Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

Featured Replies

தமழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது இந்தப் பணியினை தமிழ் சேனல்கள் செய்து வருகிறது என்றாலும் இவையும் குமுதத்தின் பாணியினையே பின்பற்றி செயல்படுகின்றன. அரசியலோ, சமூக அக்கறையோ எதுவாக இருந்தாலும் ஒரு மலிவான கிசு கிசு ஆர்வம் போல மாற்றித தரும் குமுதம் மக்களின் நேர்மறை மதிப்பீடுகளை அழிக்கும் ஒரு வைரஸ். அதைப் பற்றி ஆய்வு செய்யும் வெளியான புதிய கலாச்சாரக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம். இந்தக் கட்டுரை வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது, வாசகர்கள் எண்ணிக்கை, விலை, பக்கங்கள், விற்பனை விவரம்….. முதலியன இன்று மாரியிருக்கிறது, ஆனால் குமுதம் வழங்கும் சிட்டுக்குருவி லேகியத்தில் எந்த மாற்றமும் இல்லை.

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

“குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?” என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன?

ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது ‘சைஸ்’ பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது.

“குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி குமுதம் படிக்கும் வாசகர்கள் 50 லட்சம். இந்தியாவின் முதல் 10 பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகை குமுதம் மட்டும்தான்”.

“இந்தச் சாதனையின் அடிப்படை வாசகர்களாகிய உங்களின் ஆதரவுதான். அந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்து, நன்றியுடன் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இனி, 160 பக்கங்களோடு குமுதம் வெளிவரும். ஒவ்வொரு பக்கமும் புதிதாக இழைத்து, உழைத்து, கவனித்துச் செதுக்கப்படும். விலையையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். இம்மாற்றம் ஒரு ஆரம்பம்தான். தொடருணும் உங்கள் ஆதரவுதான்.

- அன்புடன் ஆசிரியர்.

ஹிந்து பேப்பர், ஃபில்டர் காபி, பிரஷர் குக்கர், கேஸ் அடுப்பு போன்ற நடுத்தர வர்க்க பட்டியலில் குமுதமும் உண்டு. இரண்டு தலைமுறையாக, படித்த தமிழர்களின் குடும்ப உறுப்பினராக குமுதம் மாறிவிட்டது.

குமுதம் மட்டுமே தனது தோற்றத்திலிருந்து இன்று வரை தனது ஃபார்முலாவை மாற்றாமல் தொடர்கிறது. பழைய கள்ளை பானையிலிருந்து, பாலிதீன் பைக்கு மாற்றியதுதான் குமுதம் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதின் பொருள். குமுதம் தனது 50 லட்சம் வாசகர்களுக்காக நன்றியுடன் கடினமாக உழைப்பது என்பதின் பொருள் அந்த ஃபார்முலாவைக் காப்பாற்றுவதுதான். அதைப் புரிந்து கொள்ளும்போது குமுதத்தின் 160 பக்கங்களும் கை நிறையக் கிடைக்கும் கழுதை விட்டைகளே என்பது தெரியவரும்.

ஆசிரியர் குழு

ஏனைய செட்டிக் குடும்பங்கள் வட்டி, மளிகை, வியாபாரம் செய்து வந்த போது, 1943 ஆம் ஆண்டு குமுதத்தைத் துவக்கினார் எஸ்.ஏ.பி. செட்டியார். பகவத் கீதையை அடிக்கோடிட்டு படித்து ரசிக்கும் ஆன்மீகவாதியான செட்டியார், நடிகைகளின் அங்கங்களை ஒப்பிட்டு ரசிக்கும் லவுகீகவாதியாகவும் இருந்தார். இவரது பக்தி + செக்ஸ் கலந்த சிட்டுக் குருவி லேகியம்தான் இன்று வரையிலும் குமுதத்தின் இளமையைக் காற்றாற்றுகிறது. கைலாயம் சென்று விட்ட செட்டியாருக்கு லேகியத் தயாரிப்பில் உதவி செய்தவர்கள் ஜ.ரா.சுந்தரேசன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர்.

செட்டியாருடன் பங்குதாரராகச் சேர்ந்த பார்த்தசாரதி ஐயங்கார்தான் குமுதத்தின் பதிப்பாளர். நெற்றியில் நாமமிடும் தீவிர வைஷ்ணவாளாக இருந்தாலும், துட்டு விசயத்தில் இவரிடம் யாரும் நாமம் போட முடியாத அளவுக்கு கறாரான வியாபாரப் பேர்வழி. 90களின் தமிங்கல யுகத்திற்கேற்ப குமுதத்தை மாற்றியவர்களில் சுஜாதாவும், மாலனும் முக்கியமானவர்கள். ‘என்னால்தான் சர்குலேஷன் உயர்ந்தது’ என்று குமுதத்தின் பங்குதாரர்களாக மாற விரும்பியதால் இந்த முன்னாள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியாட்களை ஆசிரியராகப் போட்டால்தானே இந்தத் தொல்லை என அமெரிக்காவில் மருத்துவத் தொழில் புரியும் செட்டியாரின் மகன் ஜவகர் பழனியப்பனையே ஆசிரியராக்கியிருக்கிறார்கள

அதனால் ஓரளவு முற்போக்கு - அரசியல் ஆர்வலர்களின் வட்டத்தை இழுப்பதற்கு கரூரில் தாலி கட்டிய சிறுமிகள், மதுரையில் விபச்சாரம் செய்யும் சிறுமிகள், வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர்கள், மேலவளவு தீண்டாமை போன்ற செய்திகளை குமுதம் வெளியிடுகிறது. இந்தத் தூண்டிலில் சிக்கும் புதியவர்கள் ஏனைய பக்கங்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். குமுதத்தின் ஆன்மீகம், வேலை வாய்ப்பு, கல்விப் பயிற்சி, உடல்நலம் போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும். தத்தமது நோக்கத்திற்காக குமுதத்தை திறப்பவர்கள், மூடும்போது மூளை மரத்த பிண்டங்களாக மாற்றப்படுவதுதான் குமுதவியலின் மகிமை.

இதையேதான் ஈழம் பற்றிய செய்திகளில் குமுதம் (விகடனும்) செய்கிறது.

நான் குமுதத்தினை கிட்டத்தட்ட 26 வருடங்களாக (என் வயது 34) வாசித்து வருகின்றேன். குமுதத்தினை புலிகள் யாழ்ப்பாணத்தில் தடை செய்த காலப் பகுதி நீங்கலாக ஏனைய அனைத்து இதழ்களையும் வாசித்துள்ளேன். இப்போது இணையத்திலும் கட்டணம் செலுத்தி வாசிக்கின்றேன்

என்னைப் பொறுத்தவரைக்கும் குமுதம் போன்ற இதழ்கள் super market policy கொண்ட இதழ்கள். Light reading எனும் பெயரில் மனிதனுக்குள் பொதிந்து இருக்கும் வெளியே காட்ட வெட்கப் படும் இச்சைகளை பச்சையாக சொல்லாமல் மேலோட்டமாக தரும் இதழ். எமக்குள் இருக்கும் அத்தகைய இச்சைகளை தவறென்று எப்படி சொல்ல முடியாதோ அவ்வாறுதான் குமுதமும் தவறென்று சொல்ல முடியாதூ (எம்மில் எத்தனை பேர் ஒரு நடிகையின் கவர்ச்சி படத்தினை பார்த்து விட்டு கண்ணை மூடுகின்றோம்..? எத்தனை பேர் பாலியல் சார்ந்த கதைகளை வெறுக்கின்றோம்....? உண்மை சொல்பவர்களா நாம் இருப்பின் அனேகம் பேர் இல்லை என்றே சொல்வோம்) ஒரு சமூகத்தில், ஒரு குறைந்த பட்ச சனநாயக சூழலில் குமுதம் இதழுக்கான இருப்பு எப்பவுமே இருக்கும். இந்த குமுதம் இன்றுடன் நின்று விட்டால் நாளை இன்னொரு சஞ்சிகை அந்த இடத்தினை நிரப்பும். இது தவிர்க்க முடியாத சமூக நியதி

நான் குமுதம் வாசிக்கும் அதே நேரத்தில் காலச்சுவடினையும், உயிர்மையையும் வாசிக்கின்றேன். சுஜாதாவின் நாவல்களுக்கும் ஜெயமோகனின் மற்றும் சுந்தர ராமசாமி போன்றவர்களின் நாவல்களுக்கும் இடையான ஆழ வேறுபாடுகள் போன்றே குமுததினதும் காலச்சுவடு போன்ற சஞ்சிகைகளுக்குமான வேறுபாட்டினை காணுகின்றேன். ஒரு வாசகனான எனக்கு இரண்டும் தேவையாக இருக்கின்றது. சாத்திர சங்கீதத்தினை கேட்பவன் சினிமாப் பாடல்களை கேட்பதில்லையா? (ஆனால் பல காலச்சுவடு போன்ற மிகத்தரமான இதழ்களை வாசிப்பவர்கள் குமுததினை தொடர்ந்து வாசித்து விட்டு தாம் குமுதம் வாசிப்பதில்லை என்று அடம்பிடிப்பதை கண்டுள்ளேன்... இலக்கிய நேர்மை அற்ற திருட்டுப் பயல்கள்)

குமுதம் வாசிப்பவனை ஏன் நீ காலச்சுவடு, உயிர்மை, இருள்வெளி போன்றவற்றை வாசிக்கவில்லை என்று கேட்கமுடியாது.. அதே போல் அவை வெளிவருவதற்கான சமூக இயங்கியலையும் அதற்கான தேவையையும் அதை வெளிவிடுகின்றவர்களையும் மட்டம் தட்ட முடியாது. இரண்டும் எம் சமூகத்தின் இரு வேறு நிலைகள், தளங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வினவு அட்டை படத்தில் ஆடையில்லா மங்கையின் படத்தை போட்டு உரிக்க உரிக்க எதுவும் இல்லாத வெங்காயம் போல்த்தான் இருக்கிறது இந்த சஞ்சிகைகள் சிறுசுகளை இழுக்க முதல் இரவு பற்றிய குறிப்புகள் இப்படி ஒரு தலைப்பு போட்டவுடன் வாசிக்க தெரியாதவன் கூட அதை தேடி அலைவது எப்பா என்ன ஒரு வியாபார உத்தி [நான் இந்த சஞ்சிகைகள் படிப்பது குறைவு] :D:D

வினவு அட்டை படத்தில் ஆடையில்லா மங்கையின் படத்தை போட்டு உரிக்க உரிக்க எதுவும் இல்லாத வெங்காயம் போல்த்தான் இருக்கிறது இந்த சஞ்சிகைகள் சிறுசுகளை இழுக்க முதல் இரவு பற்றிய குறிப்புகள் இப்படி ஒரு தலைப்பு போட்டவுடன் வாசிக்க தெரியாதவன் கூட அதை தேடி அலைவது எப்பா என்ன ஒரு வியாபார உத்தி [நான் இந்த சஞ்சிகைகள் படிப்பது குறைவு] :D:D

ம்ம்ம்ம்... ஐம்பது இலட்சம் வாசகர்கள் வெறுமனே உந்த உரித்த வெங்காயம் போன்ற படங்கள் பார்க்கத்தான் குமுதம் வாசிக்கின்றனர் !!

வினவு.... உங்களுக்கு விகடன் மேல் நல்ல பாசம் போல்.... விகடன் பற்றிய உங்களின் பார்வை என்ன? அவர்கள் எந்தவிதமான , உங்களின் கொச்சை மொழியில் சொல்வதானால் 'பலான' விடயங்களை தருவதே இல்லையா?

  • தொடங்கியவர்

அன்பு நண்பர் நிழலி,

கட்டுரையின் முடிவில் பின்குறிப்பாக இப்படி குறிப்பிட்டிருக்கிறோம்

//பின் குறிப்பு: இதே ஆய்வு பிற ‘குடும்ப’ பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும். டப்பா வேறு, லேகியம் ஒன்று.//

நீங்கள் அதை கவனிக்கவில்லையா?

மேலும் தொடர்புடைய பதிவு என

ஆனந்த விகடனின் சாதி வெறி ! எனும் கட்டுரைக்கான சுட்டியை அளித்திருக்கின்றோமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.