Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

INDIA & PAKISTAN SECRET TALK

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரகசிய பேச்சு!

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்வெஸ் முஸாரவ் (Pervez Musharraf) ஆதாவது முன்னாள் பாகிஸ்தானின் அதிபதியும் இராணுவ தளபதியுமனவர். சில முக்கிய பிரமுகர்களை தனது இராணுவ அலுவலகத்திற்கு அழைத்து மிகவும் இரகசியாமானதும் அந்தரங்கமானதும் ஆனா ஒரு இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை உடனடியாக இந்தியாவுடன் தொடங்க வேண்டும் என்று பணித்தார். தனது நம்பிக்கைக்கு உரிய முக்கிய இராணுவ தளபதிகளும் சில வெளிவிவகார துறை நபர்களையும் உள்ளடக்கி இரகசிய பேச்சு வார்த்தைக்கான அத்திவாரத்தை ராவில்பிண்டியில்(Rawilpindi) உள்ள தனது இராணுவ செயலகத்திலே போட்டார். அந்த இரகசிய பேச்சிற்க்கு “பின் வழி” ("The Back Channel") என்றும் பெயர் சூட்டி கொண்டார். பல காலமாக அந்த “பின் வழி” பாங்கோக்(Bangkok). துபாய்(Dubai) . லண்டன் (London) என்று பல முக்கிய நகரங்களின் விடுதி அறைகளில் இந்திய தரப்போடு அலசி ஆராயபட்டது. அதில் முக்கிய நிகழ்ச்சி நிரலாக பலகாலமாக இழுபறி நிலையில் இருக்கும் காஸ்மீர் விடயம் விரிவாகவும் இரண்டு தரப்பினராலும் விரும்பியும் விவாதிக்கப்டது. விடுதி அறைகளில் நடந்தாலும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் பாகிஸ்தான் அதிபதி முஸாரவ் அவர்களுமே முடிவுகளை எடுப்பவர்களாகவும் விட்டுகொடுப்புகள் பற்றிய விரிவான விளக்கம் சம்மதத்தை தெரிவிப்பவர்களாகவும் இருந்தார்கள். மேல்நாட்டு இராணுவ ஆய்வாளர்களால் அடிக்கடி அணுஆயுத போர் நடக்கும் சாத்தியம் காணபடும் இடமாக வர்ணிக்கபட்டு வந்த காஸ்மீர் விவகாரத்திற்கு யாரும் அறியாமல் ஒரு முற்று புள்ளியை வைத்துவிடவே இரு பக்கமும் மும்முரம் காட்டினார்கள்.

அணுஆயுத பரிசோதனையில் 1974ம் ஆண்டே இந்தியா வெற்றிகண்டு இருந்தது பாகிஸ்தான் ஆமை வேகத்தில் முன்னேறி 1998ம் ஆண்டு அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதோடு. இனி போர்என்றால் எனக்கும் உனக்கும் அணுஆயுதத்தால்தான் என்று ஒரு அச்சுறுத்தலையும் சேர்த்து வெடித்தது. 1947ம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பு பாகிஸ்தானும் இந்தியாவும் மிக பெரிய மூன்று போர்களை இந்த காஸ்மீர் நிலத்தில் செய்து முடித்தன என்பது நீங்கள் தெரிந்ததே. ஆனாலும் எண்ணிலில்லா பல கைகலப்பை இருதரப்புமே தொடர்ந்தும் செய்துகொண்டே வந்திருந்தன. இந்த காஸ்மீர் மலை தொடரின் பெரும்பாலன பகுதி இந்தியாவின் கட்டுபாட்டிலேயே உள்ளபோதும் பல பகுதிகளை பாகிஸ்தானும் போராடி தனது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கின்றது. இந்த இழுநிலை பற்றிய பேச்சே இப்போது இரகசியமாக தொடர்கின்றது. பாகிஸ்தான் தரப்பில் முஸாரவ்வின் முன்னாள் சகமாணவனும் தற்போதைய ஒரு இராணுவதளபதியுமான தாறிக் அஸிஸ் (Tariq Aziz) தலைமைதாங்கினார். இந்திய தரப்பில் இரஸ்யாவுடனான அந்தரங்க உறவுகளை தொடாந்து கொண்டிருக்கும் சற்றின்டர் லம்பா ( Satinder Lambah) தலைமைதாங்கினார். இது கையெழுத்துக்கள் ஏதும் இல்லாத வார்த்தைகளால் உறுதி அளிக்கபட்டு கொண்டீருந்த ஒரு விவகாரமாகவே விடுதி அறைகளில் தொடர்ந்தது.

ரவல்பிண்டியில் தனது இல்லத்தில் நடந்த முதலாவது பேச்சுக்கு பக்கபலமாகவும் ஆலோசகராகவும் இருப்பதற்கு முன்னாள் பாகிஸ்தான் இராணுவதளபதி ஒருவர் முஸாரவ் அவர்களால் அழைக்கபட்டிருந்தார். அவரது அறிவுரைகளாகவும் பேச்சுக்களில் கலந்துகொள்ள இருந்த குர்ஸிட் கசூரி (Khurshid Kasuri) முன்னான் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அவருடைய ஆமோதித்த கருத்தாகவும் கூறபட்ட விடயம். அணுஆயத பலத்துடன் இருக்கும் இரு நாடுகளிற்கும் இடையில் இனி போர் என்பது எண்ணிபார்க்கவும் முடியாத ஒன்று. காஸ்மீர் விவகாரத்திற்கு சண்டை என்ற பழைய புராணத்தையே நாம் இனி பாடிகொண்டிருக்க முடியாது. ஆகவே சில விட்டுகொடுப்புகளுடன் பேசுவதே காலத்தின் தேவையாகவும் உள்ளது என்று தனது பக்க கருத்தை முன்வைத்தார். அத்தோடு நில்லாது அங்கிருந்தவர்களை பார்த்து கேட்டார் “ உங்கள் இதயத்தில் கையை வைத்துகொண்டு சொல்லுங்கள்” இம்மாதிரி ஒரு பேச்சுவார்த்தை இல்லாமல் காஸ்மீர் விவகாரத்தில் ஒரு முடிவை எட்ட முடியுமா என்றும் ஒரு குண்டை தூக்கி போட்டார். முஸாரவ் மீது உள்ள நம்பிக்கiயின் பிரகாரம் கூடியிருந்த மற்றவர்களாலும் ஓப்ரேசன் “பின் வழி” சரி வழியென தேர்வு செய்யபட்டது. அவர்களுடைய உள்நோக்கமும் ஆவலாகவும் இருந்தது இந்தியவுடனான ஒரு நிரந்தர நேரான உறவு அல்ல. பாகிஸ்தானின் நிரந்தர பாதுகாப்பே. பாதுகாப்பு என்றால்? பாகிஸ்தானை சுற்றியுள்ள எல்லைகள் பாதுக்பானதாகவும் பாகிஸ்தான் பொருளாதார மேம்பாட்டை அவை எவ்வகையிலும் பாதிக்காத படியும் இருக்க வேண்டும் என்பதே அவர்கள் அனைவரினதும் எண்ணமாக இருந்தது.

2007ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் ஒப்ரேசன் “பின் வழி” ஒரு முக்கிய இடத்தை தொட்டிருந்தது. ஆதாவது ஒரு முக்கிய விட்டு கொடுப்பொன்றை இந்தியா செய்வதாக இந்தியாவின் ஒரு முக்கிய புள்ளியாலேயே காசூரியிடம் உறுதியளிக்கபட்டது. காஸ்மீரி;ன் ஒரு முக்கிய விடயமே சாதாரணமாக முடிகிறதே என்று காசூரியும் மனம் குளிர்ந்தார். இனி பேசுவதற்கு என்ன இருக்கின்றது? இந்திய-பாகிஸ்தான் காதலை திருமணத்தில் முடிப்பதுதானே முறை. லம்பாவும் காசூரியும் இதன் தொடராக இனி இந்திய பிரதமர் பாகிஸ்தானுக்கு பகிரங்கமான ஒரு பயணத்தை மேற்கொள்வதாகவும் அதை தொடர்ந்து யாவும் எழுத்தில் தொடர படுமென்றும் பின்பு எல்லாமே உத்தியோகபூர்பமாகவும் சம்பிரதாய முறைபடியும் தட்டைமாற்றி கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டார்கள். சீதனமான காஸ்மீர் மக்களின் முடிவு இரண்டு தரப்பாலுமே மறுக்கபட்டுருப்தை நீங்கள் கவனத்தில்கொள்ள. ஆனாலும் பகிரங்கமாக தட்டைமாற்றிகொள்ள இரண்டு அரசுகளுமே தாயர் நிலையில் இல்லாதிருப்பதாக இரண்டு பக்க உயர்மட்ங்களிலும் ஒரு அவசகுண நிலை தென்பட்டபோதும். முஸாரவ்வின் ஒரு இராணுவ தளபதி பொதுஜன துறையின் ஒரு உயர்ஸ்தானிகரை அணுகி மற்ற அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் இந்த நிச்சயதார்த்தம் பற்றி கூறினால் அவர்களின் பதில்கள் எண்ணங்கள் எவ்வாறாக இருக்கும் என்று வினாவினார். அதற்கு மறுமுனையில் இருந்து வந்த பதிலோ கொஞ்சம் வருத்தமானதாக இருந்தது ஆதாவது அதற்கான காலம் இன்னமும் கனியவில்லை என்பதே அந்த பதில் .

2007ம் ஆண்டு பங்குனி மாதத்தில் முஸாரவ்வால் பாகிஸ்தானின் உயர் நீதிபதியின் பதவி பறிக்கபட்டதானது. தாயகட்டையை மாற்றி உருட்டிவிட்டிருந்தது நீதிதுறையை சேர்ந்தவர்களேல்லாம் வீதிக்கு வந்து போரட தொடங்கிவிட்டார்கள். சாதாரண மக்களின் அன்றாட வாழ்வே மிகவும் பாதிக்க தொடங்கியது போக்குவரத்துக்கான வீதிகள் ஊர்வலங்களின் மேடைகள் ஆயின. 1999ம் ஆண்டு பொதுஜனங்களால் வெறுக்கபட்டு கொஞ்சம் கொஞ்கமாக ஆற்றி முஸாரவ் மீது ஒரு நன்நம்பிக்கை மக்கள் மீது வந்துகொண்டிருந்தது. ஆனாலும் இப்போது மீண்டும் வேதாளம் முருங்கமரத்தில் ஏறிகொண்டது. முஸாரவ்வால் மக்களின் மனதை இப்போது வெல்ல முடியவில்லை. ஆனாலும் உயர் அதிகாரிகளால் அந்த ஆச்சர்யமான நிச்சயதார்த்தம் நினைவுபடுத்தபட்டது. நிச்சயதார்த்தம் எல்லாவற்றையும் ஆற்றிவிடும் என்று அவர்கள் நம்பிகொண்டிருந்தார்கள் போலும்.

ஆனாலும் ஜனங்கள் கொதித்துகொண்டிருக்கும் இந்த நிலையில் நிச்சயதார்தம் பொருத்தமற்றது என்றே காசூரி எண்ணினார். தூபாய் பாங்கொக் லண்டன் என்று தான் பறந்து பறந்து பேசியதெல்லாம் வீணாகிவிடும் என்று அவர் முஸாரவ்விடம் கூறினார். காசூரி மாதங்கள் என்ன சில வருடங்களே பின்போடலாம் ஆனால் எந்த நிலையிலும் தாம் இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாடு இம்மியளவும் குலையாது பகிரங்கமாக கைச்சாத்தாகுவதையே விரும்பினார். ஆகவே மக்களின் மனங்களை வென்று ஒரு சாதாரண நிலையை தோற்றுவித்த பின்பே அசல்புடலாக கலியாணத்தை நடத்தலாம் என்று அவர் எண்ணினார். அதையடுத்து இந்தியாவிற்கும் தகவல் அனுப்பபட்டது பாகிஸ்தானில் ஒரு சுமுக நிலை தோன்றுமட்டும் பொறுத்து கொளு;ளும்படியும் அதற்கான வேலைதிட்த்தில் தாம் தீவீரமாக இறங்கியுள்ளதாகவும் அதன்பின்பே நிச்சயதார்தம் முடிவுஎடுத்ததின் படி நடக்குமெனவும் கூறபட்டது. அதே நேரம் இந்தியாவிலும் உள்ளுராச்சி தேர்தல்கள் நடந்து கொண்டிருந்ததால் மன்மோகன்சிங் அரசிற்கும் அது சாதகமாக அமைந்ததால் அவர்களும் பின்போடுவதை விரும்பினார்கள். ஒரு சுமுக நிலையை தோற்றுவிக்க அவர்கள் போராடிகொண்டிருந்த வேளைதான். அதிலும் விட பெரிய இடியொன்று முஸாரவ்அரசு தலையில் வீழ்ந்தது.

ஸ்லாமாபாத்தில் உள்ள “சிவப்பு மசூதி” ( The Red Mosque) தீவிர இஸ்லாம் குழுஒன்றால் முற்றுகை செய்யபட்டது. அது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியது. தீவிர முஸ்லிம் மக்களிடையே அமெரிக்காவுடன் முஸாரவ் முதலிரவு நாயகிபோல் பழகிவந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்துது. அது அப்படியிருக்க தேர்தலும் நெருங்கும் நேரம் இப்படி ஒரு இடியை முஸாரவ்வின் எந்த அதிகாரிகளும் எதிர்பார்கவில்லை. ஆனாலும் இராணுவதனமான ஆட்சியை தொடர்வதென்றால் அமெரிக்காவோடு படுப்பதென்பது முஸ்லிம் மக்களின் மனதை தொடுவதிலும் விட முக்கியமானதல்லவா? பிறகு என்ன மசூதியை சுற்றி இராணுவம் தரையிறங்கியது மசூதி தடல்புடல் ஆனது. ஒரு மாதிரி அமெரிக்காவோடு ஒரு இரவு உறுதியானது போல் ஒரு மகிழ்ச்சி வந்தாலும் கட்டிலில் வைத்தே முஸாரவ்வின் காதில் அமெரிக்கா ஒரு குண்டை தூக்கி போட்டது. கட்டிலில் வைத்துபோட்டால் ஆண்கள் அணுகுண்டே என்றாலும் சாதாரணமாக “;ம்” என்று விட்டு அடுத்த கட்த்திற்கு நகருவதுபற்றியே சிந்திப்பார்கள் என்பதை அமெரிக்கா நன்கு அறிந்து வைத்திருந்தது. பிறகென்ன முஸாரவ்வும் “ம்” என்று சொல்லிவிட்டார் பின் ஏன் தாமதம்? முஸாரவ்வால் நாடுகடத்தபட்ட பெனாசீர் பூட்டோ பாகிஸ்தான் வந்து இறங்கினார். அவரோடு கூடி பொதுஜனங்களும் றோட்டிற்கு வந்தார்கள் முஸாரவ் பதவியில் இருந்து உடனடியாக இறங்கவேண்டும் என கோசம்போட்டார்கள் அவர்கள். இவர்கள் ஒரு பிரச்சார கூட்டத்தில் பெனாசீர் சென்றபோது ஒரு குண்டை போட்டார்கள் நாடுபோய் சாவதென்பது அவர் விதியோ என்னமோ அந்தம்மா ஆண்டவனடி சேர்ந்தார். அதை தொடார்ந்து அவரது கணவர் தேர்தலில் குதித்தார் குதித்தவரின் சின்னத்தில் மக்களும் வாக்குகளை குத்த தேர்தலில் வென்றார். அண்ணாச்சி முஸாரவ் ஆவணி மதம் 2008ம் ஆண்டோடு தனது பொதுவாழ்வை முடித்து கொண்டு ஓய்வூபெற்றுவிட்டார். அப்போ ஒப்ரேசன் “பின் வழி”?

கடந்த 61 வருட காலமாக பாகிஸ்தான் இந்தியா இரண்டு நாடுகளுமே ஒன்றோடு ஒன்று கீரியும் பாம்பும் போல்தான் பழகி வந்தன. இருவரும் தாம்தான் அறிவாளிகள் என எண்ணி மாறி மாறி ஏதாவதொரு தீவிரவாத இயக்கத்தை ஊட்டி வளர்த்து அவர்கள் மூலமாக அங்கு இவர்களும் இங்கு அவர்களும் மாறி மாறி தாக்குதல் செய்து வந்தார்கள். இதில் பெரும் பங்கை இந்தியாவின் “றோ” செய்துவந்தது. இந்த சாக்கடை புத்தி இரு தரப்பிலுமே இருப்பதால் சுத்தமான மனதுடன் கைகுலுக்கி கொள்ள இரு பகுதியுமே அஞ்சுகிறது. அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாகவும் உலகமயமாதல் ரீதியாகவும் வளர்ந்தாலும். இரண்டு நாட்டு இரகசிய உளவு துறைகளிலும் சாக்கடை நாற்றம் கலந்த பளையவர்களே இன்னமும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். இவர்கள் இன்னமும் பழைய புராணத்தையே பாடிகொண்டிருக்கிறார்கள். அதற்கு தற்போதைய இலங்கை நிலமையே ஆதாரம் ஈன்டில்வ் என்ற செத்த பாம்மை கொண்டுவந்து பெரும் செலவில் அது ஏதோ உயிரோடு இருப்பது போல் ஆட்டிகொண்டிருக்கின்றது ‘றோ’. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் ஒரு பகுதியை பிரித்து தரும்படி கேட்டு பாகிஸ்தானுடன் போரடுகிறது ஒரு இயக்கம் ஒரு இயக்கம் என்பதை விட ‘றோ” என்பதுதான் பொருத்தமானது. ‘பாஸ்தூன்” (Pashtun) என்ற அந்த இயக்கத்திற்கான சகல ஆயுத ஆடை உதவிகளையும் “றோ”தான் செய்து வருகின்றது. அதற்கு மாற்றீடாக பாகிஸ்தானும் பல இஸ்லாம் தீவிரவாத இயக்கங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக வைத்திருக்கின்றது. இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்குதல் இலக்காக்கபடுகின்றன அதற்கு உதாரணம்தான் தற்பொழுது நடந்த மும்பை தாக்குதல்.

மிகுதி அடுத்த வாரம் தொடரும்......

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 61 வருட காலமாக பாகிஸ்தான் இந்தியா இரண்டு நாடுகளுமே ஒன்றோடு ஒன்று கீரியும் பாம்பும் போல்தான் பழகி வந்தன. இருவரும் தாம்தான் அறிவாளிகள் என எண்ணி மாறி மாறி ஏதாவதொரு தீவிரவாத இயக்கத்தை ஊட்டி வளர்த்து அவர்கள் மூலமாக அங்கு இவர்களும் இங்கு அவர்களும் மாறி மாறி தாக்குதல் செய்து வந்தார்கள். இதில் பெரும் பங்கை இந்தியாவின் “றோ” செய்துவந்தது. இந்த சாக்கடை புத்தி இரு தரப்பிலுமே இருப்பதால் சுத்தமான மனதுடன் கைகுலுக்கி கொள்ள இரு பகுதியுமே அஞ்சுகிறது. அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாகவும் உலகமயமாதல் ரீதியாகவும் வளர்ந்தாலும். இரண்டு நாட்டு இரகசிய உளவு துறைகளிலும் சாக்கடை நாற்றம் கலந்த பளையவர்களே இன்னமும் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.

இரண்டும் சாக்கடை புத்தி கொண்ட நாடுகள் என்பது தான் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சிறிலங்கா கலியாணத்திற்க்கு ஈழம் தான் சீதனம் போல கிடக்குது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சிறிலங்கா கலியாணத்திற்க்கு ஈழம் தான் சீதனம் போல கிடக்குது

ஸ்ரீலங்காவை மணக்க தமது தரத்தின் அடிப்படையில் இந்தியா விரும்பாது. உல அடிப்படையில் இந்தியாவை மணம் முடிக்க சிங்களவரும் விரும்பமாட்டார்கள். இவர்களுக்குள் சுமுகமான உறவு ஒருபோதும் நிலைக்காது. சீனா அமெரிக்கா போன்ற நாடுகளே அதை குலைத்துவிடும். இவர்களுக்குள் கள்ள தொடர்பு... விபச்சாரம் போன்றவைதான் சாத்தியம். நடப்பவையும் நடந்தவையும் அவைதானே? அது சில கால நேரங்களில் துன்பமானது என்றாலும் ஈழத்தை பொறுத்தவரையில் நீண்ட கண்ணோட்டத்துடன் பார்த்தால் அது எமக்கு சாதகமானதே. தவிர புலிகள் ஒரு போதும் யாருடைய கதையையும் கேட்டு செயற்படுபவர்கள் அல்ல. அவர்கள் தமது பாதையில் தெளிவோடு செல்லுபவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.