மகிந்த ஆட்சி எம்மினத்தை பெரியளவில் விரைவாக அழிக்கத்தொடங்க எம்மவர்கள் விழித்துக்கொள்ள ஏற்கனவே காலம் கடந்து விட்டிருந்தது. எது எப்படியோ உலக நாடுகள் எம்மை சற்றுத்திரும்பிப் பார்க்க தொடங்கியிருக்கிறது என்பது உண்மை... எனவே எமது போராட்டங்களை முழுமூச்சுடன் நாம் நடத்த வேண்டிய கடப்பாட்டில் நாம் இன்று நிற்கிறோம்.....

இளங்கவி

முற்றிலும் உண்மை நான் உடனெயே பலனை எதிர்பார்பது தவறு இப்போததான் சர்வதேசம் சற்றுத்திரும்பிப்பார்க்கத்

உண்மை அப்படியே எழுதி இருக்குறிங்கள்.. உங்க ஆக்கங்கள் தொடரட்டும் ilankavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு......

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இன்னும் தயக்கம்....!

கலந்துவிட்ட குருதிக்கூட்டங்களை

பிரிக்கும் விஞ்ஞானம்

புரியல்லையா உனக்கு...?

இறைவனே...! அதுவும் புரிந்துவிட்டால்

அலை மோதிடுமே உன் கூட்டம்

வன்னித்தெருக்களிலே இன்று....!

கவிதைக்கு நன்றி இளம் கவி. எம்மிடம் எண்ணெயையோ,தங்கமோ இருக்கொமெனில் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள் மேற்குலகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavilan

உண்மைதான்..... எங்களிடம் தற்போது எங்கள் உயிர் மட்டும் தான் இருப்பதால் தங்கள் ஆயுதங்களைக் கொடுத்து அதனையும் எடுக்கச் சொல்கிறார்கள்...

நன்றி உங்கள் கருத்துக்கு......

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.