Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுக்கு வழிகள்

Featured Replies

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள்-73

Keyboard Shortcut to a webpage

கீபோட்டில் உள்ள மூன்று கீ க்களை ஒருசேர தட்டியவுடன் நாளாந்தம் பார்வையிடும் உங்களுக்கு விருப்பமான வெப்பக்கம் உடனே திறக்கவேண்டுமெனில் கீழே உள்ளவாறு செய்யவும்.

விருப்பமான வெப்பக்கத்தை திறந்து Favorites List ல் Add பண்ணவும். (Ctrl+D கீ க்களை ஒரு சேர அழுத்தியவுடன் பதிவாகிவிடும்). பின் Favorites menu List ஐ திறந்து அந்த வெப்பக்கத்தை வலது கிளிக்செய்து மீண்டும் Properties ஐ கிளிக்பண்ணவும். வரும்பெட்டியில் Shortcut Key என்பதன் எதிர் பெட்டியில் (text box) கிளிக்பண்ணி ஏதாவது ஒரு எழுத்தை தட்டவும் (உ~ம். Y). உங்கள் O/S XP அல்லது 2000 ஆயின் அப்பெட்டியினுள் இப்போது CTRL+ALT+Y தெரியும். CTRL+Alt தானாக போடப்படும். OK பண்ணிவிட்டு Internet explorer ஐ மூடிவிட்டு, பின்பு தேவையானபோது CTRL+ALT+Y ஆகிய மூன்றையும் ஒன்றாக அழுத்த உங்கள் பிரியமான வெப்பக்கம் உடனே திறக்கப்படும்

  • 2 weeks later...
  • Replies 358
  • Views 138.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள்-74

Memory குறைபாடு

என்னிடம் இரண்டு கம்பியூட்டர்கள் உண்டு. அதில் ஒன்றின் Processor 900MHz; Memorly 128 MB. வைரஸ் பயம் காரணமாக இந்த சிறிய கம்பியூட்டரில்தான் நான் அதிகம் வேலை செய்வது. வெப்தளங்களில் உலா வருவேன். முக்கியமான தகவலிருந்தால் அதனை கொப்பி பண்ணவேண்டி "Word" ஐ திறந்து வைத்துக்கொள்வேன். சிலவேளைகளில் ஒன்று அல்லது இரண்டு வெப்தளங்கள் minimize பண்ணப்பட்டு status bar ல் கிடக்கும். இப்படியான சந்தர்ப்பங்களில் ஏதாவதொன்றை கிளிக்பண்ண முயற்சிக்கையில் மாத்திரம் எனது கம்பியூட்டர் திடீரென நின்றுபோவதுண்டு. மின்சாரம் திடீரென தடைப்பட்டது போல. மீண்டும் கம்பியூட்டரை ON செய்வேன்; வேலை செய்ய மறுக்கும். பின்புறமுள்ள Power Cord ஐ வெளியே இழுத்துவிட்டு மீண்டும் சொருகுவேன். மீண்டும் ON பண்ணினால் வேலை செய்யத்தொடங்கும். இப்படி 2 மாதங்கள் கடந்தன.

கோளாறு என்னவாக இருக்கும் என ஆராய்ந்தேன். முடிவில் இன்னொரு 128MB SDRAM Memory Stick வாங்கிவந்து கம்பியூட்டரில் பொருத்தினேன். இப்போது memory 256MB ஆகிவிட்டது. இதன் பிறகு இந்த கோளாறு இதுவரையில் இல்லை.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள்-75

MyWebEx PC - Free Remote access and Remote control to your Pc

உங்களது வீட்டு PC ஐ வெளியே வேலைக்கு போனவிடத்து Laptop மூலம் அணுகவேண்டுமா? அல்லது காரியாலய கம்பியூட்டரை வீட்டிலிருந்து இயக்கவேண்டுமா? அல்லது உமது PC ஐ நண்பனது கம்பியூட்டர் ஊடாக பார்க்கவேண்டுமா? அதுவும் இலவசமாக காரியம் நடைபெறவேண்டுமா?

கீழே உள்ள வெப்தளத்திற்கு போங்கள். "SIGN UP Now" என்று ஒரு Button காணப்படும். அதை அமுக்குங்கள். உங்கள் email, password. Access code (அதுவும் password மாதிரித்தான்) கொடுங்கள். இரண்டு நிமிடத்தில் install கிவிடும். பின்பு நண்பனின் கம்பியூட்டருக்கு போங்கள். Internet Explore ல் அதே வெப்தளத்தை திறவுங்கள். Member login என்ற பட்டனை கிளிக்பண்ணி அதே email password, access code கியவற்றை கொடுத்து Sign in பண்ணவும். connect என்றபட்டனை கிளிக்பண்ணி அரை நிமிடத்தில் உங்கள் வீட்டு கம்பியூட்டரின் Destop நண்பனின் கம்பியூட்டரில் தெரியும். உங்கள் வீட்டு கணனியில் என்னென்ன எல்லாம் செய்வீர்களோ அத்தனையையும் அதேமாதிரியே செய்யலாம். இதேநேரம் உங்கள் வீட்டு கணனி இருட்டடிக்கப்பட்டு, Keyboard ம் Mouse ம் வேலைசெய்யமாட்டாது. இந்த வெப்தளம் இச்சேவையை இலவசமாக வழங்குகிறது. GoToMyPC என்றவெப்தளம் இதே சேவையை பணத்திற்கு வழங்குகின்றது.

My WebExPc வேலை செய்வதற்கு windows இயங்குதளம் வேண்டும். அத்தோடு கீழ்காணுபவைகளும் அவசியம்.

 Windows 95, 98, ME, 2000, NT, XP, Server 2003

 Microsoft Internet Explorer 4.0 or later

 JavaScript & cookies should be enabled for the browser

 ActiveX should be enabled for the browser.

 Internet connection (DSL, Cable, LAN).

முயன்று பாருங்கள். மகிழ்ச்சியாக இருக்கும்.

http://www.mywebexpc.com/index.php

ஆஹா நல்லதொரு விசயம் தேவகுரு நன்றி. நாளைக்கு செய்து பார்க்கப்போறன் :lol: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா மிக மிக நல்ல விடையம் .. நான் இப்படி தேடாத இடம் இல்லை.. நன்றி.நன்றி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 76

"Starting Windows...

Windows 2000 could not start because the following file is missing or corrupt: WINDOWSSYSTEM32CONFIGSYSTEM.

You can attempt to repair this file by starting Windows 2000 Setup using the original Setup floppy disk or CD-ROM.

Select 'r' at the first screen to start repair."

எனது நண்பர் தனது ஹாட் டிறைவை C: D: என இரண்டாக்கி C: யில் XPயையும் D: யில் விண்டோஸ் 2000 த்தையும் நிறுவியுள்ளார். ஒருநாள் அவசரமாக win2000 ல் வேலைசெய்து கொண்டிருக்கும்போது ஏதோ கோளாறு நடந்துவிட்டது. இது தெரியாது அடுத்தநாள் கம்பியூட்டரை இயக்கி Win 2000 ஐ லோட்பண்ணியபோது மேற்கண்ட பிழைச்செய்தி வந்தது. வேறுவழி தெரியாததினால் அதில் கூறப்பட்டவாறு win 2000 CD யை சிடி டிறைவில் போட்டு repair install செய்தார். மீண்டும் இயக்கினார். win2000 இயங்கியது. ஆனால் அதில் நிறுவப்பட்டிருந்த Norton Antivirus ஓர் பிழை செய்தியை காட்டியது, Internal error. Uninstall and reinstall NAV என்பதுதான் அது. அதன்படியே செய்தார். எல்லாம் சீர் என எண்ணினார்.

Win XP எப்படி என பார்ப்போம் என எண்ணி Reboot செய்து XP யை லோட்பண்ணினார். மீண்டும் அதே பிழை செய்தி வந்தது. புதிராக இருந்தது. Internet ல் பல மணிநேரம் செலவழித்து விடைதேடினார். கடைசியில் Ntdetect.com மற்றும் Ntldr ஆகிய இரு கோப்புக்களையும் Windowsservicepackfilesi386 என்ற Folder லிருந்து கொப்பிபண்ணிக்கொண்டு வந்து C: (Root Directory) ல் போட்டார். ஏற்கனவே உள்ளவற்றை overwrite பண்ணவா என கேட்கப்பட்டது. ஆம் என்று பதில் கொடுத்தார். வேலை முடிந்தது. Reboot பண்ணி இரண்டு தளங்களையும் சரிபார்த்தார். எல்லாம் சுகமாயிற்று. இந்த இரண்டு file களையும் XP Cd யிலிருந்தும் Expand பண்ணி எடுக்கலாம்

நடந்தது இதுதான். எப்போதும் முந்திய தளத்தை (O/S) நிறுவிவிட்டுத்தான், பிந்தியதை நிறுவவேண்டும் என்பது நியதி. C: ல் Win2000 ம் D: ல் Xp யும் தான் முறைப்படி நிறுவியிருக்கவேண்டும். மாறியும் நிறுவலாம்; முடியாது என்றில்லை. ஆனால் சிலவேலைகள் கூடுதலாக செய்யவேண்டிவரும். இவர் C: யில் Xp யை நிறுவியிருந்தார். பின்பு win2000 ல் repair செய்யவேண்டிவந்தபோது., அது தனது system files களைக்கொண்டுபோய் XP நிறுவப்பட்டிருந்த C: டிறைவில் போட்டுவிட்டது. (C: டிறை system Partition என நினைத்து.) Win2000 னின் Ntdetect.com மற்றும் Ntldr, XP யின் இதே file களைவிட அளவிலும் வலுவிலும் குறைவானது. XP வெளிவருமுன் தோன்றியதாகையால் XP யை கண்டுபிடிக்கும் சக்தி அதற்கு இல்லை. ஆனால் XP யின் Ntdetect.com மற்றும் Ntldr கோப்புக்களுக்கு win 2000 கண்டுபிடிக்கும் சக்தியுண்டு. ஆகவேதான் பிழை செய்திவந்த்தும் மேற்கூறப்பட்ட மாற்றம் செய்யவெண்டி ஏற்பட்டதும்.

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 77

HOTFIXES

Hotfixes என்பது உலகம்பூராவும் உள்ள விண்டோஸ் பாவனையாளர்கள் விண்டோஸ் இயங்குதளத்திலுள்ள ஓட்டைகள் காரணமாக சந்திக்கும் பொது பிரைச்சனைகளுக்கு அளிக்கப்படும் உடனடித்தீர்வு. பலதீர்வுகள் அடங்கிய திரட்டுத்தான் Service Pack. அடுத்த புதிய விண்டோஸ் பதிப்பு வரும்வரை பல Hotfixes ம் சில Service packs களும் வெளிவந்து கொண்டேயிருக்கும். தனி கணணி பாவிப்பவர்களுக்கு எல்லா Hotfixes ம் தேவையென்று இல்லை. நாம் Automatic Updates ஐ on பண்ணி வைத்திருப்போமானால் எல்லா Hotfixes நமது கணணிக்குள் தானிறங்கி Windows போல்டரினுள் முன்னணியில் வரிசையாக ($NtUninstallKB867282$) என உட்கார்ந்து இருக்கும்.. ஒவ்வொரு Hotfixes ம் ஒவ்வொரு Knowledge Base Article உடன் தொடர்பு படுத்தப்பட்டிருக்கும். எனவே பிரச்சனை என்ன? தீர்வு என்ன? அது நமக்கு தேவைதானா? என படித்து அறிந்துகொள்ளமுடியும். எனவே Automatic Updates ஐ Off பண்னணிவிட்டு, தேவையானபோது மாத்திரம் போய் அவை என்ன? என பார்த்து பொறுக்கி எடுத்து வந்து install செய்யவேண்டுமெனில் இங்கே போகவும்.

Open IE --> Tools --> Windows Update --> Administrator Options --> Windows update Catalog (Link) --> Find updates for Microsoft Windows operating systems -->Windows XP SP2 --> Search --> Critical Updates and Service Packs --> click add (any number you want) --> Go to Download Basket --> Download Now (Save To "My Downloads" and install as usual.)

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 78

nLite

இன்ரநெட்டில் நான் கண்டெடுத்த சிறிய ஆனால் திறன்பல கொண்ட ஒருபுறோகிறாம் இதுவாகும். Net Framework 1.1 என்ற ஒர் ஒருபுறோகிறாமை Microsoft தளத்திலிருந்து தரவிறக்கி நிறுவி, அதன்மேல் இதை நிறுவவேண்டும்.

Slipstreaming செய்வதற்கு இதுபேருதவிசெய்யும். Slipstreaming என்பதன் மறுபெயர் Integration ஆகும். தமிழில் ஒருங்கிணைத்தல் அல்லது ஒன்றாக திரட்டுதல் என பொருள்படும். அதாவது Windows XP, SP2, Hotfixes, Product Key, Reginal Settings (install செய்யும்போது கொடுக்கும் தகவல்கள்) ஆகிய எல்லாவற்றையும் ஒரு கவளமாக திரட்டி பின் அதை ஒரு சிடியில் burn பண்ணிக்கொள்வது.

நிறுவும்போது சிடியை இட்டு install என்பதை கிளிக்பண்ணிவிட்டு நீங்கள் வெளியே போய்விட்டுவர, சகலதும் தானியங்கியாக நடைபெற்று மேல்கூறப்பட்ட எல்லாம் நிறுவப்பட்டு இருக்கும். (Unattended Installation). Slipstreaming பல கணணிகள் கொண்ட கம்பனிகளில் installation செய்வதற்கு வசதியாக ஒரு சிடீயை தயாரிப்பதற்கு ஏற்ற ஒரு வழிமுறையாகும். nLite ஐ டவுண்லோட் பண்ணிக்கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்கை கிளிக்பண்ணவும். இப்பக்கத்திலேயே Net Framework 1.1 டவுண்லோட் செய்வது சம்பந்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது

http://nuhi.msfn.org/download.html

Slipatreaming சம்பந்தமாக அறிந்துகொள்ள விரும்பின் இந்த லிங்கை கிளிக்பண்ணவும்.

http://www.geekgirls.com/index.htm

Edited by E.Thevaguru

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 79

ஏன் ஹாட்டிஸ்க் எப்போதும் குறைத்து காட்டப்படுகிறது?

ஒரு 80GB புதிய ஹாட்டிஸ்க்கை நாம் கம்பியூட்டரில் நிறுவும்போது 74 GB அளவில் தான் கம்பியூட்டர் கண்டுகொள்கிறது. இது ஏன்? ஒரு GB என்பது எம்மை பொறுத்தளவில் 1000x1000=1,000,000 மெகாபைட்ஸ் ஆகும். ஆனால் கம்பியூட்டரை பொறுத்தளவில் 1024x1024= 1,048,576 மெகாபைட்ஸ் ஆகும். எனவே 80 x 1,000,000/1,048,576= 76.29 மெகாபைட்ஸ். எனவே உண்மையில் 76.29 GB தான்.

இது தவிர வேறு காரணங்களும் உண்டு. வெற்று ஹாட்டிஸ்க்கில் ஒரு ஒபெரேட்டிங் சிஸ்டம் தனது தேவைகளுக்காக ஒரு சிறிய பகுதியை ஒதுக்கிக்கொள்கிறது. போல்டர் கட்டமைப்பு, பாதுகாப்பு தகவல்கள், குப்பைகூடை, இது தவிர போர்மாற் பண்ணுகிறவிதமும் ஒரு காரணமாகும். மேலும் அந்த டிஸ்க் சிஸ்டம் டிஸ்க்காக இருப்பின் Hidden file, Hibernationfile Swap file, Virtual Memory என்பனவற்றுக்காகவும் இடம் ஒதுக்கப்பட்டு மிகுதி எமக்கு காட்டப்படுகிறது. எனவேதான் இந்த குறைவு.

விளக்கத்திற்கு மிக்க நன்றி தேவகுரு.

தேவகுருவின் விளக்கத்திற்கு மேலதிக தகவலாக இந்த படத்தை இணைத்துள்ளேன், இந்த படத்தில் 120GB அளவுள்ள Harddiskஐ விண்டோஸ் 111GBஎன்று காட்டுவதை அவதானிக்கலாம்.

mathan_harddisk.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மொசில்லாவில் வேலை செய்யாது போலும்

குறுக்குவழிகள்-75

MyWebEx PC - Free Remote access and Remote control to your Pc

உங்களது வீட்டு PC ஐ வெளியே வேலைக்கு போனவிடத்து Laptop மூலம் அணுகவேண்டுமா? அல்லது காரியாலய கம்பியூட்டரை வீட்டிலிருந்து இயக்கவேண்டுமா? அல்லது உமது PC ஐ நண்பனது கம்பியூட்டர் ஊடாக பார்க்கவேண்டுமா? அதுவும் இலவசமாக காரியம் நடைபெறவேண்டுமா? ......

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 80

IP Address எப்படி வழங்கப்படுகிறது?

இணையத்துடண் பிணைக்கப்படிருக்கும் எந்தவொரு சாதனத்திற்கும் தனித்துவமான விலாசம் (IP Address) இருக்கவேண்டியது அவசியம் என்பது உண்மைதான். இந்த விலாசங்கள் Static, Dynamic என இரு விதமாக வழ்ங்கப்படுகிறது. ஆனால் பல கம்பியூட்டர்கள் ஒரே விலாசத்தை பயன்படுத்தப்படக்கூடிய ஒரு தந்திர முறையும் உண்டு. அதுதான் Router. Static விலாசம் மாற்றமடையாதது. ஒரே விலாசம் எப்போதும் நெட்வேர்க் நிர்வாகியால் அல்லது இணைய சேவை வழங்குநரால் தரப்பட்டு, அந்த விலாசத்தை மாத்திரம் ஏற்று, அனுசரித்து நடக்க எமது கம்பியூட்டரை நாம் configure செய்வதாகும்.

Dynamic IP Address என்பது இணையத்தில் நுழையும்போது ஒரு கம்பியூட்டருக்கு அவ்வப்போது கொடுக்கப்படும் விலாசமாகும். விண்டோஸின் Transmission Control Protocol / Internet Protocol (TCP/IP) தொடர்புகளின் default வழிமுறை Dynamic Host Configuration Protocol கும். இது XP யை இன்ஸ்டால் செய்யும்போதே நிறுவப்படுகிறது. இதை பயன்படுத்தி கம்பியூட்டர் இணைத்தில் தனக்கு அடுத்ததாக மேலேயுள்ள சாதனத்திற்கு,(ISP யின் Server கம்பியூட்டர்) தனக்கு ஒரு IP Address வேண்டும் என ஒரு செய்தியை விடுக்கிறது. விலாசம் உடன் கிடைக்கும். கிடைத்தவுடன் அதை பாவித்து இணைத்தில் கம்பியூட்டர் பிரவேசிக்கும் இந்த விலாசம் Dynamic விலாசமாகும். கம்பியூட்டரை நிறுத்தியவுடன் இந்த விலாசமும் அற்று போய்விடும். ஆனால் விலாசங்களுக்கு கேள்வி (Demand)அதிகமில்லாமல் அதாவது வேறு பல கம்பியூட்டர்கள் நீண்ட நேரத்திற்கு இணைத்துடன் தொடர்பற்றிருந்தால் இந்த கம்பியூட்டரை அடிக்கடி நாம் இயக்கும்போது அதே விலாசம் மீண்டும் இந்த கம்பியூட்டருக்கு கிடைக்கும். இந்த கம்பியூட்டர் நீண்ட நேரம் உறங்கிக்கிடந்தால் விலாசங்களுக்கு கேள்வியும் அதிகமிருந்தால் இந்த விலாசம் வேறு யாருக்கும் கொடுக்கப்படலாம்.

Server என்பதும் ஒர் கம்பியூட்டர்தான். ஆனால் சக்திமிக்கதாகவும் கொள்திறன் அதிகமானதாகவும் இருக்கும். கோப்புக்களை இதில் நிறுவி, வேறு கம்பியூட்டர்கள் இணைத்தினூடே இதை பார்த்து அந்த கோப்புக்களை டவுண்லோட் செய்யமுடியுமென்றால் அந்த கம்பியூட்டர் ஒரு File Server. இதேபோல்Web Server, Printer Sever என பலவகை உண்டு. இந்த Server கள் எல்லாம் Static Address களைத்தான் உபயோகிக்கின்றன. விலாசம் அடிக்கடி மாறினால் எப்படி மற்ற கம்பியூட்டர்கள் இவற்றை கண்டுகொள்ளும்?

இ-மெயில் தேவைகட்கும், உலாவருவதற்கும் மாத்திரம்தான் இணைய இணைப்பு தேவையெனில் அவர்கட்கு Dynamic address தான் பொருத்தமானது.

பல கம்பியூட்டர்கள் ஒரு இணைய தொடர்பை பயன்படுத்துவதற்கு வழிசெய்பவைதான் Router கள். இந்த Router கள் தனித்துவமான விலாசத்தை இணையத்திலிருந்து பெற்றுக்கொண்டு, தனக்கு கீழ் உள்ள கம்பியூட்டர்களுக்கு இந்த Router கள் DHCP க செயல்பட்டு தாமாக வேறு விலாசங்களை வழங்குகின்றன, தகவல்கள் இணையத்திலிருந்து இந்த Local கம்பியூட்டர்களுக்கு வரும்போது Router இந்த Local விலாசத்தை மனதில் வைத்து தகவல்களை பிரிதது அந்தந்த கம்பியூட்டர்களுக்கு அனுப்புகின்றது. எந்தெந்த Route இல் போகவேணுமென்று வழிகாட்டி கொடுக்கின்றது. இதனால் அதற்கு Router என பெயர் ஏற்பட்டது. Router பாவிப்பதன் பக்கவிளைவு என்னவெனில் Router க்கு Static விலாசமும் கீழுள்ள கம்பியூட்டர்களுக்கு Dynamic விலாச்மும் கிடைக்கலாம். அல்லது மாறியும் ஏற்படலாம்.

Edited by E.Thevaguru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா...

நல்ல பல தகவல்கள் தேவகுரு.

நன்றிகள்

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 81

Instant Messenger and Messenger Service

Windows Messenger, MSN Messenger, Yahoo Messenger, AOL, ICQ, Trillian, Eyeball-chat, Excite, Indiatimes என்பவைகளெல்லாம் instant messenger software கள்தான். இவைகள் எல்லாம் தனியாட்களை குறிவைத்து ஏற்படுத்தப்பட்டவை. இவைகளின் பிரதான அம்சங்களாவன Chat, Voice Mail, Webcam, File and Photo transfer. இது தவிர அவசியமற்ற, சிறிய அம்சங்களாக Emoticon, Audibles. Skins, Avatar என பலவற்றைக்குறிப்பிடலாம். இவைகளெல்லாம் ஒரு பெண்கள் தன்னை அழகுபடுத்துவதற்காக அணியும் மணிகள், குஞ்சங்கள் போன்றவைதான். இந்த மென்பொருட்கள் தங்களை முதன்மைப்படுத்துவதற்காகவும

Edited by E.Thevaguru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மிக நல்ல தகவல். விண்டோஸ் மெசஞ்சரில் இவ்வளவு விடையம் இருப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 82

Picture And Fax Viewer

எந்தவொரு Graphics image ஐ அதாவது போட்டோவை அல்லது வேறு ஏதாவதொரு படத்தை XP ல் திறந்தால் அந்த கோப்பு .Jpg OR .Gif என எந்த Fornat ல் இருந்தாலும் Picture and fax viewer ல் தான் திறக்கும். பலருக்கு இது திருப்தி தருவதாயில்லை. பலர் இதை மாற்றிவிட்டார்கள். முன்பு படங்கள் எல்லாம் PAINT ல் தான் திற்க்கும். இப்போது அப்படியில்லை. நீங்கள் விரும்பிய application இல் திறக்கும்படியாக அமைத்துக்கொள்ளலாம். Photoshop, Firehand, Photo Suite இப்படி பல image Viewer கள் உள்ளன,

எப்படி மாற்றுவது எனில் Windows Explorer ஐ திறவுங்கள். Tools --> Folder Options --> Files types அங்கே File format கள் பட்டியலிடப்பட்டிருக்கும். Jpg ஐ தேர்வு செய்யுங்கள். கீழே Change என்று ஒரு பட்டன் காணப்படும். அதை கிளிக் பண்ண ஒரு பட்டியல் தோன்றும் அதில் எந்த புறோகிறாமில் திறக்கவேண்டுமோ ( உ,ம்: Photoshop) அதை தேர்வு செய்து Always use this program to open this kind of file என்ற வாக்கியத்திற்கெதிரே Tick போட்டு OK ஐ கிளிக்பண்ணவும். சரி இனிமேல் Jpg extensions கொண்ட கோப்புக்கள் எல்லாம் நீங்கள் தெரிவுசெய்த புறோகிறாமில்தான் திறக்கும். Photoshop ஐ தெரிவு செய்திருந்தால் அதிலேயே இனிமேல் திறக்கும். இதேபோல் Gif, TIff, Bmp extension களுக்கும் இதேபோல் செய்யவும். இனிமேல் இந்த Extension களை கொண்ட கோப்புக்களெல்லாம் Photoshop இலேயே திறக்கும்.

Image Viewer களில் பிரபல்யமான ஒன்று உள்ளது. Firehand Ember என்பது அதன் பெயர். அதை கீழ்க்காணும் தளத்திலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். இதில் பல வசதிகள் உள்ளன Editing செய்வது உட்பட.

http://www.firehand.com/

நன்றி தேவகுரு.. :!: :lol:

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 83

Domain, workgroup இவைகளின் ஒற்றுமை வேற்றுமை என்ன?

Workgroup என்பது ஒரு சில கம்பியூட்டர்களை சம அந்தஸ்த்துள்ளதாக அதனதன் தனித்துவ செயற்பாடுகளை இழக்காமல் சிறிய நெட்வேர்க்கில் இணைப்பது. இதில் ஒவ்வொரு கம்பியூட்டரும் வெவ்வேறாக பாதுகாப்பு அம்சம்களையும், தனக்குரிய பிரிண்டர், ஸ்கானர், பாவனையாளர்கள் போன்ற வளங்களின் பட்டியலையும் கொண்டிருக்கும். இவைகள் தமக்கென தனித்துவமான ஒவ்வொரு பெயரையும், பொதுவான ஒரு workgroup பெயரையும் கொண்டிருக்கும். ஒரு கம்பியூட்டர் இன்னொரு கம்பியூட்டரினுள் நுழைந்து ஒரு விடயத்தை பார்வையிட விரும்பின் அந்த கம்பியூட்டரின் பெயர் பாஸ்வேட்டைக்காட்டி நுழையச்செய்ய முடியும். வீட்டிலுள்ள கம்பியூட்டர்களை இணைத்து கோப்புக்களை பரிமாறிக்கொள்ளவும்,இணையத்தை பகிர்ந்துகொள்ளவும் மிக பொருத்தமானது workgroup ல இணைப்பது. Domain லும் பார்க்க இணைக்கும் வேலை சுலபமானது.

Domain என்பதும் சிறிய தொகை கம்பியூட்டர்களை நெட்வேர்க்கில் இணைப்பதுதான். னால் வித்தியாசமான முறையில். இங்கு பாதுகாப்பு அம்சங்கள் வளங்கள் எல்லாம் சர்வர் (Domain Controller) எனப்படும் கம்பியூட்டரில் மையப்படுத்தப்பட்டிருக்கும். பொதுவாக கம்பியூட்டர்களின் எண்ணிக்கை 10 க்கு மேற்பட்டால் Domain முறைதான் சிறந்தது. ஒரு கம்பியூட்டர் சர்வர் க்கப்படும்போது மற்றைய கம்பியூட்டர்கள் கிளையண்ட்(Client) என அழைக்கப்படும். கிளையண்ட்களின் செயல்களைஅங்கீகரிப்பதும் (Validate) அதற்கு ஏற்ற அனுமதிகளை வழங்குவதும் சர்வரின் வேலை. Domain ல் இணைப்பதற்கு முன்யோசனையும் திட்டமிடலும் அவசியமானது. னால கம்பியூட்டர்களை நிர்வகிப்பதற்கு Domain இலேசானது. காரணம் எல்லா கம்பியூட்டர்களின் வளங்களும் மத்தியப்படுத்தப்பட்டிருப்ப

Edited by E.Thevaguru

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 84

Degauss என்பது என்ன?

இது கலர் மொனிட்டர் அல்லது Cathode Ray Tube (CRT) பாவிக்கும் சாதனங்களுடன் தொடர்பு பட்ட விடயம். ,CRT யினுள் காந்த புலத்தை உண்டாக்குவதன் மூலம் இந்த சாதனங்கள் electron என்னும் துகள்களை காட்சித்திரையில் விழுத்துகின்றன. இத்துகள்கள் shadow mask என்னும் தகட்டினூடாக திரையில் விழுந்து போஸ்பர் படலத்தில் வண்ணவண்ண புள்ளிகளை உண்டாக்குகின்றன. புவியின் இயற்கை காந்தபுலம் அல்லது மொனிட்டரின் அருகில் ஒரு காந்தம் அல்லது காந்தம் கொண்ட ஸ்பீக்கர் போன்ற சாதனங்கள் வைக்கப்படுமிடத்தில், அதனால் shadow mask என்னும் துளைகள் கொண்ட மொனிட்டரினுள் உள்ள ஒர் இரும்பு தகட்டில் மின்காந்தம் தேவையற்று ஏற்றப்படிகிறது. இந்த தகடு electron துகள்கள் திரையிலுள்ள போஸ்பரஸ் புள்ளிகளை ஒழுங்காக வண்ணமயமாக்குவதற்கு உதவி செய்கிறது.

இந்த தகட்டில் ஏற்றப்படும் வேண்டப்படாத இந்த மின்காந்த ஏற்றம் நீக்கப்படுவதையே Degaussing என்பார்கள். பல மொனிட்டர்கள் இயங்க ரம்பிக்கும்போது தானியங்கியாகவே இதை நீக்கிவிடும். சில மொனிட்டர்களில் வெளிப்புறத்தில் இதற்கென ஒரு பட்டன் உண்டு. இப்படி Degaussing இடைக்கிடையே செய்யப்படாவிடின் திரையில் பிம்பங்கள் கூர்மையற்றும் வண்ணங்கள் மங்கலாகவும் தோன்றலாம். Degaussing செய்யும்போது திரை ஒருமுறை சலசலவென ஆடிஅடங்கும். பயப்படவேண்டாம்.

Edited by E.Thevaguru

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 85

Meta Search Engines

Meta Search Engine கள் எனப்படுவது ஒர் சக்தி வாய்ந்த தேடிலி. Google, Alta Vists, yahoo, Msn, AooTheWeb போன்ற crawler-based தேடிலிகள் போலல்லாது தேடிலிகளைக்கொண்டு தேடவைத்து கிடைக்கும் அறிக்கைகளை தொகுத்து திரட்டி சமர்ப்பிக்கும் ஓர் மிகவும் பிரயோசனமான சாதனம். சாதாரண தேடிலிகள் இணையத்தில் வெப்பக்கங்களை தேடித்திரிந்தலைது கண்டுபிடித்து அவைகளின் விலாசங்களை பட்டியலிட்டு ஓர் தகவல் வங்கியை தன்னகத்தே வைத்திருக்கும். Alta Vista, Google போன்ற தேடிலிகள் மில்லியன் கணக்கான விலாசங்களை அகரவரிசையில் பட்டியலிட்டு தம்மிடம் வைத்திள்ளன. நாம் ஏவிவிட்டவுடன் தமது விலாசவங்கியை தேடி விடையை எம்முன் வைக்கும்.

Meta Search Engine களிடம் இப்படி விலாச வங்கியோ அல்லது பட்டியல்களோ கியையாது. இந்த தேடிலிகள் சாதாரண தேடிலிகளின் பட்டியல்களை தேடி, அவைகளை தோகுத்து வெவ்வேறு தேடிலிகள் வெவ்வேறு விதமாக எம்முன்வைக்கும். முன்வைக்கும் விதம் மாறுபட்டாலும் சாராம்சம் ஒன்றாகத்தான் இருக்கும். சாதாரண இணைய பாவனையாளர்களில் 75 வீதமானவர்களுக்கு இந்த விசேஷ தேடிகள் பற்றி தெரியாது என ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது.

Meta Search Engine கள் தேடல் கட்டளை கிடைத்தவுடன், அந்த கட்டளையை சமாந்தரமாக எல்லா சாதாரண தேடிலிகளுக்கும் அந்த தேடிலிகளின் சர்வர்களுக்கு ஏற்கனவே செய்துகொள்ளபட்ட வியாபார ஒப்பந்த அனுமதிப்படி பின்கதவால் அனுப்பும். அந்த சாதாரண தேடிலிகள் முன்னுரிமையளித்து இந்த தேடலை செய்து விடையை Meta Search Engine க்கு அனுப்பிவைக்கும். இப்படி கிடைக்கும் எல்லா விடைகளையும் தொகுத்து அவை எம்முன்வைக்கப்படும். இதில் உள்ள நன்மை என்னவெனில் எமக்கு தேடும் நேரம் மிச்சம். தேடல் பன்முகமாக நடத்தப்படுவதல் விடைகளின் தரம் நன்றாக இருக்கும். சாதரண தேடிலிகளின் விலாச வங்கிகளின் இருப்புக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். எனவே பல இடமும் தேடி பொறுக்கி எடுப்பதனால் விடைகளின் தரம் நன்றாக இருக்கும்.

தொகுப்பு எம்முன் வைக்கப்படும்போது ஒவ்வொரு Meta Search Engine ம் அதனதன சட்டதிட்டங்களுக்கமைவாக வெவ்வேறாக தொகுத்து முன்வைக்கும். சில சாதாரண தேடிலிகளிடமிருந்து கிடைக்கும் பட்டயல்களிலிருந்து பத்துப்பத்தை எடுத்து முன்வைக்கும். வேறு சில சாதாரண தேடிலிகளிடமிருந்து கிடைக்கும் பட்டியல்களை ஒன்றாக்கி பக்கம் பக்கமாக தரும். இவைகளை நீங்கள் அனுபவத்தில் கண்டறிந்து கொள்ளலாம். ஒரு சில Meta Search Engine களைப் பார்ப்போம்

1. Dogpile

<http://www.dogpile.com>

Infospace ஸ்தாபனத்தினரால் நடாத்தப்படும் பிரபல்யமான. 2003 ண்டு பரிசு பெற்றதுமான தேடிலி இது. வெப்தள விலாச பட்டியல்கள், Directories, விசேஷ தேடல் பக்கங்கள் போன்ற பல இடங்களிலும் தேடி கிடைக்கும் விடைகளை ஒன்றாக திரட்டாது தனித்தனியாக பட்டியலிடும்

2. Vivisimo

<http://vivisimo.com/>

இந்த தேடிலி க்கு 2003 ல் இரண்டாம் பரிசு கிடைத்து. இது விடையை பக்கங்களாக ஒழுங்குபடுத்தி தொகுத்து இலேசாக தேவையானதை நாம் கண்டுபிடிக்க தருவதில் வல்லது.

3. Mamma

<http://www.mamma.com>

Mamma.com நிர்வாகத்தினரால் 1996 இலிருந்து நடாத்தப்படும் பழமையான தேடிலிகளீல் இதுவும் ஒன்று. தேடிலிகளின் தாய் என வர்ணிக்கப்படும் இதில் பணம் செலுத்தி எமது வெப்தளங்களை பதிவு செய்யும் வசதியுமுண்டு. 2003 ல் பரிசு பெற தகுந்ததென கருதப்பட்டது

4. SurfWax

<http://www.surfwax.com>

மூத்த தேடிலிகளைக்கொண்டு தேடுதல் நடத்தும் இதில் Snapsite என்னும் விசேஷ அம்சம் உண்டு. இந்த அம்சத்தைக்கொண்டு விரும்பிய பக்கங்களின் preview வை பார்க்கமுடியும். பக்கங்களையோ தொகுப்புக்களையோ Save பண்ணிக்கொள்ளும் வசதியுமுண்டு.

5. Kartoo

<http://www.kartoo.com>

2002 ம் ண்டில் இதற்கு பரிசு கிடைக்காவிடினும், பரிசு கிடைக்க தகுதியுள்ளதென அறிவிக்கப்பட்டது.

6. Clusty

<http://www.clusty.com>

Vivisimo ஸ்தாபனத்தார் நடாத்தும் இன்னொரு சேவை இது. இது image, web content, shopping databases என பத்துவிதமான இடங்களில் தேடல்களை நட்த்தும்முகமாக புறபாக பத்து பட்டன்களை கொண்டுள்ளது. இவைகளை கிளிக்பண்ணுவதன் மூலம் வெவ்வேறு தேடுதல்களை செய்யலாம்.

7. Excite

<http://www.excite.com>

இது முன்பு சாதாரண தேடிலிதான். 2002 ல், Infospace நிறுவனம் இதை வாங்கி மேம்படுத்தியது.

8. Fazzle

<http://www.fazzle.com/>

9. Gimenei

<http://gimenei.com/>

இதன் முக்கிய அம்சம் என்னவெனில்ம், எமது தேடல்களை ஒரு நாட்டுக்குள் மட்டுப்படுத்திக்கொள்ளலாம். அடுத்த நன்மை: தொகுப்பில் ஒரு வெப்தள விலாசம் இரண்டு இடங்களில் கிடக்க அனுமதிக்காது.

10. IceRocket

<http://www.icerocket.com/>

இதில் Thumbnail display Quick View Display என இரண்டு அம்சங்கள் உண்டு. WiseNut, Yahoo,AltaVista and AllTheWeb போன்ற தேடலிகளின் உதவியோடு தேடுதல் நடத்தினாலும், அந்த விபரங்களை வெளிக்காட்டாது.

11. Info.com

<http://www.info.com>

Google, Ask Jeeves, Yahoo!, Kanoodle, LookSmart, About, Overture and Open Directory. போன்ற 14 சாதாரண தேடிலிகளின் உதவியோடு தேடுதல் நடத்துகின்றது. shopping, news, eBay, audio and video search இப்படி பல சங்கதிகள் இதில் உள்ளன.

12. InfoGrid

<http://www.infogrid.com>

13. Infonetware RealTerm Search

<http://www.infonetware.com>

14. Ixquick

<http://www.ixquick.com/>

15. iZito

<http://www.izito.com>

15. ProFusion

http://www.profusion.com

Edited by E.Thevaguru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள் தேவகுரு.. :P

நல்ல புதிய தகவல், நன்றி தேவகுரு

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 86

Disable Windows Messenger

இந்த விண்டோஸ் மெசெஞ்ஞர் இளைஞர், யுவதிகளுக்கு இனிமையைக்கொடுக்கும் தூதுவனாகவும் பெரியவர்களில் பலருக்கு உபத்திரமாகவும் இருப்பதுண்டு. அரட்டை, voice mail, கோப்பு பரிமாற்றம், போன்றவற்றிக்கும் இவை உதவி செய்கின்றன. மேல்நாடுகளில் பல இளசுகளுக்கு தூதூவர்களாக போய் அவர்களை காதலர்களாகவும் மாற்றியும் உள்ளது. இந்த மெசெஞ்ஞர் கம்பியூட்டர் இயங்க ரம்பிக்கும்போதே இதுவும் சேர்ந்து இயங்க ரம்பித்துவிடும். இதன் Icon ல் ஒரு சோடி உருவங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை. உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகின்றேன்.

எனது பழைய கம்பியூட்டரில் இந்த மெசெஞ்ஞரை நிறுத்திவிட்டேன். இதை நிறுத்துவதற்க்கு பல வழிகள் உள்ளன. Registry ல் மாற்றம் செய்தும் நிறுத்தலாம். மிகவும் இலேசான வழியொன்றுள்ளது. இதற்குரிய போல்டரை பெயர் மாற்றம் செய்வது. இந்த போல்டரில்தான் இதை இயக்கும் msmsgs.exe கோப்பு உள்ளது, நாம் start --> All Programs --> messenger ஐ கிளிக்பண்ணியவுடன் Windows இந்த Messenger என்ற போல்டரை தேடும், தேடி அதனுள் உள்ள msmsgs.exe கோப்பைக்கண்டு அதை இயக்கும். இதுதான் சாதரண நடைமுறை.

இதன் பெயரை நாம் MessengerDisabled என பெயர்மாற்றிவிட்டேன். பெயர்மாற்றுமுன் மெசெஞ்ஞர் இயங்கிக்கொண்டிருந்தால் Exit பண்ணிவிடவும், அல்லது மாற்றவிடாது. இனிமேல் கம்பியூட்டர் இயங்க ரம்பிக்கும்போது அந்த போல்டர் தேடப்படும். Messenger என்ற பெயரில் போல்டர் இல்லாததினால் முயற்சி கைவிடப்படும். இந்த போல்டர் C:Windowws/Program Files/Internet Explorer னுள் உள்ளது.

Edited by E.Thevaguru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.