Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கான அமெரிக்க தூதருடன் ஒரு நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான அமெரிக்க தூதருடன் ஒரு நேர்காணல்:

நேர்காணல்:

புதிய ஓபாமாவின் அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கையை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது. அது சிறிலங்காவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது?

தூதுவர்:

சிறந்த உதாரணங்களின்மூலம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே அவர் விரும்புகின்றார். அவரின் நிர்வாகத்தின் முதல் வாரத்தில் அவரால் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் சில அவற்றினை எடுத்துக் காட்டுகின்றன. ஒரு வருடத்தினுள் குவாண்டனோமாவிலுள்ள தடுப்புக் காவல் மையத்தினை மூடிவிடுவதென அவர் குறிப்பிட்டுள்ளார். அது முதலாவது தீர்மானம். இரண்டாவதாக ஒரு கொள்கையாக அமெரிக்கா சித்திரவதையினை இனிமேலும் பயன்படுத்தாது எனத் தீர்மானித்துள்ளார். எனவே இவையெல்லாம் உலகிற்கு அவர் அளிக்கும் முக்கியமான சமிக்ஞைகள் என்றே நான் நினைக்கின்றேன்.

அத்துடன் உலகம் முழுவதிலும் எமது பங்காண்மையை வலுப்படுத்த விரும்புவதாகவும் எதிரிகளையும் நண்பர்களையும் ஒன்றுபோல் தன்னுடன் இணைத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே அவரின் வெளிநாட்டுக் கொள்கையில் புதியதொரு நடைமுறைப் பாணி தென்படுவதாகவே நான் நினைக்கின்றேன். ஆப்கானிஸ்தான் போன்ற பிரச்சினைகளை ரானுடன் கலந்துரையாடுவதற்கான அவரின் ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவரின் வெளிநாட்டுக் கொள்கைகளில் நீங்கள் மிகவும் சிறந்த நடைமுறைச்சாத்தியமிகு அம்சங்களைக் காண்பீர்கள். மிகவும் நெகிழ்வுத்தன்மைமிகு மனோபாவத்தைக்கொண்ட சனாதிபதி புதிய மாற்றீடுகளை அடைந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார். இலங்கையுடனான எமது உறவின் கொள்கைகள் சனநாயகக் கட்சி குடியரசுக் கட்சி போன்ற பல நிர்வாகங்களிலும் மாறாததாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இந்த நாட்டிலே சமாதானத்தை மேம்படுத்தச் சகல வழிகளிலும் உதவுவதாகவே அது இருந்து வருகின்றது.

கே: இந்த இலக்கினை நீங்கள் எவ்வாறு அடைந்துகொள்வீர்கள் இலங்கையிலே அமெரிக்காவின் உபாயகரமான இலக்குகள் யாவை?

விடை: எமது பிரதான இலக்கானது சமாதானத்தை மேம்படுத்த உதவுவதாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. சமாதானத்தை எட்டுவதன்மூலம் இந்த நாட்டிலே மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, மோதல் மனித உரிமைகள் மற்றும் மனிதநேயப் பிரச்சினைகள் என அனைத்துப் பிரச்சினைகளையும் குறைத்து விடலாம் எனவே நாம் நினைக்கின்றோம் இதன்மூலம் பிராந்தியத்தில் உள்ள அபிவிருத்தியடைந்த மிதவாத நாடுகளில் இடத்திலே இலங்கையையும் சேர்க்க முடியும் மோதலின் பிடியிலிருந்து இந்த நாட்டை விடுவிக்கும்போது அது தனக்கேயுரிய இடத்தைப் பிராந்தியத்தில் பெற்றுக்கொண்டு அளப்பரிய வாய்ப்புகளையும் அடைந்து கொள்ளும். சமாதானத்தை மேம்படுத்துவதிலேயே நாம் பெரும் கவனத்தைச் செலுத்துவோம். ஆனால் நிச்சயமாக அவ்வாறான கவனத்தின் ஒரு பகுதி மனிதநேயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் செலுத்தப்பட வேண்டும்.

கே: அந்த இலக்குகளை நீங்கள் எவ்வாறு அடைந்து கொள்வீர்கள் அதற்காக உங்களிடம் என்ன பொறிமுறைகள் உள்ளன மேலும் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமா?

விடை: அதை நாம் பல வழிகளில் செய்வோம். முதன்மையாக ஆதரித்து வாதாடல்மூலம் நாம் அதைச் செய்வோம். அதுவே உலகம் முழுவதிலும் இராஜதந்திரிகளின் நோக்கமாக இருக்கின்றது. சமாதானத்தை மேம்படுத்துவதற்காக நாம் சனாதிபதியுடனும் அமைச்சர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றுகின்றோம். அத்துடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரின்கீழ்; நாம் பல முக்கியமான நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டுள்ளோம். உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்களுக்கு உணவையும் உதவியையும் வழங்கும் பாரிய கொடையாளரான இம்முகவர் நிறுவனம் மோதல் சூழ்நிலைகளுக்கு மட்டும் பதிற்செயற்பாடாற்றாமல் இலங்கையின் முக்கியமான பாகமாகிய கிழக்கில் உறுதிப்பாட்டையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தவும் பணியாற்றுகின்றது. இப்பொழுது கிழக்கிலிருந்து எல்ரீரீ வெளியேற்றப்பட்டுள்ளது. எனவே இலங்கையின் பல்லின மக்கள் வாழும் அப்பிராந்தியத்தில் சமாதானத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த அது சிறந்த ஒரு வாய்ப்பாகுமென நாம் நினைக்கின்றோம். வடக்கிலும் எவ்வாறு முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பதற்கு அது ஒரு சாதகமான உதாரணமாகத் திகழ்கின்றது. ஏனெனில் எமது எதிர்கால முயற்சிகளின் ஒரு பங்கு அதில் இருக்கின்றது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காகத் தனியார்துறையினரின் புதிய முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதில் நாம் டுபட்டுள்ளோம். இதனால் இளைஞர்கள் வன்முறைகளில் தஞ்சமடையவோ துணை இராணுவப் படைகளில் சேரவோ எண்ணமாட்டார்கள். அப்பிரதேசத்தில் மிகவும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த நாம் பெரிதும் முயற்சித்து வருகின்றோம். உதாரணமாக துணை இராணுவத்தினரின் ஆயுதக்களைவினைக் கூறலாம். ர்p.எம்.வி.பி. மற்றும் ஏனையோர் பூரணமாகச் சிறுவர்களை விடுவிப்பதற்காக ஊக்குவிப்புகளை மேற்கொள்வதற்காக சிறுவர் படைவீரர்கள் எனும் விடயத்தினையும் நாம் கையாண்டு வருகின்றோம். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுயாதீனமான ஊடகம் மற்றும் சிவில் சமூகம் வளர்வதற்கு உதவுவதன்மூலம் அப்பிரதேசத்தில் நல்லாட்சியை மேம்படுத்த நாம் உழைக்கின்றோம்.

கே: கிழக்கு மாகாணத்தின் இளைஞர்களுக்குக் கிடைக்கப்போகும் வாய்ப்புக்கள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். தொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பான உங்களது அல்லது அரசாங்கத்தினது திட்டங்களைப்பற்றி ஏதாவது குறிப்பிட முடியுமா? கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு என்ன விதமான தொழில் அல்லது பயிற்சியினை வழங்க உத்தேசித்துள்ளீர்கள்?

விடை: நீங்கள் குறிப்பிட்டதுபோல இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தொழில் வழங்குவது மிக முக்கியமானதாகும். அதனைச் செய்வதற்கான சிறந்த வழி தனியார்துறைச் செயற்பாடுகள் மூலம் முயற்சிப்பதேயன்றி அரசாங்கத் தொழில் மூலமாக அல்ல. இதனால் நாம் அரச தனியார் பங்காண்மை நிதியத்தினை ஆரம்பித்து தனியார்துறைக் கம்பனிகளுடன் பங்காண்மை அமைப்போம். இலங்கையின் தனியார்துறைக் கம்பனிகளும் எதிர்காலத்தில் வெளிநாட்டுக் கம்பனிகளும் புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கும். உங்களுக்கு ஞாபகமிருக்கலாம் சுனாமி நிவாரணத் திட்டத்தின்கீழ் ஒன்பது வௌ;வேறு தொழிற்பயிற்சி மையங்களைத் தென்பகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் அமைத்தோம். அவை மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தன. இதன் அடுத்த கட்டமாக பெரிய கம்பனிகளை இங்கே வந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது அமையும். எம்முடன் பங்காண்மையினை உருவாக்குவதன் மூலம் எமக்கு கொழும்பிலுள்ள பல அமைச்சுக்களுடனும் உள்ள தொடர்பினை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்தி ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அவற்றைத் தீர்க்க அதனைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக நாம் டீசயனெநஒ உடன் மிகச்சிறந்த பங்காண்மையினைக் கொண்டுள்ளோம். அவர்கள் கிழக்கு மாகாணத்தில் புதிய தொழிற்சாலையினை ஆரம்பிக்கவுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் விவசாயப் பங்காண்மையை மேம்படுத்துவதற்காக நாம் ர்யடைநலள போன்ற பெரிய கம்பனிகளுடன் பணியாற்றி வருகின்றோம். இவ்வாறான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் பல வாய்ப்புக்கள் இருக்கின்றன.

கே: இலங்கைக்கான மனிதநேய உதவிகளுடன் நீங்கள் எவ்வாறு உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளையும் சமாளிக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? அமெரிக்கா வழங்கும் மனிதநேய உதவிகளை இப்பொருளாதார நெருக்கடி பாதிக்குமா? அல்லது நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டதுபோல அவற்றினைத் தொடர்ந்து முன்னெடுப்பீர்களா?

விடை: மனிதநேய உதவியைப் பொறுத்தளவில் நாம் அவ்வாறான ஒரு பாரிய தாக்கத்தினை இதுவரையில் எதிர்கொள்ளவில்லை. அவ்வாறான உதவி பற்றிய தீர்மானங்கள் ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னரேயே மேற்கொள்ளப்பட்டு விடுகின்றன. நிதியானது அதற்கென ஒதுக்கப்பட்டு விடுகின்றது. எனவே அதில் பாரிய மாற்றங்கள் ஏற்படுமென நான் நினைக்கவில்லை. புனர்நிர்மாணங்களைப் பொறுத்தளவில் தாக்கம் ஏற்படுவதற்குச் சாத்தியமுண்டு. வடக்கின் புனர் நிர்மாணத்துக்குப் புதிய நிர்வாகம் உதவக்கூடிய வழிகள் பற்றிச் சிந்திக்கும்போது கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

கே: இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள மனிதநேய நெருக்கடிகளை எந்த அளவுக்குத் தனி விசேடமாக அமெரிக்க அரசாங்கம் தீர்க்க முயற்சிக்கும்? அப்பிரதேசங்களில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த குடும்பங்களைப் பொறுத்தளவில் உங்களின் திட்டங்கள் என்ன?

விடை: அந்தப் பதிலை இரண்டு கேள்விகளுக்குரியதாகப் பிரிக்க வேண்டுமென நான் நினைக்கின்றேன். ஏனெனில் அவர்கள் இப்பொழுது வடக்கில் உண்மையிலேயே இரண்டு வித்தியாசமான பிரதேசங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட எழுபத்தையாயிரம் பேர் வடக்கில் இன்னும் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் வெளியேறுவதற்கு எல்ரீரீ அனுமதி வழங்க மறுத்து வருவதுடன் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும் மறுத்து வருகின்றது. குடிமக்களைப் பாதுகாக்குமாறு நாம் இருதரப்பினரிடமும் வேண்டிக் கொண்டேயிருக்கின்றோம். அவர்களை வெளியேற அனுமதிப்பதும் அவர்களைச் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதும் எல்ரீரீஈயின் மீது உள்ள முதலாவது கடமையாகும். பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து எறிகணைகளை ஏவுவதிலிருந்தும், பாதுகாப்பு வலயத்தினுள் எறிகணைகளை ஏவுவதிலிருந்தும் இருதரப்பினரும் தவிர்த்துக் கொள்வது மிக முக்கியமானதென நாம் நினைக்கின்றோம்;. அவ்வாறு ஏவப்படுகின்ற எறிகணைகளினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயப்படுகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வலியினை ஏற்படுத்துகின்றது. கடந்த சனவரியிலிருந்து கொல்லப்பட்டோரும் காயமடைந்தோரும் ஆயிரக்கணக்காகும். இதுதான் எமது அடிப்படைக் கரிசனையாகும். அரசாங்கம் ஐ.நா. ஐசிஆர்சி போன்றோருடன் நாம் பணியாற்றி போதியளவு உணவும் மருந்தும் இடம்பெயர்ந்தோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவது எமது இரண்டாவது கரிசனையாகும். அம்மக்களில் பலர் எண்ணிறந்த தடவைகள் இடம்பெயர்ந்தவர்கள். அவர்கள் உயிர் வாழ்வதற்கு முற்றுமுழுவதும் புற உதவிகளிலேயே தங்கியுள்ளனர். உணவுத் தட்டுப்பாடும் பாரதூரமான மருந்துத் தட்டுப்பாடும் அங்கே இருப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாகப் பாதுகாப்பு வலயத்தினுள் இறப்பு விகிதம் மிகவும் உயர்வாகக் காணப்படுகின்றது. வவுனியாவிலுள்ள முகாம்கள் சர்வதேச தரத்தில் நிர்வகிக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்வதற்கு நாம் தெற்கிலே அரசாங்கத்துடனும் ஐ.நா.வுடனும் ஐசிஆர்சியுடனும் பணியாற்றி வருகின்றோம். நான் முன்பு கூறியதைப்போல இடம்பெயர்ந்தோருக்கு உணவு வழங்கும் பாரிய கொடையாளர் அமெரிக்காவேயாகும். கடந்த வருடம் மாத்திரம் நாம் 28 மில்லியன் டாலர்கள் பெறுமதியான உணவினை வழங்கியிருக்கின்றோம். எமது மதிப்பீடு செய்யப்பட்ட பங்களிப்புகளின்படி ஐ.நா.வுக்கும் ஐசிஆர்சிக்கும் உதவி வழங்கும் பாரிய கொடையாளராக நாம் இருக்கின்றோம். எனவே நாம் வகிக்க வேண்டிய முக்கியமான பாத்திரம் இருக்கின்றது. உணவு சரியான விதத்தில் விநியோகிக்கப்பட்டு தேவையான மக்களைச் சென்றடைகின்றது என்பதை அங்கே உள்ள ஆளணியினர் உறுதிப்படுத்த வேண்டும். எனவே இவை எல்லாம் முக்கியமான விடயங்களாகும். முகாம்கள் சர்வதேச தரத்தில் நிர்வகிக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. பாதுகாப்பு வலயங்களுக்குள் அகப்பட்டுள்ள மக்களுக்கு முகாம்களுக்கு வருவதைவிட பாதுகாப்பு வலயங்களில் தங்கியிருப்பதே பாதுகாப்பானது எனச் சில எல்ரீரீ பிரச்சாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் நாம் அதை உண்மையென நம்பவில்லை. மனிதநேய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவர் முகாம்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கே அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாகத் தமது இறுதி முடிவை வெளியிட்டிருந்தார். நிச்சயமாக முகாம்களில் சனநெருக்கடி காணப்படுகின்றது. சில பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. எஞ்சியிருக்கும் கரிசனைகளைப் பூர்த்தி செய்ய ஐ.நா.வும் ஐசிஆர்சியும் ஏனையோரும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புமிகு முறையில் பணியாற்றுகின்றனர்.

கே: எனவே அடிப்படையில் இதுதான் உங்களது தற்போதைய நிலையும் திட்டங்களும். எல்ரீரீ பிரச்சினை தீர்க்கப்பட்டு எல்லாமே ஒழுங்கான முறையில் நடந்தால் அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு உதவும்? இடம்பெயர்ந்தோர் இன்னும் ஒரு வருடத்துக்கு முகாம்களில் இருக்கப் போகின்றார்கள். எனவே அவர்களுக்கு உதவுவதற்கான உங்களது திட்டங்கள் என்ன?

விடை: கள நிலைகளே எம் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும். இப்பொழுது வடக்கில் இருப்பவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருப்பவர்கள் தெற்கிலும் வவுனியாவிலும் தற்காலிகமாகக் குடியமர்த்தப்படுவார்கள். வேறு இடங்களிலும் அவர்கள் சில வேளைகளில் குடியமர்த்தப்படலாம். அவர்களை இயலுமான அளவு விரைவாக மீளக் குடியமர்த்துமாறு நாம் அரசாங்கத்திடம் வேண்டி வருகின்றோம். இந்த வருட முடிவினில் அவர்களில் 80 வீதமானோர் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனும் அரசாங்க அறிவித்தல் எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. மன்னாரிலும் வவுனியாவிலும் உள்ளவர்களை விரைவாக அவர்களது சொந்த வீடுகளில் குடியமர்த்த அரசாங்கம் எண்ணியுள்ளது. எமது எதிர்கால உதவிகளைப் பொறுத்த அளவில் அது ஒரு முக்கியமான கருதுகோளாகும். ஏனெனில் எமது உதவி இந்த இடைக்கால முகாம்களுக்குக் கிடைக்கும் என்பதை அது உறுதிப்படுத்துகின்றது. நீண்டகாலப் புனர்நிர்மாண வாய்ப்புக்களை நாம் பார்க்கும்போது தேவை எங்கே இருக்கின்றது என்பது பற்றிய திட்டங்களுடன் அரசாங்கம் முன்வருவது மிகவும் முக்கியமானதாகும். அரசாங்கம் அவ்வாறான தேவையுள்ள இடங்களில் தனது சொந்த வளங்களை உள்ளீடு செய்யும் போது சர்வதேச சமுதாயத்துக்கு அதற்கு உதவி வழங்க முடியும். அதனையே நாம் முன்னோக்கி இருக்கின்றோம். அரசாங்கத்திலுள்ள எமது நண்பர்கள் உள்ளுர் மற்றும் சர்வதேச என்ஜிஓக்களுடன் ஒத்துழைப்புடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைப் பற்றி அறிந்துகொள்ள நாம் அவர்களை ஊக்கப்படுத்துவோம். அடுத்ததாக இருக்கின்ற மிகவும் முக்கியமான கருதுகோள் அரசாங்கம் வடக்கிற்காக முன்வைக்கும் அரசியல் ஏற்பாட்டின் வகையாகும். விசேடமாக மாகாண சபைக்கான வேட்பாளர்கள் மற்றும் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர்களினை அது முன்வைக்கையில் அவர்கள் வடக்கின் தமிழ் மற்றும்; முஸ்லிம் மக்களின் பூரண ஆதரவைப் பெற்றிருப்பது முக்கியமானதாகும். அப்போதுதான் தலைமைத்துவமானது தமது கரிசனைகளைப் புரிந்து கொள்கின்றது மேலும் அக்கரிசனைகளை நிறைவேற்ற அது பூரண கடப்பாடு பூண்டுள்ளது என நம்பிக்கை கொள்வார்கள். சர்வதேச மற்றும் உள்ளுர் கண்காணிப்பாளர்கள் தேர்தலைக் கண்காணிக்க அனுமதிக்கப்படும் மிகவும் வெளிப்படையான சனநாயகச் செயன்முறையே எமது முக்கியமான கோட்பாடாகும். வடக்கின் புனர்நிர்மாணத்தில் நாம் எவ்வளவு உதவி செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க அது எமக்கு உதவும்.

கே: அபிவிருத்திச் செயன்முறை பற்றி நீங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டு விட்டீர்கள். கிழக்கு மாகாணம் 2007 நவம்பரில் விடுவிக்கப்பட்டது. ஆனால் அங்கே இன்னமும் இடம்பெயர்ந்தோர் வாழ்கின்றனர். எனவே அவர்கள் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று தமது வாழ்க்கையை மீளத் தொடங்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியும்?

விடை: நியாயமாகக் கூறுவதாயின் பெருமளவு எண்ணிக்கையான இடம்பெயர்ந்தோர் ஏற்கனவே கிழக்கில் குடியேற்றப்பட்டுவிட்டனர். சிலர் இன்னமும் எஞ்சியுள்ளனர் என்பது உண்மை. ஆனால் இப்பொழுது பாரிய கரிசனை வடக்கிலே இடம் பெயர்ந்தோர் மீதே உள்ளது. கிழக்கிலே முன்னுரிமையானது கண்ணிவெடிகளை அகற்றும் செயல்முறைகளைப் பூர்த்திசெய்வதற்கே வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவர்களுக்கு விரைவாக தம் வாழிடங்களுக்குத் திரும்ப முடியும். அதனைச் செய்யுமாறு நாம் அரசாங்கத்தை ஊக்கப்படுத்தியுள்ளோம். அரசாங்கமும் அதற்குக் கடப்பாடு பூண்டுள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி நான் முன்பு குறிப்பிட்டதைப் போல, உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதிலும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திலும் நாம் பெரும் பணியாற்றி வருகின்றோம்.

கே: இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இங்கே மனித உரிமைச் சூழலை முன்னேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு ஆதரவு வழங்க முடியும்?

விடை: இலங்கையில் பல வருடங்களாகச் சீரழிந்துவரும் மனித உரிமைகளைப் பற்றி அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது. உயர் அளவில் இடம்பெறும் கடத்தல்கள் காணாமற்போதல்கள் கொலைகள் ஊடக சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் பற்றி நாம் விசேடமாகக் கரிசனை கொண்டுள்ளோம். இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அதற்கு மிக முக்கியமானதாகும். இவற்றினை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர நாம் எம்மாலியன்றதைச் செய்வோம். நாம் வருடாந்தம் விரிவானதொரு மனித உரிமைகள் அறிக்கையினை வெளியிடுகின்றோம். அரசாங்கம் உள்ளிட்ட சிறந்த மூலங்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் அதனை நாம் வழங்குகின்றோம். அபாயநேர்வில் இருப்போரைப் பாதுகாப்பதற்காக நாம் அரசாங்கத்துடனும் என்ஜிஓ க்களுடனும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப் பட்டோருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றோம். குற்றங்களை நிகழ்த்தும் எவரும் சட்டத்தின்முன் கொண்டுவரப்படாது பாதுகாக்கப்பட்டு வரும் பிரச்சினையைத் தீர்க்குமாறும் நாம் அரசாங்கத்தினை ஊக்கப்படுத்துகின்றோம். பல முக்கியமான மனித உரிமை முன்னுரிமைகள் இருக்கின்றன என நான் நினைக்கின்றேன். இது குறிப்பாக இப்போது முக்கியத்துவம் பெறுவதன் காரணம் மனித உரிமைப் பிரச்சினைகள் இங்குள்ள தமிழர்களின் விகிதாசாரச் சமநிலையினைப் பாதித்திருப்பதாகும். வடக்கில் மோதல் முடிவுற்றதும் தேசிய மீளிணக்கப்பாடு எட்டப்படும். மனித உரிமைச் சூழலை முன்னேற்றுவது அதன் முக்கிய பாகமாக அமையும்.

கே: வன்னியிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பாக றிச்சட் பௌச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீங்கள் இன்னமும் அந்த எண்ணத்தைக் கொண்டுள்ளீர்களா? அதைப்பற்றி உங்களுக்கு ஏதாவது கூற முடியுமா?

விடை: அமெரிக்கா தலைமைதாங்கி மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாகப் பல தப்பான புலனுணர்வுகள் இருந்து வருகின்றன. அவ்வாறான திட்டம் எதுவும் எம்மிடம் இல்லை என்பதை நான் திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டும். அரசாங்கமோ அல்லது எல்ரீரீஈயோ எம்மை அவ்வாறு செய்யுமாறு அழைத்தால் அதற்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பதை ஆராய ஒரு குழு இங்கே குறுகிய காலம் தங்கியிருந்தது. அவ்வாறான எந்த வேண்டுகோள்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. நடக்க வேண்டிய முதலாவது விடயம் இச்சிவிலியன்கள் வெளியேற எல்ரீரீ அனுமதிப்பதாகும். எல்ரீரீஈ அதனைச் செய்ய ஊக்குவிக்க நாம் எம்மாலியன்ற அனைத்தையும் செய்து வருகின்றோம். எல்ரீரீ அதனைச் செய்ய நாம் சகல உதவிகளையும் வழங்கி வருகின்றோம். அதுவே முதன்மையான கரிசனைக்குரிய விடயமாகும். அமெரிக்கா மூலம் அதைச் செய்வதுதான் சிறந்தது என இரு தரப்பும் நினைத்தால் நாம் அதனை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அவ்வாறான எந்த வேண்டுகோளும் தற்போது இல்லை.

கே: அண்மையில் மக்கள் விரும்பினால் வந்து அவர்களை வெளியேற்றுமாறு ஐ.நா.வினை எல்ரீரீ கோரியிருந்தது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்களை அவ்வாறு செய்யுமாறு எல்ரீரீ கோரினால் நீங்கள் அதனை நிறைவேற்றுவீர்களா?

விடை: சிவிலியன்கள் தமது நடமாடுவதற்கான சுதந்திரத்தை அனுபவிக்க எல்ரீரீ அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதையே நாம் எப்பொழுதும் கூறிவந்துள்ளோம். சிவிலியன்கள் வெளியேற விரும்பினால் அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படல் வேண்டும். ஒருவிதத்தில் எல்ரீரீ இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஆனால் அதனைச் செய்வதற்கு ஐ.நா.வோ அல்லது வேறு யாருமோ தேவையென நான் நினைக்கவில்லை. மக்கள் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும். காயப்பட்டவர்களை வெளியேற்ற ஐசிஆர்சி ஒவ்வொரு நாளும் கப்பலை அனுப்புகின்றது. அவர்கள் கப்பலில் மக்களைச் செல்ல அனுமதிக்க வேண்டும். அதற்கு ஐ.நா. தேவையென நான் நினைக்கவில்லை. இந்த அறிவித்தலைப் பற்றிச் சிறிது சந்தேகம் இருக்கின்றது.

கே: இலங்கையில் ஊடக சுதந்திரத்தை மேம்படுத்த எவ்விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியும்? இதில் எவ்வாறு அமெரிக்க அரசாங்கம் உதவ முடியும்?

விடை: இலங்கையிலுள்ள தற்போதைய மனித உரிமைச் சூழலில் ஊடக சுதந்திரம் மையமான கரிசனையைக் கொண்டுள்ளது. அக்கரிசனைக்கான காரணம் கடந்த பல வருடங்களில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் பலர் துன்புறுத்தப் பட்டுள்ளனர் அத்துடன் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தவரும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்களும் சிவில் சமூகத்தினரும் அச்சம் கொண்டுள்ளனர். யுத்தத்தில் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றிச் சுதந்திரமாக அறிக்கையிடுவோரே அதிகம் அபாயநேர்வுடையோராக இருக்கின்றனர். ஊடகங்களில் பொதுவாக வெளியிடப்படுவதுபோல் அது தேசப்பற்றற்ற செயலாக நோக்கப்பட வேண்டுமென நான் நினைக்கவில்லை. ராக்கிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் செல்வதற்கு சுதந்திர ஊடகங்களுக்கு வாய்ப்பு வழங்க அமெரிக்கா பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது. அமெரிக்க இராணுவ முயற்சிகளின்போது நிருபர்கள் அமெரிக்க இராணுவத்தினருடன் சேர்ந்திருந்து என்ன நடக்கின்றது என்பதைப் பற்றிச் சுதந்திரமாக அறிக்கையிட்டனர். அபூகிரைப் போன்ற வெளியுலகுக்குத் தெரியாத விடயங்களை உண்மையிலேயே அமெரிக்க ஊடகங்களே முதலில் அறிக்கையிட்டன. ராக்கிலே இருந்த சுதந்திர ஊடகங்கள் இருந்திருக்காவிட்டால் இந்தக் கதைகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது. எனவே வகைப்பொறுப்பினை உறுதிப் படுத்துவதில் ஊடகத்துறை முக்கியமான பாத்திரத்தினை வகிக்கின்றது. அதனால்தான் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இது ஒரு முக்கிய பாகம் என நாம் நினைக்கின்றோம். பத்திரிகையாளர்களைத் துன்புறுத்தியவர்கள் அச்சுறுத்தியவர்கள் கொன்றவர்கள் சட்டத்தின்முன் கொண்டுவரப்படல் வேண்டும். அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படல் வேண்டும். இவ்வாறான நடத்தைகள் இனிமேலும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த தெளிவான கொள்கை இருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் அவ்வாறானதோர் கொள்கை இல்லை. இதற்கப்பால் குற்றங்களைப் பாதுகாப்புடன் நிகழ்த்தும் போக்கும் காணப்படுகின்றது. ஊடக சுதந்திரப் பிரிவில் அது பிரதான முன்னுரிமையைப் பெறுகின்றது.

கே: இலங்கை ஊடகவியலாளர்கள் அவர்களின் ஆற்றலை முன்னேற்ற அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு உதவலாம் உங்களிடம் அதற்கான திட்டங்கள் உள்ளனவா?

விடை: நாம் புலமைப்பரிசில் வழங்குவதில்லை. எம்மிடம் பரந்த வீச்சிலான பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் உள்ளன. சர்வதேச விருந்தினர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் போன்றவற்றால் பல இலங்கை ஊடகவியலாளர்கள் பயன்பெற்றுள்ளனர். அவர்கள் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களுக்காக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு அமெரிக்காவுக்கு வருகின்றனர். அவற்றில் சில சுற்றாடல் மற்றும் மனித உரிமைகள் போன்ற விசேட பரப்புகளுக்கானவையாகும். சில பொதுவான பரப்புகளுக்கானவை. அவ்வாறான ஒன்றினை நாம் அமெரிக்கத் தேர்தலின்போது செய்தோம். அமெரிக்க நிபுணர்களை இங்கே வரவழைத்து இங்குள்ள ஊடகவியலாளர்களுடன் சந்திப்புகளை ஏற்பாடுசெய்ய நாம் முயற்சி செய்கின்றோம். எமது டிஜிட்டல் வீடியோ மகாநாட்டு ஆற்றல்களிலிருந்து நன்மைபெற்று இலங்கை ஊடகங்களுடன் சேர்ந்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ள அது வழிவகுக்கும். பல்வேறு வீச்சிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் முன்பு கூறியதைப்போல கிழக்கு மாகாணம் போன்ற இடங்களில் நாம் சுதந்திர ஊடகத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

கே: இதுவே இறுதிக் கேள்வி. இன்றிலிருந்து பல வருடங்களின் பின் இலங்கையைப் பற்றிய உங்களது நினைவுகள் என்ன என்று யாராவது கேட்டால் உங்கள் மனதில் எந்த ஞாபகம் பசுமையாக இருக்கும்?

விடை: இது ஒரு கடினமான கேள்வி. நானும் எனது குடும்பத்தினரும் இங்கே ரம்மியமான அனுபவங்களை அடைந்திருக்கின்றோம். பல நண்பர்களைப் பெற்றுள்ளோம். அற்புதமான பயண அனுபவங்களால் மகிழ்ந்திருக்கின்றோம். மனதில் நிலைத்த அனுபவமென்றால் நான் எனது நண்பர்களுடன் கடந்த வருடம் நக்கிள்ஸ் மலைத்தொடருக்குச் சென்ற அந்த மலை உலாவைத்தான் குறிப்பிட முடியும். உங்களது நாட்டின் மிகவும் அழகான வனப் பிரதேசம் அது. எனது இலங்கை நண்பர்கள் எனது பாதுகாப்பைப் பற்றி என்னைவிட அதிக கரிசனை கொண்டிருந்தார்கள். எனக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் சில கொமாண்டோக்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்குப் பாதுகாப்பு எதுவும் தேவையில்லையென நான் ஆட்சேபித்தேன். அவர்கள் வற்புறுத்தியதால் நானும் இணங்கிக் கொண்டேன். கொமாண்டோக்கள் என்னுடன் வருவதை நான் விரும்பவும் செய்தேன். ஏனெனில் அவர்களுடன் உரையாடுவது மகிழ்வும் விநோதமும் மிக்கதாக இருந்தது. என் மனதில் பதிந்த விடயம் என்னவென்றால் ஒருநாள் மாலை எனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கே பணிபுரிந்த அனைவரும் தமிழர்கள். இந்தச் சிங்கள கொமாண்டோ நபர்கள் எவ்வளவு துரிதமாக அந்தத் தமிழ் நபர்களுடன் மிகவும் நட்பானதும் மிகுந்த அன்னியோன்;;யமானதுமான உறவினை ஏற்படுத்தினார்கள் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அது என் மனதை மிகவும் தொட்டு விட்டது. இந்த நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் சமாதானத்தையே விரும்புகின்றனர் என்பதை அது எனக்கு எடுத்தியம்பியது. அவர்கள் ஒருவர் மற்றவருடன் சௌஜன்யத்துடன் வாழ ஆசைப்படுகின்றார்கள். இங்கே கொழும்பிலே நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இங்கே அரசியல் பெரிதும் துருவமயப்படுத்தப் பட்டிருக்கின்றது. இருபத்தைந்து வருடங்களாக இந்த நாட்டைப் பிடித்தாட்டும் பிரச்சினையை அரசியல்வாதிகள் தீர்க்க முடியாதுள்ளனர். அதனால்தான் இந்த சிவில் யுத்தம் இவ்வளவு காலமாகத் தொடர்கின்றது. ஆனால் அரசியல்வாதிகள் இல்லாமல் இந்த மக்களை அவர்களாகவே தாமாக இருக்கவிட்டால் அவர்கள் ஒற்றுமையாக வாழ்வார்கள். அவர்களுக்குத் தேவை சமாதானமே. தமிழர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் மற்றும் ஏனையோர் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர். கொழும்பில் கேள்வியுறும் இனவாதமோ, ஆதிக்கவாதமோ அங்கே இல்லை. அரசியல்வாதிகள் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தாது மக்கள் மத்தியில் சமாதானத்துக்காகக் காணப்படும் பாரிய ஆதரவைப் பயன்படுத்த வேண்டும். அதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதுவே இலங்கைக்கான எனது எதிர்பார்ப்பாகும். இங்கே நான் சந்தித்த மிதவாத சமாதான விரும்பிகளான கண்ணியமான அனைத்து மக்கள் தொடர்பான எனது ஞாபகங்களும் அதுவாகவே இருக்கும்.

கே: லைப் லைன் கருத்திட்டமானது யுஎஸ் எய்ட் இனால் நிதியுதவி வழங்கப்படும் திட்டமாகும். அமெரிக்கத் தூதுவர் என்ற ரீதியில் இக்கருத்திட்டம் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

விடை:

லைப் லைன் இதுவரையில் சாதித்தவற்றையிட்டு நான் பெருமையடைகின்றேன். லைப் லைனிற்கு உதவக் கிடைத்தமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இடம்பெயர்ந்த மக்களையும் ஏனைய மக்கள் பிரிவினரையும் சென்றடைந்து அமெரி;க்கத் தூதுவரும் அமெரிக்க அரசாங்கமும் அவர்களைப் பற்றிக் கரிசனை கொண்டுள்ளனர் என்றும் அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க அயராது உழைக்கின்றனர் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளச் செய்வது முக்கியமானது. இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர உங்கள் நிறுவனம் ஆற்றும் பணி அளப்பரியது. நான் அதனை மெச்சுகின்றேன். ஏனெனில் இந்த நாட்டில் இடம்பெயர்ந்தோர் எண்ணற்ற அளவில் உள்ளனர். குறிப்பாகச் சிலர் நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். சிலர் நினைக்கலாம் அவர்களின் பிரச்சினைகள் பல வருடங்களாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டன என்று. அவர்கள் மறக்கப்படவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.

நன்றி.

http://www.globaltamilnews.net/tamil_news....=7651&cat=1

இந்த நேர்காணலில் இருந்து என்னதெரியுது... என்னதான் இருந்தாலும் உவன் திருந்தமாட்டான்.

எங்கள் பாதையில் நேரடியாக தலையிடமாட்டான், நாம் பலமாக இருந்தாத்தான் இவன் எங்களை மதிப்பான்.

புலிகளிடம் இருந்த கிழக்கை பலவந்தமா பிடித்ததை சரியெண்டே சொல்லும் இவர், சமாதான ஒப்பந்தம் பற்றி ஏன் பேசவில்லை?

புலிகளும் இலங்கை அரசும் பேசித்தான் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்ற முன்னைய நிலைப்பாட்டுக்கு என்ன நடந்தது?

அனுசரணையாளராக இருந்ததின் நோக்கம்?

மக்கள் சுதந்திரம் பற்றி பேசும் கனவானே, மக்களின் அவலத்தைப்பற்றி பேசாத்தது ஏன்?

மக்கள் சுதந்திரமாக நடமாவேண்டுமாக இருந்தால் அது ஏன் யாழ்குடாவில், கிழக்கில் நடமுறைப்படுத்தப்படவில்லை?

இந்தமாதியெல்லாம் ஏன் கேட்க்கப்படவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்கு பதில் என்பது வேறு விடையென்பது வேறு. இது போலவே கலந்தாலோசித்தல் என்பதை விவாதித்தல் என்று பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. தவறான தமிழ் சொற்பிரயோகம் சொல்ல வந்த கருத்தையே மாற்றிவிடக்கூடும். கருத்துக்களைப் பதிபவர்கள் இதுபோன்ற சிறிய தவறுகள் ஏற்படாமல் கவனிப்பது நன்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.